இனிய நத்தார் வாழ்த்துக்கள்

.
அன்பார்ந்த தமிழ்முரசு வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.



ஆசிரியர் குழு .

பாலன் ஒளியாக வருகின்றான் - செ.பாஸ்கரன்


.

உலகெல்லாம் ஒளிவெள்ளம்
மணியொலியும் மின்விளக்கும்
தரணியெலாம் ஒளிகொள்ள
பாலன் யேசு பிறக்கின்றான்

வெள்ளிப் பனிமலையில் மேற்குலகு
உறைபனியில் மூழ்கிக் கிடக்க
தூய்மையெனும் அடையாளம் காட்டி
பார்தனிலே பாலன் வருகின்றான்

மக்களுக்கு வழிகாட்டும் மேய்ப்பனாய்
துன்பத்தில் கிடப்பவர்க்கு பெருமருந்தாய்
இருளில் இருப்போர்க்கு ஒளிக்கீற்றாய்
கொடுமைகளை பொசுக்குகின்ற பெருநெருப்பாய்

யேசுபிரான்........

தரணியினை வாழவழிகாட்டும்
வெள்ளொளியாய்
இன்று பாலன் பிறக்கின்றான்.

25.12.2011



தமிழ் அன்னையர்களுக்கான ஒன்றுகூடல்

.


The Hills Holroyd Parramatta Migrant resource centre  இன் ஆதரவில் பாடசாலை வாரங்களில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் தமி;ழ் அன்னையர்களுக்கான ஒன்றுகூடல் Toongabbie இல் அமைந்தள்ள Toongabbie community Centre இல் நடைபெறுவது வழக்கம்.
அன்னையர்கள் ஒன்று கூடும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக நடமாடும் குழந்தை பராமரிப்பாளர் இலவச சேவையும் வழங்கப்படுகிறது.
புதிதாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இவர்களை அவுஸ்திரேலிய நாட்டு சூழலுக்கு இசைவாக்கம் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அரச மானிய உதவி திட்டத்தின் உதவியுடனேயே இக்குழுவின் செயல்திட்டங்கள் நடைமுறைப்;படுத்தப்படகின்றன
இக் குழுவில் 15 இலங்கை தமிழ் அன்னையர்களும் 7 ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பயன்பெறுகிறார்கள்.
கடந்த மார்களி 14ம் திகதி இவர்கள் ஆண்டு இறுதி விழாவையும் கிறிஸ்மஸ் விழாவையும் மிக சிறப்;பாக கொண்டாடினார்கள.

திருமுறை முற்றோதல் (67வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி) 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை


.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 01.01.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மறவன்புலவு திரு க. சச்சிதானந்தன் அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “திருத்தொண்டர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றவுள்ளார். தொடர்ந்து ஏழாம் திருமுறையில் ஐம்பத்தியாறாம் பதிகம் (திருநீடூர் பதிகம்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

யாமத்திரி எரிகிறது - ராஜா



திவலையென
சுருங்கிவிட்டது வெளிச்சம்.
இருட்பெருங் கடலில்
இட்ட சுடராய்
யாமத்திரி எரிகிறது.
இனி-
நிகழ்த்த எதுவுமில்லை.
நினைவுகளென படிந்துவிட்டவை
விசிறியின் சுழற்சியில் மேலெழும்.
ஒற்றை நிகழ்வாய்
யாமத்திரி எரிகிறது.
மரண ஒத்திகையென
உறங்கிப் போகலாம்
உயிர்த்தும் எழலாம்
ஒற்றை கடவுளாய்
யாமத்திரி எரிகிறது
.

புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ


.

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நோர்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட அமைதிக்கான அடைமானங்கள் என்ற தலைப் பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை அண்மையில் ஒஸ்லோ வில் வெளியிடப்பட்டது அதில்,

இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய போது இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் கவனித் தது. ஆனால், 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் சோனியாகாந்தி இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறினார். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண் டியவர்கள் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தோற்றால் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என இலங்கை நினைத்தது என நீளும் அந்த அறிக்கை வைகோ குறித்து கூறும் வரிகள் தமிழகத்தில் பரப ரப்பை பற்ற வைத்துள்ளது.

கிறுக்கல் கவிதை



நன்றி: கோகுல்



மக்களின் மனிதன் - ஆர்த்தி வேந்தன்


.
மக்களின் மனிதன்
நாவல்
ஆசிரியர்சீநு ஆச்சுபோ
தமிழில்எஸ்.பொ.
வெளியீடு மித்ரா




மக்களின் மனிதன் நாவல் அல்ல  நடக்கும் இடமும்இடம்பெறும்பெயர்களும் கற்பனைகள் என்ற போதிலும் இது கதை இல்லைஇதில் எந்தஅழகியலும் கற்பனைகளும் இல்லை . இந்தப் புத்தகத்தை பற்றி நாம் இங்கபேசுவதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு. ஒன்று அறிவு பூர்வமானது.மற்ற நாட்டின் அரசியலையும் அவர்களின் இலக்கியத்தைத் தெரிந்துகொள்வதன் அவசியம்மற்றொன்று இந்தப்  புத்தகம் 100 % நம் நாட்டுஅரசியலுடன்அவர்களின் தலைவர்களை நம் தலைவருடனும்அந்த மக்களின் மனநிலையை நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.இந்தக் கதையை நான்கு வரிகளில் சொல்லிவிடலாம்இந்தக் கதைஆசிரியராகப் பணிபுரியும் ஓடிலி என்பவரால் சொல்ல படுகிறதுதனக்குஆசிரியராக இருந்த நங்கா என்பவர் இப்போது கலாச்சார முதல்வர் ஆகஇருக்கிறார்ஓடிலி க்கு வெளி நாட்டிற்கு போய் பட்டம் பெற்று இங்கு வரவேண்டும் என்று ஆசை. அதை பூர்த்தி செய்வதற்காக நங்கா வுடன்செல்கிறார்நங்காவின் பணமும் பலமும் ஓடிலியின் காதலியைமயக்குகிறதுஓடிலியை ஏமாற்றி நங்கவுடன் செல்கிறாள்நங்காவைவெறுக்க தொடங்கிய ஓடிலி நங்காவுக்கு எதிராக கட்சி தொடங்குகிறார்.தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்.  பிறகு தங்களுக்குள் நடக்கும் அற்பசண்டைகளை ராணுவம் தனக்குச் சாதகமாக மாற்றி கொண்டு நாட்டைக்கைப்பற்றுகிறது.


இலங்கைச் செய்திகள்

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்ரணிலின் "தேர்தல்' வெற்றி

இந்துக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மத செயற்பாடுகள் முன்னெடுப்பு

சீரற்ற காலநிலை * மழை * வெள்ளம்    10,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு: கிளிநொச்சி, முல்லையில் பெரும் இழப்பு

விவசாயத்துறையை மறுமலர்ச்சியடையச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்


19/12/2011

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைமைப் பதவி உட்பட ஏனைய பிரதான பதவிகளுக்கான வாக்கெடுப்பு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயா கமகேயும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்பு மலர் -முருகபூபதி


.        
அன்புள்ள இலக்கிய நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு ஏப்ரில்மாதம் மெல்பனில் நடைபெறவுள்ளது.  சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. பாடும்மீன் சு. சிறிகந்தராசா தலைமையில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழா 2012 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை, இலக்கிய இதழ், அவுஸ்திரேலிய சிறப்புமலரை வெளியிடவுள்ளது.
ஏற்கனவே தமிழக கணையாழி மற்றும் பிரான்ஸ் அம்மா ஆகிய இதழ்களும் இலங்கையில் மல்லிகை மற்றும் ஞானம் இதழ்களும் அவுஸ்திரேலிய சிறப்பு மலர்கள் வெளியிட்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு இதழ் ஆசிரியர் பணியை ஏற்றுள்ளமையால் குறிப்பிட்ட ஜீவநதிமலருக்கான படைப்புகளையும் சேகரித்து அனுப்பவேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளேன்.
எனவே தங்களது புதிய படைப்பொன்றை எதிர்வரும் 2012 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பதாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்களுடைய ஒளிப்படத்தையும் தங்கள் படைப்புடன் அனுப்பிவைக்கவும்.

சிட்னி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் - ஞாயிற்றுக்கிழமை - 29 ஜனவரி 2012



உலகச் செய்திகள்

வடகொரிய தலைவர் மாரடைப்பால் மரணம்


ஈராக்கில் 12 தொடர் குண்டு வெடிப்புகள்: 57 பேர் பலி


பிலிப்பைன்சில் சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


சோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏழரை இலட்சம் பேர் சாவின் விளிம்பில்

வடகொரிய தலைவர் மாரடைப்பால் மரணம்

19/12/2011

டகொரியா தலைவர் ஹிம் ஜொங் II (வயது-69) மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1941 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, பிறந்த இவர் தனது தந்தையான கிம்இல்-சுங் இறந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வடகொரியாவின் தலைவராகப் பதவியேற்றார்.

இயேசு நம் உள்ளத்தில் பிறக்கட்டும்! திருவருகைக் காலத்தில் அதற்கு ஆயத்தமாவோம்! *அருட் தந்தை பொப் ரொட்ரிகோ

.
கிறிஸ்து பிறப்பின் திருவருகைக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காலம் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அதனைச் சரிசெய்து கொள்ள நம்மை அழைக்கிறது.

நம் வீடுகளும் வாகனங்களும் அழகுறுவதும் உடலை மூடும் ஆடைகளும் இக்காலத்தில் நமக்கு முக்கியம் பெறுவதைப்போல் நம் மனமாற்றம் இந்த அனைத்தையும் விட முக்கியமானது. மனதும் மனதில் இயேசு பாலன் பிறக்க அதனைத் தூய்மைப்படுத்துவோம். எழில்படுத்துவோம்.

அருட் தந்தை பொப் ரொட்ரிகோ அவர்கள் வாழ்க்கைப் படிப்பினையை மனதில் பதியும் படி தருவதில் கைதேர்ந்தவர். இக்காலத்தில் அவர் வழங்கிய மறையுரையொன்றை தியானிப்போம்.

அவதரித்த நாளில் அவன் புகழ் பாடி மகிழ்வோம்!

.
புனிதமகான் யேசு அவதரித்த நாளில் அவன் புகழ் பாடி மகிழ்வோம்!
எல்லோருக்கும் 2011ஆம் நத்தார்ப் பண்டிகை இன்பகரமாகவும் மற்றும் 2012ஆம் புதுவருடம் எல்லா நலன்களையும் நல்கும் ஆண்டாகவும் அமைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி  வாழ்த்துகிறேன்.
 
 

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி - 1) வித்யாசாகர்!

.
நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே.

தான் செய்துவந்த மேலாளர் பணியைக் கூட விட்டுவிட்டு, சமூகம் பற்றி எழுதுவதே தன் தலையாயக் கடமையென்று எழுத்துலகிற்கு வந்தவர். விற்றதை விற்காததாய் சொல்லி சில பதிவர்கள் தருமந்த சொற்ப பணத்தையும் இல்லையென்று வந்தோருக்குக் கொடுத்துவிட்டு, பேருக்கு சொத்தென இருந்த மணையில் முக்கால்வாசியை விற்று மகளுக்கு திருமணத்தையும் நடத்திவிட்டு, மூன்றுவயது இளையவளான தன் அன்பு மனைவிக்கு சொச்ச இடத்தில் ஒரு ஓலைக் குடிசையினையும் கட்டி’ அதில் போதிய உணவற்று உடையற்று’ இப்போதெல்லாம் வெறும் நம்பிக்கையில் நாட்களை கடப்போர் வரிசையில், தன் வாழ்வையும் சேர்த்துக் கடப்பவர் இந்த எழுத்தாளர் ஜானகிராமன்.

காலத்தின் கொடூரம் பாருங்கள், தன் மனைவியின் நோயிற்கு மருத்துவம் பார்க்கக் கூட வழியில்லாமல் போன நிலையில், இன்றவரின் மனைவிக்கு நெஞ்சிவலி அதிகாமகிவிட மருத்துவமனைக்குக் கூட்டிப்போகவும் வழியின்றி மருந்து மட்டும் வாங்கிவருவதாக சொல்லிவிட்டு, ஒரு பை நிறைய தன் புத்தகங்களை வாரிப் போட்டுக்கொண்டு சென்னையின் ஒதுக்குப்புறத்திலுள்ள அந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள அந்தப் பேரூரின் புத்தகக் கடையை நோக்கிச் செல்கிறார்.

தமிழ் சினிமா


மம்பட்டியான்  விமர்சனம்

எண்பதுகளில் தியாகராஜன் நடித்து இளையராஜா இசையால் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்ற மலையூர் மம்பட்டியான் படம், இப்போது பிரஷாந்த் நடிப்பில் மம்பட்டியானாக மறு வடிவம் பெற்று வந்துள்ளது.

மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார். ஊர்ப் பண்ணையார் கோட்டா சீனிவாசராவ் நிலத்தில் கிடைக்கும் புதையலை அரசாங்கத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்ட, கோட்டாவின் ஆட்கள் அவரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார்கள். இதில் பொங்கியெழும் மகன் மம்பட்டியான் பிரஷாந்த், ஊர்த் திருவிழாவில் கோட்டாவையும் அவரது ஆட்கள் ஏழு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்.

பண்ணையாரால் வஞ்சிக்கப்பட்ட சிலரும் அவருடன் சேர்ந்து கொள்ள, காட்டுக்குள் தங்கியபடி, அந்த வழியாக வரும் பெரும்பணக்காரர்களைக் கொள்ளையடித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். போலீஸ் துரத்துகிறது. ஆனால் மம்பட்டியான் நிழலைக் கூட தொட முடியாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்போது புதிதாக மம்பட்டியானைப் பிடிக்க வருகிறார் போலீசார் அதிகாரி பிரகாஷ் ராஜ்.

இடையில், பணக்கார கோஷ்டியொன்று காட்டுவழி வருவதாக கேள்விப்பட்டு, அவர்களைக் கொள்ளையடிக்க மம்பட்டியான் குழு முயல்கிறது. ஆனால் வந்தது கல்யாண கோஷ்டி என்பதும், அவர்கள் மணப்பெண்ணை (மீரா ஜாஸ்மின்) மட்டும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டதையும் அறிந்து, அந்தப் பெண்ணிடமே அனைத்து நகைகளையும் கொடுத்து தன் தம்பியை துணைக்கனுப்பி வைக்கிறார் மம்பட்டியான். ஆனால் அடுத்த நாள் திருமணம் நடக்காததால் மம்பட்டியானை நினைத்தபடி மலையூரிலேயே தங்கிவிடுகிறாள் அந்தப் பெண். ஊருக்கு அளக்கும் படியில் ஒரு படி அவளுக்கும் தரச் சொல்கிறார் மம்பட்டியான்.

போலீஸ் துரத்தல் தொடர்கிறது. மம்பட்டியானின் ஓட்டமும் தொடர்கிறது. ஆனால் கடைசி வரை போலீசின் கையில் சிக்காத மம்பட்டியான், இறுதியில் என்னவாகிறார்... அவரை நம்பி வந்த பெண்ணின் கதி என்ன என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கெனவே பார்த்த கதைதான் என்றாலும், பிரஷாந்த் மற்றும் காமிராமேன் ஷாஜி குமார் மூலம் புதிய வர்ணம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். காட்சிகளில் பிரமாண்டம், நேர்த்தியான படமாக்கம் என ஒரு மரியாதையை வரவைத்திருப்பது தியாகராஜனின் இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

குறிப்பாக படத்துக்காக தேர்வு செய்த லொகேஷன்கள் அற்புதம். சீறிவிழும் அருவிகள், பச்சைப் பசேல் மலைத் தொடர்கள், காலைத் தழுவி ஓடும் ஓடைகள், இயல்பு மாறாத மலைக் கிராமங்கள் என மனதை ஈர்க்கிறது.

ஏற்ற வேடத்துக்கு நூறு சதவீதம் நேர்மையாய் பாடுபடும் நடிகர்களுள் ஒருவர் பிரஷாந்த். இந்தப் படத்தில் இன்னும் பத்து சதவீதம் கூடுதல் உழைப்பைத் தந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது பாடி லாங்குவேஜை இன்றைக்கு எதற்கெடுத்தாலும் பஞ்ச் டயலாக் விட்டுக் கொண்டிருக்கும் புதிய நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தனை பர்ஃபெக்ஷன்!

கண்ணாத்தாளாக வரும் மீரா ஜாஸ்மின், முந்தைய படங்களை விட அழகாக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ள மறுக்கும் மணமகனை வெளுக்கும் இடத்தில் மட்டும் அவருக்கு நடிக்க வாய்ப்பு. மற்ற காட்சிகளில் நடக்க மட்டுமே வாய்ப்பு.

ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வைகைப் புயல்...

ஒரிஜினல் படத்தில் கவுண்டமணி செய்த அதே சின்ன பண்ணையார் வேடம். காட்சிகளில் கூட பெரிதாக மாற்றமில்லை. ஆனாலும் வடிவேலு வரும்போதை முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள் (காட்சிகளில் பெரிதாக காமெடி இல்லாவிட்டாலும்!). குறிப்பாக கோபு பாபு என இரு நாய்களை அவர் மம்பட்டியானிடம் இழக்கும் இடத்திலும், பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் காட்சியிலும் சிரிப்புக்கு உத்தரவாதம்!

மம்பட்டியானைப் பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ். இந்த வேடமெல்லாம் அவருக்கு ஒன்றுமே இல்லை... அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார்.

சொர்ணாவாக வரும் முமைத் கான் சொன்ன வேலையைச் செய்துவிட்டு செத்துப்போகிறார்.

என்னதான் படம் விறுவிறுப்பாகப் போனாலும், ஒரிஜினல் படத்தோடு ஒப்பீடு செய்வதை மட்டும் தவிர்க்க முடியவில்லை. காரணம் மலையூர் மம்பட்டியான் படத்தில் எந்த பிரமாண்டமும் இல்லை. தொழில் நுட்ப ரீதியாகக் கூட அதில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஆனால் எளிய காட்சிகள், மண்ணோடு இயைந்த மனிதர்கள், இதயத்தை இளக வைத்த இசை என்று அந்தப் படம் தந்த உணர்வை, இந்த புதிய மம்பட்டியானால் தரமுடியவில்லை என்ற உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ரீமிக்ஸ் என்ற பெயரில் இளையராஜாவின் காட்டு வழி, சின்னப் பொண்ணு ஆகிய அற்புதமான இரண்டு பாடல்களை வீணடித்திருப்பதை மன்னிக்கவே முடியாது. இதைவிட அந்த ஒரிஜினல் பாடல்களை அப்படியே பயன்படுத்தியிருக்கலாம்!

தமனின் பின்னணி இசை ஓகே. ஷாஜி குமார் காமிரா இயக்குநருக்கு வலக்கரம் மாதிரி. கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்!

பழைய மம்பட்டியான் படம் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு, பிரஷாந்தின் இந்த மம்பட்டியான் ஒரு விஷுவல் ஆக்ஷன் விருந்தாக இருக்கும்!

நன்றி குசும்பு 

சனி பெயர்ச்சி



டிசம்பர் மாதம் 21ம் திகதி புதன்கிழமை சனீஸ்வரர் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்கின்றார். இரண்டு வருடங்களுக்குப்பின் நடைபெறும் இந்த சனிபெயர்ச்சியன்று சனீஸ்வரரை வேண்டினால் நற்பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இத்தினத்தன்று, ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீவெங்கடேஸவரர் கோயிலில் காலை 9.00 மணிக்கு சனி சாந்தி ஹோமம் ஆரம்பமாகும். காலை 10.30 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகமும், பின் விசேட பூசையும் நடைபெறும்.

மேலதிக விவரங்களுக்கு கோயில் அர்ச்சகர்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

42943224

42949233

முதன்மை மாணவியாக யதுசியா மகேந்திரராஜா


.


 சென்றவாரம் உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தது. இதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து நியூசவுத்வேல் மானிலத்தில் முதன்மை மாணவியாக அதிகபுள்ளிகளை பெற்றிருக்கிறார் யதுசியா மகேந்திரராஜா ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலையத்தில் கல்விபயின்ற இவரை தமிழ்முரசு வாழ்த்துகின்றது. 28 மாணவர்கள் இக்கல்வி நிலையத்தில் இருந்து தமிழை ஒரு பாடமாக எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையம் சாதனை!

ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சாலிகள்

.ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சீட்டிழுப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வென்ற்வேத்வில்லில் இடம் பெற்றது. 
பத்து பரிசில்கள் வழங்கப்பட்ட இந்த நிழ்வில் மூன்று நடுவர்கள் முன்னிலையில் சீட்டிழுப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வை ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக ஒலிபரப்பியது. முதலில் பத்தாவது பரிசுக்குரிய அதிர்ஸ்டசாலியில் ஆரம்பித்து முதலாவது அதிர்ஸ்டசாலிவரையான தெரிவு இடம்பெற்றது. தெரிவுசெய்யப்பட்ட இலக்கங்கள் உடனுக்குடன் வானொலியூடாக அறிவிக்கப்பட்டதுடன் வருகைதந்திருந்த பார்வையாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. திரு.ஈழலிங்கத்தின் உரையோடு ஆரம்பித்து தொடர்ந்து ஜேயமேன் சீட்டீழுப்பை நடாத்தினார். வெற்றி பெற்ற இலக்கங்கள் பின்வருமாறு 

1வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2679 
2வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1758 
3வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3739
4வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1312
5வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2654
6வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3584
7வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1357
8வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4012
9வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3557
10வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4003

இந்தோனேசிய கடலில் மூழ்கிய கப்பலில் சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்களை காணவில்லை

18/12/2011

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு பிராந்தியத்துக்கு ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று மாலை இந்தோனேசிய ஜாவா தீவுக்கு அப்பால் மூழ்கியதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படகில் சுமார் 400 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி, பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பயணித்ததாகக் கூறப்படும் இந்தப் படகில் 182 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைவதாகக் கூறப்படுகின்றது. அந்தப் படகில் பயணிக்கக் கூடிய பயணிகள் தொகையை விட இரு மடங்கிலும் அதிகமான பயணிகள் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணமென நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர். ___
நன்றி வீரகேசரி




இலங்கைச் செய்திகள்

நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம்

ஜே.வி.பியினர் கொழும்பில் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

எமது பிரச்சினைகளை சர்வதேச பொலிஸிடம் ஒப்படைக்க முடியாது

தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது



திருக்கோணேஸ்வரத்தில் 33 அடி உயர சிவன் சிலை திறந்து வைப்பு (பட இணைப்பு)


நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம் 10/12/2011







உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அக்கறை/ரையை யாசிப்பவள்





அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி

அதே நிலாஅதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்

எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை

நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்

அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது

இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை