மரண அறிவித்தல்

.

திரு சுப்பையா பொன்னம்பலம்
(இளைப்பாறிய நீர்ப்பாசன இலாகா உத்தியோகத்தர், தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர்- திருநெல்வேலி)         தோற்றம் : 27 டிசெம்பர் 1926  மறைவு : 29 செப்ரெம்பர் 2015

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பொன்னம்பலம் அவர்கள் 29-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கேமச்சந்திரன்(பிரித்தானியா), சுரேந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரகுராஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும், அகல்யா, அர்ச்சனா, பவின், டினேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் - குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 02/10/2015, 04:00 பி. — 06:00 பி.
முகவரி: Tobin Brothers Funeral Home, 330 Hampshire Rd, Sunshine VIC 3020, Australia 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 10:15 மு.
முகவரி: Joyce Chapel, Fawkner Memorial Park, 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 12:15 பி.
முகவரி: Fawkner Memorial Park, 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia 
 தொடர்புகளுக்கு
சுரேந்தினிஅவுஸ்ரேலியா
தொலைபேசி: +61393174768
கேமச்சந்திரன்பிரித்தானியா

தொலைபேசி: +442089497923 

ஆடி அம்மாவாசை

.

நிலவு ஓழிந்து
வானம் கறுத்த நாள்
அப்பிக் கிடக்கும்
காரிருள்
சோகத்தைச் சுமந்து
மங்கிக் கிடக்கும்
மனசாக.
உடல் ஒடுங்கி நாரி கெவுள
ஓடி உழைத்து
குடும்பம் தளைக்க வைத்தனர்
கற்க வைத்து
சான்றோர் முன் 
நிமிர்ந்து நிற்க ஆளாக்கிய
தந்தையர் நாள்.
மின்னிடும் விண்மீன்களாக
கரு வானில்
உலா வருகின்றனர்
இன்னமும்
பல அப்பாக்கள்
காத்திருக்கிறார்கள்
அமாவாசை நாளில்
கசக்கும் காய் படைத்துத்
தாங்களும்
துதிக்கப்படுவதற்கான
நாட்களை எண்ணியபடி.
காத்திருக்கின்றன
கடமைகள்
பிள்ளைகளுக்கு
விரதம் இருந்து
துதிப்பதைவிட
வாழும் போதே
துயருராமல்
காப்பதற்கு.

nantri suvaithacinema.blogspot

நினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்ரேர்ஸ் - கானா பிரபா

.

யாழ்ப்பாணத்தின் பொழுது போக்குச் சந்தையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று விக்டர் அன்ட்  சன்ஸ். குறிப்பாக எண்பதுகளிலே டேப் டெக்கார்டர்களின் சந்தை பரவலாக்கப்பட்ட போதும், தொலைக்காட்சி ஊடகத்தோடு வீடியோப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடாக வந்து சேரவும், இந்தப் பொருட்களோடு தொடர்புபட்ட வியாபாரங்களும் பல்கிப் பெருகின. முதலில் நகரப்பகுதியில் மட்டுமே நிலைபெற்றிருந்த றெக்கோர்டிங் பார் என்று சொல்லப்பட்ட பாடல் ஒலிப்பதிவு நிலையங்களும், வீடியோக் கடைகளும் பின்னாளில் கிராமங்களுக்கும் தமது தொழில் சந்தையை விரிவுபடுத்தின. 

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த யாழ்ப்பாண நகரத்தில் விளங்கிய தொழில் முயற்சியாக அமைந்தது விக்டர் அன்ட் சன்ஸ். 
விக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளராக விளங்கியவர் திரு விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் அவர்கள்.  இவர்களிடமேயே அப்போது தொலைக்காட்சிப் பெட்டியையும், வீடியோ கசெட் ப்ளேயரையும்  அப்போது சுடச் சுட வந்த சினிமாப் படக் கசெட்டுகளையும் வாங்கி மக்கால் தம் பொழுது போக்குக்குத் தீனி போட்டதுண்டு. திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் வாடகைக்கு இவற்றை எடுத்துப் படம் போட்டுப் பார்ப்பது என்பது ஒரு சடங்காகவே மாற ஆடம்பித்தது.


திரும்பிப்பார்க்கின்றேன். - செங்கை ஆழியான் - முருகபூபதி

.
ஈழத்து  இலக்கிய  வளர்ச்சிக்கு  தமது  கடின உழைப்பினால் தொண்டாற்றிய  செங்கை ஆழியான் கலாநிதி  கந்தையா  குணராசா
விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும்  மகாவம்சம் வரலாறு   பற்றியும்    ஆய்வுமேற்கொண்ட   பன்னூல் ஆசிரியர்.


சமீபத்தில்  இலங்கை  சென்று  திரும்பியிருந்த  மெல்பனில் வதியும் இலக்கிய  நண்பரும்  இளம்  படைப்பாளியுமான  ஜே.கே.  என்ற புனைபெயருடன்   எழுதும்  ஜெயகுமரன்  சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில்   நண்பர்  செங்கை  ஆழியானை  சென்று பார்த்ததாகச் சொன்னார்.
ஈழத்தின்  மூத்த  எழுத்தாளராக  அறியப்பட்ட  எழுதிக்கொண்டே இயங்கிய  செங்கை  ஆழியான்  சுகவீனமுற்று  பேசுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டு   வீட்டில்  முடங்கியிருப்பதை  ஜே.கே. சொன்னபொழுது    கவலையாக  இருந்தது.
அவருக்கு   நோய்க்குரிய  அறிகுறிகள்  தென்பட்ட 2010 - 2011 காலப்பகுதியில்  சந்தித்த  பின்னர்  மீண்டும்  சந்திப்பதற்கு  எனக்கு சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.
ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்  செங்கை  ஆழியானுக்கு முக்கியமான   இடம்  இருக்கிறது  என்பதை  எவரும் மறுக்கமுடியாது.    இவரும்  செ.கணேசலிங்கன்  போன்று  நிறைய எழுதியவர்.   யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக  பேராதனைப் பல்கலைக்கழகம்  புகுந்த  கந்தையா குணராசா   என்ற   இயற்பெயர்  கொண்டிருந்த  செங்கை ஆழியான் சிறுகதை,    நாவல்,   தொடர்கதை,  ஆய்வுகள்,  மற்றும்  புவியியல் சம்பந்தப்பட்ட   பாட  நூல்கள்,   ஏராளமான  கட்டுரைகள், விமர்சனங்கள்,    நூல்   மதிப்புரைகள்  எழுதியவர்.     பல இலக்கியத்தொகுப்புகளின்  ஆசிரியராகவும்  பல   நூல்களின் பதிப்பாசிரியராகவும்  விளங்கியதுடன்   சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும்   எடுத்துக்காட்டாகவும்  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர்.

தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பின் தகவல் பரிமாற்றக் கலந்துரையாடல் 03 10 15

.
  சிட்னியில் வாழும் பொறியியளாளர்களால் 2008ம் ஆண்டு நிறுவப்பட்டு இன்று விக்டோரியா, க்வின்ஸ்லண்ட் போன்ற மாநிலங்களிலும் முனைப்புடன் இயங்கி வரும் தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பானது, பொறியியளாளர் கருணை நிதி ஊடாகத் தாம் முன்னெடுக்கும் திட்டப்பணிகளைக் கன்பரா வாழ் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறும் முகமாகக் கன்பராவில் இரவுப் போசனத்துடன் கூடிய ஒரு தகவல் பரிமாற்றக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இந் நிகழ்வானது வருகின்ற ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி மாலை 7 மணி தொடக்கம், இலக்கம் 10 வாட்சன் (Watson) வீதி, டேர்னரில் (Turner) அமைந்துள்ள டேர்னர் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் (Turner Senior Citizen Hall) இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் பங்குபெற்ற விரும்புபவர்கள் பின்வருபவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
பதிவு செய்யத் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.
கணேஷ் – 02 62516518;         சிறீபதி – 0421 556 193
ரவி –        02 6282 8820         சுதா & பிரணவன் – 0412 346 052
சிவா – 02 6161 7478               சேந்தன் – 02 6286 7594
குகா – 0466 455 630

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 3- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.

நல்வாழ்வில் ஊன்றி நிற்கும்
உணர்வ னொடும்
நம்முடைய பரதக்க கலை
உறவு கொண்டால்
சுவையான பல புதிய
படைப்புக்கள் தோன்றும்
என்றார் கவிஞர் முருகையன்.

நண்பர் சிவத்தம்பியோ  “நடனத்தை வெறும் பொளுதுபோக்காக கொள்ளாது ஆக்கமுறைக்குப் பயன்படுத்த தக்க கலைவடிவமாக கொண்டு அதனை விளக்கியுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்” என நான் எழுதிய முதல் நூல் “தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்” எனும் நூலுக்கான விமர்சனத்தில் எழுதி உள்ளார். ஆக்க முறையில் எடுத்துச் செல்வது என் கடன். என் ஆய்வுகள் மூலம் நான் அறிந்தவையே என்னை துணிகரமாக செயல்பட வைத்தது. கருத்தை கூற எந்தவகை நாட்டியம் பொருந்துகிறதோ அதை தயங்காது கையாணட்டேன். சமூகத்திற்கு நாட்டியம் பயன் உள்ள கலையா அமைவதற்கு கருப்பொருள் முக்கியம். நடனம் அதை எடுத்து விளக்க உதவும் சாதனமே.

கம்பன் விழா 2015 - சிட்னி 03, 04/10/2015 - மெல்பேர்ண் 10/10/2015


உயிரானவர்களே வணக்கம்,
உயர்ந்தோர் போற்றும்,
உலகம் வியக்கும் நயம்மிகு தமிழால்,
'உயர்கவி' என்னும் பெயர் நிலைத்தவன் கம்பநாடன்.
உம்பரிலிருந்து இம்பரை நாடிய வள்ளலின்,
உச்சந்தொட்ட காப்பியத்தை,
'உலகம் யாவையும்' எனத் தொடங்கி,
உலகியல் தத்துவம் படைத்த மானுடனை,
உவந்து போற்ற வருக.
உறவு பாராட்டி அழைக்கின்றோம்.
உங்கள் வரவால் விழாவைச் சிறப்பித்தருள்க.
உளம் மகிழ் கம்பன் கழகத்தினர்!


இலங்கைச் செய்திகள்


வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

யாழில் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் விழிப்புனர்வு

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்

கொள்ளுப்பிட்டி ஹோட்டல் அறையில் அஸி.பிரஜையின் சடலம் மீட்பு

மோடியை சந்தித்தார் மைத்திரி

சேயா, வித்தியா படுகொலைக்கு நீதி கோரி விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டப் பேரணி

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்


21/09/2015 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


Gayatri Day 2015 - 04/10/2015


ஹிட்லரை அஞ்ச வைத்தவன் !

.
தனது ஆலோசகர்களை எல்லாம் அவசரமாக அழைத்திருந்தார் ஹிட்லர். தனது நீண்ட நாள் கனவை பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார். ஹிட்லரின் ஆலோசகர்கள் எல்லோரும் சுத்தி வலைத்து ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் 'அவர்' உதவி வேண்டும். 'அவர்' ஆதரவில்லாமல் ஆஸ்திரியாவில் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. 'அவர்' இத்தாலியில் தான் இருக்கிறார். ஆனால், ஆஸ்திரியாவில் ஜெர்மனி இராணுவம் உள்ளே நுழைய போகிறது என்று திட்டம் போடுகிறோம் தெரிந்தால் போதும், உடனே இத்தாலி இராணுவம் ஜெர்மனியை தாக்கும். ஆஸ்திரியாவின் சான்ஸ்லர் டால்பஸ்க்கும், இத்தாலிக்கும் அப்படி ஒரு நட்பு உள்ளது.

ஆலோசகர் வார்த்தைகளின் உண்மை இருப்பதை உணர்ந்தார். ஹிட்லர் 'அவரை' எதிர்க்க தயங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹிட்லரின் மானசீக குருவும் அவர் தான். அவர் எதிர்த்து மோதுவது என்பது தற்கொலைக்கு சமம். அதனால், அவரின் ஆதரவு பெற சமாதானமாக போவது தான் நல்லது என்று முடிவுக்கு வந்தார்.


சிவஞான விழா 2015 05 10 2015

.
சிவஞான விழா  2015 நூல் வெளியீடும் சிறப்பு சமய சொற்பொழிவும்


நம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன... பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்!

.

அலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.
கணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா?” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம்.

உலகச் செய்திகள்

.
குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு பிறிதொரு படகுடன் மோதி விபத்து

மக்காவில் சனநெரிசல் : பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு பிறிதொரு படகுடன் மோதி விபத்து

21/09/2015 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற மிதவைப் பட­கொன்று பிறி­தொரு பட­கொன்­றுடன் மோதி ஞாயிற்­றுக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 13 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.


இரத்த நிலா : அரிய சந்திரக் கிரகணம் இன்று 27.09.2015

.
கடந்த 33 ஆண்டுகளிற்குப் பின்னர் தோன்றும் அரிய சந்திரக் கிரகணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது. பூமிக்கு மிக அருகே தென்படும் நிலவு கிரகணத்திற்குள் உட்படுவதையே 'இரத்த நிலா" என்று தெரிவிக்கின்றனர்.

1982 ஆம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் மூன் கிரகணம் நிகழ உள்ளது. கடந்த 115 ஆண்டுகளில் இது 4 ஆவது முறையாகும். இந்த கிரகணத்தின்போது வானில் இருக்கும் நிலா வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிக பிரகாசமாக இரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு, 14 சதவீதம் அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும் என்று நாசா விஞ்ஞானி சாரா நோபல் தெரிவித்துள்ளார். 
இன்று தென்படவுள்ள இந்நிகழ்வை வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியும்.
2033ம் ஆண்டுவரை மீண்டும் இதுபோன்று இரத்த நிலா தோன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
தமிழ்  ஆவண  மாநாடு - ஆய்வுக்கட்டுரைக்கோவை
தமிழர்தம்  வரலாற்றை   எளிதாக  பதிவுசெய்வதற்கு ஆலோசனைகள்  கூறும்  அரியதொரு  மலர்

அண்மைக்காலங்களில்  நான்  படித்த  பல  நூல்கள் நூற்றுக்கணக்கான  பக்கங்கள்  கொண்டிருந்தன.   இந்திய  சாகித்திய அக்கடமியின்  விருது  பெற்ற  தமிழக  படைப்பாளி   பூமணியின் அஞ்ஞாடி  நாவல்  1066  பக்கங்கள்   கொண்டது.   இதனை வெளியிட்ட "க்ரியா"  அஞ்ஞாடிதான்  உண்மையில்  தமிழின்  முதல்  வரலாற்று நாவல்  என்று  அதனைப் பதிப்பித்தமைக்கு  பெருமிதம்கொள்கிறது.
அவ்வாறு  பெருமிதம் கொண்ட  நூலகம்  நிறுவனம்  வெளியிட்டுள்ள ஆவணப்படுத்தல்  தொடர்பான  மலர்  பற்றியதே  இந்தப்பதிவு.
சமூகத்தின்   வரலாறுகள்  ஆவணப்படுத்தப்படல்  வேண்டும்.  அதனை விரிவான  நாவல்  தளத்திலிருந்தும்  மேற்கொள்ள  முடியும். அத்துடன்    பலருடையதும்  கூட்டு  முயற்சியால் ஆய்வுகளாகத்தொகுத்தும்    வெளியிட முடியும்.
 எனது  நூலகத்தில்  கடந்த  ஒரு வருட  காலமாக "  என்னைப்பார் நேரம்  கிடைக்கும்பொழுதிலெல்லாம்  என்னை  எடுத்துப்படி"  - எனச் சொல்லிக்கொண்டிருந்த  2013  ஆம்  ஆண்டு  கொழும்பில்  நடந்த தமிழ்  ஆவண  மாநட்டில்  சமர்ப்பிக்கப்பட்ட  ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு  640  பக்கங்கள்  கொண்டது.
இம்மலர்  ஒரு  வருடத்தின்  பின்னர்  கடந்த  2014  ஆம்  ஆண்டுதான் வெளியானது.   நூலகம்  நிறுவனம்  வெளியிட்டுள்ள  இம்மலர் இலங்கையில்   இரண்டாயிரம்  ரூபாவுக்கு  கிடைக்கும்.