மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்



எமது அன்பான வாசகர்களுக்கு
மகிழ்ச்சி பொங்க
செல்வம் சிறக்க
மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஆசிரியர் குழு

கவிதை- அகஸ்டஸ்


.

பிரார்த்தனையின் தீவிரத்தில் குவிந்து மூடிய கைகள்
இறுகிக் கொள்ள உன்
கை ரேகைகள் வழியாகத்தன்
வேர்களை வலையாகப் பின்னி
உன்னை இருட்குகைக்குள் வைத்திருக்கும்
உன் கடவுளின் தூக்கம் கலையாமல்
உன் விரல்களை மெல்ல விலக்கி
வெளியுலகம் காணாது
தொழுது அழுது கொண்டிருக்கும்
உன்னை வெளியே கொண்டுவந்து
இதுதான் உலகம் என்று
சொல்ல விரும்புகின்றேன்

சாய்பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்

.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்யசாய்பாபா (85).

இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் சாய்பாபாவுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தினார்கள்.

ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்தின் கலைவிழா 2011




.


ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்தின் கலைவிழா 09.04.2011 சனிக்கிழமை பகாய் சென்ரர் சில்வவோட்டரில் கல்வி நிலையத் தலைவர் திரு.வி.ஏ.மனோகரன் தலைமையில் இடம் பெற்றது.மாலை 5 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் சிறு குழந்தைகள் முதல் உயர்தர வகுப்பு மாணவர்கள் வரை பங்கு பற்றி சிறப்பித்தார்கள். நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழ்க்கல்வி நிலையத்தின் முன்னை நாள் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் ஸ்ரத்பீல்ட் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Charles Casuscelli MP  அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிகழ்வில் தமிழ்க்கல்வி நிலையத்தின் அதிபர் திரு.ச.தேவராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். HSC தமிழ்ப்பாடத்தில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு ஸ்தாபகர் பரிசில்களை திரு திருமதி பாலேந்திரா, திரு .சுந்தர் ஈஸ்வரன் திருமதி சத்தியா கருணாகரன் ஆகியோர் வழங்கினார்கள். 

சிரித்திரனில் வந்த காட்டூன் ஒன்று

.
'Siritharan' Sunthar Sittampalam Sivagnanasuntharam cartoon
               சிரித்திரனில் வந்த காட்டூன் ஒன்று 

உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரும்பிராய் மக்களின் ஒன்றுகூடல்

.


உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரும்பிராய் மக்களின் ஒன்றுகூடல்

இவ்வருடம் ஏப்ரல் மாதம் உரும்பிராய் இந்துக்கல்லூரி தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை சிட்னிவாழ் உரும்பிராய் மக்களும் உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களும் சிட்னியில் ஒன்றுகூடி பகிர்ந்துகொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஏப்பிரல் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து இரவு 10:00 மணிவரை Number 4  Corner of , Kerrs Rd and Joseph ST, Lidcombe   இல் அமைந்துள்ள Community  hall  இல் இடம்பெற உள்ளது.

இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள விரும்பும் சிட்னிவாழ் உரும்பிராய் மக்கள் அல்லது உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

திருமதி வாசுகி ஈஸ்வரலிங்கம் 9899 5402

திருமதி சாந்தி பாஸ்கரன் 9649 4756

சிவகுருநாதன் சிவகுமார் 0410 426 608.
தகவல்: விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

உலகச் செய்திகள்

1. ஜப்பானின் அணு உலையிலிருந்து வெளியேறும் கதிரியக்க நீரை கட்டுப்படுத்த பல மாதங்கள் எடுக்கலாம் ? அதிகாரிகள் எச்சரிக்கை

2. கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல்

3. டீன் ஏஜ் வயதுப் பெண்ணுடன் உறவு கொண்டது தொடர்பான இத்தாலியப் பிரதமருக்கு எதிரான வழக்கு ஆரம்பம்!

4. 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒபாமாவின் பிரசாரத் தொனிப்பொருள் "இது எம்முடன் ஆரம்பம்'

5. ஒபாமாவை மகனே! என விளித்து கடிதம் எழுதிய லிபிய ஜனாதிபதி

6. தேனிலவுப் பயணத்தின் போது கொல்லப்பட்ட மணப்பெண்ணின் கொலையை கணவரே திட்டமிட்டார்!

நல்லதோர் வீணை- சிறுகதை


நல்லதோர் வீணை
லதாமகன்

வீடு வந்து சேர்ந்த பிறகும் உடல் நடுங்கிக்கொண்டே இருந்ததுசெருப்பைஎறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டேன்.  அம்மா வழக்கம்போல எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்என்னவோ உடம்பெல்லாம் எரிவதுபோல் இருந்தது. துப்பட்டாவைக் கழற்றி மெத்தைமேல் வீசிவிட்டுபானையிலிருந்து ஒரு குவளை தண்ணீர்குடித்தேன்இப்போது கொஞ்சம் தெளிவானது போல் இருந்ததுஏன் அவனைச் செருப்பைக் கழற்றி அடிக்கவில்லை என என்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன்கண்ணீர் வந்ததுகொஞ்சம் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்நான் அழத் தேவையில்லை என்று தோன்றியது.கொஞ்சம் அழுதால் பாரம் குறையுமோ என்றும் தோன்றியதுகழிப்பறையில் புகுந்துகொண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன்.வெளியில் வந்தபோது அறையின் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததுதுப்பட்டா அப்படியே கிடந்தது,லேசாகத் துடித்தபடி
பொடி தாத்தாவை நினைவு தெரிந்த நாளிலிருந்து தெரியும்எங்களுக்கு பொடி தாத்தா என்றால் அத்தனை இஷ்டம்பள்ளிவிட்டு வரும்போது தெருவிற்குத் திரும்பும் கடைசித் திருப்பத்தில் முதல் வீடு பொடிதாத்தாவுடையது.கயிற்றுக்கட்டில் போட்டு எந்நேரமும் எதையாவது மென்று கொண்டிருப்பார்.பொடி தாத்தா என்பது காரணப்பெயர்மூக்குப்பொடி போடுவார்ஏ தோ நியமனம் தவறினால் தலையே துண்டாகிவிடும் என்பது போல் அத்தனை சரியாய் அத்தனை ஆர்வமாய் பொடி போடுவார்

சிரித்திரன் சிவஞானசுந்தரம்

.
                                                                                          முருகபூபதி

  தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார்? இது கேள்வி
   அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச்சகோதரர்கள். இது பதில்.
   இப்படி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத்தக்க எழுத்தாற்றல் மிக்க ஒருவர் எம்மத்தியில் இருந்தார்.
  இலங்கையில் நானறிந்த வரையில் 1958 1977 1981 1983 காலப்பகுதியில் நடந்த இனவாத வன்செயல்களின்போதெல்லாம் அநுராதபுரத்தை தமிழர்கள் அநியாயபுரம் என்று வர்ணித்துப் பேசியதையும் அறிவேன்.
  சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் படிக்கச்சென்று விடுமுறை விட்டதும் கொழும்புக்கு பகல் அல்லது இரவு ரயிலில் பயணித்திருக்கின்றேன்.
  எம்மவர்கள் ரயில் இருக்கையில் கால் கை நீட்டி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பார்கள்.
அநுராதபுரத்தில் ஏறும் சிங்களப்பயணிகள் தமிழர்களை தட்டி எழுப்புவதைப்பார்த்திருக்கிறேன். நானும் அவ்வாறு தட்டி எழுப்பப்பட்டவன்தான்.


‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’ - ப.இரமேஷ்



-

தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்றது இயல், இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள், வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும் ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது ‘இசை’ என்றும் மெய்பாடுகளினால் வெளிப்படுத்தப்படுவது ‘கூத்து’ என்றும் வழங்கப்படுகிறது.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
40. சமயங்களின் தொடர்பு

எல்லாச் சமயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவே! அத்துடன் அவை போதிக்கும் கொள்கைகள், மற்றும் அவை கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் ஆகியவற்றிற்கு ஒன்று மற்றொன்றுக்குக் கடன்பட்டவை. ‘வேதமதம்’ என்பதுதான் காலத்தால் முந்தையது: 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ‘புத்தமதம்’ அதன் மகன் ஆகும்: கிறித்துவ மதம் கீழ்த்திசைக் கோட்பாடுகளினால் பெரிதும் தாக்கம் பெற்றது: அது பேரன் ஆகும்! ‘இசுலாம்’ என்பது இறைத்தூதர்களைப் பெற்றது: அதன் அடிப்படையில் கிறித்துவ மத இறைத் தூதர்களைக் கொண்டிருப்பது: அது கொள்ளுப்பேரன் ஆகும். இவை எல்லாமே தங்களின் அடிப்படை ஒழுக்கமாக ‘அன்பு’ என்பதையே கொண்டுள்ளன: மனத்தை நெறிப்படுத்தவும், இறைவனில் மனிதன் இரண்டறக் கலக்கவும், அன்பையே அடிப்படை ஒழுக்க நெறியாகக் கொண்டுள்ளன.

அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ அம்மையார் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வுகள்

.
“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு நேற்று(7/04/11) நடைபெற்றது.

வியாழக்கிழமை 07-04-2011 அன்று அவரது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மாநிலத்தின் வரகுலில் காலை 11 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து அம்மையாரின் பூதவுடல் நல்லடக்கத்திற்காக வரகுல் லோன் மயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆராதனைகள், இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து பூதவுடல் நல்லடக்கம் மதியம் 12.30மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பு வழியே ஒரு பயணம்.. - வித்யாசாகர்!

.
காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.

என் தாயின் மடி தொடும் உணர்வில் - விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கி நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது.

விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக என்னிடம் ஓடி வந்து, விமானம் தரையிரங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும் நிற்கக் கூடாது என்று கட்டளையிட 'என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன் முதலாக சுவாசிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு, அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து ஜன்னல் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை அழகுகளை பார்த்து ரசித்தவாறே இருந்தேன்.

இலங்கைச் செய்திகள்

.
1. யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 251விடலைப் பருவ கர்ப்பங்கள் : அரச அதிபர்
2. யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளார்
3. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முன்னேற்றமடையச் செய்வேன்

4. மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்

5. வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்

6. யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றம்

7.இலக்கியப் பேரவையின் விருது பெறும் நூல்களின் விவரங்கள் வெளியாகின

1. யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 251விடலைப் பருவ கர்ப்பங்கள் : அரச அதிபர்


யாழ். குடாநாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் 251 சிறுவர்கள் விடலைப் பருவ (பதின்மர் பருவ) கர்ப்பம் தரித்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். மாவட்டத்தில் இருந்த 194,451 மொத்த சிறுவர்களில் தாய், தந்தையை இழந்த சிறுவர்கள் 437 பேரும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 6,321 பேரும், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்கள் 489 பேரும் உள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 163 பேரும், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 990 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட 272 சிறார்களும், மாற்று வலுவுடைய சிறுவர்கள் 417 பேரும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெறுப்பின் அடையாளங்கள் - ஷாநவாஸ்




.

சென்னையில் ஒரு வில்லி யேக்கைப் பார்த்தேன். கோயம்பேடு ஏரியாவில் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைப் பிடிப்பின் மீது ஏறி நின்று தங்களுக்குக் கிடைக்கப் போகும் இடங்களைப் பற்றிய எண்ணிக்கை தெரியாமல் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் கொடும்பாவி எரிக்கப்பட்ட சாம்பலில் சிலர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்த வில்லி ஜேக் அந்தக் கூட்டத்தில் சாப்பிட்டுவிட்டு எறிந்த பொட்டலங்களையும் சிகரெட் துண்டுகளையும் சேகரித்து குப்பைத் தொட்டியில் அள்ளிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தார். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் நின்று கொண்டு புகைபிடிக்கவும் சிறுநீர் கழிக்கவும் கூட்டம் அலை மோதியது.

தமிழ் சினிமா

1. பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!
2. முடிவுற்றது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்

1. பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!


தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள்.