மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் ! -எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

.

    

       மங்கையவள் இல்லை எனில்
       மாநிலமே இல்லை என்பார்
       சங்கெடுத்து முழங்கி நிற்பார்
       சகலதுமே மங்கை என்பார்

       எங்களது வாழ்க்கை  எலாம்
       மங்கலமே மங்கை என்பார்
       பொங்கி வரும் புத்துணர்வே
        மங்கை அவள் தானென்பார்

      கங்கை முதல் காவிரியை
      மங்கை என விழித்திடுவார்
      எங்கள் குலம் விளங்குதற்கு
      வந்தவளே மங்கை என்பார்

புனித கயிலாச யாத்திரையும் எனது அனுபவங்களும்" - நூல் வெளியீடு - 08/11/2015




அவுஸ்திரேலியாவில் மெல்பேண் நினைவுவணக்க நிகழ்வு

.

கடந்த 18-10-2015 அன்று புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சாவைத் தழுவிக்கொண்டதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் சிவகாமி மற்றும்அண்மையில் நியூசிலாந்தில் சாவைத் தழுவிக் கொண்ட தமழ்த்தேசியச் செயற்பாட்டாளர் தேவராஜன், அண்மையில் தாயகத்தில் கிளிநொச்சியில் சாவடைந்ததமிழ்த்தேசியத்தின் முன்னோடியான காந்தியம் டேவிற் ஐயா ஆகியோர்களுக்கானநினைவு வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரில் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு Vermont South community Centre மண்டபத்தில் மிகவும்  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கொற்றவன் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் தமிழினிஅவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் விக்ரோறியா மாநிலத்தின் நாடுகடந்ததமிழீழஅரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதியுமான திரு சபேசன் சண்முகம் அவர்கள்ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

பிணை (சிறுகதை) - கானா பிரபா

.

பூட் சிற்றியில் இருந்து வெளியே காலடி வைக்க
மத்தியானம் பன்னிரண்டே முக்கால் செய்தி பக்கத்து கூல்பாரின் றேடியோவில் இருந்து வரவும் கணக்காய் இருந்தது.

அம்மா வழி வழியச் சொல்லி அனுப்பினவ
 "உச்சி வெயில் தலேக்கை சுட்டால் பிறகு காயச்சல் கீச்சல் எண்டு அவதிப்படுவாய், உந்தச் சைக்கிளை விட்டுட்டு ஓட்டோவில போவன் தம்பி"

"சும்மா இரணை அம்மா நான் இன்னும் சின்னப்பிள்ளையே? அவுஸ்திரேலியா போய் இந்த வருசத்தோட இருவது வருசமெல்லோ"

வீம்பாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை வலித்து யாழ்ப்பாணம் ரவுணுக்குள் மிதக்கும் போது மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. வெள்ளன வந்தும் பிரயோசனமில்லை, கடைக்காறர் பத்து மணிக்கு மேல் தான் கடைக் கதவு திறந்து தண்ணி தெளிப்பினம்.

கொழும்பில் இருந்து மாத்திக் கொண்டு வந்த காசும் யாழ்ப்பாணம் வந்த இரண்டு கிழமைக்குள் முடியிற பதம், நாளைக்குத் திரும்பவும் கொழும்புக்குப் போகவேணும், அம்மாவின் கையுக்குள் கொஞ்சக் காசாவது வைக்க வேண்டும். கைச்செலவுக்கு உதவும் என்ற முடிவோடு தான் டொலரைத் திணித்துக் கொண்டு வந்தாச்சு. நியூ மார்க்கெற்றுக்குள் ஒரு நாணய மாற்று முகவர் நிலையம் இருக்காம் என்று அறிஞ்சு வச்சதும் நல்லதாப்போச்சு. காசு மாற்றி விட்டு கே.கே.எஸ் றோட்டில் இருக்கும் பூட் சிற்றிக்குக்குப் போய் பெரிய போத்தல் சோடா இரண்டும், நீட்டுச் சொக்கிளேற் பெட்டி ஒன்றும் வாங்கியாச்சு. அம்மாவுக்குக் கள்ளத்தீனி என்றால் வாய் கொள்ளாது, அப்பா வாங்கிக் கொடார். கொண்டு வந்த சொக்கிளேற்றை எல்லாம் கர்ண பரம்பரையாக வீட்டுக்கு வந்த சொந்தக்காரருக்குப் பிரிச்சுக் கொடுத்திட்டா. 


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
புனைகதைகளில்  பேச்சுவழக்கினை  ஆய்வுசெய்த  திறனாய்வாளர்  வன்னியகுலம்
   ஈழத்து  பேச்சுவழக்கின்  பொதுப்பண்புகள்  இந்தியப்பேச்சுவழக்குடன்   வேறுபடும்  தன்மைகள்  பற்றி  ஆய்வுசெய்துள்ளார்.


                                      
தமிழ்மொழி   நாட்டுக்கு  நாடு  பிரதேசத்திற்கு  பிரதேசம்  ஊருக்கு  ஊர்  மாறுபட்ட  ஒலியில்  பேசப்படுகிறது.   உதாரணங்கள்  ஏராளம். சமகால  தமிழ்த்திரைப்படம் - தொலைக்காட்சி  நாடகங்களில்  வரும் தமிழ்    வேறுபட்ட   தளத்திலிருந்து  ஒலிக்கிறது.
புகலிடத்தில்   ஆங்கிலம்  அல்லது  அய்ரோப்பிய  மொழிகளின் கலப்புடன்   தமிழ்  ஒலிக்கிறது.
இந்தப்பின்னணிகளுடன்   எனது  பூர்வீக   ஊரில்  பெரும்பான்மையாக வாழ்ந்துவரும்   கத்தோலிக்க  மக்களின்,  குறிப்பாக  அவர்கள் மத்தியில்    செறிந்து வாழும்  கடலை   மாத்திரம்  நம்பிவாழும் கடற்றொழிலாளர்களான  மீனவ சமூகத்தினரின்  பேச்சுவழக்கு  பிற ஊர்களில்   வாழ்பவர்களுக்கு  முற்றிலும்  புதிய  அனுபவம்.
ஆனால்,  அங்கே  நீண்ட நெடுங்காலம்  வாழ்பவர்களுக்கு அம்மண்ணின்  மொழி   நல்ல  பரிச்சயம்.
சின்னவயதிலிருந்தே   அந்த  சமூகத்துக்கு  பிள்ளைகளுடன் விளையாடியதனாலும்  சிறுவயதில்  எனது  பாட்டியுடன்  அந்த கடற்கரையோரத்தில்காலை   வேளைகளில்  கடலிலிருந்து  வந்து குவியும்    கடற்றொழிலாளர்களின்   காலைப் பசிபோக்குவதற்கு வட்டிலில்  தோசையும்  சம்பலும்  எடுத்துச்சென்று  பத்திரிகை காகிதங்களில்   சுற்றி விற்று  வீட்டுக்கு  வருவாய்  தேடியதனாலும் அம்மக்களின்   மொழி    எனக்கு   அத்துப்படியானது.

தமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: மாலி நேர்காணல்

.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் பிறந்தவர் மகாலிங்கசிவம் (65). சிறு வயதிலேயே இசையிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டு, அது குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர். இலங்கையின் முதல் பிராந்திய தினசரியான ‘ஈழநாடு’ வார இதழில் எழுதத் தொடங்கினார். ஈழத் தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கத்தின் புகைப்படங்களைக் கொண்டே, தமிழர் அரசியல் வரலாற்றுச் சுவடுகளை ‘அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல்’ என்ற நூலாக மு.நித்தியானந்தனோடு இணைந்து வெளியிட்டுள்ளார்.
தற்போது லண்டனில் வசித்துவரும் மாலி, ‘நாழிகை’ எனும் செய்தி மாத இதழை எவ்வித சமரசமுமின்றி 21 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சென்னை வந்திருந்த அவரோடு உரையாடியதிலிருந்து:
லண்டனிலிருந்து ‘நாழிகை’ போன்ற சஞ்சிகையைக் கொண்டுவரும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
இலங்கையிலிருந்து வந்த ‘Tribune’ ஆங்கிலப் பத்திரிகையைச் சிறு வயதில் விரும்பிப் படிப்பேன். நல்ல தரமான தாளில், அழகான அச்சில், காத்திரமான படைப்புகளோடு வரும் அந்த இதழைப் போல் தமிழிலும் ஒரு இதழைக் கொண்டுவர வேண்டுமென்பதே என் விருப்பம். லண்டனில் ‘தமிழன்’, ‘தமிழோசை’ ஆகிய வாரப் பத்திரிகைகளைச் சில காலம் கொண்டுவந்தேன். பிறகு, எனது கனவுப் பத்திரிகையான ‘நாழிகை’யைத் தொடங்கினேன். சர்வதேச அளவில் செய்திகள் தொடர்பில் லண்டனின் தனித்த கீர்த்தியும், தமிழர்களின் புலப்பெயர்வும் இதில் தூண்டுதலை அளித்தன.
லண்டனில் தமிழ் இலக்கியச் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

ஏனையவர்களில் இருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - பகுதி 6

.
sakthikanal 

அரங்கக்ககலையான எமது நாட்டியங்களை மேடையேற்றும் பொழுது, அரங்கத்தை எவ்வாறு கையாழ்வது என்பதில் கவனம் செலுத்தாவிட்டால் நாட்டியம் வெற்றி பெறமுடியாது. நாட்டிய நாடகம் தொடர்பறாது நடைபெறும் பொழுது தான் நாம் மக்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எனது தயாரிப்பிலான நாட்டிய நாடகங்களில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை திரை மூடப்படுவது கிடையா.  அது தவிர காட்சிக்கு காட்சி சில நொடிகளும் இடைவெளியில்லாது திரைபடம் போண்று கதையுடன் நாட்டியம் நடைபெற வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் நாட்டியத்தில் தொய்வு ஏற்பட்டு விடும்.  அதற்கு மேலும் எனது நாட்டிய நாடகங்களில் எந்த காட்சிப் பொருளோ, காட்சியுடனான திரைச் சேலையோ இணைக்கப்படுவது கிடையாது.  நாட்டியம் என்பது மேடையில் இல்லாத ஒன்றை இருப்பது போல நாட்டியத்தால் உருவகப்படுத்தி பார்வையாழரையும் அதை உணர வைப்பதே.  அதனால் நாட்டியத்திற்கு பக்கத்துணையாக பொருட்களோ சீன் செட்டிங்கோ  வேண்டியதில்லை. இன்றோ இலத்திரன் உலகம், காட்சியை பின்திரையில் SLIDE மூலம் காட்டுகிறார்கள். இவ்வாறாக காட்சிகளை காட்டுவது மனிதரது கற்பனைகளை கட்டுப்படுத்துவதாகும்.  கலைஞன் உருவகப்படுத்துகிறான், கலாரசிகள் உணர்கிறான். கலா இரசிகர்களும் கற்பனை வளம் மிக்கவர்களே. நாட்டிய கலைஞர் இசையுடன் இணைந்து ஒன்றை உருவகப்படுத்த கலா இரசிகன் அதை உணருவதுதான் முளுமையான கலை. இதுவே கீழத்தேயம் கண்ட, வழர்த்த நாட்டியயுக்தி. மேடை அலங்காரம், மேடையில் காட்சியாவும் கலை மெருகு குறைந்த மேலை நாம்டில் இருந்து நாம் பெற்றவை.

கவிவிதை - 2 - இவளா, அவளா? - -- விழி மைந்தன்--

.
அவனோ அறிவும் ஆற்றலும் பொருந்திய ஆடவன்.
அவனி பயனுற அவதரித்தவன் என்றே சொல்லலாம்.
ஆழம் மிகவுடைய அண்ணல்.
அழகு மிகவுடைய நங்கை ஒருத்தியைச் சேர்ந்து,  அறிவாழமும் அருங்கவினும் பொருந்திய குழந்தைகள் பல தந்துஉலகுக்கு ஒளி  ஏற்ற உத்தேசித்தான்.
ஆன்றவிந்து அடங்கிய சான்றோரான மூத்தோர் சிலரும்அவனின் வயதொத்த நவ நாகரீக  இளைஞர் சிலரும் அவனுக்குத் திருமணம் பேசினர்.
அவ்வூரில் அவனுடன் இல்லறத்தில் இணையப்  பொருத்தமாயிருந்த அழகு மங்கையர் இருவர்.
ஒருத்திபழம் பெருமை மிகவுடைய குடும்பத்தினள். மன்னர் மகள். செந்நிறப் பட்டுடுத்தி, அணிகள் பல பூண்டு, வளைய வருபவள்.  காதில் குண்டலமும்,கைகளில் வளையல்களும்மார்பில் மணி மாலையும்இடுப்பில் மேகலையும்,கால்களில் கவிதை கொஞ்சும்  சிலம்பும் அணியாமல் வெளி வருவதில்லை. கவிஞர் கற்பனையென இனிப்பது அவள் இதழ். கவினும் அடர்த்தியும் மிகுந்தது அவள் தலைக் குழல். காவியங்களில் அடங்கிய கருத்துக்கள் எனத் திரண்டவை அவளது கொங்கைகள். அவள் நடை அழகைப் பார்த்துப் பெரு மூச்செறியும் வாலிபர் பலர்.  ஆடையும் அணிகளும் பொன்னும் பூக்களும் மையும் மஞ்சளும் சந்தனமும் ஜவ்வாதும் அணிந்து அழகிய தேரென அசைந்து வருபவள்.

உலகச் செய்திகள்

.
போலந்து பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதிர்க்­கட்சி வெற்றி

பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை

ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு

போலந்து பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதிர்க்­கட்சி வெற்றி

27/10/2015 போலந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பழை­மை­வாத எதிர்க்­கட்­சி­யான சட்­டமும் நீதியும் கட்சி வெற்றி பெற்­றுள்­ளது. இது­வரை வெளி­யான பெறு­பே­று­களின் பிர­காரம் அந்தக் கட்சி 39 சத­வீத வாக்­கு­களைப் பெற்­றுள் ளது.
அந்தக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு தேவை­யான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மேற்­படி கட்­சியின் தலைவர் ஜரோஸ்லோ கக்­சின்ஸ்கி பிர­தமர் வேட்­பா­ள­ராக தனது உற­வி­ன­ரான பீற்றா ஸசிட்­லோவை தெரிவு செய்­தி­ருந்தார்.

தி. சுவாமிநாதன், நாமக்கல், தாலி அன்பினால் இணைந்த வேலி

.

‘தாலம்’ என்ற பெயர்தான் காலப்போக்கில் தாலியாக மாறியிருக்கிறது. தாலம் பனை என்ற பனை ஓலையால் செய்த ஒன்றையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த நிலை இருந்துள்ளது. பனை ஓலைத்தாலி அடிக்கடி பழுதுப்பட்டதால் நிரந்தரமாக இருக்க பிற்காலங்களில் உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.

இன்றைய திருமாங்கல்யச் சரடனானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கின்றது. அவை தெய்வீகக் குணம், தாய்மை, மேன்மை தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் ஆகும். ஒரு விரலி மஞ்சளை எடுத்து மஞ்சள் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். இது காலம் காலமாய் நாம் பின்பற்றி வரும் சம்பிரதாயமாகும்.

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.

கலைவளன்  சிசு. நாகேந்திரனின்  பழகும் தமிழ்ச்சொற்களின்    மொழிமாற்று   அகராதி
தாத்தாமார்  மேற்கொண்ட    தமிழ்ப்பணியை   பேரர்களும் தொடரவேண்டும்                                         

அவுஸ்திரேலியாவில்  வதியும்  95  வயது  தமிழ்த்தாத்தா  கலைவளன்  சிசு.நாகேந்திரன்  அவர்களைப்  பார்க்கும்தோறும்  எனக்கு .வே. சாமிநாத அய்யர்  தாத்தாவும்,  வீரமாமுனிவர்  என்ற  பாதிரி தாத்தாவும்  நினைவுக்கு  வருகிறார்கள்.
சாமிநாத அய்யரும்  வீரமாமுனிவரும்  வாழ்ந்த   காலத்தில் கம்பியூட்டர்  இல்லை.   அவர்களுக்குப்பின்னர்  வந்த  பேரர்கள் காலத்தில்  அந்த  வரப்பிரசாதம்  கிட்டியிருக்கிறது.
பழகும்  தமிழ்ச்சொற்களின்  மொழிமாற்று  அகராதி  என்ற 577 பக்கங்கள் கொண்ட  இந்த  அரியநூலை  தமது  நீண்டநாள் தேடுதலிலும்  கடும்  உழைப்பிலும்  வெளியிட்டுள்ள  சிசு. நாகேந்திரன்   தமது  95  வயதிற்குப்பின்னரும்,  இந்த  அகராதியின் இரண்டாம்  பாகத்தை  தற்பொழுது  தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்பது   அதிசயம்தான்.  ஆனால்,  அதுதான்   உண்மை.
அவருக்கு  ஒரு  கண்பார்வை  குறைந்துவிட்டது.  செவிப்புலனும் குறைந்துவருகிறது.    உடல்  ஆரோக்கியம்  குன்றியிருந்தாலும் அவருடைய   ஆத்மபலம்தான்  அவரை  தொடர்ந்தும்  தமிழ்  சார்ந்து ஆய்வுடன்    இயங்கச்செய்கிறது.
பலவழிகளில்   சிசு. நாகேந்திரன்  அய்யா,  எமது  சமூகத்துக்காகவே அர்ப்பணிப்புணர்வுடன்   வாழ்கின்றவர்  என்பதற்கு  நிறைய ஆதாரங்கள்  இருக்கின்றன.

இலங்கைச் செய்திகள்


அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடிவு : பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்மை தொடர்பாக ஐ.நா.வில் விசாரணை நடத்த வேண்டும்

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு
அமைச்சர் மனோவுடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
கே.பி. குறித்து 4 விசா­ரணை அறிக்­கைகள்

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடிவு : பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

தரிசனம் 2015 21 11 15

.












தமிழ் சினிமா புலி





தடைகளை தாண்டி சரித்திரம் படைப்பவர் தான் தளபதி போல. முதன் முறையாக இளைய தளபதி விஜய் தன் மாஸ் மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ, மக்களுக்கு எது பொழுதுபோக்கு என்று தெரிந்து வைத்துக்கொண்டு சிம்புதேவன் கையில் சாட்டையை கொடுத்து சுழட்ட சொல்லியிருக்கிறார்.
விஜய் போல் விண்ணைத்தொடும் சக்தி படத்தில் இருக்க, அதில்ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி, ஹன்சிகா என பிரமாண்ட நட்சத்திரக்கூட்டணியுடன் களம் இறங்கியிருக்கின்றது புலி.
கதைக்களம்
பேண்டஸி கதை என்பதால் எந்த காலம் என்று தான் குறிப்பிடவில்லை, ஆனால், அழகிய தேசத்தில் கர்ணன் ஸ்டைலில் ஆற்றில் ஒரு குழந்தை குருவி முட்டையுடன் மிதந்து வருகின்றது. அந்த குழந்தையை பிரபு எடுத்து வளர்க்கிறார். அமைதியாக இருக்கும் அவர்கள் கிராமத்தில் வேதாள உலகத்தை சார்ந்த வேதாளங்கள் அவ்வப்போது வந்து மிரட்டுகின்றது.
வேதாள உலகத்தில் ராணி ஸ்ரீதேவி, தளபதி சுதீப்பின் மாய வலையில் நாட்டை கொடூரமாக ஆள்கின்றார். ஒருநாள் விஜய்யின் காதல் மனைவி ஸ்ருதிஹாசனை வேதாள உலகத்தினர் கடத்தி செல்ல, விஜய் அவரை தேடி போகின்றார்.
அங்கு செல்ல வேண்டும் என்றால் நீயும் வேதாளமாக தான் இருக்க வேண்டும் என ஒரு மந்திர பாணத்தை குடித்துவிட்டு 8 நிமிடம் மட்டும் வேதாளமாக மாறும் திறன் கொண்டு அந்த வேதாள கோட்டையைஅடைகின்றார். அதன் பிறகு பல டுவிஸ்டுகள் அவிழ, தன் காதல் மனைவி ஸ்ருதியை கண்டுப்பிடித்தாரா? நாட்டை சுதீப்பிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை ஒரு மாய உலகத்திற்கு நம்மை அழைத்து சென்று காட்டுகின்றது இந்த புலி.
படத்தை பற்றிய அலசல்
இளைய தளபதி விஜய் ஒவ்வொரு காட்சிகளிலும் ஆட்டம், பாட்டம், துறுதுறு நடிப்பு என கலக்கியுள்ளார். பிரபு கொஞ்சம் நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். ஹன்சிகா, ஸ்ருதி வெறும் கவர்ச்சிக்கு மட்டும் தான் போல, நடிப்பில் எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை.
இதுவரை ஹாலிவுட் படங்களை மட்டும் மெய் மறந்து பார்த்த நம்மூர் மக்களுக்கு ராட்சஸ மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் குருவி, ஆமை என சிம்புதேவன் காட்சிக்கு காட்சி விருந்து வைத்துள்ளார். அதிலும்ஆமை வேதாளக்கோட்டைக்கு வழி சொல்லி, அதன் படி அவர்கள் செய்யும் காரியங்கள் குழந்தைகளுக்கு செம்ம ஜாலி ரைட் தான்.
படத்தின் வசனம் ‘எனக்கு ராணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாரோ இடையில் ஏற்றி விடுகிறார்கள், நான் அரசப்பதவியில் இருந்தாலும் உங்களில் ஒருவன்’ என ரியல் லைப் வசனமாக இருக்குமோ என்று கேட்கத்தோன்றுகின்றது. நட்ராஜ் ஒளிப்பதிவு பேண்டஸி படம் என்பதால் முடிந்து அளவிற்கு உழைத்திருக்கிறார். ஆனால், கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, சத்யன், வித்யூலேகா என பலரும் தங்கள் கதாபாத்திரங்களில் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர். ஸ்ரீதேவி இத்தனை வருடத்திற்கு பிறகு தமிழில் கலக்க வருகிறார், சுதீப் மிரட்டுவார் என எதிர்ப்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. ஏனெனில் விஜய்யை மீறி இன்னொரு பெரிய நடிகர், நடிகை என்பது தமிழ் நாட்டிற்கு சாத்தியம் இல்லை.
க்ளாப்ஸ்
விஜய் தேர்ந்தெடுத்த கதைக்களம், ஏதோ மாய மந்திரம் கதை படித்தார் போல் உள்ளது. குள்ள மனிதர்கள் வரும் காட்சி, வேதாளக்கோட்டைக்கு வழி தேடி செல்லும் காட்சி, தன்னை வேதாளம் என நிரூபிக்க விஜய் வரும் சோதனை காட்சி என அனைத்தும் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கும்படி உள்ளது.
இதையெல்லாம் விட இரண்டாம் பாதியில் வரும் அப்பா விஜய்யின் கம்பீர நடிப்பு. ஒரு சில காட்சிகள் என்றாலும் மிரட்டியுள்ளார்.
பல்ப்ஸ்
நல்ல கதை இருந்தும் சொதப்பலான திரைக்கதை, அப்பட்டமாக தெரியும் கிராபிக்ஸ் காட்சிகள் என ரசிகனை கொஞ்சம் சோதிக்கின்றது . ஆனால் குறுகிய நாட்களில் இந்த அளவிற்கு செய்ததே பெரிய விஷயம் என்றாலும், கொஞ்சம் தத்ரூபமாக இருந்திருக்கலாம். விஜய்யை மீறி வேறு யாரும் பெரிய அளவில் கவரவில்லை. அதிலும் நந்திதா தான் ஆமாம் படத்தில் இருக்கிறார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது.
இவர்களை எல்லாம் விட DSPயின் இசை ஏன் சார் இப்படி சோதிச்சுட்டீங்க... விஜய் படம் என்றால் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்.
மொத்தத்தில் இந்த புலி கொஞ்சம் தாமதமாக வந்தாலும் இரையை(பாக்ஸ் ஆபிஸ்) பாய்ந்து அடித்துள்ளது.
நன்றி cineulagam