மரண அறிவித்தல்

.                              
                              திரு .செல்லத்துரை  குணரெட்ணம்

                         
                                                           மறைவு 14 06 2016

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணரெட்ணம் அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியரூபவதி(மலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
குமரசிறி(உரிமையாளர்-  Sri Accounting Toongabbie Australia), விமலசிறி(அவுஸ்திரேலியா), ஜெயசிறி(கனடா), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனலோஜினி, விஜித்தா, சுகந்தா, Dr. சிதம்பரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இரத்தினபூபதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், அருளம்பலம், பராசக்தி, பரமேஸ்வரி, தனலஷ்மி, சிவயோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லிபுரம்(கனடா), கங்கைவேணியன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தெய்வேந்திரம்பிள்ளை, சொர்ணலிங்கம், மாசிலாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரா, Dr.சிறிசங்கர், Dr.சிறிராம், இளங்கோ, ரமணா, சந்துரு, பிரதீஷ், யுதீஷ், மதுரா, அபிலாஷினி, அச்சுதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு :ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 03:00 பி.ப — 06:00 பி.ப
                         
Guardian Funerals, Sunnyholt Rd, Blacktown NSW 2148, Australia

இறுதிக் கிரிகை :
திங்கட்கிழமை 20/06/2016, 09:30 மு.ப — 12:30 பி.ப
                                
Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Avenue, Rookwood NSW                                          2141, Australia

தொடர்புகளுக்கு

குமரஸ்ரீ மகன்  0411496788

விமலஸ்ரீ  மகன் 0402732401

Dr. சிதம்பரகுமார் (பரன்) மருமகன்  0
402037736
ஜெயஸ்ரீ  மகன் கனடா  
+15195891190

விழி பிதுங்கி - எச்.ஏ. அஸீஸ்

.

அதி நவீன  தொலைநோக்கி  ஒன்றில்
வான்வெளிக்கு  அப்பால்
பால்வெளியையும்  கோள்களையும்
பார்வையிட  செய்தாய்
எரி வெள்ளி  ஒன்று  ஓடுவதைக் கண்டேன்
எங்கு போய்  அது  தொலைந்தது
எங்கும்  காணேன்
செந்தணல்  போலவும்
தெறித்த  பால்  துளி  போலவும்
கசிந்து  உறைந்த  அமுதினைப்  போலவும்
அங்கு  காண்பவை
அனைத்துமே  விந்தைகள்
எங்கும்  விரவிய  நீலமும்  கறுப்பும்
இணைந்தொரு  போர்வையை  விரித்ததா
அண்டம்  சுருங்கி  அதிலே  துயின்றதா
கோள்களே  கோள்களே
மினுங்கும்  துகள்களே
ஆள்புலம்  அறிவனோ
கீழ் புலம்  கிடப்பவன்
அதி நவீன  தொலை நோக்கி
அதை விலக்கி  நேர் பார்த்தேன்
என் விழி  பிதுங்கி  வெளியே
ஒரு பூகோளம்  போல
ஒரு துகள்  விழுந்தே
விழி  பிதுங்கி
துடித்துப் போனேன்
துளி துளியாய்  வழிவதென்ன
கண்ணீராமோ
ஆள்புலம்  அறிவனோ

கீழ் புலம்  கிடப்பவன்

ஜூன் 17ஆம் திகதி வாஞ்சிநாதன் நினைவு தினம் - முருகபூபதி

.
  
விடுதலைப்போராட்டங்களில்  உறைபொருளும் மறைபொருளும்
கலெக்டர்  ஆஷ்துரை -  உரும்பராய்   சிவகுமாரன் பார்வையில்   சாதி   அமைப்பு
                                            



அந்த  இளைஞனுக்கு  அன்று  25  வயது.  அவன் படித்த  பட்டதாரி. தென்னாட்டில்  பிரிட்டிஷாருக்கு  எதிராக  வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தான்.   அத்துடன்  பிரிட்டிஷ்  அதிகார  வர்க்கத்திடம் சிக்க நேர்ந்தால்  தற்கொலைப்பாதைக்கும்   அவன்  தயாராகவே  இருந்தான்.
அவன்   பெயர்  வாஞ்சிநாதன்.   இயற்பெயர்   சங்கரன்.   சனாதன மரபில்  வாழ்ந்த  பார்ப்பாணியர்  குலத்தில்  ரகுபதி  அய்யர் என்பவருக்கும்   ருக்மணி  அம்மாளுக்கும்  திருநெல்வேலி செங்கோட்டையில்  1886  இல்  பிறந்த   இந்த மகனின் ஆவியும்,  அவன்  சுட்டுக்கொலை  செய்த  திருநெல்வேலி  மாவட்ட  ஆட்சியாளர் (கலெக்டர்)  ஆஷ்துரை  என்பவரது  ஆவியும்  பிரிந்த  தினம்  ஜூன் 17 ஆம்   திகதி
திருவனந்தபுரத்தில்   மேற்கல்வியைத் தொடர்ந்து,  பட்டதாரியாகிய வாஞ்சிநாதன்   திருமணம் முடித்தவர்.  படிப்பின்  பின்னர்  வன இலாகாவில்  பணியாற்றியவாறு  தென்னாட்டில்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு   எதிராக  குரல் கொடுத்து  போராடிய கப்பலோட்டிய  தமிழன் வா. . சிதம்பரப்பிள்ளை,  சுப்பிரமணிய  சிவா, வா.வே.சு.  அய்யர்  ஆகியோரின்  கருத்துக்களினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்.    புதுவையில்  பாரதியார்  தஞ்சம்  அடைந்திருந்த  காலப்பகுதியில்  வா.வே.சு.  அய்யரின் மறைவிடத்திலேயே   வாஞ்சிநாதனும்  தங்குவது  வழக்கம்.

சிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 2016 25 06 2016

.

சிட்னி தமிழ் அறிவகம்  கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட  நிகழ்வை  நினைவு கூர்ந்து  வருவதை  தாங்கள்  நன்கு  அறிவீர்கள்.
ஈழத்தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை,  இவ்வருடமும் நினைவு கூர்ந்து கொடிதின நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இந்த நிகழ்வு ஜூன் மாதம் 25ஆம் திகதிசனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Homebush Public School மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புரையும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுக்கு வருகை தந்து,  ஞாபகார்த்த கொடி விற்பனையிலும் பங்குபற்றுமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
காலம்  : 25 . 06. 2016 – சனிக்கிழமை,  மாலை 5.30 மணி.
இடம்   :  Homebush Public School,     Rochester Street,        Homebush
                

ஏனையகவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 13

.
கிருஷ்ணலீலை
Add caption

எனது நாட்டிய நாடகம்  1975 இலெ தயாரிக்கப்பட்டது. இந்த நாடடிய நாடகத்திற்கு திரு பந்துல ஜெயவர்த்தன எழுதிய நீண்ட விமர்சனத்தின் ஒரு பகுதியை இங்கு தருவதன் மூலம் புதுமைக்கும் பழமைக்கும் உள்ள உறவை அவர் எடுத்து ஆராய்ந்து பலரின் சிந்தனையைக் தூண்டுவதாக அமைந்துள்ளது.

சரியான பாதையிலே

"பழமையானால் மட்டுமே
கவிதைகள் உயருமா?
புதியவை என்பதால்
மாத்திரம் இழியுமா?
வாசமக்களே
தயக்கமேன்
அறிவினால் ஆய்ந்து
மேன்மையை உணருங்கள்"

தமிழ் சிங்கள இலக்கியத்துக்கு எழுச்சியும் உந்தலும் தந்த வடமொழி நாடக மகாகவி காளிதாசனின் கூற்று இது. உண்மையான கவிதைக்கும் பிற கலைகளுக்கும் உரைக்கல்லாக அமைவன பழமை புதுமை என்னும் பண்புகள் அல்ல. கலையின் தரத்தை நிர்ணயிக்கும் பண்புகள் வேறுவகையானவை. இதுவே காளிதாசனின் தீர்க்கமான முடிவு. மரபாளர்களால் இன்று போற்றி புகழப்படும் காளிதாசன் அன்று தான் எழுதிய புதிய கவிகளின் அங்கீகாரத்துக்காக வாதாடினான். அன்று அவனை எதிர்த்த பழமை பிரியர்களுக்கு எதிராக குரல் கொடுத்தான். இதனால் பழமைக்கும் புதுமைக்கும் இடையே எழும் பிரச்சனையை அவனால் நன்குஉணர முடிந்தது.

தாசி புத்திரன் விதுரன். விதுர நீதி.

.
மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும்.




"பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று
ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார்.
யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.
மஹாபாரதக் கதையின்
முடிவில் வருவது பாரதப் போர்.
18 நாள் யுத்தம்.
வெற்றி
பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் — பீஷ்மர், துரோணர், கர்ணன்,
துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள்
வென்றார்கள்..?
ஒவ்வொருவருடைய
வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ
கிருஷ்ணனின் "வேலை"
இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால்
பாண்டவர்கள் வெற்றி
பெற்றிருக்கவே முடியாது.
இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய
வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற
பாராட்டைப் பெறும்.?
1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர்,
3) துரோணர்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்,
6) கர்ணன், 
7) விதுரர்...
அநேகப் பேர் கர்ணனின்
வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று
நினைப்பார்கள்.

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்


                              
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2016

03 - 07 - 2016   Sun  Opportunity Class Practice Test  @ Homebush Boys High School

03 - 07 - 2016   Sun  'வெல்லும் சொல்' திறனாளர் தேர்வுப் பேச்சுப் போட்டி 2016 
                                  - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்

16 - 07 - 2016 Sat  Karthick Live in Concert by Euphoria Events 
                                 at THe Lyceum Concert Hall, Castle Hill RSL

16 - 07 - 2016 Sat   'வெல்லும் சொல்' மற்றும் 'இளைஞர் ஆய்வரங்கம்'
                                   - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்
                                   - Westmead Progress Hall (5:30pm - 8:30pm)

27 - 08 - 2016  Sat  தமிழ் எழுத்தாளர் விழா 2016  Helensvale Library Auditorium Goldcoast QLD

10 - 09 - 2016  Sat    Mahajana College OSA (NSW & ACT) Annual Dinner (venue to be notified)

24 - 09 - 2016  Sat   Mahajana College OSA (NSW & ACT)  Annual General Meeting

பத்து இயக்குநர்கள், பத்து பார்வைகள்!

.

இளம் இயக்குநர்கள் பத்துப் பேரின் முக்கியமான நேர்காணல்கள் இடம்பெற்றிருக்கும் ‘மாற்று சினிமா: நிழலா? நிஜமா?’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. (என்ன, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளும், எடிட்டிங்கில் அக்கறை செலுத்தாததும் சற்றே உறுத்துகின்றன!) 10 இயக்குநர்களிடமிருந்தும் ஆளுக்கொரு கேள்வி-பதில் என்று சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.
சென்சார் விதிமுறைகள் குறித்து உங்களது பார்வைகள்?
‘தென்மேற்கு பருவக் காற்று’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சீனு ராமசாமி:
புரட்சிகரமான கருத்துகள், சமூக மாற்றத்தை உந்தித் தள்ளுகிற கருத்துகள், இந்த அமைப்பைக் கேள்வி கேட்கிற கதைகள், எது வந்தாலும் தணிக்கையில் தடை செய்கிறார்கள்… இந்திய நாட்டுடன் நட்பு நாடுகளாக இருப்பவற்றை விமர்சிக்க முடியாது. அரசியல் காரணமாக பாகிஸ்தானை விமர்சனம் பண்ணலாம், ஆனால் இலங்கையை விமர்சிக்க முடியாது… சென்சார் தேவையில்லை என்று சொன்னால் மக்கள் பார்க்க கூடாத படங்களெல்லாம் திரையரங்கத்திற்கு வந்துவிடும்… பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், நிறைய படித்தவர்கள் கொண்ட குழுவினரால் திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட வேண்டும்.
சினிமா ரசனையை மேம்படுத்த என்ன செய்யலாம்?
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன்:
ஒருசில பள்ளிகளில் வகுப்பறைகளில் வகுப்பெடுக்கும்போது சினிமாக்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆனால், அதைத் தவிர்த்து, கேண்டீன், ஆண்டுவிழா, பாத்ரூம் என்று அத்தனை இடங்களிலும் சினிமாவைப் பற்றிப் பேசுவார்கள். எப்படி ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடப் புத்தகங்களில் நல்ல சிறுகதைகள், கவிதைகள் இருக்கின்றதோ, அதே போன்று, சினிமாக்களைப் பற்றிய ஒரு பகுதியும் வேண்டும்… சரியான ரசனையோடு பார்க்கப்படும்போது, சினிமா இன்னும் தரமாக வளரும் என்பது என் நம்பிக்கை.
‘மதுபானக் கடை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்த பிறகு நீங்கள் அதற்காகப் போராட்டம் நடத்தினீர்களா?

கொண்டாடப்படவேண்டிய பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் - முருகபூபதி

.
அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான் 
தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்
                                                                   
எங்கள்  நாவலர்,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம்.
ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?
ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார்.
அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.
இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் தற்பொழுது   அவுஸ்திரேலியா,  சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.

உலகச் செய்திகள்


அமெ.புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 50 பேர் பலி; 53 பேர் படுகாயம்

 புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

பங்களாதேஷில் 8,559 பேர் கைது


பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரையும் மனைவியையும் படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதி

பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிதாரி ஒரு தன்னினச்சேர்க்கையாளர் -முன்னாள் மனைவி தெரிவிப்பு

கச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கோரிக்கை 

பங்களாதேஷில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது

பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி

எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்திய தரைக்கடலில் கண்டுபிடிப்பு
முதலையிடம் சிக்கிய குழந்தையின் சடலம் மீட்பு

பெண் எம்.பி. சுட்டு கொலை : பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்


இலங்கைச் செய்திகள்


மஹிந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 அரச வாகனங்கள் எங்கே.?

 தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கை 

 துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

இலங்கை ஏனைய  நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 

சோமவன்ச அமரசிங்க  காலமானார்

 மட்டக்களப்பில் தபால் ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

சோமவன்ச அமரசிங்கவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்

யாழ்.தெல்லிப்பழையில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கச்சதீவை யாரும் உரிமை கோர முடியாது

யோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி

சிறப்பு விசாரணைப் பிரிவில் கம்மன்பில 

மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மனித உரிமைகள் ஆணையாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

 இலங்கை - இந்திய உறவு பாதிக்கப்படவில்லை : கடும்போக்காளர்களே தவறாக பிரசாரம் : யாழில் ஜனாதிபதி

துரையப்பா மைதானம் பொருளாதாரத்தின் அடையாளம் : காணொளி காட்சி மூலம் மைதானத்தை திறந்து வைத்து மோடி தெரிவிப்பு


என்றுமே வணங்கிநிற்போம் ! எம். ஜெயராமசர்மா ..அவுஸ்திரேலியா

.

                       அப்பாவின் தோழேறி
                       அவர்மார்பில் உதைத்துநிதம்
                        துப்பிநாம் நின்றாலும்
                        சுகமுடனே அதையேற்பார்
                        நித்திரையில் எமையணைத்து
                        நீங்காமல் அவர்படுப்பார்
                        நினைத்துநாம் பார்த்துவிடின்
                        நெக்குருகி நிற்போமே !

                         தோழேறி  நின்றநாம்
                         தோழளவு வளர்ந்தபின்பும்
                         தன்தோழில் எமைத்தாங்கும்
                         தருமசீலர் அப்பாவே
                         எம்குறையைத் தம்குறையாய்
                         ஏற்றுநின்று காக்குமவர்
                         என்றுமெங்கள் நெஞ்சினிலே
                         இறைவனென இருக்கின்றார் !

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

.
இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி


லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம்

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.
இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர்.
ஹிட்லரும் செய்திகளும்
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், வானொலியின் முக்கியத்துவத்தைப் பலரும் புரிந்துகொண்டனர். ஹிட்லர் தன்னுடைய பரப்புரைக்கு வானொலியைத் திறமையாகப் பயன்படுத்தியதன் விளைவாக உலக நாடுகளின் கவனம் வானொலியின் பக்கம் குவிந்தது. குறிப்பாக, சிற்றலை வானொலிகளின் பணி அளப்பரியது.
உலக அளவில் ஏற்பட்ட இந்தப் போக்குகள் அகில இந்திய வானொலியிலும் தாக்கம் செலுத்தின. உள்நாட்டு மொழிகள் தவிர, வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தி அறிக்கை முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, பின்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இன்றும் அதே நடைமுறைதான் தொடர்கிறது. பீல்டன் செய்தி அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய சார்லஸ் பார்ன்ஸ் அவரது கனவுகளைப் பூர்த்திசெய்தார்.

ஈழத்தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபல நாடக கலைஞரின் ஆவணப்படம்

.

இன்றைய சினிமாவின் முன்னோடி என்றால் அது மேடை நாடகங்கள் தான். ஆனால் கூத்து நாடகங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பலரையும் இன்றைய சந்ததிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஈழத்து நாடகக் கலையில் பல புதுமைகளை புகுத்த்திய கலைக்குரிசில் நீ.வ அந்தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணபடமாக எடுத்துள்ளனர்.
இதில் பல கூத்து மேடை நாடகங்களில் நடித்த இவர் கிறிஸ்துவர்களின் புனித கதைகள் பலவற்றை அரங்கேற்றியுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் சொன்ன விடயங்களையும், மூத்த நாடக நடிகர்களின் அனுபவங்களையும் இந்த படத்தில் கலைக்குரிசிலின் பேரன் சவரிமுத்து மிக்கேல்தாஸ் ஆவணப்படுத்தியுள்ளனர்.
தமிழரின் பாரம்பரிய கலை வடிவமாகவும் அணிகலனாகவும் கூத்துக்கள் திகழ்கின்றன. எமது தொன்மையான இக்கலைச்சொத்து மனித மனங்களை தொட்டுத்தூக்கி மகிழ்வூட்டி ஆற்றுகைப் படுத்துவதுடன் முன்னொரு காலத்தில் வாழ்வின் வலிமையையும் நம்பிக்கையையும் ஊட்டும் பரிமாண வடிவமாகவும் திகழ்ந்துள்ளது.
எமது தேசியச் சொத்தான கூத்திசைமிக்கதாக எழுதிப்பாடியும் ஆடியும் பயிற்றுவித்து வளர்த்த "கலைக்குரிசில் நீ வ அந்தோனி அண்ணாவியாரின் ஆரம்பகால வரலாற்றை நாடகமேடையில் நவரசங்களை சித்தரித்து கவியின் ஊடாக பாவங்களை வடித்துக் காட்டிய அந்த காவிய விற்பனர் கலை உலகில் கால்பதித்த 1928ம் ஆண்டிலான இன்றைக்கு 82 வருடங்களுக்கு முற்ப்பட்ட காலப்பகுதியின் சில பக்கங்களை பின்னோக்கி புரட்டுவோம்.

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவிப்புப் போட்டி2016

.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவிப்புப் போட்டிகளின் இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”. 2016 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து வெளிவந்துவிட்டது. இவ்வாண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக்கான விபரங்கள், விண்ணப்பப் படிவம், மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து விபரங்களும் எமது இணையத்தளத்திலிருந்து (www.tamilcompetition.org)பெற்றுக்கொள்ளலாம். தமிழ் ஊக்குவிப்பு  போட்டிக்கான விண்ணப்பப்படிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.


தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்  தொடர்பான முக்கிய திகதிகள்:

18 ஜூலை 2016       => விண்ணப்ப முடிவு திகதி
7 ஆகஸ்ட் 2016       => எழுத்தறிவுப் போட்டிகள்
7, 14, 21 ஆகஸ்ட் 2016 => மற்றய  போட்டிகள்
24 செப்டம்பர் 2016    => தேசிய   போட்டிகள்
25 செப்டம்பர் 2016    => பரிசளிப்புவிழா


தமிழ் சினிமா - ஒரு நாள் கூத்து





ஒரு நாள் கூத்து ( வீடியோ உள்ளே ) - Cineulagam
தமிழ் சினிமா சில காலங்களாகவே பெண்களுக்கு மரியாதை தரும் படங்களை கொடுத்து வருகின்றது. இறைவியை தொடர்ந்து பெண்கள் வாழ்க்கையை மையப்படுத்தி இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தான் ஒரு நாள் கூத்து.
அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா, கருணாகரன், ரமேஷ் திலக் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர்நெல்சன் இயக்கியுள்ள படம் தான் ஒரு நாள் கூத்து.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பரபரப்பான விபத்துடன் தொடங்குகிறது. யாருக்கு விபத்து என தெரிவதற்குள் ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கின்றது. அட்டகத்தி தினேஷ் மற்றும் நிவேதா ஐடியில் பணிபுரிந்து ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.
அவ்வப்போது செல்லமாக சண்டை, ஈகோ மோதல் பின் சந்தோஷம் என ஜாலியாக செல்கிறது இவர்கள் காதல். ஆனால், திருமண பேச்சு எடுத்தால் தினேஷ் தன் குடும்ப சூழ்நிலை கூறி பின் வாங்குகிறார்.
அதேபோல் படித்துவிட்டு பல வருடமாக திருமணமே ஆகாமல் இருக்கும் மியா ஜார்ஜ், இந்த வருடமாவது திருமணம் ஆகிவிடுமா என்ற ஏக்கத்தில் வாழ்கிறார்.
RJ வாக ரித்விகாவும் கிட்டத்தட்ட மியா ஜார்ஜ் போல் திருமணத்திற்கு ஏங்கும் கதாபாத்திரம். இந்த மூன்று கதாபாத்திரங்களின் விருப்பமும் நிறைவேறியதா என்பதை இயக்குனர் கொஞ்சம் ஜாலியாகவும், கொஞ்சம் எமோஷ்னலாகவும் கூறியிருப்பதே ஒரு நாள் கூத்து.

படத்தை பற்றிய அல்சல்

என்ன தமிழ் சினிமா திருந்திவிட்டதா, பெண்களை பற்றி பேசும் படங்கள் தொடர்ந்து வருகிறதே, இதற்காகவே நெல்சன் அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம். அட்டக்கத்தி தினேஷ்-நிவேதா காதல், இன்றைய ட்ரண்ட் ஐடி காதலை அழகாக காட்டியுள்ளார். நிவேதா, தினேஷை விடவும் முடியாமல், வீட்டிலும் சமாளிக்க முடியாமல் நன்றாக நடித்துள்ளார். ஆனால், தினேஷ் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இதே ரியாக்‌ஷனை கொடுப்பீர்கள்?.
படத்தில் பலரையும் கவரும் கதாபாத்திரம் மியா ஜார்ஜாக தான் இருக்கும். அத்தனை அழகு, வசனம் குறைவு, தன் முகபாவனைகளாலே கவர்கிறார். தன் அப்பாவின் பேச்சை மீற முடியாமல் ஒரு கூட்டிற்குள் அடைந்த பறவை போலான தன் கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
ரமேஷ் திலக் மிகவும் ஜாலியான பையன், டேக்இட் ஈசி பாயாக கலக்குகிறார். இந்த படத்தில் கொஞ்சம் டீசண்டாக இருக்கிறார், இப்படியே நடிங்க ரமேஷ். ரித்விகாவும் எப்போதும் ஒரு சோகமான முகம், இறுதியில் ஒரு முடிவை துணிந்து எடுத்துவிட்டு, இதற்கு தானா இந்த திருமணம் எல்லாம் என்று பேசும் இடம் கிளாஸ்.
ஆனால், இத்தனை அழகாக சென்ற படத்தில் வேண்டுமென்றே டுவிஸ்ட் வைக்கிறேன் பாருங்கள் என்பது போல் இருக்கிறது கிளைமேக்ஸ் நெல்சன். யதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி நிற்கின்றது, அதிலும் கிளைமேக்ஸில் ரமேஷ் திலக் செய்வது, அவரின் கதாபாத்திரமும் அந்த இடத்தில் ஏதோ டுவிஸ்ட் வைக்க வேண்டும் என்பதற்காக அவரை பயன்படுத்தியது போல் உள்ளது. யதார்த்த லாஜிக் மீறல் என்று கூறலாம்.
கருணாகரன் இனி சீரியஸ் படம் தான் நடிப்பேன் என்று முடிவு எடுத்துவிட்டார் போல. ஆனாலும் நன்றாக நடிக்கின்றார், தொடர்ந்து இதுபோலவும் நடியுங்கள், சார்லீ இந்த கலைஞனை யாரும் மறக்க வேண்டாம், ஸ்கீரினில் வந்தாலே யதார்த்தமாக சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தினேஷ்-நிவேதாவிற்கு வரும் டூயட் பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஹிட் மெலோடி லிஸ்டில் இடம்பெறும். பின்னணி இசையில் ஒரு சில காட்சிகளில் இசையே வசனத்தை விட ஆக்ரமிப்பு அதிகம். கோகுலின் ஒளிப்பதிவு மூன்று கதைகளையும் நன்றாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி, அத்தனை செண்டர் ஆடியன்ஸுகளுக்கும் பிடிக்கும்படி உள்ளது.
திருமணம் என்பது சாதாரணம் இல்லை, அதேநிலையில் உங்கள் இஷ்டத்திற்கு பெண்கள் திருமண விஷயத்தில் விளையாடாதீர்கள் என்பது போன்ற கருத்துக்களை அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
பாலசரவணனின் காமெடி பல இடங்களில் சிரிப்பை வரவைக்கின்றது. இரண்டாம் பாதியிலும் பயன்படுத்தியிருக்கலாம்.

பல்ப்ஸ்

முதல் பாதியில் இருந்து விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது.
மியா ஜார்ஜ் அப்பா எப்படிப்பட்ட மாப்பிள்ளையை தான் விரும்புகிறார், எதற்காக அவரின் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் என்பதை அழுத்தமாக கூறவில்லை.
பெண்கள் பற்றிய படம் இருந்தாலும் பல இடங்களில் பாலசரவணன் ‘இந்த பொண்ணுங்களே இப்படி தான்’ என்று பேசுவது தேவையா?
மொத்தத்தில் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை இதில் எத்தனை கஷ்டம் உள்ளது. அதிலும் பெண்கள் எத்தனை கஷ்டத்தை கடந்து வருகிறார்கள் என்பதை கூறியதற்காகவே ஒரு நாள் கூத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங்- 2.75/5  நன்றி  cineulagam