நான் துயரங்கள் சுமப்பவள் - C.Paskaran

 .
என் துயரங்கள் என் சந்தோசங்கள்
நான் மட்டுமே தாங்கிக் கொள்கிறேன்
ஒரு நாள்
நீ நானாக வேண்டும்
என் எண்ணங்களையும்
என் வேதனைகளையும்
ஒருகணம்
நீ சுமந்து  தள்ளாடுவதை
நான் பார்க்க வேண்டும்
அன்று உனக்குப் புரியும்
இவளின்
தினசரி வாழ்க்கை
அப்போதுகூட
நான் உனக்காக
கவலை கொள்வேன்
உன் துயரங்களை
பகிர்ந்து கொள்வேன்
உன்னைப்போல்
எதுவும் தெரியாதவனாய்
வாழ்ந்து கொள்ள மாட்டேன்

எங்கிருந்து எங்கே செல்கின்றோம்...? - முருகபூபதி

.
அவுஸ்திரேலியா - ஆஸ்திரேலியா - ஒஸ்ரேலியா - ஆசுத்திரேலியா -  இதில் எது சரி...?
பெற்றோர்களினதும்   பிள்ளைகளினதும்  போக்கு
எங்கிருந்து   எங்கே   செல்கின்றோம்...?
மெல்பன்   மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்    அவுஸ்திரேலியா தமிழ் கலாசாலை      நடத்திய  அயலகத்தமிழாசிரியர்  பட்டமளிப்பு  விழா
     
                               
சமூகப்பிரச்சினைகளின் ஊற்றுக்கண் குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வாக்கிலிருந்து எங்கள் தமிழும் தமிழர் வாழ்வும் பற்றி மாத்திரமல்ல ஏனைய மொழிகள் பேசும் இனத்தவர்களின் சமூகப்பிரச்சினைகளையும் பார்க்கலாம்.
நாம் இன்று இந்த ஒன்றுகூடலில் சந்திப்பதிலிருந்து எமக்குள்ள பதட்டம் எமது திருப்தி எமது முயற்சி ஆதியன புரிகிறது.
அமெரிக்கா ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை அமைக்க ஆறு கோடி  வெள்ளிகள் தேவையென்றும் இன்னும் இரண்டு வருடகாலத்தில் அங்கு தமிழ்த்துறை தொடங்கிவிடும் என்றும் ஒரு செய்தி  வெளியாகியிருக்கிறது.
இந்தச்செய்தியின் பின்னணியிலிருந்து இன்று நாம் அவுஸ்திரேலியா மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கூடியிருக்கின்றோம்.
இந்த பட்டமளிப்பு விழாவை ஒழுங்குசெய்த

கலைக் கோலம் 2015 - 13/09/2015


கடந்த பாராளுமன்றத் தேர்தலும், இரட்டைக் குடியுரிமையும்

.
 -      சட்டத்தரணி (பாடும்மீன்) சு.ஸ்ரீகந்தராசா


தேர்தல் அமைதியாக நடந்து முடிவடைந்துவிட்டது. தெரிவுசெய்யப்பட்டவர்களில் சிலர் அமைச்சர்களாகிவிட்டார்கள். பலர் அமைச்சராகும் கனவுகள் தகர்ந்துவிட்ட நிலையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அலுங்காமல் குலுங்காமல் தேசியப் பட்டியலின் மூலம் நுழைய ஆயத்தமானவர்களில், ஏமாற்றமடைந்தவர்களில் சிலர் ஏதாவது மாற்றம் வராதா என்று இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கட்சிகளின் தலைமைகளுக்கு எதிராக கருத்துப்போர் தொடுத்துக் களம் இறங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் அண்மையில் வந்துகொண்டிருக்கும் சில பத்திரிகைச் செய்திகளின்படி,  சிலருக்கு இடிபோல வந்து, நிம்மதியைக் டுக்கின்றதா
இரட்டைக் குடியுரிமை விடயம் என்று எண்ண வைக்கிறது. செய்திகளில் சிலரைச் சம்பந்தப்படுத்திக் கேள்விக்குறிகளோடு கூறப்படும் விடயங்களில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது ஒரு புறம் இருக்க, விடயப் பொருள் பற்றிய விளக்கத்தினை அறிந்துகொள்வதில் அக்கறை செலுத்துவது அனைவருக்கும் பயனுள்ளது. இதுதான் விடயப் பொருள். இரட்டைக் குடியுரிமை!

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரை அமுலில் இருக்கும் இலங்கை அரசியல் அமைப்பிற்கு இவ்வருட ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட
19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டது. சனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தலே 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும், மேலும் சில விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அரசியல் அமைப்பின் 91 ஆவது பிரிவுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும், சிறப்பாக இரட்டைக் குடியிரிமையுள்ளோர் பற்றிய விடயமும் ஒன்றாகும்.

இலங்கைச் செய்திகள்


தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு

கே.பி.யை கைதுசெய்­வ­தற்கு போதிய சாட்­சி­யங்கள் இல்லை

நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து

தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு

31/08/2015 இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து கொண்டனர்.


வசந்தகானம் 2015 - சிட்னியில் 12.09.2015

.
ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !அ.முத்துலிங்கம், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

.


'சின்ன சம்பவம்’ என ஒன்றுமே இல்லை. சோதனைக் குழாயில் தற்செயலாக ஒட்டியிருந்த பூஞ்சணத்தில் தொடங்கிய ஆராய்ச்சிதான், பென்சிலின் மருந்து கண்டுபிடிப்பில் முடிந்தது. அதே மாதிரிதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
'வைதேகி ஹெர்பெர்ட்’ என்ற அமெரிக்கர், தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வைதேகியைப் பாராட்டிய ஒரு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன் அவரைச் சந்திக்க நேர்ந்தது.
2,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அப்போது எழுந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜானகிராமன் தொலைபேசியில் வைதேகியை அழைத்து
'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என்றார். வைதேகிக்கு அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொன்னார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ என்றார்.

மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 11 

நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே


வரலாற்றுச் செதுக்கலில் நாளை
வரமாய் எம்பெயர் செப்பப்படும் – மொழிக்கலப்பில்
குறளாறாய் தமிழ் குறுமாயின் குறுகுமாலை
குவலயத்தில் பெயர் கருக்கப்படும்
மலரும் முகம் பார்க்கும் காலம் – வரலாற்றில்
புலரும் புதுத்தமிழ் என்று கூறும்
வரவு வைத்து ஓடும் ஆறே வரலாறு – தமிழில்
உறவு வைத்து ஓடுவதே எம் பேறு
பொதிகையிலே புதுமையுடன் பிறந்த மகள் – பூவுலகில்
பதிகையென தன்பாதம் பதித்த இவள்
அகத்தியன் கரம்பிடித்து கைவீசி ஒளிர்ந்த அகல் – அன்னிய மொழி
தரித்திரியன் தாழ்பணிய மறுத்திடுவாள் மங்கையிவள்
கங்கைமுதல் கடாரம் வரை வெற்றிவாகை சூடினாள்
இமயம்முதல் குமரிவரை முத்தமிழாய் ஆடினாள்
இதயமெங்கும் இன்னுயிராய் உணர்வுகளில் ஏறினாள் – புது
கமலமுகம் மலருமொரு காலமதைத் தேடுவாள்
சங்கம் வைத்து சாகரமாய் வளர்ந்தவளே
சங்காரம் சகயமென சமயமனம் சமைத்தவளே
ஓங்காரப் பொருளாய் „ஓம்’ என்று ஒலித்தவளே – எதிரிமொழிகள்
அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே
நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே.

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 10 

செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி


ஒவ்வொரு கனவும் மெய்யாகும்
இந்த விதைகள் உறங்கப் போவதில்லை
நோடி நேரம்கூட இவை
சாத்தியமற்றதாக இருக்கப் போவதில்லை
சூழ்நிலைகள் நமக்கு எதிராய் இருக்கையிலும்
சுழலும் சிந்தனையில் புது வழிகள் பிறந்திடட்டும்
தன்மேல் உள்ள நம்பிக்கையில் தானே
மலைகள்கூட இங்கு நகர்ந்திருக்கு
வலிதாண்டி விதி மாற்றும் விடியலுக்கு மட்டும்
வடிகட்டி திறமையை தேர்ந்தெடுக்க முடியும்
கற்களை மிதித்து மற்றவரை மதிப்பவர்க்கு மட்டும்
நிமிர்ந்து நின்று பணிவோடு வெற்றி ஏந்த முடியும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
சிதறுண்டு போகும் நம் வழித் தடைகள்
விழிவழியே இரசித்திடும் பரிணாமம்
இனி கையசைவிலே வசமாகும் காலம்
கீழே விழுகின்ற நொடிகள் யாவும்
மேலே காணும் இமயத்துக்காய் இருக்க வேண்டும்
இணைந்தே உலகில் சாதனைகளை செதுக்கிச் செல்வோம்
வரலாற்றின்; செதுக்கலில் நம் பெயர் நாளை செப்பப்படும்.
செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி

ஆச்சியை நம்பினால் கை விடமாட்டா! யாழில் தள்ளாடும் வயதிலும் கச்சான் விற்கும் பாட்டியின் தன்னம்பிக்கை

.

“ஆச்சியை நம்பினால் அவா கைவிடமாட்டா” என்று அடிக்கடி கூறும் 74 வயதான மூதாட்டி கந்தசாமி நாகம்மா தொல்புரத்தைச் சேர்ந்தவர். இவர் நீண்ட காலமாகத் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் கச்சான் வியாபாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் தான் வேறு ஒரு ஆலயங்களுக்கும் கச்சான் வியாபாரம் செய்யச் செல்வதில்லை எனவும், தான் 33 வயது முதல் இந்த ஆலயத்தில் கச்சான் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மூதாட்டி தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற ஆலய மகோற்சவத்திற்குச் சென்றிருந்த போது மேற்படி மூதாட்டியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவருடன் கதைத்த போது அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களாவன,
எனக்கு ஆறு பிள்ளைகள். மூன்று ஆம்பிளப் பிள்ளையள், மூன்று பொம்பிளைப் பிள்ளையள். அவர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டார்கள்.

மதுர கானம் 2015, மெல்பேர்னில் 13.09.2015தமிழர்களும் எதிர்க்கட்சித்தலைமைப் பதவியும்

.

" டிங்கிரி  டிங்காலே  மீனாட்சி... டிங்கிரி  டிங்காலே... உலகம்போற  போக்கப்பாரு  தங்கமச்சில்லாலே...."
 தந்தை வந்தார் - தளபதி  வந்தார்  - தேசியத்தலைவர் வந்தார்   -   இவர்கள்  வழியில்    அய்யா  வந்துள்ளார்.
                                                அவதானி


" சிங்கத்தமிழர்  நாமென்றால்  சிங்கக்கொடியும்  நமதன்றோ..."  என்ற பாணியில்  யாழ்ப்பாணத்தில்  பொது மேடையில்  ரணில் விக்கிரமசிங்காவுடன்  இணைந்து  சிங்கக்கொடியை  தூக்கி  அசைத்த இராஜவரோதயம்  சம்பந்தன்  அய்யா  அவர்கள்  எட்டாவது பாராளுமன்றத்தில்   எதிர்க்கட்சித்தலைவராகியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகியிருக்கிறார்.
ஈழத்தமிழர்களுக்கு   முன்னர்  தந்தையும்  (செல்வநாயகம்)  பின்னர் தளபதியும்   (அமிர்தலிங்கம்)  அதன்  பின்னர்  தேசியத்தலைவரும் (வேலுப்பிள்ளை  பிரபாகரன்)  கிடைத்தது போன்று  தற்பொழுது தமிழர்களுக்கு   ஒரு  அய்யா  வந்துள்ளார்.
சம்பந்தன்  அவர்கள்  இலங்கை  அரசியலில்  ஒரு  பழுத்த  மூத்த அரசியல்வாதி.   இதுவரையில்  ஒருதடவைதான்  அவர்  தேர்தலில் தோற்றவர்.    மூவினமக்களும்  செறிந்துவாழும்  ஈழத்தமிழரின் தலைப்பட்டினம்   என்று  ஒரு  காலத்தில்  வர்ணிக்கப்பட்ட திருகோணமலையிலிருந்து   மீண்டும்  பாராளுமன்றம்  வந்தவர். பாராளுமன்ற   ஜனநாயகம்  நன்கு  தெரிந்தவர்.
அய்யாவின்  வயது  எண்பதையும்  கடந்துவிட்டது. இலங்கைப்பாராளுமன்றில்   வயதால்  மூத்த  தலைவர்களில்  இவரும்  ஒருவர்.
தேர்தல்  நடந்து  இரண்டு வாரங்களுக்கு  மேலாகவும்  யார் எதிர்க்கட்சித்தலைவர்...?  என்ற  இழுபறி  நீடித்து,  இறுதியில்  அது தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கே   கிடைத்துவிட்டது.   தேர்தலுக்கு முன்னரும்  தேர்தல்  முடிந்து  அடுத்த  சில  நாட்களும் எதிர்பார்க்காத  முடிவு  இது.

உலகச் செய்திகள்


ஊழல் குற்றச்சாட்டு; மலேசிய பிரதமருக்கு எதிராக போராட்டம்

பாரிஸ் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ : இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ள கண்கலங்க வைக்கும் புகைப்படம்: சிரியா யுத்தத்தின் பிரதிபலிப்பு


ஊழல் குற்றச்சாட்டு; மலேசிய பிரதமருக்கு எதிராக போராட்டம்

31/08/2015 ஊழல் குற்­றச்­சாட்­டிற்கு ஆளா­கி­யுள்ள மலே­சிய பிர­த­ம­ருக்கு எதி­ராக பொலி­ஸாரின் தடையை மீறி அந்­நாட்டு தலை­ந­கரில் போராட்டம் நடந்­து­வ­ரு­கி­றது.

வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் நாகர்கள் உருவாக்கிய கிணறு, நாகர்கல் கண்டுபிடிப்பு

.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாக அரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சி.பத்மநாதன், மற்றும் தொல்லியல் ஆய்வுக்குழுவினரால், வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
   
இதுபற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில், இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதையரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர், தென்னிந்தியாவின் சோழ மண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுகப் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழிமார்க்கமாக குடியேறினர்.

பதேர் பாஞ்சாலி: சூறையை எதிர்த்து நிற்கும் சிறு குடில்‏

.
சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி வெளியாகி 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் முழுமையான திரைப்படம் குறித்த உரையாடலின் ஏதாவது ஓரிடத்தில் தன் முகம் காட்டித்தான் செல்கிறது அந்தப் படம். பொருளாதார ரீதியான பல சிரமங்களுக்குப் பின்னர் அரசின் நிதி உதவியில் வெளியானது அந்தப் படம் என்பது முரண்நகையே. வணிகப் படங்களின் வெற்றிக்குக் கைகொடுத்த வங்காளத்தின் பெருவாரியான ரசிகர்களால் அந்தப் படமும் ரசிக்கப்பட்டது என்பது இந்தியத் திரைப்பட ரசனையின் வளர்ச்சிதான். இந்தியத் திரைப்பட வரலாற்றின் செறிவான பாதையில் அப்படம் ஒரு கைகாட்டியாக இன்றளவும் நின்றுகொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘டைம்’ பத்திரிகையின் தலைசிறந்த 100 படங்கள் பட்டியலில் அது இடம்பெற்றிருந்தது. பதேர் பாஞ்சாலியின் பெருமை குறித்து இப்போதுகூட எழுதுகிறோம். ஆனால், படம் வெளியானபோது சென்னையின் திரையரங்கில் இரண்டு நாட்கள் மட்டுமே ஓடியது என்று அறியும்போது மனதில் கசப்பின் நெடி மண்டுகிறது.
காலத்தின் கதை

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.
தவிர்க்க முடியாத காரணத்தால் இவ்வாரம் தொடர் வெளிவரவில்லை அடுத்த வாரம் தொடரும் 

துணிவு - ரா. ந. ஜெயராமன் ஆனந்தி

.


துணிந்தவனுக்கு  
கடலின் ஆழம்கூட  
ஒரு சாண் வயிறு  
துணிவு இழந்தவனுக்கு
மண்பானையின் ஆழம்கூட
கடலின் ஆழம் என்பான்...  

துணிந்தவனுக்கு
தலையழுத்து ஒரு தடையில்லை..  
துணிவு இழந்தவனுக்கு
அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான்  

துணிந்தவனுக்கு
ஒரு முறை மரணம்..
துணிவு இழந்தவனுக்கு
நித்தம் நித்தம் மரணம்..  

தவறை களையெடு  
சேமிப்பை விதைபோடு  
நீயும் துணிந்தவன்தான்
வாழ்க்கையென்னும்
பக்கத்தில்  

துணிந்தவன்
வீழ்ந்தாலும் எழுவான்..
துணிவு இழந்தவன்
எழுந்து எழுந்து
வீழ்ந்துகிடப்பான்..  

அகக்கண் திறங்கள்  
துணிவு பிறக்கும்
புறக்கண் துறந்துவிடுங்கள்..
ஆக்கம் பிறக்கும்..  

ஏன் என்ற கேள்வி
பிறக்காவிடில்
பிறக்காமலேயே
இறந்துவிடுகிறது
துணிவு!

ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!

.

சென்னையில் ஏராளமான மரம், செடி - கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான். நடந்து செல்லும் பாதைகள் எங்கும் பூக்களும் முதிர் இலைகளும் மரப்பட்டைகளுமாக உதிர்ந்து கிடக்கும். காலடிகளைக் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கும். பட்டுப்பூச்சிகள் பாதையினூடே கடந்து செல்லும். அன்றைக்கு ஒரு காரியமாக அந்தப் பள்ளி பக்கம் சென்றபோது, ஏதோ யோசனையில் ஆட்பட்டவனாக ஆலமரத்தடியில் உலவிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஒரு மணி நேரம் இருக்கும். வேலை முடிந்து திரும்பும்போதும், அவன் அங்கேயே இருந்தான். மரத்தடியில் உட்கார்ந்து கைகளில் அழகழகான கருப்பு - சிவப்பு ஆல விதைகளைக் குவித்து உருட்டிக்கொண்டிருந்தான். பள்ளி நேரம் அது என்பதால், ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அந்த மரத்தடிப் பள்ளி முதல்வரின் அறையின் ஜன்னல் பார்வைத் தூரத்தில் இருந்தது. இதனிடையே அவனைக் கடந்த இரு ஆசிரியர்கள் அவனிடம் ஏதோ பேசிவிட்டு, கடந்து சென்றனர். பிறகு, மரத்தடியில் இரு முரட்டு வேர்களின் நடுவே ஏதோ சாய்வு நாற்காலியால் வசதியாகப் படுத்துக்கொள்வதைப் போல அவன் சரிந்துகொண்டான். ஆர்வமிகுதியில் விசாரித்தபோது, மூடு சரியில்லை என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு வந்த கதையைச் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தால், “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது; பிள்ளைகள் ஒரு நியாயமான விஷயத்தை நம்மிடம் கொண்டுவரும்போது அதற்குக் காது கொடுப்பதுதானே நியாயம்?” என்றார்கள்.

மனசாட்சியை உலுக்கும் துயரம்‏

.

துருக்கி கடற்கரையில் சிரியாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் அய்லானின் உயிரற்ற உடல் கரையொதுங்கிக் கிடந்த புகைப்படம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்தப் புகைப்படம் பரவி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்கிறது - இந்தப் பரந்த உலகத்தில் உயிர் பிழைத்து வாழ ஒரு பச்சிளம் குழந்தைக்கு இடம் இல்லையா? மனிதாபிமானம் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதா என்று.
 உள்நாட்டுப் போர் நடக்கும் சிரியாவில் இருந்து தப்பி, ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் அகதிகளின் நிலையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போன்று சொல்கிறது, சிறுவன் அய்லானின் உடலை அலைகள் தழுவிச் செல்லும் அந்தப் புகைப்படம்.
 சிரியாவைச் சேர்ந்த அப்துல்லா குர்தி, தன் மனைவி, மகன்கள் காலிப், அய்லான் ஆகியோருடன் துருக்கியில் இருந்து ஐரோப்பாவை நோக்கி மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகில் சென்றபோது, படகு கவிழ்ந்து அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
 இதில் கரையொதுங்கிய அய்லானின் உடல்தான் இப்போது மத்திய கிழக்கு நாடுகளின் அகதிகள் பிரச்னையின் தீவிரத்தை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.
 அப்துல்லா குர்தியின் உறவினர்கள் கனடாவில் இருந்தும், அவர்கள் அப்துல்லாவின் குடும்பத்துக்கு பொறுப்பேற்பதாகச் சொல்லியும், அவர்களது சட்டப்பூர்வ குடியேற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனடா, இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அப்துல்லாவின் விண்ணப்பம் சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று காரணம் சொல்கிறது. 

தமிழ் சினிமா


தனி ஒருவன்


தமிழ் சினிமாவிற்கு என சில வெற்றிக்கூட்டணிகள் இருப்பார்கள். அவர்கள் இணைந்தாலே சக்சஸ் தான். அப்படி ஒரு சக்சஸ் கூட்டணி தான் ஜெயம் ரவி மற்றும் அவருடைய அண்ணன் ராஜா.
இதுநாள் வரை ரீமேக் படங்கள் மட்டும் எடுத்து வந்த ராஜா முதன் முறையாக தன் சொந்த சரக்கை தனி ஒருவனாக இறக்கியுள்ளார். மேலும், எப்போதெல்லாம் தன் தம்பிக்கு வெற்றி தேவையோ, அந்த நேரம் ராஜா தான் அவர் கண்முன் நிற்பார். இவர்கள் கூட்டணியில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் இன்று திரைக்கு வந்துள்ளது.
கதைக்களம்
நல்லவன் -கெட்டவன் இது தான் எப்போதும் தமிழ் சினிமாவிற்கான பார்முலா. இதில் கெட்டவனை அடித்து நல்லவன் கிளைமேக்ஸில் வெற்றி பெறுவது தான் எழுதப்படாத முடிவு.
இந்த பழைய கதைக்களத்தை இன்றைய ட்ரண்டிற்கு ஜெயம் ரவி-அரவிந்த் சாமியை புகுத்தி ராஜா ருத்ரதாண்டவர் ஆடியிருக்கிறார். சிறு வயதிலேயே கிரிமினல் மைண்டில் இருக்கு அரவிந்த் சாமி, ஏழையாக பிறப்பது தவறு, ஆனால், ஏழையாக இறப்பது தான் தவறு என்ற குறிக்கோளில் அரவிந்த் சாமி இந்த சமூகத்தில் பெரும் புள்ளியாக வளர்கிறார்.
அப்படியே அவருக்கு மாறாக நேர்மை, கடமை என ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி, சிறுசிறு குற்றத்தை கூட தேடி தேடி அழைந்து துப்பாக்கி விஜய் ஸ்டைலில் ஒரு பெரிய குற்றத்தை கண்டிப்பிடிக்கின்றார்.
இந்த குற்றங்களுக்கு எல்லாம் மூலக்காரணம் அரவிந்த் சாமி என தெரிந்து அதன் பின் இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் தனி ஒருவன்.
படத்தை பற்றிய அலசல்
ஜெயம் ரவிக்கு பேராண்மைக்கு பிறகு ஒரு சிறந்த படம் என்றால் மிகையல்ல, ஒவ்வொரு காட்சிகளிலும் சிக்ஸர் அடிக்கின்றார். அவருடன் வரும் நண்பர்கள் கணேஷ் வெங்கட் ராம் மற்றும் சிலரும் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரம், பிறகு அவர் சோர்ந்து இருக்கும் இடத்தில் ‘உன்னால முடியும் பாஸ்கர்’ கதாபாத்திரமாக மாறி முறுக்கேற்றுகிறார்.
படத்தின் வசனம் ஒவ்வொன்றும் சைக்காலஜி படித்தால் தான் புரியும் போல, ’நாமே எல்லோரும் பேப்பர்ல வணிக செய்திய தான் படிக்கிறதே இல்லை, ஆனால், அந்த பக்கத்தை வைத்து தான் மற்ற எல்லா பக்கங்களுக்கு செய்தியே கிடைக்கின்றது’ என பல இடங்களில் ‘அட’ என்று சொல்ல வைக்கின்றது.
இவை அனைத்திற்கு மேல் அரவிந்த் சாமி...ரியல் கம் பேக் என்று சொல்லலாம், அடுத்த வருடம் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு விருதில் இவர் பெயரை எழுதிவிடலாம்.
க்ளாப்ஸ்
ஜெயம் ரவி- அரவிந்த் சாமி டாம்&ஜெர்ரி சண்டை, ஹிப் ஹாப் தமிழனின் பின்னணி இசை, விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் அனைத்திற்கும் மேல் திரைக்கதை. தம்பி ராமையாவின் ஒன் லைன் காமெடி ரசிக்க வைக்கின்றது. ராம்ஜி ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக படம்பிடித்து அழகாக காட்டியுள்ளது.
பல்ப்ஸ்
பாடல்கள் நன்றாக இருந்தாலும் சேஸிங்கில் இருக்கும் போது கடைசி டூயட் தேவையா? சில லாஜிக் மீறல்கள் மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் ஜெயம் ரவி தனி ஒருவனாக வந்தாலே கலக்குவார், இதில் அண்ணனுடன் என்றால் செஞ்சுரி தான்.
ரேட்டிங். 3.5/5   நன்றி cineulagam