இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Happy New year Wishes in Tamil Language 201

புத்தாண்டே நீ வருக ! ( எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


image1.JPG                  புத்தாண்டே  நீவருக
                      புதுத்தெம்பை  நீதருக
                 எத்திக்கும் நடக்கின்ற
                      இடர்களைய  நீவருக
                 சொத்துக்காய் சுகத்துக்காய் 
                      சூழ்ச்சிகளைச் செய்வாரின் 
                  புத்தியினை மாற்றிவிட
                        புத்தாண்டே நீவருக !

                  அரசியலில் குழப்பங்கள்
                      அத்தனையும் அறவேண்டும் 
                 ஆன்மீகம் மக்களது 
                     அகமதனில் அமரவேண்டும் 
                  குறைபேசும் குணமெல்லாம்
                         குழியதனுள் விழவேண்டும்
                   குவலயத்தில் அமைதிவர
                          குதித்துவா புத்தாண்டே ! 

சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம்

புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை "மச்சான் " வானொலிக்கலைஞன் -முருகபூபதி

.
" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்"  புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை "மச்சான் " வானொலிக்கலைஞன்   

-->
"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினை
 பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது - மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்"

தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும் ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி முருகபூபதிமுகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம்.
அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம்.
அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால்  உதிர்க்கப்படும்  வார்த்தைகளுக்கு  கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான  கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள்.
அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள்  தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற்குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார்  எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி.
அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: "கண்டதைச்சொல்லுகிறேன்" கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில்,  தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை  அரங்கேற்றிவருகிறார்.  சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும்  தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள்.   எனது நீண்ட கால  கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு  சமர்ப்பிக்கின்றேன்.
2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது  ஆக்கம்தான் இந்தப்பதிவு.
நான் சந்தித்த பல கலை, இலக்கியவாதிகளில் கனடா மூர்த்தி சற்று வித்தியாசமானவர். இவரது வாழ்வும் பணிகளும் பல்தேசங்களிலும் நீடித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்முகநாடான இலங்கையில் பிறந்தவர். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக விளங்கிய  சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர், பின்னர்  சிங்கப்பூரில் பணியாற்றியவர். தற்போது கனடாவை தமது வாழ்விடமாகக்கொண்டிருப்பவர்.
இலங்கையில் வடபுலத்தில் மூளாயில் பிறந்திருக்கும் மூர்த்தி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்.  இளம் வயதில் தனக்குக் கிடைத்த சில சாதனங்கள் மூலம் ஒரு கணினியை வடிவமைத்தவர். அதனால் " கம்பியூட்டர் மூர்த்தி" என்று ஈழநாடு இவரை வர்ணித்து செய்தியும் வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம். 1973 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்  இவ்வாறு கம்பியூட்டரில் ஆர்வம்கொண்டிருந்தவர், அங்கிருந்து 1977 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு மேற்கல்விக்காகச்சென்று இயந்திரவியல் பொறியியல் பட்டதாரியானவர். பின்னர் கனடா மொன்றீயலில் முதுகலைமாணி பட்டமும்பெற்றவர்.
சிங்கப்பூர்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில், எதிரொலி என்ற  நடப்பு விவகார (Current Affairs)  நிகழ்ச்சியை  தயாரித்து வழங்கியவர். சிங்கப்பூர் பொதுநூலகத்தில் பணியாற்றியவாறே, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் தமிழர்களுக்காக மரபுடமை ஆவணக்கண்காட்சி தயாரிப்பிலும் ஈடுபட்டவர்.
அத்துடன், காலச்சக்கரம் என்ற மகுடத்தில், தென்கிழக்காசியாவில், கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் பரவல் தொடர்பான ஆவணப்படத்தையும்  தயாரிக்கும்  குழுவிலும் பணியாற்றியவர்.  இவருடன் இணைந்து இயங்கியவர்தான் திரைப்படநடிகர், கலைஞர் நாசர்.
சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தென்னிந்திய நட்சத்திரம் மனோரமா நடித்த "புதிதாய் பற" என்னும் தொலைக்காட்சி நாடகத்தையும் "கூலி" என்னும் குறும்படத்தையும்  இயக்கியிருப்பவர். ஒரு இயந்திரவியல் பொறியியலாளரிடம் கலையும் இலக்கியமும் ஊற்றெடுத்திருந்தமையால் எமது நட்புவட்டத்திலும் நீண்டகாலமாக இணைந்திருப்பவர்.
அந்த இணைப்பு வலுப்பெற்றதற்கு ஜெயகாந்தனும், பேராசிரியர் கா. சிவத்தம்பியும்தான் காரணம் என்பேன். இவர்கள் இருவரதும் பெறாமகன்தான் இந்த மூர்த்தி என்று சொன்னால் அது மிகையான கூற்றுஅல்ல.

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன். பகுதி 3

-->இணுவில் மண்ணில் முகிழ்த்த பாரிஜாதம் லயஞானகுபேரபூபதி தட்சணாமூர்த்தி“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்

 தோன்றலிற் தோன்றாமை நன்று”        - திருவள்ளுவர்அளவிற்கு அதிகமான குறும்புத்தனமும் குழப்படியும் நிறைந்திருந்தாலும் தட்சணாமூர்த்தியின் மடியில் அவர் தந்தை தவிலைத் தூக்கி வைத்த மறுகணமே, ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது போல

                “அந்திப் பறவை போலே ஆட்டமெல்லாம் அடங்கி

 அந்தக்கரணம் அவன் சிந்தையிலே ஒடுங்கி

 வந்த வினைகளெல்லாம் சிந்தத் தவம் புரியும்

 பரிசுத்த நிலை” 

கொண்ட ஒரு புது அவதாரம் எடுத்து, தன்னை மறந்த வாசிப்பினால் அந்தத் தவிலிசையிலேயே இரண்டறக் கலந்து, புதியதொரு தளத்திற் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவார். “கலைவாணியே அவர் வடிவில் வந்து தவில் வாசிப்பது போல அப்படி ஒரு அழகு! அவர் முகத்திற் தோன்றும்; பிரகாசமும், ஆழ்ந்த அமைதியும், தவில் வாசிக்கும் அழகும் கச்சேரி கேட்ப்பவர்களை மெய் மயங்கவைக்கும் அவர் இணுவிலிற் செய்த ஒவ்வொரு கச்சேரியும் தவிற் கலையின் ஒவ்வொரு அற்புதம்!”;. என்று என் தந்தையார் கூறுவார். இந்த மாதிரி இசையுடன், இறையுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனம் பக்குவப்பட்ட அருளாளர்களுக்கும், ஞானிகளுக்குமே கிடைக்கக் கூடிய பெரும் பேறு. திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த நிலை கைகூடி வந்துள்ளது. திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் தான் கச்சேரிகள் செய்வதையும் நிறுத்தி விட்டுத் தன் மகன்மீது முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

நூல் வெளியீட்டு விழா - 07/01/2018 @3pm Carrum Downs, VIC

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 07/01/2018


தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா 2018” எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.
இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 7th  Sunday 2018, From 8.00 AM onwards.
இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன. 
அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். 
மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளிற்கும் 0401 111 120 அல்லது 0404 802 104 அல்லது 0423 577 071 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)உலகச் செய்திகள்


கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பஸ் விபத்தில் பலி!!!

எமிரேட்ஸ் விமானங்கள் தரையிறக்க தடை விதித்த துனீசியா!!!

புகலிடக் கோரிக்கையை முன்வைத்து படகுகளில் பயணித்த 250 பேரை இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் மீட்டுள்ளனர்!!!

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் கைது

மும்பை தீ விபத்தில் 14 பேர் பலி!!!

அரசியலில் குதித்தார் ரஜினி!
கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பஸ் விபத்தில் பலி!!!
26/12/2017 பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பஸ் விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளனர்.

புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி


இலங்கைச் செய்திகள்


தேசிய நல்லிணக்க வாரம் 08ஆம் திகதி முதல் 14 வரை

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 13...!

வைத்தியசாலையில் மஹிந்தவும், நாமலும் : இதில் யாருக்கு சிகிச்சை

ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!!!
தேசிய நல்லிணக்க வாரம் 08ஆம் திகதி முதல் 14 வரை

26/12/2018 சமாதானத்தை மேம்படுத்துவதற்காக ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலும் ஒவ்வொரு வருடமும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வார த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை அமைச்சர் என்றவகையில் அதிமேதகு ஜனாதிபதியால் 2016 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கிடைத்த அனுமதியின்படி நாடு பூராவும் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன்கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி , சமாதானம், அன்பு கருணை மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை விருத்தி செய்தல், பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்தல் என்பனவாகும்.  நன்றி வீரகேசரி


தமிழ் சினிமா


வேலைக்காரன்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை திருப்திப்படுத்தும். அப்படி தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் 10வது படமான வேலைக்காரனிலும் ஹிட் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது.
வேலைக்காரன் திரை விமர்சனம்நம் கண்முன்னே ஒரு சமுதாயம் கெட்டு போவதை பார்க்கும் அவர், ஒரு ரேடியோ ஐடியா மூலம் ஒரு சில வேலைகளை பார்க்கின்றார். ஆனால், அது பிரகாஷ்ராஜுக்கு கோபத்தை ஏற்படுத்த அந்த ஐடியாவை இழுத்து மூடி ஒரு சேல்ஸ் வேலைக்கு செல்கின்றார்.
அந்த கம்பெனியில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் புரிந்து வேலை செய்ய, ஒரு கட்டத்தில் தன்னால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனையை சந்திக்கவிருக்கின்றது என்பதை உணர்கின்றார்.
அதை தொடர்ந்து ஒருவன் HardWork, ஸ்மார்ட் Work என எதுவும் செய்ய தேவையில்லை, Good Work செய்தால் போதும் என்பதை சிவகார்த்திகேயன் பல முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டுவதே இந்த வேலைக்காரன்.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் முதன் முதலாக தன் எல்லையை மீறி இறங்கி அடித்துள்ளார். தான் நினைத்தால் இரண்டு காமெடி, மூன்று பாட்டிற்கு டான்ஸ் ஆடி படத்தை ஓட்டி விடலாம் என்றில்லாமல், மக்களுக்கு தேவையான ஒரு கதைக்களத்தை எடுத்து கலக்கியுள்ளார், காமெடி என்றில்லாமல் சீரியஸ் காட்சிகளில் பல இடங்களில் அசத்தியுள்ளார், அதிலும் தன் வீட்டிலேயே பொருளை விற்க வரும் மார்கெட்டிங் பாய் அப்துலிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் சிவா.
பஹத் பாசிலும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, கடைசி வரை சட்டை கூட அழுக்கு ஆகாமல் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். இவர்களை தவிர படத்தில் மினி கோடம்பாக்கமே இருக்கின்றது, ஆனால், சார்லி, ரோகினி, விஜய் வசந்த் தவிர பெரிதும் யாரும் மனதில் பதியவில்லை.
படத்தின் கதைக்களம் இன்றைய மக்களின் அடிப்படை தேவைகள் அதிலும் ஒரு மிடில் க்ளாஸ் மக்களை எப்படி ஒரு மார்க்கெட்டிங் செய்து தங்கள் பொருட்களை பெரிய கம்பெனிகளை வாங்க வைக்கின்றார்கள் என்பதை க்ளாஸ் எடுத்துள்ளார் மோகன்ராஜா. அதிலும் பஹத் பாசில் ஒரு காட்சியில் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருள் எங்கே இருக்க வேண்டும் என்பதை விளக்கும் காட்சி ஒரு நொடி புருவம் உயர்த்த வைக்கின்றது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் திண்பண்டங்கள் என அனைத்திலும் இத்தனை அரசியல் உள்ளதா? என்பதை நம்மையே அச்சப்படுத்துகின்றது. அதற்கு படத்தின் வசனமும் மிகப்பெரிய பலம், அத்தனை பவர்புல்லாக இருக்கின்றது.
முன்பு நாம் தவறு என்று பயந்து செய்த விஷயத்தை இந்த தலைமுறை மிக சந்தோஷமாக கொண்டாடி செய்கின்றது. வேலைக்காரன் என்னைக்கும் முதலாளியை நம்புகிறான், ஆனால், முதலாளி தான் நம்மை நம்பாமல் கேமரா வைத்து நம்மை நோட்டமிடுகின்றான் என்ற வசனம் எல்லாம் விசில் பறக்கின்றது. அதே சமயம் வசனத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் தனி ஒருவன் போல் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.
அனிருத்தின் இசையில் கருத்தவெல்லாம் கலீஜா தாண்டி எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணியிலும் கொஞ்சம் தடுமாறியுள்ளார், ராம்ஜியின் ஒளிப்பதிவில் செட் போட்டு எடுத்து குப்பம் கூட ரியலாக தெரிகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்.
சிவகார்த்திகேயன், பஹத் பாசிலின் நடிப்பு, ராம்ஜி ஒளிப்பதிவு, ஆர்ட் Work பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஒரு இடத்தில் கூட செட் என்று தெரியவில்லை.

பல்ப்ஸ்

இத்தனை வலுவாக கதைக்களம், வசனம், நடிகர்கள் அமைந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.
நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் எதற்காக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் வேலைக்காரன் இனி ஒரு பொருள் வாங்கும் முன் ஒரு நொடி எல்லோரையும் யோசிக்க வைத்து விடுவான்.
நன்றி  CineUlagam