-மீரா ஸ்ரீனிவாசன்
28/10/2019 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.