மரணஅறிவித்தல்

திருமதி சகுந்தலா சச்சிதானந்தன்



                                                          மண்ணிலே :06.09.1945         விண்ணிலே :20.08.2013

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சகுந்தலா சச்சிதானந்தன் அவர்கள் 20.08.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்  சண்முகலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும, சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியுமாவார். இவர் காலஞசென்ற புஷ்பநாதன் மற்றும் சதாசிவம் (கனடா),  நிர்மலா (இலங்கை),  தேவராசா (சுவிஸ்)  ஆகியோரின் அன்புச் சகோதரியும,  காலஞ்சென்ற தனலெட்சுமி, விவேகானந்தன் மற்றும் சண்முகானந்தன,  நித்தியானந்தன், கமலானந்தன் ஆகியேரின் மைத்துனியும் கலைச்செல்வன் (செல்வன் - சுவிஸ்),  சுபாஜினி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  ஜெயந்திரபாலன் (சிட்னி), ஜெயானந்தி (சுவிஸ்) ஆகியோரின் அருமைமிகு மாமியாரும் மதுரா, கேஷ்னா,  அஸ்வின் , அபூர்வா, அட்சரன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
பூதவுடல்; சனிக்கிழமை (24.08.2013) மாலை 5 மணி முதல் 7 மணி வரை,
101South Street Granville, Liberty Funeral மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும்
ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் திங்கட்கிழமை (26.08.2013) 9:30 மணி முதல் 1:30 வரை
Rookwood (South Chapel), Memorial Avenue, Rookwood, NSW மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தொடர்புகள்:        ஜெயந்திரபாலன் (சிட்னி) +61-2-9896 0724

மரணஅறிவித்தல்





கொட்டடியைச் சேர்ந்தவரும் பேர்த், மெல்பேர்ணில்  வசித்தவருமான திருமதி மனோரஞ்சிதம் மகேசன் சிட்னியில் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவசிவாயம் மகேசனின் அன்பு மனைவியும், திருமதி பாக்கியம் திருநாவுக்கரசின் அன்புச் சகோதரியும் ஆவர். இவர் பேர்த்தைச் சேர்ந்த ரமணா என அழைக்கப்படும் நவசிவாயம், செல்வரஞ்சனி, முருகேசன், அருச்சுனன், நகுலன், மெல்பேர்ணைச் சேர்ந்த சகாதேவன், சிட்னியைச் சேர்ந்த உமையாள், கருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பேர்த்தைச் சேர்ந்த சாந்தினி, லோகநாதன், கௌசல்யா, ஜெயமதி, போதினி, மெல்பேர்ணைச் சேர்ந்த சிவகங்கா, சிட்னியைச் சேர்ந்த KG பாஸ்கரன், விஜித்தா ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

பேர்த்தைச் சேர்ந்த அபிராமி, சாரங்கன், மயூரன், கஜன், பிரகாஷ், அருண், சதீஸ், மெல்பேர்ணைச் சேர்ந்த கஸ்தூரி, கார்த்திகா, சிட்னியைச் சேர்ந்த அனுஷா, கபிலன், அபிஷேக், அட்சிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
குடும்பத்தினர்

இலக்கியச் சந்திப்பு 5 - 25.08.2013

.

 

முட்டையிடும் பெட்டைக்கோழி! -கவிஞர் வாலி

.


கவிஞர் வாலியிடம் என்ன இப்படியான பாடல்களும் எழுதுகிறீர்களே என்று கேட்டபோது அவர் கவிதையில் கூறிய விடை .


இங்கே நான் 
வண்ணமொழிப் பிள்ளைக்குக் 
தாலாட்டும் தாய்; 

அங்கே நான் 
விட்டெறியும் எலும்புக்கு 
வாலாட்டும் நாய்! 

மேலும்… 

எந்தப்பா சினிமாவில் 
எடுபடுமோ? விலைபெறுமோ? 
அந்தப்பா எழுதுகிறேன்; 
என்தப்பா? நீர் சொல்லும்! 

கிராமத்து மரங்களும் நாமும் - செ. பாஸ்கரன்

.

நியூசவுத் வேல்ஸ் மானிலத்தின் வட எல்லைக் கோட்டுப்பகுதிகளான டுவீட் கெட்ஸ், பலினா கசீனோ போன்ற இடங்களுக்கு வேலையின் நிமித்தம் அண்மையில் சென்று வரவேண்டிய தேவை ஏற்பட்டதால். கோல்ட்கோஸட்; விமான நிலையத்தில் இறங்கி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இந்தப்பகுதிகளுக்கு சென்றேன். சிட்னியில் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த எனக்கு கதகதப்பான் வெய்யிலும் அழகிய பச்சைப்பசேல் என்று காட்சி தரும் நிலப்பரப்பும் இங்கிதமாக இருந்தது.


இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே காரை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தேன். வாழைத்தோட்டங்கள் கரும்புத் தோட்டங்கள் மரக்கறித் தோட்டங்கள் என்று காட்சிகள் மாறிக்கொண்டிருந்தது. பெரும்பாலான பகுதிகளில் ஒரு பக்கம் தோட்டமிருக்கும் மறுபக்கம் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். வளம் நிறைந்த பகுதியாக தெரிந்தது. சில சில இடங்களில் செம்பாட்டு மண்னோடு தோட்டம் பொன்நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. நீண்டும் வளைந்தும் சென்றுகொண்டிருக்கும் வீதியில் செல்வதே மனதில் மகிழ்வை தந்துகொண்டிருந்தது. இருந்தாலும் இந்த வேளையில் மனைவி பிள்ளைகளும் வந்திருந்தால் இந்த இயற்கை காட்சிகளைப் பற்றி பேசி ரசித்துக்கொண்டு போயிருக்கலாமே என்ற எண்ணமும் முளைவிடத்தான் செய்தது.


கதம்பமாலை 2013 என் பார்வையில்

.



அருணாசல அற்புதம் 3: “எனக்கு ஒரே ஒரு ருசி”



ஒருமுறை ஔவைப் பாட்டி வழுதி என்பவன் திருமணத்துக்குப் போயிருந்தாளாம். அவன் தமிழில் மிகத் தேர்ந்தவன். அங்கே நடந்த விருந்தில் அவள் எவையெல்லாம் உண்டாளாம் தெரியுமா? எல்லாப்புறமும் பலரால் நெருக்குண்டாளாம், பிடித்துத் தள்ளுண்டாளாம். கூட்டத்தைத் தாண்டி அவளால் உணவுக் கூடத்துக்குள் நுழையே முடியவில்லை. மிகவும் நேரமாகிப் போகவே பசி அதிகமாகி, உடல் வாடிப் போயிற்றாம்!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த இலக்கியச்சந்திப்பு - மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்



.

இலங்கையில் இலக்கிய சந்திப்பாம் அதை நடத்த வேண்டுமாம் இல்லை அதை நடத்த கூடாதாம் .என்கின்ற விவாதங்கள் முகபுத்தகங்களில் சூடு பறக்க
புகலிட நாட்டுகாரர்களுக்கு வேறு வேலைகளில்லை என சலித்துக்கொண்டேன். அது மட்டுமல்ல அதை இலங்கையில் நடத்த கோருபவர்கள் அரச சார்பானவர்களாம் அதை நடத்த கூடாது என்பவர்கள் அரச எதிர்ப்புகாரர்களாம். தமிழ் சமூகம் இப்போ எதற்கு எடுத்தாலும் அரச சார்பு, அரச எதிர்ப்பு என்று முத்திரை குத்துவதிலேயே தனது சக்தியை  முழுக்க  செலவழிக்கின்றது.
 இலண்டனில் நடந்த40வது  இலக்கிய சந்திப்பில்  எப்படியோ பலத்த விவாதங்களையும்  சூடான கருத்தாடல்களையும் தாண்டி 41வது இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என பெரும்பான்மையோர் வாக்களித்து முடிவுகாணப்பட்டது. அதன் படி கடந்த ஜூலை மாதம் 20, 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் அந்த இலக்கிய சந்திப்பு இடம் பெற்றது. ஓரிருவர் உரையாற்ற நூறு பேர் கேட்டுவிட்டு எழுந்து செல்லும் இலக்கிய கூட்டங்களை போலன்றி நீண்ட உரையாடல்களும் பரஸ்பர விவாதங்களும் நிறைந்த கருத்து களமாக புதியதொரு அனுபவம் இச்சந்திப்பில்கிடைத்தது.மூத்த எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள, , பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வாசகர்கள் என்கின்ற எவ்வித ஏற்ற இறக்கம் கொண்ட தோரணைகளுமின்றி சம உரிமையுடன் கருத்தாடுகின்ற ஒரு புதிய கலாச்சாரத்தை இந்த இலக்கிய சந்திப்பு தொடக்கி வைத்திருக்கின்றது.
சுமார் 30 வருடகாலம் கருத்து சுதந்திர மறுப்பிற்குள் சிக்கி கிடந்த மனிதர்களுக்கு  இந்த யாழ்ப்பாண இலக்கிய சந்திப்பு ஒரு சுடரொளியை ஏற்றி சென்றிருக்கிறது என சொல்லலாம் .அது மட்டுமன்றி பேச்சாளர்கள்  சுதந்திரமாக சுய தணிக்கைகள் ஏதுமின்றி தாம் கொண்ட கருத்துக்களை  முன்வைப்பதற்குரிய ஒரு பூரண சுதந்திரத்தை இலக்கிய சந்திப்பின் அந்த இருநாள் அமர்வுகளும் கொடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.குறிப்பாக போர் செய்திகளும் மரண ஓலங்களும் மட்டுமே கேட்க வேண்டும் என்பது எழுதாத நியதியாய் இருந்த நிலை மாறி இனி நாம் பேச முடியும் என்று மூன்று தசாப்தகால மெளனத்தை கலைத்து சென்றிருக்கிறது இச்சந்திப்பு.
முதல் நாள் அமர்வில் என் எழுத்து எனும் தலைப்பில் எழுத்தாளர் சாந்தன் முதலுரை வழங்கினர். தொடர்ந்து  பாரம்பரிய கலைகளும் பண்பாடும் என்கின்ற தலைப்பில் நால்வகை கோணங்களில் பேச்சுக்கள் அமைந்திருந்தன.பெண்களின், முஸ்லிம்களின், மட்டகளப்பின் சரித்திரத்தின் என்று ஒவ்வொரு பார்வையிலும் ஒரே தலைப்பில் நால்வர் உரையாற்றினர். தமிழ் நாவல் பற்றிய வரலாற்றெழுதலில் அசன்பே சரித்திரம் போன்ற நாவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. என்கின்ற கவிஞர் நவாஸ் செளவியின் குற்றசாட்டு கூடிய கவனம் பெற்றது. மாறிவரும் முஸ்லிம் பண்பாட்டு உருவாக்கங்கள் பற்றிய மிக சிறப்பானதொரு புரிதலை பெற்றுக்கொள்ள எ.பி.எம்.இத்ரீஸ் வழங்கிய உரை நல்லதொரு வைப்பை வழங்கியது. எந்த முஸ்லிம்கள் இந்த மண்ணில் இருக்க கூடாதென்று விரட்டப்பட்டனரோ அந்த முஸ்லிம்களின் குரலை அவர்களின் வாழ்வை வரலாற்றை  கலாசாரத்தை, மட்டகளப்பிலிருந்து சுமந்து வந்து இந்த எழுத்தாளர்கள் சங்கிலியன் சிலையருகே அமைந்திருக்கும் அந்த யூரோவில் மண்டபத்தில் வந்து கொட்டித்தீர்த்தபோது இலக்கிய சந்திப்பு ஏதோ ஒன்றை  சாதித்துத்தான் உள்ளது என்பதை உணர முடிந்தது. இந்த உரைகளுக்கு பத்திரிகையாளர் தேவ கெளரி நெறியாள்கை

கச்சாமி --ஷோபாசக்தி


                                                                                                                     

.

ண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்தவிகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையேபார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன்.
நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்றுஎங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியேஅந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப்பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் எனஎனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எனதுஉணர்திறன் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. நான் கெய்லாவின் கையைப் பற்றிக்கொண்டேன்.
இரண்டு பொலிஸ்காரர்களும் வேகவேகமாக எங்களருகே வந்தனர். அவர்கள் இருவரும் மிக இளையவர்கள்.அவர்களது மூஞ்சிகள் கடுகடுவென இருந்தன. முன்னால் வந்தவன் சிங்களத்தில் இரண்டு வார்த்தைகள்சொன்னான். எனக்குச் சிங்களமொழி நன்கு தெரியும். கெய்லா எனது முகத்தைப் பார்த்தாள். நான் சிங்களம்புரியாதவன் போல பாவனை செய்து, குரலைச் சற்று உயர்த்தி “உங்களுக்கு என்ன வேண்டும்?” எனஆங்கிலத்தில் பொலிஸ்காரர்களிடம் கேட்டேன். எனக்குப் பக்கத்தில் வெள்ளைக்காரப் பெண் இருப்பதும்எனது கேள்வியின் தொனியும் பொலிஸ்காரர்களைச் சற்று மிரட்சியுற வைக்கலாம் என எண்ணினேன்.

இலங்கைச் செய்திகள்


நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் 12/08/2013

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை

பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் நியமனம்

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன: ஹக்கீம்

வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்

வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிராண்ட்பாஸ் விவகாரம்: அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்

"வடக்குத் தேர்தலுக்கு பின் மூன்றாம் கட்ட போராட்டம்"

பரக்காஹதெனியா பிரதேசத்தின் ஏ-10 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் “அமைதி - பள்ளிவாசல் முன்னால்” என எழுதப்பட்டுள்ள விளம்பரப் பலகையை அகற்றவேண்டும் என பொது பலசேனா விரும்புகிறது

மடு அன்னையின் ஆவணித் திருவிழா
===================================================================


நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம்



கலக்கபோவது யாரு 14.09.2013




திரும்பிப்பார்க்கின்றேன் ---03 அச்சுப்பிசாசை விரட்டுவதற்கு அயராமல் உழைத்த பெருந்தகை இலக்ஷ்மண ஐயர் - முருகபூதி


படைப்பாளிகளையும்   பத்திரிகையாளர்களையும்  கல்வித்துறை  சார்ந்த  ஆசிரியர்கள்,  விரிவுரையாளர்கள்,    பேராசிரியர்கள்   மற்றும் 
மானநட்ட  வழக்கிற்கும்  தள்ளிவிடும்  கொடிய  இயல்பு  இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது.
அதுதான்  அச்சுப்பிசாசு.
மொழிக்கு  ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான்.  1990  ஆம்  ஆண்டு  மறைந்த  எங்கள்  கல்விமான்  இலக்ஷ்மண  ஐயரை  நினைக்கும்  தருணத்தில்   அவர்  ஓட ஓட விரட்டிய  இந்த  அச்சுப்பிசாசுதான்  எள்ளல்  சிரிப்போடு   கண்முன்னே  தோன்றுகிறது.
இலக்ஷ்மண  ஐயர்   கொழும்பு  மலே வீதியில்  அமைந்த  கல்வி  அமைச்சில்   தமிழ்ப்பிரிவின்  வித்தியாதிபதியாக  பணியாற்றிய  காலத்தில்  எங்கள்  நீர்கொழும்பூர்  விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின் ( தற்பொழுது  இந்து மத்திய  கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது)   பழைய  மாணவர்  மன்றத்தை  உருவாக்கியிருந்தோம்
பாடசாலையில்  எமது  மன்றம்  நடத்திய  நாமகள்  விழாவுக்கு  பிரதமவிருந்தினராக  இலக்ஷ்மண  ஐயரை  அழைப்பதற்காக  சென்றிருந்தோம்.
குறித்த  நாளில்  அவருக்கு  வேறு  கடமைகள்  இருந்தமையினால்,  அங்கே  கல்வி  அதிகாரியாக   பணியிலிருந்த  சிவலிங்கம்  அவர்களை  அழைக்குமாறு  சொல்லிவிட்டு  அவரை   எமக்கு  அறிமுகப்படுத்தினார்.
சிவலிங்கமும்  நீர்கொழும்பு  விழாவுக்கு  வருவதற்கு  ஒப்புக்கொண்டார்.  நாம்  புறப்படும்தருவாயில்   எம்மை  அருகே  அழைத்த  இலகஷ்மணஐயர், “ தம்பிமாரே…விழா  அழைப்பிதழ்,  நிகழ்ச்சி  நிரல்  பிரசுரங்களில்  எழுத்துப்பிழை  வராமல்  பார்த்துக்கொள்ளுங்கள்.   உங்கள்  விழாவுக்கு  வரவிருப்பவரின்  பெயர்  இர. சிவலிங்கம் என்பதை  மறந்துவிடாதீர்கள்.  சில   பிரசுரங்களிலும்  பத்திரிகைகளிலும்  அவரது  பெயரை  இரா. சிவலிங்கம்  என்று  தவறாக  அச்சிட்டுவிடுகிறார்கள்.”  என்று குறிப்பிட்டார்.

டபுலிஸ்தான் - எஸ்.ராமகிறிஸ்னன்

.
Vive la France  என்ற பிரெஞ்சு படத்தை நேற்றிரவு பார்த்தேன்,  மிகச்சிறந்த நகைச்சுவைபடமிது,
Taboulistan என்றொரு கற்பனையான நாடு, உலக நாடுகள் யாரும் தன்னைக் கண்டுகொள்ளவேயில்லை, தங்களின் பாராம்பரிய Tabbouleh  உணவு  பற்றி ஒருவரும் அறிந்திரு க்கவில்லை, அதை லெபனான் உணவு என தவறாக கூறுகிறார்கள்  என அந்த நாட்டு சர்வாதிகாரிக்குப் பெரிய ஆதங்கம், அதனால்  உலகின் கவனத்தை ஈர்க்க commercial terrorism என்ற முறையைக் கையாள முடிவு செய்கிறார்
அதாவது ஒரு தற்கொலைப் படையை அனுப்பி தீவிரவாதச் செயல்களை செய்ய வைத்து கவனத்தை ஈர்ப்பது,
இதற்காக ஒரு தீவிரவாதக் குழுவை ஆரம்பித்து விமானத்தில் போய் பாரீஸ் நகரில் உள்ள ஈபில் டவரை மோதி சிதைக்கத் திட்டம் போடுகிறார்,
இந்த வேலையை செய்ய Feruz.  Muzafar என இரண்டு ஆடு மேய்ப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு தீவிரவாதிகளாகப்  பயற்சி கொடுக்கபட்டு உருவாக்கபடுகிறார்கள், இருவரும் நமது வடிவேலு ரக ஆட்கள்,

உலகச் செய்திகள்


 காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!

நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு: 44 பேர் பலி

மும்பையில் இந்திய நீர்மூழ்கியில் தீ: 18 வீரர்களைக் காணவில்லை

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை

எகிப்தில் உக்கிர வன்முறைகளையடுத்து அமைதி: வன்முறைகளில் 525 பேர் பலி?

=======================================================================

காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!

12/08/2013   காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் மீண்டும் 5வது முறையாக இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகே கடந்த 6ந் தேதி பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதுடன். இதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைதொடர்ந்து தனது அத்துமீறலை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து வருகிறது. பூஞ்ச் அருகே திக்வார் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு 10 மணியளவில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

கழுதையும் உருளைக்கிழங்கும்!! (நகைச்சுவை)

.




    ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

    அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

    பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.

    அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.

    பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.

    அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.

    அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார்.

    பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.

    அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, “உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்றார்.

    அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது.



-படித்ததைப் பகிர்ந்தேன்-

அருணா செல்வம்.

தமிழ் சினிமா

சொன்னா புரியாது 

தமிழ்படம், தில்லுமுல்லு படங்கள் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவாவின் அலட்டல் இல்லாத நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சொன்னா புரியாது.
வேற்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் பணி செய்து வருகிறார் சிவா.
அப்பா இல்லாமல் அம்மா அரவணைப்பில் வாழும் சிவாவுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை.
பெண்கள், குடி என்று ஜாலியாக பொழுதைக் கழிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தவறவிட வேண்டியிருக்கும் என்பதால் திருமணத்திற்கு மறுக்கிறார்.
ஆனால் அவருடைய அம்மாவோ சிவாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று முயல்கிறார்.
இருந்தும் சிவா அடம்பிடிக்கவே, திருமணம் செய்யவில்லையென்றால் திருப்பதி, பழனி, ராமேசுவரம் என்று சன்னியாசம் போகப்போவதாக அவருடைய அம்மா மிரட்டுகிறார்.
அம்மா மீது பாசம் கொண்ட சிவா, அம்மாவை பிரிய மனம் இல்லாததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதையடுத்து, மனோபாலா நடத்தும் திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்கின்றனர்.
அங்கு நாயகி வசுந்தராவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப்போக, அவளையே சிவாவுக்கு திருமணம் முடித்து வைக்க சிவாவின் அம்மா முடிவெடுக்கிறார்.
பின்னர் அவளுடைய வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்தமும் செய்துவிடுகிறார்கள். வசுந்தரா டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அரைகுறை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்த சிவா இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என முயற்சி எடுக்கிறார்.
இந்நிலையில், இந்த திருமணத்தில் வசுந்தராவுக்கும் சம்மதம் இல்லை என்பதை அறிகிறார். இறுதியில் இருவரும் இணைந்து திருமணத்தை நிறுத்தினார்களா? அல்லது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சிவா வழக்கமான நக்கல், நையாண்டி பேச்சால் படம் முழுக்க கலகலக்க வைத்திருக்கிறார்.
இந்தி பார்ட்டி கூட்டத்தி்ல், ‘ரோசாஹே சின்ன ரோசாஹே... டபுள் சைடும் போட்டா தோசா‌ஹை...’ என ‘ரோசாப்பூ சி்ன்ன ரோசாப்பூ..’ ‘சூர்யவம்ச’ பாடலை தனக்கு தெரிந்த இந்தியில் டப் பண்ணி பின்னி பெடலெடுத்திருக்கும் ஆரம்ப காட்சியில் திரையரங்கில் கேட்க ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் படத்தின் க்ளைமாக்சுக்கு முந்தைய இரண்டு ரீல் வரை அடங்கிவிடாதபடி படத்தை நகர்த்தி செல்கிறார் சிவா.
வசுந்தரா மீதான காதலை கவிதையாக சொல்வது ஏட்டில் பதிக்கவேண்டியது. வசுந்தரா காஷ்யாப் அழகாக இருக்கிறார். எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் காதல் ரசம் சொட்ட சிவாவுடன் ஆடிப்பாடுவது ரசிக்க வைக்கிறது.
மனோபாலா, சிவாவின் அம்மாவாக வரும் பெண் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
சிவாவின் நண்பராக வரும் ‘பிளேடு’ சங்கர் அழுத்தமான கதாபாத்திரத்தில் மனதில் இடம்பிடிக்கிறார்.
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கலகலப்பான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
முதல் பாதியில் இருந்தே படம் மெதுவாக நகர்கிறது. சிவாவின் நக்கல், நையாண்டி பேச்சால் படத்தை தொடர்ச்சியாக ரசிக்க முடிகிறது.
யாதீஷ் மகாதேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் திறம்பட செயல்பட்டிருக்கிறார்.
சரவணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ பார்த்தா புரியும்.   நன்றி விடுப்பு