மரண அறிவித்தல்


வைத்திய கலாநிதி பேரம்பலம் வித்தியானந்தன்


வைத்திய கலாநிதி பேரம்பலம் வித்தியானந்தன்  அவர்கள் தை மாதம் செவ்வாக்கிழமை 30 ந் திகதி 2018 அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற லீலா வின் அன்புக் கணவரும் சரஸ்  , இந்திரா அவர்களின்  பாசமிகு தந்தையும் ஆவார்

Dr Vithi என எல்லோராலும் அன்புடன் அழைக்கப் பட்ட இவர் ஸ்ரீ சத்யா சாய் பாபா வின் மிக சிறந்த பக்தர் . பல சாய் பாபா சம்பந்தமான விஷயங்களில் இவரின் பணி  மிகவும் பாராட்டத்தக்கது.

ஈமக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாசி  மாதம் 2ந் திகதி 2018  அன்று ரொக்வூட் மயானம் (Rockwood Crematorium), சவுத் சபேல் (South Chapel) மெமோரியல் அவெனியூ (Memorial Avenue), ரொக்வூட் (Rockwood) NSW 2141 இல் மதியம்  12.30 மணியிலிருந்து  3.30 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

Viewing –         12.30 pm – 1.30 pm
Funeral Rites – 1:30 pm – 3:30 pm
 
தகவல்:மகள் சரஸ்  – Sara Vithiananthan -
Ph: 08 8297 6363   or    0407 297 535

மரண அறிவித்தல்




திரு  துரையப்பா விசுவநாதன் 
பிறப்பு :27/06/1927                                                                                     இறப்பு :29/01/2018

திரு துரையப்பா விஸ்வநாதன், இளைப்பாறிய சிரேஷ்ட விஞ்ஞானத்துறை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை இலங்கை அவர்கள், திங்கட்கிழமை தை மாதம் 29 ந் திகதி 2018 அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்  .இவர்  காலம் சென்ற துரையப்பா முத்தாச்சி யின் அருமை மகனும்,காலம் சென்ற செல்லையா சொர்ணம் அன்பு மருமகனும்,காலம்சென்ற குமாரசாமியின் சகோதரனும் ஆவர் இவர் காலஞ்சென்ற ஜீவநாயகியின் அன்புக் கணவரும் சியாமளா , பிரியதர்ஷினியின் பாசமிகு தந்தையும், வைத்திய கலாநிதி புண்ணியமூர்த்தி , வைத்திய கலாநிதி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும், காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன் , நட்டேஷின் பாசமிகு பேரனும் ஆவார்.  

அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை தை மாதம் 31ந் திகதி 2018 அன்று ரொக்வூட் மயானம் (Rockwood Crematorium), சவுத் சபேல் (South Chapel) மெமோரியல் அவெனியூ (Memorial Avenue), ரொக்வூட் (Rockwood) NSW 2141 இல் காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்
Dr Punniamoorthy 0297470997
Dr Sivakumaran 0755006383

ஆவலுடன் செயற்படுவோம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்


இலக்கியமும் இலக்கணமும்
     இங்கிதமாய் அமைந்தமொழி
வழக்கொழிந்து போகாமல்
     வாழுகின்ற தெங்கள்மொழி
நிலத்திலுள்ள மாந்தரெல்லாம்
      நிம்மதியாய் வாழுதற்கு
நீதியொடு வாழ்வியலை
      நீக்கமறச் சொன்னமொழி  !

அகத்திணையும் புறத்திணையும்
     அமைகின்ற வகையினிலே
ஆழமாய் கருத்துக்களை
       அனைவருக்கும் சொன்னமொழி
நிலத்தியல்பை வாழ்க்கையொடு
      இணைத்திடவே இலக்கியத்தை
நெஞ்சமெலாம் பதியவைக்க
       நிறையவே தந்தமொழி  !

பக்தியினை இலக்கியமாய்
     பாரினிலே தந்தமொழி
பலநாட்டார் வியந்துநிற்க
    குறள்தந்த பசுமைமொழி
திருவாசகத் தேனை
    உருகிற்குத்  தந்தமொழி
திசையெல்லாம் புகழ்பரப்பி
      நிற்குதிப்போ பெருமையுடன் !

ஆண்டவனின் அருள்பெற்ற
    அன்னைத் தமிழ்மொழியை
அரியணையில் ஏற்றிவைத்து
     ஆட்சிமொழி ஆக்கவேண்டும்
அழகுதமிழ் உலகெங்கும்
     அனைவரிடம் சேர்வதற்கு
ஆர்வமுடன் இணைந்தொன்றாய்
    ஆவலுடன்  செயற்படுவோம் !


பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் - முருகபூபதி முருகபூபதி

.
ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும் பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன்  தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய  பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்  -   

-->
இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது.
இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா முறை.
இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தமிழகத்திற்கு திரும்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது " இங்கிருந்து எடுத்துச்செல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?" எனக்கேட்டேன்.
உடனே அவர் ஏ.ஈ. மனோகரனின் " சுராங்கனி.... சுராங்கனி... சுராங்கனிட்ட  மாலு கெனாவா..?" என்ற பாடல் கஸட் வாங்கித்தரமுடியுமா?" என்று கேட்டார்.
நான் மூர்ச்சையாகி விழாமல், அவரையே கண்இமைக்காமல் சில கணங்கள் பார்த்தேன்.  இலங்கையிலிருந்து அவர் எடுத்துச்செல்லவிரும்பிய ஈழத்தின் பொப்பிசைச்சக்கரவர்த்தியின் அந்தப்பாடல் இன்றும் பல மொழிகளில் பலரால் பாடப்படுகிறது.
மனோகரன் இந்தப்பாடலை ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில் பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜாவும் சுராங்கனி மெட்டில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல்யமான பாடகி ஆஷாபோன்ஸ்லே, " "சுராங்கனி கமால் கரோகி" என்ற பாடலை பரமாத்மா என்ற படத்தில் பாடியிருப்பதாக அறியப்படுகிறது.
அண்மையில் வேற்று நாட்டு மங்கையொருவராலும் இந்தப்பாடல் கிராமிய காட்சிகளுடன் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றேன்.
அவ்வாறு படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் பெரிதும் கவரப்பட்ட பொப்பிசைப்பிதா என அழைக்கப்பட்ட ஏ.ஈ. மனோகரன் சென்னையில் மறைந்துவிட்டார்.


பைலா இசையை இந்தியத் திரைத்துறைக்கு எடுத்துச் சென்ற ஏ.ஈ.மனோகரன் - கானா பிரபா


வீரகேசரி வார சங்கமம் (27.01.18) இல் பதிவான பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் குறித்த என் அஞ்சலிப் பகிர்வு (வீரகேசரியின் பகிர்வையும் படமாக இத்தால் இணைத்திருக்கிறேன்)


""சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் அவர்கள்.

ஈழத்துக் கலைஞர்களில், ஏ.ஈ.மனோகரன் போன்று ஈழத்தமிழ் ரசிக எல்லையைக் கடந்து சிங்கள ரசிகர்கள், அவர்களைத் தாண்டி இந்திய ரசிகர்கள் என்று லட்சோப லட்சம் ரசிக உள்ளங்களைச் சம்பாதித்தவர் வேறு யாருமிலர். இன்னமும் சிங்கப்பூர், மலேசியா கடந்து அங்குள்ள பூர்வீகத் தமிழர்களிலிருந்து புலம் பெயர் தமிழர் வரை ஆட்கொண்டார்.

“சின்னமாமியே” புகழ் பொப்பிசைப் பிதா நித்தி கனகரட்ணம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்
என்று ஈழத்துத் துள்ளிசை வரலாறு எழுபதுகளிலே வெகு செழிப்போடு விளங்கியது. அந்தக் கால கட்டத்தில் அமுதன் அண்ணாமலை, எம்.பி.பரமேஷ் (உனக்குத் தெரியுமா நான் உன்னை அழைத்தது) என்று இன்னும் ஏராளம் தனித்துவம் மிக்க ஈழத்துப் பாடகர்கள்
தென்னிந்தியத் திரைசை மரபை மீறி அவற்றைப் பிரதிபண்ணாத தனித்துவம் மிக்க ஈழத்துப் பாடல்களை ரசிகர்கள் அடையாளம் கொண்டு அரவணைத்தது எங்கள் ஜனரஞ்சக இசை மரபின் பொற்காலம் எனலாம். 

பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் அண்ணருக்குப் பிரியாவிடை - கானா பிரபா

.

""சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.

பாடகராக, நடிகராக துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். 2010 இல் அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருந்த இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது.



படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
  கோமகன் தொகுத்திருக்கும் "குரலற்றவரின் குரல்"  பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்து கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்   

" எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்." என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர்.
கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர்.
கசப்பான அனுபவங்களை சுமந்தவாறு, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.
" நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இருக்காதுதானே...? பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா..? செயற்கையானதா..? என ஆராய்ந்து சண்டை பிடித்தவர்கள் சிவனும் நக்கீரனும். கம்பரும் ஒட்டக்கூத்தரும் பிடிக்காத சண்டையா...? என்னதான் சண்டை பிடித்தாலும்  சிவன், நக்கீரனை எரித்தவாறு எமது தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் உயிரோடு எரிக்கமாட்டார்கள். ஆனால், எழுத்தால் எரிக்கப் பார்ப்பார்கள்!!!
தத்தம் எழுத்துக்களினாலேயே கருத்தியல்களை எதிர்ப்பார்கள். அரசியல் மற்றும் பொது அமைப்புகள், கோயில்களில் பொலிஸ் வருமளவுக்கு சண்டைகள் நடக்கின்றன. எமது எழுத்தாளர்கள் அந்தளவிற்குச் செல்லமாட்டார்கள்" என்று எமது  எழுத்தாளர் வர்க்கத்தின் மகிமை பற்றிச்சொன்னேன்.

யாழ்ப்பாணத்தில் 1960 களில் கூழ்முட்டை எறிந்த எழுத்தாளர்கள் மறைந்துவிட்டார்கள். புகலிடத்தில் சமகால எழுத்தாளர்கள் வேறு வழிகளில் தமது எதிர்ப்புகளை காண்பிக்கிறார்கள்.
பிரான்ஸில் வதியும் கோமகன் தொகுத்திருக்கும் நேர்காணல் நூலான குரலற்றவரின் குரல் பற்றி எழுத முற்பட்டபோதுதான் மேற்கண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது.



பிரபல சிங்கள இயக்குனர் தர்மசேன பத்திராஜ காலமானார்



.

பொன்மணி ஈழத் திரைப்படத்தை தந்த சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ தனது 75 ஆவது வயதில் நேற்று (27) காலமானார்.
பொன்மணி என்ற ஈழத் தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் ஆக்கியுள்ளார்.
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவுஸ்ரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.
தர்மசேன பத்திராஜ களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் திடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கைச் செய்திகள்


வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்

“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்”

சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து

பெண் அதிபர் முழந்தாளிட்ட விவகாரம் : எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு



வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்

23/01/2018 வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது.
வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு
இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர்.

உலகச் செய்திகள்


சிரியாவில் 45 இடங்களில் துருக்கிப் படையினர் தாக்குதல்!!!

தாய்லாந்து குண்டு வெடிப்பில் மூவர் பலி!!!

வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்!!!




சிரியாவில் 45 இடங்களில் துருக்கிப் படையினர் தாக்குதல்!!!

22/01/2018 சிரியாவிலுள்ள குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதலின் ஒருபகுதியாக வடக்கு சிரியாவினுள் துருக்கியின் தரைப்படையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வை.ஜி.பி. என்று அறியப்படும் குர்திஷ் குழு துருக்கியின் தென் எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கிவருகின்றது. இப்பிராந்தியத்திலிருந்து குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றும் நோக்கில் துருக்கி  இராணுவம் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
மேற்படி பிராந்தியத்தின் 45 இடங்களில் தரைவழி மற்றும் விமானத் தாக்குதல்களை நேற்று  நடத்தியதாகத் துருக்கி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குர்திஷ் இராணுவக் குழுவை பயங்கரவாதியென்று கூறிவரும் துருக்கி தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் இராணுவக் குழுவினருக்குத் தொடர்புள்ளதாகவும் நம்புகிறது.
இதேவேளை தனது பகுதியிலிருந்து துருக்கியப் படையினரை விரட்டியுள்ளதாகக் கூறியுள்ள குர்திஷ் குழுவினர் இதற்குப் பதிலாக துருக்கி எல்லைப் பகுதியில் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக மோதலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில் குர்திஷ் இராணுவக் குழு முக்கிய பகுதியாக உள்ளது.
குர்திஷ் குழுவை மிக விரைவாக ஒழிக்க துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் உறுதியளித்துள்ளார். ஆனால்இ பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்கத் துருக்கி தனது படையினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  நன்றி வீரகேசரி

தமிழ் சினிமா - தானா சேர்ந்த கூட்டம்

.

தானா சேர்ந்த கூட்டம்

Thaana Serndha Kootam poster.jpgசூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம்.

கதைக்களம்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இந்த தானா சேர்ந்த கூட்டம்.
சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா CBIக்கும், கலையரசன் போலிஸ் வேலைக்கும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல் மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது.
அதை தொடர்ந்து கலையரசன் தற்கொலை செய்துக்கொள்ள, சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் குள்ளநரிகளை எப்படி ஓட ஓட விரட்டுகின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதல் வார்த்தையே விண்டேஜ் சூர்யா இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு மௌனம் பேசியதே, அயன், சிங்கம் என கலக்கி வந்த சூர்யா சில நாட்களாக தடுமாறி வர, அவரை மீட்டுக்கொண்டு வந்து விட்டார் விக்னேஷ் சிவன். லோக்கலாகவும் சரி, தன் மைனஸ் என்று சொல்லப்படும் உயரத்தை கூட வெளிப்படையாக பேசி கடைசியில் அதற்காகவே ஒரு பன்ச் வைக்கும் இடத்திலும் சரி சூர்யாவின் அவுட் ஆப் கிரவுண்ட் சிக்ஸர் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம்.
சூர்யா தனக்கென ஒரு போலி CBI கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களையும், அரசாங்க வேலைகளில் இருந்து வேலை செய்யாமல் லஞ்சம் வாங்குபவர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் காமெடியிலும் கலக்கியுள்ளார். அதைவிட சீனியர் சீனியர் தான் என செந்திலும் கடைசி வரை தன் கெத்தை விடாமல் நம்மை சிரிக்க வைத்துள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் போலிஸிடம் நெஞ்சை நிமிர்த்தி நான் ஜோக்கர் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசும் காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.
படத்தின் முதல் பாதி நண்பனின் இழப்பு அதற்காக சூர்யா எடுக்கும் முயற்சி, கீர்த்தியுடன் காதல் என கலகலப்பாகவே செல்கின்றது. அதிலும் இடைவேளையில் நவரச நாயகன் கார்த்தியிடம் சவால் விட்டு போனை வைக்க, இரண்டாம் பாதி பட்டையை கிளப்ப போகின்றது என தோன்ற வைக்கின்றது.
இந்த மாதிரி வேலைகளை தற்போது செய்தால் இரண்டு செகண்டில் கண்டுப்பிடித்துவிடுவார்கள், அதற்காக கதையை 80களில் நடப்பது போல் காட்டியுள்ளது புத்திசாலித்தனம். அதிலும் ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் தில்லு முல்லு, சபதம், நாயகன் பட போஸ்டர்கள் இருப்பது சூப்பர்.
இத்தனை ப்ளஸ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கிளைமேக்ஸ் ஏதோ படத்தோடு ஒன்றவே இல்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே முடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது, படம் முடிந்துவிட்டதா? என கேட்கும் நிலையில் உள்ளது.

க்ளாப்ஸ்

சூர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என அனைவரின் நடிப்பும் கவர்கின்றது. சில நிமிடம் வரும் ஆனந்த்ராஜில் இருந்து ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் வரை அசத்தியுள்ளனர்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை, அனிருத்தின் துள்ளலான இசை, தினேஷின் கலர்புல்லான ஒளிப்பதிவு.
படத்தின் வசனம்.

பல்ப்ஸ்

ஜாலியாகவே சென்றாலும் இரண்டாம் பாதி குறிப்பாக கிளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மொத்தத்தில் சூர்யாவின் ‘அன்பான’ தானா சேர்ந்த கூட்டத்திற்கு(ரசிகர்களுக்கு) விருந்து.
 நன்றி  CineUlagam