குயின்ஸ்லாந்து மானில யசி சூறாவளி

.
குயின்ஸ்லாந்து மானிலத்தில் வீசிய ஜசி சூறாவெளியால் வாழைத் தோட்டங்கள் தென்னந் தோட்டங்கள் என்பவை முற்றாக சேதமடைந்துள்ளது. ஓரிரு வாரங்களில் வாழைப்பழ விலை 12 டொலர்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மகாஜனக் கல்லு}ரிப் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி – கன்பராக் கிளை ஏற்பாடு செய்திருந்த நு}ற்றாண்டு விழா

 .
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிரபல பாடசாலைகளுள் ஒன்றான தெல்லிப்பளை மகாஜனக் கல்லு}ரியின் பழைய மாணவர்கள் சிட்னியில் தமது பாடசாலையின் நு}ற்றாண்டு விழாவை சென்ற வாரம் கொண்டாடியிருக்கிறார்கள். மகாஜனக் கல்லு}ரிப் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி – கன்பராக் கிளை ஏற்பாடு செய்திருந்த இவ்விழா ஹோம்புஷ் ஆண்கள் உயர்பாடசாலை அரங்கில் ஜனவரி  29 ஆம் திகதி மாலை ஆரம்பித்து 
சிறப்புற நடந்தேறியது.

மழலை எல்லாமே அழகு - சிறுகதை

.
                                                                                             ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
வில்லிவாக்கத்திலிருக்கிற விசேஷமான அந்தப் பள்ளிக் கூடத்தைப் பற்றி இவளுடைய மாதர் சங்கத்தில் ஒரு மாது சொல்லக் கேட்டு, அங்கே போயே ஆக வேண்டுமென்று என்னை இழுத்துக் கொண்டு போனாள்.

பள்ளியில் குழந்தைகளெல்லாம் ரெண்டு வயசிலிருந்து நாலு வயசுக்குள்ளேதான். அத்தனையும் விசேஷமான குழந்தைகள். காது கேளாத, வாய் பேச இயலாத பரிதாபத்துக்குரிய அரும்புகள். அம்மா என்கிற ஆரம்ப வார்த்தையைக் கூட உச்சரிக்க வலுவில்லாத உதடுகள். அன்னையின் ஆசை முத்தத்தின் சத்தத்தைக் கூட உள்வாங்கிக் கொள்கிற சக்தியில்லாத செவிப்பறைகள்.

அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் 5 ஆவது 6 ஆவது போட்டிகள்

 5 ஆவது போட்டிஅவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கைகொடுக்க தொடரின் 5 ஆவது போட்டியை 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி. அதேவேளை இங்கிலாந்தின் வோக்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை பறித்தமை பயனற்றுப் போனது.
சிட்னி முருகன் கோவிலில் நடை பெற்ற தைப் பூசம்

.

மேலும் தைபூசப் படங்களைப் பார்ப்தற்கு கீழே செல்லவும்.

உறவியல் ஈக்வேஷன் :-4


.
அனுபவத்தின் பலன் என்ன? நமது கருத்துப் பரிமாற்றத்திற்கும் பேச்சிற்கும் எவ்வகையில் பலம் சேர்க்கிறது இந்த அனுபவம்?

சிம்பிள் லாஜிக் இதோ!

இடம் பொருள் ஏவல் பார்த்துப் பேசு! என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு.

விஷயம் தெரியத் தெரிய நம் பேச்சின் நீளம் தானாகவே குறையும். பேச்சின் கூர்மை அதிகரிப்பதோடுஇ தர்க்க வாதங்களில் ஈடுபடுவது அநாவசியம் என்ற உண்மையும் புரியும். சிறு வயதுமுதல் எத்தனையோ சித்தாந்தங்கள்இ சரித்திரங்கள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று நம்புபவைகளைஇ நாம் படித்தும் பார்த்தும் உணர்ந்தும் அல்லது கேட்டு நம்பியும் இருப்போம். இந்த நம்பிக்கை மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயல்பே. ஒருவர் மனதில் ஒரு விஷயம் என்ன சூழலில்இ எவ்வளவு ஆழமாகப் பதிகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் நம்பிக்கையும் விவாதங்களும் அமையும் என்கிற உண்மையை உணர்ந்தோமாயின் வீண் பேச்சுக்கள் குறையும்.

இலங்கையில் மீண்டும் கனத்த மழை


.
கிழக்கில் பேரவலம்; மலையகத்தில்
மண்சரிவு; வவுனியாவிலும் பாதிப்பு
3 பலி; இருவரை காணவில்லை

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மீண்டும் கனத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே வெள்ள நிலையும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அவல நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

ஒப்பற்ற அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா!-                                     பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -
(பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் கடந்த 3 ஆம் திகதியாகும். அதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது)
அறிஞர் அண்ணா என்று அனைவராலும் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்கள் அனைவரதும் உள்ளங்களில் வீற்றிருக்கும் ஒப்பற்ற தலைவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னிகரற்று விளங்கிய மேதை. இணையற்ற பேச்சாளர். சுவைமிக்க எழுத்தாளர். எதிர்தரப்பில் இருந்தவர்களாலும் ஏற்றுப் புகழப்பட்ட அறிஞர். மாற்றாரையும் மதித்து நடந்த பண்பாளர். தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தற்கொடையாளர்.

வரலாற்றை நினைவுகூர்தல் - நாடகம்


.
சண்முகராஜா
நூற்றைம்பது வருடங்கள், ஏழு தலைமுறைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாதக் குழந்தை முதல் 90 வயதுப் பாட்டிவரை மேடையேறி நடிக்கும் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என நெடிய பாரம்பரியம் கொண்டது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி (Surabhi Theatre).
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடகக் குழுவாகச் செயல்படுவது சுரபியின் சிறப்பம்சம். பார்ஸி தியேட்டரின் உட்பிரிவான சுரபி நாடகங்கள் அதிகமும் தொன்மங்கள் சார்ந்தவை. ஆந்திராவில் குழந்தைகள் உட்படக் குடும்பம் குடும்பமாக மக்கள் வரவேற்போடு அரங்கு நிறையப் பார்வையாளர்களைக் கொண்டது சுரபி நாடகம்.


எமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும்

.

-  நடேசன் - அவுஸ்திரேலியா.
ம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லதுஅடிவாங்கினாலோ எமது கோபத்தை  அருகில் உள்ளவர்கள் மீதுகாட்டுவது பாமரத்தனமானது.  இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள்.
 இப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும்.அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும்.  இப்படி இல்லாத பட்சத்தில்மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள்இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும்.

ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

.                                                                         லறீனா அப்துல் ஹக் பீ.ஏ

திண்ணையில் வெளிவந்த இந்தக் கட்டுரையை அதன் நீளம் கருதி இரண்டு பாகமாக பிரசுரிக்கின்றோம் அடுத்த பகுதி அடுத்த வார முரசில் பிரசுரிக்கப்படும்.

அறிமுகம்

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அன்று தொடக்கம் இன்றுவரை பெண்களின் பங்களிப்புக்கள், ஈழத்து கலை இலக்கியத் துறைகளில் பல பரிணாமங்களைப் பெற்று வளர்ந்துள்ளன எனலாம்.

*மாமனிதர் சிரித்திரன் சுந்தர் நினைவுகள்


.

தமிழ் மண நட்சத்திர வாரத்தில் எனது கடைசிப் பதிவு. எனது அபிமான சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் "மாமனிதர்" சி. சிவஞானசுந்தரம் அவர்களின் நினைவாக அவரைப்பற்றிய சில வரிகளும் நீங்களும் சிரித்து மகிழ அவரது ஆக்கங்களிலிருந்து சிலவற்றையும் இங்கு பதிவாக்க முனைந்துள்ளேன்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள்

.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற கிம் கிளிஸ்டர்ஸ் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

கிராண்ட்ஸ் லாம் பட்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல் போர்னில் நடைபெற்றது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தன் முதலில் நுழைந்த சீன வீராங்கனை லீ நாவை எதிர் கொண்ட பெல்ஜியத்தின் கிம் 36,63, 63 என்ற செட்கணக்கில் லீ நாவை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார். காயம் காரணமாக ஓய்விலிருந்து மீண்டு வந்த இவர் 2 ஆவது முறையாக கைப்ற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

தமிழ் சினிமா

.
ரஜினிக்கு ஜோடியாக துடிக்கும் தீபிகா படுகோன்


 ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பொலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும் உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் வேலை செய்யத் தடை! பிரிட்டன் குடிவரவு அமைச்சர் அதிரடி

.

பிரிட்டனுக்குள் வரும் ஜரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் மாணவர்களுக்கு கல்வி நேரம் போக ஏனைய நேரங்களில் தொழில் செய்வதற்காக நடமாடுவது நிறுத்தப்படும் என்று பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான விசாவில் வருபவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்கள் அநாவசியமான நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்

நன்றி தமிழ்cnn .கொம்

இலங்கையில் வடக்கும், கிழக்கும் வளம்பெற்று வருகிறது

.
நாடெங்கிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றன. தேர்தல்கள் ஆணையா ளர் திணைக்களம் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயே ச்சை குழுக்களின் வேட்பாளர்களுக்கும் விருப்பு வாக்கு களை பெறுவதற்கான இலக்கங்களை கொடுப்பதில் ஒரு சிறு தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடைபெறுகின்றன.

வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் பிரசார காரியாலயங்களை தேர்தல் சட்டத்தை உதாசீனம் செய்து இப்போது திறந்த வண்ணம் இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையாளர் தயா னந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை யில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனது வீட்டில் மாத்திரமே தேர்தல் பிரசார காரியாலயங்களை திறப்பதற்கு சட்டபூர்வ மான அங்கீகாரம் இருக்கிறது என்றும் வேறு இடங்களில் அவ ர்கள் தேர்தல் பிரசார காரியாலயங்களை திறப்பதற்கு பொலி ஸார் இடமளிக்கலாகாது என்று கேட்டுள்ளார்.

கட்டுரைகளுக்கு comment போடுவது எப்படி

.
அன்பான வாசகர்களே பலர் இங்கு வரும் கட்டுரைகளுக்கு குறிப்பை தமிழில் போட முயற்சி செய்தும் முடியாமல் உள்ளது எப்படி போடுவது என்று கேட்டுள்ளார்கள். மிக இலகுவாக செய்யலாம் .
முறை 1
முதலில் google  இல் http://www.google.com/transliterate  என்ற தளத்திற்கு செல்லுங்கள் இடது பக்க மேல் மூலையில் Hindi என்று இருக்கும் Drop down box சை அழுத்துங்கள் அதில் தமிழை தெரிவு செய்யுங்கள் அதன் பின் அம்மா என்று அடிக்க வேண்டுமானால் AMMA  என்று அடியுங்கள் பின் அதை copy  செய்து comment போடவேண்டிய இடத்தில் past பண்ணுங்கள் .

எகிப்திய ஜனாதிபதியின் மூன்று தசாப்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

.
 எகிப்தில் கடந்த சுமார் 3 தசாப்த காலமாக ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ள ஜனாதிபதி ஹொஸ்னி பாரக்கிற்கு எதிராக வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹ்ர் சதுக்கத்திலும் அலெக்சாண்டியா நகரிலும்  தினம் நடைபெற்றது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆங்காங்கே நடைபெற்ற மக்கள் எழுச்சியின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பாரக்கை பதவி விலகுமாறு கோசமெழுப்பினர்.