முன்பொருதடவை பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், “ யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம்
“ என்றார். அவர் தற்போது உயிரோடு இருந்திருப்பின், சமகாலத்தில்
யாழ்ப்பாணமும் அது தலைநகராக விளங்கும் வடமாகாணமும் எவ்வாறு இருக்கிறது..? என்பதை பார்த்துவிட்டு, “ போதை வஸ்து கலாசாரம் “ என்று சொல்லியிருப்பாரா…?
நாம்
எங்கிருந்து எங்கே செல்கின்றோம்..?
தமிழின
விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்,
யுவதிகள் தாங்கள் தொடர்ந்துகொண்டிருந்த கல்வியையும் இடையில் நிறுத்திவிட்டு, களம் புகுந்து போராடி மடிந்தனர்.
அவ்வாறு
மடிந்தவர்களையும் மறைந்தார்கள் எனச்சொல்லாமல் வித்தானார்கள் என்றுதான் வர்ணித்து
அகவணக்கம் செய்தது, எமது தமிழ் சமூகம்.
ஆனால்,
இன்று அத்தகைய சமூகம், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்,
அதற்கு அடிமையானவர்கள், போதை வஸ்து கடத்துபவர்கள், அதன் பாவனையால் சீரழிந்துகொண்டிருப்பவர்கள் பற்றிய
செய்திகளைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.
சில
வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி பதவியிலிருந்த மைத்திரிபால சேனாநாயக்கா, “ அரசாங்கத்திற்கு
மதுவரியால் கிடைக்கும் வருமானம் கூடுதலாக வடபகுதியிலிருந்துதான் வருகிறது ! “ என்று சொன்னதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
தென்னிலங்கையில்
பாதாள உலகக்கோஷ்டிகளின் அட்டகாசத்தின் பின்னணியிலும் போதைவஸ்துதான் அடங்கியிருக்கிறது.
அதனால், போதை வஸ்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும். மரணதண்டனையும் தீர்ப்பாகவேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன சொன்னார்.
அவ்வாறு
அன்று சொன்னவருக்கு, புதிய அரசில் குறைந்தபட்சம் அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.
தென்னிலங்கையில் ஒரு நபர் நான்குவயதுக்குழந்தைக்கு மது அருந்தக்கொடுத்து,
அதனை காணொளி வாயிலாக பதிவேற்றி வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார். இது பேலியாகொடை பிரதேசத்தில்
நடந்துள்ளது.