சன்மார்க்க வழி நடந்த சம்பந்தப் பெருமான் !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



வேதநெறி வந்தார் மேலான சைவநெறி
பூதலத்தில் பொலிந்திடவே புகலியிலே பிறந்தார் 
சாதனையின் நாயகனாய் சன்மார்க்க வழிபற்றி
காதலுடன் தமிழ்பாடி கருத்துரைக்க வந்தாரே 

பக்திப் பெருவெளியில் பதினாறு ஆண்டுகளே
பரமன் புகழ்பாடி பண்ணோடு பாடல்தந்தார் 
தத்துவத்தைப் பக்குவமாய் தமிழிலே தந்திட்டார்
சித்தமெலாம் சிவனாக இத்தரையில் வாழ்ந்திட்டார் 

பிஞ்சுப் பருவத்தில் பெம்மானைக் கண்டார்
பெருமாட்டி உமையம்மை பாலூட்டி நின்றாள்
உயர்ஞானம் உமையீந்த பாலினுள் இருந்ததால்
பாலுண்ட குழந்தையும் பக்குவத்தைப் பெற்றது 

சிறுதொண்டநாயனார் வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா) வாரந்தோறும் நடாத்தும் “சிவத்தோடு நாம்” திருமுறை பாராயணத்திபோது சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்திலன்று நடைபெற்ற சிறுத்தொண்ட நாயனார் குருபூசையை முன்னிட்டு திரு தெட்சணாமூர்த்தி சிவராமலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறுத்தொண்டர் வரலாறும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவையும்.

பகுதி 1 (சிறுத்தொண்டர் வரலாறு) கடந்தவாரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.


பகுதி
– 2 சிறுத்தொண்டர் வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

* சிறுதொண்டநாயனார் வரலாற்றிலிருந்து

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை*

1.   சிவப்பணி செய்யும் போது கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து பணிசெய்தால் சிவபெருமானின் பெரும்கருணையான பரிபூரண அருளைப் பெறலாம்.  இதன் காரணமாகத்தான் சிறுத்தொண்டநாயனாருக்கு;

a)        சிவபெருமான், அம்பாள் சரவணக்குமரனுடன் சேர்ந்த சோமஸ்கந்த வடிவுடனும், முனிவர்கள், பூதகணங்களுடன், நான்கு பேருக்கும் காட்சிகொடுத்து முத்திப்பேறு அளித்தார்.

b)        அறுபத்திமூன்று நாயன்மார்களுள்  இவ்வாறு காட்சி கொடுத்தது சிறுத்தொண்டருக்கு மட்டும்தான்.

 

2.   2.    சிவபெருமான் சிறுத்தொண்டநாயனார்  வீட்டில் உணவு உண்ணும் போது சிறுத்தொண்டரையும் சீரளாதேவரையும் அழைக்கின்றார. இதன் மூலம் தெரியவேண்டியது நாம் வீட்டில் உணவு உண்ணும் போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணவேண்டும்.

3.    சிறுத்தொண்டநாயணார் செய்த தொண்டும், தொழிலும், ஒன்றுக்கொன்று முரணானது.  

படித்தோம் சொல்கின்றோம் : ஜேகே. எழுதிய மாயப்புனைவு நாவல் வெள்ளி ! புதிய படைப்பு மொழியால் உருவான சங்க இலக்கியக்கதை ! ! முருகபூபதி

 


அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமாரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன்.

ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை  அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர்.  எனினும்  ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும்,  அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.

தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை இணைய இதழில் கேட்டிருந்தார்.

இங்கு நான் குறிப்பிடும் ஜே.கே.  “ படலை  “ என்ற வலைத்தளமும் வைத்திருக்கிறார். அதிலும் இவரது ஆக்கங்களை நாம் படிக்கமுடியும்.

 “ படலை  “ என்றால் அது என்ன..?  எனக்கேட்கும் வாசகர்களுக்காக நான் ஒரு அகராதிதான் உருவாக்கவேண்டும்.

சரிபோகட்டும், ஜே.கே. ஏற்கனவே  என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை முதலான படைப்புகளை நூலுருவில் தந்திருப்பவர். இவை பற்றியும் ஏற்கனவே எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கின்றேன்.

ஜேகே.யின் இந்த மாயப்புனைவு நாவலைப்பற்றி சொல்வதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நான்  அவுஸ்திரேலியாவிலும், பிரான்ஸிலும், இங்கிலாந்திலும் சந்தித்த மூன்று அனுபவங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

சம்பவம் -01

கடந்த மே மாதம் சிட்னியில் மறைந்த கவிஞர் அம்பி அவர்கள் இறுதியாக எழுதிய சொல்லாத கதைகள் நூலை முழுமையாக கணினியில் பதிவுசெய்து கொடுத்தபோது, அந்த நூலுக்கான முன்னுரையை ( அம்பி சொல்லச்சொல்ல எழுதியது ) அம்பியின் புதல்வர் திருக்குமாருக்கு அனுப்பியிருந்தேன்.

அவ்வேளையில் அம்பியால்,  பேசமுடியாது போய்விட்டது. ஆனால், அவர் அதனை வாசித்தார்.

சில நிமிடங்களில் அம்பியின் புதல்வர் என்னைத் தொடர்புகொண்டு,  வாட்ஸ் அப்பை பார்க்குமாறு சொன்னார். பார்த்தேன்.

அம்பியின் முன்னுரையை அவரது மருமகள் கூகுளில் பதிவேற்றியிருக்கிறார்.

ஒரு இனிமையான பெண்குரல்  அந்த முன்னுரையை தெளிவாகவும் சிறந்த உச்சரிப்புடனும் வாசித்தது. அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாது!

தங்கத் தாத்தாவை நினைவுகூருவோம்! நவாலியூர் க சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம் 25 - 5 - 1878

 

நவாலி என்னும் ஊரிலே     வன்னியசேகர முதலியார் பரம்பரையிலே  அரசகுடும்ப வழித்தோன்றலான அருமையினார் கதிர்காமர் அவர்களுக்கும்   அழகும் அருங்குணமும் நிறைந்த இலக்குமிப்பிள்ளை அவர்களுக்கும்    1878  ஆண்டு  வைகாசி மாதம்  இருபத்தைந்தாம்நாள்  சனிக்கிழமை அன்று அருந்தவப் புதல்வராகப் புலவர் பிறந்தார்.

ஈழத் திருநாட்டிலே புலவர் பரம்பரையை இலங்கச் செய்ய பதினையாயிரம் செந்தமிழ்ப் பாக்களை இயற்றித் தமிழன்னைக்கு அணி செய்து அழகு பார்த்தவர் தங்கத் தாத்தா.. அவர் இயற்றிய தெய்வ மணங்கமழும் அதிகமான  செய்யுள்கள் வழிபாட்டிற்குரியவை என்பது தமிழ்ப் புலமைச்சான்றோரின் முடிபு.

 

"கரும்பென்கோ ஞானக் கனியென்கோ தேவர்

மருந்தென்கோ தென்கதிரை மன்னன் - விருந்தென்கோ

பொங்கர் கழனி பொலியு நவாலி நகர்த்

தங்கப் புலவன் தமிழ்!"

என்று இலங்கையின் பெருங் ல்விமானாகத் திகழ்ந்த அருணந்தி விதந்துரைத்து மகிழ்ந்தவர்.

புலவருடன் மிகவும் நெருக்கமாகக் கேண்மை பூண்டிருந்த பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் தமிழுலகிற்குத் தந்தருளிய அதி உயர்ந்த மூன்று இரத்தினங்களில் ஒருவராகத் தங்கத்தாத்தாவைப் போற்றியதுடன் அவரின் ஆக்கங்களின் உயர்வை இவ்வண்ணம் …

"நல்வழி காட்டுவோ மென்றோர்கவி ராசமுகில்

      நற்றமிழ் பொழிந்த நாட்டில்…………………

வல்லென்ற பண்டிதரும்   வாய்ஊறி மதுரிக்க

   வகைசெய்தோர் புலவர் திலகம்

 வாணியின் திருவருட் புகழெலாந் தமிழிலே

      வருணித்த தொருவி யப்போ?

சொல்லென்ற மலரிலே பொருளென்ற புதுமதுச்

    சொட்டிச் சுரக்கு மமிர்த

  சுரபியா யொளிர்கின்ற சோமசுந் தரநாம

      சுகிர்தனைத் துதிசெய் வோமே!"

இளையராஜா இசையில் பாடகி மனோரமா

 தமிழ்த் திரையுலகில் நடிப்பின் பலபரிமாணங்களைக் காட்டிய,


ஆச்சி மனோரமாவின் பிறந்த தினம் மே மாதம் 26 ஆம் திகதி ஆகும்.

அவர் நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டுமன்றி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் கோலோச்சி இருக்கிறார்.
அதுமட்டுமன்றி பல்வேறு இசையமைப்பாளர் இசையில் வெவ்வேறு ரகமாகப் பாடியும் சிறப்புச் சேர்த்துள்ள ஒரு முழுமையான கலைஞர் அவர்.
அவருடைய பிறந்த தினத்தில், இசைஞானி இளையராஜா இசையில் மனோரமா பாடிய பாடல்களின் பாடல்களைப் பார்ப்போம்.

ஆரம்ப காலத்தில் மனோரமா கூடச் சேர்ந்த நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து பாடும் பாடல் போல அமைந்த பாடல்களாக அமைந்த பாட்டுக்கள் இருக்கின்றன.
குறிப்பாக அச்சாணி படத்துக்காக சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவன் குரல் கொடுக்க, மனோரமா பாடி நடித்த
“அது மாத்திரம் இப்ப கூடாது” https://www.youtube.com/watch?v=1ewaucD5-bk என்ற பாடல் இருக்கிறது.


அப்படியே போனால் தேங்காய்ச் சீனிவாசனுடன் இணைந்து நடித்த, ஆனால் மனோரமா மட்டும் பாடும் 
“கானாங்குருவிக்கு கல்யாணமாம்” 

https://www.youtube.com/watch?v=WiPgv2Sh9Qw 
வாழ நினைத்தால் வாழலாம் படத்துக்காக இருக்கிறது.

தொழிலாளி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


வேட்டைக்காரன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்த படம் தொழிலாளி . எம் ஜி ஆர் கால்ஷீட் கிடைத்தவுடனேயே மள மளவென்று படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார் அவர். தேவர் பிலிம்சில் சரோஜாதேவிக்கு இனி இடம் இல்லை என்பதால் படத்துக்கு புதிய கதாநாயகியை தெரிவு செய்ய வேண்டியிருந்தது. முதலில் கே ஆர் விஜயாவை பார்த்த தேவர் , இவ எம் ஜி ஆருக்கு தங்கை மாதிரி தெரியுறா ஜோடிக்கு சரி வராது என்று நிராகரித்து விட்டார். அதன்

பின் புதுமுகம் ரத்னா கதாநாயகியாக ஒப்பந்தமானார். கே ஆர் விஜயாவுக்கு வில்லி வேடம் வழங்கப்பட்டது. அதே போல் எம் ஜி ஆரின் அம்மா வேடத்துக்கு முதல் தடவையாக எஸ் என் லட்சுமி நடிக்க ஒப்பந்தமானார். தேவரின் எல்லாப் படங்களுக்கும் பாடல்களை எழுதுபவர் கண்ணதாசன். எம் ஜி ஆருக்கும் அவருக்கும் இடையில் இருந்த மோதல் காரணமாக முதல் தடவையாக தேவர் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இப்படி சில பல மாற்றங்களுடன் தொழிலாளி உருவானான்.


தேவரின் எல்லா எம் ஜி ஆர் படங்களிலும் நடிகவேள் எம் ஆர் ராதா நிச்சயமாக நடிப்பார். அந்த வகையில் இதிலும் அவருக்கு வேடம் தரப் பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய போது இருந்த சுமுக நிலை படம் பூர்த்தியாகும் போது இருக்கவில்லை. தேவரின் படங்களில் படம் முழுவதும் வந்து கொண்டிருந்த ராதாவின் காட்சிகள் பின்னர் படத்துக்கு படம் குறைக்கப் பட்டுக் கொண்டே வந்தன. நீதிக்குப் பின் பாசம் படத்தில் பாதிப் படத்திலேயே இறந்து விடுவார். வேட்டைக்காரனில் சில காட்சிகளிலேயே வருவார். இப்போது தொழிலாளியிலும் கால் முடமான ஒரு பாத்திரத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்தார். அதிலும் பெரும்பாலான காட்சிகள் ஒரு சோபாவில் அமர்ந்த படி பேசும் காட்சி. இது எம் ஆர் ராதாவுக்கு அதிருப்தியை ஏற்றப்படுத்தியிருந்தது. யாருடைய விருப்பத்துக்கு ஏற்பவே இப்படி செய்கிறார்கள் என்று அவர் நினைத்தார்.

ஊழி திரைப்படம் பற்றிய பின்னோட்டம்

 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 10ம் திகதி இலங்கையிலும், உலகளவிலும் இத்திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டுள்ளதுஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில்  இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ம் ஆண்டு கூறிய பின்னர், கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.


இலங்கைச் செய்திகள்

இலங்கை மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சீட்

யாழ்.நண்பர்களின் 10ஆவது வருட நிறைவு

கவிஞர் இக்பால் அலியின் இரு நூல்கள் வெளியீடு

வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வைகாசி விசாக பொங்கல் உற்சவம்

பன்முகத்தன்மையில் ஐக்கியம் ஏற்படுத்துதல்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பலதரப்பினருடனும் சந்திப்பு


இலங்கை மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சீட்

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உதவி

May 24, 2024 11:12 am 

புதுக்கோட்டை மாவட்டத்தின் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பை தொடர்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

உலகச் செய்திகள்

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மொங்கோலியாவும் அக்கறை

காசாவின் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு இஸ்ரேலிய படை, டாங்கிகள் முன்னேற்றம்

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் முக்கிய இலக்கு

பப்புவாவில் பாரிய நிலச்சரிவு 6 கிராமங்கள் புதைந்தன; பலர் உயிரிழந்திருப்பதாக அச்சம்

ஜூலையில் பிரிட்டனில் திடீர் பொதுத் தேர்தல்


பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மொங்கோலியாவும் அக்கறை 

May 24, 2024 2:59 pm 

இருபக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மொங்கோலியாவும் இந்தியாவும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன. இது தொடர்பிலான கூட்டு செயற்குழுக்கூட்டம் மொங்கோலியாவின் உலன்பாடரில் நடைபெற்றுள்ளன.

ETA (ஈதக) பெருமையுடன் வழங்கும் தொண்டு இரவு 2024


 



கற்பகதரு நூல் வெளியீட்டு விழா 02/06/2024

 






தாயகம் தமிழ் மாலை - மாபெரும் நிகழ்ச்சி - 02/06/2024

 




சைவ மகா சபை பெருமையுடன் வழங்கும் வருடாந்திர நிதி திரட்டும் விழா 2024