தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

மரண அறிவித்தல்

 திருமதி றோஸ்மலர் (சூரி ) சங்கரப்பிள்ளை (சங்கர் ) 



கரம்பனைப் பிறப்பிடமாகவும், சிட்னி செவென்கில்லில் வசித்து வந்தவருமான திருமதி றோஸ்மலர் சங்கரப்பிள்ளை அவர்கள் 17 09 2025 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான  திரு. மனுவேற்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, சிசிலியா மனுவேற்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் 

திரு கனகராயர் சங்கரப்பிள்ளையின் அன்பு மனைவியும் , காலம் சென்ற மேரி, அரவிந்த் , கிரிஷாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும் 

காலம்சென்றவர்களான திரு கனகராயர், திருமதி சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும் 

ஜெசிந்தா தேவராஜா , ஜூலியா சதானந்தராஜா, ஜெரோம்  எமிலியானஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் 

ஐசக் தேவராஜா, சதானந்தராஜா, கொன்சிலா ஜெரோம் , காலம்சென்ற வனஜா நாகராஜா, பத்மஜா லோகநாதன் (தெல்லிப்பளை ) , பங்கஜா ஸ்ரீஸ்கந்தநாதன் (லண்டன் ) , கதிர்காமசேகரன் (கொழும்பு )  டீப்தி (கொழும்பு ) ஆகியோரின் அன்பு மச்சாளும்.

பவதாரிணி , சங்கரணி , அஸ்வினி , அர்ச்சனா, டொனால்ட் / பெனா , துஷி /கிறிஸ்டி, டினேஷ் , சகானா , இன்பனா , ஆரனா ஆகியோரின் பாசமிகு ஆன்ரி யும் 

நிக்கில் , ஜோஷான் , நத்தானியல் , ஜாஸ்மின் ,  அரியானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

இறுதிச்  சடங்குகள் 20.09.2025 சனிக்கிழமை இடம்பெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்கப்படுகின்றனர். 

Viewing - 10:30 am, Our Lady Of Lourdes Church, 7 Grantham Road, Seven hills NSW

Funeral Mass - 12:30pm , Our Lady Of Lourdes Church, 7 Grantham Road, Seven hills NSW

Burial - 3:30pm , Burial site: Calvary 15, Pine Grove Memorial Park , Kington Street

Minchinbury, NSW 2770, Australia

Contact : Sangar - +61 431 562 593



Mrs Rosemalar Sangarapillai

It is with profound sadness we inform that Mrs Rosemalar Sangarapillai passed away peacefully on 17 September 2025.

Loving daughter of the late Mr Manuelpillai Anthonypillai & Cicilia Manuelpillai.

Beloved wife of Kanagarayar Sangarappillai (Sangar) and most loving mother of the late Mary, Aravind and Kirishanth.

Daughter-in-law to the late Mr Kanagarayar and the late Mrs Saraswathy Kanagarayar.

Ever-loving sister to Jacintha Thevarajah, Julia Sathanantharajah and Jerome Emilianus.

Loving sister-in-law to Isaac Thevarajah, Sathanantharajah, Conscila Jerome, the late Vanaja Nagarajah, Pathmaja Loganathan (Tellippalai), Pankaja Sriskanthanathan (London), Kathirkamasekaran & Deepthi (Colombo).

Beloved Aunty to Bavatharani, Sangaranee, Achvini, Archana, Donald & Bena, Dhushi & Christy, Dinesh, Sahana, Inpana & Aarana.

Sweet Soori Paatty to Nickil, Joshan, Nathaniel, Jasmin & Ariana.

We request our relatives, friends and family to accept this notice and join us on Saturday 20th September 2025 to celebrate her life at Our Lady Of Lourdes Church, 7 Grantham Road, Seven hills NSW 2147 Australia.

Viewing - 10:30 am

Funeral Mass - 12:30pm

Burial - 3:30pm

Burial site: Calvary 15

Pine Grove Memorial Park

Kington Street

Minchinbury

NSW 2770

Australia







நவராத்திரி துதி - மலைமகள் துதி

.

 மலைமகள் துதி

கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா 





உடலும் உளமும் உரமாய் இருக்க
உனது திருவடி துணையே எமக்கு
மனதில் அழுக்கை அகற்றிடு சக்தியே
மலரடி அடைக்கலம் துர்க்கை அம்மா

தினமும் நின்னை நினைக்கிறோம் அம்மா
திசயெலாம் நீயே தெரிகிறாய் அம்மா
அனைத்தும் நீயாய் ஆகிறாய் அம்மா
அன்னை துர்க்கையே அருள்புரி தாயே

துன்பம் இளைக்கும் துட்டர் திருந்த
துயரப் படுவார் துன்பம் நீங்க
பஞ்சம் பிணியும் பறந்தே ஓட
பாதம் தொழுகிறோம் பார்த்திடு அம்மா 

அரக்கக் குணங்கள் அகன்றிட வேண்டும்
அன்பும் அறனும் அமர்ந்திட வேண்டும்
தர்மம் தானம் பெருகிட வேண்டும்
தாயே துர்க்கையே நீதான் துணையே 

ஈரமும் ஈந்திடு வீரமும் ஈந்திடு 
இன்புடன் இருக்க நல்லருள் நல்கிடு
காப்பவள் நீயே கருணையின் உருவே
கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே 

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - பாட்டும் பரதமும் -- ச. சுந்தரதாஸ்

 .

சிவாஜி படங்களில் நாதஸ்வரம் வாசித்துள்ளார், தவில் வாசித்துள்ளார் , சித்தார் மீட்டியுள்ளார் , இப்படி நடித்தவரை பரத நாட்டியம் ஆடுபவராக நடிக்க வைத்து பார்க்க இயக்குநர் பி. மாதவனுக்கு, கதாசிரியர் பாலமுருகனுக்கும் ஏற்பட்ட விபரீத ஆசைதான் பாட்டும் பரதமும் படமாகும். 1975ம் ஆண்டு வெளியான இப் படத்துக்கு ஐம்பது ஆண்டுகளாகி விட்டன. 



தனது அருண் பிரசாத் மூவிஸ் நிறுவனம் மூலம் எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய தொடர் வெற்றி படங்களை தயாரித்து இயக்கி வெற்றி கண்ட மாதவன் கலரில் இந்தப் படத்தை தயாரித்தார். அதிலும் சிவாஜிக்கு இரட்டை வேடம் . ஒரு சிவாஜிக்கு ஜெயலலிதா காதலி என்றால், மற்றைய சிவாஜிக்கு ஜெயலலிதா அம்மா! 


1967ம் வருடம் எம் ஜி ஆரின் காவல்காரன் படத்தில் ஜெயலலிதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டி வந்த போது தாய் வேடத்தில் நடித்தால் தன் மகளின் இமேஜ் கெட்டு விடும் என்று ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மறுத்தார். இதனால் பட முடிவில் அவர் குழந்தைக்கு தாயாவது போல் காட்டி படத்தை முடித்தார் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன். இப்போது எட்டாண்டுகள் கழித்து சிவாஜிக்கே தாயாக நடித்திருந்தார் ஜெயலலிதா. எல்லாம் காலத்தின் கட்டாயம்! 

 தொழிலதிபரான ரவி பிஸ்னெசில் பணம் பண்ணுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன். கலைக்கும் அவனுக்கும் வெகு தூரம். பரதத்தில் தேர்ச்சி பெற்ற லலிதா அவனின் அறியாமையை ஏளனமாக பேசி விட ஆத்திரப்படாமல் அவளையே காதலிக்கத் தொடங்கி விடுகிறான். லலிதாவும் அவனை காதலிக்கிறாள். அவளின் தந்தையோ தன் மகளை ஒரு கலைஞனுக்கே மணம் செய்து கொடுப்பேன் என்று தீர்மானமாக சொல்லி விட , ரவி எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு பரதம் பயிலுகிறான். அது மட்டுமின்றி பரத நாட்டிய போட்டியில் ஆடி லலிதாவையே வெற்றியும் கண்டு விடுகிறான். லலிதாவின் தந்தை வேறு வழியின்றி கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால் இப்போது எதிர்ப்பு ரவியின் தந்தை மூலம் வருகிறது. அவரின் சதியால் காதலர்கள் பிரிகிறார்கள். இதற்கு இடையில் லலிதா தாயாகிறாள். லலிதாவத் தேடி ரவி அலைகிறான். ஆண்டுகள் கடந்து பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிப் படம். 

இலங்கை செய்திகள்

 .

ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கு விஜயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை

கொழும்பு - புறக்கோட்டை தீ விபத்து ; விசாரணை செய்ய குழு நியமனம்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  திங்கட்கிழமை  அமெரிக்காவிற்கு விஜயம்



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்வார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

09-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

நவராத்திரி பூசை -22/09 to 02/10 துர்க்காதேவி ஆலயம்

 .



அன்றும் இன்றும் - சிவஞானச்சுடர் - பல்வைத்திய கலாநிதி - பாரதி இளமுருகனார்

 







கன்னிநிலை மாறாத கனி;மொழித் தமிழைக்

        கவினியவெம் தாய்மொழியைக் காத்து  வளர்த்து

        மன்னினின்று காதலொடு மறமும் போற்றி

             மானமொடு ஒழுக்கமதை மதித்தே உயிராய்

துன்னும்அறம் ஓங்கவாழ்ந்த  தமிழரின் வாழ்வோ

             தொன்மைமிகு புகலரிய அழிவிலாச் சரித்திரம்!

   பொன்;னனைய  விழுமியங்கள் அத்தனை யுமுலகம்

              போற்றிவர வேற்றதிலே ஆச்சரி யமேது?

 

        வருந்தடைகள் அத்தனையும் தகர்த் தெறிந்து

             வாழ்க்கையிலே வெற்றிபெற வழிவ குத்து

அருந்துணையாய் அவனுயர்வுக் கிருந்த தெல்லாம்

             அலுக்காத விடாமுயற்சியோ டயரா உழைப்புமே!

        விருந்தோம்பி வாழ்வதையே உயர்ந்த பண்பாய்

             வேட்புடனே கொண்டாடி வியக்கங்;; கொண்டான்!

        பெரும்பதவி வகித்தாலும் பேராசை கொளாது

          பெற்றவற்றை மனநிறைவொடு பேறாய் ஏற்றான்!

         நன்றிமறவா நெஞ்சுறுதி நாளுங் கொண்டு

           நானிலத்தில் பிறர்போற்ற நலமாய் வாழ்ந்தான்!

         என்றுமவன் எட்டப்பராய் ஏதிலா ராக

               இருக்காது இறைதன்னை மனதி ருத்தி

   வென்றெதிலும் வெற்றிபெற்றே விருத்தி கண்டான்!

               விளையாட்டிற் கென்றாலும் பிறரின் மனமோ

         கன்றிடாது புரிந்துணர்வு கவின அணைத்துக்

           காசினியில்; திருப்தியாய்க் காதலில் மலர்ந்தான்!

;

          புலம்பெயர்ந்து தமிழனின்று புகுந்த நாட்டில்

        போற்றிவந்த விழுமியங்கள் காற்றில் அந்தோ

கலந்ததுபோல் மங்கிவரக் காண்கின் றோமே!

          காரணந்தான் என்னவென்று கலங்கு கின்றேன்!

           அலங்கோலம் சிலவீட்டில் ஆட்சி செய்யும்!

          அநியாயம்! விவாகரத்துக்(கு) அளவே இல்லை!

          குலவிளக்காய் வளர்த்தெடுத்த  பிள்ளைபெற் றோரைக்

            கொடுமையம்மா! கோழையின்றி முதுமை நிலையில்

  தலைமுழுகி விட்டதுபோல் முதியோர் இல்லம்

             சரியான இடமென்;று சேர்க்கின் றாரே!

 

 

மறமும்  -  வீரமும்                        

கவினிய – எழில்மிகு

வேட்பு   -  விருப்பம்

வியக்கம் - பெருமை   கவின - சிறக்க

ஏதிலார் - அன்பு இல்லாதவர்

விருத்தி  -  இலாபம் (செல்வம்)

கவின - சிறக்க

காசினி – உலகம்

கோடாமை - நேர்மை

கோழை – இரக்கம்

   -------------- தொடரும்

BRAHMOTSAVAM 2025 - Sep 25 to Oct 4

 .



முத்தமிழ் மாலை 29/11/2025

 


- படித்ததில் பிடித்தது - அபராஜிதன்

 .

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.


குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

- படித்ததில் பிடித்த
து

நவராத்திரி பூசை - சிட்னி முருகன் கோவில்

 


உலக செய்திகள்

 .

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் பலி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் இடையில் தொலைபேசி உரையாடல்

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் பலி!



இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர்.

இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்கள், இராணுவத்தின் உத்தரவின் பேரில் காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை ஏற்றிச் சென்ற லொரி ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம், சனிக்கிழமை அதிகாலை, காசா நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

இது "மருத்துவர்களை நகரத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதற்காக இயக்கப்பட்ட இரத்தக்களரி பயங்கரவாத செய்தி" என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



நவராத்திரி துதி -அலைமகள் துதி

 .

அலைமகள் துதி 
அருள் புரிவாயே அம்மா இலக்குமி ! 



         மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா



செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்
அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

நிறைந்த செல்வம் நீயே அம்மா
நினது அருளே அனைத்தும் அம்மா
அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
அருளை அன்பை மறக்கும் அவரை
திருத்திடு தாயே திருவடி சரணம் 

வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
அருள் புரிவாயே அம்மா இலக்குமி !

Chandi Maha Yagam - Durga Temple Regents Park 28/09

 .