தற்போதுஅவுஸ்திரேலியாவில் பரவிவரும்கொரோனா (COVID-19Coronavirus) தொற்றுநோய் தொடர்பில்மத்திய அரசு, மாநில அரசு , மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் அறிவித்தலுக்கு அமைய
அனைத்து போட்டிகளும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதிஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறும். வர்ணம் தீட்டுதல்(பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
போட்டிகளுக்கான விண்ணப்படிவம்
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 10/10/2020 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacomp2020@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்தில் கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.
போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு கீழே பெற்றுக்கொள்ளலாம்.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்
பாலர் ஆரம்ப பிரிவு (01.08.2015 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி
பாலர் பிரிவு (01.08.2013 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி
கீழ்ப்பிரிவு (01.08.2011 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
மத்தியபிரிவு (01.08.2008 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
மேற்பிரிவு (01.08.2005 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
அதிமேற்பிரிவு (31.07.2005 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கரும பீடத்திலும்; தமிழ்முரசு அவுஸ்திரேலியா (www.tamilmurasuaustralia.com) இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும் அல்லது பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திருமதி க ஜெகநாதன் 0434 098 842
திரு செ பாஸ்கரன் 0407 206 792
திரு ப பஞ்சாத்தரம் 0434 006 841
திருமதி ஜெகத்ஜெனனி சிவானந்தன் 02 9863 1465
திருமதி பாஸ்ஹரி சிவஞானசுந்தரம் 0490 833 586
====================================================================
விண்ணப்படிவம்
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 10 / 10 / 2020 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacomp2020@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்
======================================================================ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2020
அறிவுப் போட்டி - விதிமுறைகள்
1) ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் இருவர் சேர்ந்து போட்டியை நடாத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் அன்றே தெரிவிக்கப்படும்.
2) போட்டியின்போது பெற்றோர் இருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
3) போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர், எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும். முறைப்பாட்டுப் படிவம் கொடுக்கப்படும்.
4) முதலாவதாக வந்த பிள்ளையின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்றய பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.
5) 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band B ஆகவும், 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
திருமுறை ஒப்புவித்தல் போட்டி - விதிமுறைகள்
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.
1. மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)
தடங்கலின்றி திருமுறையை ஒப்புவிக்கவேண்டும் நீங்கள் பயின்ற ராகத்தில் பாடலாம் அல்லது ஒப்புவிக்கலாம் சரியாக மாணவர்கள் மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்
2. உச்சரிப்பு: (40 புள்ளிகள்)
மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விழங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும். கீழ்ப்பிரிவில் மழலை உச்சரிப்பு இருத்தல் பிழையன்று.
3. சபை மரபு: (20 புள்ளிகள்)
சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விழித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும். ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து. தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.
விதி முறைகள்
1) ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் நியமிக்கபடுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும்.
2) போட்டியின்போது பெற்றோர் தமக்குள் உரையாடுவதும், தம் பிள்ளைகளுடன் உரையாடுவதும், இடையிட்டு கருத்து தெரிவிக்க முயல்வதும் தவிர்க்கபட வேண்டும். போட்டிகளின் போது பெற்றோர் அமைதியாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.
3) போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும்.
4) பிள்ளைகளின் பங்களிப்புக்கேற்ப பரிசுகள் வழங்கப்படும்.
5) முதலாவதாக வந்த பிள்ளையின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்ற பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும். 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் Band A ஆகவும் 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் Band B ஆகவும் 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற பிள்ளைகளுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வர்ணம் தீட்டும் போட்டி - விதிமுறைகள்
இப்போட்டி பாலர் ஆரம்பப்பிரிவுக்கும் (5 வயதிற்கு கீழ்), பாலர் பிரிவுக்கும் (7 வயதிற்கு கீழ்) மட்டுமே நடாத்தப்படும். பங்குபற்றுவர்களின் வயது கணிக்கப்படும் திகதி 31/07/2020.
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.
1) கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு பொருத்தமான நிறங்களை பாவித்தல்(50 புள்ளிகள்)
2) ஒழுங்காக வர்ணத்தை தீட்டுதல் (50 புள்ளிகள்)
வர்ணம் தீட்டும் பொழுது கோடுகளுக்கு வெளியில் செல்லாமல் தீட்டுதல்.
பொருத்தமான அளவில் நிறங்களைப் பாவித்தல்.
3) ஒவ்வொரு போட்டிக்கும் 2 நடுவர்கள் நியமிக்கபடுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே
முடிவானதாகும்.
4) போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க
வேண்டும்.
5) பிரிவில் முதலாவதாக வந்த பிள்ளைக்கு புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்ற பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.
6) 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 80 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band B ஆகவும், 70 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 70 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
========================================================================
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
கீழ்ப்பிரிவு
இவற்றில் இரு தேவாரங்கள் கேட்கப்படும். ஆனால் மூன்று தேவாரங்களும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
தேவாரம் (1)
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
தேவாரம் (2)
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
தேவாரம் (3)
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே
=======================================================================
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
மத்தியபிரிவு
இவற்றில் மூன்று திருமுறைகள் கேட்கப்படும் ஆனால் நான்கு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
1 தேவாரம்
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயலார் புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தி யாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
2 தேவாராம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே
3 திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துப் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்எனக் கருளிய வாறார்பெறுவார் அச்சோவே
4 அருணகிரிநாதர் திருப்புகழ்
இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
புpறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
===================================================================
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
மேற்பிரிவு
இவற்றில் நான்கு திருமுறைகள் கேட்கப்படும் ஆனால் ஐந்து திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
1 தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயாறடை கின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங்
கண்டறி யாதன கண்டேன்
2 திருவாசகம்
பால் நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
3 திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன் செய் அம்பலத்தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசைய
தொடர்ச்சி மறுபக்கம் ....
4 திருப்பல்லாண்டு
பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
5 திருப்புகழ்
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள் வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞான சத் திநி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
=====================================================================
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
அதிமேற்பிரிவு
இவற்றில் ஐந்து திருமுறைகள் கேட்கப்படும் ஆனால் ஆறு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
1 தேவாரம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
2 திருவாசகம்
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே
3 திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்ந் தனவே.
4 திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல் லாம் விளங்க
அன்னநடைமடவாள் உமைகோன் அடி
மோமுக் கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
5 புராணம்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்
கைம்மல ருச்சி மேற்குவித்து
பண்ணிலால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்
6 திருப்புகழ்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமானே
======================================================================
சைவ சமய அறிவுப் போட்டி
பாலர் பிரிவு
(5 வயது முதல் 7 வயது வரை)
30 கேள்விகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
1 உங்கள் சமயம் எது?
சைவ சமயம்
2 சைவ சமயத்தில் முழுமுதற் கடவுள் யார்?
சிவபெருமான்
3 பூசைக்குத் தேவையான பொருள்கள் 3 கூறவும்.
பூக்கள், பழங்கள், தேங்காய், கர்ப்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, இளநீர்
4 கோயிலுக்கு வேறொரு பெயர் கூறுக?
ஆலயம்.
5 தேர்த்திருவிழா ஒரு ஆண்டில் எத்தனை முறை நடைபெறும்?
ஒரு முறை
6 திருநீற்றை நிலத்தில் (தரையில்) போடலாமா?
திருநிற்றைத் தரையில் போடக்கூடாது.
7 திருநீற்றின் நிறம் என்ன?
திருநீற்றின் நிறம் வெள்ளை
8 பிள்ளையாரை எப்படி வணங்குகிறோம்?
நெற்றியில் 3 முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வணங்குவோம்.
9 கோயிலில் பூசை முடிந்ததும் என்ன கொடுப்பார்கள்?
திருநீறு, தீர்த்தம், சந்தனம், குங்குமம், பிரசாதம்
10 பிள்ளையாருக்கு எந்தப் புல்லினால் அருச்சனை செய்வார்கள்?
அறுகம் புல்லினால் அருச்சனை செய்வார்கள்.
11 திருநீற்றை எப்படிப் பூசுவீர்?
சிவ சிவ என்று உச்சரித்துக் கடவுளை வணங்கியபடி திருநீற்றைப் பூசவேண்டும்.
12 சிவப்புத் தாமரைப் பூவில் இருக்கும் கடவுளின் பெயரைக் கூறுக?
இலக்குமி அம்மன்
13 சந்தனத்தின் நிறம் என்ன?
மஞ்சள் நிறம்
14 குங்குமத்தின் நிறம் என்ன?
சிவப்பு நிறம்.
15 கல்வியைத் தரும் தெய்வத்தின் பெயரைக் கூறுக.
சரசுவதி தேவி (சரஸ்வதி தேவி)
16 வேலைக் கையில் வைத்திருக்கும கடவுளின் பெயரைக கூறுக.
முருகப் பெருமான்
17 மோதகத்தைக் கையில் வைத்திருக்கும் கடவுளின் பெயரைக் கூறுக.
பிள்ளையார்
18 புலித்தோலை அணிந்த கடவுளின் பெயரைக் கூறுக.
சிவபெருமான்
19 பிள்ளையாரின் தம்பி என்று எந்தக் கடவுளின் பெயரைக் கூறுக.
முருகப் பெருமான்
20 கோயிலில் நடைபெறும் ஒரு திருவிழாவின் பெயரைக் கூறுக.
(உ-ம்) தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா...
21 பிள்ளையாரின் வாகனம் எது?
எலி வாகனம்
22 முருகப் பெருமானின் கொடியில் உள்ள பறவை எது?
சேவல்
23 செல்வத்தைத் தரும் கடவுள் யார்?
இலச்சுமி
24 வீரத்தை தரும் கடவுள் யார்?
துர்க்கை
25 சரஸ்வதி கையில் வைத்திருக்கும் இசைக்கருவி எது?
வீணை
26 மூன்று வயதில் தேவாரம் பாடிய நாயனாரின் பெயர் என்ன?
திருஞானசம்பந்த நாயனார்
27 கோயிலுக்குச் சென்றதும் முதலில் எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும்?
முதலில் பிள்ளையாரைக் கும்பிடவேண்டும்.
28 கோயிலுக்கு எப்படி போகவேண்டும்?
குளித்து தூய ஆடை அணிந்து போகவேண்டும்.
29 திருநீறு - இதற்கு இன்னுமொரு பெயர் கூறுக.
விபூதி
30 எந்தக் கடவுளுக்குக் கடைசியாக பூசை செய்யவார்கள்?
சண்டேசுவர (சண்டேஸ்வர) சுவாமிக்கு கடைசியாகப் பூசை செய்யவார்கள்.
===============================================================
சைவ சமய அறிவுப் போட்டி
மத்திய பிரிவு
கீழே மாதிரிக் கேள்விகள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
1 கடவுளை வழிபடுவதற்குரிய சிறப்பான இடம் எது?
கோயில்
2 கோயிலுக்குச் சென்றதும் முதலில் வணங்கும் கடவுள் எது?
பிள்ளையார்
3 கோயிலைச் சுற்றிவந்து கும்பிடுவதை எப்படி அழைக்கிறோம்?
வலம் வருதல்
4 தேவாரம் பாடியவர்கள் யார்?
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
5 திருவாசகம் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
6 'தோடுடைய செவியன்' என்ற பாடல் தேவாரமா அல்லது திருவாசகமா?
தேவாரம்
7 'சொற்றுணை வேதியன்' என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
8 சிவபுராணம் எந்தப் பாடல் தொகுப்பில் உள்ளது?
திருவாசகம்
9 சிவபுராணம் எப்படித் தொடங்குகிறது?
நமச்சிவாய வாழ்க என்று தொடங்குகிறது
10 சேக்கிழார் பாடிய புராணம் எது?
பெரியபுராணம்
11 வேலும் மயிலும் எந்தத் தெய்வத்துக்கு உரியவை?
முருகன்
12 பொங்கல் விழாவின் போது எந்தத் தெய்வத்துக்கு விசேடமாக நன்றி கூறி வணங்குகிறோம்? சூரியன்
13 'உழவாரம'; என்ற கருவியால் கோயில்களின் சுற்றாடலைச் சுத்தம் செய்த நாயனார் யார்? அப்பர் சுவாமிகள்
14 அரசன் அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது அவர் பாடிய தேவாரம் எது? 'சொற்றுணை வேதியன்' என்ற தேவாரம்
15 பாண்டிய மன்னனின் மந்திரியாக இருந்த நாயனார் யார்?
மாணிக்கவாசக சுவாமிகள்
16 'ஓம்காரம்' என எந்த ஒலியைக் குறிப்பிடுகிறோம்
ஓம் என்னும் ஒலியை
17 பிள்ளையாரின் வாகனம் எது?
எலி
18 நவராத்திரியில் நாள்களில் நாம் வழிபடும் மூன்று தெய்வங்களின் பெயர் கூறுக?
துர்க்கை, இலக்குமி, சரசுவதி
19 திருப்புகழ் எந்தத் தெய்வத்தின் மீது பாடப்பட்டுள்ளது?
முருகன்
20 அபிராமி அந்தாதி பதிகத்தைப் பாடியவர் யார்?
அபிராமிப் பட்டர்
21 ஆண்கள் செய்யும் நமஸ்காரம் எது?
அட்டாங்க நமஸ்காரம்
22 பெண்கள் செய்யும் நமஸ்காரம் எது?
பஞ்சாங்க நமஸ்காரம்
23 நவக்கிரகங்களில் நடு நாயமாக விளங்கும் முக்கிய கிரகம் எது?
சூரியன்
24 சூரபன்மன் எவ்வாறு முருகனுடம் சரணடைந்தான்?
சேவலும் மயிலுமாக
25 முருகனது கொடியும் வாகனமும் எவை?
சேவலும் மயிலும்
26 தலையணையாக இருந்த செங்கட்டிகள் பொன்கட்டிகளாக மாறியது யாரிடம்?
சுந்தரரிடம்
27 நஞ்சுண்டகண்டன் யார்?
சிவபெருமான்
28 திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
மருள்நீக்கியார்
29 திருநாவுக்கரசரின் தமக்கையார் பெயர் என்ன?
திலகவதியார்
30 திருநாவுக்கரசர் முதலில் பாடிய தேவாரம் என்ன?
கூற்றாயினவாறு
31 திருக்கோணேச்சரத்தின் மீது தேவாரம் பாடிய நாயனார் யார்?
திருஞானசம்பந்தர்
32 கோயிலில் காணப்படும் முக்கியமான பொருட்கள் யாவை?
விக்கிரகங்கள், விளக்கு, மணி
33 கோயில் பூசையின் போது கடைசிப் பூசை பெறுவர் யார்?
சண்டேசுவரர்
34 கோயிலில் பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்? கருவறை
35 இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடும் நாள் எது?
சிவராத்திரி
36 நவராத்திரி நாட்களில் கடைசி மூன்று நாட்களில் யாரைக் கும்பிடுகிறோம்?
சரசுவதி
37 நெற்றிக்கண்ணை உடையவர் யார்?
சிவபெருமான்
38 சிவனின் தலையில் இருப்பவை எவை?
கங்கை, பிறை, பாம்பு
39 சைவர்களின் கடவுள் யார்?
சிவபெருமான்
40 சிவசின்னங்கள் யாவை?
திருநீறு, உருத்திராக்கம்
41 திருவாதவூரர் என்றால் எவரைக் குறிக்கும்?
மாணிக்கவாசகரை
42 ஐந்து கரத்தனை ... என்று தொடங்கும் திருமந்திரத்துக்கு ஏற்ற கடவுள் யார்?
பிள்ளையார்
43 ஆறுமுகன் என அழைக்கப்படும் கடவுள் யார்?
முருகன்
44 ஒளவையாருக்கு உதவ முருகன் எந்த வேடத்தில் வந்தார்?
சிறுவன்
=============================================================
சைவ சமய அறிவுப் போட்டி
மேற்பிரிவு
கீழே மாதிரிக் கேள்விகள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
1 சைவ சமயத்தின் பொருளைக் கூறுக?
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்களின் மதம் சைவசமயம் எனப்படும்.
2 முருகனுடைய மறுபெயர்கள் யாவை?
கந்தன், குகன், குமரன், கடம்பன், வேலன், சரவணன், ஆறுமுகன்
3 பிள்ளையாரின் மறுபெயர்கள் யாவை?
விநாயகர், கணபதி, விக்னேசுவரர், கணேசர், ஆனைமுகன், லம்போதரன், கணநாதன்
4 தை மாதத்தில் வரும் தமிழர் பண்டிகை எது?
தைப்பொங்கல்
5 சிவபெருமானுக்கு உரிய விசேட விரத நாள் எது?
சிவராத்திரி
6 சிவனது வாகனம் எது?
இடபம்
7 சிவபெருமானிடம் இருந்த மாம்பழத்தைப் பிள்ளையார் எப்படிப் பெற்றார்
உலகமாகிய (சிவன் - பார்வதி) தாய் தந்தையாரைச் சுற்றி வந்து
8 அர்ச்சனைத் தட்டில் வைக்கக்கூடிய பொருட்கள் எவை?
பூ, பழம், தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி, பட்டு, வெற்றிலை, பாக்கு
9 முருகன் பக்கத்தில் இருப்பவர்கள் யார்?
தெய்வயானை (இடப்பக்கம்), வள்ளி (வலப்பக்கம்)
10 முப்பழங்கள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்
11 கோயிலில் பூசை செய்பவர் எப்படி அழைக்கப்படுகிறார்?
ஐயர், பூசகர், குருக்கள்
12 கோயில் உள்ளே இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும்?
அமைதியாக, கடவுள் நினைவாக, ஒடியாடி விளையாடமல் இருத்தல் வேண்டும்.
13 பிள்ளையாருக்கு உகந்த புல் எது?
அறுகம் புல்
14 கோயில் திருவிழாவின் முதல் நாளில் நடப்பது என்ன?
கொடியேற்றம்
15 காக்கும் கடவுள் யார்?
விஷ்ணு
16 பைரவரின் வாகனம் எது?
நாய்
17 நாம் எக்காரியத்தைச் செய்யத் தொடங்க முன்னர் எந்தக் கடவுளை வழிபாடு செய்தல் வேண்டும்?
பிள்ளையார்
18 சிவபுராணத்தில் எத்தனை வரிகள் உள்ளன?
தொண்ணூற்றைந்து வரிகள்
19 சுந்தரமூர்த்தி நாயனாரின் இயற்பெயர் என்ன?
நம்பியாரூரர்
20 முருகனிடம் சுட்ட பழம் பெற்ற பாட்டி யார்?
ஒளவையார்
21 திருநீற்றின் பெருமையை எமக்கு எடுத்துக் காட்டும் ஒரு தேவாரம் என்ன?
மந்திரமாவது நீறு
22 திருவெம்பாவை விரதம் வரும் மாதம் எது?
மார்கழி மாதம்
23 காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?
புனிதவதி
24 சமய குரவர் என அழைக்கப் படுவோர் யார்?
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார், மாணிக்கவாசகர்
25 தேவாரம் பாடிய மூவரும் யாவர்?
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் என்னும் மூவருமாம்.
26 திருஞானசம்பந்தர் பிறந்த ஊரின் பெயர் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி
27 பெரியபுராணத்தில் எத்தனை நாயன்மார்களுடைய வரலாறுகள் சொல்லப்பட்டிருக்கின்றன? அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய வரலாறு
28 துர்க்கை அம்மன் கோயிலில் உள்ள கடவுள் மூன்று கூறுக?
பிள்ளையார், துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி
29 மருள்நீக்கியார் என்ற பெயர் யாரைக் குறிக்கும்?
திருநாவுக்கரசரைக் குறிக்கும்
30 'பூசுவதும் வெண்ணீறு', 'மீளா அடிமை உமக்கே ஆளா' இந்த இரு பாடல்களிலும், தேவாரம் எது திருவாசகம் எது?
'மீளா அடிமை உமக்கே ஆளா' தேவாரம்;, 'பூசுவதும் வெண்ணீறு' திருவாசகம்
31 துர்க்கை அம்மனை தொழுவதால் என்ன நன்மை பெறலாம்?
வீரம், தைரியம், வெற்றி ஆகியவற்றைப் பெறலாம்.
32 கூட்டு வழிபாடு என்றால் என்ன?
அடியார்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனைப் போற்றிப் பாடி வணங்குதல்.
33 கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்வோர் செய்ய வேண்டியது என்ன?
எல்லோரும் ஒருமித்துப் பக்தியோடு பாடவேண்டும்
34 அப்பர், ஆளடைய அரசு, வாகீசர், தாண்டக வேந்தர் என்னும் பெயர்கள் யாரைக் குறிக்கும்? திருநாவுக்கரசரை
35 திருநீலகண்டர் என்னும் பெயர் யாரைக் குறிக்கும்?
சிவபெருமானைக் குறிக்கும்
36 சிவன் நடனத்தோற்றத்தில் எப்படி அழைக்கப்படுகிறார்?
நடராசர்
37 திருவைந்தெழுத்து என்பது என்ன?
நமசிவாய
38 தேவாரம் பாடத் தொடங்குமுன்னர் எதனைச் சொல்லிட்டுத் தொடங்க வேண்டும்? திருச்சிற்றம்பலம்
39 சகலகலாவல்லி மாலை எந்த விசேட நாட்களில் பாடுகிறோம்?
நவராத்திரி நாட்களில்
40 நவராத்திரி நாட்களில் அம்பிகையை எந்தெந்த உருவங்களில் வழிபடுகிறோம்?
துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி
41 பித்தா பிறை சூடி என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்?
சுந்தரர்
42 திருவாசகம் என்பதன் பொருள் என்ன?
தெய்வத்தன்மை உடைய மொழி என்பது பொருள்
43 அன்பும் சிவமும் ஒன்று என்றவர் யார்?
திருமூலர்
44 ஆலயத்தை அண்மித்ததும் முதலில் எதை வணங்குதல் வேண்டும்?
கோபுரத்தை
====================================================================
சைவ சமய அறிவுப் போட்டி
அதிமேற்பிரிவு
கீழே மாதிரிக் கேள்விகள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
1 ஆலயத்தில் இறுதியில் வழிபட வேண்டிய கடவுள் யார்?
சண்டேசுவரர்
2 நாவுக்கரசருக்கு பொதி சோறு கொடுத்தவர் யார்?
சிவபெருமான்
3 புலித்தோலை ஆடையாக அணிந்தவர் யார்?
சிவபெருமான்
4 சிதம்பரத்தில் இருக்கும் இறைவனின் பெயர் என்ன?
நடராஜப் பெருமான்
5 சிவபெருமானின் வாகனம் என்ன?
இடபம்
6 தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
ராஜராஜ சோழன்
7 காரைக்காலம்மையாரின் இயற்பெயர் என்ன?
புனிதவதியார்
8 கந்தபுராணத்தைப் பாடுமாறு கச்சியப்பரைக் கேட்;டவர் யார்?
முருகப்பெருமான்
9 அபிராமி அந்தாதி எத்தினத்தில் பாடப்பெற்றது?
தை அமாவாசையில்
10 அபிராமி அந்தாதியில் எத்தனை பாடல்கள் உண்டு?
101 பாடல்கள்
11 நல்வழி நூலை இயற்றியவர் யார்?
ஒளவையார்
12 தேவாரங்களை எவ்வாறு பாடுதல் வேண்டும்?
பண்ணோடு பாடுதல் வேண்டும்
13 நாயன்மாருடைய வரலாற்றைக் கூறும் நூல் எது?
பெரியபுராணம்
14 பெரியபுராணத்தை எழுதியவர் யார்? இதன் மறுபெயர் என்ன?
சேக்கிழார்
திருத்தொண்டர் புராணம்
15 ஈழத்தில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் எவை?
திருக்கேதீச்சரம், திருக்கோணேசுவரம்
16 சொற்றுணை வேதியன் ---- என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
17 திருப்புகழை இயற்றியவர் யார்?
அருணகிரிநாதர்
18 முருகன் எவ்வாறு தோன்றினான்?
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாய்
19 முருகனுக்கு சரவணன் என்ற பெயர் எப்படி வந்தது?
சரவணப் பொய்கையில் தோன்றியதால்
20 சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் எங்கே விழுந்தன?
சரவணப் பொய்கையில்
21 சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளையும் இணைத்தவர் யார்? உமாதேவியார்
22 ஓங்காரரூபன் என எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறோம்?
பிள்ளையார்
23 கோயில் கோபுரத்தை எப்படி அழைப்பார்கள்?
தூலலிங்கம்
24 தில்லை என்ற திருத்தலத்தில் மறுபெயர் என்ன?
சிதம்பரம்
25 தோப்புக்கரணம் செய்து வழிபடப்படும் கடவுள் யார்?
பிள்ளையார்
26 அப்பர் சமண சமயத்தில் இருந்த போது எப்படி அழைக்கப்பட்டார்?
தருமசேனர்
27 முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் எவை?
கந்தசஷ்டி, கார்த்திகை
28 திருக்கார்த்திகை விசேடமாகக் கொண்டாடப்படும் திருத்தலம் எது?
திருவண்ணாமலை
29 சுந்தரமூர்த்தி நாயனாரின் கலியாணத்தை தடுத்தவர் யார்?
சிவபெருமான்
30 திருவிழாக்களில் முக்கிய நாட்கள் எவை?
கொடியேற்றம், தேர், தீர்த்தம்
31 சிவபெருமான் யாருக்காக பிட்டுக்கு மண் சுமந்தார்?
செம்மனச்செல்வி
32 சம்பந்தருக்கு உமாதேவியார் ஞானப்பால் ஊட்டிய தலம் எது?
சீர்காழி
33 சம்பந்தர் பாண்டியனுக்கு வெப்பு நோய் நீங்கப் பாடிய பதிகம் யாது?
திருநீற்றுப் பதிகம்
34 மாசி மகத்தின் சிறப்பு என்ன?
அம்மனுக்குரிய விசேட நாள் மாசி மகம். அன்று அம்மனுக்கு தீர்த்தம் நடைபெறும்.
35 கண்ணப்பா என்ற பெயருக்கு காரணம் என்ன?
தனது கண்களை சிவனுக்கு தானமாகக் கொடுத்ததால்
36 பொல்லாப் பிள்ளையாருக்கு மோதகம் செய்து படைத்த சிறுவன் யார்?
நம்பியாண்டார் நம்பி
37 தேவாரங்களைத் திருமுறையாகத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
38 வேல் மாமரத்தை இரண்டாகப் பிளந்த போது தோன்றிய பறவைகள் எவை?
சேவல், மயில்
39 சம்பந்தர் பாடிய தேவாரங்கள் எத்தனை திருமுறைகளில் உள்ளன?
மூன்று
40 ஏன் இறைவனைப் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றார்கள்?
உருவம், நாமம் இல்லாதபடியால்
41 திருமுறைகள் எத்தனை?
பன்னிரண்டு
42 தேவாரங்கள் எத்தனை திருமுறைகளில் உள்ளன?
ஏழு
43 பிரதோச விரதக்குரிய கடவுள் யார்?
சிவபெருமான்
44 பிள்ளையாருக்குச் சாத்தப்படும் புல் எது?
அறுகம்புல்
45 விநாயக விரதங்களுள் மிகவும் சிறப்புடையது எது?
விநாயக சதுர்த்தி விரதம்
========================================================================
No comments:
Post a Comment