மரண அறிவித்தல்
திருமதி  இராஜராஜேஸ்வரி விஸ்வநாத  முதலியார்
யாழ்ப்பாணம்  ஆதிமயிலிட்டியை பிறப்பிடமாகவும்  வெள்ளவத்தை கொழும்பு, சிட்னி அவுஸ்திரேலியா  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி  இராஜராஜேஸ்வரி விஸ்வநாத  முதலியார் ஞாயிற்றுக்கிழமை (15/10/2017)  அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை  விஸ்வநாத முதலியார்  அவர்களின் அருமை மனைவியும்  ஆதிமயிலிட்டியைச் சேர்ந்த  காலஞ்சென்ற  சுவாமிநாதன், பூதாத்தைப்பிள்ளை தம்பதியினரின்  அன்பு மகளும்  பாஸ்கரி, வைத்திய கலாநிதி  பகீரதி, பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்  சிவஞானசுந்தரம், தங்கவேல்  ஆகியோரின்  நேசமிகு மாமியாரும், மயூரன், மதீபன்  ஆகியோரின் ஆசை அம்மம்மாவும், காலஞ்சென்ற மகேஸ்வரி சிவராஜா, காலஞ்சென்ற  ஆனந்தகுமாரசாமி,  புவனேஸ்வரி சண்முகலிங்கம், காலஞ்சென்ற  பரமேஸ்வரி சச்சிதானந்தன்,  காலஞ்சென்ற சிறீபாஸ்கரன்,  பேராசிரியர் சுசீந்திரராஜா,  காலஞ்சென்ற வைத்திய கலாநிதி மகேந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரியுமாவார்.   அன்னாரின் பூதவுடல் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  Liberty Funeral Parlour, 101 South Street,  Granville NSW இல் மாலை  6 மணி முதல்  8 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு   ஈமைக்கிரியைகள் 18 ஆம் திகதி காலை Rookwood Crematorium,  South Chapel இல்   9: 30 மணி முதல்  11: 30 மணி வரை நடைபெற்றுத்  தகனம் செய்யப்பட்டது.   இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு  தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
விலாசம் :  4/191 Liverpool Road
                    Burwood NSW 2134
                    Australia

நல் தீபாவளி ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா              பட்டாடை உடுத்திடுவோம்
                    பட்சணமும் உண்டிடுவோம்
               மத்தாப்புக் கொழுத்திடுவோம்
                      மனமகிழ இருந்திடுவோம்
                தப்புக்கள் தனைமறப்போம்
                        தாழ்பணிவோம் மூத்தோரை
                எப்பவுமே இறைநினைப்பை
                         இதயமதில் இருத்திடுவோம் !

               ஆடம்பரம் அனைத்தையுமே
                     அனைவருமே ஒதுக்கிடுவோம்
                ஆதரவு இல்லார்க்கு
                       அருந்துணையாய் அமைந்திடுவோம்
                தீதுடைய செயல்களைநாம்
                         தீண்டாமல் இருந்திடுவோம்
                 தீபாவளி எமக்கு
                         சிறப்பாக அமையுமன்றோ !

இலங்கையில் பாரதி - அங்கம் 38 முருகபூபதி

-->


" கவிதை உலகளவு பரந்து பல்வேறுபட்டது.
கடவுளையும் காதலியையும் போற்றுவது மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும்
கோட்பாடுகளை விழுங்கிவிட்டு செமித்துக்கொள்ள முடியாதவர்களும்,
மோப்பதற்கும் மோந்து முணுமுணுப்பதற்குமாக
எழுதப்படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப் பிறப்பது.
ஓய்வு கடமையின் ஒரு கூறே ஆகும்.
எனது குறும்பாக்கள் முற்றும்
ஓய்வுக்குரியனவும் அன்று."
இதனை எழுதிய யாழ்ப்பாணம், அளவெட்டியில் 1927 இல் பிறந்து 1971 இல் மறைந்த "மஹாகவி" உருத்திரமூர்த்தி அவர்களும் மகாகவி பாரதியைப்போன்று அற்பாயுளில் மறைந்தவரே. அற்பாயுளில் மறைந்த பல இலக்கியவாதிகளின் மேதாவிலாசம் பிரமிக்கத்து.
இலங்கையில் மட்டுமல்ல தமிழர் வாழும் நாடுகள்தோறும் "மஹாகவி" எனச்சொன்னவுடன், " யார் மகாகவி பாரதியா..?" என்றுதான் பெரும்பான்மையானவர்கள் கேட்பார்கள். இலங்கை மகாகவி எனச்சொன்னாலும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். எனினும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு  தமது கவிதைகள், காவியங்கள், குறும்பாக்களினால் வளம் சேர்த்திருக்கும், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயர்கொண்டு எம்மவர் மத்தியின் மஹாகவியாக அறிமுகமாகியிருக்கும் அந்தக்கவியாளுமை 1966 ஆம் ஆண்டு தமது குறும்பா என்ற நூலுக்கு எழுதியிருக்கும் இரத்தினச்சுருக்கமான முன்னுரையையே மேலே கண்டீர்கள்.
இந்திய மகாகவிக்கும் இலங்கை மஹாகவிக்கும் பெயரில் ஒரு எழுத்துத்தான் வித்தியாசம் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
வள்ளி, கண்மணியாள் காதை, கோடை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், வீடும் வெளியும், கந்தப்ப சபதம், கல்லழகி, தகனம், புதியதொரு வீடு முதலனாவை இவரது புகழ்பெற்ற படைப்புகள்.
இவருடைய நூல்களை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வரதர், எஸ்.பொன்னுத்துரை,   பேராசிரியர்  நுஃமான், சாலை இளந்திரையன் முதலானோர் பதிப்பித்துள்ளனர்.
கண்மணியாள் காதை காவியத்தை ஈழத்தின் பிரபல வில்லிசைக்கலைஞர் லடீஸ் வீரமணி வில்லுப்பாட்டாக அரங்கேற்றியிருக்கிறார். கோடை பா நாடகத்தை கலைஞர் தாஸீசியஸ் இயக்கியிருக்கிறார். மீண்டும் தொடங்கும் மிடுக்கு கவிதையைக்கொண்டே மேடை நாடகம் இயக்கியிருக்கிறார் கோகிலாமகேந்திரன்.
மஹாகவி உருத்திரமூர்த்தியிடத்திலும் பாரதியின் தாக்கம் இருந்திருக்கிறது. பாரதி குறித்து மகாகவியின் பார்வைகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்துகொள்வதற்கு குறிப்புகள் கிடைக்கவில்லையாயினும், ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தியையும் இந்திய மகாகவி பாரதியையும் ஒப்புநோக்கும் இயல்பு விமர்சகர்களிடமும்  இலக்கிய மேடைப்பேச்சாளர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
மஹாகவி உருத்திரமூர்த்தியின் பிரபல்யமான ஒரு கவிதைதான் மீண்டும் தொடங்கும் மிடுக்கு. மழையைக்காணாத ஒரு விவசாயியின் வாழ்வைச் சித்திரிக்கும் அந்தக்கவிதை,  " மப்பன்றி கால மழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது, ஏர் ஏறாது. காளை இழுக்காது, எனினும் அந்தப்பாறை பிளந்து பயன் விளைப்பான் என் ஊரான்" என ஆரம்பித்து,
" சோ" வென்று நள்ளிரவிற் கொட்டும், உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய் எட்டுத்திசையும் நடுங்க முழங்கி எழும், ஆட்டத்து மங்கையர் போல் அங்கு மொய்த்து நின்ற பயிர் பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து வெள்ளம் வயலை விழுங்கிற்று....
பின்னர் அது வற்றியதும், ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறான், சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வானத்தைப்பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன் வாழி, அவன் ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என முடிக்கிறார்.
இந்தக்கவிதையில் அந்த கடும் உழைப்பாளியின் விந்தை மிகு தன்னம்பிக்கையை பார்க்கின்றோம்.

பயணியின் பார்வையில் அங்கம் -- 17

எழுபத்தியைந்து வருடப்பூர்த்தியை கொண்டாடும் பேராதனை
பல்கலைக்கழகமும் - தமிழ்த்துறை மாணவர்களும் - வாசிப்பு
அனுபவமும்
முருகபூபதி
சமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால்
பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, " இறுதியாக
படித்த நூல் எது...? "
சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது
முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்... யாருடன் விவாதித்தோம்
முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன்
சொல்வார்கள்.
என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால்,
அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன்
கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல்
ஆக்கிரமித்துள்ளது.


இம்முறை  
இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர்,
எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான்,
பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார்.
அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ.
மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார்.
கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன்.
அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.
" மாணவர்களிடம், அதுவும் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களிடம்
என்னதான் பேசுவது...?" என்ற ஆழ்ந்த யோசனையுடன் அன்று
பேராதனைக்குப்பயணமாகி, பேராசிரியர்கள் சொன்னவாறு கலகா
சந்தியில் இறங்கினேன்.
மகேஸ்வரன் அங்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்.

சாணம் உருட்டு வண்டு - கே. ஜெயராமன்


சாணம் உருட்டு வண்டு

.

இப்புவியில் உள்ள உயிர் வடிவங்களில் மிக அதிக அளவில் உள்ளவை தாவரங்கள். இவற்றுக்கு அடுத்த இடம் பூச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.  ஏனெனில், பூச்சிகளில் பெரும்பான்மை வண்டினத்தைச் சேர்ந்தவை. எந்தக் காட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கு எண்ணிக்கையளவில் வண்டுகளே ஆட்சி செய்கின்றன.
உயிரியலாளர்கள் உயிர் வடிவங்களை ஏழு அடுக்குகளில் தொகுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அடுக்கு வரிசை உயிர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய உதவுகிறது- விலங்கினம் அல்லது தாவர இனம் (animal/ plant kingdom), பெருந்தொகுதி (phylum), வகுப்பு (class), வரிசை (order), குடும்பம் (family), பேரினம் (genus), வகையினம் (species).
சாண வண்டு, அல்லது, சாணம் உருட்டு வண்டு (Dung Beetles or Dung Roller Beetles), கொலியாப்டெரா (coleoptera) என்ற வரிசைமுறைக்கு உரியதாய் உயிரியலாளர்களால் பகுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் கொலியோஸ் (Koleos), டெரா (Ptera) என்ற இரு லத்தின் மொழிச் சொற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. கொலியோஸ் என்றால் உறுதியான ஓடு, டெரா என்றால் சிறகுகள். கொலியாப்டெரா என்ற வரிசைமுறையில் ஸ்காராபீயடெய் (Scarabaediae) என்ற மாபெரும் குடும்பத்துக்கு உரியவை சாண வண்டுகள். உலகில் ஆர்க்டிக் பிரதேசம் தவிர்த்து உலகெங்கும் இக்குடும்பத்தில் 7000 வகையினங்கள் உள்ளன.

தமிழியக்க மாநாட்டில் கலைச் சொற்கள் :

.

: மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -      புலனம் 
2. youtube          -      வலையொளி 
3. Instagram      -      படவரி 
4. WeChat          -        அளாவி 
5.Messanger    -        பற்றியம் 
6.Twtter              -        கீச்சகம் 
7.Telegram        -        தொலைவரி 
8. skype            -          காயலை 
9.Bluetooth      -          ஊடலை 
10.WiFi            -          அருகலை  
11.Hotspot        -          பகிரலை 
12.Broadband  -        ஆலலை 
13.Online          -        இயங்கலை 
14.Offline            -        முடக்கலை 
15.Thumbdrive  -        விரலி 
16.Hard disk      -        வன்தட்டு 
17.GPS                -        தடங்காட்டி 
18.cctv                -        மறைகாணி 
19.OCR              -        எழுத்துணரி 
20 LED              -        ஒளிர்விமுனை  
21.3D                  -        முத்திரட்சி 
22.2D                -        இருதிரட்சி 
23.Projector      -        ஒளிவீச்சி 
24.printer          -        அச்சுப்பொறி 
25.scanner        -        வருடி 
26.smart phone  -      திறன்பேசி 
27.Simcard          -      செறிவட்டை 
28.Charger          -        மின்னூக்கி 
29.Digital            -        எண்மின் 
30.Cyber            -          மின்வெளி 
31.Router          -        திசைவி 
32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail              சிறுபடம் 
34.Meme          -        போன்மி 
35.Print Screen -          திரைப் பிடிப்பு 
36.Inkjet            -          மைவீச்சு 
37.Laser            -          சீரொளி 

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம்

.
4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக, இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு
கர்நாடகாவில் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வரவேற்பும் இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, “மகராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத வழிபாட்டு தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்தீரிகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும். குறிப்பாக மங்களூரு குக்கே சுப்ரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு (மடே ஸ்நானா), நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்கு தடை விதிக்கப்படும்” என்றார்.

ஆவிகள் இல்லையடி பாப்பா! - (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)

.

2013 (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள‍ ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்)எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க‍ எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.
மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட‍ பெயர்களில் குறிப்பிடுவது உண்டு
மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட‍ உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும்  ஆவிகளை நம்புபவ ர்கள் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள் இங்குதான் ஆவிகள் ஒன்றாக கூடி வாழ்ந்து  வருவதாகவும் உலக மக்கள் அனைவரையும் பயமுறுத்தி, ஒருவித மூட நம்பிக்கையையும் பரப்பி வருகின்றனர்.
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது அவன் நன்மைகளையும் பிறரு க்கு உதவிகளையும் செய்து கருணை உள்ள‍த்தோ டும், நல்ல‍வனாக வாழ்ந்திருந்தால், அந்த மனிதனி ன் ஆவி சொர்க்க‍த்திற்கு போகும் என்றும் அந்த மனிதன், பிறரை துன்புறுத்தியும், உதவி கேட்டு வந் தவர்களுக்கு உதவாமல் அவர்களை உதாசீனப்படு த்தியும், தீமைகளையே செய்திருந்தால், அந்த மனிதனின் ஆவி, நரகத்திற்கு சென்று, அங்கே அவ ன் செய்த கொடுமைகளுக்கு ஏற்ப, தண்டனையும் கிடைக்க ப்பதாகவும் சொர்கத்தில் சுகத்தையும், நரகத்தில் தனக்கு கிடைக்கும் கொடூர தண்ட னைகளை ஆவிகள் எந்தவிதமான எதிர்ப்பு மின்றி  ஏற்றுக் கொள்வ தாகவும் மக்க‍ளிடம் ஒரு நம்பிக்கை உண்டு.

தேசத்தந்தையே! ==ருத்ரா


Image result for mahatma gandhi

.
உங்கள் "புன்னகையை" 
எங்களால் விடவும் முடியவில்லை.
அந்த கரன்சியை
உன்னால் விடவும் முடியவில்லை.

_____________________________________________

எங்கள் சுதந்திரத்தின் கதையை
உன் மார்புக்கூட்டில்
துப்பாக்கிக்குண்டுகள் ஏந்தி
எழுதிமுடித்தாய்.

______________________________________________

வள்ளுவன் "கொல்லாமைக்கு"
உரை எழுதி சோர்ந்த பரிமேலழகர்கள்
ஒற்றைச்சொல்லில் உன் பெயரை
இன்று எழுதிமுடித்தார்கள்

________________________________________________

எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
உன் கையில் நீண்ட கைத்தடி என்று!
அது வெள்ளையன் நடுங்கிய‌
அன்றைய ஏ.கே 47.

தமிழ் சினிமாவில் நடந்திருப்பது மாற்றங்களா? வளர்ச்சியா? -----தினேஷ் //இலக்கியச்சோலை.
சினிமாவில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சியும், காலமும் வேண்டும் என்பதில் கறாராக இருப்பவர் நடிகர் நாசர். தனது முறையான பயிற்சியின் அடிப்படையில் வளர்த்துக்கொண்ட நடிப்பினால் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தென்னிந்திய மொழிகளில் தவிர்க்கவியலாத நடிகராக இயங்குகிறார். சினிமா கல்வி, சுயாதீன திரைப்படம், ஆவணக்காப்பகம் என பலதளங்களில் நாசருக்கு உள்ள பார்வையை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்
​​
 ?

முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு. இரண்டாவது, தன் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது? என்ற கேள்வியும் இருக்கிறது.அயல்நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா பற்றி போதிய புரிதல்இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமக்கு பாலியல் கல்வி அவசியமா? இல்லையா? என்பதையே குழப்பத்தோடு அணுகுகிறோம். அதேதான் சினிமா ரசனைக்கும் நடக்கிறது.ஒரு நவீன, மக்களிடம் பெரிய தாக்கத்தைஉண்டாக்கக்கூடிய, வலிமை பெற்றிருக்குமாயின் அக்கலையைப் பற்றிய ரசனை வகுப்புகள் இந்நேரம் கல்லூரிகளிலாவது பாடமாக இருந்திருக்க வேண்டும். அது இல்லை. இந்த மாதிரியான கேள்வியிலேயே வெகுகாலமாக நிற்கிறோம்.
அரசாங்க திரைப்படக் கல்லூரியில் படித்த அனுபவம், இப்போது அது எப்படி செயல்படுகிறது?
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தியிருக்கிற சினிமா தனக்கென ஒரு கல்வி முறையை வகுத்துக்கொள்ளாதது மாபெரும்சோகம். எல்லா தொழிலுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட கல்விமுறை இருக்கிறது. நூறுவருடங்கள் கழிந்தும் தமிழ்சினிமா தனக்கென ஒரு கல்வித்திட்டத்தை வரையறுத்துக் கொள்ளாததிலிருந்து, மக்கள்அதனை ஒரு கல்வியாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றுதான் தெரிகிறது.எனக்கு சினிமாவும் ஒரு வேலையே. இந்த சினிமாவிற்கு நான் போனால் என்னுடைய பொருளாதார பிரச்சனைகள் தீரும் என்று நினைத்துதான் வந்தேன்.

சிவாஜி கணேசன்

.

Image result for sivaji ganesan


ஒன்பது ‘பாவத்தைத் தொண்ணூறு வகையாக,

சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
     —கவியரசு கண்ணதாசன்