மீண்டு வருகிறோம் - தமிழ்முரசு ஆசிரியர் குழு

.
சென்ற மூன்று வாரங்கள் தமிழ்முரசு சரியாக இயங்க முடியாது இருந்தது. சிற்சில காரணங்களால் இந்த நிகழ்வு . இந்த வேளையில் பல வாசகர்கள் ஆதரவாளர்கள் தொலை பேசி மூலமும் e -mail  மூலமும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் . அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். இம்முறை எம்மால் இயன்றவரை முன்கொண்டு வந்துள்ளோம் . உங்கள் ஆதரவோடு தொடர்வோம் .


குளிரவன் போவதெங்கே? - கவிதை

.





தோ… குளிரவன்!
தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
வழியில் பார்த்தவன்வெளிறிய தன் முகத்தை
வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
திரும்பிப் பாராமல் போகிறான்.

ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
அவன் சென்ற வழி எதுவென்று
அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
எவரும் முயன்றாராவென்று

இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

வெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் நாலாம் நாள் 22.02.2014Photos

Photos by Gnani 
.


சிட்னியில் திருக்குறள் போட்டிகள் 2014 - 02.03.2014

.


இப் போட்டிகள் மார்ச்  மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடங்களைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 - 03 - 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.

நடாத்தப்படும்  போட்டிகளும் பிரிவுகளும்

திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி

பாலர் ஆரம்ப பிரிவு    (02.03.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)
பாலர் பிரிவு    (02.03.2007 க்கும் 01.03.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்)    கீழ்ப்பிரிவு    (02.03.2005 க்கும் 01.03.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள்)    மத்தியபிரிவு    (02.03.2002 க்கும் 01.03.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

 திருக்குறள் கட்டுரைப் போட்டி
மேற்பிரிவு  (02.03.1999 க்கும் 01.03.2002 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
அதிமேற்பிரிவு (01.03.1999 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்)

சிட்னி துர்க்கை அம்மன் ஆலய அலங்கார திருவிழாவின் ஒரு காட்சி

.



வெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் 19/02- 28/02/2014

.


மூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிரேம்ஜி கனடாவில் காலமானார்.

.
                                          முருகபூபதி



இலங்கை     முற்போக்கு      எழுத்தாளர்     சங்கத்தின்      மூத்த    உறுப்பினரும் நீண்டகாலமாக     அந்த     அமைப்பின்     செயலாளராகவும்    பணியாற்றிய எழுத்தாளரும்      ஊடகவியலாளருமான    பிரேம்ஜி  ஞானசுந்தரன்   08.02.2014    கனடாவில்    காலமானார்.
அச்சுவேலியில்   17-11-1930   ஆம்    திகதி    பிறந்த    பிறந்த   ஞானசுந்தரன் தமது    ஆரம்பக்கல்வியை   அச்சுவேலி    கிறீஸ்தவ     கல்லூரியிலும்   பின்னர்     யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும்    கற்றார்.    1947 இல்   தமது  17 வயதிலேயே     சுதந்திர     இளைஞர்    சங்கம்    என்ற   அமைப்பை உருவாக்கினார்.     அன்றிலிருந்து       ஞானசுந்தரன்     தீவிரமான     வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும்    ஈடுபடத்தொடங்கினார்.
தமிழகம்சென்று     மூத்த    அறிஞர்கள்     நாமக்கல்     கவிஞர்  -வி.க.  வா.ரா-  சுவாமிநாத சர்மா  -  குயிலன், - பேராசிரியர்    ராமகிருஷ்ணன்  - தமிழ் ஒளி முதலானோரின்    தொடர்பினால்     இடதுசாரிக்கருத்துக்களை     உள்வாங்கி இடதுசாரியாகவும்     முற்போக்கு     எழுத்தாளராகவும்    இயங்கிய ஞானசுந்தரன்     அங்கு      கம்யூனிஸ்ட்    கட்சியின்    முன்னணி    இதழிலிலும் பணியாற்றினார்.    தயாகம்    திரும்பிய    பின்னார்    கே.கணேஷ்    மற்றும் கே. ராமநாதன்     ஆகியோரின்     தொடர்புகளினால்     இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின்     தேசாபிமானி    -   மற்றும்   சுதந்திரன்     முதலான     இதழ்களிலும்   ஆசிரியர் குழுவில்     இணைந்தார்.
தேசாபிமானியில்     அவர்     அக்காலப்பகுதியில்     எழுதிய    தேசபக்தன் கண்ணோட்டம்    என்ற    பத்தி    எழுத்து     வாசகர்களை    பெரிதும்   ஈர்த்தது. 1954    இல்  இலங்கை    முற்போக்கு    எழுத்தாளர்     சங்கத்தில்    இணைந்து அதன்     வளர்ச்சிக்கு    அள்ளும்பகலும்     தொண்டாற்றினார்.

வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் தேன் அமிர்த மழை 02.03.2014

.

இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா


                                                                                     முருகபூபதி


'பாலு... உன்னுடைய   நுண்ணுணர்வுகளுக்கும்   இந்த    மீடியத்தின்   மீது   நீ கொண்டிருக்கும்    காதலுக்கும்    உன்னுள்    இருக்கும் படைப்புத்தாகத்திற்கும்   நீ   ஒரு   இயக்குநராக    மாறுவதுதான்   இயல்பானது ---  விரைவில்  நீ   ஒரு   படத்தை    இயக்குவாய்--- Mark My Words    -  என்று    பல    வருடங்களுக்கு    முன்னர்    கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு -    தன்னைப்பார்க்கவந்த   பாலுமகேந்திராவை    வாழ்த்தியவர்   சர்வதேச   புகழ்  பெற்ற  இயக்குநர் சத்தியஜித் ரே.
புனா   திரைப்படக்கல்லூரியில்   பாலுமகேந்திரா    ஒளிப்பதிவுக்கலையை பயின்ற    காலத்தில்    வருகைதரு   விருந்தினராக   விரிவுரையாற்ற   வந்த சத்தியஜித்ரேயை   பாலு மகேந்திரா   இலங்கையில்   மட்டக்களப்பில்  கல்வி    கற்றுக்கொண்டிருந்த    காலத்திலேயே   மிகவும்   நேசித்தவர்.

ரேயின்   ஆளுமையை    உள்வாங்கிக்கொண்ட   திரையுலக  கலைஞர்களின் வரிசையில்  பாலுமகேந்திரா  மிகவும்  முக்கியமானவர்.
ரே  மறைந்த  பின்னர்  1994   ஆம்   ஆண்டு  வெளியான  ஒரு  மேதையின் ஆளுமை   என்ற   தொகுப்பு  நூலில்  பாலுமகேந்திரா   எழுதியிருக்கும் கட்டுரைகள்  திரைப்படத்துறையில்   பயிலவிருப்பவர்களுக்கு  சிறந்த  பாட நூல்.

சிட்னி முருகன் ஆலய மாசி மகம்

.
படபிடிப்பு ஞானி 



அஞ்சலி: பாலு மகேந்திரா -

.

1974ல் நெல்லு என்ற மலையாள சினிமா வெளிவந்தது. ராமுகாரியட் இயக்கி பிரேம்நசீர் நடித்தபடம். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. ஒரு மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது திருவனந்தபுரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு சினிமா என்ற அழகனுபவம் அங்கேதான் தொடங்குகிறது. நான் செம்மீனையும் வேறுபல முக்கியமான மலையாளப்படங்களையும் அதற்குப்பின்னர்தான் பார்த்தேன். அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் கறுப்புவெள்ளை மலையாளக் குடும்பப்படங்கள். எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் நடித்த வண்ணப்பிழம்புகளான தமிழ்ப்படங்கள். நெல்லு எனக்கு ஒரு சினிமாவாகவே தெரியவில்லை. அது ஒரு கனவு. எனக்கும் இயற்கைக்குமான உறவை தீர்மானித்த அனுபவங்களில் அதுவும் ஒன்று என்று மிகப்பிந்தித்தான் உணர்ந்தேன்
நெல்லு படத்தை நான் பதினைந்து வருடம் கழித்து மீண்டும் பார்த்தேன். மிகமிகச் சாதாரணமான படம். வத்சலாவின் நாவலை முடிந்தவரை சிதைத்து உதிரிக்காட்சிகளாக ஆக்கியிருந்தார் ராமுகாரியட். அபத்தமான பொய்மயிருடன் நசீர் கோமாளி மாதிரி இருந்தார். கொழுத்து உருண்ட ஜெயபாரதியையும் சிவந்த நவநாகரீக முகத்துடன் மோகனையும் ஆதிவாசிகளாகவே எண்ண முடியவில்லை. ஆனால் உயிருடன் இருந்தவை இசையும் ஒளிப்பதிவும். சொல்லப்போனால் அடுத்த பதினைந்தாண்டுகளில் அவை பேருருவம் பூண்டு மலையாளச் சினிமாவுன் உச்சகட்ட சாதனைகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இசை சலீல் சௌதுரி. ஒளிப்பதிவு பாலு மகேந்திரா

புலம் பெயர் வாழ்க்கை -வெங்கட் சாமிநாதன்

.
ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த  அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள.  அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.
ஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு

விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்

.

p19.jpg

விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
’எப்படியிருக்கு?’
வாசகர் கேள்விகள்...

 கபிலன், திருத்துறைப்பூண்டி.
'' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி?''
''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா?!
ரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார்.
அவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும் எடுத்து வெளியே வைத்தார். பதக்கம் சங்கிலியா, முத்துமாலையா, மணியாரமா அல்லது நீலக்கல் அட்டிகையா என்று நீண்ட விவாதம் நடந்தது. பொற்சரிகை வைத்த நீலப் பட்டாடையா அல்லது சிவப்பா அல்லது ஊதா கலரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.


P.S.பாலமுருகனின் நாதஸ்வர இசைக் கச்சேரி

.


.

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

.


இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும் 
தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறதுஇன்றைய சினிமாவின் போக்கால் சமூகம் பாதிப்புக்காளாகிறது என்பது எவரும் மறுக்கவியலாத உண்மைதலைப்பில் சினிமா என்று பொதுவாக இருப்பதால் அது குறிப்பது தமிழ்த் திரைப்படங்களையாஇந்தியத் திரைப்படங்களையா?அல்லது உலகத் திரைப்படங்களையாஎன்று ஆரம்பம் முதலே ஒரு தடுமாற்றம் இருந்ததுஒரு தமிழ் இணையதளத்தில் நடத்தப்படும் ஒரு போட்டி என்பதாலும் உலக சினிமா பற்றிய அலசலை முன்வைக்கும் தகுதி எனக்கில்லை என்பதாலும் தமிழ்த் திரைப்படங்களைக் குறிப்பதாகவே எண்ணிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்.

திரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர் வாதிடலாம்அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாதுசமூகத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்கசமூகத்தைப் பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறேன் என்று துவங்கி, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமன்று. எல்லாத் திரைப்படங்களும் அப்படித்தானா என்றால் இல்லைஆனால் நூற்றுக்கு தொண்ணூறு படங்கள் அப்படித்தான் உள்ளனஅவற்றைப் பற்றிய என் பார்வையே இது.

மதுராந்தகம் சூரை மன்னாதிஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய கும்பாபிசேகம் 02.02.2014

.
photos by v.s.shivaperumal


தமிழ் சினிமா - பண்ணையாரும் பத்மினியும் -

.
பழைய பத்மினி காரும் அதன் மேல் பண்ணையாரும் அவருடன் இருப்பவர்களும் காரின் மீது வைத்திருக்கும் காதல் தான் ‘பண்ணையாரும் பத்மினியும்’.
ஒரு கிராமத்தில் பண்ணையாராக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நவீன பொருட்கள் எது வந்தாலும் அதை அந்த ஊருக்கு கொண்டு வந்து மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பவர் இவர்தான்.
இந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது ஆசைப்படுகிறார். உறவினரிடம் பண்ணையார் காரைப்பற்றியே பேசுகிறார்.
இதை கவனிக்கும் உறவினர், தன் மகள் வீட்டுக்கு செல்லும்போது காரை பண்ணையாரிடம் கொடுத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
மகிழ்ச்சியடைந்த பண்ணையார், காரை ஓட்டுவதற்கு விஜய் சேதுபதியை நியமிக்கிறார். இதிலிருந்து ஊரில் எந்தவொரு நல்லது, கெட்டதுக்கும் பத்மினி காரை பயன்படுத்துகிறார்கள்.
ஒருநாள் துக்கவீட்டில் நாயகி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்பு அவரையே சுற்றி சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, காதலை ஏற்றுக்கொள்கிறார்.
பண்ணையாரும், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பத்மினி காரை மிகவும் நேசிக்கிறார்கள். கார் இல்லாத வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறார்கள்.
இந்நிலையில் பத்மினி காரின் உரிமையாளர் மகளான சினேகா பண்ணையார் வீட்டுக்கு வருகிறார். அங்கு பண்ணையாரிடம் தன் தந்தை இறந்து விட்டதாகவும், அவர் விட்டுச்சென்ற சொத்துக்களை தரும்படி கேட்கிறார். பண்ணையார் சொத்துக்களை கொடுத்துவிட்டு காரை மட்டும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். பின்பு தன் மனைவியின் அறிவுறுத்தலின்படி காரை சினேகாவிடம் கொடுக்கிறார். அதற்கு சினேகா வாங்க மறுப்பு தெரிவித்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
இதனால் பெரும் மகிழ்ச்சியடைகிறார் பண்ணையார். இந்நிலையில் தனது திருமணநாள் நெருங்குவதால் அதற்குள் பத்மினி காரை ஓட்டக்கத்துக்கொண்டு தன் மனைவியை உட்காரவைத்து ஓட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இவர் மனைவிக்கும் இதே ஆசை உள்ளது. இதற்கு விஜய் சேதுபதியை கார் ஓட்ட கற்றுத்தரும்படி கூறுகிறார். பண்ணையாருக்கும் ஓட்ட கற்றுக்கொடுத்தால் தன்னால் இக்காரை விட்டு பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஓட்ட கற்றுத்தராமல் ஏமாற்றி வருகிறார்.
இதற்கிடையில் வீட்டில் உள்ள ஒவ்வொன்றாக எடுத்துச்செல்லும் பண்ணையாரின் மகளான நீலிமா, பத்மினி காரையும் எடுத்துச் செல்கிறார்.
இறுதியில் பத்மினி காரை மகளிடம் இருந்து மீட்டாரா? தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார் மீது பாசம் காட்டுவது, மகளிடம் மென்மையாக பேசுவது, கார் ஓட்ட துடிப்பது என பல்வேறு கோணங்களில் நடிப்பு திறனால் மிளிர்கிறார்.
பண்ணையார் மனைவியாக வரும் துளசி, தன் அழகிய நடிப்பால் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவருடைய மர்மப்புன்னகை பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக உள்ளது.
ஒட்டுனரான விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் குறைவு. இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பண்ணையார் கார் ஓட்ட கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுவிடுவாரோ என்ற பதட்டம் அவருடைய சிறந்த நடிப்புக்கு உதாரணம்.
நாயகியாக ஐஸ்வர்யா, இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. கிராமத்து வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார்.
குறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் 1980ம் ஆண்டை நம் கண்முன் அற்புதமாக காட்சி தந்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பத்மினி’ காரில் ஒரு ரவுண்டு போகலாம்.
நடிகர்: விஜய் சேதுபதி
நடிகை: ஐஸ்வர்யா
இயக்குனர்: அருண்குமார்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு : கோகுல் பினாய்


Nantri Viduppu