விசாலமான வெளிமண்டபத்துக்கு வந்த பின்னர், சந்திரனிடம்
கட்டுப்பட்டு
நின்ற சுவாசம் பெருமூச்சுடன் எழுந்து பறந்தது.
பாலேந்திராவுக்கு ‘ கோல்
‘ கொடுப்பதாயின் சில்லறை வேண்டும். சில்லறை நாணயங்களுக்கு ட்ரவலர்ஸ் செக்கை
மாற்றவேண்டும். எங்கே இந்த பேங்க்…?
கண்ணில் அது சிக்கவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்து
அந்தரப்படும் அவன் கோலத்தைக் கண்டு ஒரு பெண் அருகே வந்தாள். அவளது சீருடை – அவள் அந்த
மண்டபத்தில் ஏதோ ஒரு வேலையில் அமர்ந்திருப்பதாக இனம் காட்டுகிறது.
“ஏதும் உதவி வேண்டுமா..? “ அவளது ஆங்கில உச்சரிப்பை சிரமப்பட்டுத்தான் புரிந்துகொண்டான்
சந்திரன்.
“ தாங்ஸ்…. பேங்க்….. ? “ என்று மட்டும்தான் கேட்டான்.
“அந்தப்பக்கம் திரும்புங்கள்… பேங்க்… அங்கேதான்
இருக்கிறது
. இவற்றையேன் இப்படி தூக்கி சுமக்கிறீர்கள். அந்த
‘ட்ரொலி
‘ யை எடுங்கள். “ – அவள் ஆலோசனையை உதிர்த்துவிட்டு,
“
ஹாய்… “ என்று எவனையோ பார்த்து
கையசைத்துக்கொண்டு போய்விட்டாள். அவளுடன் இன்னும் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டவில்லையே
என்ற தவிப்பு சந்திரனுக்கு.
முன்பின் தெரியாத அழகிய
பெண் தானாக வலியவந்து கதைத்து, உதவ முன்வரும்போது ஏற்படும் சிலிர்ப்பு… அனுபவித்துப்பார்க்கும்
போது தனிச்சுகம்தான்.
அவள் சுட்டிக்காட்டிய
‘ ட்ரொலி ‘ யை எடுக்கும்போது, இவ்வளவு
நேரமும் இந்தச் சுமைகளை அநாவசியமாக சுமந்துகொண்டிருந்தேனே… இன்னும் நான் வழமைக்குத்
திரும்பவில்லையா..? தன்னையே கேட்டுக்கொண்டான் சந்திரன்.
பேங்கில் பாஸ்போர்ட்டைக்காட்டி ட்ரவலர்ஸ் செக்கில்
பத்து அமெரிக்கன் டொலர்களை அவுஸ்திரேலிய நாணயத்துக்கு மாற்றி, ஒரு டொலருக்கு சில்லறையும் எடுத்துக்கொண்டு, ரெலிபோன்
பூத்துக்குள் நுழைந்து நாணயங்களை போட்டு, பாலேந்திரா வீட்டின் இலக்கத்தை சுழற்றியபோது,
“ ஹலோ…. “ தான் ஹலோ….சொல்லுமுன்னமே மறுமுனையில் கேட்ட பெண்குரலை
இனம்காணமுடியாமல், “சந்திரன்…ஹியர்… பேர்த் ஏயார்போட்டிலிருந்து பேசுகிறேன்.
பாலேந்திரா இருக்கிறாரா? “ – சந்திரன் கேட்டான்.
“ யெஸ்…. இது பாலேந்திரா வீடுதான். அவர் இப்போது
இங்கே இல்லை. என்ன விஷயம்… என்று சொன்னால், அவருக்கு தகவல் அனுப்ப முடியும். “ சந்திரன் ஒருகணம் தயங்கினான்.
“ நான் இப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறேன். மிஸ்டர் சாமிநாதன், பாலேந்திராவின் ரெலிபோன் நம்பரைத்தந்தார்.
எனக்கு உதவமுடியுமா…? “
“ ம்… உதவி… உதவி… என்றால்… என்ன மாதிரியான உதவி…?
“
மூன்று தடவைகள் பெண் குரலில்
ஒலித்த உதவி என்ற சொல் சந்திரனை கொஞ்சம் வாட்டியது.
“ பேர்த்தில் எனக்குத்
தெரிந்த எவரும் இல்லை. மிஸ்டர் பாலேந்திராவையும் நான் நேரில் பார்த்தது இல்லை. சாமிநாதன்தான் அவரது இலக்கத்தை தந்தவர்… “ இழுத்து
நிறுத்தினான் சந்திரன்.
“மிஸ்டர்
சாமிநாதன்… ம்… ஓல்ரைட்… ஏயார்போர்ட்டுக்கு வெளியே வந்து நில்லும். வந்து கூட்டிப்போகிறேன் “
“ தாங்ஸ்… பாலேந்திரா வருவாரா…? “
“ வரமாட்டார். நான்தான் வரவேண்டும் “