அவலக்குரல் கேட்கலையா ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )image1.JPG        பொருள்தேடும் நோக்கத்தில்  புதைகுழிகள் தோண்டுகிறார்
               வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்
        இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்
                   அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் !

        ஆட்சியிலே அமர்ந்திருப்பார்  அறந்தொலைத்து நிற்கின்றார்
               அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்
        காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்
               காலந்தோறும்  மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் !

        பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்
               பூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்
        மேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்
                பாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார்  !

             சாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்
                     சமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்
            நீதிகூட   நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்
                    நிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் !

2018 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் / சிட்னி / பேர்த்
1.       மெல்பேணில் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.
சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்கதமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியைதாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை மாமனிதர் ஞானகுணாளன் மாஸ்டர் அவர்களின் புதல்வன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை மூத்த செயற்பாட்டாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள்  நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம்ஈழத்தமிழரின் இன்றைய நிலைதாயகத்தின் இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சுதமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.

வேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 1 ச சுந்தரதாஸ்

.


ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் உரிமையில் வெற்றி கொண்டாட பலர் முன்வருவார்கள். படத்தின் நாயகனால் தான் படம் வெற்றி பெற்றது என்பார்கள், கதாநாயகியாக நடித்த நடிகைதான் காரணம் என்பார்கள் , பாடல்களினால்தான் , கததையினால்தான் படம் வெற்றி பெற்றது என்று அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவார்கள் . ஆனால் படம் தோல்வி அடைந்தாலோ எவரும் அதற்கான காரணத்தில் பழி ஏற்க முன்வர மாட்டார்கள்.  படத்தின் தோல்வியின் முழுப் பழியும் படத்தின் இயக்குனரையே அந்த நேரத்தில் போய்ச்சேரும்.

நடிகர் நடிக்கிறார், பாடகர் பாடுகிறார் இசை அமைப்பாளர் இசை அமைக்கிறார் , வசன கர்த்தா வசனம் எழுதி சொல்லித்தருகிறார் அப்படி என்றால் படத்தின் இயக்குனருக்கு என்ன தான் வேலை என்று எண்ணுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஒரு Head cook போல அதாவது தலைமைச் சமைல் காரர் போல.

எங்கே புளியைக் கலக்கவேண்டும் , எங்கே காரத்தைக் கூட்ட வேண்டும் , எவ்வளவு உப்பைச் சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் அவரின் கைப் பக்குவம். ஆனால் உணவு சுவையற்றுப் போனாலோ முழுப்பொறுப்பும் தலைமைச் சமைல் காரரின் தலையில் தான் விடியும்.


நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 02 அரசமரத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சதி - ரஸஞானிமக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில்  

"புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?
தோழா ஏழை நமக்காக!
கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காக?
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! "

 என்ற பாடல் வருகிறது.

இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார்.


இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர்.
இலங்கையில் ஓடும் கங்கைகளும் நாளும் உழைத்து தாகம் எடுத்த மக்களுக்காகத்தான்.

கங்கைக்கரைகளில் விவசாயம் நடக்கிறது. வர்த்தக பொருளாதாரத்திற்கும் இந்த கங்கைகள் உதவுகின்றன. மக்களின் குடிநீரும் கங்கைகளிலிருந்தே பெறப்படுகிறது.
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் காவிரி நதி அரசியலாகியிருக்கிறது. இலங்கையில் நதிகளினால் இதுவரையில் பிரச்சினை இல்லை. அவை வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் பின்னணியில்  அரசியல் மாற்றங்கள், அதிர்வுகள் நிகழ்ந்துள்ளன.


தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும் - முருகபூபதி


மல்லிகை ஜீவா என பின்னாளில்  அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா,  1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.
 "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்" 

என்னும் பாரதியின்  கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்,  தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.
மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து,  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.


தமிழ் விளையாடுவோம் 03/06/2018இலங்கைச் செய்திகள்


வலுவான பேரிடர் தயார் நிலை இலங்கைக்கு அவசியம்

சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மடு திருத்தலத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்

மூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்

அச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்விவலுவான பேரிடர் தயார் நிலை இலங்கைக்கு அவசியம்

23/05/2018 இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன.

உலகச் செய்திகள்


ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை

மீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி!!!

ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்

வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி

ஈவிரக்கமற்ற அரசபயங்கரவாதம்

கிங்ஸ்டன் நகர மேயராக இலங்கை தமிழர்


ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

24/05/2018 மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

சம்பந்தர் குருபூசை - சைவ மன்றம் சிட்னி - 31/05/2018

திருஞான சம்பந்தர் குரு பூஜா - 03/06/2018தமிழ் சினிமா - பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்


காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.
அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.

கதைக்களம்

அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.
நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.
பின் அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்பும் நேரத்தில் பயங்கர அதிர்ச்சி. தன்னை தேடி வந்த ஒரு நபரால் பெரும் அதிர்ச்சியாகிறார் அமலா.
மேலும் முக்கிய அறிவியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? மர்ம பின்னணி என்ன? அமலா பாலை தேடி வந்த நபர் யார்? அவரின் கணவர் என்ன ஆனார்?
அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த் சாமி அண்மைகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் ஹீரோவாக பாஸ்கர் படத்தில் வந்திருக்கிறார். அவருக்கு இன்னும் அந்த காலத்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் காணமுடிகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை அவரும் இப்படத்தில் பூர்த்தி செய்கிறார். முரட்டுத்தனமாக இருக்கும் இவர் தன் மகனுக்காக வேறுவிதமாக மாறுகிறார்.
அமலா பால் மீண்டும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் இறங்கியுள்ளார். படத்தில் அவரை பார்க்கும் போது முன்பு இருந்த அமலா பாலை அப்படியே பார்க்க முடிந்தது. தான் விரும்பும் யோகாவையும் கூடவே கூட்டி வந்திருக்கிறார். விரும்பிய ஒன்றுக்காக வாழ்க்கையை விட்ட கதை அவரின் ரியல் லைஃப் போலிருந்தது.
விஜய் சேதுபதியுடன் நடித்த குட்டி பையன் மாஸ்டர் ராகவன் படத்தில் ஆகாஷாக தன் திறமையை காட்டியிருக்கிறார். இவரை சும்மா சொல்லக்கூடாதுங்க. நடனம், நடிப்பு என அசத்துகிறார். எதிர்காலத்தில் திறமையான நடிகராக வருவார் என தெரிகிறது.
தெறி படத்திற்கு பிறகு பேபி நைனிகா மீண்டும் இப்படத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் ஒரு குட்டி ஹீரோயின் போல தான். சில நேரத்தில் பிள்ளைகள் விரும்பும் சிலவற்றில் பெரிய விசயம் இருக்கும் என அவர் படத்தில் தெளிவுபடுத்துகிறார்.
படத்தில் காமெடிக்கு மூன்று பேர் கூட்டணியாக, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி என ஒன்று கூடியுள்ளார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என காட்டியிருக்கிறார்கள்.
மலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழ் படம் போல அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக். இந்த படம் எப்படியிருக்குமோ என நினைப்பவர்களை படம் முழுக்க உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்.
நிகிஷா படேல், நடிகர் ரியாஸ் கான், பாலிவுட் நடிகர் அஃப்தப் சிவ்தஸனி என பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன ரியாஸ்கானா இது என உருவத்தால் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சிம்பிளான ஸ்டோரி, மலையாள பட ஸ்டைலில் அழகான எடிட்டிங், கேட்கும் படியான பாடல்கள் என படம் ஒரு அழகான படைப்பு. கல்யாணி என ஓரே ஒரு சின்ன விசயத்தால் வந்த பிரச்சனை.
மது வா இல்லை மாது வா, என்ன அது என்பதை படத்தில் பாருங்கள்..

கிளாப்ஸ்

மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா இருவரும் படம் முழுக்க ஸ்கோர் அள்ளுகிறார்கள்.
அரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி நன்றாக தான் இருக்கிறது.
ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா என தங்கள் பங்குக்கு ஆடியன்ஸிடம் கிளாப்ஸ் பெறுகிறார்கள்.

பல்ப்ஸ்

எதற்காக கதை ஆரம்பித்தார்களோ அதை ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டது போல ஒரு ஃபீல்.
மொத்தத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ்.
நன்றி CineUlagam