ஒரே நாளில் ஸ்டார் ஆன ராகேஷ் உன்னி

.

ஒரே நாளில் ஸ்டார் ஆன ராகேஷ் உன்னி - நேரில் அழைத்து கமல்ஹாசன் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு

சமீபத்தில் ராகேஷ் உன்னி என்ற ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் பாடும் வீடியோ ட்விட்டரில் செம வைரலானது. அவர் யார் என சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் கூட ட்விட்டரில் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் ஒரே இரவில் ஸ்டார் ஆகிவிட்ட அவரை இன்று கமல் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் தன் அடுத்த படத்தில் ராகேஷுக்கு பாட வாய்ப்பு அளிப்பேன் என் கமல் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது கமல்ஹாசன் முன்னிலையில் 'உனை காணாது' பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யாழ்ப்பாணத்திலே சித்திரத் திருக்கோவில் - திருவாசக அரண்மனை


சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தெல்லிப்பழை சிறீ
துர்க்கையம்மன் கோவிலின் தர்மகர்த்தாவும் ஆகிய செஞ்சொற் செல்வர்
திரு ஆறுதிருமுருகன் அவர்களின் அயரா உழைப்பினால்
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியிலே அமைந்துள்ள
திருவாசக அரண்மனை அண்மையிலே சமயக்கிரிகைகள்
முற்றுப்பெற்றபின்னர்; சிறந்த முறையிலே திறக்கப்பெற்றது. உலகிலே
முதன்முதலாக மணிவாசகரின் திருமுறையைக் கருங்கல்லிலே
செதுக்கிச் சைவசமயத்தவர்கள் வணங்குவதற்குரிய தெய்வத்
திருவுருவங்களுடன் இத்தகையதொரு கலைக்கோவிலை
யாழ்ப்;பாணத்திலே தோற்றுவித்தமை மிகவும் பாராட்டுதற்குரியது.
திருவருள் கடாட்சத்துடனும் அமரர் தங்கம்மா அபக்பாக்குட்டி அவர்களின்
அருளாசியுடனும் திரு ஆறுதிருமுருகன் அவர்களின் உழைப்பினால்
இந்தத் திருக்கோவில் சுமார் இரண்டு வருடங்களிலே உருவானது ஒரு
வியக்கவைக்கும் அற்புதமே!.
இந்த அரண்மனையிலே மூலவராகத் தெற்கு நோக்கிய வண்ணம்
சிவதட்சணாமூர்த்தியைத் தாபித்துள்ளார்கள். ஐந்து அடுக்குகளைக்
கொண்ட விமானத்திலே 108ச் சிவலிங்கங்கள் அழகுற
அமைக்கப்பெற்றுள்மை கண்கொள்ளாக் காட்சியே!. மூலவரின் சிலைக்கு
முன்பாகப் பார்ப்போரின் கருத்தை ஈர்க்கும் வகையிலே 21அடி உயரம்
கொண்ட சித்திரத்தேர் காட்சியளிக்கிறது. கருங்கல்லிலே அற்புதமாக
இதைச் செதுக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பகழ்பூத்த சிற்பக்

ATBC யின் சொற்திறன் அரங்கம் இறுதிச் சுற்று 08.07.2018

.


இறைவன்தான் சொல்ல வேண்டும் ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


                 ஈழமென்னும் பெயரைச் சொன்னால் 
image1.JPG                            இதயம் நிறைந்து போகுதே
                 ஆளுகின்றார்  எண்ணம் மாறின்
                          அனைவர் வாழ்வும் சிறக்குமே
                  நாளும் மக்கள் வாழ்விலென்றும்
                          நன்மை விளைய வேண்டியே
                  வானில் உறையும் தேவன்தன்னை 
                             வரம்  கொடுக்க வேண்டுவோம் !

                    ஈழம்தன்னில் இயற்கை வளம் 
                         எங்கும் நிறைந்து இருக்குதே
                   ஆழக்கடல் சூழ்ந்து நின்று
                          அரணையாய் அமைந்து இருக்குதே 
                   வாழவெண்ணி மக்கள் எல்லாம்
                            நாளும் பொழுதும் உழைக்கிறார்
                    மக்கள் ஆட்சி மலரவேண்டி 
                             மனதில் எண்ணி நிற்கிறார்    !
   
                   செந்தமிழை பேசும் மக்கள் 
                        சிந்தை கலங்கி வாழ்கிறார் 
                   சிங்களத்தைப் போல தமிழும்
                           சிறந்து விளங்க நினைக்கிறார் 
                    மங்கலமாய் இரண்டு மொழியும்
                           வாழ்வில் இணைந்து நின்றிடின்
                     மாறுபட்ட   நிலைகள்  யாவும் 
                             கூறு பட்டுப் போகுமே    ! 

                 

நாவற்குழியில் திருவாசக அரண்மனை திறப்பு விழா


26/06/2018 நாவற்குழியில் சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட திருவாசக அரண்மனை திறப்பு விழா இடம்பெற்றது.

இதில் விருந்தினர்களாக, வைத்திய நிபுணர் வை.மனோமோகன், வைத்தியகலாநிதி சிவகெளரி மனோமோகன் தம்பதியர் கலந்து கொண்டனர்.   


கர்ணன் நாட்டிய நாடகம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

.


மதுரை முரளிதரன் வருடா வருடம் நடைபெறும் சிட்னி இசைவிழாவில் பல வருடங்களாக தொடர்ந்து நாட்டிய நாடகங்களை வழங்கி வருகிறார். சிட்னியில் உள்ள நடன பாடசாலைகளும் அவருடன் இணைந்து பங்குபற்றுவார்கள். ஒளிப்பட காட்ச்சிப் பின்னணியுடன் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வருடமும் ரிவெர்சயிட் தியேட்டரில் முரளிதரன் தயாரிப்பில் "கர்ணன்" நாட்டிய நாடகம் மேடை ஏறியது. இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களுடன் சுகந்தி தயாசீலனின் கலாபவன் மாணவியரும் இணைந்து ஆடினார்கள்.

மகாபரத்திதின் கர்ணன் வாழ்வு யாவரும் அறிந்த கதையே கர்ணன் போல் கொடுக்கப் பழகவேண்டும் என மாணவியர் ஆறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை வெவ்வேறு வகையாக ஆடினார்கள். இதில் கரகாட்டமும் பொய்க்கால் குதிரையும் வந்து போயிற்று. காண கச்சிதமான ஆடை அலங்காரம், இதன் மத்தியில் கதை கூறுபவர் சிறந்த முகபாவத்துடன் ஆடினார்.

சிட்னி இசை விழா 2018 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


சிட்னி இசை விழா கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். வருடா வருடம் டிசம்பர் சென்னை இசைவிழாவை காண செல்பவர்கள் கடந்த 12 வருடங்களாக சிட்னியிலேயே தங்கிய வண்ணம் தேர்ந்த இசை கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்காக திரு திருமதி ஜெயேந்திரன் தம்பதியரும் அவர்களது ஏக புத்திரன் ஸ்ரீ கிஷானும் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. மஹாராணியாரின் பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக 3 நாள் விடுமுறையில் கடந்த 12 வருடங்களாக 3 நாட்களும் தொடர்ந்து கச்சேரியை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நடப்பது போல நாள் பூராவும் இசை நிகழ்ச்சி தொடரும். காலையிலே வளர்ந்து வரும் இளம் கலைஞர் அதை அடுத்து தம்மை உலகிலே பிரபல படுத்திவிட்டு கலைஞர் தொடர்ந்துய் இசை உலகிலே பிரபலங்கள் பல வருட அனுபவமும் சிறந்த உயர்ந்த கலைஞர் என போற்றப்படும் கலைஞர்கள் இறுதி நிகழ்ச்சி இசை உலக மா மேதைகள் என போற்றப்படும் கலைஞர்கள் என நிகழ்ச்சி நடைபெறும்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்


 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133)  இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.    
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் " தமிழ் - முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம் - எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்" என்னும் தொனிப்பொருளில் உரையாற்றுவார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில்  ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம் தொடர்பான  கருத்துக்களை தெரிவிக்குமாறு  அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
 அன்புடன் -  செயற்குழுவினர்
 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.
மேலதிக விபரங்களுக்கு: திரு. முருகபூபதி 04 166 25 766
atlas25012016@gmail.com    -->

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன் - முருகபூபதி


"அத்திக்காய், காய் காய்,  ஆலங்காய் வெண்ணிலவே,
இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ,
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ" என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள்.
1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றி,  மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த  பாடல். "இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால் சாவடியிலிருக்கும் மரக்கறி சந்தையையே கவியரசர் கொண்டுவந்துவிட்டார். இந்தப்பாடல் மக்கள் மத்தியில் எடுபடாது" என்றார் விஸ்வநாதன்.
எனினும் அந்தப்பாடலைத்தான் அந்தப்படத்திற்குத்தருவேன் என்று விடாப்பிடியாக நின்றவர் கண்ணதாசன்.  பாடலும் சிறப்பாக அமைந்தது. இதில் சிவாஜிக்கு மூன்று வேடங்கள். நடிகவேள் எம். ஆர். ராதாவுக்கு இரட்டை வேடங்கள். படமும் வசூலில் வெற்றிபெற்றது.
தத்துவப்பாடல்களும் இயற்றியிருக்கும் கண்ணதாசன், பட்டினத்தார், காளமேகப்புலவர், பாரதியார் மற்றும் சித்தர்களின்  பாடல்களையும் தனது திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியிருப்பவர். மேற்குறித்த பாடலில் வரும் காய்களில் ஒரு சிலவற்றை  குறிப்பிட்டு முன்னரே கவிதை எழுதியவர்தான் காளமேகப்புலவர்.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஒருவர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர். அத்துடன், மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மற்றும் தி.மு.க.தலைவர்களுடனும் நட்புறவிலிருந்தவர். குறிப்பிட்ட அத்திக்காய் பாடலின் ரிஷிமூலமும் தெரிந்துவைத்திருந்தவர்.
அவர்தான் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்ற பெயரைப்பெற்று நீண்ட காலம் அந்தப்பிரதேசத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் பின்னர் பிரதேச அபிவிருத்தி தமிழ் மொழி அமுலாக்கல் இந்து கலாசார அமைச்சராகவும் அதன்பின்னர் மலேசியாவில் இலங்கைக்கான தூதுவராகவும் விளங்கிய  செல்லையா இராசதுரை.
முதல் முதலில் 1966 ஆம் ஆண்டில் இவரைக்காணும்போது எனக்கு 15 வயது. எங்கள் நீர்கொழும்பூரில் எனது மாமா உறவுமுறையான அப்பையா மயில்வாகனன் அவர்கள் சாந்தி அச்சகம் நடத்தி அங்கிருந்து அண்ணி என்ற மாத இதழையும் வெளியிட்டார். அதன் முதல் இதழ் வெளியீட்டு  விழா எமது இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடந்தவேளையில் அதற்கு தலைமைதாங்குவதற்கு இராசதுரை வந்திருந்தார். அச்சமயமும் அவர் மட்டக்களப்பின் எம்.பி. நிகழ்ச்சி முடிந்ததும், வியாங்கொடையில் தரித்துப்புறப்படும் மட்டக்களப்பு - திருகோணமலை இரவு தபால் ரயிலில் ஏற்றி வழியனுப்பிவைத்தோம்.
அன்று முதல் 1987 வரையில் அவரை அவ்வப்போது சந்தித்திருக்கின்றேன். எங்கள் குடும்ப நிகழ்விலும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார். கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு தபால் ரயிலில் அவர் செல்வதையும், அதற்கு முன்னர் ரயில் நிலைய அதிபரின் அலுவலகத்திலிருந்து அதிபருடன் அவர் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள ராஜேஸ்வரிபவனிற்கு விற்பனைக்கு வரும் தமிழக இதழ்கள் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் உட்பட இலங்கை இதழ்களையும் அவர் வாங்கிக்கொண்டுதான் புறப்படுவார். அவரும் சிறந்த பேச்சாளர். அத்துடன் வாசகர். எழுத்தாளர் முதலான முகங்களையும் கொண்டவர்.

நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 முகத்துவாரத்தில் குடியிருக்கும் ஆனைக்குட்டி சாமியார் பிரார்த்தனைக்கும் - சாபமிடுவதற்கும் கோயில்களா...? - ரஸஞானி

உலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள்.  முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என அழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார்,  அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள்.
இந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா - பாசங்களை புறம்ஒதுக்கிவிட்டு, சித்தம்போக்கு சிவன் போக்கு என வாழ்ந்து முத்தியடைந்துள்ளனர்.
இக்காலத்தில் காவியுடுத்த பல போலிச்சாமியார்களும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர். இவர்களின் லீலைகள் ஊடகங்களில் செய்தியாகவும் காணொளிகளாகியுமிருக்கின்றன.
களனி கங்கை இலங்கைத்தலைநகரில் கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு தேவஸ்தானம், சிவாலயமான அருணாசலேஸ்வரர் ஆலயம், காளி அம்மன் ஆலயம் என்பனவற்றின் வரலாற்றின் பின்னணியில் ஐதீகக்கதைகள் பலவுள்ளன.
முன்னொரு காலத்தில் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்த ஆனைக்குட்டிச்சாமியாரின் சமாதி இங்குதான் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்தச்சாமியார் சித்துவிளையாட்டுக்களும் செய்வார் எனவும், நிஷ்டையில் ஆழ்ந்து யோகநிலையிலுமிருப்பார் எனவும் சொல்வார்கள்.
முற்காலத்தில் தோன்றிய ஆலயங்கள் பெரும்பாலும் கங்கைக்கரைகளில் அல்லது குளம் - கேணிகள் - கடற்கரையோரங்களில்தான் எழுந்தருளியிருக்கின்றன.

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 5 – ச. சுந்தரதாஸ்

தான் அடுத்து இயக்கப் போகும் படத்தின் கதாநாயகனாக விஐயகுமாரணதுங்கவை தேர்ந்தெடுத்தார் லெனின். படத்திற்கு அபிரஹச (பரமரகசியம்) என்று பெயரிடப்பட்டது. சிலோன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக இருந்த விமல் வீரக்கொடி இப்படத்தை தயாரித்தார். 

நல்லவனைப் போல் நடிக்கும் வில்லத்தனம் நிறைந்த பாத்திரத்தில் விஜய் நடித்தார். அவருடன் சுவர்ணாகாவிட்ட, தலத்தா குணசேகர ஆகியோரும் நடித்திருந்தனர். திகிலும் மர்மமும் நிறைந்த காட்சிகளைக் கொண்ட இப்படத்தை விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் இயக்கி இருந்தார் லெனின். சிங்களத்தில் இவ்வாறு வெளிவந்த முதல் சஸ்பென்ஸ் படம் என்று கூட இதனை குறிப்பிடலாம். 

அபிரஹச படம் தான் விறுவிறுப்பென்றால் அந்தப் படத்திற்கு தேவையான படச்சுருள்கள் கிடைத்த விதமும் விறுவிறுப்பானது. குறைந்த செலவில் படத்தை எடுக்க வேண்டும் என விமல் வீரக்கொடி விரும்பினார். அந்த சமயம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த திரைப்படங்களை தயாரிக்கும் கச்சா பிலம்களை ஏலத்தில் விடப்போவதாக ஒரு விளம்பரம் வந்தது. விமலும் லெனினும் துறைமுகம் சென்று ஏலத்தில் குறைந்த விலையில் அவற்றை வாங்கினார்கள். 

கங்காரு வேலி (நடைக் குறிப்பு) - யோகன் (கன்பரா)


சிகரெட் ஊதுவது போல எனது மூச்சுக்காற்று புகையாக வெளி வந்து கொண்டிருந்த அந்த அதி காலைக் குளிர் பூஜ்யத்திலும் ஐந்து டிகிரி குறைவென்று என் மொபைல் காட்டியது.
நேற்று நான் காலையில் நடக்கும் போது அந்தப் பைன் மரத் தோப்பைச் சுற்றி வளைத்துப் போட்டிருந்த வேலியருகே இருவர் கண்ணை உறுத்தும் இளம் பச்சை மேலங்கியுடன் நின்றதை கண்டேன். சரிந்து விழுந்து கிடந்த வேலியை திருத்துவதற்காக ஏழு மணிக்கே வந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டிறக்கும் நின்றது. அந்த ஒரு மீற்றருக்கு சற்று உயரமான வேலி கங்காருக்கள்  தெருவுக்கு வந்து விடாத படி தடுப்பதற்காக.
இரவில் அல்லது அதிகாலையில் தெரு வாகனங்களின்  வெளிச்சத்தை நோக்கி ஓடிவந்து  மோதி சேதத்தை ஏற்படுத்தி தானும் பலியாகிவிடும் இப்பிராணிகள் அளவுக்கதிகமாகப் பெருகி வருவது கன்பெராவில் ஒரு சூழலியல் பிரச்சினை.
கங்காருவை இரையாக உண்ணும் பிராணிகள் (predator) குறைந்த கன்பெராவில் வருடாந்தம் ஆயிரக்கணக்கில் கங்காருக்களை கொல்ல வேண்டிய தேவை ACT அரசுக்கு உள்ளது.
அதே வேளை ஒரு குறிப்பிடட தொகை கங்காருக்கள் சுதந்திரமாக நடமாடிக் திரிவதும் அவை பாதுகாக்கப் படுவதும் அவசியம்.

இலங்கைச் செய்திகள்


யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை ; மூவர் அரச சாட்சிகளாக மாறினர்

சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்

சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழில் இனந்தெரியாதோர் தாக்குதல் மூவர் காயம், உடைமைகள் சேதம்யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

26/06/2018 யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் 2018


உலக சம்பியன் ஜேர்மனியை வெளியேற்றி வரலாறு படைத்த தென் கொரியா

நம்ப முடியவில்லை! தோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது  சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ 

இலகுவான வெற்றியுடன் 2 ஆம் சுற்றில் பிரேஸில்

தேவையான ஒரு புள்ளியைப் பெற்ற சுவிற்சர்லாந்து இரண்டாம் சுற்றில் நுழைந்தது

இங்கிலாந்தை வென்றது பெல்ஜியம்

‘பெயார் ப்ளே’ மூலம் 2 ஆம் சுற்றுக்குள் நுழையும் ஜப்பான்

ஆர்ஜன்டீனாவை வெளியேற்றியது பிரான்ஸ்
உலக சம்பியன் ஜேர்மனியை வெளியேற்றி வரலாறு படைத்த தென் கொரியா

27/06/2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய தலைகீழ் முடிவை ஏற்படுத்தி 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட தென் கொரியா நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை முதல் சுற்றுடன் வெளியேற்றியது.

உலகச் செய்திகள்


சிரியாவில் மூன்று மருத்துவமனைகள் மீது விமானதாக்குதல்

அரசியல்வாதிகள் தொடர் கொலை: ஒட்டுமொத்த பொலிஸாரும் கைது

மெக்சிகோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

படகு மூழ்கியதில் 100 அகதிகள் பலி?

சென்னையில் உலக எம்.ஜி.ஆர் பேரவையின் மாநாடுசிரியாவில் மூன்று மருத்துவமனைகள் மீது விமானதாக்குதல்


28/06/2018 சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது சிரிய அரசபடையினர் மேற்கொண்ட விமானதாக்குதல்களில் மூன்று  மருத்துவமனைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
சிரியாவின் டெராவில் உள்ள மூன்று நகரங்களில் இடம்பெற்ற விமானதாக்குதல்கள் காரணமாக மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என மனிதஉரிமை மற்றும் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சைடா நகரில் உள்ள மருத்துவமனை மீது நள்ளிரவில் இடம்பெற்ற விமானதாக்குதலை தொடர்ந்து அந்த மருத்துவமனை செயலிழந்துள்ளது.
இதேவேளை முசாய்பிரா நகரின் மீது ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த நகரின் முக்கிய மருத்துவமனை சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் ஜிசா என்ற நகரில் உள்ள மருத்துவமனையும் ரஸ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் உள்நாட்டுபோரில் மருத்துவமனைகள் மீது பல தாக்குதல்கள்  இடம்பெற்றுள்ள போதிலும் ரஸ்யாவும் சிரியாவும் அதனை நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

தமிழ் சினிமா - டிக் டிக் டிக் திரை விமர்சனம்தமிழ் சினிமா தற்போதெல்லாம் புதிய புதிய கதை களங்களில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் ஜெயம் ரவியுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்பேஸ் கதைக்களம் தான் டிக் டிக் டிக். ரசிகர்களை இந்த வித்தியாச கதைக்களம் கவர்ந்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பக்காட்சிலேயே 8 டன் எரிகல் சென்னையில் வந்து விழுகின்றது. இதனால் ஒரு சில உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது.
அதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அதை விட பெரியளவில் ஒரு எரிகல் மோதவருவதாக தகவல் கிடைக்கின்றது.
அது வந்து மோதினால் தமிழகம், இலங்கை, ஆந்திரா ஆகிய இடங்கள் அழியும், இதை தடுக்க மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி உதவியுடன் ஒரு சில அமைப்பினரை விண்வெளிக்கு அனுப்பி அந்த எரிகல்லை உடைத்து கல்லை திசை திருப்ப ப்ளான் செய்கின்றனர். ரவி இந்த ப்ளானை வெற்றிகரமாக முடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர், அந்த வகையில் வனமகன், மிருதனை தொடர்ந்து விண்வெளி சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ரவியை பாராட்டலாம், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுன் மற்றும் கேப்டனாக வரும் வின்செண்ட் என அனைவருமே தங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சரி ஸ்பேஸ் படம் என்றாலே நமக்கு பல ஹாலிவுட் படங்கள் நினைவிற்கு வரும், அதிலும் கிராவிட்டி, இண்டர்ஸ்டெல்லர் ஆகிய படங்கள் சமீபத்திய ரெபரன்ஸ், அந்த படம் அளவிற்கு நினைத்தாலும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் எடுக்க முடியாது.
அந்த வகையில் டிக் டிக் டிக் எப்படி என்றால் 40 மார்க் எடுத்து பாஸ் ஆகியுள்ளது என்றே சொல்லலாம், ஏனெனில் ஜெயம் ரவி தான் இந்த மிஷினை முடித்தாக வேண்டும், அதற்காக பல வருடம் மிலிட்ரியில் இருந்த வின்செண்ட் செய்யமுடியாததை கூட ஜெயம் ரவி ஏதோ பொட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவது போல் செய்வது என்ன லாஜிக்.
படத்தில் லாஜிக் எல்லாம் பார்த்தால் கிலோ எவ்வளவு என்று தான் கேட்க தோன்றும், அந்த அளவிற்கு பல இடங்களில் லாஜிக் எல்லை மீறல், ஆனால், அதையும் மீறி ஜெனரல் ஆடியன்ஸ் நான் லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டேன், ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ஜாலியாக இருக்கின்றதோ இல்லையோ, ஒரு புது அனுபவத்தை இந்த டிக் டிக் டிக் கொடுக்கும்.
ஹாலிவுட்டில் ரிலிஸான ஆர்மகடான் படத்தின் சாயல் தான் இந்த டிக் டிக் டிக், அதே கதைக்களம் என்றாலும் முடிந்த அளவிற்கு நம்ம ஊர் மக்களுக்கு புரியும் படி சொன்னதற்காகவே சக்தி சௌந்தர்ராஜனை மனம் திறந்து பாராட்டலாம். கொஞ்சம் Now you see me சண்டைக்காட்சியை கூட காப்பி அடித்துள்ளீர்கள் போல?.
வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே ஸ்பேஸுக்கு சென்ற அனுபவம், டி.இமான் இரண்டாம் பாதியில் மெதுவாக செல்லும் காட்சியை இசையால் தூக்கிப்பிடிக்கின்றார், இவர்களை எல்லாம் விட சிஜி டீம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும், இத்தனை கம்மி பட்ஜெட்டில் இவ்வளவு தரமான காட்சிகளை தந்துள்ளனர்.

க்ளாப்ஸ்

கதைக்களம் தமிழில் இப்படியெல்லாம் படம் வருமா? என்று நினைக்க, அதை கொண்டு வந்த சக்தி சௌந்தராஜனுக்கு பாராட்டுக்கள்.
படத்தின் முதல் பாதி செம்ம வேகமாக செல்கின்றது, எப்போது ஸ்பேஸிற்கு செல்வார்கள் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கின்றது.
இரண்டாம் பாதியில் சீனா விண்வெளி வீரர்களிடம் இருந்து அணு ஆயுதத்தை திருடி விட்டு வெளியே விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.
இசை, ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் என அனைத்தும் திருப்தி.

பல்ப்ஸ்

முன்பே சொன்னது போல் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக், கொஞ்சம் ரவியை தவிர மற்றவர்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்.
ஸ்பேஸிற்குள் கதை நகர்வதால் நமக்கு கொஞ்சம் படம் மெதுவாகவே இரண்டாம் பாதி செல்வது போன்ற உணர்வு.
சீனா விண்வெளி வீரர்களுடன் நடக்கும் விஷயம் இதற்கா இவ்ளோ பில்டப் என தோன்றுகின்றது.
மொத்தத்தில் ஹாலிவுட் படங்கள், லாஜிக் எல்லாம் மறந்து உள்ளே சென்றால் கண்டிப்பாக டிக் டிக் டிக் ஒரு புது அனுபவத்தின் நுழைவு வாயிலாக இருக்கும்   
நன்றி CineUlagam.