மரண அறிவித்தல்


-->

                   மருத்துவ கலாநிதி  சுரேஷ் இரட்ணேஸ்வரன்

                           பிறப்பு   07-04-1970  இறப்பு 18-07-2017         


                                           
  அராலி  வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் மெல்பன் ( Keilor downs)  கீலோர்டவுன்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த  மருத்துவ கலாநிதி  சுரேஷ் இரட்ணேஸ்வரன் அவர்கள்,  கடந்த 18 ஆம் திகதி (18-07-2017)  அவுஸ்திரேலியா மெல்பனில் அகால மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொறியியலாளர் இரட்ணேஸ்வரன் -  அனந்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பேராசிரியர் (யாழ். பல்கலைக்கழகம்) பாலச்சந்திரன்  -   சத்தியலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்.
 நளாயினி ( கொட்டாஞ்சேனை N.S.B வங்கி முன்னாள் உத்தியோகத்தர்) யின் அன்புக்கணவரும், செல்வன் நிதுஷன் மற்றும் செல்வி அக்‌ஷனாவின் பாசமிகு தந்தையும்.
ரமேஷ், சுதர்ஸன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,  ரோகிணி ( லண்டன்) சுபாஷினி (கொழும்பு) பாலமுரளி (சிட்னி) ராஜமுரளி (லண்டன்) உதயராணி, வினுஜா  (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
சிறிசர்வேந்திரன் (லண்டன்) தயாளன் (கொழும்பு) மேகலா (சிட்னி) மற்றும் கிறிஸ்ரின் (லண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்.


Funeral details:                                                                                     Contact :
26th July 2017 (Wednesday)                                          Balamurali ;+61421847650 (Australia)
Viewing : 11.30am – 12.30pm                                       Ramesh : +94213217342 ( Jaffna , Srilanka)
Ceremony/Pooja : 12.30 -1.30pm                                 2/8 Pilain Crescent
Boyd Chapel, Springvale Botanical Cemetery,                     Keilor Downs, Victoria 3038,
600, Princes Highway, Springvale.                                         Australia .
                                                                                    
                  

ATBC யின் கலைை ஒலி மாலை 2017 ஒரு பார்வை .--பாஸ்கரன்

.


நேற்றைய தினம் 22 ஜூலை மாதம் Blacktown Bowman Hall இல் இடம்பெற்றது  ATBC வானொலியின் 15ம் ஆண்டு நிறைவை கொண்டாடிய நிகழ்வு . உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கைத் தமிழ் பாடகர்களை ஒன்றிணைத்து இந்திய , உள்ளூர்  இசைக்  கலைஞர்கள் இணைந்து இசை வழங்க மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் இடம்பெற்றது கலை ஒலி மாலை 2017. எண்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்டு இயங்கும் சமூக வானொலி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதை திரண்டிருந்த மக்கள் கூட்டமே எடுத்துக் காட்டியது.

நிறை குடம் குத்துவிளக்கு கொண்டு அலங்கரிக்கப் பட்ட  மண்டபத்தில் குறிப்பிட்ட நேரமான 5.45 மணிக்கு ATBC வானொலியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜெயசந்திராவும், இளைய சமூகத்தில் ஒருவரான வேந்தன் பிரபாகரனும் இணைந்து நிகழ்சசியை ஆரம்ப அறிவித்தலோடு தொடக்கி வைத்தார்கள் .


ஏற்றிடலே நன்று ! - எம் . ஜெயராமசர்மா

.
image1.JPG

          தானியங்கள் பலவற்றை நாமுண்டு வந்தோம்
                தகரத்து உணவுகளை நாம் காணவில்லை
           ஊரெல்லாம் விவசாயம் உயிர்ப்புடனே அன்று
                ஒழுங்குடனே இருந்ததனை யாவருமே அறிவோம்
           காலமெனும் சக்கரமோ வேகமாய் சுழன்று
                 கடுகதியாய் உணவெல்லாம் மாற்றமுறத் தொடங்கி
            நாமின்று வேண்டாத உணவுகளை உண்டு
                  நலமிழந்து போவதற்கு ஆளாகி உள்ளோம் !

              கூழ்குடித்த காலமதில் குடல்நோய்கள் குறைவே
                    கொக்கோகோலா குடித்தவர்க்கு வருநோய்கள் பலவே
              ஆழ்கிணறு நீரெடுத்து அருந்திநின்றோம் நன்றாய்
                      அதனாலே ஆரோக்கியம் அமைந்திருந்த தன்று
               நீர்குடித்தோம் மோர்குடித்தோம் நிரம்பியது வயிறு
                    பீர்குடித்து உடல்நலத்தைக் கெடுக்கின்றோம் இன்று
               ஊர்முழுக்க இப்போது மாறியே போச்சு
                      உயிர்ப்புள்ள உணவுகளை உண்பாரும் குறைவே !

இலக்கிய சந்திப்பு - 27 -அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!

எல்லோருக்கும் வணக்கம்!

எல்லோரும் நலம் தானே?

அவுஸ்திரேலியா கன்பராவில் தகவல் அமர்வு


பயணியின் பார்வையில் அங்கம் --06 தொலைக்காட்சித் தொடர்கள் போன்று தொடரும் போராட்டங்கள் மறைந்த ஊடகவியலாளர்களும் உருவாகியிருக்கும் ஊடகக்கற்கை( Media Studies) நெறிகளும் முருகபூபதி

.
இலங்கையில் சில தொடர்கதைகள்,  தமிழகத்தின் தொலைக்காட்சி தொடர்கள் போன்று நீண்டுகொண்டேயிருக்கின்றன.
முற்றுப்பெறாத இந்தத்தொடர்கள் போராட்டம் சார்ந்தது. ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், தொடரும் இந்தப்போராட்டம்,  அகிம்சைவழியில் தொடர்ந்தாலும், அதற்கும் அச்சுறுத்தல், தாக்குதல், எச்சரிக்கை என்பன அரச மட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது.
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களைத்தேடித்தாருங்கள் என்ற கோரிக்கையுடன   உறவுகள் நடத்தும் கண்ணீர் போராட்டம்.
கேப்பாபிலவில் எங்கள் காணிகளை மீட்டுத்தாருங்கள் என்று காணிகளை இழந்தவர்கள் நடத்தும் நிலமீட்பு போராட்டம்.
தனியார் மருத்துவக்கல்லூரி வேண்டாம் என்று சைட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மருத்துவக் கல்விக்கான உரிமைப்போராட்டம்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குகள் என்று வாழ்வாதாரம் கேட்டு பட்டதாரிகள் தொடரும் போராட்டம்.
பாடசாலை மாணவிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டித்து பெற்றவர்களும் பாடசாலை மாணவர்களும் அடிக்கடி நடத்தும் வீதி மறியல் போராட்டம்.


நயினை நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ வாமதேவ குருக்கள்


நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டு  சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.திருவிழாவை ஆகம விதிப்படி நடத்த வருகை தந்து சிறப்பித்தார் நயினை நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ வாமதேவ குருக்கள் அவர்கள். சிட்னி துர்கையம்மன் ஆலய குடமுழக்கிற்கும் இவர் வருகை புரிந்து இருந்தார்.குருக்கள் அவர்கள் ஒரு அன்பரின் "Youtube Channel" ஒரு சிறப்பு கலந்துரையாடல் அளித்து இருந்தார்.அதில் அவர்கள் சிட்னி தமிழ் சமூக அன்பர்களுக்கு நிறைய ஆசிகளையும் தமிழர்கள் தமிழை காக்க வேண்டும் என்ற கடமையையும் அறிவுறுத்தினார்கள்.கூடவே புலம்
பெயர்ந்த நாடுகளில் தமிழர் ஆலயங்களில் ஓதுவார்கள் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு ஒரு பதில் அளித்து இருந்தார்.அவரது கருத்தின்படி ஓதுவார்கள் தேவை இல்லை.ஓதுவார்கள் வந்தால் பிள்ளைகள் பஞ்ச புராணம் பாடும் வாய்ப்பை இழப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஐயா கூறுவது அனைவர்க்கும் பொருந்தும் தானே.ஐயாவின் வருகையால் ஆலயத்தில் பணி புரியும் ஏனைய குருக்கள்களின் வாய்ப்புகள் பறிக்க பட்டதே.தமிழ் சீறார்களிடையே தேவாரம் பாடும் மரபை காப்பாற்றுவது பற்றி குரல் கொடுத்த ஐயா அவர்கள் சிட்னி வாழ் அந்தண சீறார்களுக்கு வடமொழி , ஆகமம் ஆகியவை கற்பிப்பது பற்றி ஏன் எதுவும் பேசவில்லை? அவர்களும் அதை எல்லாம் கற்று உய்ய வேண்டாமா? எல்லா காலத்திலும் தாயகத்தில் இருந்து குருமார்களை வரவழைப்பது சாத்தியம் இல்லை தானே?

இலங்கையில் பாரதி - அங்கம் 26 முருகபூபதி

பாரதி,  தமது வாழ்நாளில்  கவிதை, கட்டுரை, விமர்சனம் மற்றும் இதழியல் ஊடகத்துறையிலும்தான் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது வாழ்க்கைச்சரிதையை அவரது மறைவிற்குப்பின்னர் வெளியான நூல்களிலிருந்தும், வெளியான திரைப்படங்கள், நாடகங்கள் முதலானவற்றிலிருந்தும் தெரிந்துகொண்டோம்.
இலங்கையில் எங்காவது பாடசாலைகளில் அல்லது சனசமூக நிலையங்களில் விளையாட்டுப்போட்டிகள் , விழாக்கள் நடைபெறும் வேளைகளில் விநோத உடைப்போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்  பங்குபற்றி ரசிகர்களை பரவசப்படுத்துவார்கள்.
பாரதி வேடமிட்டு மக்களிடம் வலம் வருபவர்களிடம் பாரதிக்கே உரித்தான கம்பீரத்தைத்தான் நடுவர்கள் எதிர்பார்த்து புள்ளிகளும் தருவார்கள். பாரதி வேடமிட்டு, குழந்தைகள் நிகழ்ச்சிகளில் தோன்றும்போது பாரதியின் வீர வசனங்களை அல்லது பாடல்களைப்பாடுவார்கள்.
இலங்கையில் அன்றும் இன்றும் நடந்தேறும் இக் காட்சிகள்தான் தமிழர் புகலிட நாடுகளிலும் தொடருகின்றது.
தமிழ்த்திரைப்படங்கள் பலவற்றிலும் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் அதே சமயம், பாரதியாகவே பலர் தோன்றி நடித்து அசத்தியுமிருக்கிறார்கள்.சுந்தரர் குருபூசை 30/07/2017இலங்கைச் செய்திககள்


எதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர்

 “நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் - Annual Samuhik Shri Mahalakshmi pooja 30/07/2017
உலகச் செய்திகள்


இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பா.ஜ.க.வின் ராம்நாத் கோவிந்த் தெரிவு

"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர்

பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்

 மதபோதகர் சுட்டுக்கொலைதமிழ் சினிமா

 

ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும்

அதர்வா நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக காத்திருக்கின்றார். என்ன தான் பரதேசி மாதிரி தரமான படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியே ஒருவரை மக்கள் மனதில் பதியவைக்கும். அந்த வகையில் அறிமுக இயக்குனர் இளவரசு, அதர்வா கைக்கோர்த்துள்ள இப்படம் அவருக்கு அப்படி ஒரு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அதர்வா மதுரைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகின்றது. வந்த இடத்தில் அந்த நபர் இல்லை என்பதால் சூரியுடன் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றார்.
இதில் அதர்வா செம்ம ப்ளேபாய், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் கழட்டிவிட்டு, அடுத்த பெண்ணிற்கு கொக்கிபோடும் கேரக்டர்.
இவரின் வலையில் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 4 பேர் விழ, இதில் யாரை கிளைமேக்ஸில் கரம் பிடிக்கின்றார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார் இயக்குனர் இளவரசு.

படத்தை பற்றிய அலசல்

அதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம் செம்ம தீனி. அடிதடி என்றில்லாமல் படம் முழுவதும் காதல் இளவரசனாகவே வலம் வருகின்றார். பெண்களை ஏமாற்றும் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் எளிதில் ஈர்க்கின்றார். அதிலும் சூரியிடம் அவர் தன் கதையை ஒவ்வொன்றாக சொல்லும் காட்சி, காதலிகளை எப்படி கழட்டி விடுவார் என்பதற்கு வைக்கும் டுவிஸ்ட் ரசிக்க வைக்கின்றது.
ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதி 4 பேருமே செம்ம கலர்புல்லாக வந்து செல்கின்றனர். படமே ஜாலி தான் என்பதால் அவர் அவருக்கான கதாபாத்திரத்தை நன்றாக நடித்து செல்கின்றனர்.
சூரி மதுரையை கலக்கும் ரவுடி என முதல் அரை மணி நேரம் காமெடி என்று ஏதேதோ செய்கின்றார். எந்த ஒரு இடத்திலும் சிரிப்பு வரவே இல்லை, மிகவும் பொறுமை சோதித்து என்ன தான் சொல்ல வருகின்றார்கள் என்ற நிலைமைக்கு படம் செல்ல, அதன் பிறகு சுதாரித்து எப்படியோ கதைக்குள் வந்து படம் நன்றாகவே நகர்கின்றது.
அதிலும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் வைத்து சூரியை அதர்வா நிலைகுலைய வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடி. அதில் ஒரு வெடியை சூரிக்கே அதர்வா வைப்பது செம்ம கலாட்டா. அப்படியே மயில்சாமி கதாபாத்திரம் போகின்ற போக்கில் சசிகுமார், சமுத்திரக்கனியை கிண்டல் செய்வதெல்லாம் சூப்பர்.
படம் ஜாலியாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாகியுள்ளது தெரிகின்றது. ஆனால், படத்தில் எதற்கு அத்தனை பாடல்கள். கமர்ஷியல் படம் என்றாலே 6 பாடல் இருந்தே ஆகவேண்டுமா, இமானின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் அடிக்கடி வருவது கேண்டினுக்கு எழுந்து செல்ல வைக்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தில் அவ்வப்போது அதர்வா தன் காதலை கழட்டிவிட செய்யும் கலாட்டா, அதை சூரியிடம் அதர்வா டுவிஸ்டாக சொல்லும் விதம்.
கடைசி அரை மணி நேரம் காமெடி கலாட்டா.

பல்ப்ஸ்

படத்தின் முதல் அரை மணி நேரம், கதைக்குள்ளே படம் வராமல், காமெடி என்ற பெயரில் சோதித்து விட்டனர். அடிக்கடி வரும் பாடல்கள்.
மொட்டை ராஜேந்திரன் எல்லா படத்திலும் இருக்கின்றார், அதனால், நாங்களும் வைத்துக்கொள்கின்றோம் என்ற மனநிலையில் கமிட் செய்திருப்பார்கள் போல.
மொத்தத்தில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் இணைந்து மிரட்டவில்லை என்றாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
Cast:
நன்றி  Cineulagam 

Gemini Ganeshanum Suruli Raajanum Movie Public Opinion