பிரிந்து பறக்கும் வலி...-- சுபேஸ்

.


அன்பே
உனக்கும் எனக்குமான
உறவுகள்
எந்தக் கவிஞ்ஞனும்
இதுவரை புனைந்துவிடாத
வார்த்தைகளின்
வனப்புகளைத் தாண்டி
வரையப்பட்ட கவிதைகளடி...
நாம் பழகிய
அழகிய நாட்களின்
நினைவுகள்
எந்த ஓவியனது
தூரிகையிலும்
இதுவரை சிக்கிவிடாத
அற்புதமான ஓவியங்களடி...

உன் வார்த்தைகள்
என் செவிகளில் விழுந்த
அந்த மிகமெல்லிய
முதலாவது குளிர்நாளில்
நீ பேசிய ஒவ்வொரு
வரிகளையும்
என் நினைவுப் பெட்டகத்தில்
எடுத்துச் செல்கிறேன்..

பழைய சில
முத்திரைகளையும்
பட்டாம்பூச்சிகளின்
இறகுகளையும்
பொன் வண்டு
முட்டைகளையும்
எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்
சேகரித்து வைத்திருக்கும்
சிறுவனைப்போலவே
உன் மேலான
என் அன்பின் நினைவுகளையும்
என்னுடனே எடுத்துச் செல்கிறேன்..

East Meets West நடன நிகழ்ச்சி ஒரு பார்வை

.                                                             நாட்டிய கலாநிதி கார்ததிகா கணேசர்

21 ஜூலை  பகாய் அரங்கிலே East Meets West என ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் ஜனனி   Beadle இளம் வயது முதல் பரதத்தையும் மேற்கத்தைய நடனத்தையும் பயின்ற இள நங்கை. சிறுவயதுமுதல் ஒஸ்ரேலியாவில் வாழ்பவர்.  அதனால் East ரும்  West ரும் இணையும் புதிய சமுதாயத்தின் வாரிசு.
நிகழ்ச்சியின் முன்பகுதி பரத நிகழ்ச்சியாகவும் இடைவேளையின் பின் திரை இசைக்கான  Bollywood நடனமும் மேற்கத்தைய நடனமும் நடைபெற்றது. சின்னன் சிறிசு முதல் வயது வந்தோர்வரை ஆடினார்கள்.


வேம்படி நைட் 2012 11.08.12

.


When: 6.30 PM  Saturday 11 August 2012
Where: Pioneer Room, Castle Hill Community Centre, Castle Hill NSW 2154
Dress: Smart Casual
Tickets: Single $35; Family $90
Contact: Jayanthy Thangarasa 0434 016 603; Meena Beadle 0412 069 531; Devi Bala 9706 7354

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு

_
4/8/2012


  28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது.

இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக விசா அனுமதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்த இந்த நபர், மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையில் பணியாற்றி வந்ததுடன், விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

சந்திராஜா நாடு கடத்தப்படுவதை தடுக்க புலிகளின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்ட, மகஜர் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 நன்றி வீரகேசரி 

Maha Yagna for the New Sai Temple in Sydney

இலங்கைச் செய்திகள்

வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு

 யாழ் கொழும்பு பஸ் விபத்தில் உயிரிழந்தோர்இ காயமடைந்தோர் விபரம்

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை
வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு 
1/8/2012


  ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.

ஆகாயத்தின் நிறம் - மலையாளத் திரைப்பட அனுபவம்.

.
                                                                                       எம் ஏ சுசீலா

’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’

சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட
’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம்.
படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்தத அந்தப்படம்,ஆனந்தம்கலந்தஅதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.


அயராமல் இயங்கி ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நனவிடைதோயும் கவிஞர் அம்பி ஓடிடும் தமிழருக்கு அறைகூவல் விடுத்தவர் - முருகபூபதி

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம். ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி

 _
30/7/2012
  புது டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வந்த போது ரயிலின் ஒரு பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர்.

புது டில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11ஆவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

மிக்க நலமுடைய மரங்கள். - சு.தியடோர் பாஸ்கரன்


.


சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தனவந்தர் மாணிக்கவேலு முதலியாருக்கு  பெங்களூர் அரண்மனை சாலையில்  பரந்த வளாகத்தின் நடுவே ஒரு மாளிகை காலனீய கட்டிடக்கலை பாணியில் பெரிய தூண்களுடன் கூடிய எழிலார்ந்த பங்களா. இந்த சொத்தை அரசுக்கு எழுதி வைத்துவிட்டு முதலியார் இறந்து விட்டார். 1996 முதல் இந்தக் கட்டிடத்தில்  தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) செயல் படுகின்றது. பிரித்தானிய கால ஓவியர் டேனியல் முதல் நம்மூர் அச்சுதன் கூடலூர் படைப்புகள் வரை  காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பெரிய மரத்தடியில் ஒரு சிற்றுண்டிக் கடையும் உண்டு. ஒரு சொகுசான திரையரங்கமும் அண்மையில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இங்கு நாடகம், நடனம், உரைகள் என பல நிகழ்வுகள் உண்டு. மின்னஞ்சலில் விவரம் வந்து விடுகின்றது. முந்தின நாள் நினைவுபடுத்தவும் செய்கிறார்கள். கடைசியாக இங்கு ஆர்சன் வெல்ஸ் இயக்கி, நடித்த Othello (1952) திரைப்படம்  பார்த்தேன். பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த படம்.
ஆனால் நான் இங்கு கூறவந்தது வேறு விஷயம் பற்றி. இந்தக் கலைக்கூடத்தின் மூன்றரை ஏக்கர் வளாகத்தில் விளாம்பழ மரம், பன்னீர் புஷ்பமரம் அடங்க 28 வகை மரங்கள் உள்ளன. ஒரு ஞாயிறு மதியம், மரங்களை அறிமுகப்படுத்த இங்கு ஒரு கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Tour of trees என்று அறிவிக்கப்பட்டிருந்த  இந்த  நிகழ்வுக்கு  சுமார் ஐம்பது பேர், தண்ணீர் பாட்டில், நோட்டுப் புத்தகம் சகிதம் கூடினோம். விஷயம் தெரிந்த ஒருவர் - பெங்களுரின் மரங்களைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - ஒவ்வொரு மரமாக கூட்டிச் சென்று விளக்கினார். மாளிகையின் மாடியிலிருந்து ஆரம்பித்தோம். அந்த வளாகத்தின் மரங்களின் விதானங்களை மேலே இருந்து பார்க்க முடிந்தது. இலைகளின் அமைப்பு, பூக்களின் வடிவம் இவை பற்றி அருகில் பார்த்து அறிய முடிந்தது.

நம்மூரில் முள்ளு முருங்கை என்றறியப்படும் Silk Cotton treeயிலிருந்து தொடங்கினார். எல்லா இலைகளும் உதிர்ந்து, செந்நிறப்பூக்கள் மட்டும் நிறைந்திருந்தன. இந்த மரத்தின் பட்டையில் கூரிய முட்கள் இருப்பதால் இதில் குரங்கு, மனிதர் ஏறமுடியாது என்று அறிந்து கூடு அமைக்க இம்மரத்தை நாடி தேனீக்கள் வருகின்றன என்றார். மார்ச் மாதம் இலையே இல்லாமல் கிளைகள் முழுவதும் சிவப்பு பூக்களாகப் பூத்துக் குலுங்கியிருந்தன. இதிலிருந்து வரும் கோந்து நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பூப்பூத்து முடிந்த பின்னர் வரும் காய்களிலிருந்து கிடைக்கும் பஞ்சை மெத்தை, தலையணை செய்யப் பயன்படுத்துகிறார்கள். இம்மரம் தமிழ்நாட்டில் காணப்படும் இலவு மர வகையைச் சார்ந்தது.

வானொலி மாமா நா. மகேசனின் - குறளில் குறும்பு 42 – “ எல்லாப் பொருளும் உளது”
ஞானா:        அப்பா….திருவள்ளுவ மாலையிலை ஒரு புலவர் திருக்குறளிலை எல்லாப்  பொருளும் சொல்லப்பட்டிருக்கு, அதிலை இல்லாத பொருள் ஒண்டும் இல்லை எண்டு பாடியிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமே?

அப்பா:        ஓம் ஞானா, மதுரைத் தமிழ் நாகனார் எண்ட புலவர் பாடியிருக்கிறார்.
           
            எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்
            இல்லாத எப்பொருளும் இல்லையால் ------ சொல்லால்
            பரந்தபா வால்என பயனவள் ளுவனார்
            சுரந்தபா வையத் துணை.

       
        இதுதான் அந்தப் பாட்டு ஞானா.

ஞானா:        அம்மா நீங்கள் சொல்லுங்கோ. இது இந்தக் காலத்துக்குப் பொருத்தமாய் இலைத்தானே. இந்தத் தமிழ்நாகனார் கொஞ்சம் மிகைப்படச் சொல்       யிருக்கிறார் எல்லே?

உலகச் செய்திகள்


 ஈரான் மீது அமெரிக்க மேலும் பொருளாதாரத் தடை
 1/8/2012
  ஈரான் மீது அமெரிக்கா மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தடையை விதித்துள்ளது.

இதனால் அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தி்த்துறைகள் பெரும் இழப்பீட்டை சந்திக்க உள்ளதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், அணுசோதனை நடத்துவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா ‌பல்வேறு பொருளாதாரத்தடையை விதித்தது.

இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில் புதிய தடையையும் விதித்துள்ளது.

இது குறி்த்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஈரான் மீது ஏற்கனவே பொருளாதாத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இ‌தனை நீட்டித்தும், எண்ணெய் வர்த்தகம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஈரானின் பெட்றோலியப் பொருட்களை வாங்கதலும்,இறக்குமதி செய்தலும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவின் இந்த முடிவு ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நடவடிக்கை சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி  

முருகன் வருகைப் பத்து

                  உ
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவை
       ஒட்டிப் பிரசுரிக்கப்படுகிறது.
        அழகன் முருகனை நினைந்து
         ‘வருகைப் பத்து’ப் பாடி    
            மகிழ்கிறார்
“தங்கத் தாத்தா  நவாலியூர் க சோமசுந்தரப் புலவர் அவர்கள்     
அவரின் பேரனார் பாரதி சிறுவர்களுக்காகச் சிந்து பாடுகிறார்!

     முருகன் வருகைப் பத்து    
       (நவாலியூர் க சோமசுந்தரப் புலவர் இயற்றியது )      

       கூவாய் குக்குடமே – உயர்
       கொடியாகக் கொண்ட பிரான்
       மூவாமேனி முருகப் பிரான் வரக்
       கூவாய் குக்குடமே!.

       இசையாய் இன்குயிலே - இன்
       ஏழிசை எம்பெருமான்
       அசையா முத்தமிழ்  ஆறுமுகன் வர
       இசையாய் இன்குயிலே!.

       அகவாய் ஆய்மயலே – உனை
       ஆண்டவன் எம்பெருமான்
       மகவான் மங்கை மணாளன் இங்கே வர
       அகவாய் ஆய்மயிலே!.

       பலுக்காய் பல்லி நல்லாய் - உரை
       பயனுந்தா னாயபிரான்
       அலுக்கா தெம்மையும் ஆளுஞ் செவ்வேள் வரப்
       பலுக்காய் பல்லி நல்லாய்!.

இலங்கை – அவுஸ்திரேலிய அதிகாரிகளின் பேச்சின் பின்னரே தமிழ் அகதி நாடு கடத்தல்

 _
1/8/2012 


  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திருப்பியனுப்பப்பட்டதாக 'த அவுஸ்திரேலியன்’ நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை தளபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள்: எழுத்தாளர் அசோகமித்திரன்

.
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.

''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?''

''ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.''

''வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?''
''ஷேக்ஸ்பியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், கவித்துவமாக ஏதாவது சொல்லி இருப்பார். படைப்பாளி என்ன பெரிய படைப்பாளி? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.''

Posted Image

''உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?''

சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவதொண்டன் ரொபின் அலரேயர் மக்கிலாசன்

.
View Rev McGlashan.jpg in slide show

பொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி

.
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன.சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.  தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.  "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது.  சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.  அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். 

தமிழ் சினிமா


 பில்லா-2

அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர் அஜீத் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படி வெளிவந்திருக்கும் படம் தான் பில்லா 2.

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லா, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் டேவிட் பில்லாவிற்கு ரஞ்சித் உள்ளிட்ட 3 பேர் நண்பர்களாகின்றனர்.

அப்பகுதி பாதுகாப்பு அதிகாரி சக அகதிகள் மீது நடத்தும் அடவாடித்தனத்தை கண்டிக்கும் டேவிட் பில்லா பாதுகாப்பு அதிகாரிக்கு எதிரியாகிறார். இதனால் பில்லாவை பழிவாங்க நினைக்கிறார்.

சென்னைக்கு மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் வைரத்தை வைத்து கடத்தும் கும்பலிடம் அஜித்தை சிக்கவைத்து, பழிவாங்க எண்ணுகிறார்.

மீனை ஏற்றிச் செல்லும் பொறுப்பை ரஞ்சித்தும், பில்லாவும் ஏற்கிறார். வழியில் சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் இருவரும், அதிலுள்ள வைரத்தை சென்னையின் பிரபல கடத்தல்காரரான செல்வராஜிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

இவர்களின் விசுவாசத்தை புரிந்து கொண்ட செல்வராஜ், இவர்களுக்கு சென்னையிலேயே சில கடத்தல் வேலைகளை கொடுக்கிறார்.

இந்நிலையில் கோவாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த போதைப் பொருளை சென்னையில் கைமாற்றிக் கொடுக்க செல்வாரஜை அணுகுகிறார் கோட்டி. அப்பொருளை கைமாற்ற தான் உதவி செய்வதாக பில்லா அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

கைமாற்றுவதில் ஏற்படும் தகராறில் ஒரு கொள்ளைக் கும்பலை அடித்து துவம்சம் செய்து விட்டு, கோட்டியின் தலைவனான அப்பாஸியிடம் நேரடியாக அந்த டீலை முடிக்கிறான் பில்லா. அதன்பிறகு அப்பாஸியிடம் சேர்ந்து கொண்டு சர்வதேச அளவில் கடத்தல் தொழிலில் கில்லாடியாகிறார் பில்லா.

சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியின் பல கோடி ரூபாய் ஆயுதங்கள் இந்தியாவில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறது.

அதனை பில்லாவை வைத்து கைப்பற்றி கொடுத்து டிமிட்ரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறும் அப்பாஸியை தன்னுடைய நாடான பரோவியாவிற்கு அழைப்பு விடுக்கிறான்.

அப்பாஸிக்கு பதிலாக கோட்டியும், பில்லாவும் பரோவியா செல்கின்றனர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அப்பாஸியிடம் கலந்தாலோசிக்காமல் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்கிறான் பில்லா.

இது துளியும் திருப்தியில்லாத அப்பாஸி பில்லாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறான். இதிலிருந்து தப்பிக்கும் பில்லா முடிவில் அப்பாஸியையே தீர்த்துக் கட்டுகிறான். அதன்பிறகு ரஞ்சித் - பில்லா இருவரும் தனியாக இந்த பிசினஸை செய்ய முடிவெடுத்து களத்தில் குதிக்கிறார்கள்.

இதற்கு உதவும் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியையே ஒரு கட்டத்தில் பில்லா எதிர்க்கிறான். இதனால் ஆத்திரமடைந்த டிமிட்ரி அரசியல்வாதி மற்றும் அப்பாஸியின் உதவியாளர் கோட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு பில்லாவை தீர்த்துக் கட்ட எண்ணுகிறான்.

முடிவில் பில்லா அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா? இல்லை அவர்களை துவம்சம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.

அஜித் என்றாலே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ந்தார்போல் கொஞ்சம் தாடி மற்றும் மீசை மற்றும் தாடியை மலித்த தோற்றம் என இரண்டிலும் தல கலக்கலாக இருக்கிறார்.

சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டு ஹேண்ட்சம்மாக இருப்பவர்களில் இவருக்கே முதல் இடம். உண்மையிலே இவர் செம பர்சனாலிட்டி ஹீரோதான்.

படத்தில் வித்தியாசமான முறையில் வசனம் பேசியிருக்கிறார் தல. தேவைப்படும் இடத்துல மட்டும் டயலாக். மற்ற இடங்களில் முகபாவணைகளிலேயே பேசுகிறார்.

அஜித்தின் அக்கா மகளாக வரும் பார்வதி ஓமனக்குட்டன் சில காட்சிகளே வருகிறார். அவருக்கு காதல் பண்ணுவதற்கும், நடிப்பதற்கும் வாய்பில்லாமல் போய்விட்டது.

இன்னொரு நாயகியாக புருனா அப்துல்லா, அவ்வப்போது கவர்ச்சியில் வருகிறார்.

சென்னை கடத்தல் தலைவனாக இளவரசு, கோவா கடத்தல் கும்பல் தலைவனாக சுதன்சு பாண்டே, சர்வதேச கடத்தல் கும்பல் தலைவர் வித்யூத் ஜம்வல் ஆகியோர் தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.

படத்தோட ரியல் ஹீரோ வசனகர்த்தா முருகன்தான். படத்தில் அஜித் பேசுகின்ற வசனங்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ்தான்.

குறிப்பாக “உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு” மற்றும் “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்தான்... போராடிட்டு இருக்கிறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி” என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிச் செல்கின்றன.

மொத்தத்தில் பில்லா-2 மிரட்டல்.

நடிகர்: அஜீத்.
நடிகை: பார்வதி ஓமனக்குட்டன்.
இயக்குனர்: சக்ரி டோலட்டி.
இசை: யுவன் சங்கர் ராஜா.
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்.

நன்றி விடுப்புதுப்பாக்கி வழக்கு : ஓகஸ்ட் 6ஆம் திகதி ஒத்திவைப்பு 
ஏ.எம். றிஷாத்/வீரகேசரி இணையம் 2/8/2012


  துப்பாக்கி படத்தின் தலைப்பு தொடர்பிலான வழக்கு மீண்டும் ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கிவரும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு எதிராக கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் செய்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த மாதம் 25ஆம் திகதி அன்று நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டதன் பிரகாரம் வழக்கு, நேற்று (01.08.2012) நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மீண்டும் ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்தும் துப்பாக்கி என்ற தலைப்பு மீதான தடை 6ஆம் திகதிவரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இயக்குனர் முருகதாஸ் சொன்ன வசனத்தை கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் முருகதாஸுக்கு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்கு அதாங்க 'பாப்பா தள்ளிப்போய் விளையாடு'
நன்றி வீரகேசரி