சிட்னி துர்க்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து

.




சிட்னி துர்க்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து நிகழ்வு இன்று சனிக்கிழமை இரவு 10.11.2019 இடம்பெற்றது. கலாநிதி ராஜயோகனின் சிட்னி கீத சாகரம் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி , ஸ்ரீமதி சந்தியா சுந்தர்ராஜனின் கர்நாடக இசை நிகழ்வு, ஸ்ரீமதி அக்சதா மதுசூதனனின் வீணை இசை, டாகடர் ஜசோதராபாரதி  சிங்கராஜரின் மாணவிகளின் நடன நிகழ்வு , திரு முத்தரசனின் அவுஸ்ரேலிய தமிழ் ஆட்ஸ் குழுவினரின் பறை இசையும் நடனமும் என இனிமையான நிகழ்வாக இருந்தது. திரு செ.பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்வு 9.45 மணிக்கு நிறைவு பெற்றது.


போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)


மூலம் ஆங்கிலம்: ஜான் மெக்ரே (கனடா போர்த் தளபதி)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

போர்த் தளங்களில் அணி அணியாய்                
பூத்துக் கிடக்கும்,
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
சிலுவை களுக்கு இடையே!
நெஞ்சை உலுக்கும் காட்சி!
மேலே பாடி பறக்கும் குயில்கள்
பயம் ஏதுவு மின்றி,
கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
கேட்டு குறையும்!

செத்துப் போனது நாங்கள்!
சில நாட்களுக்கு முன்பு பூமியில்
சீராய் வசித்தவர் நாங்கள்!
காலைப் பொழுதை உணர்ந்தோம்!
மாலைப் பொழுதில் மங்கிச்
செங்கதிர்
மறைவதைக் கண்டோம்.
நேசிக்கப் பட்டோம் நாங்கள்!
இப்போது
போர்த்தளப் புழுதியில்
வீழ்ந்து கிடக்கிறோம்!

கள்ளமில்லா மனத்துடனே திருகலியாணம் நடத்துகிறார் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


image1.jpegகாமனை யெரித்த கடவுளுக்குத் திருமணமா
கற்கண்டு பால்கொடுத்து கடவுளுக்குத் திருமணமா 
மாலயனை உறவாக்கி வள்ளியினை உருவாக்கி
தெய்வயானை திருமணத்தை செய்துவிடல் முறையாமோ ! 

எந்தச் சமயத்தில் இப்படி நடக்கிறது
எங்கள் சமயத்தில் எதற்காக ஏற்றார்கள்
சிந்திக்க சிந்திக்க சிந்தனைகள் வளர்கிறது
எல்லாமே அர்த்தமாய் இருக்கிறதாய் தெரிகிறது 

கடவுளரை அன்னியமாய் கருதாத காரணத்தால்
கடவுளரை உறவுகளாய் கண்டார்கள் முன்னோர்கள் 
உள்ளுறையும் கடவுளரை உறவென்னும் தத்துவத்தால்
ஒருகுடும்பம் ஆக்கியவர் உளம்மகிழ்ந்து நின்றார்கள் 

அருவுருவ மாயிருக்கும் ஆண்டவனை சிலைவடித்து 
அலங்காரம் பலசெய்து அகநிறைவு பெற்றார்கள் 
உரிமையுடன் பெயர்கொடுத்தார் உணவுவகை பலபடைத்தார் 
நிலவுலகில் ஆண்டவனை நெருங்கியதாய் அவர்நினைத்தார் 

ஜனா­தி­பதி தேர்­தலும் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும்


08/11/2019 ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யின்­ வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தா­ஸவை   ஆத­ரிப்­பது என்று   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தீர்­மானம் எடுத்­துள்­ளது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்    இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி , புௌாட், ரெலோ  ஆகிய கட்­சிகள்   தனித்­த­னியே  தமக்குள் கூடி ஆராய்ந்து   தற்­போது   பொது­நி­லைப்­பா­டொன்­றினை  அறி­வித்­துள்­ளன.  நேற்­றைய தினம்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு  வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­ப­தி­ தேர்தல் தொடர்பில்  தமிழ்  தேசி­யக்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து  ஒரு தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும் என்று   வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  தமிழ் மக்­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில்  பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில்  பிர­தான   ஜனா­தி­பதி  வேட்­பா­ளர்­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டல்­களை  மேற்­கொண்டு   இறு­தித்­தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும் என்று  தமிழ் மக்கள் சார்பில்   கோரப்­பட்டு வந்­தது.

ஒப்பீட்டுத் தீர்மானம்


09/11/2019 சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்ற முடிவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் தனித்­த­னி­யாகக் கூடி முடி­வெ­டுத்­ததுடன். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். 
ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவை புதிய ஜன­நா­யக முன்­னணி என்ற பல கட்­சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்­பா­ள­ராக இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் களத்தில் இறக்கி உள்­ளது. இந்தப் பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­பதில் பின் நிற்­பது போன்ற ஒரு தோற்­றத்தைக் காட்டி வந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அதன் முடிவை இப்­போது வெளிப்­ப­டுத்­தி­விட்­டது.

தீர்க்கமில்லாத தீர்மானங்கள் !


06/11/2019 இழுத்­த­டிப்பு நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் தமிழ்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றன. தனித்­தனி அறி­விப்­புக்­க­ளா­கவே இவைகள் வெளி­வந்­துள்­ளன. ஐந்து கட்­சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்று கூறி­யி­ருந்­தது.


தமி­ழ­ரசுக் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு முழு­மை­யான ஆத­ர­வ­ளிப்­பது என்று உறு­தி­ யாகத் தீர்­மா­னித்து, ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.
ஆனாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்­காளிக் கட்­சி­க­ளு­டனும், தமி­ழ­ரசுக் கட்சி கலந்­தா­லோ­சித்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முடிவு என்ன என்­பது அறி­விக்­கப்­படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கிய ஆர்.சம்­பந்­த­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் ஊட­கங்­களின் ஊடாக மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்


புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக  தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­திலும்  பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை  முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான  தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை.  
ஜனா­தி­பதி  தேர்தல் பிர­சார பணி­க­ளுக்கு இன்னும் 4 நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­சா­ரங்கள் இறு­திக்­கட்­ட­மாக தீவி­ர­ம­டைந்­துள்­ள­துடன் பிர­தான வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளிவந்­து­விட்­டன. நாட்டு மக்கள்  விசே­ட­மாக தமிழ்ப்ேசும் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த இர­ண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள்  வெளியி­டப்­பட்­டுள்­ளன. மக்கள் தற்­போது குறித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை மதிப்­பிட்டு தமது தீர்­மா­னத்தை எதிர்­வரும் 16 ஆம் திகதி  எடுப்­ப­தற்கு தயா­ரா­கி­ வ­ரு­கின்­றனர். 



சீனா - இந்தியாவிற்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்குண்டுள்ள யாழ்ப்பாணம்


நிக்கேய் ஏசியன் ரிவியு
தமிழில் ரஜீபன்
07/11/2019 கொழும்பிலிருந்து 400 கிலோமீற்றர்  தூரத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கையின் முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிக்குப்பட்டுள்ளது.
ஒக்டோபர்  17 ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டமை  ,ஜனாதிபதி தேர்தலில்  மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே  என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த தேர்தல் கொழும்பிற்கும்  அதன் இரு கொடையாளர்களிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
நவம்பர் 16 ம் திகதி தேர்தலிற்காக வாக்குகளை பெறும் ஒரு அவசர முயற்சியாகவே இந்த விமானநிலையத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான இலங்கையின் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்  இந்த விமானநிலையம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படவுள்ளது, இதில் முதல்கட்டமே பூர்த்தியாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

எங்கள் கனவு (கவிதை) வித்யாசாகர்!


எங்கள் கனவு...

எங்கள் கனவுகளுக்கு சிறகுகள் முளைப்பதில்லை
வானில் பறப்பவையோ
வண்ணங்களால் ஆனதுவோ
இல்லை யெங்கள் கனவுகள்;

உறக்கத்தில் வருவதோ
வண்ணந் தீட்டிய அழகோகூட இல்லையெங்கள்
கனவிற்கு, எங்களின் கனவுகளெல்லாம்
நிர்வாணாம் இழக்காதவை;

நினைவில் ததும்பும் எண்ணக் குழந்தைகள்
போலே; எண்ணியதை எண்ணியாங்கு
செய்யவிழையும் சிந்தனையின் சிலிர்ப்புகள்
அருஞ்செயல்களின் முதலெழுத்துகள் அவை;

எளியோர்க்கு திறக்காத கதவும், எதிர்வீட்டில்
மூடாத கூரையும், இன்னும்
கிழிசல் மூட்டாத கால்சட்டையையும் மாற்றும்
கனமான கனவுகள் அவை;

ஒரு செங்கோல் கேட்டு அதை அறத்தொடு
போற்றும் கனவும், பசுந்தோட்கள் அன்றி
பணிவிடைச்செய்யும் அரசுமாய் நாடிய
வாழ்வியல் கனவு அது;

பெண் ஆண் ஏற்றயிறக்கமின்றி, பாசமிகு உறவும்
பழி வீண் வஞ்சமெழாது மக்கள்
பண்பிலும் அன்பிலும் நெருங்கி இரத்தக்கோடுகள் அழித்து
ஒரு கூட்டிற்குள் அடங்கும் உயரிய கனவு அது;

இரவில் நம்பிக்கையை உடுத்திக்கொண்டு
பகலில் சாதிகளை சோற்றுக் கல்லென அகற்றி
மனிதத்துள் மறுநாட்களை தரிசிக்கும்
எளியோரின் இன்பக் கனவு' எங்கள் கனவு;

மழைக்காற்று - அங்கம் 09 - ( தொடர்கதை ) - முருகபூபதி


நாவன்மைப்போட்டிக்கு,  கற்பகம் ரீச்சர்  பேச்சு எழுதித்தருவார் என்ற நம்பிக்கையில் வந்திருந்த அந்த இரண்டு மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக, அந்தப்பேச்சை தானே எழுதித்தருவதாக அபிதா சொன்னாள்.
தங்களுக்கு கேசரியும் குளிர்பானமும் தந்து உபசரித்த அபிதாவை அந்த மாணவர்கள் பரவசத்துடன் பார்த்தனர். தன்னை  அன்ரி என விளித்தமையால், அபிதாவுக்கும் உற்சாகம் பிறந்தது.
சுபாஷினியின் அறைக்குச்சென்று,  வெள்ளைக்காகிதங்களும் பேனையும் எடுத்துவந்தாள்.
வெளியே பெய்யும் மழை படிபடிப்படியாக குறைந்துகொண்டு வந்தது. இந்த  மழையை நம்ப முடியாது. மீண்டும் சோவெனப் பொழியலாம்!
 “ வீட்டில் தேடுவாங்க. நீங்க இரண்டுபேரும் வீட்டுக்குப்போங்க. நாளைக்கு காலையில் ஸ்கூல்போகும்போது இங்கே வந்தால், நான் எழுதிய பேச்சை எடுத்துக்கொண்டு போகலாம்.. “ என்றாள் அபிதா.
இருவரும்  “ தேங்ஸ் அன்ரி  “ எனச்சொல்லியவாறு எழுந்து சென்றனர்.  அபிதா அவர்கள் இருவரையும் கேட் வரையில் சென்று வழியனுப்பிவைத்துவிட்டு, கேட்டை முடியபோது, மஞ்சுளா ஒரு ஓட்டோவில் வந்து இறங்கினாள்.
கேட்டை திறந்து மஞ்சுளாவை உள்ளே அழைத்துவிட்டு, மீண்டும் கேட்டை முடினாள்.
மஞ்சுளா,   “ என்ன மழை இது.  நல்லா நனைஞ்சிட்டன்.  “ எனச்சொல்லியவாறு படியேறியபோது,   “ இருங்க… உங்கட டவலை எடுத்துவாரன். துடைச்சுக்கொண்டு வாங்க.    அபிதா மஞ்சுளாவின் அறைக்குச்சென்றாள்.
டவல் வந்ததும்,   “ யார் அந்தப்பெடியன்கள்..?    எனக்கேட்டாள் மஞ்சுளா.
 “ ரீச்சரை தேடி வந்தாங்கள். ஸ்கூல்ல ஏதோ பேச்சுப்போட்டியாம்.  பேச்சு எழுதித்தருவதாக  கற்பகம் ரீச்சர் சொல்லியிருக்கிறாங்க. அதனை எதிர்பார்த்து வந்த பிள்ளைகள்.  ரீச்சருக்கு போன் எடுத்தேன். அங்கேயும் நல்ல மழையாம். பாவம் அந்தப்பிள்ளைகள். நானே எழுதித்தாரன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.. “
 “ உங்களுக்கு ஸ்பீச் எல்லாம் எழுதத்தெரியுமா…. “ கூந்தலைத் துடைத்தவாறு மஞ்சுளா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
 “ ஏதோ எழுதுவேன்.  அந்தப்பிள்ளைகளைப்பார்த்தால் பாவமாக இருந்தது. ரீச்சர் எப்ப  வருவாங்களோ…? எப்போது எழுதிக்கொடுப்பாங்களோ ..?  தெரியது.  அதற்குள் அந்தப்பிள்ளைகளுக்கு பேச்சுப்போட்டி வந்திடும்.  நாளைக்கு காலையில் எழுதிவைப்பதாக சொல்லி அனுப்பியிருக்கின்றேன். “
இவளைப்பார்த்தால் சகலகலாவல்லி  போலத்தெரிகிறது. இவள் எதற்காக வீட்டு வேலைக்காரியாக வந்து வெங்காயம் நறுக்கிக்கொண்டிருக்கிறாள்…? பேசும்போதும் நறுக்குத் தெறித்தாற்போன்று சொற்களை உதிர்க்கும் இவளுக்குப்பின்னால்  அபூர்வமான செய்திகள் இருக்கலாம்.

தீர்வில்லா நிறத்தினழகு; வாழ்க்கை.. (கவிதை) வித்யாசாகர்!


வ்வுலகின் தெருக்களில்
சட்டைக்கிழித்துத் திரியும் மனிதர்கள்
மனதால் மிக ஏராளம்,
அவர்கள் மௌனத்தின் அரிதாரம்;

சிரிக்கும் முகத்துள்ளிருந்து
மௌனமாக வடியும் கண்ணீர் துளிகளை
படிக்கமுடிந்தோர் எண்ணற்றோர்,
அணைத்தோர் நகைத்தோரினும் குறைவு;

வாழ்வின் யதார்த்தங்கள்
கண்டு முறைப்பதும் காரி உமிழ்வதும்
கடைநிலை மனிதர்க்கும் சமம் தான்,
மேல்நிலை முதலாளிக்கும் சமம் தான்;

வாழ்வை எழுதுதல் --- அங்கம் 03 கண்களுக்கு இமைகள் தெரிவதில்லை ! நெஞ்சுக்குள்ளே சுமந்த பாரதியும் முதுகிலே சுமந்த சித்தரும் !! - முருகபூபதி


மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண  அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.
அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.
பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம்  எவருக்கும் தெரியாது.
வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும்  அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார்.  இருந்தும் அவர்  துணி வெளுக்கும்  தொழிலாளி.  ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.
                மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம்,                            " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.
அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.....
அச்சமில்லை... அச்சமில்லை....
மனதிலுறுதி வேண்டும்...   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.
கப்பலோட்டிய தமிழன் வா. உ. சிதம்பரம்பிள்ளை சென்னையில் பெரம்பூரில் குடியிருந்தபோது, அவரைச்சந்திக்க வரும் பாரதி தம்முடன் குள்ளச்சாமியையும் அழைத்துவருகிறார்.
 அங்குதான் பாரதியும் குள்ளச்சாமியும் எலுமிச்சை அளவுள்ள ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதை வ.உ.சி அவதானித்துவிட்டு பாரதியிடம் "என்ன சாப்பிடுகிறீர்கள்? " எனக்கேட்கிறார்.
அதற்கு பாரதி, " இது மேலுலகத்திற்கு இட்டுச்செல்லும் அருமருந்து" என்கிறார். அந்த அருமருந்துதான் அபின். ( ஆதாரம்: பாரதியின் குருமார்களும் நண்பர்களும் நூல் - ஆர். சி. சம்பத்.)

இலங்கைச் செய்திகள்


பொலிஸாரால் “ஆவா” என தேடப்பட்டுவந்த நபர் நீதிமன்றில் சரண்

வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும் 

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார் 

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கனடா- இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம் 

இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பம்

பலாலி  - சென்னை விமான சேவை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம் 


உலகச் செய்திகள்


கலைக்கப்பட்டது பிரித்தானிய பாராளுமன்றம்!

பிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு

16 அடி உயர புத்தர் சிலை திரைநீக்கம் செய்யும் போது விபரீதம் ; மதத் தலைவர் பலி

ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்!

தலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை

கர்தார்பூர் வழித்தடம்; இம்ரான் கானின் அறிவிப்பை மறுத்த அந் நாட்டு இராணுவம்!

ராமர் ஜென்ம பூமியா- பாபர் மசூதியா? - முக்கிய தீர்ப்பை வழங்கியது இந்திய நீதிமன்றம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்- இஸ்லாமியர்களிற்கு வேறு இடத்தை வழங்கவேண்டும்- இந்திய நீதிமன்றம்- இரண்டாம் இணைப்பு


கலைக்கப்பட்டது பிரித்தானிய பாராளுமன்றம்!

06/11/2019 பிரித்தானிய பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதன் கலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அடுத்த 25 நாட்களுக்கு, பிரித்தானிய சட்டமன்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்காது எனவும் அரசாங்கம் ஒரு சிறப்பு விதிகளின் கீழே செயற்படும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) - அவுஸ்திரேலியா


இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு,   1988  ஆம் ஆண்டு முதல்  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  முப்பத்தியோராவது ஆண்டு  நிறைவு நிகழ்வும்,  வருடாந்த பொதுக்கூட்டமும்  கடந்த  19 ஆம் திகதி ( 19-10-2019)  சனிக்கிழமை மாலை  மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில்  நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின்  தலைமையில் நடைபெற்றது.
 
இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின்  செயற்பாடுகள் தொடர்பான காணோளிக்காட்சியும்  மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெற்ற  இந்நிகழ்வில் 2019 – 2020 ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கை மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டிலும் குடும்பத்தின்  மூல உழைப்பாளியை இழந்தும் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவ முன்வந்திருப்பது குறித்தும் இக்கூட்டத்தில்   கலந்துரையாடப்பட்டது.
இம்மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் கல்வி நிதியத்தை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

முருகபூபதி                       ( தலைவர் )                         0416 625 766

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 19


மனசாட்சி

திரையுலகில் வெற்றி பெற திறமை மட்டும் இருந்தால் போதாது. அதிர்ஷ்டமும் கைக்கொடுக்க வேண்டும். சிலர் தங்கள் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காக படம் தயாரிப்பதும் உண்டு. ஆனால் அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு திரையுலகில் தன் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துப் பார்த்தவர் ஒருவர் உள்ளார்.  அவர்தான் டி.ஆர்.சீனிவாசன்.

குதிரை ரேஸில் இவருக்கு ஒர் இலட்சம் ருபாய்க்கு ஜாக்பட் அடித்தது. அந்த பணத்தை வேறு எதிலும் முதலீடு செய்யாமல் படம் தயாரிக்க முதலீடு செய்தார் அவர்.  அப்படி அவர் தயாரித்தப் படம்தான் மனசாட்சி.  மாதம் தப்பினாலும் என் படம் வருவது தப்பாது என்பது போல் நடித்து வந்த ஜெய்சங்கர் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார். அவருக்கு இணை வாணிஸ்ரீ.
அண்ணன் தங்கை பாசம் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகம் என்று ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன.  ஆனால் இதில் கதாநாயகன் தங்கைக்காக கொள்ளைக் கூட்டத்தில் இணைந்து கொள்கிறான்.  கொள்ளையடித்து தங்கைக்கு சீர் செய்வதற்காக அல்ல.  ஏற்கனவே கொள்ளைக் கோஷ்டியில் மாட்டிக் கொண்டிருக்கும் தங்கையின் கணவனை அதிலிருந்து விடுவிக்க தன்னை பலியாடாக்குகிறான்.  அப்படிப்பட்பவனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.  சூழ்நிலை காரணமாக அவளை மணக்கிறான்.  அவளோ கொள்ளைக் கும்பலை விட்டு விலகி வரும் படி அவனை வற்புறுத்துகிறாள்.

இப்படிப் போகும் மனசாட்சி படத்தில் அசோகன் நாகேஷ் சுருளிராஜன் குமாரி பத்மினி ஆனந்தன் ஆகிகோரும் நடித்தனர்.  இவர்களுடன் நடிகையர் திலகம் சாவித்திரியும் சில காட்சிகளில் தோன்றி நடித்தார்.  

படத்திற்கான இசையை வேதா ஏற்றிருந்தார்.  வேதாவின் இசையில் உருவான ஏழு தினங்கள் ஒரு வாரம் என்ற பாடல் பிரபலமடைந்தது.  ஒளிப்பதிவை மேற்கொண்ட லஷ்மண் கோரேயின் கமரா பளிச்சிட்டது.

படத்தை விறுவிறுப்பாக நதர்த்த நாகேஷ் சுருளிராஜன் இருவரும் மிகவும் பயன்பட்டார்கள்.  புல காட்சிகளில் நாகேஷ் தோன்றுவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பிரபல கதாசிரியர் டி.என்.பாலு டைரக்ட் செய்த இரண்டாவது படம் மனசாட்சி.  டைரக்ஷன் வசனம் இரண்டிலும் அவரின் திறமை வெளிப்பட்டது.  ரோஜாவுக்கு கூட பாதுகாப்பிற்காக முள்ளை வைத்த ஆண்டவன் பெண்களை நிராதரவாக படைத்து விட்டான்.  ஊர் போவதற்கு வழி சொன்னால் துணைக்கும் அழைக்கிறாயே போன்ற பல வசனங்கள் பாலுவின் வரிகளில் கருத்துடன் அமைந்தன.
மனசாட்சி என்ற சிறிய படத்தில் 1969ம் ஆண்டு செயற்பட்ட பாலு பிரபல டைரக்டராக பத்தாண்டுகள் கழித்து உருவானார்.  உயர்ந்தவர்கள் சட்டம் என் கையில் போன்ற படங்களை இயக்கினார்.

குதிரை ரேசில் பணத்தை அள்ளிய சீனிவாசன் திரையுலகில் ஜாக்பார்ட் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். பத்தாண்டுகள் கழித்து பிரபல தயாரிப்பாளராக ரஜனியின் தர்மயுத்தம், கமலின் மீண்டும் கோகிலா போன்ற படங்களை தயாரித்து புகழ் பெற்றார்.

இந்த மெல்பர்ன் ரேசில் ஜாக்பர்ட் அடித்த எவராவது படம் தயாரிக்க முன் வருவார்களோ என்னவோ!
















12ஆவது ஆண்டில் காலடி வைக்கும் தமிழ் ஓசை விழா 16/11/2019







தமிழ் சினிமா - ஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்


சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் கொட்டி படத்தை எடுத்து போட்ட பணத்தை திரும்ப எடுப்பதற்குள் ஒரு தயாரிப்பாளருக்கு தூக்கம் வராது என்பதே நிதர்சனம். இந்த போட்டிக்கு நடுவில் குட்டிக் கரணம் போட்டாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் பார்த்திபனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியாகியுள்ளது. ஒத்தசெருப்பின் பின்னணி பார்க்கலாமா? வழித்தடத்திற்குள் செல்வோம்!

கதைக்களம்

படத்தின் ஹீரோ பார்த்திபன் ஒரு சாதாரண குடும்ப பின்னணி. படம் முழுக்க அவர் மட்டுமே உருவத்தில் தெரிகிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் குரலாக நம் மனதில் பேசுகிறது. அவருக்கு ஒரு வெகுளியான கிராமத்து மனைவி. இருவருக்கும் ஒரு மகேஷ் என்ற குழந்தை.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வாட்ச்மேனாக வேலைக்கு வரும் பார்த்திபன், அவரின் மனைவியையும் அதே கிளப்பில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இருவரின் நோக்கமும் விசித்திரமான நோய் கொண்ட தங்கள் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பது தான்.
இதற்கிடையில் பார்த்திபனின் மனைவிக்கு அங்கு வரும் பெண்களை பார்த்து அவர்களின் உடை, அணிகலன் போலவே தானும் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.
இப்படியே போக அந்த கிளப்பிற்கு வரும் ஆண்கள் சிலர் அவரின் மனைவி மீது இச்சை கொள்ள, தங்கள் ஆசைக்கு இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் அடுத்தடுத்து சில முக்கிய பிரமுகர்களின் தொடர் கொலைகள். இதற்கு தடயமாக சம்பவ இடத்தில் ஒத்த செருப்பு கிடைக்கிறது. இதை செய்தது யார்? பார்த்திபன் மனைவியை காப்பாற்றினாரா? மகனுக்கு என்ன ஆனது என்பதே இந்த ஒத்த செருப்பு.

படத்தை பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் சில திறமையான படைப்பாளிகளும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரின் ஹுயூமரானா பேச்சும், சிந்திக்க வைக்கும் கருத்துகளும் அவரின் தனி ஸ்டைல். 2016 ல் வந்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பின் இவ்வருடம் ஒத்த செருப்பு படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார்.
உலகின் எத்தனையோ விதமான படங்கள் வருகின்றன. இதில் அதிக முதலீடு இல்லாத அழுத்தமான கதை சார்ந்த படங்களும் வெற்றி பெறுகின்றன. இதில் ஒரே ஒரு கேரக்டரை மட்டுமே வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்துள்ளன. இதில் 14 வது படமாக ஒத்த செருப்பு வந்துள்ளது.
சமூகத்தில் ஒரு தனி மனித வாழ்க்கையில் நடக்கும் சில அவலங்களை வெளிச்சம் போடுகிறது இந்த ஒத்த செருப்பு. சில உண்மை சம்பவங்களையும் பிரதிபலிக்கிறது.
அதே வேளையில் அவர் இப்படத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறார். அவர் தான் இங்கு ஜெயிக்கிறார். யார் அவர் என இங்கேயே நாங்கள் சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் தானே. எனவே படத்தை தியேட்டர்ல பாருங்கள் மக்களே.
ஒவ்வொரு காட்சிகளும் கிட்டத்தட்ட 4.1/2 நிமிட இருக்கும் என தெரிகிறது. இதற்காக அவர் மிகவும் ரிஸ்க் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது. ஒரே காஸ்ட்யூம், சிம்பிளான மேக்கப் பார்த்திபனுக்கு ஓகே.
குறிப்பாக சகஜமாக வார்த்தைகளை அள்ளிப்போட்டு டப்பிங் பேசும் அவருக்கே பெரும் சவாலாக இருந்திருக்கும். இதுவரை பலவிதமான ரகங்களில் படம் பார்த்து பழகிய நமக்கு இப்படம் சற்று வித்தியாசமான சினிமா பயணமாக இருக்கும்.
முக்கிய சொல்ல வேண்டிய சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒரு பாடல். சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமான ஒன்று.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மற்ற காட்சிகளுடன் பின்னியுள்ளதால் முக்கிய விசயத்தை சொல்ல வருகிறது. இந்த விசயத்தில் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்ஸன் ஆகியோரு இப்படம் ஒரு சவாலாக அமைந்திருக்கும். ரிலீஸ்க்கு முன்பே பலரின் பாராட்டை பெற்று விட்ட நிலையில் நாம் மட்டும் வாழ்த்தாமல் இருந்தால் அது சரியல்ல. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிளாப்ஸ்

ஓன் மேன் ஷோ போல பார்த்திபனின் தைரியமான முடிவு.
அங்கங்கு வரும் அவரின் வழக்கமான ஹுயூமர் ரசிக்கும் படியானது.
கடைசிவரை எதிர்ப்பார்ப்புடன் சஸ்பென்ஸை கொண்டு சென்றது.

பல்பஸ்

மிக நீளமான டையலாக்குகள், காட்சிகள் இருக்கிறதோ என்ற ஃபீல்.

மொத்தத்தில் ஒத்த செருப்பு விறுவிறுப்பு. குடும்பத்தோடு பார்க்கலாம்..



நன்றி CineUlagam