வாழ்கிறார் இசையாய் வாணி அம்மா ! 

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 




வாடாத மல்லிகையாய் வாணி அம்மா
வரமாக வந்தாரே தமிழ் இசைக்கு 
தேனான குரலாலே வாணி அம்மா
தித்திக்கப் பாடினார் பல மொழியில் 

ஊனுருக்க பலபாடல் அவர் தந்தார்
உளம் இனிக்க உணர்வாக அவரீந்தார் 
வாழ்வதனை இசையாக்கி அவர் வாழ்ந்தார் 
வாணி அம்மா வாழுகிறார் இசையாக 

கலை வாணி குயிலாய் வாணியானார்
கான சரஸ்வதியாய் ஆகி நின்றார் 
பலவிருதை பாராட்டைப் பெற்று நின்றார் 
பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தே விட்டார் 

வேலூரில் பிறந்தார் விரும்பியிசை பயின்றார் 
வடநாடு சென்றார் வங்கியிலும் இருந்தார் 
இந்தியிலும் இசைத்தார் இன்பவிசை கொடுத்தார்
எல்லோரும் விரும்பும் இசையரசி ஆனார் 

அபூர்வ ராகங்களால் முன்னெழுந்து வந்தார்
சங்கரா பரணத்தால் உச்சியினைத் தொட்டார் 
சுவாதி கிரணம் தொடர்ந்தது வெளிச்சத்தை
துலக்கமாய் வாணியம்மா இசை வெள்ளியானார் 

நித்தம்நித்தம் நெல்லுச்சோறு நினைக்கவே இனிக்குது 
நீகேட்டால் நான்மாட்டேன் நெஞ்சையே வருடுது
என்னுள்ளே என்னுள்ளே ஏங்கிடவே வைக்கிறது
இசையரசி வாணியம்மா இருக்கின்றார் இசையுலகில் 

ஈழத்தின் இறுதிப் போர் வாழ்வியலைப் பதிவாக்கிய 🎞️ வெந்து தணிந்தது காடு 🎞️ படைப்பாளி மதிசுதா பேசுகிறார்

VTK.png

ஈழ சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஒரு கலைஞன், அதனைப் படைப்பு ரீதியாகவும் சமரசமில்லாது கொடுப்பதில் தீவிரமான படைப்பாளி அன்புச் சகோதரன் மதி சுதா.

வெந்து தணிந்தது காடு படத்தை உருவாக்கியதில் பட்ட சிரமங்களையும், சவால்களையும் எட்ட நின்று பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

ஈற்றில் தன்னுடைய படைப்பின் தலைப்புக்காகக் கூடப் போராட வேண்டிய சூழல் எழுந்தது. ஆனாலும் ஓர்மத்தோடு அதே முகவரியோடே கொடுக்கிறார்.
இன்று விருதுகளை நாலாபுறமும் குவித்துக் கொண்டிருக்கிறது வெந்து தணிந்தது காடு.

ஈழ சினிமாவில் மதி சுதா ஒரு அழுத்தமான தனி அத்தியாயம்.
வெந்து தணிந்தது காடு தற்போது ஈழத்து வெண் திரைகளில் காண்பிக்கப்படுகிறது. 

வெந்து தணிந்தது காடு படத்தின் உருவாக்கம் குறித்தும், அந்தப் பட்டம் உலக அரங்கில் எழுப்பிய அதிர்வலைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் படத்தின் இயக்குநர் மதிசுதா







எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 52 மாரடைப்பு மகத்மியத்தின் இரண்டாம் பாகம் ! தாய் சொல்லைத் தட்டாதீர் ! ! முருகபூபதி


இன்ப அதிர்ச்சியும் துன்ப அதிர்ச்சியும் எனக்கு பெரும்பாலும் நடு இரவில், அல்லது அதிகாலையில்தான் நேர்ந்திருக்கிறது. பகல்பொழுது ஏதாவது வேலைகளில் கழிந்துவிடும்.

பெரும்பாலானவர்கள்,  மறுநாள் பொழுது நல்லவிதமாக விடியவேண்டும் என மனதிற்குள் பிரார்த்திக்கொண்டு இரவில் உறங்கச்சென்றாலும்,  துர்க்கனவுகள் வந்து அவர்களை தொல்லைப்படுத்திவிடும்.

கனவுகள் ஆயிரம் என்ற தலைப்பில் என்றைக்கு நான் எனது


முதலாவது சிறுகதையை எழுதினேனோ, அன்றிலிருந்து உறக்கத்தில் வரும் கனவுகளுக்கும் குறைவில்லை.

பகல் உறக்கத்திலும் கனவுகள் வருகின்றன. கனவுகள் வந்தால், உறக்கம் கலைந்துவிடும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் கனவுகள் வரும் எனச்சொல்பவர்களும் கூட கனவுகள் பற்றிய நிபுணத்துவ அறிவுள்ளவர்கள் அல்ல.

2002 ஆம் ஆண்டு செப்டெம்பர்  மாதம் நடுப்பகுதியில்  ஒருநாள் நடுஇரவு தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் அம்மா.

அம்மாவுக்கு அப்போது அவுஸ்திரேலியா நேரம் என்னவென்று தெரியாது.

 “ என்னம்மா… இந்த நேரத்தில்…? 

 “ தம்பி தூக்கமா…? இப்போதுதானே ஒன்பது மணியாகிறது…!? “

 “ அது உங்களுக்கு அம்மா. எமக்கு இப்போது நடுச்சாமம்.  என்ன விசயம். யாருக்கும் ஏதும் சுகமில்லையா…? ஏன்… இந்த நேரத்தில் எடுக்கிறீர்கள்..?  “ எனக்கேட்டேன்.

 “ தம்பி… உனக்கு சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. இப்போதுதான் தொலைக்காட்சி செய்தியில் சொன்னார்கள். 

   அப்படியா…? ! நீங்கள் சரியாகப் பார்த்திருக்கமாட்டீர்கள். எனக்கு கிடைத்திருக்காது, வேறு யாராவதாகவும் இருக்கலாம்  அம்மா.     என்றேன்.

 “ இல்லைத் தம்பி, உனது பெயரும் சரியாக உச்சரித்து, நீ எழுதிய புத்தகம் பறவைகள் பற்றியும் சொன்னார்கள். அதற்குத்தான் இந்த ஆண்டு விருது கிடைத்துள்ளது.  நீ வருவாய்தானே…? வரவேண்டும்.  உன்னை எதிர்பார்க்கின்றேன்.  “ அம்மா நீண்ட நேரம் பேசவில்லை. அங்கே தொலைபேசி கட்டணம் எகிறிவிடும் என்று அம்மாவுக்குத் தெரியும்.

நான் மீண்டும் உறங்கிவிட்டேன். கனவு வந்தது. பறவைகள் நாவலில் நான் நடமாடவிட்டிருந்த பாத்திரங்கள் கனவில் வந்தார்கள்.

மறுநாள் வேலைக்குச்சென்று வீடு திரும்பியபின்னர்,  மல்லிகை ஜீவாவுக்கும் ராஜஶ்ரீகாந்தனுக்கும் கோல் எடுத்து அம்மா சொன்ன செய்தி பற்றிக்கேட்டேன்.

                “ அம்மா சொன்னால் சரியாகத்தானே இருக்கும்.  அவசியம் வாரும். நாம் அந்த முடிவுகள் பற்றி உமக்குச் சொல்லமுடியாது.  “ என்று இரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டு இணைப்பிலிருந்து அகன்றார்கள். 

மறுநாள் தம்பி ஶ்ரீதரன் கோல் எடுத்தார்.

இரத்தத் திலகம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 இந்தியா,சீனா இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே அரை


நூற்றாண்டுகளுக்கும் மேலாக முறுகல் நிலை இருந்து வருவது தெரிந்ததே.இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே 1962ம் ஆண்டு யுத்தம் ஒன்றும் நடந்தது.இந்த யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் கண்ணதாசன் திரைப் படம் ஒன்றை தயாரிக்க ஆர்வம் காட்டினார்.தேசபக்தியை விளக்கும் படம் என்பதாலோ என்னவோ நேஷனல் மூவிஸ் என்ற ஒரு பட நிறுவனம் தொடங்கப்பட்டது.கவிஞரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பஞ்சு அருணாசலம் திடீர் என்று படத் தயாரிப்பாளராக்கப்பட்டு நேஷனல் மூவிஸ் சார்பில் படம் தயாரானது.அந்தப் படம்தான் இரத்தத் திலகம்.


கல்லூரியில் பயிலும் குமார்,கமலா இருவரும் கீரியும் பாம்பும்

போன்றவர்கள்.கல்வி, கலை,விளையாட்டு, எல்லாவற்றிலும் நேருக்கு நேர் மோதி ஒருவரை ஒருவர் வெல்லத் துடிப்பவவர்கள்.அவர்கள் நடிக்கும் ஒத்தல்லோ நாடகத்தின் போது எதிர்பாரா விதமாக இருவரிடையே காதல் மலருகிறது.ஆனால் அதை தொடர முடியா விதத்தில் கமலா தன் பெற்றோரை சந்திக்க சீனா திரும்புகிறாள்.அதே காலகட்டத்தில் இந்தோ-சீனா யுத்தம் வெடிக்கிறது.தாய் நாடு மீது பக்தி கொண்ட குமார் இராணுவத்தில் சேர்ந்து மேஜர் ஆகி நாட்டின் எல்லைக்கு சென்று போர் புரிகிறான்.அதே சமயம் தான் வளர்ந்து,வாழ்ந்த சீனாவில் இருக்கும் கமாலா ஓரு சீன டாக்டரை மணந்து சீனாவில் வாழத் தீர்மானிக்கிறாள் .யுத்தம் காதலர்களை பிரிக்கிறது. கமலா தனக்கும்,பாரதத்துக்கும் துரோகம் செய்து விட்டதாக குமார் ஆத்திரப்படுகிறான் .ஆனால் கமலாவின் தியாகம் காலம் கடந்தே அவனுக்கு தெரிய வருகிறது.

இவ்வாறு கண்ணதாசனால் எழுதப்பட்ட கதைக்கு அவரே இன்னும் இருவரோடு சேர்ந்து வசனம் எழுதினார்.படத்தின் பாடல்கள் அனைத்தும் கவிஞரால் எழுதப்பட்டது.திரை இசை திலகம் கே வி மகாதேவன் இசையமைத்தார்.அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் கல்லூரி இறுதி நாளில் பாடப்படும் பிரியாவிடை பாடலான பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் இந்தப் படத்தில் தான் இடம் பெற்றது.

இது தவிர புத்தன் வந்த திசையிலே போர்,பனி படர்ந்த மலையின் மேலே ,வாடை காற்றம்மா வாடைக்காற்றம்மா ஆகிய பாடல்களும் இடம் பெற்றன.சிவாஜி,சாவித்ரி நடிக்கும்தாழம் தங்க நிலவே தலை ஏன் குனிகிறது பாடல் படத்தில் இடம் பெற்றும் இன்றைய யூ டியூபில் தலையை குனிந்து கொண்டது!

கண்ணதாசனுக்கு ஒரு படத்தில் தோன்றி பாடல் காட்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.அந்த ஆசையை இப் படத்தில் நிறைவேற்றிக் கொண்டார்.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு பாடலுக்கு திரையில் தோன்றி நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார்.

இலங்கையின் சுதந்திர தினம் 75 ஆண்டுகள் தவறவிட்ட வாய்ப்பும் முன்னோக்கி செல்லும் வழியும்

இலங்கையின் 75 வருட வரலாற்றின் ஒரு கண்ணோட்டம்.

 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்றது முதல், 1948 பெப்ரவரியில், ஆட்சியில் இருந்த  திறமையற்ற மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் தலைமைகளால் ஏற்பட்ட ஆழமான சமூக-பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையில், சிறிலங்கா பிப்ரவரி 2023இல், வைர விழாவைக் கொண்டாடுகின்றது. 

 

ஒரு சுதந்திர தேசமாக, அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை, டொமினியன் அந்தஸ்துடன் சுதந்திரம் பெற்ற நேரத்தில், ஒப்பீட்டளவில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட வளமான நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காலனி ஆதிக்க எஜமானர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு மத்தியில் இந்த நாடு ஒரு முன்மாதிரியாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய சக்திகளின் பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியின் நுகத்தடியில் இருந்து நாடுகளை விடுவிப்பதே நோக்கமாக இருந்தாலும் அவற்றில் சில தீங்கற்றவை ஆகவும் மற்றும் சில தீங்கான விளைவுகளை ஏற்படுத்தின. .

 

அவசரமாகவும் தவறான சிந்தனைப் போக்குடனுமே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் ஆட்சியானது காலனித்துவ ஆட்சியிலிருந்து சிங்கள தேசத்தின் கடும் போக்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நவ காலனித்துவ ஆட்சிக்கு மாற்றப்பட்டதே தவிர வேறில்லை.

சுதந்திரமடைந்து 75 வருடங்களின் பின்னரும் தொடரும் காட்சிகள் ! அவதானி


சில வருடங்களுக்கு முன்னர் நல்லிணக்க ஆட்சி என்ற பெயரில் மைத்திரிபால சேனநாயக்கா ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும், இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது   காலி முகத்திடலில் நடந்த சுதந்திர தின விழாவை,  அண்மையில் கடந்த 04 ஆம் திகதி அதே திடலில் நடந்த 75 ஆவது சுதந்திர தின விழாவுடன்  ஒப்பு நோக்கியபோது, பல வேடிக்கைகளை அவதானிக்க முடிந்தது.

அன்று அந்த நல்லிணக்க அரசுடன் தேன்நிலவு கொண்டாடிய எமது


தமிழ்த் தலைவர்களையும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவையும், ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும்  இம்முறை அங்கே காணமுடியவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு அதே காலிமுகத்திடல், கோத்த கோ கமவாகியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அறுபது நாட்களையும் கடந்து இரவு பகலாக பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களினால், கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியை விட்டே ஓடினார். பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சர் பதவியிலிருந்த பஸில் ராஜபக்‌ஷ, அமைச்சர் பதவியிலிருந்த புத்திரன் நாமல் ராஜபக்க்ஷ ஆகியோரும் பதவி விலக நேர்ந்தது.

பல வாரங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரமாக விளங்கிய அதே  காலிமுகத்திடலை,  அவர்களினாலே நேர்ந்த அரசியல் மாற்றங்களினால், பின்கதவால் வந்து முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் உயர்ந்த ரணில் விக்கிரமசிங்கா எவ்வாறு  மாற்றியமைத்துவிட்டார் என்பதற்கு அண்மையில் அங்கே நடந்த 75 ஆவது சுதந்திர தின விழா வரலாற்றில் இடம்பிடிக்கிறது.

சுமார் பதினெட்டு வெளிநாட்டு அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் தனது அதிகாரத்தின் கீழ், எப்படி இருந்த காலிமுகத்திடலை எவ்வாறு மாற்றியிருக்கின்றேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

தனது தற்போதைய அரசின் படைபலம் எத்தகையது என்பதை காண்பிக்க பல தசாப்த காலத்தின்  படையணிகளின் ஊர்வலத்தையும் காண்பித்துவிட்டார்.

மும்மொழிகளிலும் அறிவித்தலை வழங்கச்செய்து, தொடக்கத்தில் சிங்களத்தில் தேசிய கீதத்தையும் இறுதியில் தமிழில் தேசிய கீதத்தையும் பாட வைத்து,  தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் இருக்கின்றேன் என்பதையும் முழு உலகிற்கு காண்பித்துவிட்டார் ரணில் விக்கிரமசிங்கா.

அவருக்கு மரியாதை செலுத்துமுகமாக கரையிலிருந்து கடல் நோக்கி 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. பாவம் கடல் வாழ் உயிரினங்கள்!

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் - கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 7 : பின் தொடருதல்

 


தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபது நாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

 இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

 இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள் தாம் கதைப்பார்கள்.

 “நண்பா! இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?”

 காது கேட்டுக் கேட்டுப் புளித்துவிடும்.

 ”இப்போது இரண்டாவது ஆட்டம் நடக்கும்” பன்னிரண்டு மணியளவில் ரான் சொல்லுவான். அவன் இதுகளுக்கென்று சில குறியீட்டுப் பாஷைகள், சங்கேத பாஷைகள் வைத்திருக்கின்றான்.

 இப்படி புங்கும் ஜோசுவாவும் காணாமல் போன சந்தர்ப்பங்கள் பல உண்டு.

 நல்லதொரு பெண் ஒழுக்கம் தவறி நாசமாகப் போகப்போகின்றாளே எனப் பலரும் கவலை கொண்டனர். ஆனாலும் ஒருவரும் அவளுக்கு அறிவுரை சொல்லவில்லை. அவள் என்ன விரல் சூப்பும் சுட்டிப் பெண்ணா? வாழ்க்கையில் வழுக்கி விழுவதென்பது வேறு, தானே தோலைக் கீழே போட்டு சறுக்கி விழுவதென்பது வேறு. புங் வழுக்கி விழுந்தாளா சறுக்கி விழுந்தாளா?

 புங்கின் கணவனின் நண்பர்கள்---ஏன் அவளின் நண்பர்களும்கூட---புங்கைப் பரீட்சித்து உண்மை நிலையை அறிய விரும்பினார்கள்.

 பலரும் புங்கைப் பின் தொடர்ந்தார்கள்.

இலங்கைச் செய்திகள்

 கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்

நல்லிணக்கம் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது; யாழில் ஜனாதிபதி

 பிரபலம் அல்லாத கடினமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கட்டியெழுப்புவோம்

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு முழு ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்கும்

திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை தொடர தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி (UPDATE)

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே சிறந்த தீர்வு


கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்

- 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' திறப்பு விழாவில் ஜனாதிபதி

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

 உயிரிழப்பு 17,000 ஐ தாண்டியது; உயிருடன் இருப்போரை மீட்பதற்கான கால அவகாசம் குறைவு

துருக்கி பூகம்பத்தை சரியாகக் கணித்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் டச்சு ஆராய்ச்சியாளர் !

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்

சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்

10 மீற்றர் நகர்ந்தது துருக்கி


உயிரிழப்பு 17,000 ஐ தாண்டியது; உயிருடன் இருப்போரை மீட்பதற்கான கால அவகாசம் குறைவு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் கட்டட இடிபாடுகளில் இருந்து நேற்றும் (09) சிலர் உயிருடன் மீட்கப்பட்டபோதும் பூகம்பம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருக்கும் நிலையில் மக்கள் உயிருடன் காப்பாற்றப்படுவதற்கான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கவிஞர் அம்பி 94 ஆவது பிறந்த தினம் ( 17-02-2023 )

 

   

                       மெய்நிகர் அரங்கு


அம்பியின்
சொல்லாத கதைகள் மின்னூல் வெளியீடு

அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த எழுத்தாளர் – கவிஞர் அம்பி எழுதிய சொல்லாத கதைகள் தொடர், அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் முன்னர் வெளியானது. தற்போது இந்தத் தொடர் மின்னூல் வடிவத்தில் வெளியாகவிருக்கிறது.

இதன் வெளியீட்டு அரங்கும், கவிஞர் அம்பியின்  94 ஆவது பிறந்த தின நிகழ்வும் இம்மாதம் 17 ஆம் திகதி ( 17-02-2023 ) வெள்ளிக்கிழமை மெய்நிகரில் நடைபெறும்.

    நேரம்: மெல்பன் – சிட்னி – கன்பரா  இரவு 7-00 மணி

 பிறிஸ்பேர்ண் மாலை 6-00 மணி -- பேர்த்  மாலை 4-00 மணி

  நியூசிலாந்து – இரவு 9-00 மணி - இங்கிலாந்து – காலை 8-00 மணி

             இலங்கை – இந்தியா – மதியம் 1-30 மணி

              ஜெர்மனி – பிரான்ஸ் காலை 9-00 மணி

                கனடா – அதிகாலை 3-00 மணி

               மெய்நிகர் இணைப்பு – Zoom Id

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84199976388?pwd=NVFzOE9ab3RTZGRsSGRwTXNaVHlWUT09

Meeting ID: 841 9997 6388
Passcode: 272256

-------------------------------------------------------------------------------------------------------------------  

      தலைமையுரை : திருமதி சகுந்தலா கணநாதன்            


            நூல் வாசிப்பு அனுபவப்பகிர்வு

அசோக் ஜனார்த்தனன்  - சியாமளா யோகேஸ்வரன்

                        கானா. பிரபா  

     வாழ்த்துரைகள்: கலை, இலக்கிய அன்பர்கள்

            ஏற்புரை : திருக்குமார் அம்பிகைபாகர்

          நன்றியுரை: கிறிஸ்டி நல்லரெத்தினம்            

            நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  -  முருகபூபதி

                          ----0----

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

-----------------------------------000 -------------------------------------------------