மரண அறிவித்தல்

திரு சண்முகம் ஆதீஸ்வரன்



திரு சண்முகம் ஆதீஸ்வரன் சித்திரை 2ம் திகதி காலை 10:15 மணியளவில் இறைபதம் எய்தினார்.

இவர் திரு திருமதி செல்லையா சண்முகம் அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சிவகுருநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகனும், உமாதேவி அம்மையாரின் அருமைக் கணவரும், திருமதி அபிராமி குமரதேவனின் அருமைத் தந்தையும், சாந்தராஜா குமரதேவனின் பாசமிகு மாமனாரும், மாயா தேவி, ஆயன் லிங்கம், மயிலன் ராஜா ஆகியோரின் பாசமிகு அருமைப் பேரனுமாவார்.


காலம் சென்ற சரோஜினிதேவி, சிவகாமசுந்தரி, அருணாசலம், மங்கையர்கரசி, சாந்தாதேவி, காலம் சென்ற ஆனந்தமகேசன், ஆனந்தராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். இவர் காலம் சென்ற ஏகாம்பரநாதன், காலம் சென்ற சோமசுந்தரம், காலம் சென்ற புவனேஸ்வரி, காலம் சென்ற மகேந்திரன், திரு சாந்தலிங்கம், காலம் சென்ற நாகசோதி, திருமதி பிரேமளா, திரு சிவநேசராஜசிங்கம், காலம் சென்ற சிவானந்தராஜசிங்கம், மகாதேவி அம்மையார், சிவஞானராஜசிங்கம், சிவயோகராஜசிங்கம், சிவசொரூபராஜசிங்கம், சத்தியதேவி அம்மையார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
தற்போதைய நாட்டின் நிலைக்கேற்ப, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் கிரியைகள் நடைபெறும். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு: குமரன் 0400 684 966


Please join us as we perform his last rites on Sunday 5th April, 9.30am AEST by clicking on the link below. 
https://www.oneroomstreaming.com/view/authorise.php?k=1585825209168161 

If the link above does not work, please try the following:
Step 1: Click here https://oneroomstreaming.com/family-and-friends
Step 2: Enter the following details
Password - SMHSEN

Please feel free to share this message with family and friends.

With love,
Uma, Api & family


மரண அறிவித்தல்

.
             சரஸ்வதி கணபதிப்பிள்ளை



சிவகுலவீதி உரும்பிராய் தெற்கு மற்றும் செவென்கில்லை  வதிவிடமாகக் கொண்ட  திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் காலமானார். இவர் காலம் சென்ற கணபதிப்பிள்ளை சுப்பையா  அவர்களின் அன்பு மனைவியும் , லலி  (கொழும்பு) , Dr .ஸ்ரீரஞ்சன் (நீர்கொழும்பு ), காந்தன்  ( France )
குமுதினி (சிட்னி) நிமலினி (canada ) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல்  01.04.2020 புதன் கிழமை அன்று இறுதிக்கிரிகைகளின் பின் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குமுதினி அன்சலம்
Phone - 02 9622 9749

NSW அவசர கால செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து செய்தி (COVID-19)


அறிவுரைகள்





நன்றி தினகரன்



கோவிட்-19 பற்றி பேராசிரியர் பீட்டர் பியட்


தமிழில்: சிவதாசன் | ஆலோசனை: Dr. கனக சேனா, MD
பேராசிரியர் பீட்டர் பியட் பற்றி…
ஈபோலா வைரஸைக் கண்டுபிடித்த இணை விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் பயட் லண்டன் ஸ்கூல் ஒஃப் ஹைஜீன் அண்ட் ட்றொப்பிக்கல் மெடிசின் ( London School of Hygiene and Tropical Medicine) பலகலைக்கழகத்தில் கற்பித்து வருபவர். உலக சுகாதார நலன்களில் மிகவும் அக்கறையோடு செயற்படும் ஒருவர். உலகின் மிகப் பிரபலமான ‘வைரஸ் வேட்டைக்காரர்களில்’ ஒருவர் என வர்ணிக்கப்படுபவர். 1976 இல் ஆபிரிக்க நாடான சாயரின் (Zaire) மக்களைக் கொன்று குவித்த கிருமி ஈபோலா வைரஸ் எனக் கண்டுபிடித்த இருவரில் ஒருவர். ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட UNAIDS நிறுவனத்தை நிறுவி அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராக, 1995-2008 வரை செயற்பட்டவர். உலகப் புகழ்பெற்ற TED நிறுவனம் நிகழ்த்தும் வருடாந்த நிகழ்வான TEDMED மாநாட்டில் அதன் பணிப்பாளர் ஜே வாக்கர் அவர்களால் கொறோனாவரஸ் பற்றி டாக்டர் பயட்டிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் தந்த பதில்கள் கீழே:



கே: வைரஸ் என்றால் என்ன?
ப: வைரஸ் என்பது, புரதத்தினாலான வெளிப்போர்வையைக் கொணட RNA அல்லது DNA மரபணுக் குறியீடு (code).
கே: வைரஸ்கள் எவ்வளவு தூரம் அறியப்பட்டவை?
ப: அவை எங்கும் பிரசன்னமானவை. எல்லா வைரஸ்களையும் ஒன்றுசேர்த்தால் அவற்றின் எடை, உலகத்திலுள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், பக்டீரியாக்கள் அத்தனையும் சேர்த்த எடையைவிட அதிகமானது. மனிதருடைய 10% மான மரபணுக்கள் வைரஸிலிருந்து பெறப்பட்டதுதான். உண்மையில் நாம் வாழும் இக் கிரகம் வைரசினுடையதுதான்.

தனித்திருப்போம் விழித்திருப்போம் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


நிலைபெறுமா றெண்ணிநிற்க
நீள்பிவியில் விரும்பிடுவோம்
அலைபாயும் மனமதனை
அடக்குதற்கு துணிந்திடுவோம்
நிலையில்லா பொருளையெலாம
நினைப்பினின்று அகற்றிடுவோம்
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திடுவோம்  !                                                                     

ஏகாந்தம் இனிதென்று                                                                         
 எப்போதோ இயம்பியதை                                                                          
வாழ்நாளில் கடைப்பிடிக்க                                                                    
வாய்க்கும்நிலை வந்திருக்கு                                                              
தனித்திருப்போம் விழித்திருப்போம்                                                     
தலையிடிகள் ஓடிவிடும்                                                                       
நாமெடுக்கும் எச்சரிக்கை                                                                
நாட்டையுமே காத்திடுமே  !                                                               

சுத்தமே சோறிடும்                                                                        
என்பதனை மனமிருத்தி                                                                   
நித்தமுமே சுத்தமதை                                                                          
நிரந்தரமாய் ஆக்கிடுவோம்                                                                
பயங்கொள்ளல் ஆகாது
எனச்சொன்ன பாரதியை                                                                      
உளங்கொண்டு செயற்பட்டால்                                                           
கலங்கல்நிலை தெளிவாகும் !

அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் அதி கூடிய கொரோனா வைரஸ் நோயாளிகள் NSW 'லேயே அதிகம் !


இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் ------------ பிரமபுத்திரன்


இப்போதே  நீபோனால் நிம்மதி அடைவார்களாம் ------------
கண்ணுக்குத்   தெரியாத    கனமான   சோதனை
காலத்தின்   துன்பம்     கொரோனா  வைரசுக்கு
அறிவியல்  அறிஞர்கள்   மருத்தவர்கள்  மேற்பார்த்து
அவசரமாய்   அனுப்பும்   அவசிய    மடலொன்று------
உலகெல்லாம்  அதிர்ந்து  மக்களெல்லாம்  முடங்கி  
பொழுதெல்லாம்  நினைந்து  பேச்செல்லாம்  நீயாகி
கனவிலும்  கலங்கி   நினைவிலும்   பயந்து
வரப்போறாய்  நீயென்று  வாசல்கள்  மூடி
வருவோரை  தவிர்த்து  ஏக்கத்தில்  தவித்து
வெறுப்போடு  வீட்டுக்குள்  தவிப்போடு  இருந்து
எழுதுகிறேன்  ஓர்மடல்  ஏற்பாயோ  தெரியவில்லை  
கைதொட்டால்  மெய்பட்டால்  உடைகண்டால்  உடன்தொற்றி  
காய்ச்சலுடன்  வருவாயாம்  யாக்கைநோக   வைப்பாயாம்
வரவேண்டாம்  என்றுனக்கு  வலுவாக  சொன்னாலும்
வந்தெமக்கு  கொடுந்துயரை  தந்தேதான்  போவாயாம்
கவனமாக  இருக்கட்டாம்  கதைக்கவும்  வேண்டாமாம்
மெலிதான  இருமல்  சிறிதாக  கேட்டாலும்  
ஓடுகிறோம்  மருத்துவரை  தேடுகிறோம்  அங்கே
திரைக்கப்பால்  அவரும்  இஞ்சலை  நாங்களும்
“இசுக்கை”ப்பில்  இணைந்து  இம்சையைக்   கூறினால்
காய்ச்சல்   குளிருடன்  களைப்பு   மேலிட
மூச்சுத்   திணறி   நெஞ்சும்   நோகுதெனில்
வந்தது   நீதானாம்   வாழ்க்கையே   போச்சுதாம்
செத்தாலும் கண்ணிலை காட்டாமல் எரிக்கினாமாம்  
இளையோர்  முதியோர்  இருவரிலும்  அதிவிருப்பாம்
வந்திட்டால் மீட்சியில்லை வானகம்தான் செல்வோமாம்
வகைவகையாய்  கதைகள்    தொகைதொகையாய்  உலாவுகிது  எல்லோரும்  வைத்தியர்தான்  புத்திசொல்லும்  பெரியவர்தான்
“வாட்சப்பு”  “யுரியூப்பூ”  இன்னும்பல  வழிகள்தேடி  
சுடச்சுடவே  செய்திகளை   சுற்றிச்சுற்றி  பரப்புகினம்
கடைப்பிடிக்க  மறுக்கினம்  மற்றவையை   முடுக்குகினம்
ஐயையோ  கொடுமையென்று  ஆண்டவனை  தேடினால்
அங்கேயும்  நீதானாம்  ஆதிக்கம்  செய்கின்றாய்
எட்டத்தே  நின்று  கையாட்டிக்   காட்டி
சென்றிடுக  அப்பிடியே  சேதியிது   நல்லதென
கும்பிடாது  திரும்பி  கூட்டமில்லா வீதியில்
உள்ளிமல்லி இஞ்சிகாயம் உண்டால்நீ  வாராயென்று
கடைப்பக்கம் தேடியோடி  அடிச்சுபிடிச்சு  உள்ளேபோய்   கட்டிப்புரண்டு  சண்டையிட்டு கடைக்குள்ளே  தேடினால்  அங்கேயும்    ஒன்றுமில்லை அவலமே என்றெண்ணி

இலங்கைச் செய்திகள்


இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!

தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்

வடமாகாண ஊரடங்கின்போது பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்

மிருசுவில் 8 கொலை; தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு

கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்!




இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!



இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!-1st Sri Lankan Coronavirus Dead Registered-60 Year Old Dead at IDH

- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்

- அடையாளம் 113; இன்று 7 பேர் அடையாளம்

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

உலகச் செய்திகள்


டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று!

வூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு

ஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது


டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு



கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பவுண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020; அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு-Tokyo Olympic 2020 Postponed for Next Yearசர்வதேச ஒலிம்பிக் குழுவிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இதனை உறுதியாகக் கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் தமது விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றது என, பிரிட்டிஷ் ஒலிம்பிக் சபை கூறியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியன தாங்கள் இவ்வருட ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ளன.  நன்றி தினகரன் 

படித்தோம் சொல்கின்றோம்: அஜித் போயகொட எழுதிய ” நீண்ட காத்திருப்பு” விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்தவரின் வாக்குமூலம்! - முருகபூபதி


“ சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம். “
கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. 
சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான்.
  இலங்கைத் தீவினைச்சுற்றியிருந்த இந்து மகா சமுத்திரத்தில் ஊர்ந்தும் விரைந்தும்கொண்டிருந்த சாகரவர்த்தனா  கப்பல் பற்றி அறிந்திருப்பீர்கள். அது மன்னார் கடல் பரப்பில்  1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பாரிய சேதத்திற்குள்ளாக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளின் வசமும் மன அழுத்தங்களுடன்  சில வருடங்கள்  வாழ்ந்திருக்கும் இவர்,  விடுதலையாகி வந்தபின்னரும்  இலங்கை அரசின் பாராமுகத்தினாலும் புறக்கணிப்புகளினாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தவர்.
 அனைத்து அழுத்தங்களிலுமிருந்து விடுதலை பெறவேண்டுமானால்,  அந்த அழுத்தங்களினால் பெற்ற அனுபவங்களை பதிவுசெய்யவேண்டும்.  அதனால், நீண்ட மௌனத்தின் பின்னர் அஜித் போயாகொட மனம் திறக்கிறார்.
அவர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதுகிறார் சுனிலா கலப்பதி.
A Long Watch என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலின் தமிழாக்கமே நீண்ட காத்திருப்பு.  தமிழில் வரவாக்கியவர் தேவா.  இந்நூலை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தேவா,  சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  ஏற்கனேவே இவர் மொழிபெயர்த்த குழந்தைப்போராளி ( சைனா கெய்ரெட்சி எழுதியது ) நூல் பற்றியும் எனது படித்தோம் சொல்கின்றோம் தொடரில் எழுதியிருக்கின்றேன்.

மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் உலர் உணவுப்பொதிகள் விநியோகம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், மலையகத்தில் இயங்கும் தன்னார்வத் தொண்டியக்கமான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம், வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஊரடங்கு வேளையில் வெளியே செல்லமுடியாத மக்களின் நலன்கருதி, ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் இந்தப்பணிகளை முன்னெடுத்துவருகிறது.
நேற்று முன்தினம்   சனிக்கிழமை நுவரேலியா மாவட்டத்தில் வர்த்தக அன்பர் ஒருவரின் அனுசரணையுடன் கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொதிகளை மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதன் உறுப்பினர்களும் தொண்டர்களும் சுமார் ஆயிரத்து ஐநூறு வறிய குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கினர்.
அண்மையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊடாக வறுமைக்கோட்டின்  கீழ் வாழும் நுவரேலியா மாவட்ட மாணவர்கள் சிலருக்கும் அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  ஆதரவில் கல்வி வளர்ச்சிக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 29 - முருகபூபதி


ரடங்கு  உத்தரவு தளர்த்தப்பட்ட வேளையில், அபிதா, அருகிலிருக்கும் மரக்கறி கடைக்கு விரைந்தாள். கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில்  வாங்கவேண்டியதை வாங்கிவிடவேண்டும் என்பதில் துரிதமாக இயங்கினாள்.
வீடு அமைதியாக உறங்கியது. லண்டனிலிருந்து வந்துள்ள சண்முகநாதன் இன்னமும் லண்டன் நேரத்தில் உறங்குகிறார். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிவரையும்  கொரோனோ வைரஸ் பற்றி பேசிக்கொண்டிருந்த ஜீவிகாவும் மஞ்சுளாவும் சுபாஷினியும்  காலை எட்டுமணியாகியும் இன்னமும் துயில் எழவில்லை.
வீட்டிலிருந்திருக்கவேண்டிய கற்பகம் ரீச்சர், தற்காலிகமாக இடம்பெயர்ந்து மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்குப்போய்விட்டாள். ஜீவிகாவின் பெரியப்பா திடுதிப்பென வந்திருக்காவிட்டால், கற்பகம் ரீச்சர் இங்கேயே இருந்திருப்பா.  பாவம், நிலவுக்கு அஞ்சி பரதேசம் செல்வதுபோன்று அவ போனது அபிதாவை வருத்தியது.
எதிர்பாராமல் வந்துவிட்ட கொரோனோவும் லண்டன் காரரும் இந்த வீட்டின் அன்றாட நிகழ்ச்சிநிரலையே மாற்றிவிட்டனர்.  கற்பகம் ரீச்சர் தன்னுடன் இடைவெளியோடு பழகியிருந்தாலும், எடுத்தெறிந்து பேசியிருந்தாலும், அவள் மீது அபிதாவுக்கு பரிவுதான் வந்தது.
மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டில் எப்படி இருக்கிறாவோ…தெரியவில்லை. தினமும் இரவில் அவவின்  பாதங்களுக்கு பூசிவிட்ட இலுப்பெண்ணெயையும் புறப்படும் அவசரத்தில் விட்டுவிட்டுப்போய்விட்டாவே.
அபிதா,  மரக்கறி வாங்கும் பேக்கையும் எடுத்தவாறு, கற்பகத்தின் அறையிலிருந்த இலுப்பெண்ணெய் போத்திலையும் கையோடு எடுத்துக்கொண்டு வாசல் கதவை சாத்திவிட்டு கேட்டைத்திறந்து வெளியே வந்தாள்.
வீதியில் சனநடமாட்டம் இருந்தது. முன்னாலிருந்த கோயிலில் மணியோசை கேட்டது. ஒலிபெருக்கியில் பெங்களுர் ரமணி அம்மாள் பாடிக்கொண்டிருந்தார். இரவு ஊரடங்குவேளையில் அங்கே அர்த்த சாமப்பூசையும் நடக்கவில்லை. 
மங்களேஸ்வரி ரீச்சரின் வீடு அந்த வீதி முடிவடையும் முச்சந்தியிலிருந்து பிரியும் ஒழுங்கையில் இருக்கிறது என்பது அபிதாவுக்குத் தெரியும்.  மரக்கறி கடையை கடந்துதான் அங்கு செல்லவேண்டும்.  அக்கடை  வாசலில்  ஒருசிலர்தான்  நின்றனர். ஊரடங்கு மீண்டும் வருமுன்னர் சனம் அங்கு கூடிவிடும்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -06


 “கண்டனத்திடையே வளரும் பிள்ளை
  கண்டனஞ் செய்யவே பழகிக்கொள்ளும்”
ளவியல் தேவைகளைக் காலமறிந்து செய்த ஆச்சி, எமது உளவியல் தேவைகளையும் தவறாது நிறைவுசெய்தார்.
        “ குறு குறு நடந்து சிறுகை நீட்டி
         இட்டும் தொட்டும் துழவியும்….
வளருகின்ற பருவம் முதலாகச் சிறாருக்கு உள்ளது உளவியல் தேவை. அன்பான அணைப்பும் ஆதரவான பேச்சும் இன் முகமும் இவைபோன்ற இனிய அனுபவங்களும் சிறுவருக்கு அவசியம். அவை மட்டுமல்ல,
சகித்து வாழுஞ் சூழல் சிறாருக்கு அவசியம். சகிக்கும் சூழலில் வளரும் பிள்ளை தானும் சகித்து வாழும். பொறுமையை  கடைப்பிடிக்கும் என்பது  உளவியல் உண்மை. பாதுகாப்பு உணர்வுடன் வளரும் பிள்ளை தன்னம்பிக்கை பெற்று வாழும் எனவும், அன்பும் ஆதரவும் பெற்று வளரும் பிள்ளை அகிலத்தை நேசித்து வாழப்பழகும் என்பதுவும் மனித நேயத்தை மதிக்கும் என்பதுவும் உளவியல் தகவல்கள்.
இதை எல்லாம் இன்று நாம் படித்தறிகிறோம். அறிந்தும் கூட நடைமுறையிற் கடைப்பிடிப்பதற்கு வழியின்றி அல்லற்படுகிறோம். தேவையின்றி உரத்துப்பேசுதல் சிறுவர்  மனசில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் படித்த யாவரும் இன்று அறிவர்
ஆயினும், இன்றைய அவசர உலகில் அவை அலட்சியப்படுத்தப்படுகின்றன. இந்த உளவியல் தத்துவங்களை ஆச்சி படித்தறிந்தது கிடையாது. நகரவாக்கமும் நவீனத்துவமும் பெறாத எமது கிராமத்திலே, அன்று இந்த உளவியல் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர், எமது ஆச்சி.
வளரும் சிறாரை வழிப்படுத்துவது அவர்கள் வாழுகின்ற சூழல். அந்தச் சூழல் மொழியையே அவர்கள் உள்வாங்கித் தமதாக்கிக்கொள்கின்றனர். சூழலில் அவதானிக்கும் நடத்தையே  பிள்ளையின் நடத்தையாகிறது.  பிள்ளை செவிமடுக்கும் சொற்களஞ்சியமே நாளடைவில் பிள்ளையின் சொற்களஞ்சியம் ஆகிறது. எடுத்ததற்கெல்லாம் கண்டித்தால்….
                      கண்டனத்திடையே வளரும் பிள்ளை
                      கண்டனஞ் செய்யவே பழகிக்கொள்ளும்
இன்று, தொழிலுக்குச் சென்ற தாயும் தந்தையும் எப்போது வீடு திரும்புவர் என்ற அங்கலாய்ப்புடன் பிள்ளை வீட்டிற் காத்திருக்கிறது. வந்தவுடன், இன்முகத்தையும் இன்சொல்லையும் எதிர்பார்க்கிறது. ஆனால், அப்பெற்றோர் என்ன செய்கிறார்கள்…? தம் வீட்டுக்கு வரும்போது  தொழில் நிலையச் சுமைகளையும் சுமந்துகொண்டு வீடு வருகிறார்கள். வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாக அம்மனச்சுமைகளை இறக்கும் சுமைதாங்கிகளாகப் பிள்ளைகள் அகப்படுகின்றார்கள். யார் மீதோ உள்ள சுமைகளை எல்லாம் இறக்கி வைத்தற்குப் பிள்ளைகளைச் சுமைதாங்கிகள் ஆக்கும் பெற்றோர் பலர்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம் ஆக்கம் : ஞா.டிலோசினி கிழக்குப் பல்கலைக்கழகம்


 “ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது  பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம்.
அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது (பிரேமா, இரா., பெண்ணியம் - அணுகுமுறைகள் : 13).
புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.
பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக  அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.

இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி


இலங்கையின் மூத்த  முற்போக்கு  படைப்பாளி   நீர்வைபொன்னையன் கடந்த  மார்ச் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார்.
உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது.
இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார்.  இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும்  அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார்.
இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே.  அவர் பற்றி முன்னர் நான் எழுதிய குறிப்புகளை அவர் மறைந்திருக்கும் இவ்வேளையில் அவரது நினைவுகளாக மீண்டும் இங்கு பதிவுசெய்கின்றேன்.



இலங்கையில்  தமிழ்  கலைஇலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்காவலூர்திக்குவல்லைநீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்உடப்பூர்மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர்.
இவ்வாறு  ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளி.
வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  - கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.
இலங்கை  தமிழ்  இலக்கிய  ஊடகத்துறையில்  நீர்வை  என்றே அழைக்கப்படுபவர்.    இலங்கை  சுதந்திரம்  பெறுவதற்கு  முன்பே  1947   ஆம்  ஆண்டளவில்  இடதுசாரிச்சிந்தனைகளினால்  கவரப்பட்ட  நீர்வை,   வடபகுதியில்  கம்யூனிஸ்ட்  கட்சியுடன்  தம்மை இணைத்துக்கொண்டு  பல  போராட்டங்களிலும்  கலந்துகொண்டவர். இலங்கை  இடது  சாரி  இயக்கத்திலும்  முற்போக்கு இலக்கியத்துறையிலும்   இவர்  இரண்டாம் தலைமுறையைச்சேர்ந்தவர்   என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.
இவரின்   முதலாவது  சிறுகதை   பாசம்.  யாழ்ப்பாணம்   ஈழநாடு இதழில்    வெளியானது.    இதுவரையில்    சுமார்  100  சிறுகதைகளையும்   எழுதியிருப்பவர். 
நீர்வைபொன்னையன்   காலத்து  எழுத்தாளர்கள்    என்று   சிலரைக் குறிப்பிடலாம்.    இளங்கீரன்எஸ்.பொன்னுத்துரை,   கே. டானியல், அகஸ்தியர்,    டொமினிக்ஜீவா,   செ.கணேசலிங்கன்   முதலான  பலர் இவரைப்போலவே   இடதுசாரி    சிந்தனைகளுடனேயே    இலக்கிய இயக்கத்தில்    ஈடுபட்டவர்கள்.
இவர்கள்   மத்தியில்  பல்வேறு  கருத்துப்போராட்டங்கள் நிலவியபோதிலும்    முரண்பாடுகளை    நாகரீகமாக வெளிப்படுத்தியவர்கள்.    அதனால்  அவர்களின்  பின்னர்  உருவான அடுத்த  தலைமுறையினருக்கு    முன்மாதிரியாகவும்    விளங்கினர்.
இலங்கையிலும்    இந்தியாவிலும்  இடதுசாரிச்சிந்தனைகள்  சீன - ரஷ்ய   கம்யூனிஸ   கோட்பாடுகளுடன் இரண்டறக்கலந்திருந்தமையினால்    அந்நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப்பிளவுகள்   எங்கள்  தாயகத்திலும்   இந்தியாவிலும் பிரதிபலித்தன.

குடிமகனின் மகன் - பொன் குலேந்திரன் (கனடா)


1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின்., சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன்அப்போது  திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். ஒரு அறைக்குள் இரண்டுபேராக சம்மரியல் வாழந்த நான் உற்பட ஆறு பேரில் நால்வர் அரசு சேவையிலும், இருவர் தனியார் ஸ்தாபனங்களிலும் வேலை செய்தவர்கள்.

ஒவ்வொரு சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் சங்கு நாயர் என்ற மளையாளச் சமையல்காரன் சம்மரிக்கு வந்து உணவு தயாரிப்பான். மற்றைய நாட்களில் கடைகளில் தான் நாங்கள் சாப்பிடுவோம்.

இயற்கை உணவு - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.




  இன்றோ எமக்குக் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் பலவும் இரசாயன உரம் இட்டு வளர்க்கப்பட்டவைகளாகவே உள்ளன. கடைகளின் ஒரு மூலையில் இயற்கை உரம் மூலம் வளர்க்கப்பட்டவை என எழுதிவைக்கப் பட்டிருக்கும். இவற்றின் விலையோ அதிகம். அத்துடன் நமக்கு வேண்டிய காய் கனிகள் யாவும் இங்கு கிடையா. இப்படி பல சிக்கல்கள். இவற்றில் இருந்து விடிவுண்டா? நகரப்புறவாசிகளால் பயிர்களை வளர்க்க முடியுமா? அவர்கள் வாழும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட வீடுகளில் இது சாத்தியமாகுமா? ஆம் என்கிறார் எனது தோழி கீதா மதிவாணன். சின்னஞ்சிறிய தோட்டம் ஆனால் அதில் இருந்து எதை எல்லாம் பெற்றேன், எவ்வாறு சமைத்தேன் என சுவாரசியமாக முகநூலில் படங்களுடன் பகிர்ந்துவந்தார். அதை அடுத்து, தான் வளர்த்த பயிர்களையும் அவற்றால் பெற்ற பயனையும் இயங்குபடமாக்கினார். அது சிட்னியில் ஒரு தமிழ்த்தோட்டம்என்ற பெயரில் நிலாச்சாரல் குழுமத்தின் சார்பில் youtube-ல் வெளியிடப்பட்டது. அவரது வலைப்பூவான கீதமஞ்சரியில், தன் தோட்டத்திற்கு வரும் சின்னஞ்சிறிய பூச்சி வகைகள் பற்றியும் அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன எனக் கூறி அவற்றால் தோட்டத்தில் ஏற்படும் நன்மைகள் எவை என சுவாரசியமாக எழுதியும் வருகிறார். ஆகாஅவரது சின்னஞ்சிறிய தோட்டத்தில் இத்தனை விந்தையா? நாமும் இயற்கை உரத்துடன் வீட்டில் சமையல் கழிவுகளையும் வைத்து இப்படி தோட்டம் போடலாமே எனத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அவரது சிட்னியில் ஒரு தமிழ்த்தோட்டம்’.

சிட்னி முருகன் கோயில் விடுக்கும் அறிவித்தல்












சிட்னி முருகன் கோயில் திருவிழா - 2020



சுவீடசிஸ்ட்டி - பாவை விளக்கு - சுந்தரதாஸ்

.



 தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவர் அகிலன் இவர் எழுதிய பல நாவல்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன வயது வேறுபாடின்றி பலரும் அவருடைய நாவல்களை விரும்பி வாசித்தார் அந்த வகையில் கல்கி வார இதழில் அவர் எழுதிய பிரபலமான தொடர்கதைதான் பாவைவிளக்கு அகிலன் உடைய இந்த நாவல் 1960 ஆம் ஆண்டு திரைப்படமானது குடும்ப கதைகளுக்கு கதை வசனம் எழுதுவதில் பிரபலமடைந்து கொண்டிருந்த ஏபி நாகராஜன் இந்தப் படத்திற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார் அவர் படங்களை எல்லாம் தொடர்ந்து டைரக்ட் செய்து கொண்டிருந்த கே சோமு பாவைவிளக்கு படத்தையும் டைரக்ட் செய்தார்.  கூடுமானவரை நாவலை ஒட்டியே திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது அதனை சோமு நேர்த்தியாக படமாக்கியிருந்தார்.  விஜயரங்கம் என்ற  படத்தொகுப்பாளரும்  கோபண்ணா என்ற  ஒளிப்பதிவாளரும் இணைந்து படத்தைத் தயாரித்தார்கள். 

படத்தின் ஆரம்பமே புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது, ஒரு தோட்டத்தில் சிவாஜி அசோகன் விகேஆர்  என கலைஞர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்கு சிவாஜி பாவைவிளக்கு கதையை படித்துக் காட்டுகிறார், இப்படி ஆரம்பிக்கும் காட்சி திரைப்படமாக விரிகிறது . கதை கேட்க  அமர்ந்திருந்த கலைஞர்களே  படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் .