போகி நெருப்பே பொசுக்கு

.
இந்த "போகி நெருப்பே பொசுக்கு" என்பது கவிப்பேரரசு அய்யா வைரமுத்துவின் "இன்னொரு தேசிய கீதம்" என்னும் புத்தகத்தில் இதே தலைப்பில் அவர் எழுதிய ஒரு கவிதை அதைப் படித்ததும் என்னுள் ஏற்பட்ட உந்துதல். அதை நானும் தலைப்பாகக் கொண்டு வடிக்கிறேன் மரபு. 

வந்தனம் போகியே ! மார்கழி மாதமும் 
சிந்தை இனிக்க உறங்கிடச் - சுந்தரமாய்ப் 
---பூத்திருக்கும் நெல்மணியின் பூப்பறிக்கும் நல்லுழவர் 
---காத்திருத்து தன்னில்லைச் சுத்தமெனும் - சூத்திரத்தில் 
தூய்மைப் படுத்திடவே மண்ணில் பிறந்தவளே ! 
வாய்ச்சிரிக்கும் பேரிளம் பெண்ணவளே ! - தாய்போல்நீ ! 
---தைத்திங்கள் என்னும் ஒருபிறப்பை ஈன்றெடுப்பாய் 
---கைத்திறமாய் ஒற்றை நெருப்பினையும் - வைத்துள்ளாய் ! 
அந்த நெருப்பினை!யான் கொஞ்சம் கடன்கேட்டேன் 
சிந்து அதையென் கரத்தினிலே - இந்தசகம் 
---நன்மை அடைந்திடவே வெந்தழல் கேட்டேனே 
---என்முன் நிறுத்து அதுதனையும் - இன்றுலகில் 
நூதன மென்ற பெயர்சொல்லி நம்தமிழும் 
சேதம் அடைந்திடச் செய்யுகின்ற - பாதகர்கள் 
---ஆங்கிலம் தன்னைத் தமிழுடன் சேர்த்தேதான் 
---தீங்கினைச் செய்து கிடக்கின்றார் - ஒங்கி!அன்று 
அச்சங்கள் ஏதுமின்றி என்முன்னோர் ஆக்கிவைத்த 
பச்சிளம் ஓலைகளை நீயெரித்தாய் - அச்சுவெல்லம் 
---என்றே இனித்திடும் சங்கக் கவிதைகளைத் 
---தின்றாய் ! கொடுந்தீயெனப் பேர்கொண்டாய் - இன்றுயான் 
அப்பேர் அகற்றிவிட நன்னெறி சொல்கிறேன் ! 
தப்பாக ஆங்கிலம் சேர்கவியை - ஒப்பற்ற 
---யோகியர் உள்ளத்தே தோன்றும் கனலொத்த 
---போகி நெருப்பே பொசுக்கு ! 
===================================================================================== 
என்னடா இது கலி வெண்பா இப்புடி இருக்குதுன்னு யோசிக்காதீங்க....வடிவத்தில் ஒரு புது முயற்சி கையாண்டிருக்கிறேன்...... 
===================================================================================== 
-விவேக்பாரதி

சிட்னி முருகன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு

.

அபலையின் குரலில் பதிவு செய்த நாவல் - முருகபூபதி

.
அவிழ்க்கமுடியாத   முடிச்சுகள்   நிரம்பியதுதான்   வாழ்க்கை.
எழுத்தாளனுக்குள்    ஒளிந்திருந்த    உண்மைகளை அபலையின்   குரலில்   பதிவு செய்த  நாவல்
                                          
( அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  அண்மையில்  மெல்பனில்  நடத்திய  நாவல்  இலக்கிய அனுபவப்பகிர்வில்  சமர்ப்பித்த   கட்டுரை)


ஸ்ரிபன்  செவாக் (Stefan Zweig)  எழுதிய  Letter from an Un-known Woman  என்ற   குறுநாவலின்   தமிழ்  மொழிபெயர்ப்பு  அபலையின்  கடிதம்.
 Stefan Zweig    ஜெர்மனியில்  மூத்த  படைப்பாளி.  இவர்  1881  இல் வியன்னாவில்   பிறந்து  1942  இல்   தமது  60   வயதில்  பிரேசிலில் மறைந்தார்.
ஆனால் -  அது  இயற்கை  மரணமல்ல.  அவரும்  அவரது மனைவியும்  நஞ்சருந்தி  தற்கொலை    செய்துகொண்டதாகவே இந்நாவலை   தமிழுக்கு  வரவாக்கிய  இலங்கையின்  மூத்த படைப்பாளி    செ.கணேசலிங்கன்   இந்நூலின்   முதல்  பதிப்பில்  1965 இல்   பதிவு செய்துள்ளார்.
அதன்பிறகும்  இந்த  நாவல்  இரண்டாம்  பதிப்பில் வெளியாகியிருக்கிறது.   இந்தப்படைப்பாளிபற்றிய  பல சுவாரஸ்யமான   தகவல்களையும்  துயரமான  செய்திகளையும் நீங்கள்    Google   இல்    தேடிப்பார்க்கலாம்.
அவர்   மன  அவஸ்தைக்குள்ளாகி  விரக்தியின்  விளிம்பிற்குச்சென்று மன  அழுத்தத்தினை   குறைப்பதற்கு  எடுக்கும்  மருந்தை   அளவுக்கு அதிகமாக   உட்கொண்டே   மரணித்துள்ளார்.  அவரது  மருந்தே அவருக்கு  விஷமாகியிருக்கிறது  என்ற  சோகச்செய்தி பதிவாகியிருக்கிறது.

மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல் 24 .01. 15



தமிழ்  மொழி -  கல்வியில்,  ஊடகத்தில்,  படைப்பிலக்கியத்தில் எவ்வாறு  உருமாற்றம்  அடைகிறது -  ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள்,    இலக்கியப்படைப்பாளிகளிடத்தில்  தமிழ்மொழி உரைநடையில்   நிகழும்  மாற்றங்கள்  தொடர்பான  விரிவான கலந்துரையாடல்   விக்ரோரியா  மாநிலத்தில்  மெல்பனில் MORWELL   என்னும்   இடத்தில்  அமைந்துள்ள  திறந்த வெளிப்பூங்காவில் நடைபெற  ஏற்பாடாகியுள்ளது.
தற்பொழுது   கோடை  விடுமுறை  காலம்  என்பதனால்  தமிழ் கற்பிக்கும்   ஆசிரியர்கள்,   ஊடகங்களில்  எழுதும்  பேசும் -  ஊடகவியலாளர்கள்,   மற்றும்  படைப்பிலக்கியவாதிகளின் கருத்துக்கள்    சங்கமிக்கும்  கலந்துரையாடலாக  வெளிஅரங்கில் ஒழுங்கு    செய்யப்பட்டுள்ள  இந்நிகழ்ச்சி  எதிர்வரும்  24-01-2015 சனிக்கிழமை  முற்பகல்  11  மணிக்கு    MORWELL    என்னுமிடத்தில் திறந்தவெளிப்பூங்காவில்   நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில்    இலங்கையின்  மூத்த  இலக்கிய  விமர்சகரும் ரூபவாஹினி  ஒளிபரப்பு  கூட்டுத்தாபனத்தின்  தமிழ்  ஒளிபரப்பு சேவையின்   முன்னாள்   பணிப்பாளரும்  வீரகேசரி  பத்திரிகையின் முன்னாள்   செய்தி  ஆசிரியருமான    திரு. வன்னியகுலம் உரையாற்றுவார்.    அவரது  உரையைத்தொடர்ந்து  கலந்துரையாடல் இடம்பெறும்.
திரு. வன்னியகுலம்,    ஈழத்து    புனைகதைகளிற்   பேச்சு  வழக்கு, புனைகதை    இலக்கிய    விமர்சனம்   ஆகிய   நூல்களின்   ஆசிரியராவார்.
 மேலதிக   விபரங்களுக்கு  திரு. லெ.முருகபூபதி -  04166 25 766

சிட்னியில் நடந்தேறிய அஞ்சலிப் பகிர்வு நிகழ்வு

.



சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வந்த இலக்கிய ஆளுமைகள்அமரர் காவலூர் இராசதுரை, அமரர் எஸ்.பொ என்றழைக்கப்படும் எஸ் பொன்னுத்துரை மற்றும் கனடா வாழ் ஈழத்துக் கல்வி அறிஞர், எழுத்தாளர்அமரர் பொ.கனகசபாபதி  ஆகியோர் குறித்த அஞ்சலி நினைவரங்கு நேற்று ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 
நடந்தேறியது. இந்த நிகழ்வை சிட்னியில் வாழும் இலக்கிய ஆர்வலர்கள் ஒருங்கமைத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கான மண்டப வசதியையும், தேநீர், சிற்றுண்டி வசதியையும்
Mayura Function Centre அரங்க நிர்வாகத்தினர் ஏற்படுத்தி உதவியிருந்தனர்.

போரினாலும் இயற்கை அநர்த்தங்களாலும் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கான அஞ்சலியைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு.நீர்வை பொன்னையன், திரு.வசீ ராஜதுரை, திருமதி டாக்டர் பொன் அநுரா, மற்றும் திரு.நிக்கல்ஸ் ராஜநாயகம் ஆகியோர் செய்திருந்தார்கள்.

உயர்திணை இலக்கிய சந்திப்பு 25.01 2015

.

 uyarthinai - logo

இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

நீண்ட மாதங்களின் பின்பான சந்திப்பு.

மீண்டும் ஒரு வருடத்தைத் தாண்டி இருக்கிறோம். புதிய வருடம் ஒன்றின் ஆரம்பத்தில் நின்றபடி கடந்த வருடத்தைத் திரும்பிப் பார்க்கையில் சொல்லக்கூடிய நிகழ்வுகளாக பல புதிய முகங்களின் அறிமுகங்களையும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள் பற்றிய மேலதிக புரிதல்களையும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரை சந்திக்கின்ற வாய்ப்பும் தனித்துவமான உரையாடல் களங்களையும் வலுவான இலக்கியப் பிணைப்பையும் தந்த ஒரு வருடமாக கடந்த வருடம் அமைந்திருந்தது.அதிலும் குறிப்பாக தனபாலசிங்கம் ஐயா அவர்களின் பிரசன்னமும் அவர் எழுப்பிச் சென்ற அலைகளும் கடந்த வருடத்தின் முக்கிய பாகமாய் இருந்தன. சுமார் 25 பேருக்கு மேல் கலந்து கொண்ட திரு சத்தியநாதன் அவர்களின் பரிசு பெற்ற சிறுகதை பற்றிய விமர்சன சந்திப்பு பல எழுத்தாளர்களைச் சந்திக்கப் பண்ணிய வெற்றி நிகழ்வாகவும் கடல்கடந்த; மாநிலம் கடந்த எழுத்தாளர்களை ஒன்றுகூட்டிய நிகழ்வாகவும் அமைந்திருந்தது.

விழுதல் என்பது எழுகையே…பகுதி 33 -எழுதியவர் திரு.சக்திதாசன் டென்மார்க்

.
“வடிவா யோசிச்சு முடிவெடுங்கோ!  ஓ …. ஓ
எனக்கு இன்டைக்குள்ள முடிவு தெரிஞ்சால்தான் நல்லது.  நாளைக்கு சீட்டு தொடங்குது!
காசைப்பற்றி நீPங்களேன் யோசிக்கிறீங்கள் !                                                             இந்த மாதம் தரத்தேவையில்லையென்றுதானே சொல்லுறன். என்ர தாச்சி காசு தானே அதை ஆறுதலாக தாங்கோ ஒரு பிரச்சனையுமில்லை.
பேந்தும் பார் ….  இதுக்கெல்லாம் நான் வட்டி வாங்கினால் நான் என்ன உழைச்சு சந்திரமண்டலத்திலயா வீடு வாங்கப்போறன் !
நீங்கள் கனநாளா என்னையும் சேருங்கோவென்டு கேட்டதாலதான் உங்களுககு ஒரு துண்டு வைச்சிருந்தனான்
வாறீங்களோ இல்லையோ என்கிறதை இன்டைக்கே எனக்கு சொல்லிப்போடுங்கோ ?
’உங்கை நாலைஞ்சு பேர் இப்பவும் கலைக்கினம்.’ கண்டவையையும் போட எனக்கு விருப்பமில்லை பதினைஞ்சு துண்டில இன்னும் இரண்டு தான் இருக்குது 

இலங்கைச் செய்திகள்


ஆட்சியை தக்கவைப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கு இறுதி நேரத்தில் சூழ்ச்சி

மர்மமான சிறிய ரக விமான மீட்பு: அருகில் இருந்த நாமலின் வாகனமும் கைப்பற்றல்

அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சுவா­ரஷ்ய சம்­ப­வங்கள்

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன் : பரிசுத்த பாப்பரசர்

இதயத்தை கிளித்த இன்னல்களுடன் நீங்கள்: மடு அன்னை சக வாழ்வை அளிப்பார்: பாப்பரசர்

தீர்வு காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார் : ஜோன் கெரி

இலங்­கை­யுடன் நெருங்­கிய உற­வு­களை பேண விரும்­பு­வ­தாக பிரித்­தா­னியா அறி­விப்பு

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும


ஆட்சியை தக்கவைப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கு இறுதி நேரத்தில் சூழ்ச்சி

12/01/2015 ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக தமது ஆட்­சி­யினை தக்கவைத்­துக்­கொள்ள இரா­ணுவ, அர­ச அதி­கா­ரங்­களை இறு­தி­வரை சட்­ட­வி­ரோ­த­மாக பயன்­ப­டுத்­திய குற்­றத்­திற்காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­ம் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.


ஸ்ரீ ஷியாமலங்கன் இசையமைத்த பாடல் வெண்மேகமே

.

சிட்னியின் இளம் கலைஞரான ஸ்ரீ ஷியாமலங்கன்  இசையமைத்த பாடல் வெண்மேகமே

அவுஸ்திரேலியதமிழ் ஆசிரியர் மாநாடு 2015 25 01 15

.

தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு! பாடும்மீன் - சு.சிறீகந்தராசா

.
தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல.  பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே  வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் - விமல் அரவிந்தன்.

.
அவுஸ்திரேலியா  மரபு  இதழில்  எழுத்துச்சித்தர்  எஸ்.பொ.வின்  நனவிடை தோய்தல்
           மரபு   ஆசிரியர்   விமல்   அரவிந்தன்.


(அவுஸ்திரேலியா  மெல்பனில்  நடைபெற்ற   நினைவரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  உரை)
எஸ்.பொ.  என  அழைக்கப்பட்ட  எஸ்.பொன்னுத்துரை   அவர்கள் இலங்கையிலிருந்து  அவுஸ்திரேலியா  சிட்னிக்கு   வந்து  இறுதியில் சிட்னியிலேயே  மறைந்துவிட்டவர்.
ஆனால் - அவர்   என்றைக்கும்  மறையாத  சொத்தை  எமக்கு விட்டுச்சென்றுவிட்டார்.
இங்கு   அவருக்கும்  எனக்கும்  இடையே  தோன்றிய  நட்பையும் அதற்கும்  அப்பால்  நீடித்த  உறவையும்  சாட்சியமாகக்கூறும்  ஒரு படைப்பு   இலக்கியத்தையே   தந்துவிட்டுத்தான்  அவர் விடைபெற்றுள்ளார்.
ஆம்.  1990   ஆம்   ஆண்டளவில்  மெல்பனில்  ஒரு  இலக்கியச்சிற்றேடு  நடத்தவேண்டும்  என்ற   எண்ணம்  எனது மனதில்   துளிர்விட்டது.  அக்காலப்பகுதியில்  எஸ்.பொ.  சிட்னிக்கு வந்து  அங்கே  தனது  மகனுடன்  வசிக்கிறார்  என  அறிந்தேன். அவரை   ஒரு  எழுத்தாளராக  கேள்விப்பட்டதைத்தவிர  வேறு  எதுவும்  எனக்கு  அப்பொழுது  தெரியாது.
சிட்னிக்கு  நான்   சென்றிருந்தபொழுதுதான்  அவரை  நேரில் சந்தித்தேன்.   அவர்  இலங்கையில்  நீண்ட  காலம் இலக்கியத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்.
அத்துடன்   இலக்கிய  இதழ்களில்  ஈடுபட்ட  அனுபவமும்  அவருக்கு இருப்பது   தெரியும்  என்பதனால்  மெல்பனில்  ஒரு  இலக்கிய சிற்றேட்டை  நடத்தவிருக்கும்  எனது  விருப்பத்தை   அவரிடம் தெரிவித்தேன்.     அவருடன்  உரையாடிக்கொண்டிருப்பதே  சுகமான அனுபவம்.    பல  சுவாரஸ்யமான  விடயங்களை   நகைச்சுவையுடனும்   அங்கதச்சுவையுடனும்  சொல்லி  உரையாடலை   கலகலப்பாக்குவார்.

சென்னை புத்தக சந்தையில் மலேசியன் ஏர்லைன் 370

.
சென்னை புத்தக சந்தையில் வெளியாகும்
டொக்டர்  நடேசனின்  புதிய சிறுகதைத்தொகுதி 
               மலேசியன்    ஏர்லைன்  370
   கருத்துக்களையும்   அனுபவங்களையும் வெளிக்கொணரும்    கதைகள்
                                                   முன்னுரை    
                                           - தெளிவத்தை ஜோசப் -  இலங்கை


ஒரு  கால்  நூற்றாண்டுக்கு  சற்றுக் கூடுதலாகவே  கால்நடை  வைத்தியராக  அவுஸ்திரேலியாவில்  பணியாற்றும்  திரு.நோயல் நடேசன் அவர்கள்  எழுத்துத்துறையுடன்  அதே  ஆண்டு காலம்  மிக  நெருக்கமாக இணைந்து   பணியாற்றுபவர்.
'திடீரென   நிகழ்ந்த  விபத்தினால்    பேசமுடியாமற்போன  சிறுவனைப்போன்று   நானும்  எனது  வாழ்விடத்தில்  நடந்த  சம்பவங்களை   வெற்றுத்தாள்களில்   கிறுக்கி  வைத்திருந்தேன்.  பதினைந்து  வருடங்களுக்கு    முன்'   - என்று  தனது   எழுத்தின்  தோற்றம்  பற்றிக் குறிப்பிடுகின்றார்   நடேசன்.  (வண்ணாத்திக்குளம் -  நாவல் - முன்னுரை).
2003  இல்  15  வருடங்களுக்கு  முன்பு    என்றால்  1988  என்று  ஆகிறது.   கால் நூற்றாண்டுக்கு  மேலாக   எழுத்து  இலக்கியம்  பத்திரிகைத்துறை    என்று அனுபவம்  கொண்டுள்ள  இவர்  தனது  அனுபவங்களை    எழுத்து  வடிவில்  நூல்களாக   மற்றவர்களுடன்  பகிர்ந்து  கொண்டுள்ளார்.
வண்ணாத்திக்குளம்   (தமிழ் - ஆங்கிலம்) – நாவல்
உன்னையே   மையல்கொண்டு  (தமிழ் - ஆங்கிலம்) –  நாவல்
அசோகனின்   வைத்தியசாலை  - நாவல்
வாழும்   சுவடுகள் (2 தொகுதிகள்)   அனுபவப்பதிவுகள்
இந்த  ஐந்து  நூல்கள்  மூலம்  இலக்கிய  வாசகர்களுடன்  தனது அனுபவங்களைப்   பகிர்ந்துகொண்டுள்ள  நடேசனின்  ஆறாவது  நூலாக வரும்   இந்த  நூல்  அவருடைய  சிறுகதைத்  தொகுப்பு.  ஆறாவது  நூல் என்றாலும்   இது   அவருடைய  முதல்  சிறுகதை  நூல்  என்பது குறிப்பிடக்கூடியது.
நாவலில்   தோன்றி    சிறுகதைக்கு  வந்ததுதான்  உரைநடையின்  வரலாறு. அந்த  வரலாற்றின்  அடிப்படையிலேயே  நாவலில்  ஆரம்பித்து   சிறுகதைக்குள்  வந்து  சேரந்திருக்கின்றார்  நடேசன்.

வேல்அன்பன் -சிறுகதை -எஸ். கிருஸ்ணமூர்த்தி

.
இது  பிறீஸ் பேண் தாய்தமிழ் பள்ளி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம இடம்பெற்ற சிறுகதை 

விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தது. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது.  ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.

வேல்அன்பன் யார் என்று கேட்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தமிழ் தெரியாது அல்லது நீங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டுக்குப்பிறகு இந்த உலகில் இல்லை என்ற அர்த்தம். இரண்டாயிரத்து பத்து காலப் பகுதியில் சில இணையத்தளத்தில் இவரது சில கதைகள்ää கட்டுரைகள், கவிதைகள் வந்தன. அந்தகாலட்டத்தில் பெருகிய நூற்றுக்கணக்கான இணையப் பதிவாளர்களில் இவரும் ஒருவர். அப்போது யாரும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இவர் எழுத்தாளர் அல்ல. இப்போது இவரின் படைப்பை எதிர்பார்த்து எல்லா இணையத்தளங்களும்  காத்திருக்கின்றன. இவர் என்னத்தை கொடுத்தாலும் கண்ணை  மூடிக்கொண்டு இணையங்கள் பதிவேற்றும். இவரது படைப்புக்கள்

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 34 எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்ததுஇ படித்ததுஇ வேலை பார்த்ததுஇ     யாவுமே இலங்கையில்த்தான்.
தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப்
பட்டதாரி.அத்தோடுஇ கல்வியியல் துறையில் டிப்ளோமாஇ சமூகவியல் துறையில்
டிப்ளோமாஇகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராகவும்இவட இலங்கை
புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ்இ இந்துகலாசார விரிவுரையாளராகவும்இ
 யாழ்ஃ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்இஇலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, 

உலகச் செய்திகள்


பிரான்ஸில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பாரிஸில் ஆர்ப்­பாட்டம்

குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு

எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது

மத்திய ஆபிரிக்காவில் படகு விபத்து: 100 பேரை காணவில்லை

பிரான்ஸில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பாரிஸில் ஆர்ப்­பாட்டம்
12/01/2015 பிரான்ஸில் 3 நாட்­க­ளாக இடம்­பெற்ற வன்­மு­றை­களில் 17 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் அந்­நாட்டின் தலை­நகர் பாரிஸில் பாரிய ஊர்­வ­ல­மொன்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. மேற்­படி ஊர்­வ­லத்தில் சுமார் 40 உல­கத் ­த­லை­வர்கள் வரை கலந்து கொண்­டுள்­ளனர்.


தமிழ் சினிமா




பலத்த எதிர்பார்ப்புக்கு பின்பு ஷங்கரின் பிரம்மாண்ட படமான ஐ இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் பிரிமியர் ஷோ வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நமக்கு அனுப்பிய விமர்சனம்.
சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் நாயகன் விக்ரம் பாக்சராக வருகிறார். இதே இடத்திற்கு நாயகி எமி ஜாக்சனும் 16 வருடத்திற்கு பின்பு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக எமியை சந்திக்கும் விக்ரம் மெர்சலாகி காதலில் விழுகிறார்.
எமி ஒலிம்பிக் மற்றும் டாப் நிறுவனங்களின் சர்வதேச மாடலாக இருக்கிறார். இப்படத்தின் வில்லனும் பிரபல மாடலாக உள்ளார். ஆனால் இவருக்கு எமியால் பல வாய்ப்புகள் தட்டிப்போகிறது. அதனால் அவரது எதிர்காலத்தை நாசமாக்க எண்ணுகிறார். இதற்காக அவரைப்பற்றி தவறான வீடியோக்களை பரப்புகிறார்.
அந்த சமயத்தில் தனது தந்தையின் ரசாயன தொழிற்சாலையில் கண்டுபிடித்த மருந்தின் மூலம் அழகை திரும்ப பெற எண்ணுகிறார். ஆனால் இந்த மருந்தை சோதனை செய்வதற்காக விக்ரமை செலக்ட் செய்கிறார்கள்.
இதனால் ஆணழகனாக மாறும் விக்ரமின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே பரபரப்பான இரண்டாம் பாதி.
ஷங்கர் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதவேண்டும். அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார். பிசிஸ்ரீராமின் ஒளிப்பதிவில் அகோர காட்சிகளை கூட அழகாக காட்டியுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். எமிஜாக்சன் அழகு பதுமையாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறார்.
படத்தின் மொத்த பலமும் விக்ரம் மட்டும்தான். இத்தனை வலிகளையும் ஒரு படத்திற்காக ஒருவர் என்றால் இந்தளவு சாத்தியமில்லை.
ஆணழகனாகவும் சரி, அகோரமாகவும் சரி ஒவ்வொரு அசைவிலும் நம்மை அசையவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.  
ஐ அழகு மட்டுமல்ல ஆபத்து!   
நன்றி  cineulagam