மரண அறிவித்தல்

.
                                  திருமதி செல்லம்மா நாகரத்தினம்.




                                                             மறைவு -  19.01.2011  


சங்கரத்தை வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகவும் கன்பரா – சிட்னியில் வசித்து வந்தவருமான திருமதி செல்லம்மா நாகரத்தினம் அவர்கள் 19.01.2011 புதன் கிழமை இரவு சிட்னியில் காலமானார்
அன்னார் சங்கரத்தை தபால் அதிபரான காலம்சென்ற நாகரத்தினத்தின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற விசுவலிங்கம் (மலேசியா), சங்கரத்தையைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்பிரமணியம்,  கந்தசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும் இரத்தினவேல் (கன்பரா), சர்வேஸ்வரன் (சிட்னி), பாலேஸ்வரன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.  வான்மதி, சுவீற்ரி, ரேணுகா, நகுலேஸ்வரன் (சிட்னி), சங்கீதா,  சிவகுமார் (மலேசியா) விஜயகுமார் (மலேசியா),  சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்.

விக்டோரியா மாகாணத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிட்டன


.
விக்டோரியா மாகாணத்தின் வடபகுதியில் உள்ள மற்றொரு நகரம் எப்போதும் வேண்டுமானாலும் வெள்ளத்தில் மூழ்கலாம் என்பதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள், மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறும்படி அப்பகுதி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள் -கவிதை

.
                                                                                               சித்தாந்தன்

காகங்கள் வந்தமரும் மின்சாரக் கம்பிகளின்

சாமாந்தர வெளியில்
எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது
இன்றைய இரவு



காலடிகள் வற்றிய படிக்கட்டுக்களில்
தொலைந்த நண்பனின் காலடியோசை கேட்டபடியிருக்கின்;றது

இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண கிட்டியுள்ள சந்தர்ப்பம்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும் அது தொடர்பில் போதிய அக்கறை செலுத்தப்படுவதில்லை எனவும் பரவலாக பேசப்பட்டு வரும் இன்றைய சூழலில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு 13ஆவது திருத்தத்துக்கு அதிகபட்சமான அதிகாரங்களுடன் அமையும் எனவும் அதேவேளை மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெவித்திருக்கிறார்.

இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது


.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்;
கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோன்று

“இன்னும் ஒரு பசு - திபெத்திய நாடோடிக்கதை


.ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள். அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது.
அந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது. அதில் பால் கறந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தான். மிஞ்சியதை வியாபாரம் செய்தான். தன்னுடைய நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்தான். பலன் கிடைத்தது. சந்தோஷமாக வாழ்ந்தான்.

ஆஸ்திரேலியாவில் திருவாசக விழா


.
                                                                                                               -‘அருள்’


மாணிக்கவாசக சுவாமிகளும் அவர் அருளிச்செய்த திருவாசகமும் மார்கழி மாதத்தில் சைவமக்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. திருவெம்பாவை உற்சவம், திருவாசக முற்றோதல், திருவாசகவிழா, திருவாதவூரடிகள் புராணபடனம் ஆகியவை சைவ உலகில் இடம் பெறுகின்றன.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் உள்ள தமிழ் மூத்தோர் சங்க மண்டபத்தில் 8-2-2010 அன்று திருவாசக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இவ்விழா பஞ்சபுராணம் ஓதப்பெற்று, தீபராதனையுடன் தொடங்கியது.


தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு

.
                                                               பாடும்மீன்; சு.ஸ்ரீகந்தராசா
(பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், அவுஸ்திரேலியா)

தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

கடவுளின் காதுகளுக்கு


.
                                                                                                                                             அ.முத்துலிங்கம்
கிறிஸ்மஸ் வரும்போது தபால்காரர், குப்பை எடுப்பவர், பேப்பர் போடுபவர் போன்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது அமெரிக்காவில் வழக்கம். சிலர் குடும்ப மருத்துவருக்கும் பரிசு வழங்குவார்கள். இம்முறை நான் சுப்பர்மார்க்கட் மனேஜரையும் பரிசுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் நான் அவரைச் சேர்த்ததற்கு காரணம் இருந்தது.

உறவியல் -2 - மஷூக் ரஹ்மான்

.
                                                                                                  மஷூக் ரஹ்மான் 

என்ன முதல் ஈக்வேஷன் பேலன்ஸ் ஆயிடுச்சா?


…ம்! சந்தோஷம்.

அனுபவம்னா என்ன?
நம் கண்ணில் படாத காலம் தன் சுவடாக நம் மனதில் பதிப்பது! – டெஃபனிஷன் ஓ.கே?

அனுபவத்தைப் பெறுவது எப்படி? பெரும் வயது வாழ்ந்துவிட்டவர்களிடம் இந்த அனுபவச் சுவடு அதிகமிருக்கும். மூலதனத்தை வீட்டுல வெச்சிட்டு வெளியில வியாபாரம் செய்ய முடியுமா?

“127 அவர்ஸ்” ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது



.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், “27 அவர்ஸ்” என்ற ஆங்கிலப்படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது.


இலங்கையில் தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் !

தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்!

புதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது.


ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது.

தமிழ் சினிமா

.
சிறுத்தை

 பின் சீட்டுக்காரர் சிரிக்கிற சிரிப்பில் பிடறியெல்லாம் எச்சில்! இந்த சாரல் மழையை தியேட்டர் முழுக்க பரப்பி, பொங்கலை சி(ரி)றப்பித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவா. (தமிழுக்குதான் இவரு புதுசு. ஆந்திராவுல ஏற்கனவே ஹிட் அடித்தவர்) அவ்வப்போது இது தெலுங்கு படத்தின் தழுவல்ப்பா என்பதை சொல்லாமல் சொல்கிறது சில காட்சிகள். அந்த இடங்களில் மட்டும், கட்டாய இன்டர்வெல்லுக்கு தள்ளப்படுகிறான் ரசிகன்.



குடியேறியவர்களின் தேசமா இந்தியா


.

                                                                               சத்யானந்தன்

தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது.

இணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது வேறு எந்த மன்றத்திலும் சாத்தியமில்லாதது தமிழ் அல்லது இந்திய அடையாளம் எது என்பது பற்றிய விவாதம்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி     ஜனவரி 16 ம் திகதி  மெல்பேர்ன் மைதானத்தில் பகல்இரவு போட்டியாக நடைபெற்றது.



ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் தேசிய இனப்பிரச்சினை பல தசாப்தகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் பல காரணம் தமிழ்க் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் கருத்து முரண் பாடுகளும் என்ற யதார்த்தத்தை ஒருபோதும் மறந்துபோகக்கூடாது.


இன்றும் கூட தமிழ்க்கட்சிகள் ஒன்றையொன்று குறைகூறுவதிலும் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் காலத்தை கடத்துகின்றனவே தவிர உருப்படியாக எதனையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதே தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருந்துவருகின்றது.

மக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்

.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நாட்டின் பல பகுதிகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளைச்சல் நிலங்களுக்கும், மக்களின் உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும், ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி சேவைகளிலும் அறிந்து வேதனைப்பட்டோம்.