" சின்னமாமியே " புகழ் கமலநாதன் மறைக்கப்பட்ட பாடலாசிரியரும் மறைந்தார்- முருகபூபதி

    
இலங்கை  தமிழ்பொப்பிசைப்பாடல்    பிதாமகருக்கு அஞ்சலி
  

                                  
இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்,  கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்   பிரசித்தமான  பாடல்தான்  "  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே ?  பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   "
தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்,  தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது

 ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன் கடந்த  26-01-2016  திகதி வடமராட்சி  -  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.

சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்,  வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர்.
சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர்.

என் கடவுள் - வா மணிகண்டன்

.கவிதைகளிலிருந்து நாம் எதை எடுத்துக் கொள்வது என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது. ‘இதுதான்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு குழந்தை அழுவதைப் பார்ப்பதைப் போல, ஓர் இலை உதிர்தலை கவனிப்பதைப் போல, சலனமில்லாத குளத்து நீரை உற்று நோக்குவதைப் போல, யாருமற்ற கடற்கரையில் கால்களை வந்து தொட்டுச் செல்லும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது போல- ‘இது மட்டும்தான்’ என்று சொல்ல முடியாத- ஆனால் மனதுக்கு நெருக்கமான உணர்ச்சி அது.

கவிதைகள் புரியவில்லை என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு. கவிதை என்ற சொல் இருந்தாலே அடுத்தப் பக்கத்துக்குத் தாவிவிடுவேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் அதிகம். அப்படி தவிர்த்துவிடுவதால் கவிதைக்கு எந்த நஷ்டமுமில்லை. தன்னுடைய கவிதையை யாராவது முப்பது பேர் வாசித்தாலே அது பெரிய விஷயம் என்பது பெரும்பாலான கவிஞர்களுக்கும் தெரியும். கவிஞர்களே கூட அடுத்த கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதில்லை. தமிழ்நாட்டில் தன்னுடைய கவிதைகளைத் தவிர பிறருடைய கவிதைகளை வாசிக்காத கவிஞர்கள்தான் அதிகம். நம்பிக்கையில்லையென்றால் ஆராய்ச்சி செய்து பார்த்து முடிவுக்கு வந்துவிடலாம். ஆக, நாம் வாசிக்காமல் விடுவதால் கவிதை மூலையில் அமர்ந்து முக்காடிட்டு அழப் போவதில்லை.

யாழ்ப்பாண யாத்திரை - கானா பிரபா

.


"என்னண்ணை அவுஸ்திரேலியாவில இருந்து வந்ததாச் சொல்லுறியள் ஆனால் உங்களைப் பார்க்க அப்பிடித் தெரியேல்லையே" வெள்ளவத்தை, கொழும்பில் இருக்கும் ஒரு கடைக்கார இளைஞன் பேசினார்.
எனக்கு இதைக் கேட்டதும் உள்ளூரப் புழகாங்கிதம், அதை வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டே அவருடன் சம்பாஷணையைத் தொடர்ந்தேன். 

இருபது வருடங்கள் என் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்வாழ்வில் குடி கொண்டு விட்டேன். அதில் முதல் ஒன்பது ஆண்டுகள் தாய் நாட்டுக்கே போக முடியாத சூழலிலும் அகப்பட்டு, அதன் பின் என்னுடைய ஒவ்வொரு தாயகப் பயணமும் மீண்டும் அந்தப் பழைய உலகத்து மனிதனைப் போல பிறப்பெடுத்துத் தான் ஊருக்குப் போவேன், அலைவேன், நான் சந்தித்துப் பழகிய மனிதர்களை மட்டுமல்ல, கொண்டாடித் தீர்த்த இடங்களையும் கூடப் பார்த்து வருவேன்.
எனக்கான இந்த ஊர் வலத்துக்குச் சவாரி கொள்ள என் சைக்கிள் காத்திருக்கும்.
நான் வாழ்ந்து பழகிய இடங்களில் சரிக்குச் சரியாக சந்தோஷமும், இழப்புகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்.  

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
நிழலாகத் தொடர்ந்துவரும்   நினைவுகளில்  கனடா ஸ்ரீரஞ்சனி  விஜேந்திரா
எழுத்தில்   தர்மத்தையும்   தார்மீகத்தை  வேண்டி  நிற்கும் பெண்ணியக்குரல்

                                              

" கனடாவுக்கு  வந்த  வயது  முதிர்ந்த  அம்மா  அன்பிருந்தும் நேரமின்மையால்  அல்லற்படும்  பிள்ளைகளின்  பாராமுகம்  கண்டு  இதென்ன  வாழ்க்கை  என்று  ஊருக்குப்  போய்விடுகிறாள். ஆனால்,  ஊரில்  பெரிய  காணியும்  வீடும்  இருந்தும்  கனடாவில் பேரப்   பிள்ளைகளைப்  பிரிந்து  வந்த  குற்ற  உணர்வு  நிம்மதியைக்  கெடுத்து  விடுகிறது.   முடிவில்  தங்கள்  விருப்பு வெறுப்புகளை  மூட்டை  கட்டி  வைத்துவிட்டு  அந்தத்  தாய் கனடாவுக்குத்  திரும்புகிறாள்   பேரப் பிள்ளைகளுக்காக!

இந்தக்  கதை  கனடாவில்  மனதுள்ளே  பொருமும்  எத்தனையோ தாய்மாருக்கு,  உங்கள்  குமுறலுக்கு  அர்த்தம்  இல்லை   என்று அறிவிக்க  ரஞ்சனியால்  எழுதப்பட்டிருக்கின்றது.   பணத்தை வைத்துப்  பயமின்றி  வாழலாம்!  ஆனால்  பாசத்தை   வைத்துத் தான்  பதறாமல்  வாழமுடியும்! "

கவி விதை - 9 - காலம் - விழி மைந்தன்

.

வயல் வெளியின் முன்னால் , வாகை மரங்கள் வழிக்குக் குடை பிடிக்க, மாரி  வெள்ளம் வெள்ள   வாய்க்காலில் வழிந்தோடத், தலை நிமிர்த்தி நின்ற அந்தப் பாட சாலையில், அன்று 'உயர்தர மாணவர் விருந்து.'

புரோம் என்றும் போர்மல் என்றும் மேலை நாட்டுக் குழந்தைகள் அழைக்கும் அந்த நிகழ்வை, இந்த நாட்டு இளசுகள் 'சோஷல்' என்றன. 'தம்பி சொன்னதும் சரி' என்ற  வாத்தியாரின் சீடர்கள் வாயிலே அது 'சோசல்'.

வண்ண வண்ணப் பட்டுடுத்தி, வாசனைப் பூ மாலை வைத்து, சின்ன விழிகள் சிறகடிக்க, சிரித்துச் சிரித்துக் கதை பேசும் கன்னியர் கூட்டம்.

என்றென்றும் புன்னகை - 06.02.2016 Macquarie Uni Tamil Sankam

.
Macquarie Uni Tamil Sankam  வழங்கும் என்றென்றும் புன்னகை

உலகச் செய்திகள்


சீன ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம்

பாரிய பனிப் பொழிவு : 50 பேர் உயிரிழப்பு

கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி

சீன ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம்

25/01/2016 ஈரா­னுக்கு முக்­கி­யத்­துவம் மிக்க விஜ­யத்தை மேற்­கொண்டு சென்­றுள்ள சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங், அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹா­னி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டார்.
ஈரா­னுக்கு எதி­ரான சர்­வ­தேச தடைகள் நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்­நாட்­டிற்கு விஜயம் செய்த முத­லா­வது வெளி­நாட்டுத் தலைவர் என்ற பெயரை சீன ஜனா­தி­பதி பெறு­கிறார்.


அஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்

.
உடன்பிறந்த அண்ணனின் பார்வையில்
அருண். விஜயராணி என்ற பெண்ணிய ஆளுமை

           கனிவான பெற்றோர்கள் பாசமிக்க உடன் பிறப்புகள் அன்பான கணவர் இனிமையான மழலைச்செல்வங்கள்  வசதியான இல்லறம்... பிள்ளையாரின் அனுக்கிரகம்... "  இவ்வாறுதான் எங்கள் விஜயா தனது முதலாவது கதைத்தொகுதி கன்னிகாதானங்களின் என்னுரை என்னும் முன்னுரையைத் தொடங்கியிருந்தாள்.
குடும்பம் என்ற அச்சாணியில் நின்றவாறு தனது வாழ்க்கைச்சக்கரத்தை சுழற்றியவளுக்கு அறிவுதெரிந்த நாள் முதல் உரும்பராய் கற்பகப்பிள்ளையார்தான் குலதெய்வம்.
பின்னாட்களில் சத்திய சாயியில் நம்பிக்கைகொண்டு அவரை குருவாக ஏற்றபின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவரை முன்வைத்தே காரியமாற்றினாள்.

ஏனையவர்களில் இருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - 10 நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

நான் சென்னையில் நடனம் கற்று திரும்பிய நாள் தொடக்கம் தனி கச்சேரிகள் நடத்தியத்துடன் நடனும் கற்பித்து வந்துள்ளேன். என்னிடம் நடனம் கற்ற மாணவியரை வைத்து பரீட்சாத்தமாக பல நாட்டிய நாடகங்கள் தயாரித்துள்ளேன். இவை மக்களிடையே நல்ல வரவேறுபை பெற்றதுடன், கலா விமர்சகரும் எனது ஆக்கங்களை உற்று நோக்கி விமர்சித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற தினகரன் ஆசிரியர் திரு சிவகுருநாதன் என்னை மீண்டும் தினகரன் வாரமஞ்சரியில் தொடர் கட்டுரை எழுதும் படி தூண்டினார். எனது முதல் நூலான “தமிழர் வழர்த்த ஆடற்கலைகள்” தினகரன் வார மஞ்சரியிலேயே வாராவாரம் எழுதி பின் நூல் உருபெற்றதே “காலம் தோறும் நாட்டியக்கலை” இதன் முதற்பதிப்பு இலங்கை வீரகேசரி பதிப்பகத்தால் 1979 இல் வெளிவந்தது. அதை  அடுத்து 1980 சென்னை “பாரி புத்தகப் பண்ணை” வெளியிட்டது. தற்போதும் இலங்கையில் அரச நுண்கலை கல்லூரிகளில் எனது நூல்களே பயன்படுத்தப்படுவதால் 2013 இலங்கையில் பூபாலசிங்கம் பதிபகத்தினர் அதன் மூன்றாவது பதிப்பை வெளி கொணர்ந்துள்ளனர்.
“நூல் அறிமுகம்” என்ற தலைப்பின் கீழ் 30.09.1979 வீரகேசரியில் பேராசிரியர் கா. இந்திரபாலா எழுதியதின் சில பகுதிகளை கீழே காணலாம்.


இணைய சட்டங்கள் பற்றிய முதல் தமிழ் நூல் வெளியீடு

.

இந்தியாவின் தலை  நகர் புது தில்லியில்முதல் முறையாக ஒரு சட்ட நூல் தமிழில்வெளியிடப்பட்டதுதில்லி தமிழ்ச் சங்கத்தில் , மேதகு உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப் எம்இப்ராஹிம் கலிபுல்லா அவர்கள்  சிட்னி வழக்கறிஞர் கலா நிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதியஇணையக் குற்றங்களும்  இணைய வெளிச்சட்டங்களும் ’என்ற நூலை  வெளியிட , தில்லிதமிழ்ச் சங்கத்தின் இணை செயலாளர் திருராகவன் நாயுடு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
சேலம் கிரி லா புத்தக வெளீயீட்டாளர் திரு கிரிதரன் வரவேற்புரை ஆற்றினார்.சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரமேஷ் பாபு சிறப்புரை ஆற்றினார்தினத்தந்தி நாளிதழின் மூத்தபத்திரிகையாளரும் , உச்ச நீதிமன்ற சிறப்பு நிருபருமான திரு பெண்ணேஸ்வரன் நூல் குறித்தஅறிமுக உரையை நிகழ்த்தினார்.  நூலாசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் ஏற்புரைஆற்றினார்.தமிழ்ச்சங்க செயலாளர் திருமதி சத்யா அசோகன் நன்றியுரை ஆற்றினார்,

எமைப்பார்த்து நகைத்துவிடும் ! - ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

.
      இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
      தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
      இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
      இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !

      பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
      துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்
      பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
      காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !

     பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
     கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்
     கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்
     பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !

    படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
    பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
    மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
    நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !

    கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
    போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
    காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
    மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !

    கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
    கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்
    கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு
    காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !

மகாத்மா காந்தியின் மரணம் - சி. ஜெயபாரதன், கனடா


[1869-1948]

அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் !இரவீந்திரநாத் தாகூர்
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

மகாத்மா காந்தி

மெல்பனில் கவிதா நிகழ்வும் நூல்கள் - இதழ்களின் கண்காட்சியும் 27 01 2016

.
மெல்பனில்
கவிதா நிகழ்வும் நூல்கள் - இதழ்களின் கண்காட்சியும்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
எமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் - உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் நலன்விரும்பிகளுக்கு வணக்கம்.
தென்னாசிய பொது விவகாரங்களுக்கான கழகத்தின் (South Asian Public Affairs - SAPAC) சார்பில் மெல்பனில் ,எதிர்வரும் 27-02-2016 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையில் மெல்பனில்  -
Stirling theological college  மண்டபத்தில்
(40-60 Jackson Road, Mulgrave 3150 )
பல்லின கலாசாரம் தொடர்பான கவிதா நிகழ்வும் நூல்கள் - இதழ்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து சிறப்பிக்கவருமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நடைபெறவுள்ள கண்காட்சிக்கு  அவுஸ்திரேலியாவில் வெளியான தங்கள் நூல்களையும் இதர நூல்களையும் சமர்ப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
பல்லின கலை இலக்கியவாதிகளையும் ஓரிடத்தில் சந்திப்பதற்கு பொருத்தமான நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமையவிருப்பதனால் தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.
மேலதிக விபரங்களுக்கு
நடேசன் ( செயலாளர்) 0452 63 1954

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே

.
பாடல் : சின்ன மாமியே 
பாடியவர் : A.E. மனோகரன் / நித்தி கனகரத்தினம் 
வசனம் : கமலநாதன் 
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்
அய்யோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
அய்யோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
ஊர் சுழறும் பொடிகள் எல்லாம் கன்னியரை கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதை 26 நிறைவும் நன்றியம்‏

.
அன்புடன் படைப்பாளிகளே! முகநூல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் பணிவன்பான வணக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்த மலரும் முகம் பார்க்கும் காலம் என்ற கவிதைத் தொடர் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீட்டுப் பொறுப்பாளரும் பண்ணாகம் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமான பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் கவிதையுடன் நிறைவு பெறுகிறது.
எமது வேண்டுகோளை ஏற்று பல பணிகளுக்கு மத்தியிலும் இக்கவிதைத் தொடரில் பங்குபற்றி எமக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இலக்கியப் படைப்பாளிகள் தம்மாலான இலக்கியப் பணிகளைச் செய்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் இறுமாப்புடன் சொல்கிறோம்.
இரண்டு எழுத்தாளர்களே ஒரு திட்டத்தில் தொடராக இணைந்து செயல்படுவதே மிகவும் சிரமமானது. ஆனால் எம்மால் முன்னெடுக்கப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற நெடுந்தொடர்கதைத் திட்டத்திலும் இப்பொழுது நிறைவு பெறுகின்ற இக்கவிதைத் திட்டத்திலும் பங்குபற்றிய இலக்கியப் படைப்பாளிகளின் பெருந்தன்மையை நினைத்து வியக்கிறோம் மகிழ்கிறோம்

இலங்கைச் செய்திகள்


மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

நிஷாந்த விக்ரமசிங்ஹ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆஜர்

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைசாலைக்கு


மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

29/01/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.


சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

.விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.


தமிழ் சினிமா - இறுதிச்சுற்று

தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போல் எப்போதாவது ஒரு முறை தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் வரும். அதிலும் பெண்களை மையப்படுத்தி ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்றால் அரிதிலும் அரிது. ஏற்கெனவே வட இந்தியாவில் சக் தே இந்தியா போன்ற படங்கள் வந்துள்ளது.

அதே பாணியில் சுதா இயக்கத்தில் நம் ஆல்டைம் பேவரட் மாதவன்,ரியல் பாக்ஸர் ரித்திகா நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று.

கதைக்களம்

இந்தியாவின் நம்பர் 1 கோச் மாதவன், யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, சிடுசிடு முகம், பத்து வாரத்தையில் எட்டு வார்த்தை கெட்ட வார்த்தை, நீ எவனா இருந்தா எனக்கென்ன என்று இருக்கும் ஒரு கதாபாத்திரம், இவரை பிடிக்காத பாக்ஸிங் குழு தலைவர் ஜாகிர்பொய்யான காரணத்தை கூறி சென்னைக்கு மாதவனை மாற்றுகிறார்.

ஆனால், செல்லும் இடத்தில் எல்லாம் சிறந்த மாணவர்களை உருவாக்கும் மாதவனுக்கு சென்னை ஒரு சவாலாக இருக்கின்றது. அங்கு லக்ஸ், மதி(ரித்திகா) என்று அக்கா, தங்கைகளை சந்திக்கின்றார். இதில் லக்ஸ் பாக்ஸர், மதி மீன் விற்கின்றார். இதில் மதியிடம் ஒரு பாக்ஸருக்கான குவாலிட்டி இருப்பதை அறிந்த மாதவன், அவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்து பாக்ஸிங் கற்க வர சொல்கிறார்.
தன் அக்காவிற்கு பாக்ஸிங்கில் வெற்றி பெற்று போலிஸ் வேலை வேண்டும் என்பதற்காக மதி வேண்டுமென்றே தவறான ஷாட்டுக்களை அடிக்க, அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதை தொடர்ந்து மாதவன் தனக்காக எத்தனை கஷ்டப்படுகிறார் என்பதை ஒரு கட்டத்தை நாசர் வழியாக அறிகிறார் ரித்திகா.
பின் மீண்டும் மாதவனுடன் லக்ஸ் மற்றும் மதி இந்திய அளவில் ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்கின்றனர். மாதவன் ரித்திகாவிற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க, இதை கண்டு லக்ஸ் கோபப்படுகிறார். வேண்டுமென்றே தன் தங்கையின் கையை பயிற்சியின் போது அடிப்பட செய்ய, போட்டியில் ரித்திகா தோற்கிறார்.
இதைக்கண்டு மாதவன் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, இதன் பின் ரித்திகா என்ன ஆனார், மாதவன் விருப்பப்படி பெரிய பாக்ஸர் ஆனாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மேடி இஸ் பேக் என தமிழ்நாட்டு ரசிகர்கள் கைத்தட்டி விசிலடிக்கலாம். அதிலும் சாதாரணமான ரீஎண்ட்ரீ இல்லை, பாக்ஸருக்கான உடல்தோற்றம், தன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போனதை எண்ணி எப்போதும் கோபமாக இருக்கும் முகம் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அதிலும் ஜாகிருடன் அவர் பேசும் காட்சியில் எல்லாம் எத்தனை சென்ஸார் என்று கணக்கே இல்லை. இனி சாக்லேட் பாய் யாராவது சொன்னீங்க....என்று நம்மையே திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

படத்திற்கு கண்டிப்பாக எல்லோரும் மாதவனுக்காக சென்றாலும் மீண்டும் இந்த படத்தை பார்க்க கண்டிப்பாக ரித்திகாவிற்காக தான் செல்வார்கள். பஞ்சாபி பெண், ரியல் பாக்ஸரை சுதா, வடசென்னை குப்பத்து பெண்ணாக காட்டியுள்ளார். காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கின்றார். மாதவன் சிடு மூஞ்சி என்றால், அதை விட பெரிய கோபக்காரியாக அவருக்கே செம்ம போட்டியாக கலக்குகிறார்.
பின் மாதவனுடன் ஏற்படும் காதல் அதை அவரிடம் கூறி ‘எனக்கு டர் இல்லை, உனக்கு இன்ன அல்லு’ என்று கூறும் காட்சியெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மாதவனை மிஞ்சிவிட்டார். (கண்டிப்பாக இதற்காக மாதவன் கோபித்துக்கொள்ள மாட்டார்).
படத்தில் மாதவன் உதவியாளராக வரும் நாசர், முதலில் மாதவனை திட்டி, பிறகு அவர் குணம் தெரிந்து நீ நல்லவன்யா என்று பாராட்டுவது என பல காட்சிகளில் மனதில் பதிகிறார். பாக்ஸிங் உயர் அதிகாரியாக வரும் ராதாரவியும் ஒரு சில காட்சிகள் என்றாலும் சிறப்பாக செய்துள்ளார். அதிலும் நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு இப்படி ராதாரவியும், நாசரையும் ஒரே காட்சியில் பார்ப்பது செம்ம ரகளை தான்.
ஜாகிரின் கதாபாத்திரம், இந்தியாவில் 100 கோடி பேர் இருந்தும் இதுப்போன்ற ஒரு சிலரின் பாலிடிக்ஸால் தான் சிறந்த ஸ்போர்ட்ஸ் பிளேயர்க்ளை உருவாக்க முடியவில்லை என்பதை அழுத்தமாக காட்டுகின்றது. அப்படியே மீறி விளையாட பெண்களை அனுப்பினால், அவர்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுவதையும் மிக தைரியமாக நடு மண்டையில் அடித்தது போல் கூறியிருக்கிறார் சுதா.
அதிலும் ‘இந்தியாவில் நல்ல பாக்ஸர் வரவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும், அதற்கு முதலில் பாலிடிக்ஸ் வெளியே எடுங்க’ என்ற அருண் மதிஷ்வரன் வசனங்கள் தூள். அதேபோல் மாதவன், ஜாகிரை பார்த்து சென்ஸார் வார்த்தையுடன் அவ்ளோ தாண்ட நீ என்று சொல்லும் இடமெல்லாம் ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருந்து வரும் கைத்தட்டல்.

க்ளாப்ஸ்

மாதவன் -ரித்திகாவின் கதாபாத்திரம், இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். முதலில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே சுதாவிற்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ரசிக்க வைக்கின்றது. எப்போதும் போதையில் இருக்கும் ரித்திகாவின் தந்தையாக காளிவரும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி தான். வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு சவுக்கார் பேட்டையில் என் மானத்தை விற்று விட்டேனே என்று தன் மனைவியிடம் புலம்பும் காட்சியிலும் சரி, தன் மகள் வெற்றி பெற வேண்டும் என ஸோத்திரத்தை தோத்திரம் என்று சொல்லும் காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், பின்னணி இசையில் ருத்ரதாண்டவம் தான். சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவும் சென்னை ஹிசார் பகுதிகளை அப்படியே கண்முன் கொண்டு வருகின்றது.

பல்ப்ஸ்

மிகவும் ரியாலாக பாக்ஸிங் குறித்து காண்பித்திருப்பதால், பாக்ஸிங் தெரிந்தவர்களுக்கு அதெல்லாம் புரியும், சாதாரண சினிமா ரசிகர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை, அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம். மற்றபடி ஏதும் இல்லை.

மொத்தத்தில் இந்த இறுதிச்சுற்றில் சுதா, மாதவன், ரித்திகா மூவரும் பல சினிமா கமர்ஷியலை நாக் அவுட் செய்து வென்றுள்ளனர்.
நன்றி cineulagam