மரண அறிவித்தல்


அமரர் திரு சுப்பையா சிவலிங்கம்

தாயின் மடியில் 28-01-1931   ஆண்டவன் திருவடியில் 05-02-2016

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கணக்காய்வாளரும் (Auditing Department, Colombo) பிள்ளையார் அரிசி ஆலை (அடம்பன், மன்னார்) உரிமையாளரும் ஆகிய திரு சுப்பையா சிவலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜயாத்துரை யோகம்மா அவர்களின் அன்பு மருமகனும், சிவபாக்கியத்தின் ஆருயிர்க் கணவரும், வசந்தி (அவுஸ்திரேலியா), வசந்தன் (அவுஸ்திரேலியா), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறீதரன் (அவுஸ்திரேலியா), மெரியம் (அவுஸ்திரேலியா), கவிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஸ்ரீத்தீ, ஸ்ரீஷா, நேத்தன், லோரன், சானுஜன், சஜீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சவுந்தரம், நவரட்ணம், ஏகாம்பரம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 101 South St, Granville, NSW ல் அமைந்துள்ள Liberty Funerals ல் 9/2/2016 செய்வாய்க் கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைக்கப்பட்டு, 10/2/2016 புதன் கிழமை காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை 16, Gooden Drive, Baulkham Hills, NSW ல் ஈமைக்கிரியைகள் நடாத்தப்பட்டு தகனத்திற்காக 712-746, Windsor Rd, Rouse Hill, NSW ல் அமைந்துள்ள Castlebrook Crematorium மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவபாக்கியம் (மனைவி) - அவுஸ்திரேலியா:  612-9620-9639
வசந்தி (மகள்) – அவுஸ்திரேலியா:  614-7917-6282
சிறீதரன் (மருமகன்) – அவுஸ்திரேலியா:  613-0129-1281
வசந்தன் (மகன்) - அவுஸ்திரேலியா:  612-9624-6887

முகுந்தன் (மகன்) - கனடா:  905-554-3950 / 416-668-9696

"விசாரணை" திரை அனுபவம் - கானா பிரபா

.

வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன்.இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்.

சரி இனி "விசாரணை" க்கு வருவோம்.
தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருக்கும் அப்பாவிகள் நாலு பேர் ஆந்திரா காவல்துறையினரால் கொள்ளையடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஆகுமாறு நிர்ப்பந்திக்கப்படும் சூழலுக்கு அவர்கள் ஆட்படும் போது அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள். ஆந்திராவில் இருந்து தம் தாய்த் தமிழகத்துக்கு வந்த போது எப்படியானதொரு சவாலை எதிர் கொண்டார்கள் என்பதே படத்தின் மூலம்.
சொல்லப் போனால் இரண்டு வெவ்வேறு முடிச்சுகளோடு பயணப்படும் கதை, இடைவேளைக்கு முன், பின் என்று பயணிக்கிறது.

சிட்னி முருகன் ஆலயத்தில் தைப்பூசம்

.

ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயம் - 14/02/2016



திரும்பிப்பார்க்கின்றேன் - (கடந்த வாரத்தொடர்ச்சி ) - முருகபூபதி

.
  
இலங்கையின்   தென்னஞ்சோலைத் தோப்பிலிருந்து   ஸ்காபரோ   பனிமழைவரையில்  இணைந்துவரும்   இலக்கியத்தங்கை
தர்மத்திற்கும்  தார்மீகத்திற்கும்   உள்ளே  ஊடுறுவியிருக்கும்   வலியை   இனம்காண்பிக்கும்
 பச்சை மிளகாய்    சிறுகதை
    

ஸ்ரீரஞ்சனி கனடாவில்  தமிழ்  கற்கும்  மாணவர்களுக்கும்   தமிழ்  போதிக்கும் ஆசிரியர்களுக்கும்   எழுதியவர்,  இலக்கிய  வாசகர்களுக்கு    ஏற்கனவே   எழுதப்பட்ட  தமது  கதைகளையும்  தொகுத்திருந்தார்.
2009 இல்  தமிழ் படிப்போம்  என்ற  நூலின்  இரண்டு  பாகங்களையும், 2010   இல்  நான் நிழலானால்  என்னும்  கதைத்தொகுப்பையும் வெளியிட்டார்.
இந்த கதைத்தொகுப்பிற்காக 2010   இல் எனது பார்வையில் ஓரு குழந்தையும் படைப்பாளியும்  எனத்தொடங்கி  பின்வருமாறு எழுதியிருந்தேன்.
" சில தசாப்தங்கள் யார் யார் எங்கெங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் கழிந்துபோன காலங்கள்.  அவர் கனடா செல்லுமுன்னர் நீர்கொழும்புவந்து  சந்தித்ததாக  நினைவு.   ஆனால்,  மீண்டும் தொடர்புகள்   தொடராமல்  இடைவெளி  நீண்டது.    இந்த இடைவெளிகளை  நீக்கும்  வலிமைபெற்றது  இலக்கியம்  என்பதை அனுபவபூர்வமாக  அறிந்திருக்கின்றேன்.  ஈழத்தமிழ்  மக்களின் புலப்பெயர்வு  வலிகள்  நிரம்பியது.  அந்த  வலிகளை 

“தமிழ் இனம் - ஒரு பார்வை“

.


திரு கந்தர் பாலநாதன் எழுதிய “தமிழ் இனம் - ஒரு பார்வை“ ஒரு சிறந்த நூலாக வெளிவந்திருக்கிறது. இந்த நூலில் தமிழ் இனத்தின் கலாச்சார பாரம்பரிங்களையும் அதன் தொன்மையையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். மேலும் இலங்கை இந்தியாவில் தமிழினம் எவ்வாறு தாக்கத்தை செலுத்தியுள்ளது என பலவிடயங்களை உள்ளடக்கியுள்ளார்
 அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்
 அச்சிட்டு வெளிட்டோர் – VJ Tamil Books
Proudly Printed and Published by VJ Tamil Books 
for Books and Prices: Call Mr Balanathan 0407 365 280

கம்பராமாயணச் சிந்தனைகள் சொற்பொழிவு 13 .02 .2016

               .
 விக்டோரியா   இந்து சங்கம்  ஆதரவில்

        கம்பராமாயணச்  சிந்தனைகள்  சொற்பொழிவு
இந்தியச்  சிந்தனை மரபு  ஆசிரியர்,  கலாநிதி  நா.சுப்பிரமணியன்
        வழங்கும்   கம்பராமாயணச் சிந்தனைகள்  சொற்பொழிவு.
இடம்:   மெல்பன்   ஸ்ரீ சிவா விஷ்ணு  ஆலயம்  கலாசார மண்டபம்.
                       Boundary road, Carrum Downs
              
காலம் :  13-02-2016     சனிக்கிழமை  மாலை  4.00  மணி 
யாழ்.பல்கலைக்கழக  தமிழ்த்  துறையிலே  24  ஆண்டுகள்  பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற  கலாநிதி  நா.சுப்பிரமணியன்  அவர்கள்,  படிப்படியாக உயர்நிலைகளை   எய்தி  அத்துறையின்  தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும்   திகழ்ந்து,  2002  ஆம்  ஆண்டில்  ஓய்வு பெற்றுக்கொண்ட வர்.    இவர்    சிலகாலம்  தமிழகத்திலே  தங்கி  தற்பொழுது கனடா வாசியாவார்.
நால்வர்  வாழ்வும்  வாக்கும்,   கந்தபுராணம்  ஒரு  பண்பாட்டுக்களஞ்சியம், காலத்தின்  குரல்,    ஈழத்துத் தமிழ்  நாவல்  இலக்கியம்  உட்பட  சில நூல்களை     எழுதியிருக்கும்  கலாநிதி நா. சுப்பிரமணியன்  அவர்கள், தமிழக   அரசின்  விருது,   இலங்கை  தேசிய  சாகித்திய  விருது,  இலங்கை வடக்கு  - கிழக்கு  மாகாண  ஆளுநர்  விருது,   இந்திய  ஸ்டேட் பேங்  விருது தமிழகத்தின்   சேக்கிழார்  ஆராய்ச்சி  மன்றத்தின்  விருது  என்பனவற்றையும்  பெற்றவர்.
கலாநிதி நா. சுப்பிரமணியன்   அவர்களின்  அவுஸ்திரேலியா  வருகையின் நிமித்தம்   விக்டோரியா  இந்து  சங்கம்  ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்ச்சியில்   கலந்து  சிறப்பிக்குமாறு  அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர்.


அன்பர்கள் நினைவுகூர்ந்த நிகழ்வில் ஒலித்த அருண்.விஜயராணியின் குரல்

.

மெல்பனில் கடந்த ஆண்டு இறுதியில் இயற்கை எய்திய எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான திருமதி அருண். விஜயராணி நினைவரங்கு மண்டபம் நிறைந்த அன்பர்களுடன் இடம்பெற்றது.

அருண். விஜயராணியின் அன்புக்கணவர் திரு. அருணகிரியும் புதல்வர்களும் மற்றும் குடும்பத்தினரும் ஒழுங்குசெய்திருந்த இந்நிகழ்வு மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு. ஆதித்தன் அருணகிரியின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு. அர்ஜூனன் புவீந்திரன், அருண். விஜயராணிக்கு பிடித்தமான பாரதி பாடல்களை பாடினார்.

அருண். விஜயராணியின் மூத்த அண்ணன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - திருமதிகள் வாசுகி பிரபாகரன் - ரேணுகா தனஸ்கந்தா - திருவாளர்கள் தெய்வீகன் - லெ. முருகபூபதி ஆகியோர் அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் குறித்து நினைவுரைகளை நிகழ்த்தினர்.

உலகச் செய்திகள்


ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்

ஸிகா வைரஸ் பரவல் தொடர்பில் அவசரகால நிலைமை : வெளிநாட்டடு பயணங்கள் ரத்து

கிரேக்கத் தீவில் குவிந்துள்ள உயிர்காப்பு மேலங்கிகள்

தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில்  மர­ண­தண்­டனை 

தாய்வானில் பயங்கர நிலநடுக்கம்: இடிபாடுகளிலிருந்து 221 பேர் மீட்பு

பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்

ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!


ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்


இலங்கைச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

சி.எஸ்.என்.பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கை

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிரான பிடியாணை, ரெட் நோட்டீஸ் இரத்து

25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்

3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது

ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!

பஷில் ராஜபக்ஷ ஆஜர்

ஸிகா வைரஸ்  :  இந்த அறிகுறிகள் இருந்தால்   வைத்தியரை நாடுங்கள்

தமிழ் மொழியில் தேசிய கீதம் 

கொத்தலாவலவின் மனைவி கைது

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஹுஸைன்

சீன வெளி­வி­வ­கார அமைச்சர் திடீர் விஜயம்; கட்­டு­நா­யக்­கவில் மங்­க­ளவுடன் சந்­திப்பு

இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா

சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை:  சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு

ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

01/02/2016 முன்னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜ­பக்­ஷ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் ஆஜராகியுள்ளார்.

தமிழ் சினிமா


நன்னக்கு பிரேமதோ



1150 திரையங்கில் சங்கராந்தி தின சிறப்பாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ. இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலக்க்ஷன் அள்ளி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படங்களிலேயே இப்படத்தில் செம ஸ்டைலிஷாக விருந்து படைத்துள்ள படம் நன்னக்கு பிரேமதோ.

கதை

லண்டனில் மிக செழிப்பாக வளர்ந்த இளைஞர் அபியாக இருக்கும் ஜூனியர் என் டி ஆர், இவரது தந்தை சுப்ரமணியன் (ராஜேந்திர பிரசாத்) மரணப்படுக்கையில் உள்ள போது சில வருடங்களுக்கு முன்பு தன்னை ஏமாற்றி அவமானப்படுத்திய ஜகபதி பாபு பற்றியும் இன்னும் 30 நாட்களில் நான் சாகப்போகிறேன் அதற்கு முன் நான் பட்ட அவமானம் போல் அவனும் படவேண்டும், அப்போது தான் என மனம் சாந்தியடையும் என்று அவரது மகனான ஜூனியர் என் டி ஆரிடம் சொல்கிறார். அதன் பிறகு ஜூனியர் என் டி ஆர், ஜகபதி பாபு தேடி சென்று அவரை ஒன்னும் இல்லாதவனாக செய்து எப்படி அவமானப்படுத்துகிறார் என்பதே கதை.

ஜூனியர் என்.டி.ஆர்

மிக ஸ்டைலிஷாக ஒரு ஹீரோவை பார்த்து நீண்ட நாட்கள் ஆனது, அந்த ஆசையை ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தின் மூலம் தீர்த்துள்ளார். அவர் வைத்திருக்கும் தாடியும், உடையும் ஒவ்வொரு காட்சிக்கும் கம்பீரத்தை தருகிறது. மேலும் எந்த காரியத்தையும் கூலாக செய்யும் நபராக கலக்குகிறார். அது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து செய்திருப்பது தெரிகிறது. என்ன சில செண்டிமெண்ட்டான காட்சிகளில் முக அசைவுகள் சுத்தமாக சரியில்லை அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ராகுல் ப்ரீத்தி

வழக்கம் போல் வில்லனுக்கு மகளாக வரும் கதாநாயகி, படத்தில் கிளாமரை அள்ளி வீசியுள்ளார். தன் கனவில் வரும் ஒரு சம்பவத்தை கண்டு அடிக்கடி அலறுவதும், தன் தாயை ஜெயிலில் பார்த்து உருகுவதும் நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் அவரே டப்பிங் பேசியது வரவேற்கத்தக்க விஷயம்.

ஜகபதி பாபு

படத்தின் மிகப்பெரிய பலம், தன் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் சாமர்த்தியமாக திகழ்வது அடடா போடா வைக்கிறது. அதும் ஜூனியர் என்.டி.ஆர்க்கு நிகராக பக்கா ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார்.

ராஜேந்திர பிரசாத்

ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையாக நடித்திருக்கும் ராஜேந்திர பிரசாத், இப்படி ஒரு தந்தை இல்லையே என்று நம்மை ஏங்க வைக்கிறார். நேர்த்தியான ஒரு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

கிளாப்ஸ்

1. ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைலிஷான நடிப்பு.
2. படத்தின் பின்னணி இசை மற்றும் பாராட்டத்தக்க ஒளிப்பதிவு
3. இரண்டாம் பாதியின் வேகம், யூகிக்க முடியாத திரைக்கதை

பல்ப்ஸ்

1. மெதுவான முதல் பாதி- கதைக்குள் செலவே சில நேரம் ஆகிறது
2. பார்த்து பழகி போன கதை
3. யதார்த்தத்தை மீறிய ஹீரோயிசம் மற்றும் சண்டைக்காட்சிகள்
இயக்குனர் சுகுமார் அப்பா, மகன் உணர்ச்சிகளை கருவாய் கொண்ட கதை களத்தை மாஸ் படங்களுக்கு இணையாக அதே சமயம் படுஸ்டைலிஷாக கொடுத்துள்ளார். கண்டிப்பாக ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது இந்த படம்.
மொத்தத்தில் நன்னக்கு பிரேமதோ -- பாச போராட்டத்தில் ஒரு மாஸ் படம்

ரேட்டிங் - 3/5

நன்றி cineulagam















முள்ளி வாய்க்கால்

.
கவிஞர் வைரமுத்து அவர்கள் இலங்கையில் எழுதிய கவிதை



முள்ளி வாய்க்கால் போயிருந்தேன் – அந்த
    முல்லைத் தீவையும் மோதிவந்தேன்
முள்ளில் கிழிந்தஎன் கண்களிலே – நீர்
    முட்டித் தெறித்ததை யாரறிவார்?

ஆனந்த புரத்தைக் கடக்கையிலே – என்
    ஆவி துடித்ததை என்னசொல்ல?
நானந்தத் துயரம் சொல்வதற்கு – என்
    நாபடும் பாடு கொஞ்சமல்ல


இந்த இடம்தான் அந்தஇடம் – எம்
    இலட்சம் உயிர்களைக் கொன்றஇடம்
சொந்தம் சொல்லி நானழுதால் – விண்
    சுற்றும் கோள்கள் நின்றுவிடும்