“கல்லறைப் பூவின் கண்ணீர் துளி”--பெருவை பார்த்தசாரதி

.
நேரில் பார்த்தவர்கள் நெஞ்சமகிழ்ந்து குளிர
---தேரில்ஏறி தெய்வத்தின் மார்பிலும் தலையிலும்
வீற்றிருந்த மலர்கள் தான்நாங்கள் எனினும்
---கற்றறிந்து பூவின் கண்ணீர் துளியதையறிவீர்.!

பூக்களைப் பாடாத புலவருண்டோ புவியில்
---பூக்களின் வாசமதில் வகையாகும் சிந்தனையில்
புவியில் எழுச்சியுறும் கவிகள்பலர் பிறந்தனர்
---பூவுக்கும் உணர்வுண்டு உணர்ச்சியுண்டு கேளீர்.!

பூவைப் பூவையரோடு ஒப்பிடாத கவிஞரிலர்..
---புவியில் தோன்றியதில் போற்றுவதும் பூவினம்தான்
இன்று புதிதாகப் பிறந்தோமென்றான் மஹாகவி
---இதற்குமிகப் பொருத்தம் பூவென்றால் மிகையாகா.!

முதலிரவில் பூக்கள்மேல் காதலர்கள்கண்டு களித்தாலும்
---பகலிரவு போலென பகட்டான ஒருநாள்வாழ்வில்.!
இன்னலுறும் வாழ்வினி வேண்டா வென
---பின்னெழும் உளமதிலே யொருவைர வைராக்கியம்.! 

மலர்ந்தால் தானேதுன்பம் மலராமல் இருந்தால்.?
---மனதுக்குள்ளே மலரும் நித்தமொரு போரட்டம்.!
சூடுவதற்கென்றே விழாக்கள் பலகண்ட பூக்களினம்..
---வாடுவதற்கே வாழ்க்கை விதியும் நியதியுமாம்.!

பிறப்பு இறப்பென பேதமெமக்கில்லை யெனினும்..
---பிறந்த நாளென வாழ்த்துண்டா எனக்கென.?
கழுத்தோடு மாலையாக மகிழ்வாக உறவாடி..
---காதோடு பேசுமெம் வேதனையதை யார்தானறிவர்.!

பெருவை பார்த்தசாரதி 


Nantri நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு 19-06-17

கவி விதை - 23 முச்சந்தி நாய் -- விழி மைந்தன் --

.

அந்த முச்சந்தியில் தெரு நாய் ஒன்று நின்றது.

முச்சந்திக்குத் தான் தான் அரசன் என்று நினைப்பு அதற்கு!

போவோர் வருவோரையெல்லாம் பார்த்துக்  குரைக்கும்.  சைக்கிள்களில் போவோரைக் கலைத்துக் கொண்டு போகும்.  சில வேளைகளில், பலவீனமான  முதியவர்கள் அல்லது சிறுவர்களாகப் பார்த்து வாயும் வைத்து விடும்!

அழகான சட்டையணிந்து பெண் பிள்ளையொருத்தி லேடீஸ் பைக்கில் வந்தால் துரத்திக் கொண்டு வீடு வரைக்கும் போகும். இன்னொருத்தி எதிரில் வந்தால் அவளை விட்டு விட்டு இவளைத் துரத்திக் கொண்டு போகும்!

மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கிப் போனார்கள்.

சில பேர் 'அடீக்!' என்று அதட்டி விட்டுப் போனார்கள்.   அவர்கள்  அதட்டினால்  நாய் இன்னும் அதிகமாகக்  குரைத்தது.

சிறுவர்கள் சில வேளைகளில் நாய்க்குக்  கல்லால் எறியப்  பார்த்தார்கள்.  அவர்களின் பெற்றோர் அவர்களைத் தடுத்து அழைத்துக் கொண்டு போனார்கள். 

JCC OBA Sydney presents the Premier Musical Event of 2017 | 8th July @ York Theatre - Seymour Centre

.

We are organizing a Bus for the Event on a subsidised fare.
Bus leaves from Pendle Hill at 4:00pm, stop at Homebush for pickup.

Cost will be $5 per person (including return trip). This needs to be pre-booked.
Let your friends know too. They may want to use this facility.


இலங்கையில் பாரதி --- அங்கம் 24 -- முருகபூபதி

.


கொழும்பு   புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  இலங்கை கம்யூனிஸ்ட் ( மாஸ்கோ) முன்னாள் வடபிரதேச  செயலாளரும், கருத்து முரண்பாட்டினால் அதிலிருந்து விலகி  செந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பை சிறிதுகாலம் நடத்திவிட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஐக்கியமான வி. பொன்னம்பலம்   இலங்கையில்  மிகவும் எளிமையான அரசியல் தலைவர்.
முள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரி, யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான  கல்விமான் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தவர்.
இலங்கையில் 1983 நடுப்பகுதி வன்செயல்களுக்குப்பின்னர் தமிழகம் சென்று,  அங்கிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்து ஒட்டாவா மாநிலத்தில்  வாழ்ந்தார்.
கனடாவில்  நடந்த ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவுக்கூட்டம்தான் அவரது  இறுதிக்கூட்டமாக  அமைந்தது. அந்தக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போதே  மாரடைப்பு வந்து காலமானார்.
தோழர் வி.பி என  கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதர இயக்கங்கள், கட்சிகளிலும் , இலக்கிய அமைப்புகளிலும்  அழைக்கப்பட்டவர்.  அவரின்  சிம்மக்குரல் புலம்பெயர்  மண்ணில் ஓய்ந்தது.


சதைகள் – சிறுகதைகள் நடேசன்

.


காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம்.
ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில் பத்து வருட யுத்தம். அதன் பின் கடல் பயணம் என்று வரும்போது இருபது வருடத்தின் பின்பாக குறைந்தது 40 வயதாகிய ஒடிசியஸ் பிச்சைக்காரனாக வேடமிட்டுவரும் ஓடிசியசை அவனது மனைவி பெனிலெப்பிக்குத் தெரியவில்லை. அவனைச் சோதிப்பதற்காக அவர்களது கட்டிலை வேலையாளை நகர்த்தும்படி கேட்கிறாள். அவர்களது கட்டில் நிலத்தில் இருந்து வளர்ந்த ஒற்றை ஒலிவ் மரத்தைக் கொண்டு செய்யப்பட்டது. அந்த மரத்தையே மத்தியில் காலாக கொண்டது. எனது படுக்கையை யார் நகர்த்தமுடியும் என்கிறான் ஒடிசியஸ். வந்தது ஒடிசியஸ் என்பதை பெனிலெப்பை புரிந்து கொள்கிறாள். இருபது வருடங்கள் மறுமணம் முடிக்கத் தயாராக இருந்த மற்றவர்களைப் புறக்கணித்து பெனிலெப்பை காத்திருக்கிறாள். கட்டில் நகர்த்த முடியாதது, பெனிலெப்பையின் அசைக்கமுடியாத காதலையை மட்டுமல்ல அவர்களது காமத்தையும் காட்டுகிறது


பொன்னுருக்கு - அ.முத்துலிங்கம்

.

நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்,  பொன்னுருக்கு சடங்கு கிடையாது என்பது தெரிய வந்தது. பொன்னுருக்கு என்றால் திருமணத்துக்கு முன்னர் செய்யப்படும் சடங்கு. ஆசாரியார் தாலி செய்யும் பொன்னை மாப்பிள்ளை வீட்டில் அவருக்கு முன்னால்  உருக்குவது.
நான் சென்ற பொன்னுருக்கு ரொறொன்ரோவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய ஒரு கல்யாணம்தான். ஒரேயொரு குறை, மணப்பெண் இல்லை. யாழ்ப்பாணத்தில் 50  வருடங்களுக்கு முன்னர் எப்படி பொன்னுருக்கு நடந்ததோ அப்படியே, அதேமாதிரி நுணுக்கங்களுடன் இன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் பத்து மடங்கு தொழில் நுட்ப வசதிகளுடன். மாப்பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்தார்கள். வீடியோவை இன்னொருவர் கவனித்தார். ஸ்கைப்பில் ஜேர்மனியில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகப் பார்த்தார்கள்.
பெண் வீட்டார் பூசைக்குரிய பொருட்களுடன், பெரிய பெரிய தட்டங்களில் பலகாரம் ஏந்தி வந்தார்கள். ஆசாரி வாயு அடுப்பில் மாப்பிள்ளை முன் தாலிப் பொன்னை உருக்கினார். மாப்பிள்ளையின் வேலை சும்மா உட்கார்ந்திருப்பதுதான். உருக்கிய பொன் வட்டமாக வந்ததும் அதை ஒரு தட்டிலே வைத்து பார்வையாளர்களுக்கு ஆசாரியார் அனுப்பினார். எல்லோரும் தொட்டு ஆசி வழங்கினார்கள். இதுதான் நடந்தது. ஆசாரி இதை நீட்டி இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துவிட்டார். இரண்டு வீடியோக்களும் 1200 படங்களும் எடுக்கப்பட்டன.

We Thank YouCanada

.

www.youtube.com
In honor of Canada’s 150th Birthday Minnal Music releases “We Thank You Canada” anthem to reflect the sentiments of the various ethnic cultures. Some of Toro...

பயணியின் பார்வையில் அங்கம் -- 04 - முருகபூபதி

.
கலை, இலக்கிய ஊடகத்துறை  சார்ந்தவர்களுடன் சந்திப்பு
"ஆணவம்  மிஞ்சினால்  கோவணம்தான் மிஞ்சும்"
           
                                                         
இலங்கையில் அதிகாலையிலேயே துயில் எழுந்துவிடும் பழக்கம் வழக்கமாகியதனால் தங்கை வீட்டருகிலிருக்கும் கடற்கரையோரமாக நடந்துவிட்டு, சற்றுத் தொலைவில் எங்கள் ஊர் பீச் என அழைக்கப்படும் கடலோரம் சென்று, பின்னர் கடைத்தெருப்பக்கம் வந்து தமிழ்த் தினசரிப்பத்திரிகையொன்றை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
வீதியோரத்தில் கையில் ஒரு தமிழ்ப்பத்திரிகையுடன் நின்ற ஒரு முதியவர்," ஆணவம் மிஞ்சினால் கோவணம்தான் மிஞ்சும்" எனச்சொன்னது கேட்டது.
அவரது எதுகை மோனையுடனான வசனம் என்னைத்தொடர்ந்து நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தியது. வாழ்வின் தரிசனங்கள்தானே நாம் எழுதும் படைப்புகள்.
அன்றைய காலைத்தரிசனத்திலும் எனக்கு ஒரு கதை கிடைக்கலாம் என்பதனால் அந்த முதியவர் அருகில் வந்தேன்.
அவர் ஆழ்ந்த பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு அருகில் வந்த என்னை உற்றுநோக்கினார். தமது மூக்குக்கண்ணாடியை கீழே தளர்த்திக்கொண்டு, என்னைப்பார்த்துச் சிரித்தார்.
நானும் எமது அவுஸ்திரேலியா பாணியில், " காலை வணக்கம் அய்யா...? எப்படி இருக்கிறீர்கள்...? " என்றேன்.
அவரைப்பொறுத்தவரையில் நான் எமது சொந்த ஊருக்குப்புதுமுகம்.
" நான் நல்ல சுகம் தம்பி. ஆனால்,  எங்கட தமிழ்த்தலைவர்மாருக்குத்தான் நல்ல சுகம் இல்லை." என்றார் அவர்.
" ஏனய்யா...?"


வினை தீர்க்க சிவம் தந்த தமிழ்" இசைத் தகடு வெளியீடு விழா அழைப்பிதழ் 15/07/2017இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்

ஜேர்மனியில் சபாநாயகர் கரு தலைமையில் சம்பந்தன், ஹக்கீம், அநுரகுமார,கயந்த, அமுனுகம

வடக்கு ஆளுநர், முதல்வரை  சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்


யாழ்.பல்கலைக்கழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு

நாட்டின் இனங்கள் யாவும் ஒன்றுபட்ட சமுகமாக வாழ அரசியல் தீர்வு முக்கியம் ; யாழ் .புனித பத்திரிசியார் கல்லூரியில் கர்தினால் மல்கம் றஞ்சித்

சுவிற்சர்லாந்து மாபியா குழுவின் ஒப்பந்தத்துக்கு இணங்கவே வித்தியாவை வன்புணர்ந்து கொன்றோம்


கனவு காணும் உலகம் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்

-->

தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது –

மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர். நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”

ரக்சி நின்றது.

உலகச் செய்திகள்


கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து: 9 பேர் பலி, 28 பேர் மாயம்

புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடக்கம்.!

பாரிஸில் பள்ளிவாசலுக்கு வெளியே வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது - காணொளி இணைப்பு
நாட்டுக்குத் தேவை ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.


 ஒன்றுபட்டால்  உண்டுவாழ்வு 
       ஒற்றுமை அகன்றிடின்
       அனைவர்க்கும் தாழ்வு 
       என்றிடும் வாக்கினை
        மனத்தினில் இருத்தி
       இணைந்திட நினைப்போம்
       ஏற்படும் உயர்வே ! 

       கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
       கூடிடும்போது கூடிடும்வலிமை
       நாடுகள் பிரிந்தால்
       நன்மைகள் உடையும்
       கேடெலாம் சூழ்ந்து
        நாடெலாம் குலையும் 
        குலைவினைத் தடுத்திட
        கூட்டுறவதனை தலையெனக்கொண்டு 
        நிலைபெறச் செய்வோம் ! 

        ஒருமித்து நின்றால்
        உன்னதம் விளையும்
        உடைந்துமே போனால்
        உயர்வெலாம் சரியும் 
        கூடிடும் பொழுதில் 
        குறையெலாம் அகலும்
        கூட்டுற வென்பது 
        நாட்டுக்குத் தேவை ! 

       பொதுநலனை வளர்ப்பதற்கு
       புறப்பட்டு வந்த
       புத்தூக்கம் கூட்டுறவு 
       புதுப்பாதை அன்றோ 
       அதைவளர்க்க பலபேரும்
        ஆண்டாண்டு காலம்
       அயராது உழைத்ததனை 
       அகம்நிறைத்து வைப்போம் ! 

      தனிமனித கூட்டுறவு
      சமுதாய கூட்டுறவு 
      பொருள்விரியக் கூட்டுறவு
      போரகற்றக் கூட்டுறவு 
      கூட்டுறவு எனும்கருத்து
      மொட்டாக இல்லாமல்
      மலர்ந்விடும் வேளைதனில்
      மாவிளைவைத் தந்துநிற்கும் ! 

     பலசபைகள் அமைக்கின்றார்
     பலசட்டம் தீட்டுகிறார்
     உலகசமாதனம் என்று
     உரத்தெல்லாம் உரைக்கின்றார் 
     கலவரமோ நாடெல்லாம்
     கனத்ததீயாய் எழுகிறது 
     கூட்டுறவை வளர்த்திருந்தால் 
     குழப்பங்கள் வந்திராதே !

    ஆதிக்கம் ஆதிகாராம்
    ஆணவத்தால் உலகமெலாம்
    அழிவான பாதைசென்று
    ஆக்கமெலாம் இழக்கிறது 
    கூட்டுறவு எனும்கருத்தை
    நாடெல்லாம் கடைப்பிடித்தால்
    ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
    அடியற்றுப் போகுமன்றோ !
     

தமிழ் சினிமா

வனமகன் 

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சமீபத்தில் பெரும் ஹிட் கொடுத்தவர்.
இருவரின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் வனமகன் வெற்றிப்படமாக இருவருக்கும் கைகொடுக்குமா என பார்ப்போம். வாருங்கள் வனத்திற்குள் செல்வோம்.

கதைக்களம்

அந்தமான் தீவுகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ஜெயம் ரவி கதையின் நாயகன். இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது.
பெரிய தொழிலதிபரின் மகளாக வரும் ஹீரோயின் சாயிஷா தன் அப்பாவின் நண்பரான பிரகாஷ் ராஜின் பராமரிப்பில் வாழ்கிறார். தமிழுக்கு புதிது என்றாலும் கொஞ்சம் கிளாமர், கூடுதல் நடிப்பு என அசத்தியிருக்கிறார். தன் நண்பர்களுடன் அந்தமான் சுற்றுலா செல்லும் போது அங்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.
இதில் எப்படியோ ஜெயம் ரவி மாட்ட இவரை சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். பின் ஜெயம் ரவியின் விஸ்வரூபம் வெளிப்பட ஒரே அமர்க்களம் தான்.
காட்டுவாசியான அவரை எப்படியோ அடக்கி சாயிஷா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். பின் ஹீரோயினுக்கு தெரியாமல் ரகசிய நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட அங்கு நடப்பதே வேறு.
இந்த கலவரத்தில் ஜெயம் ரவி போலிஸ் வலையில் சிக்குகிறார். அவரை போலிஸ் கைப்பற்ற காரணம் என்ன, பழங்குடி இன மக்களின் நிலை என்னானது , ஹீரோ சாரா என்ன ஆனார், சாயிஷாவுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை யார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவியின் நடிப்பு வனமகனாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். கண்கள் மட்டுமல்ல, உடல் மொழியில் அவர் செய்யும் அசைவுகள் காட்டுவாசியென பிரதிபலிக்கிறது. கதைக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.
ஹீரோவை கண்டாலே அலறி ஓடும் ஹீரோயின் ஒரு கட்டத்தில் வாசி வாசியென ஜெயம் ரவியை சுற்றுகிறார். கதை முழுக்க இவரும் பயணம் செய்கிறார். ஒப்பனிங் முதல் எண்டிங் வரை இவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
கும்கி, கடம்பன் என காடுகளை சார்ந்த படங்கள் ஏற்கனவே வந்தாலும் இதில் வித்தியாசத்தை காட்டி தனித்துவம் பெறுகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் மீதான நம்பிக்கையை தளரவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.
காட்டில் தொடங்கி நகரம் சென்று மீண்டும் வனத்தை நோக்கி படை எடுத்து மெசேஜ் சொல்கிறார். காமெடியான தம்பி ராமையா அவருடைய ஸ்டைலை அப்படியே காட்டியிருக்கிறார். இவரும் ஹீரோயினும் சேர்ந்து காமெடி செய்கிறார்கள். ஆனாலும் சில இடங்களில் ரவியால் காமெடிகள் உண்டாகிறது.
படத்தின் வில்லன் யார் என்பது கடைசியில் தான் தெரியும். பிரகாஷ் ராஜ் சில இடங்களில் வந்தாலும் தான் சீனியர் என்பதை நடிப்பில் காட்டியிருக்கிறார்.
ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்த வருண் இந்த படத்தில் ஒரு செகண்ட் ஹீரோ போல. ஆரம்பத்தில் இவர் தான் வில்லனோ என தோன்றும்.

கிளாப்ஸ்

இயக்குனர் விஜய் கதையை கொண்டு சென்றவிதம், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்.
கடைசி வரை வனமகனாகவே வாழ்ந்த ஜெயம் ரவியின் நடிப்பு.
படம் ரிலீஸ்க்கு முன்பே அதிக வாய்ப்புகளை அள்ளிய ஹீரோயின் பற்றி இனி என்ன சொல்ல.
பின்னணி இசையை பன்னீர் போல சரியாக தெளித்திருக்கிறார் ஹாரிஷ் ஜெயராஜ்.

பல்பஸ்

ஒரு இடத்தில் ஹீரோ காட்சியில் லாஜிக் இடிக்கிறது. உங்களுக்கே அது தெரியும்.
கதையை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் முடித்திருக்கலாமே என தோன்றுகிறது.
ஹாரிஷ் ஜெயராஜ் மீதான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
மொத்தத்தில் வனமகன் மண்ணின் மகன் தான். அனைவரும் பார்க்கலாம்.
Direction: 
Music: 

நன்றி Cineulagam


ஜெயம்ரவியின் வனமகன் படத்திலிருந்து தூக்கப்பட்ட காட்சி இதோ