மன்னார் சிறுவர் இல்ல சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; பாதிரியார் கைது
மன்னார் முருங்கன் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து,  குறித்த பாதிரியாரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் திருமதி கே.ஜீவரானி உத்தரவிட்டார்.

புத்தாண்டே நீ மலர்வாய் - கவிதை- செ.பாஸ்கரன்

.

நம்பிக்கையோடு வரவேற்ற 2010
இன்றுடன் நிறைவடைகிறது
நேற்றுப்போல் நெஞ்சில் தெரிகின்ற
அந்த நாளின் நினைவுகள்
மறையாத வண்ணங்களாய்
மனதில் இருக்கும்போதே
மற்றோராண்டு பிறந்து வருகிறது
பிள்ளையின் கைபிடித்து 
நடைபயிற்றுவித்த நாட்களைப்போல்
விரைந்து சென்றுவிட்ட வருடமும்
என்னால் மறக்கமுடியாததுதான்
மகிழ்வு மட்டுமல்ல துயரமும் கலந்ததுதான்
அந்தவருடம் - இருந்தாலும்
மனதில் நிலைத்து நிற்பவைகள்
சத்தமில்லாத சங்கீதமாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
பசுமை நினைவுகள் மட்டும்தான்

கெலன்ஸ் பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு

.

புத்தாண்டை வழிபாட்டு நாளாகவும் வருடத்தின் முதல் நாள் இறைவன் துணையோடு ஆரம்பிபக்க வேண்டும் என்றும் சிட்னி வாழ்மக்கள் சிட்னியில் உள்ள பல கோயில்களுக்கும் 1.11.11 அன்று சென்றுவந்தார்கள். கெலன்ஸ் பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் மதிய பூசைக்கு பெருந்தொகையான மக்கள் திரண்டிருந்ததைகாணக்கூடியதாக இருந்தது. கார்ப்பார்க் நிறைந்து தெருவெங்கும் கார்கள் நிறுத்தியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இது என்ன திருவிழாவா காலமா என்று எண்ணும்படியாக பக்தர்கள் நிறைந்திருந்தார்கள்.

யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம்

.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனாமியே வா! பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

சுனாமியே வா!
மீண்டும் ஒருமுறை வா!!
சுனாமியே இனியும் பொறுக்க முடியவில்லை
சுறுக்காய் ஒருமுறை நீமீண்டும் வந்துவிடு
கணக்கு முடிக்கும் கடமை உனக்கு இங்கே
கனக்கவுண்டு ஒருமுறை வா!

மட்டக்களப்பில் அரங்கேறிய வடமோடிக் கூத்து

.


மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களின் கூத்துத்திறனை வளர்க்கும் வகையில் பேராசிரியர் சி.மௌகுருவின் நெறியாள்கையில் இன்று மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் மகா வித்தியாலயத்தில் ‘மனம் மாறிய மன்னர்கள்’ எனும் தலைப்பில் வடமோடிக் கூத்து அரங்கேற்றப்பட்டது.

நான் ரசித்த குறும் படம் KNIVES

 .
                                                                                                                                                          செ.பாஸ்கரன் 

  நான் ரசித்த குறும் படம் கத்திகள். ஒரே சமூகத்தில் எல்லா வகையினரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கத்தியை கையில்பிடித்துக்கொண்டு அலையும் கொலைவெறிபிடித்த மனிதன் அந்தமனிதனை சார்ந்த சமூகத்தில் பழி போடப்படுகின்றது பேசப்படுகின்றது. கத்தியை தொழிலாக கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரன் மனிதாபிமானத்தோடு ஒரு சமூகத்தைச் சார்ந்தவனை காப்பாற்றுவதற்கு அதே கத்தியை கையில் எடுத்துக்கொண்டு ஒரு வீரனைப்போல் நடந்து செல்கின்றான்.





குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தில் தொடர்ந்து வெள்ளம்

.
குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தில் தொடர்ந்து வெள்ள மட்டம் அதிகரித்து வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவகால மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பிராந்தியத்திலுள்ள ஆறுகள் பலவும் பெருக்கெடுத்ததனால் வீடுகளும் வர்த்தக கட்டிடங்களும் நீரில் மூ ழ்கியுள்ளன.


மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

.
                                                                                      சி. ஜெயபாரதன், கனடா

இதந்திரு மனையின் நீங்கி,
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி,
பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.

தேசியக் கவி சுப்ரமணிய பாரதி

வரலாறு படைத்த வெண்மணி

.
-ஏ.லாசர்
டிசம்பர் 25ம் தேதி என்றால் உலக கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பது வரலாற்றுப் பதிவாகி 2010 ஆண்டுகளை உலகம் கடந்துவிட்டது. 1968 டிசம்பர் 25, வெண்மணி நிகழ்வு தமிழக உழைப்பாளி மக்கள், குறிப்பாக கிராமப்புறத்து உழைப் பாளிகளின் மனதில் பதிவாகி, இப்போது வரலாற்றுப் பதிவாக மாறிவிட்டது. இயேசுவின் பிறப்பை அறிவிக்க வான் மண்டலத்தில் தோன்றிய ஒளி வெள்ளம் பூமியை நோக்கி நகர்ந்து, நகர்ந்து பெத்ல கேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து நிலை கொண்டது என்பது பைபிளின் கதை. ஆனால் 1968 டிசம்பர் 25 இரவு 12 மணிக்கு கீழத்தஞ்சை வெண் மணியில் விவசாயக் கூலி தொழிலாளி இராமய்யாவின் குடிசையில் நிலப்பிரபுக்களால் வைக்கப்பட்ட தீ எரிந்து வான் மண்டலத்தையே சிவப்பு வெளிச்சமாக்கியது. அந்த குடிசைக்குள் நெருப்பில் வெந்து துடித்த 44 தலித் விவசாய கூலித் தொழிலாளிகளின் மரண ஓலமும் விண்ணைத் தொட்டது. இயேசு பிறப்பிற்குப் பின்பு புதிய கால நிர்ணயம், வரலாற்றில் உருவாக்கப்பட்டது. அது இயேசு பிறப்பிற்கு முன், இயேசு பிறப்பிற்குப் பின் என குறிப்பிடும் வகையில் கி.மு., கி.பி., என்ற காலவரையறை உருவாக்கப்பட்டது. அதே போல் கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளிகள் குறிப்பாக தலித் பண்ணை அடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் 1968 வெண்மணி நிகழ்வுக்கு முன், வெண்மணி நிகழ்வுக்குப் பின் என்று இரண்டு கட்டமாக வரலாற்றை பிரித்துச்சொல்லும் மாற்றங்களை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும், பண்ணை அடிமை சமூக அமைப்புமாகத்தான் கீழத்தஞ்சை 1968 வரை நீடித்தது. இந்த நடைமுறை காவிரி டெல்டா பகுதி முழுவதும் பரவியிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

.
பேரா.சிவத்தம்பி ஆரம்ப உரை
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஜனவரி 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குப் பேராளர் பதிவுடன் ஆரம்பமாகும் இம்மாநாட்டில் ஆய்வரங்குகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பேராசிரியர் கா.சிவத்தம்பின் உரையுடன் ஆரம்பமாகவுள்ளது. முதல் நாளான 6ஆம் திகதியன்று காலை ஆரம்ப விழாவும் மாலை கணினி வலைப் பதிவு பற்றிய ஆய்வரங்கும் நடைபெறவுள்ளன. ஏனைய மூன்று தினங்களிலும் காலை 8.30 மணி முதல்  ஆய்வரங்குகள் நடைபெறும்.

ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், நிகழ்த்து கலைகள், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ், சிறுவர் இலக்கியம், மகளிர் மற்றும் பல்துறை ஆகிய பிரதான பிரிவின் கீழ் ஆய்வரங்குகள் நடைபெறும்.

அன்றொருநாள் - கவியரசு கண்ணதாசன்


.
சென்னை பம்மல் கவியரசர் கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் நடத்திய
விழாவில் கவியரசரின் மகன் கண்மணிசுப்பு அவர்கள் கூறியது.
   கவியரசரின் உறவினர் ஒருவர் சொந்தப்படம் எடுக்க, அதற்கு கவியரசரை பாடல் எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதன் படி கவியரசரை அணுகிய போது படத்தின் பெயரரை கேட்டார். சூதாட்டம் என்றதும், இந்த பெயர் கவியரசருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. எனவே படத்தின் பெயரை மற்றச் சொன்னால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் என்பதால், மங்களகரமாக வாழ்த்தி பாடலை எழுதி தொடங்கி வைத்தார். அந்த சிந்தனையில் உதித்ததுதான் “விளக்கேற்றி வைக்கிறேன்.. என்ற அருமையான பாடல். அந்த படத்தை வெற்றிபடமாகியது என்பதும் குறிப்பிடதக்கது. இது போன்ற விடயங்களில் கவியரசர் முக்கிய கவனம் செலுத்தினார். ஒருமுறை சென்னை அண்ணாசாலையில் புதிய படம் ஒன்றின் விளம்பரம் கவியரசரின் கண்ணில் பட்டது. “சென்னை எங்கும் விரைவில் தீஎன்பதாக தீ படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார்கள். இதைக் கண்ட கவியரசர் மனம் பதறினார். சில தினங்களில் அண்ணாசாலையில் இருக்கும் எல்.ஐ.சி கட்டிடம் தீப்பற்றி எரிந்தது!

Nanri: kaviyarasuminnanchal

தமிழ் இசையே அனைத்து இசைகளின் தாய்

.

ஒரு முறை தமிழ்நாட்டின் திருவையாற்றில் தியாகராஜர் விழா நடைபெற்றது. அவ்வேளை தண்டபாணி தேசிகர் வாயால் தம் தாய்மொழி தமிழில் பாடிவிட்டார். விழாவுக்கு வந்திருந்த வித்வான்களும் பாகவதர்களும் முகம் சுளித்தனர். தண்டபாணியார் தமிழில் பாடப்பாட இவர்களுக்கு நெஞ்சம் பதைத்தது. வயிறு எரிந்தது. பார்ப்பனர்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தனர். தியாகராஜர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டது; தீட்டுக் கழிக்கப் பெற்றால் அன்றி இனி இம்மேடையில் நாங்கள் பாட மாட்டோம் என்று சீறிப்பாய்ந்தனர்; பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

எனது இலங்கைப் பயணம் -செ பாஸ்கரன்

.
தவிர்கமுடியாத காரணத்தால் எனது இலங்கைப்பயணத்தின் 6ம் பகுதி இவ்வாரம் வெளிவரவில்லை அடுத்தவாரம் தொடரும்

பாகம் 5

கீரிமலை நோக்கி புறப்பட்டு செல்லும்போது யாருமற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. சந்தியை அண்மித்த பாதையின் ஒரு பக்கத்தில் சிறிய தெருவோர பிள்ளையார் தென்படுகின்றார் குங்கும பொட்டுவைத்து பட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பிள்ளையாரைக் காணக்கூடியதாக இருந்தது. யார் இவரைக்கவனிப்பார்கள் என்று கேட்பதற்கு ஆட்கள் எவருமே தென்படாததால் விடையில்லாது தொடர்ந்தேன்.
 ஒரு நாறு மீற்றருக்கு அப்பால் பாதையின் மறுகரையில் ஒரு அரசமரம் அந்த அரசமரத்தின் கீழ் ஒரு புத்தர் பீடமொன்றில் அமர்ந்திருக்கின்றார்.