சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் -1

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 23 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.


வியாழக்கிழமை இடம்பெற்ற விநாயகர் பூசை உடன் ஆரம்பித்த திருவிழா காட்சியை கீழே காணலாம்.



ஒரு வருட நிறைவுப் பதிப்பாக வெளிவருகின்றது தமிழ்முரசு ஒஸ்ரேலியா .


.

அன்பான வாசகர்களே

தமிழ்முரசு ஒஸ்ரேலியா இன்று தனது ஒரு வருட நிறைவுப் பதிப்பாக  வெளிவருகின்றது. இது நீங்கள் தந்த ஊக்கம் என்பதை சொல்லிக்கொள்வதில் ஆசிரியர்குழு பெருமைப் படுகின்றது. நாம் வாழும் ஒஸ்ரேலியாவில் உள்ளுர் விடயங்களை உடனுக்குடன் கொண்டுவரவேண்டும் என்ற எங்களின் எண்ணம் அரும்பாகி மொட்டாகி மலராகி உங்கள் மனம் கவருகின்றது. எந்தப்பாகுபாடும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான பத்திரிகையாக நடந்து கொண்டு செல்வதை நீங்கள் அறிவீர்கள் தொடர்ந்தும் அந்த வளியிலேயே பயணிக்கும் அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம்.
எந்தப் பதிவிற்கும் தடையின்றி உங்கள் கருத்துக்களை இடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறோம் இதுவரை வாசகர்களும் நாகரீகமாக தரமான கருத்துக்களையே தந்திருக்கின்றார்கள். ஒரு சில நேரத்தில் மட்டும் ஒரு ஊடகத்தில் பாவிக்க கூடாத வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்த காரணத்தால் கருத்து நீக்கப்பட்டது. அதை எழுதிய வாசகர்கள் கூட பின்னாளில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள் அதற்காக நாம் மகிழ்வு கொள்கின்றோம். கருத்துச் சுதந்திரம் உள்ளபோது சரியான கருத்தை வையுங்கள். அது எம் சமூகத்திற்கு ஆரோக்கிமானதாக இருக்கும்.

.

சிட்னியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மண்டபம் இன்று 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிவேசம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் ஹோமம் பூசை என்பன சிறப்பாக நடைபெற்று இறுதியில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டபம் ஏப்ரல் மாதத்தில் பொது மக்களின் தேவைகளுக்கு விடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்றைய அந்த விழாவை வாசகர்களுக்கு தருகின்றோம்.

அள்ளி வீசாதே...!அவதிப்படாதே...!!



ஏ மானிடா!
உன்
முகத்துக்கு
முற்போக்காய்
முலாம் பூசாமல்
முழுமனதோடு வருகை தா!

பெண்டாட்டி சுமை


.

அந்தக் கல்லூரியில் ஒரு ஜென் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த ஜென் மாஸ்டர்கள் அங்கே வந்து சொற்பொழிவாற்றினார்கள், கலந்துரையாடினார்கள்.
முதல் நாளன்று, அந்தக் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்தவர், மத்திய அமைச்சர். அவர் இதற்காகவே டெல்லியிலிருந்து வந்திருந்தார்.
விழா மேடையில், மத்திய அமைச்சர் பக்கத்திலிருந்த ஜென் மாஸ்டரிடம் கிசுகிசுத்தார். ‘சாமி, நீங்க கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா?’

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்..




நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சென்னை தி. நகர் சௌத் போக் ரோடில் வசித்து வருகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கொடுக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சி எங்கள் தெருவின் பெயரை “செவாலியே சிவாஜி கணேசன் சாலை” என்று மாற்றியது. பொதுவாகவே எங்கே ஆட்டோ ஏறினாலும், தி. நகர் சௌத் போக் ரோடு என்றவுடன், சிவாஜி வீட்டு கிட்டேயா?’ என்று டிரைவர்கள் கேட்கத் தவறமாட்டார்கள். சிவாஜியின் பரம ரசிகர்களான என் வயதான உறவினர்கள் சிலர், ” சிவாஜியை அடிக்கடி பார்ப்பியா? ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்; என்னை சிவாஜியைப் பார்க்க கூப்பிட்டுக்கிட்டுப் போ!” என்று கட்டளையிடுவார்கள். நான் உடனே டாபிக்கை மாற்றிவிடுவேன்.
உண்மை என்னவென்றால் நானே முதல் மரியாதை படம் ரிலீசாகும் வரை சிவாஜி வீட்டின் பெரிய கேட்டைத்தான் பார்த்திருக்கிறேன். முதல் மரியாதை வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றவுடன், கல்கிக்காக அவரை சந்தித்தேன். சிவாஜி என்ற சிங்கத்தைப் பார்க்கப் அவர் வீட்டுக்குள் போன என் கண்களில் முதலில் பட்டது கம்பீரமாக ஒரு கண்ணாடி ஷோ கேசின் உள்ளே நின்றுகொண்டிருந்த ஒரு நிஜ சைஸ் புலி.

இலங்கைச் செய்திகள்

.
ஒத்திகையில் ஈடுபட்ட கிபீர் விமானங்கள் வீழ்ந்து நொறுங்கின


இலங்கை விமானப்படையின் 60ஆவது விழாக் கொண்டாட்த்திற்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கம்பஹா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இதேவேளை இவ்விமானங்களில் இருந்த இரு விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய விமானி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விமான விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டாதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இந்தியன் வேல்யூஸ் - சிறுகதை


.

S.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்அன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள்.

"உன் உத்தேசத்தில் இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன நீரூ?"
நீரூ என்று அழைக்கப்படும் நீரஜா டீ பாட்லிருந்து க்ரீன் டீயை நிதானமாக தன் கோப்பையில் ஊற்றிக் கொண்டு பிறகு நிமிர்ந்து பார்த்தாள்.
சிநேகிதியைக் கூர்ந்து பார்த்தவள், "உன் போக்கைப் பார்த்தால் உன் கேள்விக்குப் பின்னால் ஏதோ பெரிய கதை இருப்பது போல் தோன்றுகிறது. முதலில் அந்தக் கதையைச் சொல்" ஆணையிட்டாள் நீரஜா.
"கதைத்தான். எங்க அம்மா அப்பா என் கல்யாணத்திற்காக செய்து கொண்டிருக்கும் ரகளைதான் உனக்குத் தெரியுமே? போன கிருஸ்துமஸ் வீடுமுறைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கப் போவதாக சொன்னார்கள். அதற்கென்ன வந்தது என்று நினைத்து சரி என்றேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ...."
"வெயிட் எ மினிட். விளம்பர வரிகளை நீ எழுதினாயா? அவர்கள் எழுதினார்களா?"

சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா மார்ச் மாதம் 11 ம் திகதி ஆரம்பமாகும்

.


வளம்மிக்க அவுஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரிலுள்ள வைகாசிக் குன்றில் அமர்ந்துள்ள அருள்மிகு சிட்னி முருகப்பெருமானுக்கு விகிர்தி வருஷம் உத்தராயண மாசி மாதம் 27ம் நாள் (11-03-2011) வெள்ளிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டித் திதியம் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பமாகும். தொடர்ந்து 11 நாட்கள் கோயில் விழாக்கோலம் பூண்டு விளங்கும்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

.
இலங்கையுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியது


இலங்கையுடனான பரபரப்பான உலகக் கிண்ண ‘ஏ’ பிரிவுப் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய பாக். அணி ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது.




தமிழ் சினிமா

சீடன் - பட விமர்சனம்!


 கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ....

கல்லறை வீரர்கள் - அமலகுமார்


.
Posted date 2/28/2011
  மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாதுக்காக்கப்படவேண்டிய கலாசார, பாரம்பரிய முக்கியத்துவம் பெற்ற இடமாக 1984 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவின் சிதைவு - மஷூக் ரஹ்மான்

                                                                                  கட்டுரை – 6    மஷூக் ரஹ்மான்



இன்டர்நெட்! வரமா? சாபமா? என்ற கேள்வி பலமான கலச்சார அடிப்படை மிகுந்த இந்தியாவில் ஒரு முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது. 
நான் சில காலம் ஒரு இன்டர்நெட் கஃபே நடத்தி வந்தேன். அப்பொழுது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். வருடம் 2002! முதன்முதலாக சென்னையில் நில அதிர்வு ஏற்பட்ட நாள்… அன்று என் கடையில் வழக்கம்போல முழு கூட்டம்! திடீரென்று நிலத்தில் ஒரு பேரதிர்வு! நான் சட்டென்று புரிந்து கொண்டு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களை வெளியேறுமாறு சொல்ல… அப்போது நிகழ்ந்தது நில அதிர்வைவிட பேரதிர்ச்சியாக இருந்தது



மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

16. முட்டாள்தனமான செயல்

‘தேர்வுகளில் (Exams) வெற்றி பெறுவது’ பற்றித் தேவைக்கு அதிகமான மதிப்பினைக் கொடுக்காதீர்கள். அவ்வாறு மிக அதிகமான மதிப்பினை அதற்குக் கொடுத்தீர்களானால், நீங்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது மிகக் கடுமையான ‘சோர்வு அழுத்தத்’திற்கு (டிப்ரஸன்) ஆளாகிவிடுவீர்கள்! தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மிக அதிக அளவிலான மாணவர்கள் ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்தியினை நாம் கேட்கின்றோம். அன்பு மிக்க குழந்தைகளே! இதுபோன்ற ‘முட்டாள்தனமான செயல்’களைச் செய்யாதீர்கள். ஒரு வேளை, தோல்வி என்பது வந்துவிட்டால் அதனை ‘மேலும் முயற்சி செய்ய வேண்டும்’ என்பதற்குரிய து}ண்டுகோலாக எடுத்துக் கொள்ளுங்கள்.  ஏன் நான் தோல்வி அடைந்தேன்? என்று ஆராய்ந்து பாருங்கள், அந்த அனுபவத்தில் இருந்து லாபம் ஒன்றைப் பெறுங்கள். இதை விட்டுவிட்டு, அதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் இறங்கி, நீங்களே உங்களை அழித்துக் கொண்டால், நினைவில் வையுங்கள், உங்களின் அந்தச் செயல் என்னைப் பெரிதும் துன்பத்திற்குள்ளாகும்!

1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு

ஆக்கம்: டி.பி.எஸ். ஜெயராஜ்

“ இப்படியாக அடக்கியாள்பவர்களின் வன்முறையினால் ஒடுக்கப் பட்டவர்களின் வன்முறையற்ற போராட்டம் அமைதியாக்கப் பட்டது சிங்கள குறுகியவாதத்தின் ஆயுத பலம் தமிழர்களின் அகிம்சா வாதத்தை நசுக்கியழித்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தியான நிகழ்வு தமிழ் தேசியப் போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் அனுபவத்திற்கு தொடக்கம் குறித்தது.அந்த அனுபவம் தமிழர்களுக்குப் போதித்தது வன்முறையற்ற நீதியான போராட்டத்தின் சக்தியால், இனத் துவேசமானதும் மனிதத்தன்மையையும் நாகரிகப் பழக்க வழக்கங்களினதும் எல்லா ஒழுங்கு நெறிகளின் தரங்களையும் தாண்டி நிற்கும் அடக்கியாளும் வன்முறையான இராணுவ சக்தியை உட்கொள்ள முடியாது என்பதை. இந்த நிகழ்ச்சியில் அடக்குமுறையாளர்கள் ஊக்குவித்த கருத்தானது,இராணுவ பயங்கரவாதம்தான் தமிழர்களின் கோரிக்கைக்கும் மற்றும் வன்முறையற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்ட தமிழர்களின் அரசியல் கிளர்ச்சிக்குமான ஒரே பதில்,மேலும் துப்பாக்கிக் குழல்களின் முன்பாக அது பலவீனமானதும் கையாலாகானதுமான ஒரு கட்டமைப்பு” – அன்ரன் பாலசிங்கம்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துக! டில்லி உடும்புப் பிடி

.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு இந்தியா அண்மைய நாட்களில் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்து உள்ளது என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வந்து உள்ளது.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இச்சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை இலங்கை அரசால் இழைக்கப்பட்டு வருகின்ற அவமானமாகவே கருதுகின்றது இந்தியா.

இச்சரத்துக்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.

குறிப்பாக இவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் முறைமை , மாகாண சபைகள் முறைமைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இந்தியா ஆணித்தரமாக விசுவாசிக்கின்றது.