மரண அறிவித்தல்



அமரர் திரு வேலுப்பிள்ளை  தங்கராஜா

கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கடந்த இருபது வருடங்களாக சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கராஜா 16 – 06 – 2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவர் ஸ்ரீலங்கா கல்வித் திணைக்களத்தில் விளையாட்டுத்துறை உயர் கல்வி அதிகாரியாகவும், பின்பு துணை அதிபராகவும் 1987ம் ஆண்டுவரை பணியாற்றினார்.
அன்னார் புவனநாயகியின் அன்புக் கணவரும், உஷாதேவி, சிறீகாந்த் அவர்களின் பாசமுள்ள தந்தையும், லோகேஸ்வரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், ரம்யா Russell, சரண்யா, ஆனந்த் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
குடுப்பத்தினர்

தகவல்: லோகேஸ்வரன் +61417027055
சிறீகாந்த் +61419227396

Viewing

Date: 19/06/2013  Wednesday
Time: 6.30 pm - 8.30 pm
Venue: Liberty Funerals, 101 South Street, Granville

Final Rites & Funeral and Cremation
Date: 20/06/2013 Thursday
Time: 10.15 am - 1 pm
Venue: Magnolia Chapel, Macquarie Park (Corner of Delhi & Plasseey Roads, North Ryde)

பெண் பூவை வாழ விடு--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -


ஜனவரி 2013 கவிதைகள் - 3

.
மண்ணோடு மண்ணாகிப் போகும் 
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!
காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது
இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?
மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?
மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?

மறைந்த நடிகர் மணிவண்ணனுக்கு தமிழ்முரசின் அஞ்சலி

.
மணிவண்ணன் உடல் தகனம் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி
.

சென்னை: மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மணிவண்ணன்  தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

 பாரதிராஜா வந்தார் 
மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா  நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். 

நன்றி tamil.oneindia

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கீதவாணி விருதுகள் 2013

.
யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கீதவாணி விருதுகள் 2013 எதிர் வரும் ஜூன் மாதம்  22 ம் திகதி நடைபெற உள்ளது . பாட விரும்புவோர் ஏப்பிரல் மாதம் 8ம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளுங்கள் .




பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியீடு..!


 'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது."

நாற்சார்வீடு - முருகபூபதி

.
இலங்கை    வடமராட்சியிலிருந்து    கடந்த  சில  ஆண்டுகளாக  வெளியாகிறது ஜீவநதி   கலை,   இலக்கிய    மாத  இதழ்.  கடந்த  2012  ஆம் ஆண்டு  ஜீவநதியின்   அவுஸ்திரேலியா   சிறப்பிதழ்  வெளியான  தகவலையும்    வாசகர்கள்  அறிவர்.   அதற்கு    முன்னர்   வெளியான  ஜீவநதியில்     குந்தவையின்   சிறுகதை நீட்சியை    படித்ததும்   சில    நிமிடங்கள்    ஆழ்ந்த   மௌனத்தில்   கரைந்தேன். அச்சிறுகதை    எனக்குள்    ஏற்படுத்திய   அதிர்வுகளை    கட்டுப்படுத்திக்கொள்ளவே அந்த    மௌனம்.
மௌனம்   கலைந்ததும்    ஜீவநதி   ஆசிரியர்    பரணீதரனுடன்    தொலைபேசியில் தொடர்புகொண்டு,    “குந்தவை    எங்கே    இருக்கிறார்?    அவருடன்    உரையாடி வாழ்;துக்கூற    விரும்புகின்றேன்”    எனச்சொன்னேன்.
“   ஏன்…  சேர்..?”
“ உங்கள்   ஜீவநதியில்   வெளியான   குந்தவையின்    நீட்சி    சிறுகதை    என்னை    மிகவும்    பாதித்துவிட்டது.    அவருடன்    தொடர்புகொண்டு உரையாடவிரும்புகின்றேன்.    தொலைபேசி    இலக்கம்    தாருங்கள்”   என்றேன்.

செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை ஜெ.சி டானியேல்

.
செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை
- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!


2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட். சினிமாவால் பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் அனாதமாக இறந்த மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது. அவர் தான் மலையாள திரையுலகின் தந்தையான ஒரு தமிழர்! மேலும் புலைய ஜாதியில் பிறந்து ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில் மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக ஒரு தமிழச்சியாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற பெண்ணின் கதையும் சொல்லும் படம் இது!

மூழ்கிய படகில் இலங்கையர் இல்லை


13/06/2013 அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் கடந்த வாரம் மூழ்கிய படகில் இலங்கையர் எவரும் காணப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அறிக்கை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
படகு ஒன்று கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து முழுமையான அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய சுங்க மற்றும் கரையோர பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும் குறித்த படகில் இலங்கையர் எவராவது இருந்தனர் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதி செய்யவில்லை.

பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்

.


கோஷங்களாலும்
உற்சாக மிகுதியின்
உரத்த குரலாலும்
தாரை,தப்பட்டைகளின்
சப்தங்களாலும்
எழும் மிரட்சி
கண்களில் தெரிகிறது

கடலில் கரைக்கப்படும்
பல மைல் தூரம் வரை
பெருத்த மண் பிள்ளையாரையும்
கனத்த பத்து பதினைந்து ஆட்களையும்
சுமக்கும் வேதனை
வாய் வழியே
நுரையென வழிகிறது

அடிக்கடி முதுகில் விழும்
அடியால்
அடிவயிறு கலங்குவது
புரிகிறது

Nantri:ilakkiyam.nakkheeran

இயக்குநர் மணிவண்ணன் நேர்காணல்


இயக்குநர் மணிவண்ணன்!

.

[இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். - சிராஜுதீன் -
உங்கள் இளைமைக் காலம் பற்றி?


உலகச் செய்திகள்


மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்!

சவூதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை: போதைவஸ்து கடத்தியதாக குற்றச்சாட்டு

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: சந்தேகத்தில் நடிகை கைது

 ஒபாமாவின் அதிரடி முடிவு!

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரோஹானி தெரிவு

======================================================================
மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்!

08/06/2013 தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தற்போதைய வயது 94.

கடந்த சில காலங்களாக ‌உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை அவர் நுரையீரல் அழற்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நன்றி வீரகேசரி   


நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4 கீதா மதிவாணன்

.
மழையும் குளிரும் வாட்டும் வேளைமக்கள் படும்பாட்டை விவரிக்கும் அழகு மேவிய வரிகள்!
 
குளிர்மாலைத் துயர் நினைத்து
மலர்மாலை புனையப் பயந்து
சிலமலர் சூடிடுவார் மகளிர்தம்
அடர்கூந்தல் அழகு செய்ய! 

 நறுமண விறகில் நெருப்பினை மூட்டி
அகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி
முகிலென்றெழுந்த புகையினில் காட்டி
முடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி!

செல்லுலோயிட்- மலையாள திரைப்பட பாடல்

.
செல்லுலோயிட்- மலையாள திரைப்படத்திற்காக தமிழில் பாடல் வரிகள் வெளிவந்திருக்கிறது  அற்புதமான இந்த குரலுக்குரியவர் வைக்கம் விஜயலட்சுமி அவரோடு சேர்ந்து  பாடுகின்றார் ஸ்ரீராம் அவர்கள் . மனதை தொட்டுச் செல்லும் குரல் இனிமை,  அருமையான  இசை  பிரித்துப்பார்க்கக்  கூடிய வரிகள் என்று நீண்ட காலங்களுக்குப் பிறகு  இப்படி ஒரு பாடல். பாடல் வரிகள் பழனி பாரதிதான். இதற்கான இசையை  தந்திருக்கிறார் ஜெயச்சந்திரன் என்ற இசையமைப்பாளர். பிரிதிவிராஜ் 
நடித்த திரைப்படம்தான் இந்த செல்லுலோயிட் . மலையாளப்படங்களில்
 இருந்து  கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது தமிழ் சினிமாவிற்கு என்பது 
மீண்டும் ஒருமுறை காட்டப்பட்டுள்ளது. கேட்டுப்பாருங்கள்.
 
 

தமிழ் பாடல்





புகலிடக் கோரிக்கையாளர்களின் உடல்களை அப்படியே விட்டது அரசு – பாலா விக்னேஸ்வரன் கண்டனம்

.
கிறிஸ்மஸ் தீவுக்க அருகில் கடந்த வாரம் 55 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்ததாக ஊகிக்கப்பட்டது. இதனை தேடும் பணியில் வான் மற்றும் கடல் மார்க்கமாக தேடிக் கண்டுப்பிடிக்கும் முகமாக மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.
இதன் போது சடலங்களை மீட்காது விட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி பாலா விக்னேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Fullscreen capture 12062013 100038 PM
இவ் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கையில் மேற்படி சமுத்திரப் பரப்பில் உயிர்காப்பு மேலங்கிகளுடன் பதின்மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவையை மீட்காது உயிர் பிழைத்தோரைத் தேடும் பணியில் தாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூறினார்.
இது குறித்து பிரதமர் கிலாட் நிருபர்களிடம் தெரிவிக்கையில்;-
எம்மால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாக இருப்பினும் அது செயற்பாட்டு ரீதியானதொன்றே எனவும் எல்லைப் புற காவல் படையினரின் தெளிவுறுத்தலின் பிரகாரம் அவர்கள எப்போதும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமையளிப்பது வழக்கமெனவும் எல்லைப்புற காவல்படையினர் எந்தப் பணியிலும் எதற்காக முதன்மை பெருகின்றதென்பதை அனைவரும் புரிந்து கொள்வார்களென தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

மூத்த ஊடகவியலாளர் கோபுவுக்கு பாராட்டு

.



நன்றி euthayan

இலங்கைச் செய்திகள்

உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது

இலங்கையில் மலிஜ் அப்துல்லா என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா

விமலும் சம்பிக்கவும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை முட்டால்களாக்க பார்க்கின்றனர் : ஐ.தே.க.

வட மாகாணசபை தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் இலங்கையின் பாசாங்கை ஏற்க முடியாது - இந்தியா தெரிவிப்பு

 புத்தர் சிலை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

 கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல: எல்லே குணவங்ச தேரர் 
  
இரணைமடு விமான  ஓடுதளம் சனியன்று திறப்பு

 வீட்டுக்கு எதிரான பந்தயம்

கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது -டி.எம். சுவாமிநாதன் எம்.பி.

கிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
===============================================================
உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு


11/06/2013        13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் சினிமா


MailPrint
நேரம்

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா படங்களைப் போன்று வித்தியாசமான கதையமைப்பில் வந்திருக்கும் படம் நேரம்.
காலையில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதைக் கரு.
நாயகன் நிவின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனம் நஷ்டத்தில் இயங்க இவருடைய வேலை பறிபோகிறது.
இந்நிலையில், தனது தங்கையின் திருமணத்திற்காக வட்டிராஜா என்பவரிடம் ரூ.50,000 வாங்குகிறார். 4 மாத காலத்திற்குள் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்ற நிபந்தனையுடன் அந்த வட்டிப் பணத்தை வாங்கிச் செல்கிறார்.
ஆனால், நாயகனுக்கோ குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் வட்டிராஜாவிடம் சொன்ன நேரத்திற்குள் வட்டிப் பணத்தை கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் மாலை 5 மணிக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று வட்டிராஜா நாயகன் நிவினுக்கு கெடு வைக்கிறார்.

இந்நிலையில், தனது சிறுவயதிலிருந்தே தன்னுடன் படிக்கும் நாயகி நஸ்ரியா நசீமும், நிவினும் காதலித்து வருகிறார்கள்.
இவர்களுடைய காதலுக்கு நசீமின் அப்பா தம்பி ராமையா சம்மதம் தெரிவித்திருக்கும் பட்சத்தில், நிவினின் வேலை பறிபோனது தெரிந்தது தனது மகளை தற்பொழுது திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்.
இந்நிலையில், நிவினை பிரிய முடியாத நசீம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது ஒரு திருடனிடம் தனது கழுத்தில் போடப்பட்டிருந்த செயினை பறிகொடுக்கிறார் நசீம்.
மறுமுனையில், இதைப்பற்றியெல்லாம் தெரியாத நிவின், வட்டிராஜாவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக தனது நண்பனிடம் பணத்தைப் பெற்று திரும்பும் வழியில் நசீமிடருந்து செல்போன் அழைப்பு வருகிறது.

அப்போது, தனது கழுத்தில் போட்டிருந்த செ ினை திருடனிடம் பறிகொடுத்ததை நசீம் விளக்குகிறார். இதை நிவின் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடனை அடைப்பதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிடுகிறார்.
இந்நிலையில் வட்டிராஜாவிடம் பணத்தை வாங்கிய இன்னொருவரான மாணிக், அவரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்தவேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த நசீம், நாயகனிடம் பேசுவதற்காக அவரிடம் போனை வாங்குகிறார்.
இதைத் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை நோட்டமிடும் வட்டிராஜா நசீமை, மாணிக்கின் காதலி என்று தவறாக புரிந்துகொண்டு மாணிக் தனக்கு தர வேண்டிய பணத்திற்காக அவளை கடத்தி விடுகிறான்.

இந்நிலையில், தன்னுடைய மகளைக் காணவில்லை என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்-யிடம் தம்பி ராமையா புகார் செய்கிறார்.
இறுதியில் நிவினும், நஸ்ரியா நசீமும் ஒன்று சேர்ந்தார்களா? கடத்தப்பட்ட நசீம் மீட்கப்பட்டாரா? குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் வட்டிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் நிவின் எளிமையான தோற்றம், அளவான நடிப்பு என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார்.
நாயகி நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு கேரளத்து வரவு. திரையில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வட்டிராஜாவாக வரும் சிம்ஹா நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இளமையான தோற்றத்தில் வில்லத்தனம் காட்டுவதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
மேலும், நாசர், ஜான் விஜய், மாணிக் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்த் நாக் உள்ளிட்ட பல துணை கதாபாத்திரங்கள் படத்தில் ஆங்காங்கே வந்து சென்றாலும், அனைவரும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

நாயகியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா இயல்பான தோற்றத்தில், அன்பான அப்பாவாக தனக்கே உரித்தான பாணியில் நடித்துள்ளார்.
உலக சினிமாவின் பிரபல இயக்குனர்களையும், அவர்களின் படங்களையும் படத்தின் ஆரம்பத்திலேயே பட்டியலிடுவது, பரபரப்பான கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் காட்சிகள் என்று ஆங்காங்கே சுவாரசியங்கள் பளிச்சிட்டாலும் காட்சிகளின் நீளம், யூகிக்கக்கூடிய காட்சிகள் என்பனவற்றை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
என்றாலும், தனது முதல் படத்தை நேர்த்தியாக கையாண்ட விதத்திற்காக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனை நிச்சயம் பாராட்டலாம். படத்தின் இசையும், ஒளிப்பதிவும் வசீகரம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
மொட்டை மாடி அதிகாலை வெளிச்சம், மழை சூழ்ந்த மேகம், சேசிங் காட்சிகள் என கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில், அதே சமயம் கதையை விட்டு வெளியே வராமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆனந்த் சந்திரன் கைதட்டல்களை அள்ளுகிறார். ராஜேஷின் பாடல்களைவிட பின்னணி இசை மிரட்டுகிறது.
முற்பாதியில் நம்மை சிரிக்க வைக்கும்படியான வசனங்கள் பிற்பாதியில் மிஸ்ஸிங். காட்சிகளின் நீளத்தால் கதை ரொம்பவும் நொண்டியடித்துக் கொண்டு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் "நேரம்" போகிறது.
நன்றி விடுப்பு