மாமருந்தாய் வந்தமைந்த மாமணியே !




 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

        செம்பவள வாய்திறந்து 

           சிரித்துநிற்கும் உன்முகத்தை
        தினமுமே பார்த்திருந்தால் 
           சிந்தனையே தெளிந்துவிடும்
       வந்தநோ ஓடிவிடும்
            வலியனைத்தும் மறைந்திடுமே
       எந்திருவே உனையணைத்து
            என்னாளும் இன்புறுவேன் !

        முழுநிலவு வடிவான

           அழகுநிறை உன்முகத்தை
       முத்தமிட்டு முத்தமிட்டு
           மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
        கொழுகொழுத்த கையாலே
            குறும்புநீ செய்கைகையிலே
       ஒழுகிவரும் இன்பமதை
            உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

வாழ்வை எழுதுதல் : வீடு வாழ்விடம் மட்டுமல்ல, அதுவும் ஒரு கனவுதான் ! முருகபூபதி

துறவியாக வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை இவ்வாறு சொன்னாராம்:

     உனது பெயர் நிலைத்திருக்கவேண்டுமானால், திருமணம் செய்து  பிள்ளையை பெற்றுக்கொள். அல்லது உனது பெயரில் ஒரு வீட்டை வாங்கு அல்லது கட்டிக்கொள்.  இல்லையேல் ஒரு புத்தகமாவது எழுது.  இவற்றில் ஏதாவது ஒன்றைச்செய்.  நீ இறந்த பின்னரும் உனது பெயர் நிலைத்திருக்கும். “ 

விவேகானந்தர் சொன்ன மூன்று விடயங்களையும் நான் செய்திருக்கின்றேன்.  அவருடைய பெயரில் உருவாக்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் 1954 ஆம்  ஆண்டு விஜயதசமியின்போது முதல் மாணவனாக ( சேர்விலக்கம் -01 ) இணைத்துக்கொள்ளப்பட்டேன்.  அந்தப்பாடசாலைதான் மேற்கிலங்கையில் கம்பகா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்துக்கல்லூரியாகத் தற்போது  திகழ்கிறது. ( அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் இயங்கிவருகிறது. )

விவேகானந்தரை எனக்கும் பிடிக்கும்.  அவரது ஊருக்கு நூறு பேர் குறித்த சிந்தனையின் அடிப்படையில்தான் எழுத்தாளர் ஜெயகாந்தனும் ஒரு  நாவலை எழுதினார்.

வாழ்வை எழுதுதல் என்ற பத்தியை சில வருடங்களுக்கு முன்னர்  எழுதினேன்.  தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர்ந்து எழுதத் தவறிவிட்டேன்.   

இந்தப்பத்தியை  வீடு என்ற விடயத்தை முன்னிறுத்தியே  தற்போது நான் இதனை  எழுதுகின்றேன்.

எதிர்பாராதவகையில்  கடந்த 2024 ஆம் ஆண்டு, மெல்பன் மொனாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வலதுகாலை இழந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப்பின்னர் வீடு திரும்பும்போதுதான், எனது வீட்டின் நிலை மிகுந்த கவலையை அளித்தது.

வாசலில் நான்கு படிகள். வீட்டினுள்ளே சென்றால்,  குளியலறை ஒரு


  பகுதியில், கழிவறை வேறு ஒரு பகுதியில்,  குளியலறையில் நின்றோ -  அமர்ந்தோ குளிக்கமுடியாத நிலை.  மருத்துமனையிலிருந்து என்னை விடுவிக்கும்போது, எனது வீட்டின் நிலையை கேட்டறிந்த மருத்துவர்களும் தாதியரும்  எனது பிள்ளைகளிடம் “ அப்பாவை எங்கே அழைத்துச்செல்லப்போகிறீர்கள் ?  “எனக்கேட்டார்கள்.   நான் எனது வீடு பற்றிச்சொன்னபோது,   “ அங்கிருக்கும் நிலையில் நீங்கள் அங்கே செல்ல முடியாது.. “ என்றனர்.

எனது இரண்டாவது மகள் பிரியாதேவி, தங்கள் வீட்டின் கீழ் தளத்தில் குளியலறை -  கழிவறை இணைந்த படுக்கை அறை இருக்கிறது. அப்பாவை அங்கே வைத்து பராமரிக்க முடியும்  “ என்றாள்.

அதனையேற்றுக்கொண்டு என்னை மகள் வீட்டுக்குத்திரும்புவதற்கு அனுமதித்தனர். அதற்கு முன்னர், எனக்குத் தேவைப்பட்டவற்றை ( சக்கர நாற்காலிகள் உட்பட )  மகள் வீட்டுக்கே அனுப்பியதுடன், ஒருவரை அனுப்பி மகளின் வீட்டின் அமைப்பினையும் கண்டறிந்தனர்.

வாழ்க்கையில் மாற்றங்கள் வந்துகொண்டேயிருக்கும். இருப்பிடத்தில்,  கல்வியில், தொழிலில், திருமணத்தில், குடும்பத்தில்… இவ்வாறு மாற்றங்கள் வரும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு மனப்பக்குவமும் வேண்டும்.

பின்னாளில் நான் எனது காலை இழப்பேன் என முன்பே தெரிந்திருந்தால், மேற்சொன்ன வசதிகள் குறைந்த வீட்டை அன்று வாங்கியிருக்கமாட்டேன்.

நான் ஒன்றும் தீர்க்கதரிசியல்ல .  “ மாறாது இருப்பது மாற்றம் ஒன்றுதான்  “ எனவும் சொல்வார்கள். 

மனித வாழ்வில், தனிமை, இயலாமை, முதுமை, ஏழ்மை என்பவை மிகவும் கொடுமையானவை. எல்லாம் கடந்துபோகும் எனவும் சொல்வார்கள். அவ்வாறு கடக்கும்போது சந்திக்கும் நெருக்கடிகளை சமாளிக்க தன்னம்பிக்கைதான் தேவை.

இச்சந்தர்ப்பத்தில்  2001 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  அவர்கள் உடல்நலம் குன்றியிருந்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

அக்காலப்பகுதியில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக  அவரை  வைத்து இயக்கி முதல் மரியாதை                    ( 1985 )  திரைப்படம் வௌியிட்ட பாரதிராஜா சென்றிருந்தார்.

நோயினை விரட்ட உழைப்போம் (பாவகை: கலி மண்டில மண்டிலம்) - அன்பு ஜெயா

 

உழைப்பாலே இவ்வுலகில் உயர்ந்தோரும் பலருண்டே!

உழைப்போரை நெருங்காதே ஒருநோயும் உணர்வீரே!

பிழைப்பிற்கே உழைப்போரும் பெருமளவில் உள்ளாரே!

உழைப்பொன்றே உறுதியினை உடலுக்கும் தந்திடுமே!     (1)

 

வருமுன்னர் காத்திடுவீர் வாராமல் நோய்களுமே!

மருந்துகளும் தேவைதானே மாளாத நோயென்றால்!

அருமருந்தே உடற்பயிற்சி அறிந்திடுவீர் வாழ்வினிலே!

மருந்துடனே உடலுழைப்பும் மக்களைத்தான் காத்திடுமே!    (2)

 

தடுப்பூசி என்பதுவும் தவறில்லை உணர்வாயே!

அடுக்கடுக்காய் வருகின்ற அரியநோயும் அடங்கிடுமே!

எடுத்திடுவீர் தடுப்பூசி எதிர்த்திடவே நோய்களையே!

விடுபடுவோம், வெற்றியினை விளைத்திடுவோம் ஒன்றுபட்டே!  (3)

----------------------------

 

ஹைக்கூ கவிதை


-சங்கர சுப்பிரமணியன்.





மல்லிகை மலர்கள்
உதிர்ந்து மண்ணில் விழுகின்றன
மணம்பரப்ப மறப்பதில்லை

வரப்பில் நடக்கிறான்
சகதியில் விழுந்து நெளிகிறான்
மண்புழுக்கள் மடிகின்றன

கரைமோதும் அலைகள்
கரைக்கு வந்து செல்கின்றன
இருக்கத்தான் மனமில்லை

சிலந்தி வீடுகட்டுகிறது
பூச்சி வந்து சிக்குகிறது
வாழுமிடம் உயிரெடுக்கிறது

எதிர்வினை.

 

பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்!

மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர்  நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையை வாசிக்க விரும்பின் இணைப்பை அழுத்தவும்.  http://www.tamilmurasuaustralia.com/2025/03/blog-post_38.html#more

கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.

 

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்.

இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.

பேராசிரியர்சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச்சந்திப்பும், அல்பெர் கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்

 





வெண்ணிற ஆடை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் நீண்ட காலம் கோலோச்சியவர்


ஜெயலலிதா. அவர் நடித்த முதல் தமிழ் படமே'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற தணிக்கை சான்றிதழுடன் வெளி வந்த படம் என்பது சுவாரசியமான ஒரு விஷயமாகும்!


எம் ஜி ஆர் நடிக்கும் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுப்பேன் , புதுமுகங்களை போட்டு எடுக்கும் படங்களை கலரில் எடுப்பேன் என்று எம் ஜி ஆரை கடுப்பேற்றி படம் இயக்கிய ஸ்ரீதர் 1965ம் வருடம் புதுமுகங்களை நடிக்க வைத்து கலரில் தயாரித்து டைரக்ட் செய்த படம் வெண்ணிற ஆடை. பிற் காலத்தில் பிரபலமான பல நடிகர்கள் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.
 

காதலிக்க நேரமில்லை வெள்ளிவிழா படம், கலைக் கோயில் படு

தோல்விப் படம் இந்த இரண்டுக்குப் பிறகும் நட்சத்திர நடிகர்களை நாடிப் போகாமல் புது முகங்களோடு களத்தில் குதித்தார் ஸ்ரீதர். அமெரிக்கன் தூதரகத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், சட்டம் படித்து விட்டு நடிப்பில் நாட்டம் கொண்ட மூர்த்தி, நடனம் பயின்று விட்டு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி விட்டு , காதலிக்க நேரமில்லை படத்தில் தன்னை தவிர்த்த அதே ஸ்ரீதர் படத்தில் மீண்டும் நடிக்க வந்த நிர்மலா , நகைச்சுவை நடிகையாக நடித்து பின்னர் கவர்ச்சி நடிகையான ஆஷா என்ற சைலஸ்ரீ , நாடகங்களில் நடித்து விட்டு திரைக்கு வந்த மாலி இவர்கள் எல்லோருக்கும் இதுவே முதல் படம். ஆனாலும் ஒரு நட்சத்திர நடிகையாக , அரசியல் தலைவியாக, முதல் அமைச்சராக உருவான ஜெயலலிதாவுக்கும் இதுவே முதல் தமிழ் படமாகும்!

வெண்ணிற ஆடை படம் ஆரம்பிக்கப் பட்ட போது இதில் ஹீரோயினியாக நடிக்க முதலில் தெரிவானவர் ஹேமமாலினி. ஆனாலும் அவர் எடுப்பான தோற்றமின்றி மெலிந்திருந்ததால் ஸ்ரீதர் அவரை நீக்கி விட்டு ஜெயலலிதாவை தெரிவு செய்தார்.

பேராசிரியர்சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச்சந்திப்பும், அல்பெர் கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்


 



இலங்கைச் செய்திகள்

இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதை நோக்கிய பயணம் ; இலங்கை - ஜப்பானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையில் எந்த தடங்கலும் இல்லை ; இயக்குனர் தெரிவிப்பு

யோஷித்த ராஜபக்ஷ, டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை


இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

05 Apr, 2025 | 02:25 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 'நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு' (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு இணைந்ததாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

டிரம்பின் புதியவரி- பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை

பாலஸ்தீன துணைமருத்துவர்கள் படுகொலை - இஸ்ரேல் தெரிவிப்பதை நிராகரித்தார் உயிர் பிழைத்தவர்

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும்- ஆயத்தொல்லா கமேனியின் ஆலோசகர்

காசாவில் இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிப்பு - பெருமளவு பகுதி ஆக்கிரமிக்கப்படும் - இஸ்ரேல் அறிவிப்பு

மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப் - பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட விரும்புவதாக கருத்து



டிரம்பின் புதியவரி- பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எச்சரிக்கை

03 Apr, 2025 | 08:51 AM

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரிகளை அறிவித்துள்ளார்.

100 நாடுகளிற்கு டிரம்ப் வரிகளை விதித்துள்ளார்.இவற்றில் 60 நாடுகள் உயர் இறக்குமதி வரிகளை எதிர்கொள்கின்றன.சீனா, வியட்நாம், கம்போடியா மற்றும் இலங்கை  உட்பட பல ஆசிய நாடுகள் அதிக வரியை எதிர்கொண்டுள்ளன.

2025 பேர்த் பாலமுருகன் கோவில் வருடாந்த (விசுவாவசு ) மகோற்சவ விஞ்ஞாபனம்


 




சிட்னி முருகன் வருடாந்தத் திருவிழா

 





அன்பாலயம் - இளம் தென்றல் 05/04/2025