மரண அறிவித்தல்

.                                    
                                                   சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி 

                                                                                 மறைவு  - 09.11.2014
மட்டுவிலை பிறப்பிடமாகவும், கந்தர்மடம் யாழ்ப்பாணத்தையும் சிட்னி ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி அவர்கள்  09.11.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்,

இவர் காலம் சென்ற வைரமுத்து கற்பகம் அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற முன்னாள் இளைப்பாறிய ஆசிரியர் சின்னதம்பி மாசிலாமணி அவர்களின் ஆருயிர் மனைவியும், காலம் சென்ற பண்டிதமணி சி கணபதிபிள்ளை அவர்களின் பெறா மகளும், காலம் சென்ற தில்லைபிள்ளை, கனகசபை, வைத்திலிங்கம், சதாசிவம் ஆகியோரின் அன்பு சகோதரியும், பாலசௌந்தரி, பாலகுமாரன், நந்தகுமாரன், நந்தினி, தர்மினி, நிர்த்தனகுமாரன் , மகிந்தன் ஆகியோரின் பாசம்மிக்க தாயாரும், நடராஜமூர்த்தி, ராஜினி, ஸ்ரீதரன், கேதீஸ்வரராஜா, ராஜ் ஈஸ்வரி, சிவகாமவல்லி ஆகியோரின் அன்புமிக்க மாமியாரும் ஷங்கர், tracey, கௌரி, ராகவன், நிமலன், செந்தூரன், Bavia, பிரதீபன், அனுஷா, வினோத், சஞ்சீவ், ஹரி, பிரசன்னா, cecilia, ராம், தினேஷ், லக்ஷ்மன், தேவராஜன், துர்கா, பிருந்தா, வருண் ஆகியோரின் அன்பான பேத்தியாரும் Lachlan ,  Kaitlyn lauran, Owen, Shakshini, Kethana, லாரண்யா, நீலன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் ஈமைகிரியைகள் வியாழகிழமை 13.11.2014 அன்று காலை10 - 12 வரையில் இலக்கம் 4 wainwright mews , Bella vista  இல் நடைபெற்று  பின்னர் தகனகிரியைகள் மதியம் 1-2 மணி வரையில்  camellia chapel , Delhi  road  Macquarie park  இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,

மேலதிக தகவல்களுக்கு -  தர்மினி - 0411401320
           
                                                                     மகிந்தன்   -  0427800292

தாம்பத்யம் - சோ . சுப்புராஜ்

.
 எனக்கும் அவளுக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
எங்களின் மண நாளிலிருந்து……
 ஒருவரை நோக்கி ஒருவர்
இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக
முறுவல்களுடனும் முத்தங்களுடனும்…..
 பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும்
பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு….
 ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது;
ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்…..
கை தட்டி ஆரவாரித்தும்
கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை
உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்….

படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

.
நீந்தவே  வேண்டிய  அகதிச்சுழியில்  நீந்திக்கொண்டிருக்கும் ஆத்மாக்களின்   ஓயாத   ஓலம்
கருணாகரமூர்த்தியின்  பெர்லின்   நினைவுகள்
    
                                              
வாழ்க்கை  ஒவ்வொருவருக்கும்  தரும்  அனுபவம்தான்  அவர்களுக்கு   வழங்கும்  புத்திக்கொள்முதல்.  வாழ்வு  அனுபவங்கள் அனைவருக்கும்   இருக்கும்.  ஆனால்,  அவற்றை  பதிவுசெய்து  தாம் பெற்ற   இன்பமும்  துன்பமும்  பெறுக  இவ்வையகம்  என  நினைத்து பரப்புபவர்கள்  பெரும்பாலும்   படைப்பாளிகள்தான்.
வாசிப்பு   மனிதர்களை   முழுமையாக்கும்  என்பார்கள்.  அதற்கு வித்திடுபவர்கள்   தமது  அனுபவங்களை  பதிவுசெய்யும் படைப்பாளிகள்தான்.
பெர்லின்  நினைவுகள்  நூல்   எனது  வசம்  வந்துசேர்ந்து  பல மாதங்களாகிவிட்டன.   இடையில்  கருணாகர மூர்த்தியும்  என்னுடன் மின்னஞ்சலில்    தொடர்புகொண்டிருந்தார்.  பல்வேறு  பணிகளுக்கு இடையில்   407   பக்கங்கள்கொண்ட    இந்நூலை  படித்து  முடிப்பதற்கு காலதாமதமாகியது.   
அண்மைக்காலங்களில்  நான்  படித்த  பல நூல்கள்  400   பக்கங் களுக்கு மேற்பட்டதாகவே   இருப்பதும்   தற்செயலானது.
நான்   அவுஸ்திரேலியாவில்  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பனிலிருந்து     புறநகர்பகுதியான   Morwell  என்ற  பிரதேசத்தில்  கடந்த  சில  வருடங்களாக  வசிக்கின்றேன்.   மெல்பன்  மத்தியிலிருந்து    சுமார்  150   கிலோ   மீற்றர்  தொலைவு.    அடிக்கடி  ரயில்  பயணத்திலேயே   மெல்பன்  சென்று  திரும்புவதனால்   400   பக்க  நூல்களை   படிப்பதற்கும்  சந்தர்ப்பம்  கிடைத்திருக்கிறது. அத்துடன்  மடிக்கணினியில்  எழுதுவதற்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது.
பெர்லின்   நினைவுகள்   நூலை  படித்துக்கொண்டு  பயணித்த சந்தர்ப்பங்களில்   அவ்வப்போது  நான்  எனக்குள்  சிரித்துக்கொண்டேன்.   சில  சமயங்களில்  அருகே  பயணிகள் இருப்பதையும்    கவனிக்காமல்  வாய்விட்டும்  சிரித்துவிட்டேன்.
ஒருநாள்   என்னருகே  இருந்த  பயணி   எனது  சிரிப்புக்கு  விளக்கமும் கேட்டார்.   பெர்லின்   நினைவுகள்   பற்றிச்சொன்னதும்,  அது ஆங்கிலத்தில்  இருக்கிறதா...? என்றார்.  
' இல்லை ' - என்றேன்.

சங்க இலக்கியத் தூறல் - --- அன்பு ஜெயா, சிட்னி

.
காதல் முகிழ்க்கின்ற அதிசயம்

அதோ அங்கே குளிர்ந்தகாற்று வீசிக்கொண்டிருக்கின்றது. அந்தக் காற்றினிலே மூங்கில்கள் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? அப்படி வீசுகின்றக்காற்று அந்த மூங்கில்களில் உள்ள துளைகளின் வழியாகப் புகுந்து வரும்போது எழுகின்ற ஒலியானது குழலின் இசையைப்போன்று இன்பம் தருகின்றது. அருகில் உள்ள பாறைகளிலிருந்து கீழே வீழ்கின்ற அருவி நீர் எழுப்புகின்ற ஒலியோ முழவின் இனிய இசையைப்போல உள்ளது. அங்கே சுற்றித்திரிகின்ற கலைமான்கள் எழுப்புகின்ற ஓசை பெருவங்கியத்திலிருந்து (பெருவங்கியம் = யானையின் துதிக்கைப் போன்ற வடிவுள்ள இசைக்குழல்) எழுகின்ற இசைபோன்று ஒலிக்கின்றது. அந்த மலைச்சாரலில் கண்ணுக்கழகாகப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூக்களில் உள்ளத் தேனைப் பருகவருகின்ற வண்டுகளின் ரீங்காரம் இனிய யாழிசையாக ஒலிக்கின்றது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பின்னணியாக அமைகின்றன. இப்பின்னணியில் அங்கே சுற்றித்திரிகின்ற மயில்கள் தங்கள் தோகையை விரித்து ஆடுகின்றன.

தாய் மனசு - ராமலக்ஷ்மி

.

“அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.”

“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனதுஇ நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”

கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று.

“என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்லஇ அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ காக்ராவாமே. அது வாங்கணுமாம்.”

“அதுங்க அப்படித்தான் கண்ணக் கசக்கும். அடம் பண்ணும். எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டம். குடும்ப நெலம புரிய வேண்டாமா? மொதல்ல எதுக்கு இப்ப புதுத் துணி. பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குதானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ண போட்டுக்கச் சொல்லு.”

“வாஸ்தவந்தாம்மா. ஆனா புதுசு கட்டின மாதிரியாகுமா?”

இலங்கை மாணவர் கல்வி நிதியம் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் 16.11.14

.
                          

இலங்கையில்   நீடித்த போரினால்  பெற்றவர்களையும்  குடும்பத்தின்  மூல உழைப்பாளிகளையும்   இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து   நீண்டகாலமாக  உதவிவரும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  25  ஆவது   ஆண்டுப்பொதுக்கூட்டமும்  தகவல்   அமர்வு  மற்றும்   நிதிய  உறுப்பினர்   ஒன்றுகூடலும்   எதிர்வரும் 16-11-2014  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  5 மணிக்கு மெல்பனில் Vermont  South  Community  House  (Karobran  Drive, Vermont South – Victoria 3133)   மண்டபத்தில்  நடைபெறும்.
நிதியத்தின்  நடப்பாண்டு  தலைவர்  திருமதி  அருண்.விஜயராணியின்  தலைமையில்  நடைபெறவுள்ள  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்
24   ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்ட  குறிப்புகள்   2013 – 2014   ஆண்டறிக்கை – நிதியறிக்கை   என்பன   சமர்ப்பிக்கப்படும்.   அதனைத்தொடர்ந்து   2014 – 2016 காலப்பகுதிக்கான    புதிய  பரிபாலன  சபை   தெரிவு செய்யப்படும்.
கல்வி நிதியத்தின்  உறுப்பினர்கள் -  பாதிக்கப்பட்ட   மாணவர்களுக்கு உதவவிரும்பும்   அன்பர்கள்    கல்வி    நிதியத்தின்   25   ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்   கலந்துகொள்ளுமாறு   அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக   விபரங்களுக்கு:   
திருமதி அருண்விஜயராணி -  தலைவர்        (  03) 9499 7176
திரு. எஸ்.கொர்ணேலியஸ்  -  (செயலாளர்)      0425 728839  
திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா - ( நிதிச்செயலாளர்)   0404 808 250
திரு.லெ. முருகபூபதி  -  (துணை நிதிச்செயலாளர்)       0416 625 766
----0---






இந்த மனுஷங்களே இப்படித்தான்.. - பெங்களூர் பெரிய ஆலம

.

3 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கும் 400 வயதான இந்த ஆலமரம் கர்நாடாகத்தில் ரமோஹள்ளி எனுமிடத்தில் உள்ளது. 


#1

250 மீட்டர் சுற்றளவிலான இதன் அடிமரம் வியாதி வந்து அரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.  ஆனால் ஆயிரத்துக்கும் மேலான விழுதுகள் தாங்கி நிற்கின்றன மரத்தை. போகவும்கிளைகளின் முனைகள் நிலத்தில் வீழ்ந்து விடாதபடி தாங்குக் கட்டைகளை வைத்திருப்பதைக் கீழ்வரும் படத்தில் காணலாம்.

திருத்தொண்டர் விழா 16. 11.2014

.

சங்க இலக்கியக் காட்சிகள் 30- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கண்கள் சிவந்தன, காட்டிக் கொடுத்தன!


அகன்று பரந்து கிடக்கும் அழகான ஏரி. அதிலே ஆங்காங்கே மக்கள் நீராடிக் கொண்டிருக்கிறார்கள். தம்பதிகள், காதலர்கள். இளைஞர்கள், மங்கையர்கள். சிறுவர்கள் என்றிப்படிப் பலதரப்பினரும் தனியாகவும், குழுக்களாகவும் பொங்கும் பூம்புனலில் நீராடிக் களித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒருத்தன் மட்டும் தனியாக ஓரிடத்தில் நீராடிக்கொண்டிருக்கிறான். அதற்குச் சற்றுத் தொலைவில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த பரத்தையர்கள் அவனைக் கண்டுவிடுகிறார்கள். அவனை அவர்களுக்கு தெரியும். அவர்களின் முன்னாள் வாடிக்கையாளர்களில் அவனும் ஒருவன். இப்போது பரத்தையர் உறவைவிட்டு தனது மனைவியோடு வாழ்ந்தகொண்டிருக்கிறான். அவர்கள் எல்லோரும் தண்ணீரில் நீந்தியவாறே அவனருகே வருகிறார்கள். அருகே வந்து அவனைச் சீண்டுகிறார்கள். அவர்களில் ஒருத்தி அவனைத் தன்னொடு சேர்ந்து  நீராடவருமாறு அழைக்கிறாள். ஏற்கனவே உள்ளத்திற்குள் உறங்கிக் கிடந்த சபல புத்தி அவனைப் பின்னின்று தள்ள, முன்னர் அவர்களோடு பழகிய பழக்கம் முன்னின்று இழுக்க அவனும் அவர்களின் அருகே சென்று, நீராட அழைத்தவளின் கையைப்பற்றி “இவள் யாருடைய மகள்” என்று தெரியாதவன்போலக் கெட்கிறான். அவர்களும் “யாருடைய மகளாக இருந்தாலும் இப்போது உனக்குத் தெரியாதுதான். அதுசரி, நீ யாருடைய மகன் என்று சொல்வாயா?”  என்று வக்கணையாகக் கேட்கிறார்கள். அவனுக்குத் தன் பழைய உறவின் இன்ப உணர்வு கிளர்ந்தெழுகிறது. அழைத்தவளோடு சேர்ந்து நீராடுகிறான். நீரில் விளையாடி மகிழ்கிறான்.

இலங்கைச் செய்திகள்


கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்: 2521 பேர் இடம்பெயர்வு


கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

05/11/2014 கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  இரு மாணவக்குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைபெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி




வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா

.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தொடராக எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு என்ற நாவல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெறுகின்றது. மகாபாரத கதை மிகப்பெரிய நாவலாக வெளிவருகின்றது .


குண்டல​கேசியில் யாக்​கை நி​லையா​மை - முனைவர் சி.சேதுராமன்

.

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய  மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது குண்டலகேசியாகும்.  காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியமாக குண்டலகேசி திகழ்கின்றது. இக்காப்பியம் முழுமையும் கிடைக்கவில்லை. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, சிஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை, நீலகேசி இவற்றிலிருந்து தற்போது கிடைத்துள்ள பாடல்கள் பத்தொன்பது மட்டுமே ஆகும். விருத்தப்பாவால் அமைந்துள்ள இக்காப்பியத்தை குண்டலகேசி விருத்தம் என்றும் கூறுவர்.
புத்தமதக் கதையைக் கூறும் தேரி காதையின் 46-ஆம் காதையிலும், நீலகேசி அங்குத்தரநிகாய தம்மபதாட்டகதா, வைசிக புராணத்தின் 34-ஆம் அத்தியாயம் ஆகியவற்றிலும் குண்டலகேசியின் கதையானது உள்ளது. புத்தசமயக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூலாகவும் இக்காப்பியம் திகழ்வது நோக்கத்தக்கது. காப்பியக் கதையினூடே நிலையாமைக் கருத்துக்களை ஆசிரியர் நாதகுத்தனார் எடுத்துரைக்கும் தன்மை சிறப்பிற்குரியதாக உள்ளது.
குண்டலகேசியின் கதை

உலகச் செய்திகள்


கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்

சிரியாவில் பாடசாலை மீது ஷெல் தாக்குதல் : 13 சிறுவர்கள் பலி

ஐரோப்பாவிற்கு சட்டவிரோத படகு பயணம் : கடலில் மூழ்கி 24 குடியேற்றவாசிகள் பலி
----------------------------------------------------------------------------------------------
கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்

03/11/2014  நைஜீ­ரி­யாவில் போகோ ஹராம் போரா­ளிக்­கு­ழுவால் கடத்­தப்­பட்ட 200க்கு மேற்­பட்ட சிறு­மி­களை தமது போரா­ளிக்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்­தக்­ குழு திரு­மணம் செய்து வைத்­துள்­ள­தாக மேற்­படி குழுவின் தலைவர் என தன்­னைத்­தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.


விழுதல் என்பது எழுகையே.. பகுதி 25 திரு.நயினை விஜயன் யேர்மனி

.

தமிழருவி நயினை விஜயன் அவர்கள் அறிமுகம்

1979 முதல் எமது தாய்மொழிக்காகவும்இகலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை  அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.150 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலைகளைப் பயின்று வருகிறார்கள்.எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார்.இவரது சேவைப்பாரட்டி தென்னபிரிக்கத் தமிழர்களும்இ பெங்களூர் டாக்டர்.அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும் பாராட்டி வாழ்த்திஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்ந்து மனம் கொள்ளத் தக்கவை.

தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை பல்கலாச்சார  நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.

ஐந்து வருடங்களாக தமிழருவியின் இசைத்திருவிழாவை நடத்தி சிறந்த ஆண் பாடகர்இசிறந்து பெண் பாடகர்இ சிறந்த ஜோடிப் பாடகர்களைச் தெரிவு செய்தும் சிறந்த இசைக்குழுவையும் இரசிகர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து பரிசளித்து கௌரவித்தவர்.

இன்று பலராலும் பேசப்படும் விஜய் தொலைக்காட்சியின் அதிசிறந்த பாடகர் போட்டியில் சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்வதற்கு மின்னஞ்சல் வழியாகவும்இகுறுஞ்செய்தி வழியாகவும் வாக்களிக்கும் முறையை கையாள்கிறார்கள்.

அதனை முதன்முதலாகச் செய்து காட்டியவன் ஜேர்மனியில் இருக்கின்ற முன்னோடி மணிபல்லவம் தந்த திரு.நயினை விஜயன்  அவர்கள்.

அறிமுகம்
திரு.பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்

கதை தொடர்கிறது 

பகுதி 25

 எத்தனையோ பேர் வெளிநாடுபோய் அனுப்புறம் என்று சொல்லி வாங்கியவை 5 வருசமாகியும் தொடர்பே இல்லை  சீலன் போய் குறுகிய காலத்துக்குள்ள கடனை திருப்பிவிட்டியள்;…எல்லோரும்; சீலனாக முடியுமோ …? என்று வேற சொன்னார் தம்பி..!

கமலுக்கு 60 வயதா? நம்பவே முடியாம இருக்கு!

.

இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: நவம்பர் 7, 1954
பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர்இயக்குனர்பாடலாசிரியர்பின்னணிப் பாடகர்நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்
நாட்டுரிமை: இந்தியா
 ஆரம்ப கால வாழ்க்கை
கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.
இல்லற வாழ்க்கை


கோப்பைகள் - அ.முத்துலிங்க

.
‘இதுவெல்லாம் நடந்ததற்கு காரணம் ஒரு மார்க்தான். அந்த ஒரு மார்க் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எங்கேயெல்லாமோ போயிருக்கும். இப்படி நடக்கும் என்று அப்போது யாருக்கு தெரியும்? நீ இரண்டு மாதம் முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்தாய். நான் 15 வருடமாக இங்கே இதே இடத்தில் நின்றபடி கோப்பை கழுவுகிறேன். அப்பொழுதெல்லாம் இது சின்ன உணவகம். நான் மட்டும்தான் வேலை செய்தேன். இப்போதுபோல நகரும் பெல்ட் கிடையாது. மெசின் கிடையாது. கையிலே கையுறையை மாட்டிக்கொண்டு அத்தனை பிளேட்டுகளையும் கழுவிமுடிப்பேன்.’
எந்த ஊர் உங்களுக்கு?
’நான் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் நான் முதலாவதாக வருவேன். குலசேகரம் இரண்டாவதாக வருவான். போட்டி எங்கள் இருவருக்குமிடையில்தான். நான் 98 மார் வாங்கினால் மீதி இரண்டு எங்கே என்று அப்பா கேட்பார். மறதியாக பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டேன் என்பது அவர் எண்ணம். வருடக் கடைசியில் பரிசளிப்பு விழா அன்று நான் மேடைக்கு போய் எல்லாப் பரிசுகளையும் அள்ளிவருவேன். என் அப்பாவின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. அவர் மந்திகை ஆஸ்பத்திரியில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்தார். பரிசு கிடைத்த மறுநாள்  ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து  என்னை புகழ்ந்து தள்ளுவார். நான் கூச்சத்தில் நெளிவேன்.
’இலங்கை முழுக்க ஒரே சமயத்தில் நடந்த ஓ லெவல் பெரிய சோதனையில் எட்டுப் பாடத்திலும் எனக்கு அதி உயர் மதிப்பெண் கிடைத்தது. அடுத்தநாள் வந்த வீரகேசரிப் பேப்பரில் குலசேகரத்தின் படத்தை முதல் பக்கத்தில் பெரிசாகப் போட்டிருந்தார்கள். வடமாகணத்தில் அவன் முதலாவதாக வந்திருந்தான். மதிப்பெண்கள் கூட்டுத்தொகையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் என்னை வென்றுவிட்டதால் அவனை பாராட்டி எழுதியிருந்தார்கள். இரண்டாவதாக வந்த என்னைப்பற்றி ஒரு வரியில்லை. அப்பாவால் அந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியவில்லை. அன்று வேலைக்குப் போகாமல் வீட்டுக்கும் வராமல் வீதிவீதியாக அலைந்தார். அப்பொழுதுதான் அப்பாவுக்கு அது எத்தனை பெரிய இழப்பு என்பது எனக்குப் புரிந்தது.

தொல்காப்பியரின் சித்தாந்தச் சிந்தனை

.


சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்

பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பெருநூல் என்னும் பெருமை பெற்றது. ஆயினும், மொழி குறித்த இலக்கணம் கூறும் நூலாக மட்டும் இது அமையவில்லை.  தமிழ் மக்களின் வாழ்வியல் குறித்த நூலாகவும் அமைந்துள்ளது.

இந்நூலிலிருந்து அன்றைய தமிழரின் வாழ்க்கை முறை, வாழ்வியற் சிந்தனைகள்,கடவுட் கொள்கை, நிலப்பிரிவுகள் போன்ற பலவற்றை அறிய முடிகிறது. தமிழரின் தத்துவச் சிந்தனையையும்  அறிவதோடு, அது சைவசித்தாந்தச் சிந்தனை என்பதையும் உணர முடிகின்றது.

அழிவற்ற உயிர்

தமிழ்மொழியின் எழுத்துக்களை வகைப்படுத்திய முன்னோர்கள் அவற்றுக்கு உயிர், மெய், உயிர்மெய் என்று பெயரிட்டுள்ளார்கள்.  தொல்காப்பியரும் இப்பெயர்களின் எழுத்துக்களை வகைப்படுத்தி அவை குறித்த குறிப்புக்களை, இடத்துக்கிடம், எவ்வகை முரண்பாடுகளும் இன்றித் தந்து இலக்கணம் வகுத்துள்ளார்.

உடம்பு நிலையற்றது.  அழியுந் தன்மை கொண்டது.  இறை அல்லது பிரமம் ஒன்றே மெய்ப்பொருள், என்று கொள்ளும் வேதாந்திகள் உடம்பு ஒரு பொய்த்தோற்றம், அது மாயை என்ற கொள்கை உடையவர்கள்.  (சித்தாந்திகள் கொள்ளும் மாயையின் விளக்கம் வேதாந்திகள் கொள்வதிலிருந்து வேறுபட்டது.)  ஆனால் உடம்பு அழியும் இயல்பு உடையதாயினும்ää அது இருக்கும் வரை மெய்யான ஒன்று என்பது சித்தாந்தக் கொள்கை.  உடம்பைக் குறிக்கும் மெய் என்ற சொல்லே இதனை உணர்த்துகிறது.

மாதிரி ‘சிறப்புத் தெரிவு உயர்நிலைப் பாடசாலைகளுக்கான தேர்வு’ 20 12 14

.

இலக்கிய வளர்ச்சியில் ஐந்தாவது தலைமுறை படைப்பாளி ஜே.கே.

.
ஈழத்திலும்   புகலிடத்திலும்   இலக்கிய  வளர்ச்சியில்   ஐந்தாவது   தலைமுறை   படைப்பாளி  ஜே.கே.
மெல்பன்  வெளியீட்டு  அரங்கில்  அம்பலமான  அவரது கொல்லைப்புறத்து   காதலிகள்
                                             ரஸஞானி


ஜே.கே. என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அவுஸ்திரேலியாவில்  தமிழ் கலை - இலக்கியச்சூழலில்   சமகாலத்தில்  அதிகம்  பேசப்பட்டது.
இந்தியாவில்   ஜே.கே.   என்றால்  முக்கியமாக இரண்டுபேரைக்குறிக்கும்.   ஒருவர்  தத்துவஞானி  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.    மற்றவர்   ஜெயகாந்தன்.   அவர்கள்  இருவரும் இருவேறு   துறைகளில்  சிறந்த  ஆளுமைகள்.
அவுஸ்திரேலியா ஜே.கே.  என்ற  ஜெயக்குமரன்  சந்திரசேகரம் கவிஞர் -  பத்தி  எழுத்தாளர் - விமர்சகர் - சிறுகதைப்படைப்பாளி முதலான   அடையாளங்களுடன்  மெல்பனிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்.
பொதுவாக  படைப்பாளிகள்  வாசகர்களைத்தான் சம்பாதித்திருப்பார்கள்.   ஆனால் -  இவர்  வாசகர்களுடன் ரசிகர்களையும்   சம்பாதித்தவர்.   அவரது  ஆக்க  இலக்கியங்கள் அவருக்கு   வாசகர்களை  தேடித்தந்திருப்பதுபோன்று    சிட்னியிலும் மெல்பனிலும்   இடம்பெற்ற   சில  கவியரங்குகளில்   அவர் கலந்துகொண்டதன்   மூலம்    ரசிகர்களையும்  சம்பாதித்திருப்பவர்.
படலை  என்ற   வலைப்பூவை   (www.padalay.com) நடத்தி  அதிலும் அடிக்கடி   எழுதிவருபவர்.
புகலிடவாழ்விலிருந்துகொண்டே   தாயக வாழ்வையும்  அழைத்து இரண்டுக்கும்  இடையே   வேரும்  வாழ்வுமாக  உணர்வுபூர்வமான நெருக்கத்தை   உருவாக்கியவாறு  எழுதிவரும்  படைப்பாளிகளின் வரிசையில்  இணைந்திருப்பவர்.
சிறுவயதில்  தமது   தாயாரிடமிருந்தே   இலக்கிய   வாசிப்பு பயிற்சியைப்பெற்றுக்கொண்டவர்.   பாடசாலைப்பருவத்திலேயே நண்பர்களுடன்  இணைந்து  இலக்கிய  இதழ்  வெளியிட  முயன்றவர். கலை - இலக்கிய  தாகத்தை  தணிக்க   பால்யகாலத்திலிருந்தே முயன்றவர்.

தமிழ் கலாசார விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: - பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்

.

News Service
அந்நியர்களின் ஆட்சியில் இலங்கை இருந்த போது அழியவிடாது பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இன்றைய நவநாகரிக மோகத்தினால் மாற்றமடையும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் தொல்லியல் மரபுரிமை சின்னங்களையும் பாரம்பரிய பண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். வட மாகாணத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் பற்றியும் பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கை முறைகள் பற்றியும் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆராயவேண்டும். தொல்லியல் இடங்களுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதனை நாம் எமது மிகப்பெரும் சொத்தான பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் வலியுறுத்தியிருக்கின்றார்.
   
வட இலங்கையில் சுற்றுலாவும், தொல்லியல் மரபுரிமை சின்னங்களும் எனும் நூல் வெ ளியீட்டு விழா யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஏற்புரையாற்றுகையிலேயே வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தனது இத்தகைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்கள் சிறுபான்மையாளர் எனக்கூறப்பட்டு வருவது எனக்கு பெரும் கவலையளித்தது. அதனாலேயே நான் வரலாற்றைக் கற்கவேண்டும். அது பற்றி ஆராய்ச்சிகளை ஆய்வு செய்யவேண்டும் என எண்ணினேன். இந்த உந்துதலாலேயே தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டேன். தமிழர்களின் பாரம்பரிய மரபுரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமென 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே கோரப்பட்டு வந்தது.

தமிழ் சினிமா நெருங்கி வா முத்தமிடாதே




படத்தின் டைட்டில் வைத்தே பப்ளிசிட்டி தேடினார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். இது எந்த மாதிரியான படம்? இல்லை ஒரு மாதிரியான படமா? என்று அனைவரையும் படம் ரிலிஸ்க்கு முன்பே புருவம் உயர வைத்தது படக்குழு. ஆரோகோணம் என்ற தரமான படைப்பிற்கு பிறகு லக்‌ஷ்மி இயக்கியிருக்கும் படம் தான் இந்த நெருங்கி வா முத்தமிடாதே.

படத்தின் கதை 

பெட்ரோல் பங்க் ஓனர் ஒய்.ஜி.மகேந்திரன் மகன் ஷபீர் படிப்பில் நாட்டமில்லாததால் சிறு வயதிலிருந்து ஏ.எல்.அழகப்பனின் ஒர்க் க்ஷாப்பில் வேலை செய்து பெரியவனாக வளர்கிறார். ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. 


அந்த நேரத்தில் தன் முதலாளிக்காக அப்பாவின் பெட்ரோல் பங்க்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2000 லிட்டர் டீசலைத் திருடி வந்து, ஏ.எல்.அழகப்பன் சொல்லும் இடத்தில் கொடுப்பதற்காக வெங்காய லோடு லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறார் ஷபீர்.



நாடே டீசல், பெட்ரோல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிக்கும் நேரத்தில் 2000 லி டீசலை எதற்காக சபீர் எடுத்துக் கொண்டு செல்கிறார்? யாரிடம் அந்த டீசல் போய்ச் சேரவிருக்கிறது என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருப்பதே ‘நெருங்கி வா முத்தமிடாதே’.

படத்தின் பலம்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு தான். மேட்லி ப்ளூஸ்ஸின் இசை, வினோத் பாரதியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது.


பலவீனம் 

படத்தில் பலவீனங்களை சொல்லிக்கொண்டே போகலாம். முதலில் திரைக்கதையில் மிகவும் தோய்வு. தமிபி ராமையாவின் காமெடிக்கு சிரிப்பே வரவில்லை. எந்த இடத்திலும் ஒரு அழுத்தம் இல்லை.மொத்தத்தில் நெருங்கி வர வைத்து ஏமாற்றிவிட்டார்கள். என்னம்மா இப்படி டைட்டில வச்சு ஏமாத்திட்டியேம்மா...


ரேட்டிங்-2/5உங்களை மனதில் உள்ள ‘வெற்றிடத்தை’ நிரப்ப வருகிறது - 
நன்றி  cineulagam