நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ்முரசு



புன்னகை -- கலா ஜீவகுமார்

.

புன்னகை என்பது மனித வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெரும் வரப் பிரசாதமாகும்இதை ஏன் மருந்தாகப் பாவிக்க வேண்டும்? சிரித்த முகத்துடன் இருப்பவர்களைக் காணும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இதில் பலவகைகள் உண்டு. அரசன் சிரித்தால் ஆணவச் சிரிப்பு அல்லது அகங்காரச் சிரிப்பென்றும் சங்கீத மேதை சிரித்தால் சங்கீத சிரிப்பென்றும் இப்படிப் பலவகையாக குறிப்பிடுவர். ஒரு சிறு புன்னகை அது போதும் , உங்களையும் பிறரையும் மகிழ்விக்க அது போதும். தெரியாதவர்களைக் காணும்போது கூட சிரிக்கலாம் , தப்பில்லை.
சிரிப்பு ஒரு நல்ல மருந்தும் கூட. அன்றன்று நடந்த நல்ல விடயங்களை மட்டும் சிந்தியுங்கள். மீட்டிப்பாருங்கள். தீயன எதுவாயிருந்தாலும் அந்த நிமிடமே மறந்து விடுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை அதிகரித்துக்கொள்ளுங்கள். கடவுளிடம் அல்லது நல்ல ஒரு நண்பரிடம் உங்கள் மனச் சுமையை இறக்கி விடுங்கள். உங்களுக்கு தீமை செய்பவருக்கும் முடியுமாயின் நன்மையை செய்யுங்கள். இவற்றை செய்வதால் உங்கள் முகமும் மலர்ந்து விடும் , மனமும் லேசாகி விடும்.

இன்று மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் தமிழ் முரசு ஒரு பக்கம் சாராது நடுநிலைமையில் நின்று  செயற்ப்பட்ட தாலோ என்னவோ புன்னகையுடன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

நான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி கணேசன்


.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது தோன்றியும் மறைந்தும் போகின்ற இணைய சஞ்சிகைகளுக்கு மத்தியில் தமிழ்முரசு தனது நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதென்பது வரவேற்கப்படவேண்டியது.
தமது அடிப்படை வாழ்வாதாரப் பணியை செய்து கொண்டே தமிழ்முரசின் பணியையும் இடைவிடாது நிறைவேற்றும் தமிழ்முரசின் பொறுப்பாளர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்;. அவர்களது பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒருவகையில் நமது சமூகக் கடமையும்கூட.
சமகால இலக்கிய வடிவங்களில் இணையப் பத்திரிகை என்பது மிகவும் முக்கியமானதும் தனித்துவமானதாகவும் மாறிவருகின்றது. வாசிக்கும் பொறுமை அற்றுப்போன இந்தக் காலகட்டத்தில் இலக்கிய ரீதியான அளவுகோல்களால் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை எழுத்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காது இலகு மொழியில் சிலவற்றை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும்  இயல்பாகச் சொல்ல முனைகின்ற தமிழ்முரசை பெரும்பாலான வாசகர்கள் விரும்புகின்றனர்.
சமூக நிகழ்வுகளையும் அவற்றின் மையப் படைப்புகளையும் பலரும் தெரிந்து கொள்ளும் விதமாக செழுமையான செறிவான விமர்சனங்களுடன்கூடிய புகைப்படங்களையும் தாங்கிவருவதன் மூலம் அவுஸ்திரேலியத் தமிழ்சமூகத்தை தமிழ்முரசு தன்பக்கம் கவர்ந்து கொண்டுள்ளது. உள்நாட்டு நிகழ்வுகளின் விம்பங்கள் என்னும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் சிக்குண்டு போகாமல் பன்முகத் தன்மையையும் தாங்கி பலவிதமான இலக்கியச் சுவையோடு வாராம்தோறும் வலம்வரும் தமிழ்முரசு வரவேற்கப்படவேண்டியதொன்று.

தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.


.மாத்தளை  சோமு 
                                    

வானெலி அடங்கிய ஒலிஊடகம் இருந்த போது அச்சு ஊடகமே நாடெங்கும் பரவலாக இருந்தது. தலைப்புச்செய்திகளை மட்டுமே வானொலி ஒலிபரப்பியது. ஆனால் அச்சு ஊடகங்கள் விரிவான செய்திகளோடும் படங்களோடும் மக்களை நெருங்கி ஆளுமை கொண்டிருந்தன.

விஞ்ஞான முன்னேற்றத்தில் ஒலியோடு ஒளியும் சேர்ந்து தொலைக்காட்சி உருவாகி அது பரவலானபோது ஒலி ஊடகம் தனது ஆளுமையில் சற்றுத்தேய்வினைக் கண்டது.
கால ஓட்டத்தில் ஒலி ஒளி எழுத்து என்பன கைகோர்த்து கணனிக்குள் வந்தபோது அதன் வளர்ச்சி அதன் விரிவு உலக நாடுகளின் எல்லைகளைத்தாண்டி செய்திகளை மின்னல் வேகத்தில் பரப்பின.
கணனியின் மாயக்குழந்தைதான் இணையத்தளம். ஆனால் அதன் மாயம் மாயாஜாலம் மட்டுமானதாக இல்லை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இணையத்தளத்தின் வேகம் அதன் விரிவு செறிவு மனிதர்களால் தவிர்க்கமுடியாததாகி விட்டன. இன்று இணையத்தளங்களில் பல்வேறு மின்இதழ்கள் மலர்கின்றன. அவ்வாறு அவுஸ்ரேலியாவில் மலர்ந்ததுதான் தமிழ்முரசுஒஸ்ரேலியா.

தமிழ்முரசு திங்கள்கிழமை தோறும் மலர்ந்தபோதும் அச்சு ஊடகங்களுக்கு முன்பாகவே செய்திகளை நிகழ்ச்சிகளை சமூகநிகழ்வுகளை கொண்டுவந்து விடுகின்றது. அந்த பரம்பலில் அச்சு ஊடக இதழ்கள் போட்டியிட முடியாது போய்விடுகின்றது. இந்த உண்மை உலகில் வரும் எல்லா அச்சு இதழ்களுக்கும் பொருந்தும். ஆகவேதான் தழிழக சஞ்சிகைகள் இணையத்தளத்திலும் தமது இதழ்களைப் பதிகின்றன.

தமிழ்முரசுஒஸ்ரேலியாவில் திங்கள்தோறும் பதிவாகும் மின்இதழை அதன் அமைப்பு அதன் செறிவு ஆகியவற்றிற்காக பாராட்டலாம். அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கும் நடாத்தும் கலை இலக்கிய நிகழ்வுகளை உலக அரங்கில் வேகமாக தமிழ்முரசு கொண்டு சென்று விடுகின்றது. இவற்றை மின் இதழால் மட்டுமே சாத்தியமாக்கமுடியும். ஆகவே நான்காம் ஆண்டில் காலடிவைக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகிறேன். தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.

புரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் அவுஸ்திரேலியா தமிழ்முரசு - முருகபூபதி

.
கணினி யுகம் வந்தபின்னர் மனிதவாழ்வு மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பாக இணைய இதழ்கள், வலைப்பூக்கள், ஸ்கைப் எனப்படும் நேரடி தொடர்பாடல் சாதனம் என்பன தவிர்க்கமுடியாத அம்சங்களாகிவிட்டன.
இந்தப்பின்னணியுடன்தான் இன்று தனது அயராத தொடர்ச்சியான பணியில் மூன்று ஆண்டுகளைப்பூர்த்திசெய்துள்ள அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து இயங்கும் இணைய இதழ் தமிழ்முரசுவைப்பார்க்கின்றோம்.

வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை எழுந்ததுமே நான் முதலில் பார்ப்பது அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழைத்தான். அதன் பிறகு ஏனைய இணையங்களை தரிசிப்பேன்.
நான் பிறந்த நாடு இலங்கையில் செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போகும் துர்ப்பாக்கியம் தொடருகிறது. உலகில் தொடர்பூடகம் வலிமையான சாதனம். பல உலகநாடுகளில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்திய பெருமையும் ஊடகங்களை சாரும். உதாரணத்திற்கு பதச்சோறாக ஒன்றை குறிப்பிடலாம்.

வீடும் வீடுகளும் (வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)

நாலாவது ஆண்டில் காலடி வைக்கும் "தமிழ் முரசு  அவுஸ்திரேலியா" வாராந்த இணைய சஞ்சிகைக்கு என் வாழ்த்தை இவ்வேளை பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்வடைகின்றேன்.
தொடர்ந்தும் நாம் வாழும் நாட்டின் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும், நம் தமிழருக்கும் இந்தத் தளம் ஒரு பாலமாக இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்


நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

வீடும் வீடுகளும்

(வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)


 "மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்" -
சொன்னவர் பிரபல எடிட்டர், இயக்குனர் லெனின்

முள்ளை முள்ளால் எடுப்பது போலத் தரங்கெட்ட சினிமாப் படைப்பை மறக்க வைக்கவும், நல்ல சினிமா எடுப்பதிலும், அதைப் பார்ப்பதிலும் நிவர்த்தி செய்யலாம் என்பது என் எண்ணம்.

அச்சம் என்பது மடமையடா...



தொலைநோக்குப் பார்வையுடன் கவியரசர் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்
என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!
குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!
மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

ஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை.. (வித்யாசாகர்) கவிதை!


நாங்கள் அன்றும் இப்படித் தான்
கொதித்துப் போயிருந்தோம்..
சதை கிழிய
தாலி அற
உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த
எங்களுறவுகளை
கண்ணில் ரத்தம் வடியத்தான்
பார்த்துக் கொண்டிருந்தோம்
உலகின்
நியாயம் மறைந்த கண்களில்
வார்த்தைகளைத் துளைத்து
அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து
அவர்களின் செவிட்டில் அரையத் தான்
எங்களுக்கு
இத்தனை நாளாகிப் போனது.,
காடும் மலையும்
மின்னல் வெட்டிய வெளியெங்கும்
தமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்
அடங்கிவிடவில்லை;

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 24/03/2013 - வேட்டைத்(7ம்) திருவிழா


படப்பிடிப்பு ஞானி    


தமிழ் வளர்த்த சான்றோர் விழா






தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013  நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள்    ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது 

சுட்டீஸ் in Sydney Super Singer Junior

.
உலகையே இசையால் அதிர்ச்சியூட்டிய இளம் பாடகர்கள் Aajeeth, Yazhini, Gowtham & Sukanya சிட்னி துர்க்கை அம்மன் கலாச்சார மண்டபத்தில் மார்ச் மாதம் 23ம் திகதி மாலை சிட்னி தமிழர்களின் உள்ளங்களை உருக்கினார்கள். 




படங்கள் கீழே.

அறவழியில் அறம் செய்தவர்… அமரர்.ஜீவகதாஸ்!...

.

யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் அரச சாற்பற்ற பொது தொண்டர் தாபனமான அறவழிப் போராட்ட அமைப்பின் தாபகச் செயலாளர் ஜீவா என்றும் ஜீவன் என்றும் எல்லோராலும் அன்பாய் அழைக்கப்பட்டவரான மட்டுவில் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் தனது 67வது வயதில் கடந்த
 2-2-2013 அன்று தனது இல்லத்தில் காலமானார்.
1974ம் ஆணடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்சி மகாநாட்டுத் தொண்டர் சேவையுடன் இவரின் பொதுப்பணி வேர்விட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் முயற்சியால் சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினம், கலாநிதி நேசையா ஆகியோரின் ஒத்துழைப்புடன் 1979 மாசி மாதம் 25ம் திகதி இந்த அறவழி போராட்ட அமைப்பு சாவகச்சேரியில் உதயமாகியது. இதில் தலைவராக திரு.துரைராசா அவர்களும் செயலாளராக திரு. ஜீவகதாசும் தெரிவு செய்யப்பட்டார்கள். திரு ஜீவா அவர்கள் அன்று தொட்டு தான் இறக்கும்வரை சுமார் 34 ஆண்டுகள் செயலாளராகப் பதவி வகித்திருப்பது ஒரு சரித்திரமாகவே கருதலாம்.

இலங்கைச் செய்திகள்


மத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு

இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் ஹர்த்தால்

அனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

 ஜெனீவாத் தீர்மானம் மாற்றத்தை ஏற்படுத்தாது

  நீர்த்துப்போகும் நீதி

======================================================================
மத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் திறந்து வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 27 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம், 10 இலட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

துர்க்கை அம்மன் ஆலயத்தில் சொல்வேந்தர் சுகி சிவம் 30 03 13

.

சிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்தமாலை 2013

.


உலகச் செய்திகள்



இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி

லெபனான் மீது சிரியா தாக்குதல்

மியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

பாப்பரசர் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு
=========================================================================


 இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி
22/03/2013
obama_jj
மேற்குக்கரை: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதற்தடவையாக இஸ்ரேலுக்கும் மேற்கு கரைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஒபாமா இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும்
பேச்சு மேடைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு இறையாண்மையுள்ள பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழியாகுமென ஜெருசலேமில் இஸ்ரேல் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறியுள்ளார். |

ஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீகரித்தது


இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை 4-0 என சுவீகரித்தது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தெடரில் பங்கேற்றது. இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தேல்வியடைந்து தொடரை இந்தியாவிடம் தாரைவார்த்த நிலையில் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமானது.

தமிழ் சினிமா




சந்தமாமா 

வித்தியாசமான கதையும், நல்ல கவிதை வரிகளுடன் பாடல்களும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தாலும் நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால் சந்தமாமா சாறு வீணாகிப் போன "சக்கை மாமா" வாக மாறிவிட்டது.
கருணாஸ் ஒரு எழுத்தாளனாக பலராலும் அறியப்படவேண்டும் என்ற பெரும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.
சந்தமாமா என்ற பெயரில் எழுதி, அதனை அவரே அச்சிட்டு, வெளியிட்டு, தனது செலவிலேயே விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.
ஆனால், இவரது எழுத்துக்களை படிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி ஸ்வேதாபாசுவை சந்திக்கும் கருணாஸ் அவர் மூலமாக தன்னுடைய புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.
இந்நிலையில், தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதாபாசுவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு முன்பே ஓடிவிட திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்வேதா பாசுவுக்கு வாழ்க்கை கொடுக்க கருணாஸ் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்து கொள்கிறார்.
கருணாஸ் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்.
ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுத வேண்டும், அது படிப்பவர்களின் மனசை தொட வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் அனுபவ ரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்.
ஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலையில், தனது மனைவியை அவள் திருமணம் ஆனவள் என்பது கூடத் தெரியாமலேயே காதலிக்கும் இளைஞனான ஹரீஸ் கல்யாண் வருகிறார்.
அவனை காதலிப்பது போல தனது மனைவியை நடிக்கச் சொல்கிறார் கருணாஸ். ஆனால் ஸ்வேதாபாசு இதற்கு மறுக்கிறார்.
உடனே, கருணாஸ் எனக்கு காதலில் முன் அனுபவமில்லை. அதனால் நீ அவனை காதலிப்பது போல நடித்தால் அந்த அனுபவத்தை நேரில் பார்த்து நான் ஒரு கதையை வார இதழில் தொடராக எழுதி நல்ல பெயரும், புகழும் அடைவேன் என்கிறார்.
தனது கணவனின் ஆசைக்காகவும்,நீண்ட நாள் லட்சியத்துக்காகவும் ஹரீஸ் கல்யாணை காதலிப்பது போல நடிக்க ஆரம்பிக்கிறார் ஸ்வேதா பாசு.
ஆனால், ஸ்வேதாபாசுவை உண்மையாக காதலிக்கும் ஹரீஸ் கல்யாண் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக, அதன் பின் பிரச்சினைகள் தொடங்குகிறது.
இந்த பிரச்சினைகளிலிருந்து ஸ்வேதா பாசு மீண்டு வந்தாரா? கருணாஸின் எழுத்தாளனாக பேரெடுக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
படம் தொடங்கியது முதல், ஜெ.காந்தன் பொலிஸ் நிலையத்தில் கருணாஸின் புத்தகத்தை படித்துவிட்டு கோபப்படும் காட்சி வரை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அதன்பின், வரும் காட்சிகளால் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சந்தமாமாவாக கருணாஸ். வழக்கம்போலவே அப்பாவியான எழுத்தாளர், கணவர், நண்பன் என கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபேன் விற்க வந்த ஸ்வேதாபாசுவை தன்னுடைய ரசிகை என்று எண்ணி, அதன்பின்னர் அவர் சேல்ஸ் கேர்ள் என்று தெரிந்தபின் அவர்மீது கோபப்படுவதும், தான் ஒரு எழுத்தாளானாக ஆகவேண்டும் என்பதற்காக ஹரீஸ் கல்யாணை காதலிக்க மனைவியிடம் கெஞ்சுவதும் என ஒரு மொக்கை எழுத்தாளனை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.
கதாநாயகியாக ஸ்வேதா பாசு கொள்ளை அழகு. குழந்தைத்தனமான முகம். இவர் படத்தில் அவ்வப்போது காட்டும் முகபாவனைகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.
தனது கணவன் கருப்பாக இருந்தாலும் அவனது நல்ல மனதை அறிந்து அவனுக்காகவே வாழ்வது, அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது என தனது கதாபாத்திரத்தில் அக்மார்க் மனைவியின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்வேதாபாசுவை காதலிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். படத்தின் துணை கதாபாத்திரத்திற்கு தூணாய் நின்றிருக்கிறார். மேலும், இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.
கருணாஸின் அப்பாவாக வருகிறார் இளவரசு. மகன் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் கொடுக்கிறார். அதற்கு இரண்டாம் பாதியில் தரும் பிளாஸ்பேக் மிகச் சாதாரணமாக இருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி என்று சக கொமெடி நடிகர்களும் படத்தில் உண்டு, ஆனால் கொமெடிதான் இல்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும் ‘யாரோ நீ’ என்ற மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் இது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்பதற்கு அடையாளமாக இருக்கிறதே தவிர புதிதாக வேறொன்றும் இல்லை.
ஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவில் கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அருமை. நடுத்தர பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளை எளிமையாக கையாண்டிருக்கிறார்.
குழந்தைகளை கவரக்கூடிய எந்த சமாச்சாரங்களும் இல்லாத இந்தப்படத்தை ஏன் குழந்தைகளுக்கான படம்போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியை இயக்குனர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கத் தோன்றுகிறது.
இப்படியெல்லாம் செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு படத்தின் இடையிடையே பலமுறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘சந்தமாமா’ கொமெடி மாமா.

நன்றி விடுப்பு

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 23/03/2013 - மாம்பழத் (6ம்) திருவிழா