மரண அறிவித்தல்

.
                                                           கனகசபாபதி திருச்செல்வம் 
 


பதுளையை பிறப்பிடமாகவும் உரும்பிராய், Westmead NSW Australia ஐ வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் கனகசபாபதி திருச்செல்வம்27.06.2017 அன்று இறைபதமடைந்தார் அன்னார் காலம் சென்றவர்களான கனகசபாபதி, அன்ன பூரணம் ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், காலம்சென்ற சற்குணேஸ்வரி (உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும், சச்சிதானந்தம், காலம் சென்ற சரஸ்வதி காலம்சென்ற திலகவதி, சிதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலம் சென்ற நாகலிங்கம் ஈஸ்வரி, பஞ்சலிங்கம், மகேஸ்வரி, காலம் சென்ற சிவஞானவதி, குமாரசிங்கம், துரைராஜா, நடராஜா,  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.
சிவகாமி (இந்தியா) , ரேவதி ( Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுரேஸ்குமார் (இந்தியா) , மோகன்(Australia) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அபிராமி (இந்தியா), தனேஷ் (Australia), ஆரணி (Australia)ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 2D Bernard Street Westmeadஇல்லத்தில் Jun மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  8:30am முதல் 11:30am வரை நடைபெற்று, தகனக்கிரிகைகள் Pinegrove Memorial Park, North Chapel, Kington Street, Minchinbury NSW 2770 இல் 12:00pmநடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு:

மோகன்: mohanrevathy@hotmail.com   Mobile: 0421123660

மரண அறிவித்தல்

.                        
                             திருமதி இரத்தினமணி சிவஞானசுந்தரம் 



மட்டக்களப்பு கோட்டமுனையை பிறப்பிடமாகவும் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சன்ட கல்லூரியின் முன்னாள் மாணவியும், இளைப்பாறிய கணித ஆசிரியையுமான திருமதி இரத்தினமணி சிவஞானசுந்தரம் அவர்கள் சனிக்கிழமை (24/06/2017) மெல்பேர்ணில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற நல்லரத்தினம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் அச்சுவேலியைச் சேர்ந்த காலம் சென்ற திரு பொன்னையா சிவஞானசுந்தரம் அவர்களின் ஆருயீர் மனைவியும்

காலம் சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

அனுசியா, குருபரன், தயாபரன், ஞானபரன், சுசிலா, சுகுபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

ஆனந்த டி சில்வா, சிவாஜினி குருபரன், விஐயகோமளா தயாபரன், பிறேமளா ஞானபரன், இரட்ணராஜ், பிரியதர்சினி சுகுபரன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்

அபினா, அஸ்வினா, நிஷாந்தி, டிவ்யா, அவித்தா, அஸ்மித்தா, விக்னேஸ், லக்ஷ்மி, சாம்பவி, சுபாணன், மகிழினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்

திருமதி முத்துரத்தினம் சிவலிங்கம், காலம் சென்ற சீவரத்தினம், காலம் சென்ற திருமதி பவமணி டயஷ், திருமதி இராசலஷ்மி அந்தோனிபிள்ளை, காலம் சென்ற சிவா, காலம் சென்ற சிவராசா, திருமதி விஐயலஷ்மி சதாசிவம், யெஐஸ்வரி ஈஸ்வரன், ஜீவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

அச்சுவேலியைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திருமதி பவளம்மா அப்புராசா, திருமதி தங்கரத்தினம் வேலும்மயிலும், திருமதி புஷ்பரத்தினம் திருவளங்கம், சிவராமலிங்கம், செல்வரட்ணம்,
திருமதி மகேஸ்வரி ராஐதுரை, மகாதேவன், திருமதி பத்மாவதி சுந்தரலிங்கம், செல்வி சத்தியபாமா செல்லையா, திருமதி சரோஐனிதேவி கனகசபாபதி, திருமதி மனோரஞ்சிதம் இராஐவடிவேல் (ராசாத்தி), திருமதி ரோசராணி ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29/06/2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.


பார்வைக்கு:

வியாழக்கிழமை 29/06/2017, முற்பகல் 9:30 தொடக்கம் 10:30 மணிவரை.

இடம்:

Stratus Chapel,
Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Road, Dandenong south, VIC 3175

இறுதிக்கிரியை இடம்பெறும் நேரம்:

வியாழக்கிழமை 29/06/2017, முற்பகல் 10:30 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 மணி வரை.

தொடர்புகளுக்கு:

குருபரன் (சிட்னி): 0432 160 726
ஞானபரன் (சிட்னி): 0417 494 168
சுசிலா (மெல்பேர்ன்):   0401 960 045
சுகுபரன் (சிட்னி): 0401 398 310

நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... எம்.ரிஷான் ஷெரீப்


Love

.
நிசி தோறும் வெளியெங்குமலைகிறது
ஆட்காட்டிக் குருவியினோசை
காலம் வசந்தத்தைப் பரப்பும் பொழுதில்
எல்லாத் திசைகளிலும் கேட்கிறது
செங்குயிலின் இனிய பாடல்
வனாந்தர விருட்சங்களில் உருவான காற்று
சுமந்துவரும் ஒலி அதிர்வுகளோடு
சந்திக்கும் பட்டங்களை பட்சிகளை
நலம் விசாரித்தபடி அலைந்து
சேகரித்து வரும் தகவல்களையெல்லாம்
உரிய இடத்தில் கொண்டுசேர்க்கிறது

மௌனத்தையும் சிறுபுன்னகையையுமே
அதிகமாக வெளிக்கொணரும்
செவ்வதரங்களைக் கொண்டவளே
வாழ்வின் களியிசையை வர்ணித்தபடியும்
தனிமை தந்து துடைக்கும்
கண்ணீரின் துயர் அள்ளியெடுத்தபடியும்
காற்று கொணரும் எனது
குரலின் வழி அனுப்பிவைக்கும்
என்னுயிரின் மொழிபெயர்ப்பு
உன்னையும் நிரப்புகிறதுதானே


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை

முக்கால் பங்கும் முட்டாள் மந்தையும் - -- விழி மைந்தன் --

.
முக்கால் பங்கும் முட்டாள்  மந்தையும் 
(இன்னுமொரு தலைப்பு:  நரியின் தேற்றமும் எரியும் தேசமும்)


அது மனிதன் தோன்றாத காலம்.

அந்த அழகான ஆரண்யத்தில் குரங்குகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.

ஆயிரம் ஆயிரம் குரங்குகள், அந்த  ஆரண்யம் தந்த பழங்களைப்  புசித்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

அந்தக் குரங்குகளின் தலைவன் பெயர் தேவன்.

வயசாலும், அனுபவத்தாலும், பெருந்தன்மையாலும்,  இரக்கத்தாலும், அது தலைமைப்  பதவிக்குத் தகுதி உள்ளதாய்  இருந்தது.

தேவனை எல்லாக் குரங்குகளும்  மதித்து  நடந்தன. அருமையாகக்  கிடைக்கும் கனி  வர்க்கங்களைக்  காணிக்கையாகக்  கொண்டு போய்க்   கொடுத்தன. தேவன் வந்தால் நகர்ந்து வழி விட்டன.  தேவன் கேட்காமலே பணிவிடைகள்  செய்தன. தேவனின் தலைமை தமக்கு நன்மையானது என்று உணர்ந்திருந்தன.

குத்தியன் என்ற ஒரு குரங்கைத் தவிர.

குத்தியன் பலமும் தந்திரமும் முற்கோபமும் வாய்ந்த நடுத்தர வயதுக்  குரங்கு.  கருணையும்  நீதியும்  அதிகம் உடையதல்ல. அது தலைமைப்  பதவிக்கு ஆசைப்பட்டது.

குரங்கு மகாசபையைக்   கூட்டுமாறு கத்தியது.

குரங்குத் தலைவர்களைத்  தேர்ந்தெடுப்பது குரங்கு மகாசபை.

இலங்கைச் செய்திகள்



சி.வி.க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ்

வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர்

கல்வி, விவசாய அமைச்சுக்களை பெறுப்பேற்றார் சி.வி. 

கைதானார் ஞானசார தேரர்..!

மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!

 5 மாணவர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்­று­மொரு கடற்­படை வீரர் சி.ஐ.டி.யால் கைது

இராஜினாமா செய்தார் கல்வி அமைச்சர்


பயணியின் பார்வையில் --- அங்கம் 03 - முருகபூபதி

.
காலங்கள் மாறினாலும் கடல் மாத்திரம் மாறவேயில்லை
நினைவில் கலந்திருக்கும் அழியாதகோலங்கள்
                                                                 

" இன்று எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் கலாசார மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. வரமுடியுமா...?" என்று எனது தங்கை கேட்டாள்.
"என்ன நிகழ்ச்சி..?"
" இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் அகில இலங்கை ரீதியில்,  தேசிய மட்டத்தில் நடத்தும் தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் ,  இம்முறை  கம்பஹா மாவட்டத்தில், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தினால் நடத்தப்படும் அறநெறிப்பாடசாலைக்கு விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட மாணவர்களை படம் எடுத்து பாராட்டவிருக்கிறார்கள். வந்து பாருங்களேன். " என்றாள் தங்கை.
கிடைக்கும் நேரத்தில் நான் நேசிக்கும் நண்பர்கள், அன்பர்களைப் பார்த்துவிட்டால், பின்னர் வீணாக குறைகேட்கவேண்டியிராது. எனக்கு இலங்கையில்  ஆயிரம்பேரைத்தெரியுமென்றால், அவர்களை சந்தித்து  உரையாடுவதற்கு ஆயிரம் நாட்களும் வேண்டும்.
ஏதும் நிகழ்ச்சிகளுக்குச்சென்றால் எவரையும் பார்த்துப்பேசிவிடலாம். ஒருதடவை கனடாவுக்கு சென்றிருந்தபோது, அன்புத்தொல்லையால் திணறியிருக்கின்றேன்.

சிட்னி முருகன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை 28 06 2017

.

எம்.ரிஷான் ஷெரீப்பின் ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு மொழிபெயர்ப்புக்கான இயல் விருது

.

     சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டுள்ளது .

      இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சிபதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள  'இறுதி மணித்தியாலம்எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள்கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் எம்.ரிஷான் ஷெரீப்பால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

   இதுபற்றி  எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பிடுகையில்   இக் கணத்தில், எப்போதும் ஊக்கம் தந்து என்னுடனேயே பயணிக்கும் சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹானை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வதோடு, இக் கவிதைகளைத் தொகுப்பாக வெளியிடத் தேர்ந்தெடுத்த வம்சி பதிப்பகத்துக்கும், இயல் விருதினை வழங்கி கௌரவிக்கும் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துக்கும், எழுதவும், மொழிபெயர்க்கவும் எப்போதும் ஊக்கமளிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், அன்பும் என்று குறிப்பிட்டுள்ளார் !

சிட்னி ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் திறப்பு விழா 30/06/2017




வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை 02 07 2017

.


உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ்

.

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர் குழுவினருக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, "கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான'நாசா' நடத்திய போட்டியில் கலந்து கொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.
இந்த செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் 'நாசா' ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 27 ஆம் திகதி 90 வயது - முருகபூபதி

.
மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு நாளை 90 வயது
இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் தனிப்பட்ட  கனவுலகம்
                                                                                         
   
                                                                                                                                   

நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள்.
எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன்  வள்ளுவர் இல்லத்திற்குச்  சென்றுவிட்டான்.
ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின்  மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும்  நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள்.
அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார்.
அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை.  அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது.

உலகச் செய்திகள்


முஸ்லிம் மாணவி அடித்துக்கொலை : அமெரிக்காவில் சம்பவம்

லண்டனில் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றிவிட்டு புறப்பட்டவர்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி, 10 பேர் காயம்

லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்...!


சென்னை வானொலிக்கு வயது 80

.

சென்னை அகில இந்திய வானொலி ஜூன் 16-ம் தேதியன்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற அகில இந்திய வானொலிகளுக்கோ, தனியார் வானொலிகளுக்கோ இல்லாத சிறப்பு சென்னை வானொலிக்கு உண்டு. அங்கு, ஒரே வளாகத்திலிருந்து ஒரு சேர ஐந்து வெவ்வேறு ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தவிர, வெளிநாட்டுத் தமிழ் நேயர்களுக்காக ‘திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்’(7270, 7380 கி.ஹெ) என்ற ஒலிபரப்பும் உண்டு.
திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் மங்கள இசையோடு தொடங்கியது சென்னை வானொலியின் பயணம். முதலில் ஒலித்த பாடல் டி.கே.பட்டம்மாள் பாடியது. முதல் நாள் ஒலிபரப்பில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி பேசினார். அவரது பேச்சு இப்படித்தான் தொடங்கியது, “வெகு தூரத்தில் இருந்து பேசுகிறேன்… என்னவானாலும் எந்திரம் எந்திரம்தான். ஆகையால் குரலிலிருந்து பேசுகிறவன் யார் என்று சொல்லுவது உங்களுக்கும் கஷ்டம், நான்தான் ராஜாஜி. சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுகிறேன். நான் பழைய தினுசு மனிதன். வைதிக மனப்பான்மை, புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. அநாகரிகங்களுக்குள் பழைய அநாகரிகங்களே தேவலை என்று எண்ணுகிறவன். ஜனங்களுக்குப் பேசும் படங்களாலும், வானொலிப் பேச்சாலும் உபதேசங்கள் அவ்வளாக ஏறாது என்பது என் எண்ணம். ஆயினும் எதுவும் ஓரளவு பயன்படும் என்பதுவும் ஒரு புறமிருந்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ரேடியோவுக்கு என்னுடைய பூரண ஆசியைத் தருகிறேன்” என்றார்.

இலங்கையில் பாரதி -- அங்கம் 23 - முருகபூபதி

.


இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்களை முன்னிட்டு  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட சில பயனுள்ள பணிகளில், இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும்  முக்கியமானது.
எழுத்தாளர்களின் படங்கள், பிறப்பிடம், வாழுமிடம்,  அவர்கள் எழுதிய நூல்களின்  விபரம், இதர துறைகள் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியதாக  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அட்டைகள் தயாரிக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் A 5 அளவில் பெரிதாக  உருவாக்கப்பட்டன. கணினி வசதி இல்லாத அக்காலப்பகுதியில் சில ஓவியர்களின் உதவியுடன் குறிப்பிட்ட  பதிவுகள்  அட்டைகளில் எழுதப்பட்டன.  இடது பக்கத்தின் மேல் மூலையில் எழுத்தாளரின் படம் ஒட்டப்பட்டது. இன்றுபோல் அன்று தமிழ் விக்கிபீடியா இருக்கவில்லை. Google இல் தேடிப்பெறும் நவீன தொழில்நுட்பமும் இல்லை.  மின்னஞ்சல் வசதியோ, உடன் தொடர்புகொள்ளும் கைத்தொலைபேசி வசதிகளோ அன்று  இருக்கவில்லை. 
பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டும், எழுத்தாளர்களின் முகவரிகளைத்தேடிக் கண்டுபிடித்தும், சங்கத்தின் உறுப்பினர்களின் முகவரிப்பட்டியலின் துணையுடனும் தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது.
அக்காலப்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் யாழ். இலக்கிய வட்டம், தேசிய கலை இலக்கியப்பேரவை, கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம், மற்றும் பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வத்தின் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பு, மலையக எழுத்தாளர் மன்றம்  ஆகியனவற்றுடன் கிழக்கிலும்  தென்னிலங்கையிலும்  சில கவிஞர்கள் அமைப்புகள் செயல்பட்டன.

உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு.. வித்யாசாகர்

.

இதோ இந்த மழைத்துளிகளில்
சொட்டுகிறது அந்நாட்களின் நினைவு..

மணற்பூக்களும் செம்மண் ஆறுகளும் ஒடி
பனைமரக் காடுகளுக்கிடையே மழைத்தெருக்கள் மணத்த சுகநாட்கள் அவை..

தெருவோரம் தேங்கிய வீடுகளைக்
கடந்துப்போகும் மழைநீரில்
எங்களுக்கான விடுமுறையைக் கப்பலாக்கித்தந்த
ஒரு நட்பினிய மழைக்காலமது..

ஒரு தும்பியின் வாலில் பூமிப்பந்தினைக் கட்டி
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் வானத்தை போர்த்திவிட்டு
இந்த பிரபஞ்சத்தை கண்மூடி கண்மூடித் தாண்டிய
பொன்-நிலா பொழுதுகள் அவை..

கிளை ஒடிந்ததா மரத்தை வெட்டு
வீடு சாய்ந்ததா இடித்துப் போடென
போட்டவர்களுக்கு மத்தியில்;
மரத்தில் அதுவரை வாழ்ந்திருந்த குருவிக்கும்
வீட்டில் கூடுகட்டியிருந்த சிலந்திக்கும்
மாற்று யாசித்து மழையோடு அழுத மழைக்காலமது..


தமிழ் சினிமா

உரு 


தமிழ் சினிமா என்றாலே ஆடல், பாடல், சண்டை என ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வருகின்றது. இதில் ஒரு சிலர் தான் விதிவிலக்காக இவற்றை தாண்டி தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பார்கள். அப்படி விக்கி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த உரு.

கதைக்களம்

கலையரசன், தன்ஷிகா இருவரும் கணவன், மனைவி. இதில் கலையரசன் ஒரு எழுத்தாளர், இவர் ஒரு கதை எழுதுவதற்காக ஓர் இடத்திற்கு தன்ஷிகாவுடன் வருகின்றார்.
Uru
அங்கு ஒரு வீட்டில் இவர்கள் தங்க, கலையரசனை ஒரு முகமூடி அணிந்த நபர் கொல்ல முயற்சிக்கின்றார். ஆனால், அவரால் அந்த வீட்டிற்குள் உள்ளே வர முடியவில்லை.

அனைத்து கதவுகளும் அடைக்கப்பட, அந்த முகமூடி அணிந்திருப்பவர் யார், கலையரசனை ஏன் கொல்ல முயற்சிக்கின்றார் என்பதை பல டுவிஸ்டுகளுடன் சொல்கிறது இந்த உரு (படத்தில் பல டுவிஸ்ட் இருப்பதால் கதை குறித்து விரிவாக கூறவில்லை).

படத்தை பற்றிய அலசல்

ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அதிலும் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும் மிகவும் சாமர்த்தியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். இதில் கலையரசனும் ஒருவர், அதே கண்கள், எய்தவனை தொடர்ந்து தற்போது உருவும் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்.
தன்ஷிகா படத்தின் மிகப்பெரிய பலம், கண்டிப்பாக டாம் ரைடர் போன்ற படங்களை தமிழில் எடுத்தால் தன்ஷிகா சரியான சாய்ஸ். அதிலும் ஒரு கார் விபத்தில் இவர் கண்ணாடியை உடைத்து விழும் காட்சி எல்லாம் ஹீரோ கூட செய்வார்களா? தெரியவில்லை. தன்ஷிகாவும் தன் கதாபாத்திரம் உணர்ந்து படம் முழுவதும் சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படம் HUSH என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தான் எடுத்தது என்று நன்றாக தெரிகின்றது. அதை மூடி மறைக்காமல் படத்தில் ஒரு சில இடத்தில் தொலைக்காட்சியில் அந்த ஹாலிவுட் படமே ஓடுவது போல் காட்டியது விக்கி ஆனந்தின் புத்திசாலித்தனம்.
ஆனால், படம் முழுவதும் சுவாரசியமாக போக கிளைமேக்ஸ் ஒரு டுவிஸ்ட் இருந்தால் பரவாயில்லை, டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் என்பது கொஞ்சம் பி, சி ஆடியன்ஸிற்கு ரீச்சாகுமா? என்பது சந்தேகம் தான்.
டெக்னிக்கலாக படத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது, பிரசன்னாவின் ஒளிப்பதிவும், ஜோஹனின் பின்னணி இசையும் மிரட்டல்.

க்ளாப்ஸ்

கலையரசன், தன்ஷிகாவின் நடிப்பு.
பின்னணி இசை, பட இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றது.
டெக்னிக்கல் டீம்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி கூறியிருக்கலாம்.
மொத்தத்தில் உரு அச்சத்தில் உறைய வைக்கும், கண்டிப்பாக பார்க்கலாம்.
Music:

நன்றி  Cineulagam