படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி
இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும்
பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்
தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின்
சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்
பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும்
327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கடந்த (2016) ஆண்டு
இறுதியில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது.
இந்தத் தொகுப்பு நூலிற்கான
செயற்திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்தான் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன்
தலைமையில் முன்னெடுக்கப்பட்டதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன்.
நீர்வைபொன்னையன்,
தேவகௌரி, குமரன் பதிப்பகம் குமரன் ஆகியோர் அவ்வப்போது தொடர்புகொண்டு சில முற்போக்கு
எழுத்தாளர்களின் விபரங்கள், படங்களும் கேட்டிருந்தனர். கேட்டவற்றை அனுப்பிக்கொண்டிருந்தேன்.
ஆயினும் நூல் வெளிவருவதில்
தொடர்ந்தும் தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் நீர்வைபொன்னையனும் அவுஸ்திரேலியா
சிட்னிக்கு வந்து திரும்பியிருந்தார்.
இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கிய சில எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறமாட்டார்கள்
என்பதை தெரிந்துகொண்ட கவிஞர் மேமன்கவியும் பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவர் தமது கடிதத்தில்
இத்தொகுப்பில் புறக்கணிக்கப்பட்ட சில எழுத்தாளர்களின் பெயர்களையும் சுட்டிக்காண்பித்திருந்தார்.
முகநூல்களிலும் மின்னஞ்சல்களிலும் சில வாரங்கள் ஈழத்து இலக்கியவாதிகளிடத்திலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமும்
மேமன்கவியின் கடிதம் பேசுபொருளாக இருந்தது.
இந்த சர்ச்சைகளும்
நூல் வெளியீட்டில் தாமதம் தருகின்றதோ என அந்நியதேசத்திலிருந்து நான் யோசித்தேன். திடீரென்று
ஒரு மின்னஞ்சல், தொகுப்பில் இடம்பெறவிருக்கும்
முற்போக்கு எழுத்தாளர்களின் மனைவிமார், பிள்ளைகள் பெயர் விபரங்களும் கேட்டிருந்தது.
அதற்கான பதிலை மின்னஞ்சலில்
தெரிவிக்காமல், தொலைபேசி ஊடாகவே சொல்ல நேர்ந்தமைக்கு, குறிப்பிட்ட தகவல்கள் விவகாரங்களிற்கு
அழைத்துச்சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம்.
2014 ஆம் ஆண்டு முதல்
தாமதமாகவிருந்து ஒருவாறு இலங்கை முற்போக்கு
எழுத்தாளர்கள் நூல் கடந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிடப்படுவதாக பத்திரிகைச்செய்தியில்
பார்த்தேன்.
குறிப்பிட்ட நூல் வெளிவருவதற்கு முன்னர், என்னிடம் கட்டுரைகள்,
படங்கள் கேட்டவர்களிடமிருந்து அதன்பின்னர் எதுவித தகவலும் இற்றைவரையில் இல்லை. நூலை
அச்சிட்டவரிடமிருந்தும் தகவல் இல்லை. சரி..., காரியம் முடிந்துவிட்டது. இனி அவர்களுக்கு
என்ன கவலை...? என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
அந்த நூலில் என்னைப்பற்றிய
கட்டுரை எழுதியவர் வசந்தி தயாபரன். அவருடன்
மின்னஞ்சலில் தொடர்புகொண்டு ஒரு பிரதியைபெற்று, அவுஸ்திரேலியா வந்த எனது தங்கை ஊடாகத்
தருவித்துப்படித்தேன்.
இந்த நூலுக்கும் எனக்குமிருந்த
சிறிய உறவின் முன்கதைச்சுருக்கம் அவ்வளவுதான்.
அருமையான தொகுப்பு.
ஆனால், மருதூர்க்கொத்தன், மேமன்கவி, பத்மாசோமகாந்தன், அந்தனிஜீவா ஆகியோர் பற்றி எவரும்
எழுதவில்லை என்பதும், இதன்தொகுப்பாசிரியர் அவர்களை இணைத்துக்கொள்ளாததும் வருத்தமளிக்கிறது.
இவர்கள் நால்வரும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து பயணித்தவர்கள் என்பதற்கு
நானும் ஒரு சாட்சி.
இலங்கையில் பாரதி அங்கம் -09 முருகபூபதி
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும்,
பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின்
ஞானத்தந்தையாக (God Father) கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம்
'கல்கி' கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து பாராட்டப்பட்டவராவார்.
1948 இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின்
மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம், கொழும்பில்
தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன்,
மற்றும் வீரகேசரி ஆகியவற்றிலும் ஆசிரியராக
பணியாற்றியவர். 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி
தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.
தமிழ்ப்பத்திரிகைத்துறையில்
பழுத்த அனுபவம் மிக்க இவர், வெளியுலகிற்கு தன்னை பிரபல்யப்படுத்தாமல் அமைதிபேணியவர்.
எனினும், அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எரிமலைக்குரிய குணாம்சம்
ஒளிர்ந்தது. முற்காலத்தில் வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களின் இயக்குநர்களின் பெயர்களும் தற்காலம்போன்று வெள்ளித்திரைகளில் தோன்றும். ஆனால், அவர்கள் இக்காலத்து
இயக்குநர்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் திரையில் வலம்வந்து அறிமுகமாகமாட்டார்கள்.
முன்பிருந்தவர்கள் பின்னாலிருந்து இயக்கிய
உந்துசக்திகளாகத்தான் வாழ்ந்து மறைந்துபோனார்கள்.
இன்றைய
தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் திரைகளில் தோன்றுவதுபோன்று தற்கால பத்திரிகை ஆசிரியர்களும்
பொதுமேடைகளில் தோன்றும் கலாசாரம் வந்துவிட்டது.
ஆனால், தினபதி
அதன் ஞாயிறு பதிப்பு சிந்தாமணி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியர் சிவநாயகம் அவர்களை - இவை வெளியான காலகட்டத்தில் பொதுமேடைகளில் காண்பது
அபூர்வம்.
கிழக்கிலங்கையில் பெரியார் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பிய
முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார். தமிழகத்தின்
முதல்வர் அறிஞர் அண்ணாவுடன் பழகியதன் அனுபவங்களை
தொடர்கட்டுரையாக எழுதியவர். எனினும்
இறுதிக்காலத்தில் சத்திய சாயி பக்தராகவும் வாழ்ந்து, 22 ஏப்ரில் 2000 ஆம் திகதி மறைந்தார்.
தினபதி
தினசரியில் தினமும் புதிய சிறுகதைகள் என்ற களத்தில் பல புதிய இளம்தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி,
எதிர்காலத்தில் அவர்களை ஆக்க இலக்கியவாதிகளாக்கிய பெருமையும் அவரைச்சாரும். அக்காலப்பகுதியில்
இளம் மாணவர்கள் எழுத்தாளர்களாக தினபதியில் வளர்க்கப்பட்டார்கள்.
இலங்கைச் செய்திகள்
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்.!
கருணாவின் ஒத்துழைப்பு இல்லாவிடில் கிழக்குப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்டிருக்க முடியாது ; கம்மன்பில
கோத்தபாய நீதிமன்றில் ஆஜர்.!
சிவனொளிபாத மலைக்குச் சென்ற 3 யாத்திரிகளின் உயிரைப் பறித்த குளிர்
இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு
மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்
எமது காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடரும் : புதுக்குடியிருப்பு மக்கள்
விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு
புகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள்
யாழ் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர்
உலகச் செய்திகள்
சசிகலாவுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம்; நான்காண்டு சிறைத் தண்டனை; பத்தாண்டுகளுக்கு அரசியல் அஸ்தமனம்!
சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா
வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை
வட கொரிய ஜனாதிபதியின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை
104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..!
தமிழக ஆட்சியை தீர்மானிப்பதற்கு ஆளுனருக்குள்ள ஐந்தே வழிகள்..!
மு.க.ஸ்டாலின் சற்றுமுன்னர் அதிரடி கைது
குமுறுகிறது இந்தியாவின் ஒரேயொரு எரிமலை!
பள்ளிவாசல் மீது தாக்குதல்: பாக்.கில் 39 ஐ.எஸ். சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி..!
சூஃபி பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்; 72 பேர் பலி, 150க்கு மேற்பட்டோர் படுகாயம்
இரண்டாவது கோடை
யோகன்
தென் மேற்கு கன்பெராவுக்கு ஒரு பெருஞ்சுவர் போல நிற்கும் பிரிண்டபெலா மலைச்சாரலிலிருந்து நெருப்புப் புகையையும் எரிந்த இலைகளின் சாம்பலையும் கொண்டு வந்து கொட்டுகிறது காற்று. மலைச்சாரலிலுள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன. நகரம் புகை மண்டலத்தால் நிரம்பி விட்டதை சாம்பல் மணத்தை முகர்ந்து சனங்கள் அறிந்து கொள்கின்றனர்.
காட்டுத்தீ ஆரம்பித்த இம்மலைச்சாரலின் மத்தியிலுள்ள நமாஜி தேசிய வனப்பிரதேசம் மட்டுமே அவுஸ்திரேலிய தலை நகர் பிராந்தியத்திற்கு சொந்தமானது. இதைவிட பிம்பேரி பிரிண்டபெலா வனபிரதேசங்கள் உட்பட ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர்களுக்கு மேல் நீண்டு கிடக்கும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதி;;; தலை நகர் பிராந்தியத்திற்கும் நியு சவுத் வேல்ஸ்க்கும் மாநிலத்திற்கும் எல்லையாக எழுந்து நிற்கிறது.
இருண்டு போய்க்கிடக்கும் நீண்ட பகலும் புகைச்சுவாசமும் ஹேலிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வீட்டுக்குப் பின்னாலிருந்த ஏணியில் ஏறி நின்றபடி மலை முகடுகளில் எரியும் நெருப்பு தெரிகிறதா என்று பலமுறை பார்த்து விட்டாள். தூரத்தில் தெரியும் மரங்கள் எங்கும் மெல்லிய நீலப்படலமாய் புகை பரவியிருந்தது. டகர்னொங்; பள்ளத்தாக்கிலுள்ள நகரங்களிலிருந்து பார்த்தாற் தெரியும் அந்த நீண்ட மலைத்தொடர் முற்றாக மறைந்து விட்டது. டகர்னொங் என்ற பெயர் நணவால் ஆதிகுடிகளின் மொழியில் குளிர் பிரதேசம் என்று அர்த்தம். பள்ளத்தாக்கிலுள்ளதால் இந்நகரங்கள் வின்டரில் கடுங்குளிராக இருக்கும்.
தமிழ் சினிமா
போகன்
நன்றி cineulagam
ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே சரியான ரூட்டை பிடித்து சென்றுக்கொண்டிருக்கின்றார். தனி ஒருவன், பூலோகம், மிருதன் என வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு பக்கமும், ரோமியோ ஜுலியட் மாதிரி கமர்ஷியல் கதைக்களத்தில் மற்றொரு பக்கம் என இரட்டைக்குதிரையில் வெற்றி பவனி வருகின்றார். தற்போது மீண்டும் ரோமியோ ஜுலியட் இயக்குனருடன் ஜெயம் ரவி மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம் போகன். போகன் ரசிகர்களை மயக்கியதா? பார்ப்போம்
கதைக்களம்
அரவிந்த்சாமி மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி தெருவுக்கு வருகிறார், அந்த நேரத்தில் தான் மக்களை ஏமாற்றி, கொள்ளையடித்து, திருடி பணத்தை சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.
அவர் ஒரு அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து ஓலைச்சுவடி ஒன்றை எடுக்க, அதை வைத்து கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை கற்க, அதன் பின் பல வங்கிகளில் தன் சக்தியை பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றார்.
அப்படி ஒரு வங்கியில் நரேன் மூலம் கொள்ளையடிக்க, நரேனின் மகனாக வரும் AC ஜெயம் ரவி, தன் அப்பாவை காப்பாற்ற இந்த கேஸில் தீவிரம் காட்டுகின்றார்.
அரவிந்த்சாமியிடம் நண்பர் போல் நடித்து அவரை கைது செய்கிறார் ரவி. ஆனால், அரவிந்த்சாமி தன் சக்தியை பயன்படுத்தி ரவி உடலில் கூடுவிட்டு கூடுபாய, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜெயம் ரவி பல பேட்டிகளில் சொன்னது போல் முழுக்க, முழுக்க அவருக்காகவே எழுதப்பட்ட கதை தான் இந்த போகன். அதிலும் அரவிந்த்சாமி உயிர் தன் உடலுக்குல் வந்ததும் அவர் செய்யும் மேனரிசங்கள் விசில் பறக்கின்றது. ஹன்சிகாவிடம் ஒவ்வொரு முறையும் நெருங்கும் போது வரும் தடை, அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஸன் என தனி ஒருவனில் அரவிந்த்சாமியிடம் விட்டதை இதில் பிடித்துவிட்டார்.
அரவிந்த்சாமி முதல் பாதியில் மிரட்டல், இரண்டாம் பாதியில் ஜெயம் ரவி உயிர் தன் உடலுக்குள் வந்ததும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றார். ஏனெனில் தனி ஒருவனில் வில்லன் என்பதால் லிமிட்டே இல்லாமல் ஸ்கோர் செய்தார். இதில் இரண்டாம் பாதியில் நல்லவன் வேஷம் என்பதால் ரவிக்கு வழிவிட்டு தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஹன்சிகா தண்ணி அடித்துக்கொண்டு நடிக்கும் காட்சிகள் எல்லாம் ஓவர் ஓவர் ஆக்டிங். இனிமேலாவது கொஞ்சம் தனக்கு ஸ்கோப் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருந்தாலும் வீட்டில் இருப்பது ஜெயம் ரவி உடலில் அரவிந்த் சாமி உயிர் தான் என தெரியாமல் இவர் நடந்துக்கொள்ளும் காட்சி எல்லாம் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைல் லக்ஷ்மனன்.
முதலில் படத்திற்கு எப்படி யு சான்றிதழ் வழங்கினார்கள் என்றே தெரியவில்லை. ஒரே குடி, தம், கஞ்சா என முதல் பாதி முழுவதும் போதையே நிரம்பி வழிகின்றது. ஒளிப்பதிவு பாலிவுட் படத்திற்கு நிகராக கலர்புல்லாக இருக்கின்றது.
பாடல்கள் செந்தூரா தவிர ஏதும் கவரவில்லை, பின்னணி இசை கேட்டு கேட்டு பழகிய இசை தான். இமான் சார் ரோமியோ ஜுலியட் அளவிற்கு இல்லை.
க்ளாப்ஸ்
ஜெயம் ரவி-அரவிந்த் சாமி கெமிஸ்ட்ரி, தனி ஒருவனில் பார்த்தாலும் எங்கும் அலுப்பு தட்டவில்லை.
இரண்டாம் பாதியில் வரும் ஆடு புலி ஆட்டம் ரசிக்க வைக்கின்றது. ஜெயம் ரவியின் நெகட்டீவ் கதாபாத்திரம் இன்னும் கவர்கின்றது.
பல்ப்ஸ்
லாஜிக் மீறல், அதிலும் கிளைமேக்ஸில் அத்தனை போலிஸ் இருக்கும் போது அரவிந்த்சாமி மிக ஈஸியாக தப்பித்து செல்கின்றார்.
படத்தின் முடிவு மிகவும் நாடகத்தன்மையாக உள்ளது.
மொத்தத்தில் தனி ஒருவனை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும், ரோமியோ ஜுலியட்டை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் திருப்தியும் கொடுக்கும் இந்த போகன்.
நன்றி cineulagam
Subscribe to:
Posts (Atom)