Today Vithiya Sivaloganadan: Who’s next? - Shamila Daluwatte

.
அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

பின்னர் அவர்கள்
ககவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.

நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் நுரிவத்தவில் வாழவில்லை.

பின்னர் அவர்கள்
வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா
இவர்கள் என் சகோதரிகளல்ல.

கன்பராவில் நடந்த கலை, இலக்கிய, கல்விச் செயற்பாட்டுக்கான ஒன்றுகூடல்

.  ரஸஞானி


" உலகின்  எப்பகுதிக்குச் சென்றாலும்   தமிழின் தொன்மையையும்   கலை,  இலக்கியத்தின் செழுமையையும்  போற்றிப் பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள்   முன்னணியில்   நிற்கின்றனர் "
                   கப்பலோட்டிய  தமிழனின்   பேரன்  புகழாரம்
கண்காட்சிகள்,  நூல்களின்  அறிமுகம்,  கூத்து  குறும்படக்காட்சி,   கலந்துரையாடல்  சங்கமித்த  விழா
 முள்ளிவாய்க்கால்  அநர்த்தத்தை   நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு   உதவும்   பணிகளை  மேலும்    விஸ்தரிக்க   இலங்கை   மாணவர்   கல்வி நிதியம்  நடவடிக்கை
                                                                                 

உங்களது வீட்டை பாதுகாப்பது எவ்வாறு 27.05.2015

.












தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை இறுதிப் பகுதி -----


        --பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி      




சென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 .30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர்மண்டபத்தில்அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றிவிழாவாகவும்  நடைபெற்றது.

 உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்ததென்று பாடி நற்றமிழர் போற்றிவந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர்   அவர்கள். அமிழ்தமாம் இளமை குன்றா அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித் தமிழ் மணக்க உலகரங்;கிற் பெருமை சேர்த்துத் தமிழ்ப் பணி செய்தவர் தமிழ் நாடு தந்த “தமிழ்த் தென்றல்” திரு விகல்யாணசுந்தரனார்..அவர்கள்.

இவர்களுக்கு எடுத்த மாபெரும் விழாவிலே அடுத்து பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் அவர்களின் கவிதை இடம்பெற்றது.

சிட்னியில் பத்திரிகையாளர் சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூல் வெளியீட்டு அரங்கு

.
சிட்னியில்
 பத்திரிகையாளர்  சுந்தரதாஸ்  எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள்  நூல்  வெளியீட்டு  அரங்கு




இலங்கையில்   வீரகேசரி,   சிந்தாமணி,  தினகரன் பத்திரிகைகளில் தமிழ்  சினிமா தொடர்பான    ஊடகவியலாளராக   பணியாற்றியவரும்   சினிமா   தொடர்பான  செய்திகளை   தொடர்ந்து   எழுதிவருபவருமான   திரு. . சுந்தரதாஸ்  எழுதிய  மறக்கமுடியாத வில்லன்கள்  நூலின்  வெளியீட்டு  அரங்கு  சிட்னியில்  நடைபெறவுள்ளது.

இலங்கைச் செய்திகள்


வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு

பதுளையில் கைக்குண்டு மீட்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!

முள்­ளி­வாய்க்­காலில் சிவில் உடை த­ரித்த இனந்தெரி­யாதோர் நட­மாட்டம் அதிகம்

தொழினுட்ப ஆய்வு கூடம்: திறப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்

புங்குடுதீவு கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கயவர்களை கைது செய்யுமாறு கோரி ஆரையம்பதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வித்தியா கூட்டுப்பாலியல் படுகொலை : போர்க்களமானது யாழ் நீதிமன்ற வளாகம்

யாழ் ஆர்ப்பாட்டம் தொடர்பில் 50 பேர் கைது

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்

புங்குடுதீவு சம்பவம்: மட்டு.வில் பாரிய ஆர்ப்பாட்டம்: பல்லாயிரம் பெண்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்

 யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்



சங்க இலக்கியக் காட்சிகள் 50- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கொல்லேறு தழுவலும் குரவைக் கூத்தும்

காடும் காடுசார்ந்த இடமுமான முல்லை நிலத்தில் ஓர் அழகிய கிராமம் அது. அங்கே மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழையில் நனைந்து பூமியெல்லாம் பச்சைப் பசேலெனத் தோன்றத் தொடங்கியது. மந்தை மேய்ப்போர் அவற்றை ஊருக்குள் ஓட்டிக்கொண்டு வந்து உரிய இடத்தில் விட்டுவிட்டுத் தங்கள் சேரிகளைச் சென்றடைந்தார்கள். சிலர் சூலாயுதத்தையும்ää சூட்டுக்கோலையும் கொண்டு சென்றார்கள். பாற்கலசங்கள் உறிகளிலே தொங்கிக் கொண்டிருந்தன. கொன்றை மரத்தில் செய்யப்பட்ட இனிய குழலினைச் சிலர் இசைத்து மகிழ்ந்தார்கள். ஆநிரையிலே வளம்மிக்க காளைகள் இல்லை. எல்லாமே பிற்பக்கம் கொழுத்து திமிலோடு காணப்பட்டன. முன்பு தம் கால்களால் நிலத்தைக் கிளறிப் புழுதியை எழுப்பிய அந்தக் காளைகள் இப்பொழுது ஈரமான நிலத்தைக் கிளறின. அவை ஒன்றுடனொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. சண்டையிடும் காளைகள் போருக்குச் செல்லும் வீரர்களைப்போன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டன.

எழுதமறந்த குறிப்புகள் --- முருகபூபதி

.
ஊடகத்துறையில்  ஆற்றலுடனும்  அயராத  உழைப்புடனும்  இயங்கிய   ஆளுமை     வீ.ஏ.திருஞானசுந்தரம்
இலங்கை   ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்  முன்னாள்  தமிழ்ச்சேவை   பணிப்பாளரின்   பன்முக  ஆற்றல்  முன்மாதிரியானது.
    
பெயருக்கேற்ற  உருவத்திற்கும்  குண  இயல்புகளுக்கும் பொருத்தமான  அபூர்வமான  மனிதர்கள்  பலரை  எனது  வாழ்நாளில் பார்த்து   வியந்திருக்கின்றேன்.   அத்தவகையில்  எனது  மதிப்பிற்குரிய இனிய   நண்பர்  திருஞானசுந்தரம்  அவர்களும்  பெயருக்குப் பொருத்தமானவர்   என்பதனால்  அவரைச்சந்திக்கும்  தருணங்களில் வியப்பதும்  எனது  இயல்பாகிவிட்டது.
அவரது  பெயரை   மூன்றாகப்பிரித்து,  (திரு - ஞானம் - சுந்தரம்)  ஒரு சொல்லை   எடுத்துக்கொண்டும்  விளிக்கலாம்.   எவராலும் விரும்பப்படுபவர்  என்பதற்குப்பொருள்  திரு’.   அறிவிலும் சிந்தனையிலும்  தெளிவுபெற்றவர்கள்  ஞானம்உடையவர்கள். 'சுந்தரம்'  என்றால்  அழகு  என்றும்  பொருள்.
திருஞானசுந்தரம்   அவர்களின்  பெயர்ப்பொருத்தம்  குறித்து இதற்குமேலும்   விளக்கவேண்டிய  அவசியம்  இருக்காது.
இலக்கிய   ஊடகத்துறைக்குள்  நான்  பிரவேசித்த  காலப்பகுதியில் எனக்கு  அறிமுகமானவர்தான்  திருஞானசுந்தரம்.  சுமார்  நான்கு தசாப்தகாலமாக  சுமுகமான  நட்புறவுடன்  நாம் பழகிவருகின்றமைக்கு   இயல்புகளும்  காரணமாகிவிடும்;.
எனது  ஊடகவாழ்வுக்கு,   வீரகேசரி  புகுந்தவீடாக  அமைந்தது போன்று,  திருஞானசுந்தரம்  அவர்களது  தொழில்  ரீதியான தொடக்ககால   வாழ்வும்  வீரகேசரியில்தான்.   அங்கு  துணை ஆசிரியராக  ஊடகத்துறையின்  நுட்பங்களை   பயின்று  பெற்ற அனுபவங்கள்   பின்னாட்களில்  அவரைத்தேடி  வந்த  பதவிகளின் நெளிவு- சுழிவுகளை   சமாளிக்கவும்  உதவியிருக்கலாம்.


உலகச் செய்திகள்


அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

 குடியேற்றவாசிகள் தொடர்பில் ஆசிய நாடுகள் இணக்கப்பாடு : ஸ்தம்பிதமடைந்த படகிலிருந்து 400 குடியேற்றவாசிகள் மீட்பு

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

18/05/2015 அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிவியாவில் இருந்து ஒரு கூடை பழம் - -எச். ஏ. அஸீஸ்

.

                                                                                                 
ஒரு  கூடை   நிறைய  கனிகள்  கொண்டு  வந்துளேன்
சில  கனிகள்  மிக  அரிதானவை
உண்டு   பார்த்தும்  வந்துள்ளேன்  சில நாள்
இனிமை  இப்பொழுதும்  இருக்கிறது
என்  இதயத்துள்  தொக்கி

ஒவ்வொரு   பழமும்  புதுமையானது
பார்க்க  மிகவும்  புனிதமானது
அழுகாதிருக்கும்  கனிகள்  இவை
ஒரு  அருங்காட்சி   சாலையில்
தொல்பொருட்கள்  போல்

நியு சவுத் வேல்ஸ் பொலிஸ் விடுத்திருக்கும் அறிவித்தல்

.













விழுதல் என்பது எழுகையே தொடர்ச்சி 47 - திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

.
துன்பங்களை மீறி மனம் துள்ளிக் குதித்துக் கொள்ளும் போது சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வு அளவுக்கு மீறிய சந்தோசங்கள் அழ வைத்து விடுமோ என உணர்வுகளை அடக்கிக் கொண்டான் சீலன்.சந்தித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களும் புலம் பெயர்ந்த நாட்டில் பட்ட அவலங்கள் அனைத்தையும்  உடைத்து போராடி வெற்றியோடு வாழ்க்கையை தொடர்ந்தவர்கள்
ஒரளவு சிறப்பாக வாழ்கிறார்களே என நினைத்து தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொண்டான். பல கஸ்ஷ்டங்களை சுமக்கும் சீலனுடைய வாழ்க்கை ஆமை போல் நகர்ந்தது. விடியல்கள் எப்போது என மனம் சலித்துக் கொள்ளும் வேளைகளில் எல்லாவற்றுக்கும்  எங்கள் பிரச்சனையும் இடப்பெயர்வுமே எனப்  பல  முறை எண்ணியுதுண்டு...... இப்பொழுதெல்லாம் அம்மாவின் தொலை பேசி அடிக்கடி வருவதால் ஏதோ ஒரு ஆனந்தம்.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள்.

தமிழ் சினிமா


36 வயதினிலே




தமிழ் சினிமாவில் பெண்ணியம் பேசுகிற படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியிருக்க நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி.
அதேபோல் திருமணம் ஆகி நடிக்காமல் இருந்த ஜோதிகாவுக்கு தேர்ந்தெடுத்து எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த 36 வயதினிலே.
ஜோதிகா எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்க, மறுபடியும் நடிப்பாரா? என்று ரசிகர்களின் கேள்விக்கு விடையாக ரசிகர்களின் புல் மீல்ஸாக வெளிவந்துள்ளது இந்தப்படம்.