பொங்கல் வாழ்த்து

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் -மாலினோஸ்க்னா

மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய்
காலம் கடத்தப் போகின்றன
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்
இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
என்னவொரு மனமிருக்கப்போகிறது
பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து
சொல்லும் கொக்குகளை
மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள்
செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு
முன்பொரு நாள்
குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள்
மீண்டும் குளத்திடமே வந்தன
தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு
நீர்த்தணலில் வாழும் மற்றோர் மீன் பறவை
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி
நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின
கொக்குகளிடமிருந்து
மூத்திர நெடிலுடன் கூடிய பிணப்புழுக்கம் வருவதாகக்
குளத்திடம் குற்றம் சுமத்தின நீர்ப் பறவைகள்
குளம் சிரித்தது
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளும் சிரித்தன
இரண்டு சிரிப்புகளுக்குமிடையில் நுழைந்து சென்றன
நூற்றாண்டுகளாய்த்
தணியாத பகையும் மறப்பும் பசியும்
காற்றுக் கொணர்ந்து தருகிறது குஞ்சுகளிடம்
நொண்டிக் கொக்குகளின் உதிர்ந்த சிறகொன்றையும்
அவற்றின் சிதைந்த அலகுகளையும்
குஞ்சுகள் இப்போது
கடுங்கோடைகளிலும் வாழப் பழகிவிட்டன
கொக்குகளையும் நம்பாது
மீட்டிரை தருவோரின் கோணங்கித் தனங்களையும் சபித்தபடி
Nantri: /eathuvarai.

தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சு.இராசாராம் ஓய்வுநிலை பேராசிரியர்

அருட்தந்தை      சேவியர் தனிநாயக     அடிகளாரின்    நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அவரது தமிழாய்வு உணர்வு காரணமாக உருவான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (இன்டர்நெஷனல் அசோசியேஷன் ஓப் தமிழ் ரிசேர்ச்) தடுமாறி நிற்கும் நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இலங்கையில் பிறந்த தனிநாயக அடிகளார், எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர். ஆனால், தவறாமல் அவர் நினைவுகூரப்படுவது, இதுவரை நடந்து முடிந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளால் தான். இந்த மாநாடுகளை நடத்தியது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. இந்த மாநாடுகளின் அரசியல் ஆரவாரங்களிடையே விளம்பரமே இல்லாமல் தமிழாய்வை முன்னிறுத்தின இந்த மன்றம் நடத்திய ஆய்வரங்கங்கள். இப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்றம் இன்று செயலிழந்து முடங்கிக்கிடக்கிறது.
மன்றத்தின் தோற்றமும் அமைப்பும்
1964 இல் புது டில்லியில் அனைத்துலகக் கீழையியல் ஆய்வறிஞர்களின் மாநாடு நிகழ்ந்தபோது, தமிழாய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. 1930 களிலிருந்து திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளில் மொழி மையம் கொண்டிருந்தது, இந்த மன்றம் உருவாவதற்கான வலுவான பின்னணியாக அமைந்தது. அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த மன்றம் பதிவுசெய்யப்பட்டது. இருந்தாலும், இதற்கெனத் தலைமை அலுவலகம் பாரிஸிலோ வேறு நாடுகளிலோ இல்லை. இதற்கெனத் தனி நிதியும் கிடையாது. உலக அளவில் பல தமிழியல் அறிஞர்கள் இந்த அமைப்பின் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த கொடியேற்றத் திருவிழா

மெல்பேர்னில் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இறைவன் உடைய ஜந்து தொழில்களைக் குறித்து நிற்கின்ற இந்த மகோற்சவத்திருவிழாக்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. பதினொருநாட்கள் விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் பகல், இரவுத் திருவிழாக்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
இம்முறை மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று 19.01.2014 ஞாயிற்றுக்கிழமை வைரவர் பூசையுடன் நிறைவு பெறுகின்றது. எதிர்வரும் 16.01.2014 வியாழக்கிழமையன்று தேர்த்திருவிழாவும், 17.01.2014 வெள்ளிக்கிழமையன்று தைப்பூசத்திலன்று தீர்த்தத்திருவிழாவும், அன்று இரவு கொடியிறக்கமும், 18.01.2014 சனிக்கிழமையன்று ஸ்ரீ முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் பூங்காவனமும், மறுநாள் வைரவர் பூசையும் நடைபெறவுள்ளது.
இம்முறை சிட்னியிலிருந்து வருகைதந்துள்ள சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக்குருக்கள் அவர்கள் காப்புக் கட்டி ஸ்ரீ முருகன் கிருபையுடன் கொடியேற்றியிருந்தார். அவருடன் சிவஸ்ரீ.சிவரஞ்சன் குருக்களும், சிவஸ்ரீ.ஜானகிராமன் குருக்களும் இணைந்து வேதமுறைப்படி சகல கிரியைகள் அனைத்தையும் நிறைவாக நடாத்தியிருந்தார்கள்.

அன்றைய தினம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீ முருகப்பெருமான் குடும்ப சமேதரராய் விழாக் கோலம் பூண்டு உள்வீதி, வெளிவீதி வலம் வந்து யாவருக்கும் அருள்பாலித்தார். விஷேசமாக வருகை தந்துள்ள தவில், நாதஸ்வர இசைக்குழுவினர் மங்கள நாதஸ்வரம் இசைத்திருந்தனர். வழமைபோல் பக்த கோடிகளின் வருகை வரவேற்கத்தக்க வகையில் இருந்தது.
மெல்பேர்ன் சண்சயின் ஸ்ரீ வெற்றி வேல் முருகப் பெருமானுக்கு அரோகரா.

திரும்பிப்பார்க்கின்றேன் - 23 முருகபூபதி

    "   நாங்கள்     சமூகத்துக்கு   எவ்வளவை       கொடுக்கின்றோமோ      அவ்வளவைத்தான்      நாங்கள்    பெற்றுக்கொள்ள முடியும்” 
உடல்   உபாதைகளையும்    பொருட்படுத்தாமல்     அயராமல்     இயங்கிய  ஆளுமை    பேராசிரியர்      சிவத்தம்பி
                                                                       முருகபூபதி

ஒரு    மனிதரைப்பற்றி       நினைப்பது       சுகமானது.     ஆனால்     அந்த மனிதரைப்பற்றி    எழுதுவது      சுகமானதல்ல.     சுலபமானதும்     அல்ல.     என்று      பல    வருடங்களுக்கு     முன்னர்      பிரான்ஸிலிருந்து வெளியான      பாரிஸ்   ஈழநாடு     இதழில்      நெஞ்சில்    நிலைத்த நெஞ்சங்கள்       தொடரில்      சோவியத்      தமிழ்     அறிஞர்     கலாநிதி   வித்தாலி ஃபுர்ணிக்கா    பற்றிய     பதிவின்      தொடக்கத்தில்  எழுதியிருந்தேன்.
நெஞ்சில்     நிலைத்த     நெஞ்சங்கள்      தொடர்     பின்னர்     அதே   பெயரில் சிட்னியிலிருக்கும்    எழுத்தாளர்    மாத்தளை    சோமுவின்   தமிழ்க்குரல்      பதிப்பகத்தினால்    (1995 இல்)    வெளியானது.
மறைந்த      பேராசிரியர்    கார்த்திகேசு      சிவத்தம்பி    அவர்களை இத்தொடரில்     எழுதும்   பொழுது      குறிப்பிட்ட     மேற்கண்ட வாசகம்தான்     நினைவுக்கு    வருகிறது.
சிவத்தம்பி      பற்றி     நான்     எழுதத்தொடங்கியதும்     எனது   மனைவி அருகில்    வந்து     சிவத்தம்பி    சேரைப்பற்றி     எழுதுவதாயிருந்தால்     நன்கு யோசித்து    நிதானமாக     எழுதுங்கள்    என்று     எனக்கு     கடிவாளமும் போட்டார்.

இலங்கைச் செய்திகள்

 திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
 
ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு

''வெடிச் சத்தம் கேட்டதையடுத்து மகனுடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் முடியவில்லை'': தாயார் சாட்சியம்

மன்னார் புதைகுழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்

ஸ் ரீபன் ரெப்பை சந்­தித்­த­வர்­க­ளுக்கு புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்தல்

 இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன

விண்வெளி செல்லவுள்ளார் தமிழ் மாணவி

==========================================================================
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

07/01/2014    மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று வரை இந்த மனித புதைகுழியிலிருந்து 32 எலும்புக்கூடுகள், மற்றும் மண்டையோடுகள் , மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் முழுமையற்ற மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முழுமையாகக் காணப்படும் எலும்புக்கூடுகள் அடையாளம் இடப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இன்று  மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தலைமையில் புதைகுழி தோண்டும் பணி இடம் பெற்றது. இதன்போது ஆறு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் பெண்கள் அணியும் செப்பு தாயத்து ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதியில் குடிநீர் விநியோகத்திற்காக குழாய்களை நிலத்திற்கு அடியில் புதைப்பதற்காக கடந்த மாதம் 20 ஆம் திகதி குழிதோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்தனர். மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் தலைமையில் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமானது. இன்று ஆறாவது நாளாக காலை முதல் மாலை வரை புதைகுழி தோண்டப்பட்டது. இன்றைய தினம் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து புதையில் இருந்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் புதைகுழி தோண்டப்படும் போது தொடர்ந்தும் எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதனால் மேலும் பல எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று புதைகுழிதோண்டப்பட்டபோது ஆறுவயது சிறுவன் ஒருவனது எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றையதினம் இந்த எலும்புக்கூட்டின் தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய தினம் முழுமையான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகச் செய்திகள்

அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு

தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகக் கோரி பேரணி
பிரித்தானியாவின் தென், மேற்கு பகுதியில் பாரிய புயல்

அமெரிக்க, கனடா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம்

அண்டார்ட்டிகா பனியில் சிக்கிய ரஷ்ய, சீனக் கப்பல்கள் விடுபட்டன

=============================================================================
அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு

06/01/2014          அமெ­ரிக்கா மற்றும் கன­டா­வி­லுள்ள பல பிர­தே­சங்­களில் வர­லாறு காணாத வெப்­ப­நிலை வீழ்ச்­சியால் வட துரு­வத்­தி­லுள்­ள­தை­யொத்த உறை­ய­வைக்கும் குளிர் நில­வு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கன­டா­வையும் வட கிழக்கு அமெ­ரிக்­கா­வையும் ஏற்­க­னவே தாக்­கிய பனிப்­புயல் கார­ண­மாக ௨ அடிக்கும் அதி­க­மான உய­ரத்­துக்கு பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டது.
இந்த பனி­யுடன் கூடிய கால­நிலை கார­ண­மாக மேற்­படி பிராந்­தி­யத்தில் கடந்த புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து ௧௬ பேர் பலி­யா­ன­துடன், ௫௦­௦க்கு மேற்­பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்­ய­ப்பட்­டுள்­ளன.
அமெ­ரிக்­காவின் மத்­திய மேற்கு பிராந்­தி­யத்தில் ௫௦ பாகை செல்­சியஸ் அள­வான தாழ்ந்த வெப்­ப­நிலை நில­வு­கி­றது.
இந்­நி­லையில் மக்­களை வீடு­களில் தங்­கி­யி­ருக்க, அறி­வு­றுத்­தி­யுள்ள அதி­கா­ரிகள் வீதி­களை மூடி­யுள்ள பனியை தொடர்ச்­சி­யாக அகற்ற பணி­யா­ளர்­களைக் கோரி­யுள்­ளனர்.
அமெ­ரிக்­காவின் மத்­திய மேற்கு பிராந்­தி­யத்­தி­லி­ருந்து மத்­திய அத்­தி­லாந்திக் பிராந்­தியம் வரை கடந்த பல வரு­டங்­களில் சந்­தித்­தி­ராத மோச­மான வெப்­ப­நிலை வீழ்ச்சி நில­வு­வ­தாக அமெ­ரிக்க தேசிய கால­நிலை சேவைகள் நிலையம் தெரி­விக்­கி­றது.
அமெ­ரிக்­காவின் வட - கிழக்கு பிராந்­தி­யங்­களில் பனிப்­பு­யலால் வீதி­களை மூடி­யுள்ள பனியை அகற்­று­வதில் பிர­தே­ச­வா­சிகள் கடும் போராட்­டத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
நியூ ஜெர்­ஸியில் கடந்த இரு தசாப்த காலங்­களில் இல்­லாத மோச­மான குளிர்­கா­ல­நிலை நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
கன­டாவின் ரொரன்டோ பிராந்­தி­யத்தில் ௨௯ பாகை செல்­சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் கியூபெக் நகரில் ௩௮ பாகை செல்­சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் நில­வு­கி­றது. இது அப்­பி­ராந்­தி­யங்கள் கடந்த இரு தசாப்­தத்­திற்கும் மேற்­பட்ட காலத்தில் எதிர்­கொண்­டி­ராத மிகத் தாழ்ந்த வெப்­ப­நி­லை­யாகும்.
மேலும் நியூயோர்க், கணக்­கிகட், மஸா­சுஸெட்ஸ் உள்­ள­டங்­க­லான அமெ­ரிக்க மாநி­ப­லங்­களில் இடம்­பெற்ற கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக அந்தப் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ள­துடன் போக்­கு­வ­ரத்­து­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பிலடெல் பியாவில் ௧௦௦ அடி உய­ர­மான உப்புக் குவியல் சரிந்து விழுந்­ததில் அதன் கீழ் நசுங்­குண்டு உப்பு பண்­ட­க­சாலை பணி­யாளர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார். அதே­ச­மயம் நியோர்க்கில் தனது வீட்டை விட்டு அலைந்து திரிந்த மூளைப் பாதிப்பு நோய்க்கு உள்­ளான பெண்­யொ­ருவர் குளிரில் உடல் விறைத்து மர­ண­மா­கி­யுள்ளார்.
அமெ­ரிக்­காவில் கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக சுமார் ௧௨­௦௦ விமான சேவைகள் சனிக்­கி­ழமை இரத்துச் செய்­யப்­பட்­ட­துடன், சுமார் ௬௦­௦௦ விமான சேவைகள் தாம­தத்தை எதிர்­கொண்­டன. சிக்­காகோ ஓஹரே சர்வதேச விமான நிலையம், நியூ ஜெர்ஸியிலுள்ள நெவார்க் லிபேர்ட்டி சர்வதேச விமான நிலையம் என்பன பனிப்பொழிவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்டாரியோவில் கடும் பனிப்பொழிவு அபாயம் தொடர்ந்து நிலவுவதாக கனேடிய சுற்றுச் சூழல் நிலையம் விசேட எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
 
 நன்றி வீரகேசரி

தமிழ் சினிமா

மதயானைக் கூட்டம்
இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. 
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்று பார்ப்போம்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம்.
சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள்.
ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரம் செவனம்மா, தன் கணவர் வேறொரு பெண்ணை வைத்திருப்பது தெரிந்ததும் அவரைப் பிரிந்து தன் அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார்.
இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பகை. இருந்தாலும், இளையதாரத்தின் மகனான பார்த்திபனும் (அறிமுகம் - கதிர்), மூத்ததாரத்தின் மகனான பூலோக ராசாவும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பிகளாக பாசத்தோடு உறவாடுகிறார்கள்.
இளையதாரத்திற்குப் பிறந்த மகளுக்கு திருமணம் முடித்த மறுநாளே, மாரடைப்பால் இறந்துவிடுகிறார் ஜெயக்கொடித் தேவர். இந்த மரணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், கௌரவப் பிரச்சனையால் விழும் கொலைகளுமே இப்படத்தின் கதை.
நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை.
நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது.
விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க மண் வாசனையை தெளித்திருக்கிறார்.
‘கோணக் கொண்டைக்காரி...’ பாடலில் ஜி.வி.யின் குரலில் துள்ளல் இளமை. அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.
தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆனால் படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மதயானைக் கூட்டம்’ மதம் பிடிக்கவில்லை!
நடிகர்: கதிர்
நடிகை: ஓவியா
இயக்குனர்: விக்ரம் சுகுமாரன்
இசை: எம்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு: ராகுல் தருமன்
- See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/all/20131226100046/#sthash.WKrQPgRu.dpuf
 
 இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்று பார்ப்போம். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரம் செவனம்மா, தன் கணவர் வேறொரு பெண்ணை வைத்திருப்பது தெரிந்ததும் அவரைப் பிரிந்து தன் அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார். இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பகை. இருந்தாலும், இளையதாரத்தின் மகனான பார்த்திபனும் (அறிமுகம் - கதிர்), மூத்ததாரத்தின் மகனான பூலோக ராசாவும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பிகளாக பாசத்தோடு உறவாடுகிறார்கள். இளையதாரத்திற்குப் பிறந்த மகளுக்கு திருமணம் முடித்த மறுநாளே, மாரடைப்பால் இறந்துவிடுகிறார் ஜெயக்கொடித் தேவர். இந்த மரணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், கௌரவப் பிரச்சனையால் விழும் கொலைகளுமே இப்படத்தின் கதை. நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார். நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை. நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது. விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க மண் வாசனையை தெளித்திருக்கிறார். ‘கோணக் கொண்டைக்காரி...’ பாடலில் ஜி.வி.யின் குரலில் துள்ளல் இளமை. அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆனால் படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில் ‘மதயானைக் கூட்டம்’ மதம் பிடிக்கவில்லை! நடிகர்: கதிர் நடிகை: ஓவியா இயக்குனர்: விக்ரம் சுகுமாரன் இசை: எம்.ஆர்.ரகுநந்தன் ஓளிப்பதிவு: ராகுல் தருமன்   நன்றி விடுப்பு 