மரண அறிவித்தல்

 .


திரு.  செல்லத்துரை திருநாவுக்கரசு

 


மலர்வு: 18:02:1939, உதிர்வு:17:02:2024

 

வேலணை மேற்கு  ஆறாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, மற்றும் புறூணை ஆகிய இடங்களை வதிவிடங்களாகக் கொண்டவரும், நிறைவில் சிட்னி - அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தவருமான - இலங்கை தொலைத்தொடர்புத் திணைக்கள முன்னாள் பிரதம பொறியியலாளர், திரு. செல்லத்துரை திருநாவுக்கரசு அவர்கள், இன்று (17/02/24) இறைபதம் எய்தினார் என்ற செய்தியை துயரத்தோடு அறியத்தருகின்றோம்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கனகம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு - திருமதி தம்பு - குணபாக்கியம் தம்பதியரின் (முன்னாள் முனீஸ்வரா கபே உரிமையாளர்) மருமகனும், கமலாம்பிகையின் ஆருயிர்க் கணவரும்; பிருந்தி, திலீபன், சுதர்சன், பிரகேசன், ஆகியோரின் அன்புத் தந்தையும்; நிரஞ்சன், ஸ்ரீவேணி, அபிராமி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்; ஷாயகி, அஞ்சனா, சேனன், ஷோபன், கோஷான், தாரணி,  திஷானா, ஹன்சிகா, ஜெய்பியன் ஆகியோரின் பெயரனும்; அமரர்கள் சுந்தரம்பிள்ளை, சறோஜினிதேவி, மற்றும் பூமணி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்; கோமளேஸ்வரி, அமரர் நல்லையா, தம்பிராசா, செல்வராஜா,சரஸ்வதி, தியாகராஜா, தர்மவதி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

 

Date: 20 February 2024
Time: 2.30 pm to 4.45 pm

Address: 
North Chapel,
Pinegrove Memorial Park,
Kington Street,
Minchinbury, NSW 2770

 

தகவல்:

பிருந்தி: +61 405 076 027
திலீபன்: +61 475 945 986
சசிகேசவன்(மருமகன்): +61 468 837 219

 


சிட்னி துர்காதேவி தேவஸ்தானம் 4ம் திருவிழா இரவு

.


எப்படி மறப்பேன் - கவிதை - அ வேளாங்கண்ணி

 .

எப்படி மறப்பேன்.. எதற்கு மறப்பேன்

மூச்சு இருக்கும் வரைக்கும் உன்னை நினைப்பேன்
சுலபமாகச் சொல்லிவிட்டாய் மறந்து விடு என்று...
ஒரு நாளில் உருவானதல்ல
உன் மீதான என் காதல்
இது பல தலைமுறைகள் முன்பே
துளிர் விட்டிருக்க வேண்டும்..
காத்திருந்து காத்திருந்து காலம் கூடி
உன்னை நான் கண்டு
காதல் மிகக் கொண்டு
மகிழ்ச்சியாய் களித்திருக்கும் வேளையிலே
இப்படி ஒரு விஷ அம்பு கொண்டு தாக்குகிறாய்...
முடியாது என்று தெரிந்திருந்தால்
பார்க்காமலே இருந்திருக்கலாம்..
கை கோர்க்காமலே இருந்திருக்கலாம்..
என்னை மறக்கச் சொல்வதை விட‌
ஒரு ஆறு அடிக்குள் தள்ளிவிட்டுப் போ..
உன்னை மறக்கும் நாள்... நானில்லை
உன்னை மறக்க நான்.. பிறக்கவில்லை...

நன்றி https://eluthu.com/kavithai/296757.html

சிட்னி துர்காதேவி தேவஸ்தானம் 4ம் திருவிழா பகல்

 .கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழி கலந்துரையாடல் “ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் “ உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் லெ. முருகபூபதி

          


  

 கனடா - ரொறன்ரோ நேரம் :  16-02-2024   வெள்ளிக்கிழமை  

                                இரவு 8-00 மணி – 10-00 மணி

                     இலண்டன் நேரம் : 17-02-2024  சனிக்கிழமை

                           அதிகாலை 1-00 மணி – 3-00 மணி

      இலங்கை , இந்தியா நேரம் : 17-02-2024 சனிக்கிழமை

                           காலை  6-30 மணி – 8-30 மணி

     அவுஸ்திரேலியா நேரம் : சனிக்கிழமை 17-02 – 2024

                              நண்பகல் 12-00 மணி – 2-00 மணி

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09

 

Meeting ID: 847 7725 7162

Passcode: 554268


சிட்னி துர்காதேவி தேவஸ்தானம் 4ம் திருவிழா

 .

ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா பகல் காட்சி 

அவுஸ்திரேலியாவில் மலர்ந்துள்ள பூமராங் மின்னிதழ் ! வாசிப்பு அனுபவம் தாமரைச்செல்வி

 .


புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ்,  முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

           ஆரம்ப காலங்களிலிருந்து அநேகமான சஞ்சிகைகள் எழுத்தாக்கங்களோடு மட்டுமின்றி ஓவியங்களுடனும் சேர்ந்தே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. அவற்றை நாம் ரசித்திருக்கிறோம்.

அப்படியான ஒரு ஜனரஞ்சக இதழாக பூமராங் மின் இதழையும் பார்க்க முடிகிறது. சம காலத்தில் அச்சில் வரும் இதழ்கள் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தடுமாறுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஒன்றிரண்டு சஞ்சிகைகள் தவிர மற்றவை சில இதழ்களுடன் நின்று விடுவதையும் பார்க்கிறோம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மின்னிதழ்கள் இலக்கிய உலகில் தமது வரவையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதையும் கவனிக்க முடிகிறது.

இலக்கியம் மீது கொண்ட ஆர்வமே இவர்களை முனைப்பாக செயல்பட வைக்கிறது. அந்த விதத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய  கலைச்ங்கத்தினரின் இலக்கியச்  செயற்பாட்டின் ஒரு அம்சமாக பூமராங் மின்னிதழின் வருகை நிகழ்ந்துள்ளது. ஒரு சஞ்சிகைக்குரிய அம்சங்களான சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறு குறிப்புகள், நிகழ்வுகளின் தொகுப்பு, பாராட்டுச் செய்தி என பல அம்சங்களையும் தாங்கி   ஐம்பத்தைந்து பக்கங்களில் வெளிவந்திருக்கிறது இம்மின்னிதழ். 

              ஆசிரியர் குழு தமது தலையங்கத்தில் சங்கத்தின் செயற்பாடுகளை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். தமது நோக்கம் என்ன என்பதையும் தாம் செய்த பணிகள் எவை எவை என்பதையும் குறிப்பிட்டதன் மூலம் எத்தகைய பணிகளை இச்சங்கம் மேற்கொண்டு வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

சிட்னி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில் வருடாந்தத் திருவிழா 2024
 
மலையக படைப்பிலக்கியத்தின் ஊடாக அறப்போர் நிகழ்த்திய மல்லிகை சி. குமார் - முருகபூபதி

 .

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு  1973 ஆம் ஆண்டு அட்டன் ஹைலண்ட்ஸ்  கல்லூரியில் நடந்தது.

அக்காலப்பகுதியில்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், சமசமாஜிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தனர்.

இந்த அரசில் நியமன எம்.பி.க்களாக தெரிவாகியவர்கள்தான் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அசீஸும், செல்லையா குமாரசூரியரும்.

செல்லையா குமாரசூரியர் தபால் அமைச்சரானார்.  இவர்கள் இருவரையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் குறிப்பிட்ட மாநாட்டின் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பாலதண்டாயுதமும் வருகை தந்திருந்தார்.

கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப்பச்சை நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியாகியிருந்தது. அதன் வெளியீட்டு அரங்கும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது.

வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அக்காலப்பகுதியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அந்த மாநாட்டுக்கு கொழும்பிலிருந்து வீரகேசரி குடும்பத்தினருடன் நானும் சென்றிருந்தேன்.

மேடையில் அசீஸும், குமாரசூரியரும்  காரசாரமாக விவாதித்து மோதிக்கொண்டனர்.

 “ தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை அரசுடன்தான் பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும், இடைத்தரகர்களான தொழிற்சங்கங்களை நாடத் தேவையில்லை    என்ற தொனியில் குமாரசூரியர் பேசிவிட்டார்.

நீண்ட கால தொழிற்சங்க அனுபவம் மிக்க அசீஸ் வெகுண்டெழுந்தார். தமது தொழிற்சங்கம் நடத்திய போராட்டங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகைகளையும்  அவர் பட்டியலிட்டார்.

ஆண்டவன் கட்டளை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

சிவாஜியின் நடிப்பில் ஆலயமணி வெற்றிப் படத்தை தயாரித்த வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா மீண்டும் சிவாஜியின் நடிப்பில் தயாரித்த படம் ஆண்டவன் கட்டளை. அறுபது ஆண்டுகளுக்கு முன் தயாரான இந்தப் படத்தில் சிவாஜிக்கு கல்லூரி பேராசிரியர் வேடம். படத்துக்கு படம் ஒவ்வொரு வேடத்தில் நடித்து ரசிகர்களை பிராமிக்க வைத்துக் கொண்டிருந்த சிவாஜி இந்தப் படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆனால் படத்தின் கதை ஏமாற்றிவிட்டது!

வீர பிரம்மச்சாரியான கிருஷ்ணன் மகான்களின் போதனைப்படி வாழ்பவர். கடமையே வெற்றிக்கு வழி என்ற கொள்கையை பின்பற்றுபவர். தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடம் அன்பும், கண்டிப்பும் கொண்டவர். ஊரே வியந்து பார்க்கும் விதத்தில் வாழ்ந்து வரும் அவர் மீது அவரின் மாணவியான ராதா காதல் கணை தொடுக்கிறாள். பேராசிரியர் மனம் காதல் வயப்படுகிறது. இருவர் காதலும் பகிரங்கமாகவே ஊராரின் பழி சொல்லுக்கு ஆளாகிறார் கிருஷ்ணன். அதே சமயம் ராதாவின் தாயும், தாய் மாமனும் ராதாவை கண்டிக்கிறார்கள். இதற்கிடையில் ஆற்றங்கரையில் கிருஷ்ணனும், ராதாவும் சந்தித்து படகில் சவாரி செல்கிறார்கள். இடையில் படகு விபத்துக்கு உள்ளாக ராதா காணாமல் போய் விடுகிறாள். உயிர் தப்பும் கிருஷ்ணன் மீது ராதாவை கொலை செய்ததாக பழி சுமத்தப்படுகிறது. ஊருக்கே முன் உதாரணமாக , இலட்சியவாதியாக வாழ்ந்த பேராசிரியர் சிறையில் வாடுகிறார். மீண்டும் தன்னுடைய உன்னத நிலையை அவர் அடைந்தாரா என்பதே மீதிக் கதை.

இப்படி அமைந்த படக் கதைக்கு சிவாஜியின் நடிப்பு உயிர் கொடுக்கிறது. நடிப்பு மட்டுமன்றி அவரின் நடையே தனி ஸ்டைல் தான். பேராசிரியராக வரும் போது காட்டும் மிடுக்கு, காதல் வசப்படும் போது தவிக்கும் தவிப்பு, கொலைப்பழிக்கு ஆளாகி தத்தளிக்கும் போது காட்டும் முகபாவனை எல்லாமே சிவாஜியின் திறமைக்கு சான்று. அவருக்கு ஜோடியாக , ராதாவாக வரும் தேவிகா அழகாக வருகிறார். அருமையாக நடிக்கிறார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 35 “கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்”


 நாள்:         ஞாயிற்றுக்கிழமை 25-02-2024       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

அ.சாரங்கராஜன்
பழ.அதியமான்

க.பஞ்சாங்கம்

பா.இரவிக்குமார்
இரா.ஸ்ரீவித்தியா
சி.ரமேஷ்

 

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

www.ilakkiyaveli.com

தர்ம-சங்கடம் - Ravichandran

 .


ப்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.மணி பர்ஸை மறந்து வீட்டில் வைத்துவிட்டு, இப்போது பேருந்து இருக்கையில் சுமார் பத்து நிமிடமாக பயணித்து கொண்டிருக்கிறாள்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.இல்லையென்றால் கண்டக்டர்  அவளை இந்நேரம் துரத்தி இருப்பார்.எப்படியாவது அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள் போதும், சுமதியிடம் திரும்பி வருவதற்கான தொகையை பெற்றுக் கொண்டாள் ஆச்சென நினைத்தாள்

ஒவ்வொரு தடவை கண்டக்டர் டிக்கெட் கேட்கும் பொழுதும் இவளையே பார்ப்பது போலிருந்தது.அவரை தவிர்க்க இப்பொழுது காதில் ஹெட்செட் போட்டுக் கொண்டாள்.பார்வையை அதன் பின் அவர் பக்கம் முடிந்த மட்டும் திருப்பாமல் பார்த்துக் கொண்டாள்.கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தபடியே இருந்தது.அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் இறங்கி நடந்தவளை திடீரென கண்டக்டர் அழைத்தார்

போவதா, வேண்டாமா குழப்பத்தோடு நெருங்கியவள் கையில் மணிபர்சை கொடுத்தவர்
"பர்ஸ் உங்க சீட்டுக்கு கீழ விழுந்து கிடந்தது மேடம். இந்தாங்க எல்லாம் கரக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க"

வெட்கம் பிடுங்க மணி பர்சை பெற்றுக் கொண்டாள்.தேங்க்ஸ் சொல்வதற்குள் பேருந்து அவளை கடந்து போயிருந்தது.
அன்றைய பேருந்து கட்டணத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு மனநிறைவோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.சுமதி இன்று விடுப்பு எடுக்க போவதாக நேற்று அவளிடம் கூறியது, அப்பொழுது தான் அவள் நினைவுக்கு வந்தது...

நன்றி https://eluthu.com/kavithai/434311.htmlஎழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 95 கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழி கலந்துரையாடல் ! கற்றதும் பெற்றதும் ! ! முருகபூபதி

 .

எந்தவொரு தொழில் துறையும் பயிற்சியில்தான் தங்கியிருக்கிறது.  பயிற்சியின் மூலம்தான் தேர்ச்சி பெறவும் முடியும்.

 “ தனக்குத் தொழில் கவிதை   எனச்சொன்ன பாரதியும்,  தான் நேசித்த இலக்கியத்துறையில் தொடர்ந்தும் பயின்றமையால்தான் மகாகவியாக மிளிர்ந்தார்.

கவிதை எழுதத்தொடங்கிய பாரதி, பின்னர் கட்டுரைகளும், கதைகளும் எழுதினார்.  மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டார்.  சில பத்திரிகைகளிலும்  ஊடகவியலாளராக பணியாற்றினார். சில இதழ்களை நடத்தினார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலினால்,  புதுச்சேரிக்கும் இடம்பெயர்ந்தார். திரும்பி வரும்போது கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டார்.

எனினும் அவர் அற்பாயுளில் மறைவதற்கு முன்னர்,  இலக்கிய உலகிற்கு தன்னால் முடிந்ததை வரவாக்கிவிட்டே சென்றிருக்கிறார். அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்னரும் தொடரந்தும்  பேசப்படுகிறார்.

அதற்கு அவரிடமிருந்த படைப்பாளுமையும், படைப்பூக்கமும்தான் பிரதானம்.

தனிமை இரக்கம் என்ற முதல் கவிதையுடன் இலக்கியப்பிரவேசம் மேற்கொண்ட பாரதி, கவிதையுடன் நிற்கவில்லை.  அவரும் திசைமாறிய பறவையாக இலக்கியத்தில் மேலும்  சில துறைகளில் ஈடுபட்டார்.

எனக்கு எப்போதும் ஆதர்சமாக விளங்கும் பாரதியைதான் எனது எழுத்துலக வாழ்விலும் முன்மாதிரியாகக்கொண்டிருக்கின்றேன்.

கடந்த மாதம் இறுதியில், கனடாவிலிருந்து ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் செயலூக்கமுள்ள உறுப்பினர்கள் பேராசிரியர் நா. சுப்பிரமணிய  ஐயர் அவர்களும், எழுத்தாளர் அகில் சாம்பசிவம் அவர்களும் என்னைத் தொடர்புகொண்டு, அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் மெய்நிகர் ஊடாக ஒரு மணிநேரம் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதமும், இந்த பெப்ரவரி மாதமும் நான் உள்ளுர் பயணங்களிலும் ஈடுபட்டவாறே குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கான குறிப்புகளை எழுதினேன்.

ஏற்கனவே மதுரை தமிழ்ச்சங்கம்,  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  ஆகியன மெய்நிகர் ஊடாக நடத்திய நிகழ்வுகளிலும்  இதே தலைப்பில் உரையாற்றிப்பெற்ற அனுபவம் இருந்தமையால்,  கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்திற்காக உரைநிகழ்த்துவது சிரமமாக இருக்கவில்லை.

முன்னைய உரைகளில் மேலும் செம்மைப்படுத்தவேண்டிய, இணைக்கவேண்டிய புதிய தகவல்கள் இருந்தமையால்,  கவனம் செலத்தவேண்டியிருந்தது.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனை - "ஆந்தை"

 .காரைக்காலைச் சேர்ந்தசிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது  "ஆந்தைஎன்ற படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த படம் வருகிற பிப்.16ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுஇந்நிலையில் இந்தப் படத்தில் இவர், "நடிப்புகதைதிரைக்கதைவசனம்பாடல்பாடலுக்கு குரல்பின்னணி குரல்நடனம்தயாரிப்பு மற்றும் இணை இயக்கம்என தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் படத்தில் பத்து துறைகளைச் செய்வது இதுவே முதல் முறை என்ற சாதனையை பெற்றுள்ளார்.

 

இந்தச் சாதனையைப் பாராட்டி லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம்  அங்கீகரித்து பதிவு செய்து உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்புதுச்சேரி மாநிலத்திலிருந்து திரைப்படத் துறையில் சாதித்தவர் என்ற பெயரும் பெற்றார்.

 

இதனிடையேபுதுச்சேரி முதலமைச்சர் என்ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்அப்போது ஆந்தை திரைப்படம் வெற்றி பெற்றுமேலும் பல நல்ல திரைப்படங்களைத் தரவேண்டும்என்று வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்மில்லத் அகமது 2021ஆம் ஆண்டு ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி உலக சாதனைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலில் ஆந்தை திரைப்படத்தில் கதைதிரைக்கதைவசனம்பாடல்கள்இணை இயக்கம் என ஐந்து துறைகள் மட்டுமே செய்தேன். "ஊத்து ராவாபாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ராம் அவர்கள் பாடலில் வரும் டயலாக் போர்ஷனை என்னைப் பேச சொன்னார்பேசினேன் நன்றாக இருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டோம்பிறகு பாண்டிச்சேரியில் சில காட்சிகளும்ஒரு பாடல் காட்சியும் சூட் செய்ய வேண்டியிருந்ததுஅதற்கு இயக்குநரால் வர இயலாத சூழ்நிலையால் நான் சென்று இயக்கினேன்அப்போது சைக்கோ பாடலுக்கு நானே நடனம் அமைத்தேன்நன்றாக வந்திருக்கிறது படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்