தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
காத்திடுவோம் வாருங்கள் !
மிகைப்படுத்தும் மேதாவிகள்!
-சங்கர சுப்பிரமணியன்
சிங்கப்பூர் தமிழரின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம்
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய ‘சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின்னூல், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகிய முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
நாளை நமதே - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
படத்தில் நடிப்பதற்கு உச்ச நடிகரை அணுகிய போது முதலில் அவர் மறுத்து விட்டார். இசையமைப்பதற்கு இசையமைப்பாளரை அணுகிய போது முதலில் அவரும் மறுத்து விட்டார். இயக்குவதற்கு டைரக்டரை முதலில் கேட்ட போது அவரும் ஆர்வம் காட்டவில்லை. இவ்வளவுக்கு பின்னரும் அதே நடிகர், மியூசிக் டைரக்டர், அதே இயக்குனர் பணியாற்ற படம் தயாராகி திரைக்கு வந்தது. அந்தப் படம் தான் நாளை நமதே.
பாரத். இளம் நடிகர்களுடன் நடுத்தர வயதான தர்மேந்திராவும் நடித்த இப் படம் அப் படத்தின் படல்களுக்காகவும், இசைக்காகவும் நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது. இந்த யாதோங்கி பாரத்தை தமிழில் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் கே. எஸ். ஆர் மூர்த்திக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது. அது மட்டுமின்றி படத்தை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு தோன்றி விட்டது. யாதோங்கி பாரத் சென்னையில் நூறு நாட்கள் அல்ல, நூறு வாரங்கள் ஓடித் தள்ளியது. இவ்வாறு தமிழகத்தில் வெற்றி பெறும் ஹிந்தி படங்களை மீண்டும் தமிழில் எடுக்க முன் வருவோர் குறைவு. ஆனாலும் மூர்த்திக்கு ஓர் ஆசை . ஹிந்தி படத்துக்கு கிடைத்த வெற்றியை பார்த்து மிரண்டு போன எம் ஜி ஆர் தமிழில் தான் நடித்தால் சரியாக வருமா என்று ஆரம்பத்தில் தயங்கினார். ஆனாலும் மூர்த்தி அவரை சமாதான படுத்தி சம்மதிக்கவும் வைத்து விட்டார்.
மலையாளத்தில் படங்களை டைரக்ட் பண்ணி விருதுகளை பெற்றவர் கே. எஸ் சேதுமாதவன். இவருடைய ஓடையில் நின்னு, பனிதீர்த்தவீடு, மறுபக்கம், நம்மவர் போன்ற படங்கள் இந்திய தேசிய விருதுகளை சுவீகரித்து கொண்டன.ஆரம்ப காலத்தில் தமிழில் இவர் இயக்கிய பால்மனம், கல்யாண ஊர்வலம் இரண்டு படங்களும் சரிவர போகாததால் தமிழ் சினிமாவை விட்டு இவர் விலகியே இருந்தார். இந்த சேதுமாதவனின் சகோதரர்தான் மூர்த்தி. ஆனாலும் படத்தை இயக்க சேதுமாதவனுக்கு முதலில் இஷ்டம் இல்லை. நாளை நமதே தயாரிப்பு பற்றி எம் ஜி ஆரிடம் பேசப் போன மூர்த்தி தன்னுடன் சேதுமாதவனையும் அழைத்து சென்றார். சென்ற இடத்தில் படத்தை சேதுமாதவனா இயக்கப் போகிறார் என்று எம் ஜி ஆர் கேட்க மூர்த்தி ஆம் என்று சொல்லி விட்டார். இதன் காரணமாக சேதுமாதவன் எம் ஜி ஆர் படத்துக்கு டைரக்டரானார்.
திருப்பதி ஆண்டவர். நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில் நிதி திரட்டும் இரவு விருந்து
26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில் மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்
29-11- 2025 Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை
பாலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?
Published By: Vishnu
05 Aug, 2025 | 02:43 AM
(ஸ்ரான்லி ஜொனி)
இஸ்ரேல் காசாவில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கி, பெருமளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அனுமதிக்காவிட்டால், இரு அரசுகள் விதிமுறையின் அடிப்படையில் நீண்டகால சமாதானம் நோக்கிச் செயற்படுவதில் உறுதிப்பாட்டை காண்பிக்காவிட்டால், எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்ராமெர் கடந்தவாரம் அறிவித்தார்.
மற்றைய நாடுகளின் அறிவிப்பு என்ன?
செப்டெம்பரில் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்தை (Statehood ) பாரிஸ் அங்கீகரிக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரகடனம் செய்த சில தினங்களில் ஸ்ராமெரின் அறிவிப்பு வந்தது. தங்களுக்கும் அதே நோக்கம் இருப்பதாக கனடாவும் போர்த்துக்கலும் கூட அறிவித்தன.
காசாவில் 21 மாதகால போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,இஸ்ரேல் அதன் மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றுக்கு முகங்கொடுக்கிறது. இஸ்ரேலின் பாரம்பரியமான நேச அணிகளான மேற்குலகின் பல நாடுகள் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்து தொடர்பில் அனுகூலமான நிலைப்பாடுகளை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
அங்கீகாரப் போக்கின் முக்கியத்துவம் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துவிட்டன. இதுவரை பலம் பொருந்திய மேற்கு நாடுகள் அவ்வாறான அங்கீகாரத்தை எதிர்த்து வந்தன. இஸ்ரேல் -- பாலஸ்தீன முரண்நிலைக்கு காணப்படக்கூடிய இறுதி இராஜதந்திர தீர்வின் ஒரு அங்கமாகவே அத்தகைய அங்கீகாரம் அமையவேண்டும் என்று அந்த நாடுகள் காரணமும் கூறின. ஆனால், அந்த நிலைப்பாடு தற்போது மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.
இலங்கைச் செய்திகள்
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது : ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவிப்பு
திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - கண்ணீருடன் மக்கள்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்-உமா குமரன்
செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது : ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவிப்பு
07 Aug, 2025 | 09:50 PM
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் வலியுறுத்தினார்.
உலகச் செய்திகள்
காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் - ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
சிங்கப்பூர் தமிழ் மக்களின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது
இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு
காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி
Published By: Rajeeban
08 Aug, 2025 | 08:21 AM
காசா நகரை இஸ்ரேலிய இராணுவத்தினரின முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்கான பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்தும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து அம்ச திட்டம் குறித்தும் தெரிவித்துள்ளுத
காசா நகரை கைப்பற்றுவதற்கான திட்டத்தினை இஸ்ரேலிய இராணுவத்தினர் முன்னெடுப்பார்கள் அதேவேளை மோதல் இடம்பெறும் பகுதிக்கு வெளியே உள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.