தமிழ்முரசின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 .

தமிழ் முரசு நேயர்கள் அனைவருக்கும் எமது ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள் .

ஆசிரியர் குழு பிறக்கும் வருடம் சிறக்க மனத்தால் இறையை வேண்டிடுவோம் !

 


        


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

  
           பிறக்கும் வருடம் சிறக்க

   மனத்தால் இறையை வேண்டிடுவோம் 
            அடக்கும் ஆணவம் அகல
அகத்தால்  இறையை வேண்டிடுவோம் 

         தொடக்கும் காரியம் துலங்க

துதித்தே இறையை வேண்டிடுவோம் 
          நலமும் வளமும் பெருக
நாளும் இறையை நாடிடுவோம் 

      உற்றார் உறவின் இணக்கம்

உயர்வாய் இருக்க வேண்டிடுவோம் 
         கற்றார் பெருக நாட்டில்
கருதி இறையை வேண்டிடுவோம் 

புத்தாண்டு வந்தது! - கவிதை - மெல்போர்ன் அறவேந்தன்

 


“ புதுவருஷ வாழ்த்துக்கள்” கார்த்திகா கணேசர்.

 


வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க; பட்டாசு பட படக்க; புத்தாடை மினு மினுக்க; கண்ணாடி டம்லர்கள் டிங் டிங் எனச் சிணுங்க; மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்க Happy New year வாழ்த்துக்கள்; கட்டித் தழுவல்கள்; ஆசை முத்தங்களோடு Happy New Year!

  ...2023 பிறந்து விட்டது.

 Happy New Year!

 பிறக்கும் புதிய ஆண்டு மகிழ்ச்சியாக அமைய வேண்டும். வருடம் பூரா மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பது தான் எம் எல்லோரது ஆசையும். அப்போ மகிழ்ச்சி தானே வந்து விடுமா? அல்லது நாமாக அதை அடைய உழைக்க வேண்டுமா? சந்தேகம் எழ, மனோதத்துவ நிபுணர் தான் என்ன சொல்லுகிறார் எனப் பார்த்தேன்.

 Happiness - A Psychiatric Education என Journal of medical Ethics கூறுகிறது. மகிழ்வு ஒரு மனோ நிலை. அதனால், எமக்கு அது வரவேண்டும் என வாழ்த்துகிறோம்.

 மக்களை , நீங்கள் எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள் எனக் கேட்டால், நான் பணக்காரனானதும் சந்தோஷமாக இருப்பேன், ’எனக்கு நல்ல வேலை கிடைத்ததும் சந்தோஷமாக இருப்பேன், ’எனது பிள்ளை படித்து நல்லாக வந்தால் எனக்கு சந்தோஷம்இவைதான் பெரும்பாலான பதில்களாக இருக்கும்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 46 எழுத்துலக பிரவேசத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்தவேளையில் வந்த செய்திகள் ! முருகபூபதி


அன்புள்ள வாசகர்களுக்கு  வணக்கம்.  உங்கள் அனைவருக்கும் எனது இனிய ( 2023 )  ஆங்கிலப் புத்தாண்டு   வாழ்த்துக்கள்.

எழுத்தும் வாழ்க்கையும் என்ற இந்தத் தொடரை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாவது ஆண்டிலும் இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதற்கு, பல  காரணங்கள் இருக்கின்றன.

இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து,  இரண்டாவது


பாகத்திற்கு வந்தவேளையில், கொவிட் பெருந்தொற்றும்  தனது ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தது.

2020 – 2021 – 2022 ஆகிய வருடங்களில்  கொவிட் பெருந்தொற்றால் மறைந்துவிட்ட எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் பற்றியும்,  இம்மூன்றாண்டு காலத்துள் நோய் உபாதைகள் மற்றும் முதுமையின் காரணத்தினால் விடைபெற்றுவிட்டவர்கள் பற்றியும்  பல பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

அவ்வாறு எழுதியதன் மூலம் அந்தத் துயரங்களிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான் எழுத்துலக பிரவேசம் செய்து அரைநூற்றாண்டு காலம் நெருங்கிய வேளையில் (  2022 இறுதிப்பகுதியில் )  எனது எழுத்தூழியத்துடன் தொடர்புபட்ட சில நற்செய்திகள் என்னை வந்தடைந்தன. அச்செய்திகள் அடுத்தடுத்து வந்தமைதான் வியப்பானது. எதிர்பாராதது. 

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று அடிக்கடி நான் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றேன். 

கடந்த டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலையில் நான் மெல்பன் விமான நிலையத்திற்கு புறப்படத் தயராகிக்கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எனக்கு வணக்கமும் வாழ்த்தும் கூறியவாறு மறுமுனையில் கனடாவிலிருந்து எனக்கு மிகவும் பிரியமான படைப்பிலக்கியவாதி அ. முத்துலிங்கம் அவர்கள் தொடர்புகொண்டார்.

அவரை நான் இதுவரையில் நேருக்கு நேர் சந்தித்து பேசியதும் இல்லை. ஆனால்,  அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்த பின்னரே அவரது எழுத்துக்களை படித்தேன்.  கனடாவுக்கு 2007 ஆம் ஆண்டு இறுதியில் நான் சென்றபோது,  2008 ஆம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அவர், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு  வாழ்த்துக்கூறியதுடன், தன்னால் சந்திக்கமுடியாமல் போனதையிட்டு வருத்தமும் தெரிவித்தார். அன்று என்னுடன் நீண்ட நேரம் பேசினார்.

அதன்பின்னரும் என்னுடன் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தார்.  கடந்த டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

      முருகபூபதி  இம்முறை உங்களுக்கு எமது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினை  வழங்கவிருக்கின்றோம்.  விரைவில் இயல்விருது தொடர்பான கடிதம் வரும்   என்றார். 

மூத்த எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் ! டிசம்பர் 31 நினைவுதினம் அவரது பிறந்த நூற்றாண்டு காலத்தில் ஒரு நினைவுப்பதிவு முருகபூபதி


பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன்.

இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது.

மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன்.

அதற்கு முன்னர் இரண்டு தமிழக  பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும்,  பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன்.

அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன்.

மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித்


தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது.  இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள்.

அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர். இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி.

இவரது தம்பிதான்  தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர்.

முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர்.

பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.

தமிழ்நாடு திருநெல்வேலி பிரதேசத்தில் வாழ்ந்த  கைத்தறி நெசவாளர்களின் போராட்ட வாழ்வை சித்திரித்த ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல், செக் மொழியிலும் பெயர்க்கப்பட்டு, அந்த நாட்டில் அக்காலத்திலேயே ஐம்பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.  பஞ்சும் பசியும் நாவலை, காமிஸ்வலபில் என்ற புகழ்பெற்ற  எழுத்தாளரினால்  செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பஞ்சும் பசியும் நாவலை எமது இலங்கைப் பேராசிரியர் க. கைலாசபதி,  தான் எழுதிய தமிழ் நாவல் இலக்கியம் நூலில் சோஷலிஸ யதார்த்தப் பார்வையுள்ள படைப்பு என சிலாகித்துள்ளார்.

இவரது முதல் சிறுகதை 1941 இல் பிரசண்ட விகடன் இதழில் வெளியானது. முதல் புதினமான புயல் 1945 இல் வெளியானது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதனால்  1942 இல் சிறைக்கும்  சென்றார்.  1944 இல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946 இல் முல்லை  இலக்கிய இதழிலும்  பணியாற்றினார்.

திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள்   எழுதியவர் .  

ஜனவரி 01 – எழுத்தாளர் சந்திரனுக்கு 60 வயது மணிவிழா நாயகன் ஆவூரான் சந்திரன் கலை , இலக்கிய, தன்னார்வத் தொண்டர் முருகபூபதி

வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை


பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார்.

அவர்தான்  “ ஆவூரான்.   சந்திரன் .

நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது.  உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட  அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண்.  அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம்.

இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக   பிறந்திருக்கும் 


சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவுகடந்த நேசத்தினால்,  உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக்கொண்டவர்.

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும்,  நெடுந்தீவையும் அங்கு  வாழும் மக்களையும் மறந்துவிடாமல்,  தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர்.

சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும்.  அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.

நெடுந்தீவு ஆரம்ப பாடசாலையில் தனது தொடக்க கால கல்வியை ஆரம்பித்த சந்திரன், பின்னர் பெற்றவர்கள் கிளிநொச்சி குமரபுரத்திற்கு இடம்பெயர்ந்தமையால், அங்கே குமரபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்தார்.

தொழில் வாய்ப்பு பெற்று  1989 இல் மத்திய கிழக்கில் குவைத்துக்குச் சென்றவர், வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டு  இலக்கியப்பிரதிகளும் எழுதத் தொடங்கினார்.

இவரது தொடக்க கால படைப்புகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. கவிதை, கட்டுரை,  சிறுகதை என்பன இவர் தேர்ந்தெடுத்த துறைகள். தற்பொழுது தனது மணிவிழாக்காலத்தில் சின்னான் என்ற குறுநாவலையும் தனது பூர்வீக ஊரைப் பின்னணியாகக்கொண்டு எழுதியிருக்கிறார்.

விரைவில் இந்த நூல் யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வரவுள்ளது.

பொய் மான் - அவுஸ்திரேலிய தமிழ்த் திரைப்படம்

 Poi Maan, an Australian-based Tamil feature film, will be released in theaters in Australia on the 20th of January, 2023.
To book tickets, please visit the Event Boss website.
🔗https://www.eventboss.com/shows
MAKE SURE YOU MAKE THE CORRECT BOOKING ( SYDNEY/READING CINEMA,MELBOURNE(PLENTY VALLEY) and MELBOURNE(KNOX )
அவுஸ்திரேலியாவில் உருவாக்கம்பெற்றுள்ள "பொய்மான்" திரைப்படம் எதிர்வரும் 2023 தைமாதம் 20ம் திகதி அன்று வெளியிடப்படவுள்ளது.
டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள "Event Boss" இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

ஸ்ரீ லங்கா, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த 200வது ஆண்டு நிறைவு மாநாடு நிகழ்வுகள் (ஐந்து நாட்கள்)

 

சிவமயம்

 

“நால்வகை யோனிகளுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பவை யாவை அவையெல்லாம் பசுக்கள்,

அப்படிப் பிறத்தலில்லாதது யாது அது பதிப்பொருள் என்னும் இதுவொன்றே எளிதில் அவ்விரண்டுக்கும் தம்முள் வேற்றுமை அறியும் வண்ணம் நிற்பது.

ஆதலால், வேதம் புராணம் இதிகாசம் முதலிய நூல்களிலே மற்றைத் தேவர்களெல்லாம் அப்படிப் பிறந்திறத்தில் சொல்லப்படுதலாலும்,

சிவபெருமானுக்கு அது உண்டென்பது எங்காயினும் சொல்லப்படாமையாலும்,

அநாதி முத்தசித்துருவாகிய முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்பது தெள்ளிதிற்றுணியப்படும்.”

 

  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - சிவபுராண  படன விதி (இணைப்பில் உள்ள முழு கட்டுரையினை பார்க்கவும்)

 

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த 200வது ஆண்டு நிறைவு குறித்த ஐந்து நாட்கள் மாநாடு இறைவன் அருளால் நடந்தேறியுள்ளது. அந்த நிகழ்வுகளை கீழுள்ள பதிவுகளில் காணலாம்.

இந்நிகழ்வுகளை முழுமையாக கேட்டு நாமும், நம் எதிர்கால சந்ததியினர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காட்டிய வழி நிற்க இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!

 

இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு முதலாம் நாள்

https://www.youtube.com/watch?v=6Hth7SUvWU4

 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இரண்டாம் நாள்

https://www.youtube.com/watch?v=47dRP7GL7PI

 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மூன்றாம் நாள்

https://www.youtube.com/watch?v=SiGrn2rCqzY

 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நான்காம் நாள்

https://www.youtube.com/watch?v=Abo0JZ5omis

 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு ஐந்தாம் நாள்

https://www.youtube.com/watch?v=iuj_31GcdXM

 

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”திருவெம்பாவும் மார்கழியும் - ஒரு சிறப்புப் பார்வை !

 


மகாதேவஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .. அவுஸ்திரேலியா    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக்

காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொரு
ளை உணர்த்துவது நடந்தே வந் திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த

சுவாமி க்கு
 உப்பில்லாத பொருட்களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடை வில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும். " பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப்பட்டு விட்டது. பீடு என்றால் பெருமையானதுஉயர்வானது என்பது பொருளாகும்.திருவாதிரை நட்சத்திரம் " ஆரு த்ரா " என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகின்றது. சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை " ஆருர்த்தா " தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அது மட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்தது கூட மார்கழித் திருவாதிரை என்றும்சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித் திருவாதிரை என்றும்வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிக ழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும்அறி யக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப்படுகின்றது.
 மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதி வரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும். இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்ப தால் அக்காலங்களில் காலையில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம் பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.
இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப் பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சி பாடப்படுவதும் குறிப்பி டத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக் கும் வண்ணம் ஏனைய விஷயங்க ளைச் செய்தல் தவிர்க்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற் காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமா கும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே… ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே !? அவதானி


இலங்கையில் வடக்கையும், கிழக்கையும் மற்றும் மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் உண்மையான சுயரூபம் தேர்தல் காலங்களில்தான் தெரியவருகிறது.

தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகத்தான் தொடர்ந்தும் போராடி


வருகின்றோம் எனச்சொல்லும் இக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள்,  சிரேஷ்ட உறுப்பினர்கள்,  கட்சிகளை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும்             எம். பி. க்கள் இதுவரையில்  தாங்கள் சாதித்திருப்பது என்ன…? என்பது பற்றி  என்றைக்காவது தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்திருக்கிறார்களா..?

ஆலயங்களில் உற்சவங்களுக்காக கொடியேறிவிட்டால் அதன்பிறகு வரும் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கிவிடும்.

அப்போது யார்  ( உபயகாரர் )  நடத்திய திருவிழா அதிவிசேடமானது என பக்தர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

பக்தி வருமோ இல்லையோ மக்களை பரவசப்படுத்துவதற்காக அந்தத்  திருவிழா உபயகாரர்கள்                       “ கெத்து  “ காட்டத் தொடங்கிவிடுவார்கள்.

இலங்கையில் ஏதேனும் ஒரு தேர்தல் நடக்கப்போகிறது என்ற அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் அறிவித்துவிட்டாராயின் வேடிக்கைகள் பலவற்றை நாம் பார்க்க முடியும்.

அதனால்,  தேர்தல் என்பதும் ஒருவகையில் திருவிழாதான்!.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கா, தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்திப்புக்கு அழைப்புவிடுக்கத் தொடங்கியவுடனேயே எங்கள் தமிழ்க்கட்சிகளின் சுயரூபம் தெரியத் தொடங்கிவிட்டது.

இலங்கை அரசியலில் நரி என வர்ணிக்கப்பட்ட ஜே. ஆர். ஜெயவர்தனாவின் வாரிசாகவே வர்ணிக்கப்படும் இன்றைய ஜனாதிபதி ரணில்,  தொடங்கியிருக்கும் பேச்சுவார்த்தையின் மூலம்,     தமிழ் மக்களே… எனது அழைப்பினை,  நீங்கள் ஆதரிக்கும் உங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறு  உள்வாங்கியிருக்கின்றன.!?  “ என்பதை  இதோ பாருங்கள்…!  “ என்று ஊடகங்களின் ஊடாகவே காண்பித்துவிட்டார்.

முதலில் நடக்கவிருப்பதாக பேசப்படும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே  தமிழ் அரசியல் கட்சிகளின் உள்குத்து வேலைகள் தொடங்கிவிட்டன.

2023 ஆம் ஆண்டு பிறந்து மேமாதம் வந்துவிட்டால்,  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பதினான்கு வருடங்களாகிவிடும்.  இக்காலப்பகுதியில் வடக்கில் எத்தனை கட்சிகள்? இருக்கின்றன…? என்று அவற்றுக்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் தமிழ் மக்கள் சிந்தித்து பார்த்திருக்கிறார்களா…?  நினைவூட்டுவதற்காக சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம். எண்ணிக்கொள்ளுங்கள்:

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

 அதிகாரம் 1 : புறப்பாடு


 
மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

 ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

 திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

 பக்கத்து அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அது அவளின் கணவனின் படுக்கை அறை. எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தது. உள்ளே போகவில்லை. வெளியே நின்று பார்த்துவிட்டு கதவை இழுத்து மூடினாள். வேலை நாட்களில் அவள் அந்த அறைக்குள் போவதில்லை. அப்படியே கணவனும் இவளது அறைக்குள் வருவதில்லை. நேரில் பார்த்துக் கதைப்பதற்கு நேரமில்லை. ஒருவரோடு ஒருவர் கதைத்துப் பேச எங்கே நேரம்? ரெலிபோனில் சிலவேளைகளில் கதைப்பாள். எல்லாமே வார இறுதியில்தான் குடும்பம், கொண்டாட்டம்.

 இருவரும் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை செய்கின்றார்கள். ஆனால் வேறு வேறு பகுதிகள். ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது இவர்கள் வேலை செய்யும் கார் உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். கணவன் பகல் வேலை, அசெம்பிளிப் பகுதியில் இயந்திரப் பொறியியலாளராக இருக்கின்றான். மனைவி இரவு வேலை, கார் உற்பத்திப் பகுதியான பெயின்ற் ஷொப்பில்.