அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்துல் ஐப்பார்

.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தூங்காபி மண்டபத்தில் இடம் பெற்றது. ATBC யின் நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில்நுட்ப வியலாளர்கள் என பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில்  ATBC  எதிர் கால செயற்பாடுகள் பற்றிய திட்டங்களைப் பற்றி சிவசம்பு பிரபாகரன்  எடுத்துக் கூறினார் . இந்த வானொலி தற்போது  லாப நோக்கமற்ற சமூக   வானொலியாக  பதியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில்  வானொலி யாளரும்  IBC மற்றும் ,ATBC வானொலிகளில் தற்போது நிகழ்ச்சிகளை  படைத்து வருபவருமான திரு அப்துல் ஐப்பார்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் .
வானொலி பணியில்  தான் பெற்ற அனுபவங்கள் , அரசியல் அனுபவங்கள்  அரசியல் ரீதியான விமர்சனங்களை கையாளும் விதம் என்பன பற்றி  நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.
நிறைவாக  தேநீர் சிற்றுண்டியுடன் கூட்டம் நிறைவுற்றது.

தினம் - (சிறுகதை) - முருகபூபதி

  .                                    
        " கழுத்தில்  சயனைற்  குப்பி, கரத்தில்  ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன்,  இப்போது எதுவுமே  இல்லாமல்  காற்றுப்போல்  அலைகிறான்."
                                                         
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத்  தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட  அழகிய காருக்குப்பின்னால்  தத்தம்  கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர்,   எரிவாயுவில்  என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும்  கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும்  செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத  வாயு  இந்த நாட்டில் என்னை  தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு  நாடு  இந்த  அக்கினி  சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம்,  மருமகனிடமும்  மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே  மீண்டும்  மீண்டும் அலுப்புத்தட்டாமல்,  வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு  சொல்வதில் பெருமிதமும்  காண்கிறார்.


தினம் - (சிறுகதை) - முருகபூபதி

  .                                    
        " கழுத்தில்  சயனைற்  குப்பி, கரத்தில்  ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன்,  இப்போது எதுவுமே  இல்லாமல்  காற்றுப்போல்  அலைகிறான்."
                                                         
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத்  தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட  அழகிய காருக்குப்பின்னால்  தத்தம்  கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர்,   எரிவாயுவில்  என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும்  கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும்  செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத  வாயு  இந்த நாட்டில் என்னை  தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு  நாடு  இந்த  அக்கினி  சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம்,  மருமகனிடமும்  மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே  மீண்டும்  மீண்டும் அலுப்புத்தட்டாமல்,  வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு  சொல்வதில் பெருமிதமும்  காண்கிறார்.


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் (26.11.2016)

.
அவுஸ்திரேலியத்  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்  ஆண்டுப்பொதுக்கூட்டம் (26.11.2016)
அவுஸ்திரேலியத்  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  ஆண்டுப்பொதுக்கூட்டம்  எதிர்வரும்  நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2016)   சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மெல்பனில், MULGRAVE- Neighborhood House   மண்டபத்தில் ( 36-42, MACKIE ROAD, MULGRAVE, VICTORIA - 3170)  நடைபெறும்.
சங்கத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.
                                     ஆண்டுப்பொதுக்கூட்ட   நிகழ்ச்சிகள்
01.வரவேற்புரை
02. தலைமையுரை
03. கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகள்.
04. புதிய நிருவாகிகள் (2016-2017) தெரிவு.
05. தீர்மானங்கள்
06. நன்றியுரை.
07. தேநீர் விருந்து
சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.
அன்புடன்
நடேசன் (செயலாளர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
தொலைபேசி:  0452 631 954
மின்னஞ்சல்:  atlas25012016@gmail.com

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
கற்றதையும்   பெற்றதையும்   அறிவார்ந்த  தளத்தில் சமூகத்திற்காக  பயன்படுத்திய  பெண்ணிய  ஆளுமை
       பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
                                                                   

"  பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன.
சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை...? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்...?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது."
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் - தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.
எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.



வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த திருத்தொண்டர் விழா 27.11.2016

.

இலங்கைச் செய்திகள்


முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு

“ஆவா” குழு தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியானது

தேரரின் இனவாதப்பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.!

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம் (படங்கள் இணைப்பு)

 புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸில் முறைப்பாடு

தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம்

 தேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு

எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு


ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா

‘என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…’ என்றான் மகாகவி. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற அந்தக் கொண்டாட்டக் கவிதையை பி.பி. ஸ்ரீனிவாஸ்-பி சுசீலா இருவரின் காதல் களிப்புக் குரல்களில் இசைப்பாடலாகக் கேட்கத் தொடங்கிய பின் எத்தனை எத்தனை கண்ணம்மா பாடல்களைத் திரை இசையில் ரசித்துக் கேட்டாயிற்று. ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை விடவா? தேர்ச்சியான சங்கீதக்காரர்கள் முதற்கொண்டு எத்தனை எத்தனை மழலைக் குரல்களிலும் வழிந்தோடிய ரசமான கீதம் அது!
கண்ணம்மா… என்று ஏக்கம் கெஞ்சும் குரலில் விளித்து ‘காதல் எனும் கவிதை சொல்லடி' (வண்ண வண்ணப் பூக்கள்) என எஸ். ஜானகியுடன் இணைந்து இளையராஜா வழங்கிய பாடல் நினைவில் அலைமோதுகிறது. இப்படி நம் அடிமனதில் தங்கிவிட்ட எத்தனையோ கண்ணம்மாக்களுடன் சேர்ந்துகொள்ளப் புதிதாக ஒரு ‘கண்ணம்மா’வைத் தந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

இனிப்பாயவாழ எண்ணிடுவோம் ! ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ....

.

       சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
           சந்தோஷக் கடல்மூழ்கி சர்க்கரையை நினைந்திடுவார்
      சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
            தாம்விரும்பும் சர்க்கரையை தனியாகச் சுவைத்துநிற்பார் !

     உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
           விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
     பலர்மனதில் பதியாமல் பாதிவழி  நிற்பதுவே
            நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !

     நோய்க்கெல்லாம் தாயாக சர்க்கரைநோய் விளங்குதென
             நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
     பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
           வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்  !

     சமாதானம் பலசொல்லி சர்க்கரையை எடுத்திடுவார்
           சலரோகம் அவரிடத்தில் சன்னதமேஆடிநிற்கும்
     சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
            அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார் !

     உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
            நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
    இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
           இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார் !

கலக்ஸியும் கந்தசாமியும் நாவல் வெளியீட்டில்

.

என்னை எப்போ தமிழில்  எழுதப்போரிங்க என்று இங்கு வந்திருக்கும்  SBS Renuka Thuraisingham ஒரு முறை கேட்டிருக்கிறார் அப்போ  JKyin ‘kollaipuraththu kathalikal’ பாணி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன் .அதன் பிறகு அவர் எழுத்துமேல்  காதல் கொண்டேன்.
Wlliam Shakespeare,   George Bernard Shaw இருவரும்  சமூக குறைபாடுகளை கேலிப்பேச்சு அதாவது  satire   மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேகேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர்உதாரணமாக , Touchstone என்று  oru fool,  Shakespearin As you like it நாடகத்தில்  அப்பப்ப  தோன்றி  மக்களை  சிரிக்க  வைத்தது  மட்டுமல்லாமல்  சிந்திக்கவும்  உதவினார் .
Bernard Shawin Pygmalion நாடகத்தில்  Eliza Doolittle ஒரு  சாதாரண  பூக்காரி. அவளின்  நடை  உடை  பேச்சை  அடியோடு  மாத்தி , London வாழ்  upper class மக்களை  திணறவைக்கிறார்  Professor Henry Higgins.
 Kandhasaamiyum galaxiyum நாவலில்கதாசிரியர்  JK இந்த  satirai கையாளுகிறார் அவரின்   கதாநாயகன் எப்போதும்  அரையில் சாரம்  கட்டி   தோளில்  துவாய் துண்டு போட்டிருப்பார்அதிகாலையில்  வளவுக்கு  போக  சுருட்டு  புஹைப்பார்.   “அய்யய்யோ உலகம் அழியப்போகிது ,” எண்டு  மக்கள்   அலறியடித்து  திண்டாடியபோதும்   தில்லுமுல்லு பண்ணற  சுமந்திரன், “ஏய், மறந்திடாமல்  துவாயை எடுத்து வா,” என்கிறார் . அதன்  ரஹஸ்யம்  thaan என்னஅதுதான் அவர்கள் கலக்ஸியில் போறதுக்கு  magic carpet  போலும்
அதே  நேரத்தில்  அச்சன்  குளத்து  மைதிலி  தின்னவேலி  கடையில்  காலை  உணவு  சாப்பிடுறாள். அவள்  மனசில்  பல  குழப்பங்கள்ஆனா  பச்சைமிளகாயை  கடித்த  மாத்திரத்தில்  அவளுக்கு  ஞானோதயம்  பிறக்கவும்உடனே  தன்   சிநேகிதருடன்  முக  நூலில்  பகிர்ந்து  கொள்ள  நினைக்கவும்எங்கள் அருமையான பூமி  வெடித்து  பொடிபொடியாய்  சிதறுகிறது.

உலகச் செய்திகள் )


குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி

நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி

இந்தியாவில் பூமியதிர்ச்சி

 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்

 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் அதிரடி

இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)


மட்டக்களப்பில் பிக்குவால் அவமதிக்கப்பட்ட தமிழ் அரச உத்தியோகத்தர்கள்


மட்டக்களப்பில் பிக்குவால் அவமதிக்கப்பட்ட தமிழ் அரச உத்தியோகத்தர்கள் ! வேடிக்கை பார்த்த பொலிசார் விதைக்காமலேயே முளைத்து விடுகிறார்கள்! விரோதிகளும் துரோகிகளும்


http://jaffnaexpress.com/2016/11/13/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/



மூத்த கவிஞரும் எழுத்துருப் படைப்பாளியுமான முருகையன்

.

Mathan Sathasivam

நாடகங்கள் பல வகையின. அவற்றுள் கவிதை நாடகமும் உள்ளடங்கும். “பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே” என்று பணித்தான் மகாகவி பாரதி. அவனுக்குப் பின்  ஒரு புதிய கவிஞர் பரம்பரையே தோன்றிற்று. இந்திய கவிதை நாடகாசிரியர்களான பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் வி.கோ.சூரியநாரயண சாஸ்திரியாரும் திருச்சிற்றம்பலக் கவிராயரும் வேறு சிலரும் கவிதை நாடகத்தை எழுதியுள்ளனர். இதே போல் ஈழத்திலும் பல கவிதை நாடகாசிரியர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அந்த வகையில் இ.முருகையன், து.உருத்திரமூர்த்தி, நீலாவணன், இ.அம்பிகைபாகன், க.சொக்கலிங்கம் போன்ற பாநாடகாசிரியர்களின் பணி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் கவிதைகளுக்கும் கவிதை நாடக வளர்ச்சிக்கும் காலாயமைந்தது. அந்த வகையில் இக்கட்டுரை ஈழத்துத் தமிழ் இலக்கிய , நாடகத் துறையின் வளர்ச்சிக்கு கவிஞர் இ.முருகையனின் படைப்புகள் எவ்வாறு பங்காற்றின என்பதை ஆராய்வதாகவுள்ளது.

 கவிஞர் இ.முருகையன் சாவக்சேரியின் கல்வயல் எனும் பிரதேசத்தில் 1935.04.23 அன்று பிறந்தார். தனது கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் தொடர்ந்ததையிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் கற்று பட்டதாரியானார்(1956). அதனைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் “கலைப்பட்ட பாடநெறியை” முழுமை செய்ததோடு தனது “முதுகலைமாணிப் பட்டத்தை” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார்.

நடிகை ரேகா மோகன் மர்மான முறையில் இறந்து கிடந்தது



.

திருச்சூர் அடிக்குமாடி குடியிருப்பில் மலையாள நடிகை ரேகா மோகன் மர்மான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மலையாளத்தில் உத்தியான பாலகன், யாத்ரா மொழி மற்றும்  நீ வருவோளம் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரேகா மோகன். மாயம்மா என்ற டிவி சீரியல்களிலும் நடித்தவர். ரேகா மோகன் திருச்சூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மோகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக ரேகா மோகன் வெளியே வரவில்லை. துபாயில் உள்ள அவரது கணவரும் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். 

ஆனால் தொலைபேசி அழைப்பை ரேகா மோகன் எடுக்கவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் திருச்சூர் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ரேகா மோகன் வீட்டிற்கு சென்றனர். அங்கு கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேகா மோகன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். 

போலீசார் அவரதுஉடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரபல மலையாள நடிகை ரேகா மோகன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்

.

தற்காலத்தில் படைக்கப்படும் இலக்கியங்களில் அறச் சிந்தனைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறதோ இல்லையோ சுற்றுப் புறச் சூழ் நிலைகளை, அதன் அவசியத்தை, அதன் தூய்மையை வலியுறுத்தும் செய்திகள் பல காணப்பெறுகின்றன. காரணம் படைப்பாளர்களுக்குச் சுற்றுச் சூழல் பற்றிய கவலை, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதே ஆகும். சுற்றுச் சூழல் என்பது ஓர் உயிரியைச் சுற்றியுள்ள் ஒட்டுமொத்த அமைப்பு என்றும் அது காற்று, ஒளி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய மற்ற உயிரினங்களையும், அந்த உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணிகளை உள்ளடக்கியது என்று விளக்கம் தரப்பெறுகின்றது. இக்கருத்தின்படி படைப்பாளனும் ஓர் உயிரி என்ற அடிப்படையில் அவனைச் சுற்றி நடக்கும் இயற்கைசார் நிகழ்வுகள் சுற்றுச் சூழல் நடப்புகளாகின்றன. அவற்றை அப்படைப்பாளன் பதியவைப்பதன் வாயிலாக அவனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உரிய படைப்புகளைத் தருபவன் ஆகின்றான்.

தமிழ் சினிமா

அச்சம் என்பது மடமையடா


சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா.
ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம். இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

Achcham Enbadhu Madamaiyadaசிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல்.
சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது.
பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.

படத்தை பற்றிய அலசல்

சிம்பு இஸ் ரியல் கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது. இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு என்று சொல்ல தோன்றுகின்றது.
மஞ்சிமா தமிழுக்கு புதுவரவு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து நடித்துள்ளார். இதை தவிர நம்மை மிகவும் கவருவது சதீஷ், மொட்டை போலிஸ் ஒருவர்.
கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும். ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது.
சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, லைஃபில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனமும் சரி கௌதம் சூப்பர்.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான். பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார். ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.
சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.
கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது ஒரு தரப்பு ஆடியன்ஸிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம், மேலும், சிம்பு கால்ஷிட் பிரச்சனையா தெரியவில்லை, பர்ஸ்ட் ஆபில் உடல்வாகு மாறி மாறி வருகின்றது.
சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.
நன்றி   cineulagam