பெண்முன்னேற்றம்

.
அஞ்சறைப் பெட்டிக்குள்
அடைந்துபோன உணர்வுகள்
அடுக்களைக்குள் முடங்கிய
அடிமைத்தன வாழ்க்கை!

வடித்திடும் சோற்றுநீரும்
வடிந்திடும் கண்ணீரும்
ஒன்றாகிப் போய்விட்ட
ஒற்றையடிப் பாதைகள்!

சேலையின் தலைப்போடு
செருகிவைத்த ஆசைகள்!
கானலின் நீராக
கலைந்துபோன கனவுகள்!

ஏரெடுத்தும் பாராமல்
ஏடெடுத்தும் படிக்காமல்
புகைக்குள் மறைந்திட்ட
பொறுமையான பெண்கள்!

Invitation to all the friends and relatives of late Dr M Vannitamby

.

பவளவிழா நாயகன் ஞானசேகரன் (கடந்தவாரத் தொடர்ச்சி) மறுமலர்ச்சி காலத்திலிருந்து புகலிட இலக்கிய காலம் வரையில் ஆவணப்படுத்திய ஞானம் புனைவிலக்கியத்திலிருந்து இதழாசிரியரான ஞானசேகரன் இழந்ததும் பெற்றதும் முருகபூபதி



ஈழகேசரி  பொன்னையா,  தேசபக்தன்  நடேசய்யர்,  செய்தி  நாகலிங்கம்,  சிரித்திரன்  சிவஞானசுந்தரம், மல்லிகை  ஜீவா,  குமரன் கணேசலிங்கன்இளம்பிறை  ரஃமான்,  எழுத்து  செல்லப்பா,  தீபம் பார்த்தசாரதி,   சரஸ்வதி   விஜயபாஸ்கரன்,   கலைமகள்  ஜகந்நாதன், கல்கி   கிருஷ்ணமூர்த்தி,   இதயம்பேசுகிறது  மணியன்  இவ்வாறு இதழ்   ஆசிரியர்களின்  ஒரு  பட்டியலை  எழுதினால் --  இவர்களில் சிலர்   ஆக்க  இலக்கியம்  படைத்த   படைப்பாளிகள்தான்   என்பதையும் நாம்   மறந்துவிடுவதற்கில்லை.
அவர்களால்  தொடங்கப்பட்ட  இதழ்களினால்  அவர்கள்  அவ்வாறு பிற்காலத்தில்  அழைக்கப்பட்டனர்.   இன்று  அவர்களின்   வரிசையில் இணைந்துகொண்டார்,   முன்னர்   சிறுகதைகளும்  நாவல்களும், குறுநாவலும்   எழுதிய  ஆக்க   இலக்கிய கர்த்தா  ஞானசேகரன்.
இங்கு   பதிவுசெய்யும்   முக்கியமான   இரண்டு  இலக்கிய ஆளுமைகளுக்கு  என்ன   நடந்ததோ,   அதே  தற்பொழுது ஞானசேகரனுக்கும்   ஞானம்  இதழைத்தொடங்கிய   பின்னர் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில்   புதுமைப்பித்தனின்   நண்பர்  தொ.மு.சி. ரகுநாதன் தொடக்கத்தில்  பல  சிறுகதைகள்  எழுதியவர்.   சேற்றில்  மலர்ந்த செந்தாமரை , க்ஷணப்பித்தம் , சுதர்மம் ,  ரகுநாதன் கதைகள்  முதலான சிறுகதைத்தொகுதிகளையும்  சில  கவிதைத்தொகுப்புகளையும்  புயல்,  முதலிரவு,   பஞ்சும் பசியும்   ஆகிய   நாவல்களையும்  சில நாடக  நூல்களையும்  எழுதியவர்.   பின்னாளில்  சாந்தி  என்ற   மாத இதழை  தொடக்கினார்.

குதித்தெழுந்து வாருங்கள் ! எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா



          

             படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்
             அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்
             குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்
             அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !

             குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்
             அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்
             பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்
             எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !

             அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்
             ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்
             என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது
             ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !

            கொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்
            நிலைகெட்டுத் தடுமாறி    நீசராய்   மாறிடுவார்
            வெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து
            வேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் !

மெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.

.
மெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.


மெல்பேண் பேசின் என்ற இடத்தில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமான் ஆலயத்தில் மகோற்சவத் திருவிழா கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பாகியது. இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறித்து நிற்கின்ற இந்த மகோற்சவகாலங்களில் இறைவழிபாடு எமது ஆன்ம ஈடேற்றத்திற்கு முக்கியமாகும். கடந்த சனிக்கிழமை 23.04.2016 காலை மூலஸ்த்தான ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகருக்கும், சுற்றுப் பிரகார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்புப் பூசைகள், தீபாராதனை, வேதபாராயணம், தேவபாராயணம் நடைபெற்றது. யாகசாலையில் பூசை நடைபெற்ற பின்னர் எழுந்தருளியாகக் கோலங்கொண்ட ஆனைமுகன் பஞ்சமுகப் பெருமான் அடியார்கள் புடைசூழ உள்வீதி உலா வந்ததைத் தொடர்ந்து விசேட நாதஸ்வர, தாளவாத்தியங்கள், இசைக்க, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய பக்தர்களின் அரோகரா ஒசையுடன், சிவாச்சாரியார்களின் வேதங்கள்  ஒலிக்க அழகுற அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் வேழமுகத்தோன் பஞ்சமுகப் பெருமான் ஆரோகணிக்கப் பெற்றார். பிள்ளையாரின் உலாவிற்குப் பின்னால் பெண் அடியார்கள் அடி அழித்த வண்ணம் வந்தார்கள்.

பிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள் “ கவிதை நூல் வெளியீட்டு விழா.

.



மெல்பேணில் கோலாகலமாகவும் உணர்வோடும் நடந்தேறிய
பிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள் “ கவிதை நூல் வெளியீட்டு விழா.

மெல்பேண் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் கடந்த மாதம் 28.03.2016 திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உணர்வுகள் நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது.
ஸ்ரீமதி சாந்திசர்மா, ஸ்ரீமதி சுந்தரம்பாள், ஸ்ரீமதி தேவகி, ஸ்ரீமதி கௌசல்யா, ஸ்ரீமதி மங்களம் ஆகியோரின் மங்கள விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. கடவுள் வாழ்த்துப் பாடலை செல்வி.ஆகர்ஷணா சாயி ஜீவானந்தக்குருக்கள், செல்வி.பிரவர்த்திகா சாயி ஜீவானந்தக்குருக்கள், ஆகிய இரு பிள்ளைகளின் மழலை மொழியில் கேட்டிருந்தோம். மழலைத் தமிழை நன்கு அழகாக உச்சரித்திருந்தார்கள்.
தமிழ் வாழ்த்துப் பாடலை ஸ்ரீமதி ஜனனி அபர்ணாசுத சர்மா அவர்கள் பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்னிசை அமுதம் நிகழ்ச்சியை செல்வி.அபிதாரணி சந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார். மெல்பேண் சிறுவர்கள் எவ்வளவு தூரம் தமிழை நன்கு உச்சரிபோடு பேசுகின்றார்கள், பண்ணோடு இசைக்கின்றார்கள் என்பதை பல மேடைகளில் பார்த்திருக்கின்றேன். அந்த வகையில் எமது பிள்ளைகள் அதற்கு குறையில்லாமல் இனிய குரலில் தமிழால் தமிழுக்கு அழகு சேர்த்திருந்தார்கள்.

கவி விதை - 14 நாயிற் கடையாய்க் கிடந்து....... -- விழி மைந்தன் --


சின்னஞ்சிறு கிராமந்தான் அது. ஆனால், உலகத்துச் செல்வங்கள் எல்லாம் கொட்டிக் கிடந்த கிராமம்.

பொன்னை அள்ளிச் சொரிந்தன, பூத்துக் குலுங்கிய கொன்றை மரங்கள்.

வெள்ளிப் பந்தல் போட்டன, வேலியில்  படர்ந்த முல்லைச் செடிகள்.

மாணிக்கக் கம்பளம் விரித்தன, காற்றில் அசைந்த கடம்ப மரங்கள்.

மரகதப் போர்வை போர்த்தின, வயலில் விளைந்த பச்சைப் பயிர்கள்.

பொன்னையும் வெள்ளியையும் மாணிக்கத்தையும் மரகதத்தையும் கொடுத்துப் பெற முடியாத செல்வமும் இருந்தது அங்கே -  அது அந்தக் கிராமத்து மக்களின் மனங்களில் இருந்த நிறைவு.

கருப்புத் தங்கம் மிளகு பேராசிரியர் கே. ராஜு

.



     ஒரு காலத்தில்  தங்கத்திற்கு ஈடான  மதிப்புமிக்க பொருளாக மிளகு கருதப்பட்டது. உலகில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்ட நறுமணப் பொருளாகவும் அது இருந்தது. தென்னிந்தியாவின் மலபார் கடற்கரையோரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மிளகு நறுமணப் பொருட்களில்  மிகப் பழமையானது. ஆனால் கி.மு. 1000 ஆண்டுவாக்கில்தான் அது பயிரிட்டு வளர்க்கப்படும் பொருளாக மாறியது. கி.மு. 4000 ஆண்டிலேயே கிரேக்கர்கள் மிளகைப் பற்றி அறிந்திருந்தாலும் மிக விலை உயர்ந்த பொருளாக இருந்ததால் பணக்காரர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த முடிந்தது! மலேசியாவிலும் தென் தாய்லாந்திலும் மிளகு பயிரிடப்பட்டாலும் மத்திய காலம் முடியும் வரை மிளகின் முக்கியமான பிறப்பிடமாக இந்தியாவே இருந்தது. தென்னிந்தியாவில் பரவலாக அது பயிரிடப்பட்டது. தற்போது வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிளகை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன. அதன் கவர்ந்திழுக்கும் வாசனைக்காகவும் மருத்துவ குணத்திற்காகவும் மிளகு பல்லாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உலகம் முழுதும் எல்லாவிதமான சமையல் முறைகளிலும் சேர்க்கப்படும் நறுமணப் பொருட்களில் மிளகுக்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு. நவீன சமையலிலும் மிளகும் உப்பும் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள்


ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள் எதிர் வரும் ஆனி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150 ல் நடைபெற உள்ளது.

18 வயதிற்குட்பட்ட தமிழ்ச் சிறார்களும் இளைஞர்களும் ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த பேச்சு இசை போட்டிகளில் பங்குபற்றலாம்.
விண்ணப்பங்களை  http://competition.etatamilschool.org/#/home  
அல்லது competition@etatamilschool.org எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பமுடிவுதிகதி: 8th May 2016.

போட்டி குறித்த மேலதிக விபரங்க ளிற்கு...................

Thirunavukkarasar( Appar) Guru Pooja

.
Sri Venkateswara Temple Association Inc.
Temple Road, Helensburgh, NSW 2508, Australia
Telephone :  (02) 4294 3224 (Please call between 19.30 to 21.30 hours)
Webpage: http://www.svtsydney.org                    Email: secretary@svtsydney.org

Om Nama Shivaaya





பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி

Thirunavukkarasar( Appar) Guru Pooja

All devotees are invited to attend this program and to participate in ‘Thevaram’ chanting. A copy of ‘Thirumurai’ book for chanting will be made available.
Devotees may participate in the whole programme or a part thereof at their own convenience.

Date:      08- 05-2015 - SUNDAY
Venue:   Shiva Temple complex

8:30 am:       Abhishekam, alankaram and maha deeparadhana  for Niruthi Valampuri Ganapathy followed by abhishekam for Moolavar & panchaloka  idols of Thirunavukkaasar( Appar).
Chanting of Appar’s Thevaram.

12:30 pm:  Special Pooja for Appar’s panchaloka idol and procession within Siva complex
        Followed by Maha deeparathana

Om Nama Shivaaya






இலங்கைச் செய்திகள்


சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்


திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.?

 ''மக­னுடன் பேசமுற்­பட்­ட­போது இரா­ணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்­குழு முன் தாயார் கதறல் 

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்

சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் கைது 

இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்த கண­வனை மீட்­ப­தற்கு பல­ரிடம் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்தேன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.  

கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ

மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?

 முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் கைது தொடர்பில் ஆரா­யப்­படும் : சூழ்ச்­சி மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அனுமதியேன்

கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.!

அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்:  கண்ணீருடன் தாய் சாட்சியம்







சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்



வசந்த மாலை 2016 - சிட்னி தமிழ் அறிவகம்



சிட்னியில் சித்திரைத் திருவிழா 5ம் ஆண்டு 08 05 2016

.











உலகச் செய்திகள்


மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு

துருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்

ஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.!

சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி

அறிந்­து­கொள்ள தன்­னந்­த­னியே பய­ணச்­சீட்­டின்றி விமா­னத்தில் பய­ணித்த 11 வயது ரஷ்ய சிறுமி






மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு


தமிழ் சினிமா


வெற்றிவேல்




தாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம்.
அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும்வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெற்றிவேல்.

கதைக்களம்

சசிகுமாரும், ஆனந்த் நாக்கும் (ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியை திருமணம் செய்வாரே, அவரே தான்) அண்ணன், தம்பிகள். சசிக்கு படிப்பு வராமல் ஆசிரியரான அப்பா இளவரசிடம் திட்டு வாங்கிக்கொண்டே விவசாயத்திற்கு தேவையான உரம் வியாபாரம் பார்க்கின்றார். அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ என்ன செய்வார்களோ அதேபோல் மியா ஜார்ஜை காதலித்து டூயட்டும் பாடி வருகிறார்.
இவரின் தம்பி ஆனந்த் பக்கத்து ஊர் பெண் வருஷாவைகாதலிக்கின்றார். வருஷா அந்த ஊர் தலைவர் பிரபுவின் மகள், இருந்தாலும் தம்பி விரும்பிவிட்டான் என்ற காரணத்திற்காக வருஷாவை தன் நண்பர்கள் உதவியுடன் கடத்தும் சமயத்தில் ஆள் மாற்றி நிகிலாவை கடத்துகிறார்கள்.
இதனால் நிகிலாவின் அப்பா தன் மகள் ஓடிப்போயிட்டாள் என ஊர் சொல்வதை கேட்கமுடியாமல் இறக்க சசி வேறு வழியில்லாமல் தன் காதலியான மியா ஜார்ஜை மறந்து நிகிலாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.
இருந்தாலும் தன் தம்பி விரும்பிய பெண்ணை எப்படியாவது அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் சசி கிளம்ப, பிரபு ஜாதி, கௌரவம் பார்த்து உடனே தன் தங்கை மகனுக்கு வருஷாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இது தான் சமயம் என பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பரம்பரை பகை காரணமாக அண்ணனை பழிவாங்க இந்த திருமணத்திற்கு சம்மதிக்க இறுதியில் வருஷா யாரை திருமணம் செய்துக்கொண்டார், சசி தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.
மியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.
படத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோரையும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது? விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.
படத்தின் ஹைலைட் நாடோடிகள் டீம் ஒரு காட்சியில் ரிட்டர்ன் ஆவது தான். அவர்கள் பெண்ணை தூக்க வரும் இடத்தில் செய்யும் கலாட்டா தியேட்டரில் அரை மணி நேரத்திற்கு சிரிப்பு சத்தம் தான். டி. இமான்இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.

க்ளாப்ஸ்

சசிகுமார் தன் வழக்கமான நடிப்பிற்கு திரும்பியுள்ளது.
தம்பி ராமையா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர் வரும் காட்சி கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.
படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.
வசந்த மணியின் வசனங்கள், அதுவும் தற்போதுள்ள கிராம புற குடும்ப வாழ்க்கையில் பேசப்படும் இயல்பான வசனங்களாக ஈர்க்கின்றது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் அத்தனை வேகத்தை காட்டிய வசந்தமணி இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் தடுமாறுகிறார்.
யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ”வெற்றி”வேல் இவர்.

ரேட்டிங்- 2.75/5   நன்றி cineulagam