மரண அறிவித்தல்



அமரர்  வைத்தியகலாநிதி  பாக்கியலட்சுமி சின்னையா

08-12-1926       -        08-04-2013

யாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், லண்டனில் நீண்ட காலம் வசித்தவரும் தற்போது  சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட வைத்தியகலாநிதி  பாக்கியலட்சுமி சின்னையா  ஏப்ரல்  மாதம் 8ம் திகதி அதி காலை சிவபதமடைந்தார்.

இவர்  காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி சின்னையா ஆகியோரின் அன்புத் தங்கையும்,  கமலநாயகி பிரணவநாதனின் அன்பு அக்காவும் ஆவர்.  

இவர்,  கலாநிதி ஸ்ரீகாந்தன்(கனடா), வைத்தியகலாநிதி  கௌரி சேது(இந்தியா), வைத்தியகலாநிதி  ஹைமா மயில்வாகனம்(நோர்வே), கலாநிதி திருஆருரன்(இலண்டன்), காலம்சென்ற ஐயந்தன், அரவிந்தன்(சிட்னி) ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்   , காயத்திரி சுரேந்திரா(பிரிஸ்பேன்),  சற்குமரன்(சிட்னி), மாயத்திரி அரவிந்தன்(சிட்னி),  ஆகியோரின் அன்பு  மாமியும், மயூரன், லோஜனா கருணாசலதேவா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்  ஆவர்.  




Viewing

Date: 09 /04/2013 Tuesday
Time: 7pm - 9pm
Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn

Final Rites
Date: 10 /04/2013 Wednesday
Time: 9.30am
Venue:15 Heather St., Giraween NSW 2145

Cremation
Date: 10 /04/2013 Wednesday
Time: 12.30pm
Venue: Rookwood Cemetery South  Chapel

தொடர்புகள்:  சற்குமரன் (02) 96312920; 0407108372; மயூரன் (02) 96437581; 0409424362

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2013

.

தமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு எமது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
                                                        14 .04 2013 



நினைவுகளின் சிதறல்கள் - கவிதை - செ.பாஸ்கரன்


.



மூடாத விழிகள்
உயிரற்ர ஓவியம்
பழுப்பிலையின் மஞ்சள்
தூரத்தே தெரியும் வானம்
இவையில் என் மனம் லயிக்கும்

அதிகாலை பறவைகளின் ஆரவாரம்
போர்வையின் விலகல்
மெல்லிய குளிரின் உரசல்
ஒலிக்கும் மனைவியின் பாதக்கொலுசு
சுகமான நெஞ்சின் பதிவுகள்

கொட்டும் மழையின் சந்தம்
ஊதல் காற்றின் உளறல்
சிறகுலர்த்த சிலிர்க்கும் பறவை
ஒற்றை மரத்தின் கருக்குருவி
உன்னோடு ஒட்டி நடந்த மாலைப்பொழுது
நெஞ்சைக் கிளறும் நினைவுகள்

நிலா ஒழுகும் இரவு
முற்றத்துக் கயிற்றுக் கட்டில்
அப்பாவின் சந்திரமதி புராணக் கதை
சுற்றியிருந்த உடன் பிறப்புகள்
மறக்கமுடியாது மனதில் பதிந்தவை

வாழ்வின் பயணத்தில் மாறிமாறி
வந்து போகும் நினைவுகளோடு
என் வாழ்க்கையும் பயணிக்கிறது
நினைவுகளின் சிதறல்களே
வாழ்வின் நம்பிக்கைகளாக
நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 26வது ஆண்டு நிறைவுக் கலைவிழா



ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தனது 26வது ஆண்டு நிறைவுக் கலைவிழாவை கலாநிதி அனுஷியா கண்ணன் தலைமையில் கடந்த சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 6ம் திகதி பாகாய்  மண்டபத்தில் மாலை 5.30 மணி தொடக்கம் மிக சிறப்பாகக்  கொண்டாடியது    இவ்விழாவில் மாணவர்களின் பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 


படப்பிடிப்பு - தமிழ்முரசு படப்பிடிப்பாளர்


சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற் கானமழை 2013


.
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்


சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் அமர்ந்து அருளாட்சி நல்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மார்ச் மாதம் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை விநாயகர் அனுக்ஞையுடன் ஆரம்பமாகியது.  இந்த மகோற்சவத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளம் கலைஞர்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் பொழிந்த கானமழையில் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நனைந்து நனைந்து திளைத்து ஊறிய ஈரம் இன்னும் காயவில்லை.  அந்த இனிமையின் தூறல்கள் இன்னும் ஓயவில்லை.

தமிழ் புது வருடப்பிறப்பு 14 .04 2013






முருகன் புகழ் மாலை - டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் -


.
சிட்னி வழக்கறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் எழுதியுள்ள முருகன் புகழ் மாலை’ பாடல் இசைத் தகடு அபயகரம்  நிதிக்காக சோமா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது
 சிட்னி வைகாசிக் குன்றத்து  முருகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி , அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, ஆரத்தி காட்டி, ஊஞ்சலாட்டி, பின் வேண்டுதல் செய்து தாலாட்டி தூங்க வைப்பதாக இந்த இசைத் தகட்டின் பாடல்கள் அமைந்துள்ளன. முருகன் மீதான ஏழு பாடல்கள் முருகன் புகழ் மாலை எனப் பெயரிடப்பட்டு வெளி வந்திருக்கும் இந்த இசைத் தகட்டில் பதிவாகி உள்ளன.  மிக அழகிய ராகங்களான சங்கராபரணம்,    புன்னாக வராளி, குறிஞ்சி, ஆனந்த பைரவி, ராகமாலிகா போன்ற ராகங்களில் பாடல்கள் அமைந்துள்ளன. காதுக்கு இனிமையான குரலும் , செறிந்த தமிழ் வளமும் கொண்ட பாடல்கள் முருக பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 59 “கொக்கு”


ஞானா:        இண்டைக்கு என்ரை அப்பாவை ஒரு மடக்கு மடக்காமல் விடுறேல்லை. இப்பிடியே அவரை         வெண்டுகொண்டு போக விட்டால், அவருக்கும் தலைக் கனப்புப் பிடிச்சிடும். தன்னை விட்ட        ஆள் இல்லை எண்ட நினைப்பு வந்திடும.

சுந்தரி:        ஆருக்கு என்ன நினைப்பு வந்திடும் ஞானா?

ஞானா:   
    வாருங்கோ அம்மா…..எங்கடை அப்பாவைப் பற்றித்தான் நினைச்சனான் அம்மா. அவர் எந்த        நாளும் அதை இதைச் சொல்லி எங்களை மட்டம்தட்டிப் போடிறார். இப்பிடியே விட்டால்             ஆளுக்குத் தன்னை விட்ட ஆளில்லை எண்ட நினைப்பு வந்திடும் எண்டுதான் யோசிக்கிறன்.

சுந்தரி: 
       நீ ஏன் ஞானா அவரை அப்பிடி நினைக்கிறாய் அவர் நல்ல மனிசன். தனக்குத் தெரிஞ்சதைச்        சொல்லிறார்.

ஞானா:        நீங்கள் விடுவியளே. கல்லெண்டாலும் கணவன் புல்லெண்டாலும் புருஷன் எண்டு நிக்கிற            கூட்டந்தானே நீங்கள். இண்டைக்கு விடுறனோ பாருங்கோ…….

காலமும் கணங்களும் இலக்கிய உலகில் ஒரு யோகி கே.கணேஷ்

.

                                                 முருகபூபதி

பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப்பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச்சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன்.
மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.


  உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
   உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
   மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
   மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்

சிறுகதை - சாப்பாடு - எஸ்.கிருஷ்ணமூர்த்தி


       
ஐம்பது வருட நண்பன் அவன், முப்பது வருடங்களாக அவனைச் நேரில் சந்திக்கவில்லை. பெயர் குமரன். நான் விடுமுறையில் சுவிஸ்சில் இருந்து மெல்பேண் வந்து எனது உறவினரது வீட்டில் தங்கியிருக்கிறேன். அவுஸ்திரேலியா வந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. இந்த நான்கு நாட்களில் பத்துத்தடவை போனில் என்னைக் கூப்பிட்டு வீட்டுக்கு வா என அழைத்தான். அவன் இப்போது பலநாட்டுச் சாப்பாடு நன்றாகச் சமைப்பதாக சொன்னான்.  தான் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டபின் வாழ்கையில் இப்பிடி ஒரு சாப்பாட்டைச் சாப்பிடவில்லைஎனச் சொல்வாய் என்றான்.

‘ஏன் அவ்வளவு மோசமா?’ கேட்டேன் கேலியாக.

‘நீ இன்னும்மாறவில்லை, கிண்டல் உனது இரத்தத்துடன் ஒட்டியுள்ளது.’ அவனது பதில்,

‘நீ மட்டும் மாறிட்டியா? சாப்பாடு ஆசை இன்னும் தீரவில்லை.’ நான் திருப்பிப்போட்டேன்.

குட்டிக் கவிதைகள் - மு.கோபி சரபோஜி


.


கடைசி பந்தமும்
கை கழுவியது.
உதிர்ந்து விழும் பழுத்த இலை.
---------------------------
பறவைகளும் பழகிவிட்டன
மாற்றங்களுக்கு.
மின்கம்பத்தில் கூடு.
------------------
ஏந்தி செல்கிறது
நிர்வாணத்தை.
ஆடை.
------------

உயிரற்ற சிலை
உயிர் பெறுகிறது.
கர்ப்பகிரகம்.
------------
இழுக்க,இழுக்க
சுருங்குகிறது.
புகைப்பவனின் வாழ்வு.
--------------------
உரிக்கும் வரை
பொக்கிஷம்.
சுரண்டல் பரிசுசீட்டு.
----------------
வாய்ப்புகளே இல்லாத
விளையாட்டு.
திருமணம்.
------------
மு.கோபி சரபோஜி
இராமநாதபுரம் / தமிழ்நாடு

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

கிளிநொச்சி தமிழ்க் கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்

நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்


இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

03/04/2013   இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

அண்மையில் புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்திய பிரித்தானிய பிரஜையொருவர் நாடு கடத்தப்பட்டார். விருந்தோம்பல் பண்பில் பிரபல்யம் பெற்ற இலங்கையில் தற்போது மத முரண்பாட்டு நிலைமைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபீ புலொச் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியர்கள் குறித்த நாடுகள் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

’ஸ்மாட் போன்’ கதை. - கே.எஸ்.சுதாகர்

.


வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

 I – Phone  ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

“அப்பா.... காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!
கார் இடையிலை நிண்டா... காட் அற்றாக் வந்தா என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு பிளானிற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.

உலகச் செய்திகள்

வடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி!: தென்கொரியா எச்சரிக்கை

குவைத்தில் 3 பேருக்கு மரணதண்டனை!: 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்

வடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி!: தென்கொரியா எச்சரிக்கை

01/04/2013 வடகொரியா தாக்கினால் உடனடியாக திருப்பித் தாக்குவோம் என தென்கொரியா கடுந்தொனியில் எச்சரித்துள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா மீது வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர்ப் பிரகடனம் செய்திருந்தது. இதனையடுத்து கொரிய தீபகற்பத்தை மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது.
http://www.virakesari.lk/image_article/article-2302228-1907587D000005DC-27_634x407.jpg
அமெரிக்க படைகளும் தென்கொரிய படைகளுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையினால் போர் ஏற்படும் பட்சத்தில் அது பாரிய அழிவுகளுக்கு வித்திடும் என அஞ்சப்படுகின்றது.


சிட்னி முருகன் ஆலய நாதஸ்வர கச்சேரி

.சிட்னி முருகன் ஆலய நாதஸ்வர கச்சேரி

தமிழ் சினிமா

வத்திக்குச்சி 

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன், அண்ணன் முருகதாஸின் தயாரிப்பில் கதாநாயகனாக களம் இறங்கி நடிக்கும் படம் தான் வத்திக்குச்சி.
சென்னையின் புறநகரில் சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில் ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலி மீது காதல் மலர்கிறது.
அடிக்கடி தனது ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் அஞ்சலியிடம் தனது காதலை திலீபன் சொல்ல அஞ்சலியோ அவர் மீது காதல் ஆசை இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் இழுத்தடிக்கிறார்.
இந்நிலையில் திலீபன் தனது தங்கை பிறந்த நாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் பார்ட்டிக்கு போகிறார்.
அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.
தன்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என துடிக்கும் திலீபன், இதற்காக ஜிம்முக்கு சென்று உடம்பை ஏற்றி, சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார்.
அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடம் மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இதனால் தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் திட்டத்தை ஒட்டுகேட்ட திலீபன், அந்த கொலை முயற்சியை தடுத்து விடுகிறார். இதனால் ஜெயப்பிரகாஷும் திலீபனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.
அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறார்.
இப்படி ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையை தீர்த்துக்கொள்ள துடிக்கும் இவர்களிடமிருந்து திலீபன் தப்பித்தாரா? தான் காதலிக்கும் அஞ்சலியை கரம் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் திலீபன் புதுமுகம் என்றாலும், நடிப்பைவிட சண்டை காட்சியிலேயே நன்றாக நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடல் வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோல் தெரிகிறது.
இவருடைய அடுத்தடுத்த படங்களில் அதை சரிசெய்து கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.
அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "என்னை பலபேர் பார்த்து காதலிக்கிராங்க, அவுங்க எல்லாரிடம் நான் போய் காதலிக்க கூடாதுன்னு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன் கிட்டயும் சொன்னேன்" என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.
நாயகன் கொலைத்திட்டம் நடக்கப்போவதை அறிந்து வருமானத்துறை அதிகாரியை காப்பாற்றுவது உண்மையில் சாத்தியமில்லாதது என்றாலும் கதையோடு நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்காக அவர் தெரிவு செய்த ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என்று ஒவ்வொருவரும் அருமை.
குறிப்பாக கடைசி காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும் படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமானதாகவும் அதே சமயம் புத்திசாலித்தனமானவும் அமைந்துள்ளது.
ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வத்திக்குச்சி’ அனைவரையும் பத்திக்கும்.

நன்றி விடுப்பு