மரண அறிவித்தல்

திரு. மாணிக்கம் இரட்ணவடிவேல்



இலங்கை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.மாணிக்கம் இரட்ணவடிவேல் அவர்கள் கடந்த 27.11.2021 சனிக்கிழமையன்று மெல்பேணில் அகால மரணம் அடைந்து விட்டார். .

அன்னார் காலஞ் சென்ற திரு..வீரகத்தி மாணிக்கம், திருமதி.சிவக்கொழுந்து மாணிக்கம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி.திருநாவுக்கரசு சற்குணம் தம்பதியினரின் அன்பு மருமகனும், இரஞ்சினிதேவியின் அன்புக் கணவரும், ரஜீவன், ரஜீக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயக்குமாரின் அன்பு மாமனாரும், ஆரியன், அனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற தேவராஜா, ராமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி கந்தசாமி, காலஞ்சென்ற சிவனேஸ்வரி சிவலிங்கம், காலஞ்சென்ற தனலக்ஷ்மி தனபாலசிங்கம், மற்றும் அரியநாயகம்(இலங்கை), பாலரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னார் விமலதேவி(இலங்கை), தவமலர்(கனடா), கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் லீலாவதி(இலங்கை), விமலாதேவி(கனடா), ரதிரஞ்சனா(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), புவனேஸ்வரன்(இலங்கை), லோகநாதன்(கனடா), சத்தியமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம் 

Viewing Saturday 04/12/2021, 06:00-08:00PM

Allison Monkhouse Chapel,390 Burwood Highway, Wantirna South 

Funeral service - Sunday 05/12/201 10:00AM- 01:00PM

will be held in the combined Cumulus/Stratus Chapels

790 Frankston-Dandenong Road, Dandenong South



All attendees must provide full vaccination status and are required to check in via QR code.

Masks must be worn indoors.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ரஜீவன் இரட்ணவடிவேல்(மகன்):- + 44 7948 250 665

ரஜீக்கா ஜெயக்குமார் (மகள்) - + 61 407 040 096

சர்மிளா சுதேசன் (பெறாமகள்):- + 61 421 974 227

பாரதி தரிசனம் – அங்கம் 10 பாரதியை தவறாகப் புரிந்துகொண்டவர்களின் வாதங்கள் ! முருகபூபதி


இனிவரும் நூற்றாண்டில் அழியும் உலகமொழிகளில் தமிழும் ஒன்று என  பலரும்  கடந்த சில  காலமாக சொல்லிவருகிறார்கள்.

இவ்வாறு சொல்பவர்களும் தமிழர்கள்தான்.  புகலிடத்தில் பலர் தமிழ் அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.  அவற்றில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அடங்கும்.

அதன் கூட்டங்களில் சந்திப்புகளில்  தமிழர்கள் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே உரையாடுவதை அவதானித்திருக்கின்றேன்.  தமிழர்கள் நடத்தும் நடன அரங்கேற்றங்களில்  ஆங்கில மொழி கோலோச்சியிருக்கும். அங்கு வெளியிடப்படும் மலர்களிலும் தமிழைத் தேட நேரிடும்.

சீனர்கள் உட்பட பிற இனத்தவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் இரண்டாம் பட்சம்தான்.  இரண்டு சீனர்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் தமது தாய்மொழியில்தான் உரையாடுவார்கள்.

இது இவ்விதமிருக்க,  தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம்


பரவச்செய்வோம் எனப்பாடிய பாரதியும் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லியிருப்பதாகவும் தவறாகப்புரிந்துகொண்டு  தொடர்ந்தும் அவ்வாறே பேசிக்கொண்டிருப்பவர்களையும்  அவதானிக்க முடிகிறது.

கடந்த காலங்களில் உலகமொழிகள் பல பேச்சு, எழுத்து வழக்கில்  இல்லாமல்போனதனால் மறைந்துவிட்டன. சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை.

ஆனால், தொன்மையான தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருக்கிறது. ஈழத்தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க மற்றும் மத்தியகிழக்கு, ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.

 “ மொழிகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது; மொழி, அழிவை சந்திக்கும்போது, அந்த இனத்தின் வரலாறு அழிக்கப்படுகிறது. உலகெங்கும், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளால், சிறுபான்மையினர் பேசும் மொழிகள் அழிந்து வருகின்றன.  இப்பூமியில், 6,000 மொழிகள் பேசப்படுகின்றன. 100 ஆண்டுகளுக்குப் பின், இதில், 600 மட்டுமே மிஞ்சும். ஏனெனில், 3,000 மொழிகளை, 1,000 திற்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 500 மொழிகளை, வெறும், பத்துப்பேர் தான் பேசுகின்றனர் என, ஐ.நா.,வின் மொழியியல் ஆய்வுத் துறை பட்டியலிடுகிறது.    என்ற குறிப்பினையும்  படித்திருக்கின்றேன்.

எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 




எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை
  எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து -  சிறுகதை,   நாவல்   விமர்சனம்,   கட்டுரை,   உருவகக்கதைமொழிபெயர்ப்பு ,  நாடகம்என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கி றோம்.   எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.    அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சன மேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.
  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும்  எடுத்துக் கொள்ளலாம்.
  ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதிபேராசிரியர் சிவத்தம்பி  இருவரும் என்றுமே ஒருவரப் பிரசாதமாகவே இருந்தார் கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும்  இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது.

கார்த்திகை 27


 

ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை வாழ்வும் பணிகளும் - காணொளி மெய்நிகரில் வெளியீடு


அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா  செல்வத்துரை அவர்களின் வாழ்வையும்  பணிகளையும்  சித்திரிக்கும்   காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது.

அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம்                  ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த  ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது.

சிறந்த புகைப்படக்கலைஞருமான ஓவியர் செல்வத்துரை அவர்கள், இலங்கையில் புகழ்பூத்த யோகர் சுவாமிகள், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஆகியோருடனும் நெருக்கமாக  உறவாடியவர். அத்துடன் அவர் தனது புகைப்படக்கருவியினால் இவர்களை எடுத்திருந்த படங்களே இன்றளவும் ஊடகப்பரப்பிலும் நூல்களிலும் பதிவாகிவருகின்றன.

கொழும்பில்    1965 ஆம் ஆண்டு  பல வாரங்கள் நடைபெற்ற உலக விஞ்ஞானக் கைத்தொழில் கண்காட்சியில்,  இலங்கைத் தொழிற்சாலைகள்  அரங்கிலும் ஓவியர் செல்வத்துரை நாடெங்கும் சென்று எடுத்து சேகரித்த படங்களும் இடம்பெற்றன.

அக்காலத்தில் கொழும்பில் அவர், PLATE  என்ற ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தில்  அவர் பணியாற்றியவேளையில், அங்கு எடுக்கப்பட்ட கறுப்பு – வெள்ளை படங்களை வண்ணக்கலருக்கு மாற்றி புகழ்பெற்றவர்.

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 69 கலை, இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் 1986 நவம்பரில் வடமராட்சியில் நடந்த போர் ஒத்திகை ! முருகபூபதி



தமிழ்நாட்டில்  தனவணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு வர்த்தகம் செய்யவந்தவர்  பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்.

அவருக்கு அரசகேசரி, வீரகேசரி என்ற பெயர்களில் இரண்டு புதல்வர்கள் இருந்ததாக அறியப்படுகிறது.

முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு இடம்பெயர்ந்தது.

அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதை பலரும்


அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா பிறந்திருக்கிறார் என்பதை இந்தத் தொடரில் முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின் தொடக்க காலத்தில்  பாரதியாரின் நண்பர் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர்.

இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ் என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல்  மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு நடத்தியிருக்கிறது.

வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம், க. சட்டநாதன்,  அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன், கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம்                          எஸ். எம். கோபாலரத்தினம் ஆ. சிவநேசச்செல்வன், கார்மேகம், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன், சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா,  எஸ்.எம். கோபாலரத்தினம், டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன் ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், கே. நித்தியானந்தன்,  ஆர். திவ்வியராஜன்,  பால. விவேகானந்தா,  சட்டத்தரணிகள் இ. தம்பையா,  பாலச்சந்திரன்,   ஶ்ரீகாந்தலிங்கம், மற்றும் வன்னியகுலம், கே. விஜயன், தனபாலசிங்கம் உட்பட பல எழுத்தாளர்கள்  முன்னர் பணியாற்றினர்.  

வாசகர் முற்றம் – அங்கம் 16 ஏறாவூரிலிருந்து ஜெர்மனிவரையில்..... பயணத்தோடு வாசிப்பையும் தொடரும் இலக்கியவாதி சந்திரகௌரி சிவபாலன் என்ற “ கௌசி “ முருகபூபதி



“ எதை நாம் உள்வாங்குகின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். எமது முயற்சியே எமது முன்னேற்றத்துக்கு வழி. புத்தகத்தோடு வாழ்பவர் ஒரு புத்தகமாக மாறுகின்றார். அதனாலேயே சிலரை நடமாடும் வாசிகசாலை என்போம். மூளைக்குள் பதிகின்ற செய்திகளைத் தவிர ஒன்றும் புதிதாக நாம் படைப்பதில்லை. பதிவதை திருத்தியும் மாற்றியும் விபரித்தும் வார்த்தை விளையாட்டுக்களைச் செய்வதும்தான் எழுத்தாளன் பணி என்று நான் கருதுகின்றேன். சட்டியில் இருந்தாலே அகப்பையில் வரும் என்பார்கள். சட்டி என்பது வேறொன்றும் அல்ல,  எமது மூளைதான். சின்னத் துண்டுக் கடதாசி என்றாலும் கடலை சுற்றித் தந்த பத்திரிகைத் துண்டு என்றாலும் என் கைக்கு வந்தால், அது நான் இரசிக்கும் புதிய அகமே, புத்தகமே. அதற்குள் என்ன விடயம் இருக்கின்றது என்று தேடுவது என்  தேடல். இதனாலேயே தேடலும் புரிதலும் தெரிதலும் யாவர்க்கும் நலமே என்னும் என் வாசகங்கள் தாங்கிய என் முகநூல் பக்கம் விரிகின்றது.  “

இவ்வாறு சொல்கிறார் ஜேர்மனியில் வதியும் சந்திரகௌரி சிவபாலன். இவர் தனது பெயருக்குள்ளிருந்தே கௌசி என்ற புனைபெயரையும் உருவாக்கிக்கொண்டவர்.

அருந்ததிராய்

.

அழகான பெண்ணை
அணைத்துக்கொள்ளும் சமூகம்... அறிவான பெண்ணை
அணைத்துவிட முயல்கிறது.
ஐஸ்வர்யா ராய்க்கான பாராட்டுகளுக்கும்
அருந்ததி ராய்க்கான எதிர்ப்புகளுக்கும் அதுதான் காரணம்.
காடாக இருந்தாலும் சரி...
நாடாக இருந்தாலும் சரி...
ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்கிற ஜனநாயகி அருந்ததி ராய்.

இயற்கை வளத்தைச் சுரண்டுகிறவர்களுக்கும் அதிகார போதை தலைக்கேறியவர்களுக்கும் அவர் அடங்காப்பிடாரி. அறிவுதான் அழகு என்பதை அறிந்துகொள்ளும்வரை இந்த அறியாமை இருக்கத்தான் செய்யும்.
 
நீங்கள் ஒரு பழங்குடி என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் வாழும் காட்டில் 800 சிஆர்பிஎப் ராணுவத்தினர் மக்களுக்கு எதிராக வன்முறையாளர்களாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உங்கள் கிராமங்களை தீயிட்டு கொழுத்துகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் ?
இந்த நேரத்தில் பட்டினி சத்யாகிரகம் செய்ய முயற்சிப்பீர்களா ? பட்டினியால் வாடுபவர்கள் சத்யாகிரகம் நடத்துவதில் அர்த்தம் உண்டா ? சத்யாகிரகம் ஒரு தியேட்டர், அதற்கு பார்வையாளர்கள் தேவை. பார்வையாளர்கள் இல்லாத காட்டில் இந்த மாதிரி போராட்டத்திற்கும் சம்மந்தம் உண்டா ? இருப்பினும், அநீதி எதிர்க்கப்பட வேண்டும்.
மாவோயிஸ்ட்கள் என்று நீங்கள் அழைப்பது அவர்களைதான். எல்லா பழங்குடிகளும் மாவோயிஸ்ட்டுகள் அல்ல ஆனால் மாவோயிஸ்ட்டுகள் அனைவரும் பழங்குடிகளே.


பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - குலமா குணமா - ச. சுந்தரதாஸ் - பகுதி 21

 



குடும்ப ,சமூக கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.இவருடைய படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகள் வியாபித்திருக்கும் .படம் முழுவதும் வசன மழையாக பொழியும். ஆனாலும் அவற்றை திறமையாக படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து விடுவார் கே எஸ் ஜி .இந்த வகையில் அவர் உருவாக்கிய மற்றுமொரு உணர்ச்சிகரமான படம் தான் 1971ல் வெளி வந்த குலமா குணமா .


தனது திரைக் கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் பத்மினினியையும் இதில் நடிக்க வைத்தார் கே எஸ் ஜி .சிவாஜியின் தம்பியின் பாத்திரத்தில் முதலில் எஸ் எஸ் ராஜேந்திரன் நடிப்பதாக இருந்த போதும் நல்ல வேளையாக அவருக்கு பதில் ஜெய்சங்கர் நடித்தார்.இவர் அந்த கதா பாத்திரத்துக்கு ஏற்றவராக விளங்கினார்.அதே போல் அவருக்கு ஜோடியாக நடித்த வாணீஸ்ரீ அலட்டலில்லாமல் இயல்பாக நடித்திருந்தார்.ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி காட்டும் முக பாவங்களே போதும் அவர் நடிப்பை உணர்த்த! பத்மினி தன் பண் பட்ட நடிப்பால் ரசிகர்களை உருக வைத்தார்.

படத்தில் வில்லனாக வருபவர் நம்பியார்.ஆனால் வழக்கமான முரட்டு வில்லன் அல்ல,குதர்க்கமாகவும் குத்தலாகவும் பேசி மற்றவர்களை மட்டம் தட்டும் வேடம் அவருக்கு.தன் வழமையான பாணியில் இருந்து மாறி அதனை செய்திருந்தார் அவர் .அவருக்கு மனைவியாக வரும் சி கே சரஸ்வதி நம்பியாரையே தூக்கி ஏப்பம் விட்டு விட்டார் என்று சொல்ல வேண்டும்.நவீன காலத்து தாடகையாக காட்சியளித்தார் அவர். நம்பியார் சரஸ்வதி இருவரிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் வேடம் நாகேஷுக்கு! உணர்ந்து செய்திருந்தார்

நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

மெல்பேண் .... ஆஸ்திரேலியா 




அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை
முன்னின்று பேரொளியாய் காத்திடவே வந்தமைந்த 

நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம் 
எல்லோரும் மதித்திடவே  ஈழமதில் பிறந்தனரே

கருவினிலே சமயநெறி நிறைந்தவராய் பிறந்தமையால்
கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது
குறைகளைய புறப்பட்ட  குறையில்லா பெருமகனாய்
நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும்  

நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய்
ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே 
தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை
ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே   

ஆங்கிலத்தைக் கற்றிட்டார் அன்னியத்தை ஒதுக்கிட்டார்
அழகுதமிழ் இலக்கணத்தை அறிந்துவிட உரைவகுத்தார் 
பாமரரும் விளங்குதற்கு பாங்கான உரைநடையை
பக்குவமாய் வழங்கிட்ட வல்லாளர் ஆகிநின்றார் 

மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும் (கவிதை) வித்யாசாகர்!

விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு;

 நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சு ஒன்று வரும் காத்திரு;

 கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; 

 யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; 

 உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு;

 யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் காத்திரு;

 நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு, நம்பிக்கையோடு எழுந்து இந்த உலகம் பார் யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள் ஏதோ போனாலும் ஏதோ வருகிறது போனது கிடைப்பதுமில்லை வருவது நிற்பதுமில்லை; பிறகேன் வருத்தம் ?

 எல்லாம் மாறும், நம்பியிரு பூக்கள் நிறைந்த காடுகளில் ஒரு மலர் உதிர்வதும் ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில் எல்லாம் மாறுவதும் கூட இயற்கையின் இயல்புதானே? 

 பிறகு நீயென்ன? நானென்ன? போவதை விடு வாழ்வதை எண்ணிக் காத்திரு;

அவுஸ்திரேலியா மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு



இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்


                     கதைத் தொகுப்பின் கதை    ( சிறுகதை ) 


                  நடந்தாய் வாழி களனி கங்கை  ( கட்டுரை )


              பாட்டி சொன்ன கதைகள்  ( சிறுவர் இலக்கியம் )


                    நூல்களின் வெளியீட்டு அரங்கு


         19-12-2021   ஞாயிற்றுக்கிழமை மாலை  4-00  மணி

                                                  மெல்பனில்

 Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806

                                                 மண்டபம்  

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

letchumananm@gmail.com        WhatsApp: + 61 416 625 766

இலங்கைச் செய்திகள்

புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை

 இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையருக்கு கௌரவமான வாழ்வு

இந்தியாவுக்கு மேலதிகமான விமான சேவை

எந்த இனத்திற்கும் பாதிப்பின்றி மகாவலி காணிகள்; இவ்வருடம் 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை


புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை

புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை-Omicron Variant-Sri Lanka Impose Travel Restrictions to Some African Countries-Including South Africa

- ஏற்கனவே வந்தவர்களை தனிமைப்படுத்துமாறு பணிப்பு

இன்று நள்ளிரவு முதல், தென்னாபிரிக்கா, பொட்சுவானா, லெசதோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த தடையுத்தரவு அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள அதிக அவதானம் மிக்க 'Omicron' கொவிட்-19 வைரஸ் திரிபு பரவல் அவதானம் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிசாரசபை அறிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

 புதிய கொரோனா திரிபு; உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை

ஆங்கிலக் கால்வாயில் அகதி படகு மூழ்கியதில் 27 பேர் பலி

கறுப்பின ஆடவரைக் கொன்ற மூவர் குற்றவாளிகளாக தீர்ப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முஅம்மர் கடாபி மகனுக்கு தடை

நியூசிலாந்தின் எல்லையை திறக்கும் திட்டம் அறிவிப்பு

செய்யாத குற்றத்திற்கு 42 ஆண்டு சிறை அனுபவித்தவர் விடுதலை


 புதிய கொரோனா திரிபு; உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை

தென்னாபிரிக்காவில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு காரணமானதாகக் கூறப்படும் அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளுடன் புதிய கொவிட்-19 திரிபு ஒன்று கண்டுடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ள தென்னாபிரிக்காவில் இந்த மாதம் ஆரம்பம் தொடக்கம் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தென்னாபிரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளன. தெற்கு ஆபிரிக்காவின் மேலும் ஐந்து நாடுகளில் இந்த புதிய வைரஸ் திரிபு பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

காலத்தின் குரலாய் ஆகிநின்றார் நாவலர் பெருமான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

  உலகிலே பலமொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகள்


எல்லாமே ஒவ்வொரு
 வகையில் முக்கியத்துவமும் தனித்துவமும் மிக்க மொழிகளாய் விளங்குகின்றன. இந்த உலக மொழிகளில் ஒன்றாய் இருக்கின்ற எங்கள் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளில் இல்லாத தனித்துவமும்சிறப்பும் இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம். அப்படி என்னதான் சிறப்பு தமிழ் மொழிக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிற தல்லவா ! அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என்னும் தனித்துவமான சிறப்பு எனலாம்.

   உலகின் எந்த மொழிகளிலும் பக்தி இலக்கியம் என்று
சுட்டிக்
 காட்டப்படும் அளவுக்கு இல்லை என்பதே அறிஞர்களின் கருத் தாக அமைகிறது எனலாம். இந்தப் பக்தி இயக் கத்தின் முதற்குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல் ஒரு பெண்மணியின் குரல் என் பதை மனமிருத்தல் அவசிமாகும். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டி தவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினெட்டு ]

  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     கற்பகதருவாய் விளங்கும் பனைமரத்தை தமிழ்நாடு மாநில


மரமாய் 
பெருமைப்படுத்தி நிற்கிறது. பனை என்றாலே கொடை என்னும் எண்ணந்தான் மனதில் எழுகிறது. கொடைக்குக் கர்ண ணன் போல கற்பகதருவும் வள்ளல் தன்மையினைக் கொண்டதா கவே அமைந்திருக்கிறது. மக்களுக்கு எந்தவகையில் பயன் பட லாமோ அந்தவகையில் பயன்பட்டு நிற்கத் தயாராகவே இருப் பேன் என்றுதான் பனை உறுதி மொழியினை எடுத்திருக்கிறது போல் தெரிகிறதல்லவா ! அந்த அளவுக்கு அது கொடுக்கும் பயன்பாடு அளவிறந்து அமைந்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

  சாதாரண கங்குமட்டையே கைத்தொழிலுக்கான தும்பினை


அளித்தது. கங்கு மட்டையின் தும்பினால் பலர் தொழில்களைப் பெற்றனர். வருமானத்தையும் பெற்று வாழ்க்கைக்கு ஆதாரமும் ஆக்கி நின்றனர். அதுமட்டுமல்ல வெளி நாடுகளும் விரும்பி வாங்கி வருவாய்க்கும் வழிவகுத்தது. இந்தியா
,  இலங்கை நாடுகளின் பொருளாதாரத்திலும் ஒரு பங்களிப்புக்கு இடமாகியும் இருந்தது என்பதையும் பார்த்தோம். சாதாரண கங்குமட்டைக்குள்ளும் கைக் தொழிலுக்கான மூலப்பொருளை அதாவது தும்பை வைத்திருக் கும் பனையை பாராட்டியே ஆக வேண்டும் அல்லவா !

  கங்குமட்டையினை அளித்துவிட்டு - கங்கு மட்டை கொடுக்கும் கொடையினைப் பனையின் மட்டை பார்த்தபடியே இருக்கும். அதற்காகத் தானும் ஏதாவது கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றி விடும்.பனமட்டையும் தன்னைக் கொடுத்து - உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராள சிந்தை யுடன் கேட்டு நிற்கும். காய்ந்த மட்டை வேலியில் நிற்கும். வீட் டுக் கூரையில் அமர்ந் துவிடும். ஏன் விறகாகவும் ஆகி நிற்கும்.