சிட்னியில் துர்க்கை அம்மன் ஆலயத்தின் 6ம் திருவிழா

.
சிட்னியில் துர்க்கை அம்மன் ஆலயத்தின் 6ம் திருவிழா சென்ற திங்கட்கிழமை மக்கள் நிறைந்த திருவிழாவாக காணப்பட்டது. துர்கை அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்ட தண்டிகையில் வீதி உலா வரும் அழகிய காட்சியும் மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியையும் காண்கிறோம்.

பேர்த் நகருக்கு அருகே பரவி வந்த காட்டுத் தீ

.
பேர்த் நகருக்கு அருகே பரவி  வந்த  காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 40 வீடுகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பேர்த் நகரின் கிழக்கேயும் வடக்கேயும் ஏற்பட்டுள்ள இரு காட்டுத் தீ அனர்த்தங்க ளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் மும்ரமாக ஈடுபட்டனர்.

இக்காட்டுத்தீயையடுத்து நூற்றுக்கணக் கான மக்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

துர்க்கா தேவி அறிவுத்திறன் போட்டி 2010 இற்கான பரிசளிப்பு


.
துர்க்கா தேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 2010 இற்கான பரிசளிப்பு விழா 11.02.2011 மாலை 7.30 மணிக்கு தேவஸ்தானத்தில் இடம் பெற்றது. திருவிழாக் காலம் என்றபடியால் பக்தர்கள் நிறைந்த மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. விசேட அழைபை;பின் பேரில்வருகை தந்திருந்த நியூசவுத்வேல்ஸ் மானில பாராளுமன்ற உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ பாபரா பெரி அவர்கள் விசேட உரையாற்றியதோடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி குழந்தைகளை கௌரவித்தார். அறிவுப்போட்டி குழு உறுப்பினர் செ.பாஸ்கரனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் ஆலய தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.

வாசகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.

.
14.02.2011


பூக்கள் விசித்தழும் மாலை - எம்.ரிஷான் ஷெரீப்,


.
                எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை.

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்


.

சிட்னியில் துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்
3ம் திருவிழா சென்ற வெள்ளிக்கிழமை மக்கள் நிறைந்த திருவிழாவாக காணப்பட்டது. 3 தேவியர்கள் அலங்கரிக்கப்பட்ட தண்டிகையில் வீதி உலா வரும் அழகிய காட்சியும் மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியையும் காண்கிறோம். 



இலங்கையில் அரசியலும் வெள்ளப் பெருக்கும்

.
இலங்கையில் 18 மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கினால் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் இருதடவைகள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடந்த வாரத்தைய அனர்த்தமே மக்களுக்கு மிகவும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உடனடி உறைவிட, உணவு மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக சர்வதேச சமூகத்தின் அவசர உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. முதற்தடவை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த மக்களை மீண்டும் வந்து வெள்ளம் அவலத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடிய ஆபத்து இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அபாயச் சங்கு ஊதிக்கொண்டேயிருக்கிறது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் கூட உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற நினைப்பு அரசாங்கத்துக்கு வருவதாக இல்லை.

ஐங்குறுநூறு தரும் காதல் சுவை -பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா-

.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களிலே ஐங்குறுநூறு என்பதுவும் ஒன்று.

ஐங்குறுநூறு என்பது குறைந்த வரிகளைக்கொண்ட 500 பாடல்களின் தொகுப்பாகும்

இந்த நூல் எழுதப்பட்டமையைக் கூறும் வரலாற்றுச்செய்தியொன்று உள்ளது. முடியுடை மூவேந்தர்களிலே, கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் கடைச்சங்ககாலத்திலே ஆட்சியிலிருந்தவர்களில் ஒருவன்.

எல்லாம் மாயா - சிறுகதை


                           கோமதி நடராஜன்

”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே...”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார்.
”ஒண்ணுமில்லீங்க ...கொஞ்சநாளா உடம்பு முடியலை...வேலையே ஓட மாட்டேங்குது...”
”வயசாச்சு இல்லையா அப்படித்தான்...”
”அப்படி என்ன வயசாச்சு...”
இதான் இந்த பொம்பளைங்களுக்கே உண்டான ஒவ்வாமை..
அது என்ன ஒவ்வாமை
ஒத்துக்கொள்ளாதத் தனம்..
போதும் போதும் அங்கே போயும் உங்க தமிழ் வாத்தியார் பேச்சை விடலையா...
ஊனோடு கலந்திருந்தா போகும் .,இது உயிரோடு கலந்ததாச்சே, எப்படிப் போகும்?

காதலர் தினம் - நாஞ்சில் நாடன்


.
 ன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என அடியார் கூட்டம் இறைவனைப் பாடியது உண்டு. ‘பொய் படாக் காதல் ததும்பி மேற் பொங்கிற்று’ என்பது திருஅருட்பா. தசரதன் மனைவி, இலக்குவன் தாயார், சுமத்திரை, ‘மா காதல் இராமன் அம்மன்னவன்’ என்று குறிப்பிடுவாள்.

சிட்னி அம்மன் கோயில் திருவிழா

.



அலங்கார உற்சவம் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா 09-02-11 முதல் 19-02-11 வரை விநாயகர், நடராஜர், ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் கோவில் கொண்டுள்ள துர்க்கா தேவியர்க்கு அம்பிகையின் தெய்வீகமான திருநாட்களில் மேன்மையான மாசி மக நன்னாளான 18-02-11ஜ அம்பாளின் தீர்த்த உற்சவமாக கொண்டு 09-02-11 முதல் 19-02-11 வரை 12 நாட்கள் தினமும் மாலை அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடை பெறுகின்றது 

முக நூலின் இன்னொரு முகம்! - பூலியன்

.
பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.

சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.

குருடர்களின் யானை- எஸ். சந்திரமௌலி



.
அத்தியாயம் 20

லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப் பகுதிக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பேட்டி காண விரும்பினோம். அவரும் சம்மதித்தார். ஆழ்வார்ப்பேட்டை (இன்றைய)  டி.டி.கே. சாலையில் இருந்த அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அந்த இடத்துக்கு ஜெயகாந்தன் சூட்டியிருந்த செல்லப் பெயர் ’மடம்’. எழுத்தாளர் ம. வே. சிவகுமாரிடம் கேட்டால் தனது மடத்து அனுபவங்களை மணிக்கணக்கில் சொல்லுவார்.
அந்தப் பேட்டியில் நாங்கள் கேட்ட ஒரு கேள்வி, “உங்கள் முதல் கதையை அச்சில் பார்த்தபோது எப்படி இருந்தது?” அதற்கு ஜே.கே.வின் பதில், “என் எழுத்தை அச்சில் பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது.”

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது - பரிந்துரைக்கான அழைப்பு

.
தமிழ் இலக்கியத் தோட்டம்

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

தமிழ் சினிமா

.
தூங்கா நகரம்

நட்புக்குள் துரோகத்தை சொன்னது சுப்ரமணியபுரம். துரோகமில்லா நட்பை சொல்கிறது தூங்கா நகரம். இனி மதுரை தொடர்பான எந்த படத்தை பார்க்க போவதற்கு முன்பும் பிளட் டொனெட் செய்துவிட்டு போவது நலம். எல்லாம் ஒரு பேலன்சுக்காகதான்!

வெவ்வேறு தொழில் செய்யும் நாலு வாலிபர்கள். 'புனிதமான' ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். வாந்திக்கும் இரைச்சலுக்கும் நடுவில் இறுக்கமாகிற அவர்கள் நட்பு ஒரு கொலை வரைக்கும் செல்கிறது என்பதுதான் கதை.

தேவாரம் , திருமுறை பாடல்கள்

தேவாரம் திருவாசகம் திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யவும் வாசிக்கவும் ஒளியாக காணவும்  பின்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதில் 63 நாயன் மார்களின் சரிதம். தேவாரம் என்பன உள்ளன.
தொடர்ந்து பாவிப்பதற்கு இடது பக்கம் உள்ள இணையச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம்.


இலங்கை பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க அரசு நடவடிக்கை

.
இலங்கை நாட்டில் என்றும் இல்லாதவாறு பெரும் பொருள் இழப்பையும், பயிர்களுக்கு அழிவையும் ஏற்படுத்திய பெரு வெள்ளம் இப்போது, மக்களின் வாழ்க்கையிலும் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவல நிலைக்கு அவர் களை தள்ளியுள்ளது.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சகல நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், காலநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றமையால், அரசாங்கத்திற்கு கூட இந்த வெள்ள அனர் த்தத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடையலாம் என்று, காலநிலை அவதானிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
1. துய்மை

மாணவர்கள் ஒரு முக்கியமான பண்பினைப் பற்றி மிகமிகக் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் து}ய்மை! புறத்து}ய்மை, அகத்து}ய்மை. இவற்றில் எது ஒன்று இல்லாமற் போனாலும் அவர் எந்தவிதச் செயலுக்கும் பயன்படாது வீணாகிப் போவார்.

2. வித்யார்த்தி – விஷயார்த்தி

ஒரு ‘வித்யார்த்தி’ ஆகிய மாணவன் ‘விஷயார்த்தி’ ஆக ஆகிவிடக்கூடாது!. (வித்யார்த்தி – அறிவைத் தேடுபவன், விஷயார்த்தி – புலன் இன்பங்களைத் தேடுபவன்.)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 6 - 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது.

.
புதிய அணித்தலைவருடன் தொடரின் 7 ஆவது போட்டியையும் தன்வசப்படுத்திய அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் டுக்கு இங்கிலாந்துக்கு பதில் கூறும் வகை யில் ஒருநாள் தொடரை 6        1 என கைப்பற்றி மீண்டும் தன்பலத்தினை நிரூபித்துள்ளது.

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் 7 ஆவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி  பேர்த்தில் நடைபெற்றது. இதில்  தலைவரான கமெரன் வையிற்றுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்ததாட களமிறங்கியது. அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றுக் கொண்டது.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
இத்தொடரின் 10ம் பகுதி  இவ்வாரம் இடம்பெறவில்லை அடுத்த வாரம் தொடரும் என்பதை அறியத் தருகிறோம்.

எனது இலங்கைப் பயணம் - பகுதி 9


இப்போது நாங்கள் முல்லைத்தீவை நோக்கி செல்கின்றோம். இயல்பாகவே மனதில் ஒரு நெருடல் சேர்ந்து கொள்கிறது. முல்லைத்தீவை நன்கு தெரிந்த வாகன ஓட்டி, அவருடன் இன்னொரு உதவியாளர், மற்றும் நாங்கள். முதலிலேயே வற்றாப்பழை அம்மன் கோவிலுக்கு செல்வதாகத்தான் எவர் கேட்டாலும் சொல்வதென திட்டமிட்டுக்கொண்டு செல்கின்றோம். முல்லைத்தீவு வீதியில் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு,  நாங்கள் செல்லுமிடம் பற்றி கேட்டுக்கொண்டு பதிந்துவிட்டு செல்ல அனுமதிக்கின்றார்கள். மீண்டும் ஒரு தடை முகாம் வருகின்றது அதில்நிறுத்தி எங்கள் பயணம் பற்றி கேட்டுவிட்டு தொடர்ந்து பிரதான சாலையில் செல்ல முடியாது ஜனாதிதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச இன்று இந்த வீதியில் முல்லைத்தீவு செல்லுகின்றார் ஆகவே உள் பாதையால் சென்று மீண்டும் பிரதான வீதியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று இராணுவத்தினர் கேட்கின்றார்கள்.

பிரிட்டன் தீவிபத்தில் இறந்த இருவரும் இலங்கைப் பெண்கள்


.
பிரிட்டனில் டெப்ற்போட் பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த இரு பெண்கள் இலங்கைப் பிரஜைகள் என்று பிரிட்டிஷ் பொலிஸார் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

குணாளினி அழகரெட்ணம் (42 வயது), சந்திரõபதி தர்மலிங்கம் (59 வயது) ஆகிய இருவருமே இறந்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையிலிருந்து இவர்கள் இருவரும் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோதே தீவிபத்தில் சிக்கியுள்ளனர்.