ஓர் அறிவிப்பாளரின் குரல் அடங்கி விட்டது

.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன்  நேற்று (04 .05 . 2017)  நீர்கொழும்பில் காலமானார். காலமானார். 

1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார். 

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.  அறிவியல் பட்டதாரியானஇவர் . பின்னர் விஞ்ஞான ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார். 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள அவர், 1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். 

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சற்சொரூபவதி நாதன், ஜவகர்லால் நேரு விருது (1958), சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, வானொலி பவள விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார்.

குயில் தோப்பு (சிங்கப்பூர்) - பிச்சினிக்காடு இளங்கோவன்


- பிச்சினிக்காடு இளங்கோ -
ஒற்றைக் குயிலோசை
ஒலிக்கிறது நாடெங்கும்
காலையிலும் மாலையிலும்
கண்ணுறங்கும் வேளையிலும்
காற்றில் கரைகிறது
காதுவழி நிறைகிறது
கேட்கும் குரலொலியில்
கேள்விப் பிறக்கிறது
பாடி மகிழ்கிறதா?-துணையை
பாடி அழைக்கிறதா?
கூடிழந்து சோகத்தைக்
கூவி அழுகிறதா?
உறவை இழந்ததனால்
ஒப்பாரி வைக்கிறதா?
என்ன சோதனையோ
எதனால் வேதனையோ
மொழியும் புரியவில்லை
மொழிபுரிய வழியுமில்லை
உண்ணக் கனிகள்தரும்
உறங்கிவிழ நிழல்கொடுக்கும்
விண்ணைத் தொடுமரங்கள்
வேரோடு அகன்றதனால்
விருட்சம் இருந்த இடம்
வீடெழுந்து நிற்பதனால்
காடென்றும் கழனியென்றும்
கரடென்றும் குன்றென்றும்
தோப்பென்றும் துரவென்றும்
மலையென்றும் முகடென்றும்
மழைவழங்கும் கார்முகிலால்
ஆறென்றும் அருவியென்றும்குழலூதும் மாமனையும் வேலேந்தும் மருகனையும் இசையால் துதித்த இளையோர்

.
                                                                                    திருமதி பராசக்தி  சுந்தரலிங்கம்   


சிட்னியில் இயங்கும் லக்ஷ்மி பைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவ மாணவியர் சென்ற வாரம் ஏப்ரல் மாதம் 21  ம்   தேதி 2017 அன்று  பரமற்றா       ரிவர்சைட் கலையரங்கிலே ஓர் இன்னிசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்கள் 

 வேலை ஏந்திய முருகப் பெருமான்   மீதும்    குழலூதும் கண்ணபிரான்  மீதும்   சான்றோர் பலர் பாடியருளிய  துதிப் பாடல்களை  இம்மாணவர்கள்  மாறி மாறிப் பாடி கேட்போரை   மகிழ்வித்தனர் 

 இந்த இசைக்கல்லூரி ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி பகீரதன் அவர்கள் தனது மாணவர்    எல்லோருக்குமே சிறியவர் முதல் பெரியவர் வரை - பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் 
வெவ்வேறு தரத்திலே   தன்னிடம் இசை பயிலும் மாணவர்கள் எல்லோரையுமே   பயிற்றுவித்து   மேடையேற்றுவது என்பது சாதாரண செயலல்ல ஆனால் இதனை அவர் சாதித்துக் காட்டிவிட்டார் 


இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடைவேளையின்றி இந்தச் சிறார்கள் பாடினார்கள் என்பது சாதனை !ஆசிரியை நல்லதோர் உத்தியைக் கையாண்டதை வரவேற்க வேண்டும் உயர்ந்த தரத்திலுள்ள மேல்வகுப்பு  மாணவர் இரண்டுமணிநேரமும் தொடர்ந்து மேடையிலேஅமர்ந்திருக்க,, ,சிறார் அவரவர் தரத்திற்கேற்ப  ஒழுங்காக வரிசையாக  வந்து அவர்களுக்குப்

பின்னாலே நின்று பாடிவிட்டுச் சென்றார்கள் இதனால் மேடையிலே குழப்பம் மற்றும் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது இந்தச் சிறுவர்களுக்கு அனுசரணையாக  மேல்வகுப்பு மாணவர்கள் சேர்ந்து பாடியதால் சிறுவர்கள் பயமோ தயக்கமோ இன்றிப் பாடுவதை அவதானிக்க முடிந்தது 

மே 06 ஆம் திகதி -மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் வாசிப்பு அனுபவப்பகிர்வு

.

மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் வாசிப்பு அனுபவப்பகிர்வு
          மொழிபெயர்ப்பு  அரங்கு - கருத்தரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர்  விழாவில்  நாவல்,  மொழிபெயர்ப்புச்சிறுகதை, திறனாய்வு, கட்டுரை,  நேர்காணல்  முதலான  துறைகளில்  சமீபத்தில் வெளியான   நூல்களின் அறிமுகத்துடன் அவற்றின் மீதான வாசிப்பு  அனுபவப்பகிர்வும்  இடம்பெறவிருக்கிறது.
 எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபத்தில்   ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) நடைபெறவுள்ள  இவ்விழாவில் நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன் தலைமையில்  இடம்பெறும்.
அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் கடந்த காலங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களிலும், கலை - இலக்கிய நிகழ்வுகளிலும்  வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் அவ்வப்போது  சிறுகதை, கவிதை, நாவல் முதலான துறைகளிலும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை சங்கம் நடத்தியிருக்கிறது.  அவுஸ்திரேலியாவிலும் இலங்கை, இந்தியா, மற்றும் கனடா, ஐரோப்பிய நாடுகளிலும்  வதியும் எழுத்தாளர்களின் படைப்புகளும்  இந்நிகழ்ச்சிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
படைப்பூக்கம்,  உள்ளடக்கம், கதை சொல்லும் பாங்கு, பாத்திர வார்ப்பு தொடர்பாக உள்வாங்கிக்கொண்ட அம்சங்களை பதிவுசெய்து,  தமது வாசிப்பு  அனுபவத்தை பகிர்ந்து  கேட்பவர்களையும் வாசிக்கத்தூண்டும்  வகையில் உரையாற்றுவிதமாக இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தாம்  அண்மையில்  படித்த நூலின்  அறிமுகத்துடன் நேரக்கட்டுப்பாட்டையும் கவனித்து, வாசிப்பினால் பெற்ற அனுபவத்தை சொல்வதே இந்த அரங்கின் நோக்கமாகக்கருதப்படுகிறது.


சிட்னியில் சித்திரைத் திருவிழா 07 05 2017

.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஆதரவோடு நடாத்தும் சிட்னியில் சித்திரைத் திருவிழா 2017 மே மாதம் 7ம் திகதி இடம் பெறுகின்றது .துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம் 07.05.2017

.
MAHA KUMBABHISHEKAM - 7th May 2017
The Sydney Durga Temple’s Raja Gopuram has been complete and the Maha Kumbabhishekam will be celebrated on Sunday 7th May 2017.
In three days time, the first of the  8 day festival will commence (April 30th to May 7th). The details are as follows:April 30th 2017- poorvanga Poojas
Morning - Shodasa Ganapathy Homam
Evening - Vasthu santhi
May 1st 2017
Morning - Navagraha Homam, Vimana Kalasa Sthapanam
Evening - Pravesa Bali


நாடகக் கலைஞர் பிரான்சிஸ் ஜெனம் மறைவு

 .

1980 இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் அரங்கேறிய "பொறுத்தது போதும்" என்ற நாடகக் கூத்தினை பார்த்து பிரமிப்படைந்தேன். அது அ.தாசியசினால் கூத்து வடிவில் எழுதப்பட்ட மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. அதில் சம்மாட்டியாராக நடித்து சிறந்த நடிகர் ஜனாதிபதி விருது பெற்றவர் பிரான்சிஸ் ஜெனம்
பிறகு நா. சுந்தரலிங்கத்தின் "அபசுரம்" யாழ் பல்கலைக்கழகத்தில் மேடையேறியபோது அருளர் என்ற அரசியல்வாதியின் பாத்திரத்தில் அவரது நடிப்பினை மீண்டும் பார்க்கக் கிடைத்தது. இயல்பாகவே நகைச்சுவையுணர்வு நிரம்பிய ஜெனத்துக்கு இப்பாத்திரம் நன்றாக பொருந்தியது.
1985 க்குப் பின் யாழ் பல்கலைக் கலாசாரக் குழுவினரின் தொடர்புகள் மூலம் நாடக அரங்கக் கல்லூரியை சேர்ந்த பலருடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் வயது வித்தியாசம் பாராது எவருடனும்  நட்புடன் பழகும் ஜெனத்தை ஜெனம் அண்ணை என்று அழைத்தோம்.
நடிகராக மட்டுமன்றி அவர் இயக்கி பாடசாலைகளில் மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின்(குழந்தை மாஸ்டர்) நாடகங்களிலொன்று "தாயுமாய் நாயுமானார்".
இரு முறை அவர் பங்கேற்ற நாடகப் பட்டறைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் வார நாட்களில் குழந்தை மாஸ்டர் வீட்டில் நடைபெறும் சந்திப்புகளில் தவறாது கலந்து கொள்வார். அப்போது அவர் அரியாலையில் இருந்தார்.


படித்தோம் சொல்கின்றோம்: - முருகபூபதி

.
நூலகர் செல்வராஜாவின்  ஆவணப்பதிவு -- ஈழநாடு - ஒரு ஆலமரத்தின் கதை
" யோகர்சுவாமியின்  காலத்தை  முந்திய ஞானமும்
பிரதமர்  ரணிலின் காலத்தைப்   பிந்திய  ஞானமும் "
         

                                                     
" ஈழநாட்டிலே  பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின்  சொந்தப்  பண்பாட்டினையும்  உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது,  பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர்  என்பதையுணர்ந்து  வேற்றுமையில்  ஒற்றுமை காண  முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது  சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள்  அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான்  இலங்கைக்கு  உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு  விளக்கம்  தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." - என்று 58 ஆண்டுகளுக்கு முன்னர் (அமரர்) கே.சி. தங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து 11-02-1959 ஆம் திகதி வெளியான முதலாவது ஈழநாடு வார  இதழில் பதிவுசெய்துள்ளார்.
ஈழநாடு  வெளிவருவதன் நோக்கத்தை அவர் அன்று எழுதியிருந்தாலும், அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு இற்றைவரையில் சரியான பதில் கிடைக்கவும் இல்லை.  தீர்வுகளும் தூரத்தூர  விலகிச்சென்றுகொண்டே  இருக்கின்றன.


இலங்கைச் செய்திகள்


65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்களே அவதானம் : 8332 பேர் பாதிப்பு..!

வவுனியாவில் 62 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில்

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்!

கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிரதமர் ரணில் - இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு; தெற்காசியப் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஸின் வளர்ச்சியைத் தடுக்கவும் திட்டம்


இலங்கையில் பாரதி -- அங்கம் 17 - முருகபூபதி

.

"மாவலியின்  இரு கிளைக்கரங்களாலும் அரவணைக்கப்பட்டு, அதன் முகவணையில் ஓர் ஆற்றிடை மேடென மிளிர்வது கொட்டியாபுரப்பற்று.
அகத்தியர் தாபனம், சேர்வாவலை, திருமங்கலாவை, வெருகலம்பதி, இலங்கைத்துறை, நொக்ஸ் புளியை, கோட்டையாற்றுத்துறை, வண. மிக்கேல்மெல் கல்லறை முதலான பல இட - தல பெயர் வரலாறுகளைக்கொண்டு புராண இதிகாச, சரித்திரங்களில் இடம்பெற்றுத்திகழுமிந் நற்பதி நீர்வள நிலவளத்தின் மிக்கது. எனினும் கலைவளமின்மையாற் கவின் குறைந்தது. இப்பழம் பெருமை நிறைந்த பரந்த பதியின் முகநகரே மூதூர்."
இவ்வாறு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் திகழும் மூதூர் பற்றிய விவரணம் 1965 ஆம் ஆண்டளவில் வெளியாகியிருக்கிறது.
இலங்கைத்தமிழின அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகித்திருப்பது மூதூர்.
நீண்ட காலமாக ஈழத்தமிழரின் தலைநகரம் என வர்ணிக்கப்பட்ட திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூரில் மூவின மக்களும் வாழ்கின்றனர். அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய பிரதேசமாகவும் இவ்வூர் கருதப்படுகிறது.


வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல் -பாக்கியம் சங்கர்

.

வடசென்னை என்பதும் மனிதர்கள் அடர்ந்து வாழும் பகுதிதான். என்ன சொன்னேன்? வாழும் பகுதி என்றா? அல்ல. வாழ முயற்சிக் கும் ஊர்தான். ஏனைய ஒரு மற்றும் தென் சென்னைகளின் சிலர் நினைப்பது போல கொசுக்கள், ஈக்கள், மூட்டைகள், பாம்பு தேள்கள் வாழும் ஊர் அல்ல. அங்கும் காதல், அன்பு, துரோகம், மது, வன்முறைகள் என்கிற மனித இலக் கணங்களோடு மானுட விவசாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருவொற்றி யூர் மண்ணைத் திருநீறு என்றார் ஒரு அடிகள். ஒரு வள்ளலார் அங்கே தருமம் தழைதோங்குகிறது என்றார். அங்கேயும் புல் முளைக்கிறது. பூ பூக்கிறது. அப்புறம் என்ன வழக்கு?
தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை முதலான பல பிரதேசங்களில் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் நண் பர்களான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் அங்கு தமிழ் முகத்தை நவீனமாக் கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் களில் முக்கியமானவர் அண்மை வரவு கவிஞரும் எழுத்தாளருமான பாக்கியம் சங்கர். ‘நான் வடசென்னைக்காரன்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுதி, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயமானம் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த படைப்பாக மிளிர்கிறது.

உலகச் செய்திகள்


பிரான்ஸில் வரலாற்று மாற்றம் : ஜனாதிபதி தேர்தலில் அரசியல் அனுபவமில்லாத மக்ரோன் வெற்றி..!

20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்

 எறிகணை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இராணுவத்தினர் பலி!


இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்? இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்? - சி.மெளனகுரு

.

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சில  அனுபவப்
பதிவுகள்)
அரங்கு அரசியல் பேசியது
1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.
இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.
போராட்டமும் போராளிகளும்

பரந்தமனம் எழவேண்டும் !எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

.

                     குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
   தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
   அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
   அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

   அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
   ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
   அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
   ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

  ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
  அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
  ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
  அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

  நீரில்லா நிலையினிலே நிலம்வரண்டு வீணாகும்
  போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்
  பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்
  ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

 குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்
 குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்
 வளங்கொழிக்கும் வயலனைத்தும் வரண்டவனம் போலாகும்
 நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !

மேமன்கவி யின் நூல் வெளியீடும், மணிவிழா நிகழ்வும்

.


மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

இவ்விழாவில் பிரதம அதிதிகளாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்,  கொடகே புத்தக நிறுவன அதிபர் சிரிசுமன கொடகே, தேவி ஜீவலர்ஸ் என்.எஸ். வாசு, சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியச் செயலாளர் கமல் பெரேரா, ஆகியோர் கலந்துக் கொள்வார்கள்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார். மேமன்கவியின் ''மனிதநேய நேசகன்'' மணிவிழா மலரின்  சிறப்புப் பிரதியினை தேவி ஜூவலர்ஸ் அதிபர்   என். எஸ். வாசு பெற்றுக் கொள்வார். நூல்களுக்கான அறிமுகவுரையை கெக்கிராவ ஸூலைஹா மேற்கொள்வார்.

வாழ்த்துரைகளை டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், கமல் பெரேரா, பத்மா சோமகாந்தன், கே.எஸ்.சிவகுமாரன், தமிழ்நாடு வளரி கவிதை ஆசிரியர் அருணாசுந்தரராசன் ஆகியோர் முன் வைப்பார்கள்.

குடிவரவாளன்

குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.


E-mailPrintPDF
-  முனைவர் ஆர்.தாரணியின் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். -  பதிவுகள் -

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 


தமிழ் சினிமா

சிவலிங்கா


லாரன்ஸுக்கும் பேய்க்கும் எப்போதும் ஒரு வெற்றி கனெக்‌ஷன் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அவர் இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா-2 வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு பேய் களத்தில் கமர்ஷியல் கிங் பி.வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் தான் சிவலிங்கா. இந்த பேய் மிரட்டியதா? பார்ப்போம்.

கதைக்களம்

சக்தி வாசு படத்தின் ஆரம்பத்திலேயே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகின்றார். அந்த கேஸை நீதிமன்றம் தற்கொலை என்று முடித்து வைக்கின்றது.
ஆனால், இது கொலை தான் என சக்தியின் காதலி மீண்டும் அந்த வழக்கை எடுக்க, யாருக்கும் தெரியாமல் இந்த கேஸ் புலனாய்வு துறைக்கு மாறுகின்றது.
லாரன்ஸ் அந்த கேஸை எடுத்து கண்டுபிடிக்க தொடங்கும் முன்னரே அவரின் மனைவி ரித்திகா சிங் மீது சக்தியின் ஆவி ஆக்ரமிக்கின்றது.
நீ என்னை கொலை செய்தது யார்? என்று கண்டுப்பிடித்தால் தான் உன் மனைவி உடலைவிட்டு செல்வேன் என சக்தி கூற, பின் லாரன்ஸ் எடுக்கும் அதிரடியே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

லாரன்ஸ் 1500வது தடவையாக பேயை பார்த்து பயப்படுகின்றார், பின் பேய் கூட பேசுகின்றார், வழக்கம் போல் பேய் ஆசையை நிறைவேற்றுகின்றார். முனி சீரியஸில் பார்த்த அதே லாரன்ஸ் என்றாலும், இதில் அவரின் ஓவர் ஆக்டிங் இல்லாமல், கொஞ்சம் இயல்பாக நடித்துள்ளார். சக்தி இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்ற அளவிற்கு நடித்துள்ளார்.
ரித்திகா சிங் பாக்ஸராக களம் இறங்கி, ஆண்டவன் கட்டளை படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்த பிறகு தற்போது தான் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோயினாக மாறியுள்ளார். ஆடல், பாடல் என இவரும் இந்த ட்ரெண்டுக்கு வந்துவிட்டாரே என்று வருத்தப்பட வைக்கின்றது. இருந்தாலும் இவர் உடலில் பேய் வரும் போது அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் செம்ம, ஆனால், கவர்ச்சி எல்லாம் வேண்டாம் ரித்திகா.
நீண்ட வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தது இந்த வடிவேலுவிற்காக தான் என்று சொல்லும்படி கலக்கியுள்ளார். அதிலும் Use me என்ற வசனம் இனி மிமி கிரியேட்டர்களுக்கு விருந்து. தான் எப்படி திருடன் ஆனேன் என்பதை ஊர்வசியிடம் சொல்லிக்காட்டும் இடம் சிரிப்பு சரவெடி.
பி.வாசு பல வருடமாக பல மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தவர். இவர் திரைப்பயணத்தில் இல்லை தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாராலும் மறக்க முடியாத படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் போல் தான் உள்ளது இந்த சிவலிங்கா. ஆனால், அதில் பேய் இல்லை, இதில் பேய் உள்ளது, அவ்வளவு தான் வித்தியாசம்.
படம் என்ன தான் கமர்ஷியல் மசாலா என்றாலும் பல இடங்களில் லாஜிக் மீறல், ஆத்மாவில் நல்ல ஆத்மா, என் உடலுக்குள் வா என்றால் பேய் வந்துவிடுகின்றது, போ என்றால் போய்விடுகின்றது. இது நல்ல பேயா? கெட்ட பேயா? என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் வந்து செல்கின்றது. ஒளிப்பதிவு தெலுங்கு படம் போல் கலர்புல்லாக உள்ளது. தமன் இதுவரை உங்களுக்கு என்ன பாடல் கொடுத்தேன், அதே தான் இந்த படத்திலும் என்று போட்ட டியூனையே போட்டுள்ளார்.

க்ளாப்ஸ்

சலிப்பு இல்லாமல் செல்லும் திரைக்கதை, குறிப்பாக கிளைமேக்ஸில் லாரன்ஸ் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுப்பிடிக்கும் காட்சி.
வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன பேய் ட்ராமா.
ராதாரவி, ஊர்வசி, பானுபிரியா என பல முன்னணி நட்சத்திரங்கள் ஏதோ ஜுனியர் ஆர்டிஸ்ட் போல் வந்து செல்கின்றனர். கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் தீவிர முனி சீரியஸின் ரசிகர்களா நீங்கள், கண்டிப்பாக இந்த சிவலிங்கா உங்களை ஏமாற்றாது.
Direction:
Music:

நன்றி  Cineulagam