பிரிவாற்றாமை -கவிதை -ப.மதியழகன்


.





இறுகிய முகங்களுடன்
நகருகிறது புகைவண்டி
கையசைப்பில் தெரிகிறது
வலியும், வேதனையும்
சிறு கோடுகளாய்
மறையும் வரை
நெஞ்சைவிட்டு அகலவில்லை
அவள் முகம்
என்னையொத்த அலைவரிசை
உள்ளவரை பிரியும் போது
என்னில் பாதியை நான் இழக்கிறேன்
அவள் விட்டுச் சென்ற
கைக்கடிகாரம்
எனது இதயத் துடிப்பை
அதிகப்படுத்துகிறது

BREMEN இரவு பாடகர் -நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்


.
அண்மையிலே நான் ஜெர்மனியின் வடபகுதியில் இருக்கும் BREMEN என்ற நகருக்கு சென்றிருந்தேன். அழகிய நகரம் பலவற்றையும் பார்த்து இரசிக்க முடிந்தது. நகரத்தின் ஒரு புறத்தில் இருந்த மிருகங்களின் சிலை என்னை வியக்க வைத்தது. சிலை இதுதான் ஒரு கழுதை மேல் நாய் அதன் மேல் பூனை, அதற்கும் மேல் சேவல். இது என்ன வீட்டு பிராணிகளை இவ்வாறு சிலையாக அமைத்துள்ளார்கள் என  வினவ, விழக்கம் வந்தது. அவை “BREMEN பாடகர்” எனப்படுமாம்.

அது ஒரு பாரம்பரிய கதையின் அமைப்பே. ஒரு கழுதை உழைத்து ஓய்ந்துவிட்டது. வயோதியம் வந்து விட்டது. அதன் எஜமான் அதை வீட்டை விட்டே துரத்த திட்டம் போட்டார். இதை உணர்ந்த கழுதை தானாகவே வீட்டை விட்டு நீண்ட தூரம் போய்விட்டது. இனிமேல் வாழ்க்கையில் உடலால் உழைக்க முடியாது, அதனால் BREMEN நகர் போய் அங்கு நகர பாடகனாக வாழலாம் என முடிவெடுத்தது.

இலங்கைச் செய்திகள்

* வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ்

* பாதுகாப்புச் செயலாளர் உட்பட 12 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

* கிளிநொச்சி தொழிநுட்பக் கல்லூரிக் கட்டடங்கள் இரவோடிரவாக உடைப்பு



வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2011 பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

.
சிட்னியிலும் மற்றைய (அவுஸ்திரேலிய, நியூசிலாந்து) மாநகர்களிலும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் திறம்பட நடைபெற்றன.

இந்த வருடம் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் 6 மாநகர்களில் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு மாநகரிலும் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்த 3 மாணவர்கள் சிட்னியில் 02-10-11 அன்று நடைபெறவிருக்கும் தேசிய நிலைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். இத்தேசிய நிலைப் போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். இவ்வாறு 10 போட்டிகள் தேசிய நிலையில் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை, Darcy Road, Wentworthville இல் அமைந்துள்ள Darcy Road Public School மண்டபத்தில் நடைபெறும். நீங்களும் அங்கு வந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தப் போட்டியில் பங்குபற்றித் தமது திறமைகளைக் காண்பித்துப் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கவென ஒரு பரிசளிப்பு விழாவை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழைக்கின்றோம். இந்த விழாவிற்கு வருகை தந்து பரிசுபெறும் சிறார்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எமது பரிசளிப்பு விழா விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நேரம்: பி.ப. 4.00 மணி, ஞாயிற்றுக் கிழமை, 02-10-11 ம் திகதி

இடம்: Bowman Hall,  Campbell St, Blacktown

தொடர்ந்தும் எமது போட்டிகளில் உங்கள் உதவியை நாடி நிற்கின்றோம்.

உங்கள் வரவையும் ஆதரவையும் நாடி நிற்கும்

கலாநிதி. பிரவீணன் மகேந்திரராஜா
இணைப்பாளர்,
தமிழ் ஊக்குவிப்புக் குழு 2011

திரு. அ. தேவரன்ஜித்
போட்டி செயலாளர்,

தமிழ் ஊக்குவிப்புக் குழு 2011
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்







ஆலமரம் --தாளையடி சபாரத்தினம்


.


அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்தஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டிஇ விளிம்பில்லாத பானைஇஅடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள்இ தென்னம்பாளை – யாவும் அவளாகத்தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள்யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும்இ தோலினாலும் மாத்திரமேஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரானகாவலாளியுங்கூட...
காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச்சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில்நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் 

பேர்த் நகரத்தில் நடைபெறும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு

.
பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து , சிறிலங்காவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் , சிறிலங்காவில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும், பேர்த் நகரத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளுக்கான கூட்டத்தொடரின் போது நடைபெறும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.


பெயர் சூட்ட வேண்டாம். - அ.முத்துலிங்கம்


.
18 May 2011
President
Amnesty International
1, Easton Street,
London, WC1X0DW
U.K
மேன்மை தங்கிய ஐயா,
என்னுடைய பெயர் விசாலாட்சி கனகரத்தினம். என் விலாசத்தை எழுத முடியாது ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் நான் ஏழு தரம் இடம் மாறிவிட்டேன். நான் கடைசியாக தங்கிய இடம் முள்ளிவாய்க்கால். என் கணவர் குண்டு பட்டு இறந்த பிறகு நானும் மகனும் பிளாஸ்டிக் கூரை போட்ட ஒரு குடிசையில் வாழ்ந்தோம். நல்ல மழை பெய்யாவிட்டால், நல்ல காற்றடிக்காவிட்டால், நல்ல வெய்யில் எறிக்காவிட்டால், நல்ல குளிர் அடிக்காவிட்டால் இதை விட நல்ல வசிப்பிடம் எங்களுக்கு கிடையாது. ராணுவ டாங்கிகள் ஓடும்போது தரை அதிர்ச்சியில் சிலவேளை பிளாஸ்டிக் கூரை பறந்து போய்விடும். மற்றும்படிக்கு நல்ல குடிசைதான்.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 10


.
                                                                               
  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

அத்தியாயம் 10

வசைமொழிதல்


நாளாந்த வாழ்வின் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்ற நாட்டுப்பாடல்கள் மக்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் எழுந்தபோது ஏசுவதற்கும், திட்டுவதற்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சாபமிடுகின்றபோதுகூட பாட்டினாலேயே சபிக்கும் அளவுக்குக் கவிநயம் அந்தக் கடலோரத்து மண்ணிலே களிநடம் புரிந்திருக்கிறது.
வசைமொழிகளைக்கூட, இசைமொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள் அந்தமக்கள்.
அத்தகைய பாடல்கள் சில கீழே தரப்படுகின்றன.

வெள்ளைக்காரத் துரையின் வீட்டில், வேலைக்கிருந்த உள்ளுர்க்காரன் ஒருத்தனின், நடவடிக்கையால் வெறுப்படைந்த பெண்ணெருத்தி வசைசொல்லி ஏசுகிறாள்.

உலகச் செய்திகள்

* அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் உடல் சிதறிப் பலி

* ஐ.நா. அங்கீகாரத்துக்கான பாலஸ்தீனத்தின் கோரிக்கை

* நேபாளத்தில் உல்லாசப் பயணிகள் விமானம் விபத்து; 19 பேர் பலி

அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்


18 / 9//2011
அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் விமானக் கண்காட்சி நடந்தது. அப்போது 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற விமானங்களுக்கான பந்தயம் நடந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதில் விமானத்தின் உடைந்த பாகங்களின் சிதறல்கள் விழுந்ததில் விமானி உட்பட பந்தயத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கவி காளமேகம் (15-ம் நூற்றாண்டு) பாடல்கள்

.
ஒருவர் சிவனைக் குறித்து நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய்
கொழுந்தாவாய், நட்டமாவாய், நஞ்சாவாய் என ஒரு வெண்பாப் பாட
வேண்டும் என்று கேடடுக் கொண்டபோது பாடியது

நீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு
கூறுஆவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பாய் இனி.

முருகன் குறத்தியை மணந்தான் என்று சிவன் முதலானோர்
வருந்தியதற்கு வேடிக்கையாகப் பாடியது

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆஸி எதிர்ப்பு

.
22 /9/2011
லங்கையைப் பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரிலிருந்து நீக்க வேண்டுமென அவுஸ்திரேலிய செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆஸி அரசும் எதிர்க்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் விநாயகரை இழிவுபடுத்தும் விதத்திலான நாடகத்தை நடத்த ஏற்பாடு உலக இந்துக்கள் பெரும் அதிர்ச்சி

Tuesday, 20 September 2011

 Gaanapatiமெல்போர்ன்: அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இடம்பெறவுள்ள கலாசார விழாவில் இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில் ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவலால் உலகளாவிய ரீதியில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில் அக்டோபர் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா இடம்பெறவுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக அவுஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு "தி கணேஷ் வேர்சஸ் த தேர்ட் ரெய்க்' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.

இந்தியாச் செய்திகள்


இந்தியா, நேபாளத்தில் நில நடுக்கம்: 19 பேர் பலி


19/9/2011
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமை மையமாக வைத்து நேற்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிச்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்ததுடன் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது காணி உரித்துப் பதிவுகள்


 .

அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை (பிம்சவிய) வேலைத் திட்டம் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு.
நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையா ளர் நாயகத் திணைக்களம், பதிவாளர் நாய கத் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொருவரும் தத்தமது காணிக்கான உரிமை கோரும் விண்ணப்பத்தை கிராம சேவையாளர்களிடமிருந்து இலவசமாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்காது பெற்றுக் கொள்ள முடியும்.
வெளி நாடுகளில் உள்ளவர்கள் www.bimsaviya.gov.lk என்ற இணையத்தில் தமது விண்ணப்பங்களைப் பெற்றுத் தமது பிரதேச செயலருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். அத்துடன் வெளி நாட்டிலுள்ளவர்கள் தமது உறவினர் மூல மாகவும் கிராம சேவையாளர்களிடம் சமர்ப் பிக்கலாம். இதற்கு உரித்துத் தத்துவம் (Attorney power) தேவையில்லை.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் முன்னோடியாக ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டன. யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகம், கிளிநொச்சியில் கரைச்சி உதவி அரச அதிபர் பணிமனை, முல்லைத் தீவில் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் பணிமனை, மன்னாரில் முசலி பிரதேச செயலகம், வவுனியாவில் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பணிமனை ஆகியவற்றிலேயே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறிப்பிட்ட ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் தமது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவை தவிர்ந்த வட மாகாணத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் நவம்பர் மாதம் 20 ஆம் திக திக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

nantri:pon

தமிழ் சினிமா


.
* வெங்காயம்













* முதல் இடம்














* யுவன் யுவதி